The Tribute
Money by Gustave Dore
A denarius
featuring Tiberius.
Our
reflections today, will revolve around politics and politicians. I have very
minimal respect for politicians. This may be due to the fact that I am yet to
meet an honest, noble politician in person. I have read about such persons in
books. I am sure there are a few of them; but they must be a rare breed. My
idea of politics does not allow honest persons to survive there for long. My
definition of politics has ‘connivance’ and ‘compromise’ written all over it.
When I say
‘politics’, I do not mean only party politics that dominates government circles
in all the countries. I also mean politics that is present in all the other
human spheres of activities, including religion. Politics and religion have
been almost like inseparable twins in human history. They have co-existed as
friends and foes. When convictions came to the fore, they were foes; but when
compromises were struck, they were friends. In compromises, it was always politics
that thrived, whereas religion – true religion – died.
Was Jesus
involved in politics? I think so. In so far He had to deal with various powers
that were operative in his times, he had to deal with politics. We are given
one such incident in the life of Jesus as our gospel today. Here is the gospel
passage as given in Matthew:
Matthew
22:15-21
Then the
Pharisees went out and laid plans to trap him in his words. They sent their
disciples to him along with the Herodians. “Teacher,” they said, “we know that
you are a man of integrity and that you teach the way of God in accordance with
the truth. You aren’t swayed by others, because you pay no attention to who
they are. Tell us then, what is your opinion? Is it right to pay the imperial
tax to Caesar or not?”
But
Jesus, knowing their evil intent, said, “You hypocrites, why are you trying to
trap me? Show me the coin used for paying the tax.” They brought him a
denarius, and he asked them, “Whose image is this? And whose inscription?”
“Caesar’s,” they replied.
Then he
said to them, “So give back to Caesar what is Caesar’s, and to God what is
God’s.”
We can see
the traits of two types of politics in this passge: the more commonly
used ‘dirty politics’ of the Pharisees and the Herodians as well as the rarely
found ‘good politics’ as demonstrated by Jesus.
First,
the ‘dirty politics’:
The opening lines of today’s gospel reveal some of the traits of this
more-commonly-found-dirty-politics… The fist one: planning to trap someone in his/her
words. As far as my idea of politics goes, this is probably the ONLY work done
by most politicians. The very next sentence gives us a clue to another trait of
politicians – striking a compromise to defeat a common enemy. It is also clear
from these lines how political leaders act… namely, how they would depute
emissaries in critical situations. In today’s gospel we see how the Pharisees
sent their disciples along with the Herodians. Both Herod and the Pharisees
themselves would not burn their fingers. They had had enough encounters with
Jesus to have learnt how smart He was. Then, why risk one more time?
The
Pharisees and the Herodians were usually sworn enemies. They held very opposing
views of the Roman domination and Caesar. For the Pharisees, God was the supreme
ruler and anyone who claimed divinity was an abomination. Caesar claimed
divinity and hence, for the Pharisees he was an abomination. For the Herodians,
Caesar was a saviour of sorts. Following their leader Herod, they were willing
to serve Caesar. These two groups belonging to two different enemy camps were
willing to compromise their positions to thwart a common enemy – Jesus. For the
Herodians, compromises were their ‘daily bread’ since they were proper
politicians. But for the Pharisees? Well, for them too… since they were
politicians in clerical garb and with clerical titles.
The way
they talk to Jesus brings to light another aspect of politicians, namely, how
they approach their enemy carrying a garland within which are hidden daggers.
If politicians speak out their real thoughts and real intentions, they would be
laughed at. Hence, almost by instinct, they lay their snares with sugar-coated
words. Thus, the opening lines of today’s gospel give us quite a few thoughts on
‘dirty politics’.
Now, to
the ‘good politics’:
The second part of today’s gospel gives us hope that politics can still be
saved. Here we see the ‘good politics’ as practised by Jesus. Good politics
begins by calling a spade a spade. As against the sweet talk of the Pharisees
and the Herodians, Jesus confronts them with their insincerity. Such courage
has been found in the history of politics, but very rarely.
Coming to
the core of today’s gospel, we are given one of the most famous lines spoken by
Jesus. These words of Jesus is probably one the most oft-quoted lines: “Render
unto Caesar what is Caesar’s and to God what is God’s.” If only these words of
Jesus are followed in all spheres of life, namely, give each one what is due to
him or her, this world would automatically become heaven.
The whole
reflection may have sounded as venting my anger over politicians. But, as one
of my fingers is pointed towards them, I need to be aware of three more
pointing at me. Thus I need to examine myself thrice over to see how many of
the traits of ‘dirty-politics’ are present in my life and also to see how much
of the ‘good politics’ I can put into practice.
A final
thought on this famous line - “Render unto Caesar what is Caesar’s and to God
what is God’s.” When Jesus told us to give back to Caesar his coins since they
bore his image, in the same breath He reminded us that we are created in the
image of God (Genesis 1: 26) and therefore we need to give ourselves back to
God.
அவரவருக்கு
உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி.
ஆனால்,
அவரவருக்கு உரியது
அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ
என்றும் எண்ணத் தோன்றுகிறது.
“சீசருக்கு
உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ் பெற்ற வரிகளை இன்றைய
நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியத்தைத் தாண்டி, கிறிஸ்தவ மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில்
மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய அந்தப் புகழ்
மிக்கக் கூற்றையும், அவர் அப்படிச்
சொன்ன சம்பவத்தின் பின்னணியையும், இன்றைய ஞாயிறு சிந்தனையில் சிந்தித்து, பயன் பெறுவோம்.
சீசருக்கும், கடவுளுக்கும், பொதுவாக யாருக்குமே அவரவருக்கு
உரியதைக் கொடுங்கள் என்று இயேசு எப்போதும் சொல்லி வந்தார். இயேசு சொன்ன இந்த உண்மையால்
பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மதத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்து, மக்களுக்கு உரிய கடவுளை அவர்களுக்குக்
கொடுக்க மறுத்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த இயேசு அவர்களிடம்
பல உவமைகளைக் கூறினார். இந்த உவமைகள் வழியே
இயேசு உணர்த்த விரும்பிய உண்மைகளை பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எண்ணம், கவனம் எல்லாம், இயேசுவுக்கு உரிய மரியாதையை அவருக்கு
வழங்கக்கூடாது என்பதில் மட்டுமே இருந்தது.
மத்தேயு
நற்செய்தி 22ம் பிரிவிலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியை மேலோட்டமாகப்
பார்த்தால், எளிய ஒரு
நிகழ்ச்சியைப் போல் இது தெரிகிறது. ஆனால், இந்த நிகழ்வின் பின்னணியில் புதைந்திருக்கும்
அடுக்கடுக்கான பல அம்சங்களை அலசினால், பல உண்மைகளை, பல பாடங்களை நாம் பயில முடியும். முயல்வோம் வாருங்கள்.
கடந்த
மூன்று வாரங்களாய் இயேசு கூறிய உவமைகள் மூலம் கசப்பான பல பாடங்கள் பரிசேயர்களுக்கு
வழங்கப்பட்டன. அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது வென்றுவிடும்
வெறியில்,
மற்றொரு குழுவினரையும்
தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள்தாம் ஏரோதியர்கள்.
பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள்.
யூத குலத்தில் கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று
எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய
ஆட்சியையும், பேரரசரான
சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் இந்தப் பரிசேயர்கள்.
ஏரோதியர்கள்
இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள்
இவர்கள். சீசருக்குச் சாமரம் வீசிய ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப் பணிகள் செய்தவர்கள் இவர்கள்.
கொள்கை
அளவில் இரு வேறு துருவங்களாக, சென்மப் பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்து விட்டனர்.
காரணம்?
இவர்கள் இருவருக்கும்
ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.
அரசியல்
உலகில் நண்பர்கள், எதிரிகள்
என்பவர்கள் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை நாம் இந்தியாவிலும் இன்னும்
பிற நாடுகளிலும் பார்த்து வருகிறோம். பாம்பும் கீரியும் போல ஒருவரை ஒருவர் அழிக்க ஆசைப்படும்
அரசியல்வாதிகள், கரங்கள்
கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து நாம் பல முறை வேதனையில் சிரித்திருக்கிறோம்.
இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய நற்செய்தியின் முதல்
வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல் வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள்
என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன.
அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக் கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம்
மாறுகிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம்.
ஒரு
குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக் கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள்
எத்தனை,
எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக நம் மானத்தையும், கௌரவத்தையும் அடமானம் வைத்த நேரங்கள்
எத்தனை,
எத்தனை? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட
நம் மனங்களைக் கொஞ்சம் அலசிப்பார்ப்போம்.
கொள்கைகளைப்
புறந்தள்ளிவிட்டு, கூட்டணி
சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல் நமக்கு
அடுத்த பாடம். நேர்மையுடன் செயல்பட முடியாத பரிசேயர்களும் ஏரோதியர்களும் தேனொழுகப்
பேசி, தேள் போலக் கொட்டும் வார்த்தைகளை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற
ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்:
மத்தேயு
நற்செய்தி 22: 18-21
இயேசு
அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை
எனக்குக் காட்டுங்கள்” என்றார்.
அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும்
எழுத்தும் யாருடையவை?” என்று
கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு
உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
வரி
செலுத்த பயன்படுத்தப்பட்ட நாணயம், அந்த நாணயத்தைப் பார்த்தபின் இயேசு சொன்ன அந்தப் புகழ்மிக்க வார்த்தைகள்
ஆகியவை நமது மூன்றாம் சிந்தனை. 'தெனாரியம்' என்ற அந்த நாணயத்தின் ஒரு புறம் உரோமையப் பேரரசன் சீசரின் உருவமும், "தெய்வீக அகுஸ்து சீசரின் மகன் திபேரியு சீசர்" என்ற வார்த்தைகளும்
பொறிக்கப்பட்டிருந்தன. நாணயத்தின் மறுபக்கம் 'Pontifex
Maximus' அதாவது
‘குருக்களுக்கெல்லாம் பெருங்குரு’ என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சீசர் தன்னை
வெறும் அரசியல் தலைவனாக மட்டுமல்லாமல், மதத்தலைவனாகவும், கடவுளாகவும் காட்டுவதற்கு அந்த நாணயங்களை உருவாக்கியிருந்தான்.
சீசருக்கு
வரி கொடுப்பதா வேண்டாமா என்று கேட்டவர்களிடம்,
‘சீசரின் உருவங்கள்
பொறிக்கப்பட்டிருந்த நாணயங்களை சீசருக்குக் கொடுங்கள்’ என்று சொன்ன இயேசு, அத்துடன் தன் பதிலை நிறுத்தியிருக்கலாம்.
ஆனால், இந்த வார்த்தைகளைச் சொன்ன அதே மூச்சில், இயேசு கடவுளையும் தன் பதிலில் இணைத்தார். “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார்.
இயேசு
கூறிய இந்த வார்த்தைகள் பல வடிவங்களில் பலச் சூழல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீசரையும், கடவுளையும் இணைத்து இயேசு பேசியது அரசியலையும் மதத்தையும் இணைத்து
சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தந்துள்ளது.
மனித
வரலாற்றில் மதமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. மதநிறுவனங்களில் அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு மதச்சாயங்கள் பூசப்படுவதையும் நாம் இப்போது அதிக அளவில்
கண்டு வருகிறோம்.
கடவுள்
நம்பிக்கையற்றவர்கள் என்று தங்களை மேடைகளில் பறைசாற்றும் அரசியல் தலைவர்களும், தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில் மதத் தலைவர்களைச் சந்திப்பது, மத வழிபாடுகளில் ஈடுபடுவது என்று தங்கள் நிறத்தை மாற்றுவதைக் காண்கிறோம்.
அரசியல்
தலைவர்களும், அரசியல்வாதிகளும் இறைவனின் துணையை, ஆசீரை நாடிச் செல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இறைவனையும், இறைவனின் அடையாளங்கள், திருத்தலங்கள் ஆகியவற்றையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை
நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல்வாதிகள் ஆண்டவனின் சன்னதியில் பணிவோடு நுழைகின்றனர்.
பிறகு, அந்த ஆண்டவனைப் பீடங்களில் இருந்து இறக்கி
வைத்துவிட்டு, தங்களையே பீடங்களில் ஏற்றிக் கொள்கின்றனர்.
தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப்
பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை.
இவ்விதம்
அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது வரலாற்றின் ஒருபக்கம் என்றால், மதங்களில், மதநிறுவனங்களில் அரசியலைக் கலப்பது
வரலாற்றின் மறுபக்கம். மதத்தில் அரசியலைக்
கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச்
சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், எங்கிருந்தோ வந்த இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப்
பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்து விட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்
அரசியல் வாதிகளின் நாடகங்களையும் விஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள்
போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர்.
மதமும்
அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன.
சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்குத் தருவது போல், கடவுளின் உருவம் பதிந்துள்ள நம்மை (தொடக்க நூல் 1:26) கடவுளுக்கு
வழங்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை.
சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம்
இன்று கேட்கிறார். நம் பதில் என்ன?
This comment has been removed by a blog administrator.
ReplyDelete