The new martyrs of Libya
2nd
Sunday of Lent
The video clipping released by ISIS
two weeks ago (February 15) shocked the world once again. 21 Coptic Christians
from Egypt were brutally
murdered by the ISIS on the shores of Libya . While some countries are
thinking on the lines of ‘eye-for-an-eye’ strategies, a 60 year old mother, who
had lost two of her sons in this tragedy, and her youngest son created waves of
hope to say that the world will not become totally blind by ‘eye-for-an-eye’
formula. They also teach all of us how to view personal tragedies with the eyes
of faith.
When Bishoy
Estafanos Kamel, aged 25, and his younger brother Samuel Estafonas Kamel, aged
23, were killed by ISIS , they died calling out
the name of Christ. Their younger brother, Beshir Kamel, aged 21, gave an
interview in Sat 7 Arabic, a Christian Satellite TV channel operating in the Middle East . What Beshir said in that interview speaks
volumes about this young man and his mother.
Beshir thanks the ISIS for releasing that video since it has had a
faith-affirming effect on him and the people of the village: “(My brothers) are
a pride to Christianity. I am proud of them and I walk with my head held high. ISIS gave us more than we could have asked from them when
they didn’t edit out the part where they declared their faith and called out
the name of Jesus Christ. ISIS has helped us
strengthen our faith. Yes, believe me. I thank ISIS
because they did not cut out the audio when they screamed declaring their faith.”
What Beshir shared
about his mother is quite touching. When Beshir asked his mother what her
response would be if she came across an IS man on the street, she said, “I will
ask God to open his eyes and invite him to our house.”
The massacre carried out by ISIS
in cold blood has been interpreted as a witnessing to faith by Beshir and his
mother. This tragic event and its interpretation, in a remote way, remind me of
Abraham leading his son Isaac to be sacrificed on a mountain.
In many religions, animals are sacrificed at the altar
by slitting their throats. If Abraham had gone on with his sacrifice of Isaac,
probably he would have treated his son as a sacrificial lamb and slit his
throat. The ‘ritual’ of killing that ISIS has
adopted, reminds us of these sacrifices. When the people of the village of
al-Aour, from where many of the victims have hailed, saw the video of the
killing of their kith and kin, they were probably reminded of the Biblical
sacrifices. That is why Beshir, in his
interview said, “In fact, in the village, more than feeling sad, they are feeling
happy and congratulating one another because so many from the village laid down
their lives for Jesus Christ.”
We know of many persons who have been tested beyond
reasonable limits and how they have been shining examples of trust and faith in
God. The Bible has many such examples, starting with Abraham. Right from the
moment God took over the life of Abraham, he was put through many trials. The
test presented to us in today’s first reading (Genesis 22: 1-18 – selected
texts) was, probably, the greatest of them all – namely, to kill his own son
and offer him as a sacrifice to God.
God chose a
mountain top for this painful sacrifice. Abraham must have grown up with the
hope that God lived on mountains and a person meeting God on a mountain, would
come down filled with God’s gift. Now, when Abraham goes up the mountain, he
will not be filled; but, rather, he would be deprived of the precious gift God
had given him at the ripe old age of 100. This was a reversal which was way
beyond Abraham’s reasoning capacity. Still Abraham begins this torturous
journey, relying not on his reasoning, but his faith.
The test of
Abraham was more poignant in that he had to travel three days with his son Isaac
to perform this sacrifice. What would they have spoken? Every time Abraham saw
his beloved son, his heart must have bled. Why would God do this? Isn’t it
already cruel enough to ask Abraham to sacrifice his son? Then, why make him go
through this torture of three days?
At the end
of these three days, when they reach the mountain, Abraham makes his son Isaac
carry the firewood meant for his own sacrifice. When Isaac poses the innocent
question about the lamb, Abraham must have turned aside and mumbled the famous
line: “God will provide!”
Some
scripture scholars would explain this incident as a fore-shadow of the
Sacrifice of Jesus on Calvary . The Passion of
Jesus was spread over three days of torture. Like Isaac, Jesus also carried the
wood on which he would be sacrificed. The torture that Abraham had to undergo
was an indication of what God the Father would undergo during the Passion and
Death of His own Son.
Abraham
went up the mountain to perform a sacrifice. He returned home filled with
God-experience and blessings. The Gospel of today (Mark 9: 2-10) talks of the
three disciples who went up the mountain and met God. This would strengthen
them for later sacrifices in their lives. Sacrifices either precede or follow
God-experience. This is clear also in the case of the Coptic Christians of
Egypt who feel proud of their sons laying down their lives for Christ.
Deep
experiences of God should take us back to the people. This is what happens in
the final part of the Transfiguration event. Peter wanted to prolong the
‘experience’ by erecting tents. God intervened and said, “This is my Son.
Listen to him.” That was an indirect reminder to Peter as well as to us, not to
be lost in the moment, but to keep silent and listen to the Son. What would the
Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the
people to ‘transfigure’ them.”
As we conclude, let us turn our minds back to
Beshir, who at the end of his interview was asked to pray and he, without any
hesitation, obliged. Responding quickly to a request from the TV programme
host, Beshir prayed openly saying: “Dear God, please open their (ISIS ) eyes to be saved and to quit their ignorance, and
the wrong teachings they were taught.”
Let us pray earnestly for ISIS
as well as for many other fundamentalists, who, in the name of God and religion
tend to promote more and more hatred in this world. May they be ‘transfigured’
into full human beings!
Abraham sacrificing Isaac - TIZIANO Vecellio
இருவாரங்களுக்கு முன், ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட ஒரு
வீடியோ தொகுப்பு, உலகை அதிர்ச்சியில் உறையச்
செய்தது. லிபியா கடற்கரையில் 21 கிறிஸ்தவ
இளைஞர்கள் கழுத்து வெட்டப்பட்டு கொலையுண்ட காட்சி, அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
இக்கொடூரத்தைக் கண்ட உலக அரசுகளில் சில, பழிக்குப்
பழி என்ற பாணியில் பேசி, செயலாற்றி
வருகின்றனர். ஆனால், இந்தக் கொடூரத்தில் தன்
இரு மகன்களை இழந்த ஒரு தாயும், அவரது இளைய
மகனும் கூறிய வார்த்தைகள் நம்பிக்கையைத் தருகின்றன.
ஒருவாரத்திற்கு முன்னர் எகிப்து தொலைக்காட்சியில் Beshir என்ற 21 வயது
இளைஞன் வழங்கிய பேட்டியொன்று வெளியானது. Beshirன் இரு அண்ணன்களான, Bishoy Estafanos Kamel என்ற 25 வயது இளையவரும், அவரது தம்பி Samuel Estafanos Kamel என்ற 23 வயது இளையவரும் கழுத்து அறுபடுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில்
கூறியபடியே இறந்தனர். இந்த நிகழ்வைக் குறித்தும், ISIS தீவிரவாதிகள் குறித்தும் இளையவர் Beshir பேசுகையில், "என்
அண்ணன்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். நான் ஒரு கிறிஸ்தவன்
என்பதை, இனி தலைநிமிர்ந்து இவ்வுலகிற்குச் சொல்வேன். என் அண்ணன்கள்
கொலையுண்டதை வீடியோ படமாக ஊடகங்களில் வெளியிட்ட ISIS குழுவினர், எதிர்பாராத
வகையில் ஒரு கொடையை எங்களுக்கு அளித்துள்ளனர்" என்று Beshir கூறியது ஆச்சரியமாக இருந்தது.
இளையவர் Beshir தொடர்ந்து
பேசினார்: "அந்த வீடியோவின் ஒலிப்பதிவை மௌனமாக்காமல், ISIS குழுவினர், அப்படியே
வெளியிட்டதால், என் அண்ணன்கள் இருவரும் கழுத்து வெட்டப்படும்போது,
இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் சொன்னது, எங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது. ISIS குழுவினர் நினைத்திருந்தால், அந்த ஒலியை மௌனமாக்கிவிட்டு, வெறும் வீடியோவை மட்டும்
அனுப்பியிருக்கலாம். ஆனால், ஒலிப்பதிவை மாற்றாமல், அதை அப்படியே
அனுப்பியதற்காக அவர்களுக்கு நன்றி" என்று Beshir கூறினார்.
இளையவர் Beshir அந்த
நேர்காணலில் தன் தாயைக் குறித்து சொன்னதும் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது. Bishoy,
Samuel என்ற இரு மகன்களையும் பறிகொடுத்த தன்
தாயிடம், "அம்மா, ISIS தீவிரவாதிகளில் ஒருவரை நீங்கள்
சந்தித்தால் என்ன செய்வீர்கள்?" என்று Beshir கேட்டபோது, அந்தத் தாய்,
"அந்த மனிதரின் கண்களை இறைவன் திறக்கவேண்டும் என்று மன்றாடுவேன்.
அம்மனிதரை என் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்" என்று கூறியதாக, Beshir தன் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
ISIS தீவிரவாதிகள், 21 இளையோரின் கழுத்தை
அறுத்துக் கொலைசெய்த கொடூரத்தையும், இந்தத் தொலைக்காட்சி நிகழ்வையும் ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில் பகிர்ந்துகொள்வதற்குக்
காரணங்கள் உண்டு. பெரும்பாலான மதங்களில் மிருகங்களை இறைவனுக்குப் பலி செலுத்தும்போது,
அவற்றின் கழுத்தை அறுத்துக் கொல்வது வழக்கம். இந்த வழக்கத்தை மறைமுகமாக
நினைவுறுத்தும் வண்ணம், ISIS தீவிரவாதிகள், மனிதர்களின் கழுத்தை அறுத்துக் கொல்லும் வீடியோக்களை கடந்த சில
மாதங்களாக ஊடகங்கள் வழியே வெளியிட்டு வருகின்றனர். வெறுப்புடன் அவர்கள் மேற்கொண்டுவரும்
அந்தக் கொடூரத்திலும் நன்மையைக் கண்டு, தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும்
தாயும், இளையவர் Beshirம், ‘விசுவாசத்தின் தந்தை’ என்று போற்றப்படும் ஆபிரகாமை நம்
நினைவுக்குக் கொணர்கின்றனர்.
ஆபிரகாமின் வாழ்வு, அமைதியான
வகையில் அமையவில்லை. அவர் மனதில் வேர்விட்டு வளர்ந்திருந்த விசுவாசத்திற்கு சவாலாக
பல நிகழ்வுகள் அவர் வாழ்வில் தொடர்ந்தன. அந்தச் சவால்களின் சிகரமாக, அவர் விசுவாசத்தின் ஆணிவேரையே ஆட்டிப்படைக்கும் ஒரு சவால், கடவுளிடமிருந்து
வந்ததை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. (தொடக்க நூல்
22: 1-2, 9-13, 15-18)
இறைவன் ஆபிரகாமுக்குத்
தந்தது ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு, ஈசாக்கு
பிறந்தபோது, அவரது வயது 100.
ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி, வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.
இந்தக் கொடுமையை நிகழ்த்த
இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை. மலைகள், இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற பாரம்பரியத்தில் வளர்ந்தவர் ஆபிரகாம்.
ஆபிரகாமுக்கு இறைவன் காட்டிய அந்த மலையில், தனக்கு நிறைவைத் தரும்
இறைவனைச் சந்திப்பதற்குப் பதில், தன்னிடம் உள்ளதைப் பறித்துச்செல்ல
வரும் இறைவனைச் சந்திக்கப் போவது, ஆபிரகாமின் விசுவாசத்திற்குப்
பெரும் சவாலாக அமைந்திருக்கும். இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற
அந்தப் பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப்
பயணத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது நல்லது.
ஒரு நொடியில் தலைவெட்டப்பட்டு
உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில்,
அல்லது, மாதக் கணக்கில் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை
எண்ணிப் பார்க்கலாம். அந்தச் சித்ரவதையை ஆபிரகாம் அனுபவித்தார். இறைவன் கேட்ட பலியை
வீட்டுக்கருகில், ஓரிடத்தில், ஆபிரகாம் நிறைவேற்றவில்லை. அவருக்கு இறைவன் சொன்ன அந்த
மலையை அடைய அவர் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டார்.
அதுமட்டுமல்ல... அவர்கள்
மலையடிவாரத்தை அடைந்ததும், சிறுவன்
ஈசாக்கின் தோள்மீது ஆபிரகாம் விறகுக் கட்டைகளைச் சுமத்துகிறார். சிறுவனும்,
அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு ஆர்வமாக மலைமீது ஏறுகிறான். போகும்
வழியில், தந்தையிடம்,
"அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும்
இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்கிறான்.
கள்ளம் கபடமற்ற அச்சிறுவனின் கேள்வி, ஆபிரகாமின் நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும்.
உண்மையான பதிலைச் சொல்லமுடியாமல், ஆபிரகாம் "கடவுளே பார்த்துக்கொள்வார்"
என்று ஏதோ ஒரு பதிலைச் சொல்லி மழுப்பினார்.
மகனைப் பலிதருவது என்பதே,
கொடூரக் கட்டளை. அக்கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற முடியாமல், இறைவன் அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று நாள்
நரக வேதனையையும் தந்தார்? எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி
இது.
ஆன்மீக விரிவுரையாளர்கள்
இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு, பல வழிகளில் கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது.
ஆபிரகாமும் ஈசாக்கும் மேற்கொண்ட மூன்றுநாள் பயணத்தைப் போல, இயேசுவின் பாடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன.
சிறுவன் ஈசாக்கு பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்ததுபோல், இயேசு சிலுவை சுமந்தார். ஈசாக்கு கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல்
ஆபிரகாம் தவித்தார். பாடுகளின்போது இயேசு கேட்ட கேள்விகளுக்குத் தந்தை பதில் ஏதும்
தரவில்லை... இப்படி பல ஒப்புமைகள் வழியே, இந்த நிகழ்வு, கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது.
இந்த நிகழ்வில் ஆபிரகாம் மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும் இயேசுவின் பாடுகளின்போது வேதனை அடைந்தார் என்பது ஆன்மீக
விரிவுரையாளர்கள் தரும் ஒரு விளக்கம்.
மகனைப் பலிகேட்ட இறைவன்,
ஆபிரகாமுக்கு, மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். லிபியா கடற்கரையில் தன் இரு
மகன்களை பலிகொடுத்த தாயும், அண்ணன்களை
இழந்த இளையவர் Beshirம் அந்த
வேதனைத் தீயில் புடமிடப்பட்டு, இறை அனுபவம் பெற்றுள்ளனர் என்பதை Beshir அளித்த பேட்டியில் நாம் உணரலாம். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள
மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின் உருமாற்றம்
என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை
அனுபவத்தைப் பெறுவதும், இறை அனுபவத்தைப்
பெற்றபின், வேதனைகளை அனுபவிக்கத் தயாராவதும் வாழ்வில் நாம் சந்திக்கும்
ஓர் உண்மை.
இறை அனுபவம், எவ்வளவுதான்
ஆழமானதாக இருந்தாலும், நானும்
கடவுளும் என்று, அந்த அனுபவத்தைத் தனிச் சொத்தாக்குவதில் அர்த்தமில்லை என்பதை இயேசு
உருமாறிய நிகழ்வின் கடைசிப் பகுதி நமக்குச் சொல்லித்தருகிறது. "நாம் இங்கேயே இருப்பது
நல்லது" என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு, மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்:
“என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச்
செவிசாயுங்கள்” என்பதே.
அந்த அன்பு மகன் இயேசு
என்ன கூறுவார்? ‘இங்கே தங்கியது
போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி, நம் பணியைத் தொடர்வோம்’ என்று இயேசு கூறுவார். கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு
கூடாரங்களும், கோவில்களும் அமைப்பது நல்லதுதான். ஆனால்,
கோவில்களிலேயே தங்கிவிட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறை அனுபவம் பெற்ற
அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத்
திரும்பவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும்,
அப்படி காண முடியாமல் தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை
பட்டிருக்கிறோம்.
ஆபிரகாமுக்கு இறைவன் அளித்த
சவாலைப் போல, இன்று உலகில் பலர்
தங்கள் நெருங்கிய உறவுகளை பலச் சூழல்களில் பலிகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இறைவனை நம்பி தன் மகனைப் பலிதர துணிந்த ஆபிரகாமைப் போல, தன் இரு மகன்களின் கொடூரப்
பலியைக் கண்டபின்னரும், அன்பையும்,
மன்னிப்பையும் சுமந்து வாழும் எகிப்து நாட்டின் தாயைப் போல, தன் அண்ணன்களின் மறைசாட்சிய மரணத்தால் விசுவாசத்தில் உறுதி அடைந்துள்ள இளையவர் Beshirஐப்போல, உலகினர் அனைவரும்
நம்பிக்கையையும், மன்னிப்பையும் வளர்க்கும் வழிகளைக் காண இறைவனின் வரங்களை வேண்டுவோம்.
ISIS தீவிரவாதிகளுக்கும்,
இன்னும், உலகில் வெறுப்பை வளர்க்கும் பல்வேறு குழுவினருக்கும் ஒரு சிறப்புச்
செபத்துடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். எகிப்து தொலைக்காட்சி பேட்டியின் இறுதியில்,
தொகுப்பாளர், இளையவர் Beshirஇடம் ஒரு செபம் சொல்லும்படி கேட்டதும், Beshir எவ்வித தயக்கமும் இன்றி செபித்தார்: "அன்புநிறை இறைவா,
ISIS குழுவினரின்
கண்களைத் திறந்தருளும். அவர்களுக்குத் தவறான பாடங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன என்பதை
அவர்கள் விரைவில் உணர்ந்து, தங்கள் அறியாமையிலிருந்து அவர்கள்
வெளிவர உதவியருளும்"
என்று இளையவர் Beshir கூறிய செபத்தில்
நாமும் இணைவோம். மதங்களின் பெயரால், இறைவனின் பெயரால் மக்கள்
மனதில் வெறுப்பையும், பழி உணர்வுகளையும் வளர்க்கும் அனைத்து வன்முறையாளர்களும்
தங்கள் அறியாமையையும், தவறுகளையும் உணர்ந்து உண்மையை விரைவில்
கண்டுணர சிறப்பாகச் செபிப்போம்.
No comments:
Post a Comment