Awakening the Seed
5th Sunday of Lent
March 20,
Friday, was announced as the official beginning of the Spring Season. The
weather channels were working over-time to report on the solar eclipse that
occurred in most parts of Europe and the snow fall in the east coast of the U.S.A. on March
20. What caught my attention (and, honestly, tickled me to some extent) was the
way the media announced the ‘official’ arrival of Spring as well as its
duration. Here are two samples:
Spring
officially arrives on Friday, March 20, at 6:45 p.m. EDT, but Old Man Winter
may have the last laugh in a large part of the Northeast. – reports AccuWeather.com.
Spring
2015 started on Friday, 20th March 2015, 11:46pm and ends Sunday, 21st June
2015, 6:38pm - Location: Northern Hemisphere (Spring 2015 - http://days.to/spring/2015)
It is
common sense to talk in precise terms of date and time for an event like the
arrival of a train, or, an aircraft; but to use the same language to indicate
the arrival of a season, in my opinion, showed our futile attempts to make nature
more mechanical.
According
to the weather experts spring may have come on March 20. But, we know that the
spring season did not spring up at the given hour. It has had a long gestation
period under the blanket of snow and slowly (not abruptly) painted the world in
multi-coloured leaves and flowers.
Our
generation, accustomed to ‘instant’ and ‘ready-made’ products, does not have
the patience to see this slow, imperceptible change that took place in nature. Humankind
will be a lot better if we learn to live with and learn from the cycles of
nature, rather than try to portray them as machines that bring about changes at
the touch of a button!
For us,
Christians, spring season began along with Lenten Season. On the First Sunday of Lent, we
spoke about Lent and the Spring Season. Today, the Fifth Sunday of Lent, we are
back to this theme. To add more relevance to this theme of Lent-alias-Spring, in
today’s Gospel, Jesus talks of the seed yielding much fruit.
Last week
we reflected on one of the most famous quotes from the Bible known as the
‘gospel of all the gospels’, namely, “For God so loved the world that he
gave his only Son, that whoever believes in him should not perish but have
eternal life.” (John 3: 16) Today we have another equally famous quote from
John’s gospel, namely, “Truly, truly, I say to you, unless a grain of wheat
falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much
fruit.” (John 12: 24)
Both these
passages from John’s gospel have been used as independent quotes without much
reference to the circumstances in which Jesus spoke these words. In fact, the
whole of John’s gospel is considered more of a theological treatise rather than
a historical narration. Hence most of the quotes from this gospel can be used
in very many contexts. Still, it would be helpful to think of what prompted
Jesus to say these words.
The opening
lines of today’s gospel give us the context in which Jesus said this famous
‘parable’ of the grain of wheat. Here are the opening lines: Now among
those who went up to worship at the feast were some Greeks. So these came to
Philip, who was from Beth-sa'ida in Galilee ,
and said to him, "Sir, we wish to see Jesus." (John 12: 20-21)
In the
following verses, Jesus speaks about his death. My limited human logic felt
that Jesus spoke out of tune in this circumstance. Since the Greeks must have
come seeking some spiritual wisdom from Jesus, he could have easily spoken to
those foreigners a great parable. After all, he was known as a master story
teller. Instead, he talks about his death. Why did the Greeks come to see
Jesus? Why did Jesus speak in this vein? The answers to these questions are
given by Fr Munachi E. Ezeogu, in his homily. His explanation is quite
enlightening and I wish to share this with you:
The
Greek philosopher Socrates is regarded as one of the wisest men of all time.
This man… devoted his life to exposing ignorance, hypocrisy and conceit among
his fellow Athenians and calling them to a radical re-examination of life…But
those in power arrested him, tried him and sentenced him to death…Subsequent
generations of Greeks came to regard Socrates as a martyr for truth. They
resolved never again to persecute anyone on account of their beliefs.
By the
time of Jesus, the Greeks had become among the most broad-minded people in the
world. Various religious and philosophical traditions flourished among them and
vied for popularity. We see in today's gospel that among the huge crowds that
had come to Jerusalem
for the Passover feast were some Greeks. It did not take these Greeks long to
see that all was not well in Jerusalem .
So they came to see Jesus. Why did they come to see Jesus? Although John has
somewhat spiritualised the story, thereby giving the impression that they came
to seek admission into the "body" of Christ (John 12:32), it is more
probable that they came to alert Jesus of the seriousness of the danger
surrounding him and to suggest to him to flee with them to Greece, the land of
freedom. The response that Jesus gives to their request shows that it has to do
with his impending death and that he has chosen to stay and face it rather than
seek a way to escape it.
This
explanation seems to remove the incongruence that I felt, namely, between the
Greeks seeking Jesus and Jesus talking of his death.
Jesus
chooses to stay on and face the consequence. He begins his response with the
famous line -
“The
hour has come for the Son of man to be glorified.” Thrice in John’s gospel we see the
line ‘the hour has not yet come’. The first time it was in the wedding at Cana : When the wine failed, the mother of Jesus said
to him, "They have no wine." And Jesus said to her, "O woman,
what have you to do with me? My hour has not yet come." (John
2: 3-4) On two more occasions during the public ministry of Jesus the phrase ‘his
hour had not yet come.’ is used. (John 7:30; 8:20). Now Jesus declares
that His hour has come… The hour for what? The hour to become a life-giving
seed by sacrificing life.
The
‘parable’ of the grain of wheat has great depth. Why was the grain of wheat
created? I could think of two primary reasons and one secondary reason. The
primary reasons are: to serve as food for other living beings or to become a
seed in order to multiply its own kind. These are the prime reasons why a grain
of wheat has been created. The secondary reason I could think of was that this
grain could be used as a decorative piece. This grain remains alone, without
being productive… just a show-piece. This is what we see in the first part of
Jesus’ saying: “unless a grain of wheat falls into the earth and dies, it
remains alone”. Alone… artificially alone!
The
‘parable’ of the grain of wheat reminded me of another ‘parable’:
A young
man and a woman wanted peace in the world and peace in their heart. But they
were very frustrated… the world seemed to be falling apart. They would read the
papers and get depressed. One day they
decided to go shopping, and picked a store at random. They walked into the store
and were surprised to see Jesus behind the counter. They went up to Jesus and
asked: "What do you sell?” Jesus
replied: “Oh, just about anything! Feel
free to walk up and down the aisles, make a list of things you want, and when
you come back, I will see what I can do for you.” Both of them walked up and down the aisles
and saw all sorts of things they wanted: peace on earth, no more war, no hunger
or poverty, peace in families, no more drugs, clean air, and careful use of
resources. They made a list of the things they wanted and handed it over to
Jesus. He read through the list, looked at them and smiled. “No problem,” He said. Then He bent down behind the counter and picked
up a number of small packets. “What are
these?” they asked. “Seed packets,"
Jesus replied. "This is a catalogue
store.” In surprise, they said: “You
mean we don’t get the finished product?”
“No," He answered.
"This is a place of dreams. When you choose what you want, I give
you the seeds. You plant the seeds and watch them grow. There is one catch,
however: you will not receive the benefit of your good work -- others will.”
Both Lent
and Spring drive home the theme of ‘change’. Our ‘now’ generation wants to see
‘instantaneous’ changes and becomes impatient with slow changes. We need to
learn from Lent and Spring, that significant changes do not happen over-night.
The
‘parable’ of the grain of wheat and the ‘parable’ of the ‘dream shop’ tell us
that even though God is the store owner, He does not give us our wishes and dreams
as ‘ready-made’ ‘take-home’, ‘finished’ products. He would rather give us the
starting points… the seeds! It is up to us to keep these seeds as decorative
pieces or plant and nurture them into a fruitful future – a future in which we
may not even live to enjoy the fruits! That is exactly the role of the grain of
wheat!
Dream Seeds – the Battle for your Heart
"மார்ச்
20, வெள்ளிக்கிழமை, வசந்தக்காலம் அதிகாரப்பூர்வமாக
வந்துசேர்கிறது" என்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வானிலை அறிக்கைகள் கூறின.
அதிலும்,
நியூயார்க் நகரிலிருந்து
வெளிவந்த ஓர் அறிக்கையில், "மார்ச் 20, வெள்ளிக்கிழமை, மாலை 6:45 மணிக்கு வசந்தம் வருகிறது" (Snow to Blanket NYC on First Day of Spring - Spring officially arrives
on Friday, March 20, at 6:45 p.m. EDT - AccuWeather.com) என்று நான் வாசித்தபோது எனக்குள் இலேசாகச் சிரித்துக் கொண்டேன்.
மனிதர்களாகிய
நாம், ஒரு நிகழ்வு நடப்பதற்கு, நாளையும், நேரத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால், அதே பாணியில் வானிலை மாற்றங்கள் நிகழும் என்று சொல்வது; கால மாற்றங்களுக்கு கால அட்டவணை போடுவது போன்றவை, இயற்கையை நம்
கட்டுப்பாட்டிற்குள் கொணரும் முயற்சிகளாக நான் கருதுகிறேன்.
வானிலை
அறிக்கைகளின் கணக்குப்படி, வசந்தக்காலம், மார்ச் 20, இவ்வெள்ளியன்று
வந்திருக்கலாம். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு, பிப்ரவரி, 18, திருநீற்றுப் புதனன்று வசந்தக்காலம் துவங்கிவிட்டது. தவக்காலத்திற்கும், வசந்தக்காலத்திற்கும் இடையே உள்ள நெருங்கியத் தொடர்பினை, நாம் தவக்காலத்தின்
முதல் ஞாயிறன்று சிந்தித்தோம். தவக்காலத்தின் 5ம் ஞாயிறான இன்று, வசந்தக்காலத்தைப்பற்றி, மீண்டும் ஒருமுறை சிந்திக்க வந்திருக்கிறோம்.
இயற்கையின்
சுழற்சியில் உள்ள நான்கு பருவக்காலங்களில், வசந்தக்காலத்திற்குத் தனியொரு அழகும், அர்த்தமும் உண்டு. பனியில் புதைந்து, இறந்துபோனதாய் நாம் நினைக்கும்
தாவர உயிர்கள், வசந்தம் வந்ததும், மீண்டும் உயிர் பெற்று எழுவது, இயற்கை நமக்குச் சொல்லித்தரும்
நம்பிக்கை பாடம். நம்பிக்கை தரும் வசந்தக்காலத்தில், தவக்காலத்தை நாம் கொண்டாடுவது
பொருத்தமாக உள்ளது.
தவக்காலம்
ஒரு கொண்டாட்டமா? ஆம்... ‘மீண்டும் மீண்டும் வாய்ப்பு உள்ளது’ என்ற நம்பிக்கையை வளர்க்கும் காலம் இது என்பதால், இது ஒரு கொண்டாட்டம்தான். தவக்காலத்தின் இந்த 5ம் ஞாயிறன்று, வசந்தக்காலத்தை
நமக்கு நினைவுறுத்தும் அழகான ஒரு கூற்றை இறைமகன் இயேசு நமக்கு முன் வைக்கிறார்.
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா
விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் நற்செய்தி 12: 24)
தாவர
உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக்காலத்தில், இயேசுவின் இந்தக் கூற்று, பல எண்ணங்களை
உள்ளத்தில் விதைக்கின்றது.
வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள்
கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள். (யோவான் நற்செய்தி 12: 20-21) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.
ஆர்வமாகத்
தன்னைத் தேடிவந்த கிரேக்கர்களை வரவேற்று, அவர்களுக்கு நம்பிக்கை தரும் நாலு
வார்த்தைகளை இயேசு சொல்லியிருக்கலாம். அதற்கு நேர்மாறாக, அவர் கூறும் வார்த்தைகள், கலக்கத்தை, அச்சத்தை உருவாக்கும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன.
எருசலேமுக்கு
கிரேக்கர்கள் ஏன் வந்தார்கள்? அவர்கள் ஏன் இயேசுவைக் காண விழைந்தார்கள்? அவர்களிடம் இயேசு, ஏன் இப்படி ஒரு பதிலைத் தந்தார்? என்ற கேள்விகளுக்கு அருள்தந்தை முனாச்சி என்பவர் (Fr Munachi
E. Ezeogu) தன் மறையுரையில்
தரும் விளக்கம் புதிதாக உள்ளது... புதிராகவும் உள்ளது. அதை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
உரோமையர்களைவிட
கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள், கிரேக்கர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற
மேதை, சாக்ரடீசை, அவர்கள் கொன்றது, பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும், அவர்
பின்பற்றும் கொள்கைகளுக்கென, அவர் மக்களிடையே பரப்பிவரும் கருத்துக்களுக்கென
கொல்வதில்லையென்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள், கிரேக்கர்கள். எனவே, அவர்கள் மத்தியில் பல்வேறு சிந்தனையாளர்கள் சுதந்திரமாக வாழமுடிந்தது, பேசமுடிந்தது. தங்கள் நாட்டு சிந்தனைகள் போதாதென்று, பல கிரேக்கர்கள், அண்டை நாடுகளுக்கும் சென்று அங்குள்ள சிந்தனையாளர்களைச்
சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கி வந்தனர். சுதந்திரச்
சிந்தனை கொண்ட இந்த கிரேக்கர்களில் ஒரு சிலர், இயேசுவைத் தேடி எருசலேம் நகருக்கு வந்தனர்.
எருசலேமில்
அவர்கள் இயேசுவைத் தேடியபோது, ஒரு கசப்பான உண்மையை முதலில் கண்டுபிடித்தனர்.
இயேசு என்ற அந்த இளையவருக்கு எதிராக அந்நகரில் உருவாகி வந்த எதிர்ப்பு, வெறுப்பு ஆகியவை, அவர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கும். எனவே, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததும், தாங்கள்
கண்டுபிடித்த உண்மைகளை அவருக்கு எடுத்துச்சொல்லி, சிந்தனைச்
சுதந்திரம் உள்ள கிரேக்க நாட்டுக்கு அவரைத் தங்களுடன் வரும்படி அழைத்திருப்பார்கள்.
அவர்கள் தந்த அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, தன்னுடைய நேரம் வந்துவிட்டது என்று
பேச ஆரம்பிக்கிறார்.
ஊருக்குப்
புதிதாய் வந்த வேற்று நாட்டினரே இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருந்தார்கள்
என்றால், இயேசுவுக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்? கட்டாயம் இயேசு இதை உணர்ந்திருப்பார். அந்த ஆபத்திலிருந்து தப்பித்துப்
போகாமல், அதை நேருக்கு நேர் சந்திக்க அவர்
முடிவெடுத்தார். அந்த கசப்பான முடிவை, இயேசு, இன்றைய நற்செய்தியில் பல விதங்களில் கூறுகிறார்.
அவர்
சொன்ன முதல் வாக்கியம்: மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
(12: 23) மானிட மகன் மாட்சி பெறும் நேரம்...
மாட்சி பெறும் நேரம் என்றால், அதைத் தொடர்ந்து அரியணை, மணிமகுடம், அரசாட்சி என்ற தோரணையில் இயேசு
பேசியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறியவை மேலும் புதிராக
உள்ளன. அவர் தொடர்ந்து கூறிய வார்த்தைகள், காலம் காலமாக பலருடைய உள்ளங்களில் உறுதியை, வீரத்தை, தியாகத்தை விதைத்துள்ள வார்த்தைகள்:
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா
விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் நற்செய்தி 12: 24)
ஆணி
அறைந்ததுபோல் மனதில் ஆழப் பதியும் வார்த்தைகள் இவை. கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான
இரு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்கவேண்டும். அல்லது அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்கவேண்டும். இந்த இரு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை,
உயிரை இழக்க வேண்டும்.
தன்னை
இழந்து, மற்றவரை வாழ்விப்பது, கோதுமை மணிகளுக்கு மட்டுமல்ல; அனைத்து உயிரினங்களுக்கும்,
குறிப்பாக, மனிதர்களுக்கும் குறிக்கப்பட்டுள்ள முக்கிய இலக்கு. மண்ணில் விழும்
விதைகளாக மாற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைச் சிந்திக்கும்போது, ஓர் உவமை என் நினைவுக்கு வருகிறது.
உலக
அமைதி எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் வாழ்ந்தனர், ஓர் இளைஞனும், இளம் பெண்ணும். ஆனால், இவ்வுலகம் ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறதே என்ற விரக்தியினால்
மன அமைதியை இழந்து தவித்தனர்.
இருவரும்
ஒருநாள், ஒரு கடைக்குச் சென்றனர். அந்தக்
கடை சற்று வித்தியாசமாக இருந்தது. கடையின் உரிமையாளர் இயேசு என்பதை இருவரும் உணர்ந்து, அவரிடம் சென்று,
"இங்கு
நீங்கள் என்ன விற்கிறீர்கள்?" என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், "உங்களுக்கு விருப்பமான அனைத்தும் இங்கு உள்ளன. நீங்கள் கடையைச்
சுற்றிப் பாருங்கள். உங்களுக்கு விருப்பமானவற்றைக் குறித்துக்கொண்டு என்னிடம் வாருங்கள்"
என்று சொல்லி அனுப்பினார்.
இளைஞனும், இளம்பெண்ணும் கடை முழுவதும் சுற்றினர். அவர்கள் விரும்பித்தேடிய
பல பொருள்கள் அங்கிருந்தன. அமைதியான உலகம், பசியில்லாத
பூமி, போரற்ற சமுதாயம், சுத்தமான காற்று,
தெளிந்த நீர், அன்பு நிறைந்த குடும்பம் என்று அவர்கள் ஏங்கித்தவித்த அனைத்தும்
அந்தக் கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தாங்கள் அதுவரை தேடிய அனைத்தும் தங்களுக்கு
உடனே கிடைத்துவிடும் என்ற ஆவலில், அக்கடையில் இருந்த அனைத்து நலன்களையும்
குறித்துக்கொண்டு, இருவரும் இயேசுவிடம் திரும்பிச்சென்றனர்.
அவர்கள்
தந்த பட்டியலைக் கண்ட இயேசு, புன்னகையோடு ஒரு சில பொட்டலங்களை
அவர்களிடம் தந்தார். "இவை என்ன?"
என்று அவர்கள்
கேட்டபோது, இயேசு, "இவை அனைத்தும் விதைகள்" என்று சொன்னார். புரியாமல்
அவரைப் பார்த்த இருவரிடமும் இயேசு,
"இது
கனவுகளின் கடை. நீங்கள் குறித்து வந்த கனவுகள் அனைத்திற்கும் தேவையான விதைகள் இந்தப்
பொட்டலங்களில் உள்ளன. இவற்றை விதைத்து,
வளர்ப்பது
உங்கள் பொறுப்பு" என்று இயேசு சொன்னார். தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த கனவுகள், 'ரெடிமேட்' நிலையில் கிடைக்காது, அவற்றை நட்டு வளர்ப்பது தங்கள் கடமை என்பதை இருவரும் உணர்ந்தனர்.
அவர்கள்
கடையைவிட்டுக் கிளம்பும்போது, இயேசு அவர்களிடம், "ஓ, ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன்.
இந்தக் கனவுகளை விதைப்பதும், வளர்ப்பதும் மட்டுமே உங்கள் பொறுப்பு.
இவற்றின் பலன்களை அடுத்தத் தலைமுறையினரே அனுபவிக்கப் போகின்றனர்" என்று இயேசு
சொல்லி அனுப்பினார்.
மிகத்
தெளிவான, ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. 'இன்ஸ்டன்ட்' உணவுவகைகள் உட்பட, அனைத்தும் 'ரெடிமேட்' வடிவத்தில் கிடைக்கும் இன்றைய
உலகில், நம் கனவுகள் என்ற விதைகளை நட்டு, கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதற்கு ஏராளமான பொறுமை தேவை. அத்தகையப்
பொறுமை நமக்கு உள்ளதா என்பதை ஓர் ஆன்மீகச் சோதனையாக மேற்கொள்ளலாம்.
வசந்தம்
கொணரும் மாற்றங்கள், பொறுமையாக, மிக, மிக மெதுவாக, கண்ணுக்குத் தெரியாத வண்ணம், பனிப்
போர்வைக்குள் நிகழ்ந்ததால், அதன் வெளிப்பாடான தளிர்களையும், மலர்களையும் நாம் வசந்த விழாவாகக் கொண்டாட முடிகிறது. பனிக்குள்
நடந்த மாற்றங்களோடு சேர்த்து கணக்கிட்டால்,
வசந்தம் மெதுவாக, பொறுமையாக, பல நாட்களாக வந்தவண்ணம் உள்ளது என்பதை உணரலாம். அதை
மறந்துவிட்டு, அல்லது, அதை மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு, அந்தப் பருவமாற்றம் சட்டென்று
மார்ச் 20, மாலை, 6:45 மணிக்கு
வந்தது என்று சொல்லும்போது, நம் போறுமையின்மையைத் தானே அது
காட்டுகிறது!
வசந்தக்காலத்தையும், தவக்காலத்தையும், அவற்றின் உயிர் நாடியான மாற்றத்தையும்
இணைத்து சிந்திக்கும்போது, நமக்குள்ளும், நம்மைச் சார்ந்திருப்போருக்குள்ளும் உருவாகும் மாற்றங்கள், ஒரே நாளில், ஓரிரவில் தோன்றுவதில்லை; மாற்றங்களைக் காண்பதற்கு பொறுமை மிக அவசியம் என்ற உண்மையை, முதலில்
நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, அன்பான, அமைதியான, உலகம் உருவாகவேண்டும் என்ற கனவு நம் அனைவருக்கும் உண்டு. இந்தக்
கனவு, 'ரெடிமேட்' சரக்காக நம்மை வந்தடையாது. கடையின் உரிமையாளர் கடவுளே என்றாலும், அவர் நம் கனவுகளை, கடைசரக்கைப் போல், பரிசுக் காகிதத்தில் சுற்றித் தரமாட்டார். அவர் தருவதெல்லாம் கனவு
விதைகள். அந்த விதைகளை நட்டு, வளர்ப்பது நம் கடமை. நாம் நட்டு
வளர்த்த விதைகளின் கனிகளை நாம் சுவைக்க முடியவில்லை என்றாலும், கனவுகளை நட்டோம், கண்ணும், கருத்துமாய் வளர்த்தோம் என்ற திருப்தியில் நாம் இவ்வுலகிலிருந்து
விடைபெறும் பக்குவத்தை இறைவன் நமக்குத் தர வேண்டும் என்று மன்றாடுவோம்.
பலன்களை
எதிர்பார்க்காமல், நல்ல கனவுகளை இவ்வுலகில் நட்டு, வளர்த்தால், நாமும், இயேசு சொன்னதுபோல், மிகுந்த விளைச்சலை அளிக்கும் கோதுமை மணிகளாக வாழ்ந்தவர்கள் என்ற
பெருமை பெறுவோம்.
No comments:
Post a Comment