MOMENTS
WITH CHRIST - part of Manuel Baldemor’s exhibit.
Palm Sunday - குருத்தோலை ஞாயிறு
“Palm Sunday
Tornado 1920” – I could
not have asked for a better starting point for my homily today. Tornados, I am
told, are a common feature in the U.S. , especially in the months of
March and April. Here is the excerpt from an article in Wikipedia:
The Palm
Sunday tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant
tornadoes across the Midwest and Deep South
states on March 28, 1920. The tornadoes left over 380+ dead, and at least 1,215
injured. Many communities and farmers alike were caught off-guard. Most of the
fatalities occurred in Georgia ,
Indiana , and Ohio , while the other states had lesser
amounts.
Here is
another excerpt from the same article that mentions the discrimination
prevalent in those days. According to Thomas P. Grazulis, head of the
Tornado Project, the death toll in the southern states on Palm Sunday 1920,
could have easily been much higher, since the deaths of non-whites were omitted
as a matter of official state protocol, even when it came to fatalities from
natural disasters.
Right
through human history discrimination has ruled supreme. Among the Israelites
too there were those who did not count. These ‘non-countable’ people created a
tornado in Jerusalem
when Jesus entered the city. I want to reflect on the tornado that swept over Jerusalem on the very
first Palm Sunday. Most of the people in Jerusalem, especially those in power,
were caught off-guard by this ‘intruder’ called Jesus, and His people who
amounted to nothing in the eyes of the Roman authorities as well as the Jewish
big-wigs.
Tornado is
also referred to as ‘twister’ since it twists and turns things at will! Jesus’
entry into Jerusalem
must have turned the lives of the religious leaders and the Roman officials
topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the
religious leaders – namely, the Temple
– and began to put things in order. Putting things in order? Well, depends on
which perspective one takes. For those in power, things were thrown completely
out of order; but for Jesus and for those who believed in His ways, this was a
way to set things straight. This is typical of a tornado… uprooting, turning
things topsy-turvy. A tornado is, possibly, a wake-up call to begin anew!
With the
Palm Sunday begins the Holy Week. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What
is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial
of another friend, the mock trial, the condemnation of the innocent and the brutal
violence unleashed on Jesus…? None of these comes close to the definition of
holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’. By
submitting Himself to all the events of the Holy Week, He wanted to redefine
God – a God who was willing to suffer. He had already defined love as “Greater
love has no one than this, that someone lay down his life for his friends.”
(John. 15: 13) If human love can go to the extent of laying down one’s life for
friends, then God’s love can go further… to lay down His life for all,
including the ones who were crucifying Him. Such a God would normally be
unthinkable unless otherwise one is willing to redefine God. Jesus did that. He
had also redefined holiness and made it very clear that in spite of all the
events that took place during this week, one could call this week Holy since
these events resulted in the Supreme Sacrifice. Death by crucifixion was the
most painful torture the Romans had invented. The cross was the most despised
form of punishment reserved for the worst criminals. Jesus on the Cross has
made this most derogatory symbol of punishment and death into a symbol of
veneration. The crucified Jesus has turned the lives of millions upside down.
Here is one example…
William J.
Bausch in his book Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful
Reflections talks of a Bishop who was a great evangelizer. Here is the rest of the story: He tried to
reach out to unbelievers, scoffers, and cynics.
He liked to tell the story of a young man who would stand outside the
cathedral and shout derogatory slogans at the people entering to worship. He would call them fools and other insulting
names. The people tried to ignore him
but it was difficult. One day the parish priest went outside to confront the
young man, much to the distress of the parishioners. The young man ranted and raved against
everything the priest told him. Finally,
he addressed the young scoffer by saying, “Look, let’s get this over with once
and for all. I’m going to dare you to do
something and I bet you can’t do it.”
And of course the young man shot back, “I can do anything you propose,
you white-robed wimp!” “Fine,” said the priest.
“All I ask you to do is to come into the sanctuary with me. I want you to stare at the figure of Christ,
and I want you to scream at the very top of your lungs, as loudly as you can.
‘Christ died on the cross for me and I don’t care one bit.’” So the young man
went into the sanctuary, and looking at the figure, screamed as loud as he
could, “Christ died on the cross for me and I don’t care one bit.” The priest said, “Very good. Now, do it again.” And again the young man screamed, with a
little hesitancy, “Christ died on the cross for me and I don’t care one
bit.” “You’re almost done now,” said the
priest. “One more time.” The young man
raised his fist, kept looking at the statue, but the words wouldn’t come. He just could not look at the face of Christ
and say it anymore. The real punch line came when, after he told the story, the
bishop said, “I was that young man. That
young man, that defiant young man was me.
I thought I didn’t need God but found out that I did.”
Palm
Sunday is also celebrated as the World Youth Day. Pope St John Paul II established this day in
1985, the International Year of the Youth, declared by the UN. Prior to this,
in the year 1983, Pope John Paul II had declared the Holy Year of Redemption.
For this special year, a huge cross was erected in St Peter’s Basilica for the
veneration of thousands of pilgrims pouring into Vatican for the Holy Year. At the
end of this Holy Year of Redemption, Pope John Paul II invited the youth to
come to Rome
for the Feast of the Palm Sunday. The Vatican
officials were expecting that around 60,000 youth would respond to the
invitation of the Holy Father. But, on April 15, 1984, for the Feast of the
Palm Sunday, more than 300,000 young men and women poured into St Peter’s
Square. Looking out to the crowds who answered his invitation, Pope St John
Paul II said, “What a fantastic spectacle is presented on this stage by your
gathering here today! Who claimed that today’s youth has lost their sense of
values? Is it really true that they cannot be counted on?”
It was at
this gathering that the Holy Father entrusted to the youth the Cross that was kept
in St Peter’s Basilica for the Holy Year of Redemption. This Cross is now known
as the World Youth Day Cross, to be carried throughout the world as a symbol of
the love of Christ for humanity. Ever since, for the past 30 years, the Cross
has been carried by the youth for all the World Youth Day celebrations celebrated
in various countries in South America, North America, Europe, Asia and Australia .
One
final thought: When
we think of the Cross which has become the symbol of the World Youth Day, our
minds naturally turn to the young men who were brutally murdered in Libya . In the
video released by ISIS, the victims - Egyptian Coptic Christians abducted in Libya dressed
in orange - were lined up near the seashore and forced to kneel on the ground. “People
of the cross, followers of the hostile Egyptian church,” a caption read on the
five-minute video, entitled “A message signed with blood to the nation of the
cross.” We are sadly, yet proudly aware that many of these ‘people of the
cross’ died proclaiming the name of the Crucified Saviour.
We pray
that the Palm Sunday, celebrated as the World Youth Day, and the Holy Week
events inspire every one of us to celebrate this week not as a ritual ceremony
but as an integral part of our lives. We pray especially for the youth that
they may become tornados that turn the world towards a better future!
The WYD
Cross
இன்று
நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப்
பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920… குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920.
1920ம்
ஆண்டு, அமெரிக்காவின் மூன்று பகுதிகளில் குருத்தோலை ஞாயிறன்று வீசிய சூறாவளிக்
காற்றினால் ஏறத்தாழ 400 பேர் இறந்தனர்; 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில்
வரும் ஒரு செய்திதான். இதே மாதங்களில்தான் தவக்காலத்தின் இறுதி நாட்களும் இடம்பெறுகின்றன.
தவக்காலத்தின் ஆரம்பம் வசந்த காலத்துடன் இணைந்து வருவதை நாம் சிந்தித்ததுபோல், தவக்காலத்தின் இறுதி நாட்களை சூறாவளி நாட்களாக சிந்திப்பதும் பயனளிக்கும்.
குருத்தோலை ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம்.
வரலாற்றில் நிகழ்ந்த முதல் குருத்தோலை ஞாயிறன்று, சூறாவளி
ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவத்தில் அல்ல, கடவுள் வடிவத்தில் வந்த சூறாவளி. சூறாவளி என்ன
செய்யும்? சுழற்றி அடிக்கும்; மரங்களை, வீடுகளை அடியோடு சாய்க்கும்; பொதுவில் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், எருசலேமை தலைகீழாகப் புரட்டிப்போட்டன என்பதை உணரலாம்.
இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
“ஏற்பாடு
செய்யப்பட்டது” என்பதை விட “தானாகவே
ஏற்பட்டது” என்று சொல்வதே மிகவும் பொருந்தும். திருவிழா
நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் இத்தகையக் கூட்டங்கள், மதத்
தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி
உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத்
தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம்
நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம்
கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை அப்புறப்படுத்தினார்.
எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு,
அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!
குருத்தோலை ஞாயிறு
முதல்,
உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருஅவை புனிதவாரம் என்று
அழைக்கிறது. புனிதவாரம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள
வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம்,
கல்வாரிக்கு.
புனிதவாரம் முழுவதும் நம் சிந்தனைகளில் அடிக்கடி பதிக்கப்படும்
ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும்
கொடூரமானது, சிலுவை. மிகப் பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர் உள்ளங்களை
அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப்
பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில்
அறையுண்ட இயேசுவின் உருவம், கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளியை உருவாக்கி, முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது; மீட்பைக் கொணர்ந்துள்ளது.
சிலுவையில்
அறையுண்ட இயேசு ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைப் பற்றி William J.
Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த
ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத்
தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை
எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.
பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின்
வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும்
முட்டாள்கள் என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக்
கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் எல்லை
மீறிச் சென்றது.
ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார்.
அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு
உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை
உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார்.
இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும்
கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும்
செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத்
தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில்
இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து
எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று
நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.
அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார்.
சுற்றி இருந்த மக்கள், அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். இளைஞன் உரத்தக் குரலில்
"கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச்
சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக்
கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார்.
ஆனால்,
இம்முறை அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவு
செய்து இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர்
நீ போகலாம்" என்று கூறினார்.
இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். அவர் கத்த
முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை
அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.
இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக
இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத்
தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத்
தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான்
கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த
ஆயர்.
சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும்
அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன
மாற்றங்கள் உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு,
அவர் வாழ்வை மாற்றிய இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க
வேண்டுவோம்.
ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர்
நாளைக் கொண்டாடுகிறது. 1985ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் அவர்களால்
உருவாக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த இளையோர்
நாளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை.
துன்பங்களைவிட்டு விலகி, இன்பத்தை மட்டுமே
தேடிச் செல்பவர், இளையோர், என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர்
நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச்
செல்லும் சிலுவை. கடந்த 30 ஆண்டுகளாக, உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், இளையோர்
சுமந்து வந்துள்ள சிலுவை, 2016ம் ஆண்டு, போலந்து நாட்டின்
கிரகோவ் (Krakow) நகரில் நடைபெறும்
உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையமாக மீண்டும் அமையும்.
2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில்
நடைபெற்ற 'உலக இளையோர் நாள்' நிகழ்வுகளை, முன்னின்று
நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014, 2015, 2016
ஆகிய மூன்று ஆண்டுகள் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையக் கருத்துக்களாக, மலைப்பொழிவில்
இயேசு கூறிய 'பேறுபெற்றோர்' வார்த்தைகளை வெளியிட்டுள்ளார்.
'பேறுபெற்றோர்' என்று இவ்வுலகம் காட்டும் மாய வழிகளில்
சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடும் இளையோரின் வேதனைகளை நாம் அறிவோம். "உலக
இளையோர் நாளை" சிறப்பிக்கும் இளையோர், ஏழையரின் உள்ளம், தூய உள்ளம், கருணை
உள்ளம் என்று இயேசு சொல்லித்தரும் பேறுபெற்ற உள்ளம் கொண்டவர்களாய் வாழும் வரத்தை, இறைவன்
அவர்களுக்கு வழங்க மன்றாடுவோம்.
இறுதியாக ஒரு சிந்தனை: இவ்வாண்டு பிப்ரவரி மாதம், ISIS தீவிரவாதிகளால், லிபியா
கடற்கரையில் கழுத்து அறுபட்டு கொல்லப்பட்ட 21 கிறிஸ்தவ இளையோர் நம் நினைவை இப்போது
நிறைக்கின்றனர். ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட அந்தக் கொடூர வீடியோவில், “People of the cross, followers of
the hostile Egyptian church - A message signed with blood to the nation of the
cross.”
அதாவது, "சிலுவையின் மக்கள், எதிராளிகளான எகிப்து
சபையின் தொண்டர்கள் - சிலுவையின் நாட்டிற்கு இரத்தத்தால் கையெழுத்திடப்பட்ட ஒரு செய்தி"
என்ற வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
சிலுவையின் மக்கள் என்று தீவிரவாதிகளால் முத்திரை குத்தப்பட்ட
இந்த இளையோர், தங்கள் கழுத்து அறுபடும் நேரத்தில் இயேசுவின் பெயரைச் சொன்னபடியே இறந்தது, இளையோர்
கொண்டிருக்கும் உறுதியை நமக்கு ஆழமாக உணர்த்துகிறது. நன்மையை இவ்வுலகில் நிலைநாட்ட, இளையோர்
இத்தகைய உறுதியும், துணிவும் கொண்டு செயலாற்றவேண்டும் என்று சிலுவை நாயகன் இயேசுவை
மன்றாடுவோம்.