31 December, 2017

“Look up at the sky” "வானத்தை நிமிர்ந்து பார்"


Flight into Egypt - Rose Datoc Dall

The Feast of the Holy Family

Today, December 31, is the last day of the Year. It is also the Feast of the Holy Family. We begin our reflections with the final day of 2017.
A few hours more… and 2017 will make way for January 2018. The month of January is named after Janus, the Roman god with two faces – one looking back and the other looking forward. For the past few days, our media has been busy ‘looking back’ at 2017. This retrospective exercise of the media leaves us with a dampened spirit. We become tired of the negative stuff highlighted by the media.
To help us overcome this negativity, the readings of this Sunday emphasize the theme of ‘faith’. The exemplary faith, against all odds, shown by Abram – later, Abraham – is highlighted both in the First Reading taken from Genesis (Genesis 15:1-6, 21:1-3) and the Second Reading taken from the Letter to the Hebrews (Hebrews 11:8,11-12.17-19).
The invitation of God to Abram, given at the beginning of the first reading stirs up thoughts in us, especially in the context of how we need to say goodbye to 2017. The Lord took Abram outside and said, “Look up at the sky and count the stars—if indeed you can count them.” Then he said to him, “So shall your offspring be.” (Gen.15:5)

The Lord invites us to ‘go outside’ and ‘look up at the sky’, instead of looking at the TV or the newspapers as we say goodbye to 2017. Looking up at the sky helps us to sing with full gusto, ‘Te Deum’ praising God for blessing us with the year, 2017. This invitation of God helped Abraham to become the father of all believers. Abram believed the Lord, and he credited it to him as righteousness. (Gen.15:6)

In the second reading, taken from the Letter to the Hebrews, we hear a eulogy of the faith of Abraham. Chapter 11 of Hebrews is a treatise on Faith. It begins with the words: Now faith is confidence in what we hope for and assurance about what we do not see. This is what the ancients were commended for. (Heb.11:1-2) Then it goes on to explain the faith of Abraham. And so from this one man, and he as good as dead, came descendants as numerous as the stars in the sky and as countless as the sand on the seashore. (Heb.11:12)

Now, we turn our attention to the Feast of the Holy Family. Norman Vincent Peale, a great preacher and the author of many inspiring books, including the famous book, ‘The Power of Positive Thinking’, describes Christmas in these words: "Christmas waves a magic wand over this world, and behold, everything is softer and more beautiful."
This ‘softer and more beautiful world’ turned into a tragic mess in Asia exactly one day after Christmas, on Sunday, December 26, 2004. The tsunami that caused havoc on December 26th, the Feast of the Holy Family, left thousands and thousands of families completely or partially uprooted.
If a family was uprooted completely, it looked like a blessing, since all the members of the family were gone and no painful memories lingered. But there were thousands of other families where the tsunami had taken away some members, while the rest were left in agony and despair. Why should this happen on the Feast of the Holy Family? Is there anything soft or beautiful about the Christmas Season of 2004? Those were the questions left with us. The members of the Holy Family - Mother Mary, St Joseph and the Child Jesus - would have asked a similar question: Was there anything soft or beautiful about the First Christmas? Was there anything to celebrate for the Holy Family?

The history of the Feast of the Holy Family tells us that it was precisely at critical moments in history that this Feast was thought of.
The History: The feast of the Holy Family was more of a private devotion popularised by some religious congregations for many centuries. The Church made this feast more ‘official’ in the year 1921. The reason behind such a move, as I see, was the First World War. This war was over in 1918. One of the casualties of this war was the family. The tragic death of dear ones killed on the battlefield, orphaned children, destroyed ‘homes’… Wishing to infuse some hope in the hearts of people devastated by this war, the Church officially integrated the Feast of the Holy Family in the liturgical cycle.
The feast of the Holy Family as we have today is a gift of the Second Vatican Council which took place in the 60s. What was so special about the 60s? Although there was no major political war, people had to face other types of wars. The world was experiencing quite a few changes. One of the major crises was the ‘rebellion’ of the youth. Young people were very disillusioned with the way the world was shaping up. Some of them tried to set things right; many others tried to ‘escape’ reality, since it was too hard to face. Many of them sought peace and love outside families. The Church, in an attempt to restore family as the locus of a healthy Christian life, included the Feast of the Holy Family as part of the Octave of Christmas – the Sunday after Christmas. Thus, the history of this feast tells us that the Church was not a silent spectator to the destruction caused to the basic foundation of human society – namely, family – but made the family the locus of hope!

Something similar occurred during the tsunami that destroyed families in 14 Asian countries. Nothing soft and nothing beautiful about the tsunami in 2004 one would tend to say. But, wait… In the days and months and even years that followed, many soft and beautiful things did happen. They are still happening. Among the various incidents that I have read, one incident is etched deep in my mind and heart – the incident about Parameswaran and Sudamani of Nagapattinam. Here is an extract from the daily called ‘The Hindu’:

SEA OF LOVE: The tsunami-affected couple, K. Parameswaran and Sudamani of Nagapattinam, with their adopted children
Even as tsunami `swallowed' all their three children and washed away their happiness once and for all, it could not wipe out humanism and confidence from the minds of the couple, K. Parameswaran and Sudamani of Nagapattinam. The couple, suffering from irrevocable loss, adopted 16 child survivors of tsunami aged between three and 14 years.
Mr. Parameswaran's emotion-soaked outpouring of reactions moved a huge gathering. "It happened on my birthday," said Mr. Parameswaran. “First, my last son saw a giant wave, higher than many trees. I alerted my son to run. I could see my kid's two little legs moving at pace. In a few seconds, I could see thousands of bodies floating in water. I lost all my three children, my father and mother and 10 of my relatives from Karnataka”, he recalled.
"We have crores of rupees, but did not have a piece of cloth to cover my children's bodies before burial. With confidence instilled by my wife, we went to a fishermen hamlet near coastline the next day where many destitute children were roaming without parents. I have a bungalow without children. They have no parents and house. We brought four children home for providing shelter. Later, the number rose to 16," he said. - © Copyright: The Hindu

Now, Nambikkai (meaning, Hope), a Trust run by Parameswaran and Sudamani, is home to 37 children. The tsunami plucked away three children of Parameswaran and Sudamani. But, it had planted many more children in their family.

When we think of the Holy Family, we are also painfully aware that the incidents that happened around this family were not holy in any sense. They were asked to run for their life overnight. The children in Bethlehem were massacred. Still, the Holy Family survived and this family opened its heart to include the whole human family. In this sense, we can say with some assurance: "Christmas waves a magic wand over this world, and behold, everything is softer and more beautiful."

As we are reflecting on the tsunami that devastated Asia, we are painfully aware of the tsunami of violence that destroys the world, over and over again. Due to this tsunami of violence, the problems of refugees and massacre of children continue unabated in the 21st century. In his special message ‘Urbi et Orbi’ delivered on Christmas Day, Pope Francis expressed his special concern for children around the globe:
  • Christmas invites us to focus on the sign of the Child and to recognize him in the faces of little children, especially those for whom, like Jesus, “there is no place in the inn” (Lk 2:7).
The Holy Father went on to pray for children from the Middle East, Syria, Yemen, Iraq, Sudan, Somalia and a few more countries that suffer various forms of violence and unrest. He continued his thoughts on children around the world…
  • We see Jesus in the children worldwide wherever peace and security are threatened by the danger of tensions and new conflicts.
  • We see Jesus in the children of unemployed parents who struggle to offer their children a secure and peaceful future.  And in those whose childhood has been robbed and who, from a very young age, have been forced to work or to be enrolled as soldiers by unscrupulous mercenaries.
  • We see Jesus in the many children forced to leave their countries to travel alone in inhuman conditions and who become an easy target for human traffickers.

In the battle of Herod vs a helpless child, the child triumphed. That is the reason for us to celebrate! In the battle against tsunami, people like Parameswaran and Sudamani triumphed. That is the reason for us to celebrate!
We hope that in the battle against the tsunami of violence, good-willed persons like Pope Francis will speak up and the senseless violence will end. That will be a reason for us to celebrate! That will be a reason for us to look up at the sky and sing ‘Te Deum’!

Parameswaran and Sudamani with the children


திருக்குடும்பத் திருநாள்

இன்னும் சில மணி நேரங்களில், 2017ம் ஆண்டு விடைபெற்றுச் செல்லும்; புதிய ஆண்டு, சனவரி மாதத்துடன் துவங்கும். ஆண்டின் முதல் மாதம், Janus என்ற உரோமையத் தெய்வத்தின் பெயரால், ஜ()னவரி என்றழைக்கப்படுகிறது. Janus தெய்வத்திற்கு இரு முகங்கள். ஒரு முகம் பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும், மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பது போலவும் அமைந்திருக்கும். முடிவுற்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலரவிருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும் Janus தெய்வம் நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதம் இந்தத் தெய்வத்தின் பெயரைத் தாங்கியுள்ளது. பின்னோக்கியும், முன்னோக்கியும் பார்ப்பதற்கு, ஊனக்கண்கள் மட்டும் போதாது, நம்பிக்கையுடன் கூடிய உள்ளக்கண்களும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
முடிவுறும் இந்த ஆண்டை, பின்னோக்கிப் பார்ப்பதில், கடந்த சில நாட்களாக, ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஊடகங்களின் பின்னோக்கியப் பார்வை, இவ்வுலகைக் குறித்த ஓர் அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றது. 'சே, என்ன உலகம் இது' என்று, நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.

நம் சலிப்பையும், மனத்தளர்ச்சியையும் நீக்கும் மருந்தாக, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றன. பிள்ளைப்பேறின்றி தவித்த ஆபிரகாமிடம், "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" (தொ.நூ. 15:5) என்று, ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொ.நூ. 15:6) என்று முதல் வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது.
வயது முதிர்ந்த காரணத்தால், உடலளவிலும், பிள்ளைப்பேறு இல்லையே என்ற ஏக்கத்தால், மனதளவிலும், தளர்ந்திருந்த ஆபிரகாமைக் குறித்து எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறும் சொற்களும் நம்பிக்கையைப் பற்றி வலியுறுத்துகின்றன:
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். (எபிரேயர் 11: 11-12)

இயலாது, முடியாது, நிகழாது, 'சான்ஸே இல்லை”, என்று, பலவாறாக, நம் உள்ளங்களை நிரப்பும் நம்பிக்கையற்ற எண்ணங்கள், ஆபிரகாமின் உள்ளத்திலும் எழுந்திருக்கும். இருப்பினும் அவர், தனது ஆற்றலின் மேல் நம்பிக்கையை வைப்பதற்குப் பதில், 'வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என கருதினார்' (எபி. 11:11) என்பதை, இரண்டாம் வாசகம் தெளிவாக்குகிறது. நம்பிக்கையின் அடித்தளம், நம்மையோ, நமக்கு அளிக்கப்பட்ட வாக்கையோ சார்ந்தது அல்ல, அது, வாக்களித்த ஆண்டவரைச் சார்ந்தது என்பதை, நாம் கற்றுக்கொள்ள, இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன.

நம் நம்பிக்கைக்குத் தேவையான மற்றோர் அடித்தளம், பரந்து, விரிந்த கண்ணோட்டம் என்பதையும், இன்றைய வாசகங்கள் சொல்லித்தருகின்றன. தனக்கு வாரிசு இல்லை என்பதால மனமுடைந்து, நம்பிக்கையிழந்து தவித்த ஆபிரகாமை, 'ஆண்டவர் வெளியே அழைத்து வந்து, வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறினார்' (தொ.நூ. 15:5) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. அத்தகையதோர் அழைப்பு, நமக்கும் வழங்கப்படுகிறது, குறிப்பாக, ஆண்டின் இறுதி நாளன்று. கடந்து செல்லும் ஆண்டைக்குறித்து ஊடகங்கள் சொல்லும் எண்ணங்கள், நம் நம்பிக்கையை வேரறுக்கும்போது, இறைவன் நம்மை வெளியே வரச் சொல்கிறார்; வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறுகிறார்.
ஊடகங்கள் நமக்கு முன் படைக்கும் இருண்ட உலகம், உண்மையான உலகம் அல்ல என்பதை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு நாளும், 100 நிகழ்வுகள் நடந்தால், அவற்றில், 10 நிகழ்வுகள், எதிர்மறையான, துயரமான நிகழ்வுகளாகவும், மீதி 90 நிகழ்வுகள், நேர்மறையான, நம்பிக்கை தரக்கூடிய நிகழ்வுகளாகவும் உள்ளன என்பதே, நிகழ்உலகின் உண்மை. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும், வன்முறைகளையும், குற்றங்களையும், விறுவிறுப்பானச் செய்திகளாகப் படைக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஆண்டின் இறுதியில், மீண்டும் ஒன்று திரட்டி, நம்முன் படைக்கின்றன, நம் நம்பிக்கையைச் சிதைக்கின்றன.

ஆண்டின் இறுதி நாளில் இருக்கும் நாம், பரந்து விரிந்த வானத்தின் மீதும், பரந்த உள்ளம் கொண்ட நல்லவர்கள் மீதும், நம் பார்வையைப் பதிக்க, இறைவன் நமக்கு சிறப்பான வரமருள செபிப்போம். நல்லவற்றை உள்ளத்தில் பதிக்கும் ஒரு முயற்சியாகத்தான், ஆண்டின் இறுதி நாளன்று, 'இறைவா, உம்மைப் போற்றுகிறோம்' என்ற பொருள்படும்,  'தே தேயும்' (Te Deum) என்ற நன்றிப் பாடலைப் பாடும்படி, தாய் திருஅவை நம்மை அழைக்கிறது.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடரும் ஞாயிறன்று, திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுகிறோம். டிசம்பர் 31, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்பத் திருவிழாவில், நமது நம்பிக்கை உணர்வுகளின் நாற்றங்காலாய் விளங்கும் குடும்பத்தை எண்ணிப்பார்க்க திருஅவை நமக்கொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

13 ஆண்டுகளுக்குமுன், திருக்குடும்பத் திருநாளன்று, இந்தியா, இலஙகை உட்பட, பல ஆசிய நாடுகளின் கடற்கரைப்பகுதிகளைத் தாக்கிய சுனாமி, நம் நினைவுகளில் நிழலாடுகின்றது. 2004ம் ஆண்டு, டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, சனிக்கிழமையன்று வந்தது. அதற்கடுத்த நாள், டிசம்பர் 26, ஞாயிறு, திருக்குடும்பத் திருவிழா கொண்டாடப்பட்ட வேளையில், ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி, பல இலட்சம் குடும்பங்களைச் சிதைத்தது. ஆசியாவின் 14 நாடுகளுக்கு, அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்தது. ஆயினும், அந்த அழிவையும், கண்ணீரையும் தொடர்ந்து வந்த நாட்களில், பல்லாயிரம் புதுமைகளும் நடந்தன. இந்தப் புதுமைகளில் ஒரு சில, ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால், பல்லாயிரம் புதுமைகள், செய்திகளாய் வெளிவராமல், மௌனமாக, செயல் வடிவம் பெற்றன என்பதும் உண்மைதான். சுனாமி என்ற பேரழிவைத் தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளில் வெளிவந்த நம்பிக்கை தரும் பல செய்திகளில், என் மனதில் ஆழமாய்ப் பதிந்த ஒரு செய்தி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றியச் செய்தி.

தங்கள் குழந்தைகள் மூவரையும் சேர்த்து, குடும்பத்தில் பத்து பேரை, சுனாமியில் இழந்தவர்கள், பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர். டிசம்பர் 26, பரமேஸ்வரனின் பிறந்த நாள். நாகப்பட்டினம் கடற்கரையில் தன் பிறந்தநாளைக் கொண்டாட, மூன்று குழந்தைகளுடனும், ஏழு உறவினர்களுடனும் சென்றார் பரமேஸ்வரன். அவ்வேளையில் வந்த சுனாமி, அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது.
குழந்தைகளை இழந்தபின்னர், வாழ்வதில் பொருளில்லை என்று, பரமேஸ்வரன் அவர்கள், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தபோது, அவரது மனைவி, சூடாமணி அவர்கள், மாற்றுவழியைக் காட்டினார். நம்பிக்கையிழந்து, வெறுப்புடன் இவ்வுலகிலிருந்து விடைபெறுவதற்குப் பதில், ஒரு புதுமையை அவர்கள் ஆரம்பித்தனர்.
அந்தச் சுனாமியால் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். குழந்தைகளின் சாதி, மதம், இவற்றையெல்லாம் கடந்து, மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தெடுத்தனர். 16 குழந்தைகளுடன், 'நம்பிக்கை' என்ற பெயருடன் ஆரம்பமான இக்குடும்பத்தில், இன்று 37 குழந்தைகள் உள்ளனர். ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இதுவும் ஒரு திருக்குடும்பம் தானே!

திருக்குடும்பத் திருநாள், சுனாமிப் பேரழிவு இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, கத்தோலிக்கத் திருஅவையில், திருக்குடும்பத் திருநாள் உருவானதற்கு, அழிவுகளே முக்கிய காரணமாயின என்ற வரலாறும், நம் நினைவில் நிழலாடுகிறது.
பல நூற்றாண்டுகளாக, தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்த திருக்குடும்பத் திருநாளை, 1893ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், திருஅவையின் திருநாளாக அறிமுகப்படுத்தினார். ஒரு சில ஆண்டுகளில், திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்ட இத்திருநாள், 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், மீண்டும், திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதுதான், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரில், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ, போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை, மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின் நிலை. இரண்டாம் உலகப் போரின் காரணமாக, கட்டடங்கள் சிதைந்தது உண்மைதான். ஆனால், அவற்றைவிட, குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன... வேறு பல வடிவங்களில், குடும்பங்கள், தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள், வீட்டுக்கு வெளியே, நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை, வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது, திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருநாளாக, திருஅவை அறிவித்தது.

உலகப் போர்களாலும், உலகப் போக்குகளாலும் அழிவைத் தேடி, இவ்வுலகம் சென்ற வேளையில், இந்த அழிவுகளை, கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, எல்லாம் அழிந்தது என்று, மனம் தளர்ந்து போவதற்குப் பதிலாக, மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு வழிகாட்டியது, கத்தோலிக்கத் திருஅவை. அந்த வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான், நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருநாள்.

இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பற்றி இப்போது பெருமையாக, புனிதமாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த நேரத்தில் அக்குடும்பத்தைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும், புனிதமாக, பெருமை தருவதாக இல்லையே! பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடிரவாக அவர்கள் வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்தது. நாட்டிற்குள்ளும், அடுத்த நாடுகளுக்கும், இரவோடிரவாக ஓடும் அகதிகளின் நிலை, இன்றும் தொடரும் துயரம்தானே!

பச்சிளம் குழந்தை இயேசுவோடு, மரியாவும், யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை அழித்துவிடும் வெறியில், ஏரோதின் அடியாட்கள் பல நூறு குழந்தைகளின் உயிர்களைப் பலி வாங்கினர். ஏரோதுகளின் சுயநல வெறிக்கு, குழந்தைகள் பலியாவது இன்றும் தொடரும் அவலம்தானே!
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய மேல்மாடத்திலிருந்து வழங்கிய 'Urbi et Orbi' எனப்படும், 'ஊருக்கும் உலகுக்கும்' சிறப்புச் செய்தியில், குழந்தைகளைப் பற்றிய தன் எண்ணங்களை அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்தினார்.
போர்களும், வளர்ச்சி என்ற பெயரால், அழிவுகளும் இடம்பெற்றுவரும் இன்றைய உலகில், குழந்தை இயேசுவைப்போல், இடமின்றி தவிக்கும் குழந்தைகளின் முகங்களில், இயேசுவைக் காண, இன்றைய கிறிஸ்மஸ் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
அதிக இரத்தம் சிந்துதலைக் கண்டுள்ள சிரியாவில், இன்னும் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள குழந்தைகளில் இயேசுவைக் காண்போம்... மோதல்களின் விளைவாக பசியையும் நோய்களையும் அனுபவித்துவரும் ஏமன் நாட்டு குழந்தைகளின் முகங்களிலும் இயேசுவை அடையாளம் காண்போம்.
எங்கெல்லாம், அமைதியும், பாதுகாப்பும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோ, அங்குள்ள குழந்தைகளின் முகங்களில், இயேசுவைப் பார்ப்போம்.
வேலையின்மையால், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, அமைதி நிறைந்த ஒரு எதிர்காலத்தை அமைத்துத் தர முடியாத பெற்றோரின் குழந்தைகளில், இயேசுவைப் பார்ப்போம்.
தங்கள் நாட்டை விட்டு தனியாக வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குழந்தைளில், வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைளில், இயேசுவைக் காண்போம்.

கிறிஸ்மஸ் காலம், குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம் என்றாலும், குடும்பமாகக் கூடி வாழ முடியாதவர்களையும் அது நமக்கு நினைவுறுத்துகிறது. கிறிஸ்மஸைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் குடும்பங்கள், திருக்குடும்பத்திலிருந்து ஆறுதல் பெறமுடியும். யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவுடன் முதல் கிறிஸ்மஸை, கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களைவிட, கொடுமைகளையே அவர்கள் அதிகம் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை.
தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி புனிதத்தையும் பெருமையையும் நிலைநாட்டிய மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, அந்தக் குழந்தைக்காக உயிர் துறந்த மாசில்லாக் குழந்தைகள், ஆகிய இவர்களால்தான், கிறிஸ்மஸ் காலம் ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது. மலை போல, சுனாமி அலை போல, துயர் வந்தாலும், மனித குலத்தில் இன்னும் நம்பிக்கை வேரூன்ற, பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப்போல, சில நூறு மனிதர்கள் இருப்பதாலேயே, உலகத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, மாசற்றக் குழந்தைகள் திருவிழா, திருக்குடும்பத் திருவிழா, ஆகிய அனைத்தும், துன்பத்திலும், இரத்தத்திலும் தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக, நம் மத்தியில் வலம் வருகின்றன.


26 December, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 51


Akash pressmeet about tasmac protest - Oneindia Tamil

பாசமுள்ள பார்வையில் - மதுக்கடை முன், படிக்கும் போராட்டம்


சென்னைக்கருகே, படூர் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, அந்த மதுக்கடை முன்பாக அமர்ந்து, படிக்கும் போராட்டத்தை, 8 வயது சிறுவன் ஆகாஷ் முன்னெடுத்தார். ஏப்ரல் 2017ல் அந்த மதுக்கடையை அரசு மூடிவிட்டது.
''என்னைப் போல பல குழந்தைகள் அந்த மதுக்கடை வழியா போறாங்க. அங்க இருக்குற குளத்தில் அம்மா, அக்கா எல்லாரும் துணி துவைக்கிறாங்க. அங்க மதுக்கடை இருந்துச்சு. அதனால போரட்டம் நடத்தினேன். நான் சொன்னா யாரும் கேட்கமாட்டாங்கனு போலீஸ் சொன்னாங்க. பெரியவங்க சிலரும் சொன்னாங்க. கடையை மூடலைனா நான் வீட்டுக்கு போகமாட்டேன்னு சொன்னேன். என்னோட போரட்டத்தோட விளைவா அந்த கடையை மூடிட்டாங்க'' என மதுவுக்கு எதிராக தான் மேற்கொண்ட போராட்டம் பற்றி விவரித்தபோது, ஆகாஷின் முகத்தில், நிஜமான, நிறைவானப் புன்னகை விரிந்தது.

My Redeemer Lives

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 51


42 பிரிவுகளைக் கொண்ட யோபு நூலில், 40 பிரிவுகளில், யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும், இறுதியில், யோபுக்கும், இறைவனுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், இடம்பெற்றுள்ளன. யோபுக்கும், அவரது மூன்று நண்பர்களான எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகியோருக்கும் இடையே மூன்று சுற்று உரையாடல்கள் நிகழ்கின்றன. யோபின் துயரத்தில் பங்கேற்று, அவருக்கு உதவிகள் செய்வதற்கென வந்திருந்த நண்பர்கள், சிறிது, சிறிதாக, யோபின் மீது குற்றம் சுமத்தும் நீதிபதிகளாக மாறுகின்றனர்.

நமது உறவுகள், குறிப்பாக, நம் பெற்றோர், உடன்பிறந்தோர் என்ற உறவுகள், நமக்கு வழங்கப்பட்டுள்ள வரங்கள். இவற்றை நாம் தெரிவு செய்வதில்லை. இதற்கு மாறாக, நமது நண்பர்கள், நாம் தெரிவு செய்யும், தேடி அடையும், வரங்கள். நண்பர்களைப் பற்றி, பல அழகிய கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இதோ:
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 16வது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற ஆபிரகாம் லிங்கன் அவர்கள், நாட்டில் அடிமைத்தனத்தை ஒழிக்க முற்பட்டார். அவரது முயற்சி, உள்நாட்டுப்போராக உருவெடுத்தபோது, லிங்கன் அவர்களின் படைத்தளபதியாக பணியாற்றியவர், யுலிசெஸ் கிரான்ட் (Ulysses Grant). அமெரிக்க ஐக்கிய நாட்டின் 18வது அரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, அடிமைத் தனத்தை ஒழிக்க தொடர்ந்து பாடுபட்ட யுலிசெஸ் கிரான்ட் அவர்கள், நண்பர்களைக் குறித்து கூறும் வார்த்தைகள், பொருள் மிக்கவை: "பகைமையின் நெருக்கடிகள் என்னைச் சூழும்போது, என் நண்பராக துணை நிற்பவரை நான் பெரிதும் மதிக்கிறேன். ஒளியோடு, வளமோடு, நான் வாழும் காலத்தில், என்னுடன் சேர்ந்து, வாழ்வைச் சுவைக்க முன்வருபவரைவிட, நான் இருளில் தவிக்கும்போது, அந்த இருளை ஓரளவாகிலும் நீக்க முன்வருபவரையே நான் நம்புகிறேன்."
வால்டர் வின்செல் (Walter Winchell) என்பவர் சொன்ன வார்த்தைகளும், உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டுகின்றன: "உலகம் முழுவதும் ஒருவரைவிட்டு வெளியேறும் வேளையில், உள்ளே நுழைபவரே, உண்மையான நண்பர்."

இவ்விரு கருத்துகளுக்கும் வடிவம் தருவதுபோல், யோபின் நண்பர்கள், நடந்துகொண்டனர். யோபைச் சூழ்ந்திருந்த, உடைமைகள், உறவுகள், உடல்நலம் என்ற அனைத்தும் அவரைவிட்டு விடைபெற்ற வேளையில், எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூன்று நண்பர்கள், யோபைத் தேடிவந்தனர். யோபின் துயரத்தில் பங்கேற்க, அவர்களும், அவரோடு சேர்ந்து, ஏழு பகலும், ஏழு இரவும், ஒன்றும் பேசாமல், தரையில் அமர்ந்திருந்தனர். அந்த முதல் ஏழு நாட்கள் நிகழ்ந்தவை அனைத்தும், ஆழமான, உண்மையான நட்புக்கு இலக்கணமாய் அமைந்தது. ஏழுநாள்களுக்குப் பின், அவர்கள் மூவரும், நண்பர்கள் என்ற நிலையைக் கடந்து, யோபின் நடத்தையை, வாழ்க்கையைத் தீர்ப்பிடும் நீதிபதிகளாக மாறினர்.

யோபுக்கும் அவரது நண்பர்கள் மூவருக்குமிடையே நிகழ்ந்த வழக்கில், யோபு கூறிய ஒரு சில பதிலுரைகள், ஆழமான மனித உணர்வுகளையும், அவற்றின் வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களையும் எடுத்துரைக்கின்றன. 7ம் பிரிவின் ஆரம்பத்தில், மண்ணக வாழ்வே ஒரு போராட்டம் என்று யோபு விவரிக்கும் சொற்கள், துன்பத்தில் சிக்கியிருக்கும் எந்த ஒரு மனிதரும் பயன்படுத்தக்கூடிய சொற்களாக, யோபின் உள்ளத்திலிருந்து வெடித்தெழுகின்றன:
யோபு 7: 1,3-4
மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?... இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்.
துன்பங்கள் நம் வாழ்வை நிரப்பும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவது, உறக்கம் என்பது, நாம் அனுபவத்தில் அறிந்த உண்மை.

தன்னை குற்றவாளியாக்க முயலும் நண்பர்கள் மூவரோடும் பேசுவதால், எந்தப் பயனும் இல்லை என்பதை நன்கு உணர்ந்த யோபு, இறைவனிடமே தான் பேச விழைவதாகக் கூறுகிறார். இறைவன், தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை, அவரிடமே, நேருக்கு நேர், தன் வழக்கை வாதாட விழைவதாக யோபு கூறும் வார்த்தைகள், ஏலி வீசல் (Elie Weisel) என்ற யூத எழுத்தாளர் உருவாக்கிய ஒரு கதாப்பாத்திரத்தை நினைவுக்குக் கொணர்கின்றன.
நாத்சி வதை முகாமில் துன்புற்ற வீசல் அவர்கள், தன் வதைமுகாம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு 'The Town Beyond the Wall' என்ற பெயரில், ஒரு நெடுங்கதையை வெளியிட்டார். அக்கதையில் வரும் கதாப்பாத்திரம், தன் வேதனையின் உச்சத்தில் கூறும் வார்த்தைகள் இதோ: "நான் கடவுளைப் பழித்துரைக்க விரும்புகிறேன். ஆனால், முடியவில்லை. அவருக்கெதிராக எழுந்து, என் கரங்களை மடக்கி, உயர்த்தி, அவரைக் குத்துவதுபோல் நிற்கிறேன். பற்களைக் கடித்து, வெறியுடன் கத்த நினைக்கிறேன். ஆனால், என்னையும் மீறி, நான் கத்துவது, கூச்சலிடுவது எல்லாம், செபங்களாக எழுகின்றன". தன் கோபத்தின் உச்சத்திலும் தான் கத்துவது செபமாக ஒலிக்கிறது என்று சொல்லும் அந்தக் கதாப்பாத்திரத்தின் நிலையில் உள்ள யோபு, 13ம் பிரிவில் கூறும் வார்த்தைகள் ஆழமானவை.
யோபு 13: 3,13,15-16
நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்; கடவுளோடு வழக்காட விழைகின்றேன்... என்னைப் பேசவிடுங்கள்; எனக்கு எது வந்தாலும் வரட்டும்... அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்; இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன். இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்.

யோபு, இறைவனோடு மேற்கொண்டது ஒரு பாசப்போராட்டம். அதைப் புரிந்துகொள்ள, ஒரு கற்பனைக் காட்சி உதவியாக இருக்கும். கிராமத்தில், திருவிழாக் கூட்டங்களில் அவ்வப்போது நாம் காணக்கூடிய ஒரு காட்சியைக் கற்பனை செய்துகொள்வோம்.
சிறுவன் ஒருவன், அப்பாவின் தோள்மீது அமர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கிறான். அவன் கேட்ட ஏதோ ஒன்று அவனுக்குக் கிடைக்காததால், கோபமும், அழுகையும் அவன் முகத்தில் கொந்தளிக்கின்றன. தன் கோபத்தை வெளிப்படுத்த, அவ்வப்போது, அப்பாவின் தலையில் தன் பிஞ்சுக் கையால் அடித்தவண்ணம் அங்கு அமர்ந்திருக்கிறான். அதேநேரம், அவனது மற்றொரு பிஞ்சுக்கரம், அப்பாவின் தலையை, சுற்றிவளைத்து, கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு கையால், அப்பாவின் தலையை, இறுகப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் அவரை அடித்தவண்ணம் அப்பாவின் தோள்மீது அமர்ந்திருக்கும் அச்சிறுவன், நம் விவிலியத் தேடலின் நாயகன் யோபை அழகாகச் சித்திரிக்கிறான். தனக்கு நேர்ந்த துன்பங்களைப் புரிந்துகொள்ள முடியாமல், கோபம், வருத்தம், குழப்பம் என்ற உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருந்த யோபு, தன் கோபத்தை இறைவன் மீது காட்டினாலும், அவரை, நம்பிக்கையோடு இறுகப் பற்றிக்கொண்டிருந்தார்.

தன் கோபத்தையும், வேதனையையும், பல வழிகளில் வெளிப்படுத்திய யோபு,  19ம் பிரிவின் இறுதிப்பகுதியில் வெளிப்படுத்தும் நம்பிக்கை அறிக்கை, நமக்கு நல்லதொரு பாடமாக அமைகின்றது:
யோபு 19: 25-27
என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
யோபு வெளியிட்ட இந்த நம்பிக்கை அறிக்கை, பல கோடி மக்களுக்கு, பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை தந்துள்ளது.

உண்மை பேசுவோருக்கு அரிச்சந்திரனையும், வாரி வழங்குவோருக்கு பாரியையும் எடுத்துக்காட்டாகக் கூறுவதுபோல், பொறுமையுள்ளோருக்கு, யோபை ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக, இலக்கணமாக நாம் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், யோபிடம், பொறுமை அதிகம் காணப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, தான் நேரிய உள்ளம் கொண்டவர் என்றும், தன்னை வதைப்பது இறைவனே என்றாலும், அவரிடம் தன் நம்பிக்கை குறையவில்லை என்றும் யோபு கூறுவதை நாம் இந்நூலில் அடிக்கடி கேட்டுவருகிறோம். எனவே, யோபை, பொறுமையுள்ளோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாகச் சிந்திப்பதற்குப்பதில், நேரிய உள்ளமும், வாய்மையும் கொண்டோருக்கு, இறைவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாக நாம் சிந்திக்கலாம்.

தன் நண்பர்களோடு மேற்கொண்ட வழக்கின் இறுதியில், தான் குற்றமற்றவர் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி, யோபு தன் வாதங்களைக் கோர்வையாகத் தொகுத்து வழங்கி, 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்' என்று கூறி முடிக்கிறார். யோபு தொகுத்து வழங்கும் இறுதி வாதங்களை, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், கற்பனை செய்து, தன் சொந்த வார்த்தைகளில் அழகாக விவரித்துள்ளார்:
"நான் இறைவனிடம் மன்றாடிக் கேட்டுவிட்டேன். நான் மாசற்றவன் என்பதை பல வழிகளில் அறிக்கையிட்டுவிட்டேன். இறைவன் இவ்வாறு செய்வதற்கு காரணத்தையாவது சொல்லவேண்டும் என்று கேட்டுவிட்டேன். ஆனால், இதுவரை இறைவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, இனி நான் கெஞ்சப் போவதில்லை. இறைவனின் பெயரால், மீண்டும் நான் கூறுகிறேன். நான் மாசற்றவன். இறைவனுக்கோ, வேறு யாருக்கோ எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான் சொல்வது பொய் என்றால், என் இறைவன் இங்கு நேரில் வந்து எனக்கெதிராகச் சாட்சி சொல்லட்டும். அவ்வாறு அவரால் சாட்சி சொல்ல முடியவில்லையென்றால், நான் மாசற்றவன் என்பதைச் சொல்வதற்காகிலும் இறைவன் இங்கு வரட்டும்" என்று சவால் விடும் வண்ணம், யோபு தன் வாதங்களை முடிக்கிறார். அவர் விரும்பிக் கேட்டதுபோலவே, இறைவன் அங்கு வருகிறார். தன்னைச் சந்திக்க வந்த இறைவனிடம், யோபு சரணடைகிறார். இறைவன் யோபை மீண்டும் ஒருமுறை இன்னும் கூடுதலாக, நிறைவாக ஆசீர்வதிக்கிறார். இவ்வாறு, யோபு நூல் நிறைவு பெறுகிறது.

அத்தனை அழிவுகளின் நடுவிலும் ஆண்டவரை முழுமையாக நம்பிய யோபின் முழு வாழ்வையும், இறைவாக்கினர் அபக்கூக்கு நூலில் காணப்படும் இறுதி வரிகளில் சுருக்கிச் சொல்லிவிடலாம். காலத்தால் அழியாத இந்த நம்பிக்கை வரிகள் யோபு நூலில் நாம் மேற்கொண்டு வந்த தேடலை நிறைவு செய்கின்றன:
அபக்கூக்கு 3:17-19
அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,
ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும்,
கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
நான் ஆண்டவரில் களிகூர்வேன்.
என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை.
அவர்... உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.


24 December, 2017

"Speaking words of wisdom, let it be" “அப்படியே ஆகட்டும் என்ற அறிவு செறிந்த வார்த்தைகள்”


Fiat – Let it be done

4th Sunday of Advent


December 24th night we begin Christmas celebrations. Indeed, Christmas celebrations began almost a month back. Almost everyone in the world knows that it’s Christmas time. But, do THEY know it’s Christmas? Who? The starving millions in Africa. ‘Do They Know It’s Christmas?’ was the title of a song written by two famous musicians from Ireland and Scotland. The images of starving children and adults from the continent of Africa, especially from Ethiopia, began appearing on TV and newspapers in 1983 and they pierced the conscience of the human race. Bob Geldof, an Irish singer and songwriter, saw the report, and called Midge Ure, a Scottish guitarist, and singer. Together they quickly co-wrote the song, "Do They Know It's Christmas?" in the hope of raising money for famine relief. (You can find the lyrics of this famous song at the end of today’s reflection!)
Geldof then contacted colleagues in the music industry and persuaded them to record the single under the title 'Band Aid' for free. Performed by a collection of British and Irish musicians, the song was released on 7 December 1984 and became the fastest-selling single ever in Britain and raised £8 million. Encouraged by this outpouring of goodwill from the people, Geldof then set his sights on staging a huge concert to raise further funds for famine-stricken Ethiopia.

Famous singers around the world came together on July 13, 1985, to perform ‘Live Aid’ to help the starving millions of Ethiopia. Billed as the "global jukebox", the event was held simultaneously in Wembley Stadium in London, England, United Kingdom (attended by 72,000 people) and John F. Kennedy Stadium in Philadelphia, Pennsylvania, United States (attended by about 100,000 people). On the same day, concerts inspired by the initiative happened in other countries, such as Australia and Germany. The concert grew in scope, as more acts were added on both sides of the Atlantic. It was one of the largest-scale satellite link-ups and television broadcasts of all time: an estimated global audience of 1.9 billion, across 150 nations, watched the live broadcast. As a charity fundraiser, the concert far exceeded its goals: on a television programme in 2001, one of the organisers stated that while initially it had been hoped that Live Aid would raise £1 million with the help of Wembley tickets costing £25.00 each, the final figure was £150 million (approx. $283.6 million). (Wikipedia)

One of the songs performed during this Live Aid concert was Paul McCartney’s “Let It Be”. The whole idea of ‘Live Aid’ as well as the song “Let It Be” are relevant for our Sunday reflection today. Paul McCartney (of Beatles fame) claimed in some interviews that the song ‘Let It Be’ was inspired by a dream he had about his own mother named Mary. But the words ‘Mother Mary’ that Paul has used in this lyric, as well as the phrase ‘Let it be’, often repeated in this song, bring to one’s mind the image of our Lady, the Mother of Jesus, and her famous lines spoken to Angel Gabriel during the scene of the Annunciation… “Let it be to me according to your word.”
Here are the opening lines of the famous song “Let It Be”:
When I find myself in times of trouble, Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
And in my hour of darkness she is standing right in front of me
Speaking words of wisdom, let it be
Let it be, let it be, let it be, let it be
Whisper words of wisdom, let it be

As Christmas approaches, schools and parishes would enact the Christmas story. This story usually begins with the scene of the Annunciation, and then goes on to show the Visitation, the Nativity, Shepherds and the Magi…. all in a matter of half an hour. Usually children enact these scenes and hence they are all the more lovely. A few years back, when we were returning home after one such tableau, one of my friends suddenly posed this question: “Was the first Christmas this good?” This question was like a wake-up call!
What was the first historical Christmas like? Surely not such a happy, peaceful event. When history is transformed into pages in a book, we tend to remember the glorious moments of that history and tend to forget the real pain and misery of those events. Similarly, when reading the Gospels during our liturgical celebrations, our minds tend to ‘spiritualise’ these events. It is so easy for us to say at the end of the Gospel reading that it is Good News. For the 4th Sunday of Advent, after reading the scene of the Annunciation during the Mass, the Priest says in a clear loud voice, “This is the Gospel (Good News) of the Lord” and all of us respond “Praise to You, Lord Jesus Christ.” But, was it really ‘good news’ when this scene took place the very first time?

The original Christmas story was far from happy and holy. It was loaded with pain and misery. So many things worked against happiness and holiness. We shall consider only one aspect… namely, that Judea was an occupied territory. Army soldiers are not the best models of virtue, to say the least. The duty of army personnel, by definition, is to protect a country. But, unfortunately, there are soldiers who have joined the army for various other reasons. Such soldiers are a threat to common people. Women, especially young girls, who live around army camps, do not live. They die each day in fear. If people have to fear the soldiers of their own country, what can we say about soldiers from foreign lands?
If we can talk to the people of Afghanistan or Iraq we would know what it means to live in country occupied by foreign troops. Almost every day we hear of the atrocities done by the Myanmar army personnel against the Rohingya tribe. This was the plight of Mary, who had to live through horrors enacted by Roman soldiers day after day… everyday. Not a day must have passed without Mary raising questions and prayers to God about their liberation. Her prayers, her questions were answered. God said, “I shall send my Son to save you. You will become the mother of my Son.” Mary wanted to escape the frying pan and God seemed to offer her the fire. God wanted her to become an unwed mother!

Mary knew full well what this meant. Sure death… death by stoning! Mary must have witnessed such brutal murders. Especially, after the Roman occupation, quite a few young girls, raped by the Roman soldiers, must have faced such sentences and, hence, the frequency of such gory scenes must have increased, haunting Mary day and night.
In our present day, the U.N. has acknowledges that sexual violence to women is used as a war tactic. In the resolution, passed by the U.N. Security Council, it noted that “women and girls are particularly targeted by the use of sexual violence, including as a tactic of war to humiliate, dominate, instil fear in, disperse and/or forcibly relocate civilian members of a community or ethnic group.”

When Mary, living under the tyranny of the Roman occupation, cried to God for liberation, God offered her an ‘impossible’ invitation. God invited her to become an unwed mother! Most of us imagine the scene of the Annunciation in terms of holy light, soft music and Mary’s immediate ‘Yes’ to God. She would not have said an immediate “Yes, my Lord…” Much less would she have jumped up in joy to sing “The Magnificat”. She may have suffered sleepless nights to gather enough courage to say this ‘yes’ to God. Finally, she did say ‘yes’, relying totally on God and not thinking about all the earthly consequences… Here are the closing lines of today’s Gospel:
And the angel said to her, "The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you; therefore the child to be born will be called holy, the Son of God. And behold, your kinswoman Elizabeth in her old age has also conceived a son; and this is the sixth month with her who was called barren. For with God nothing will be impossible." And Mary said, "Behold, I am the handmaid of the Lord; let it be to me according to your word." (Luke 1: 35-38)
It is the ‘let it be’ of Mary that made the whole scene of the Annunciation ‘good news’. Without that surrender of Mary, trusting only on God, this scene would be far from ‘good news’.

During the Live Aid concert in 1985, people around the world must have had so many questions about the famine in Ethiopia. The song “Let It Be” may have come as some sort of an answer, although not a complete one.
Mary’s ‘let it be’ was not the complete solution for all the problems; but the starting point of the salvation history. It required great courage and trust on the part of Mary to say this ‘let it be’. May Mother Mary teach us this courage and trust to overcome our personal troubles and the troubles of the world around us during this Christmas.

Here are some lines of the song ‘Let it be’ to conclude our thoughts:
And when the broken-hearted people, Living in the world agree
There will be an answer, Let it be
For though they may be parted there is, Still a chance that they will see
There will be an answer, Let it be
And when the night is cloudy, There is still a light that shines on me
Shine until tomorrow, Let it be
I wake up to the sound of music, Mother Mary comes to me
Speaking words of wisdom, Let it be

P.S. Due to the whims and fancies of an individual (who happens to be the President of a powerful nation), Jerusalem has become a war zone lately. Let us pray that the Prince of Peace, born in Bethlehem and died in Jerusalem, may bring more peace to the Holy City, common to three great monotheistic religions – Judaism, Islam and Christianity!

------------------------------------------
‘Do They Know It’s Christmas?’

Songwriters: Bob Geldof / Midge Ure

It's Christmastime, there's no need to be afraid
At Christmastime, we let in light and we banish shade
And in our world of plenty we can spread a smile of joy
Throw your arms around the world at Christmastime
But say a prayer, pray for the other ones
At Christmastime it's hard, but when you're having fun
There's a world outside your window
And it's a world of dread and fear
Where the only water flowing
Is the bitter sting of tears
And the Christmas bells that ring there are the clanging chimes of doom
Well tonight thank God it's them instead of you
And there won't be snow in Africa this Christmastime
The greatest gift they'll get this year is life
Where nothing ever grows
No rain nor rivers flow
Do they know it's Christmastime at all?
Here's to you
Raise a glass for everyone
Here's to them
Underneath that burning sun
Do they know it's Christmastime at all?
Feed the world
Let them know it's Christmastime again

Cover of the 1984 single "Do They Know It's Christmas?" released by Band Aid

திருவருகைக்காலம் 4ம் ஞாயிறு


1980களில், ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள், மனித சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பின. Bob Geldof, Midge Ure என்ற இரு இசைக்கலைஞர்கள் தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்தனர். எத்தியோப்பிய மக்களை மனதில் கொண்டு, முக்கியமாக, அங்கு பட்டினியால் இறக்கும் குழந்தைகளை மையப்படுத்தி, 'இது கிறிஸ்மஸ் என்று அவர்களுக்கு தெரியுமா?' "Do They Know It's Christmas?" என்ற கேள்வியை எழுப்பும் ஒரு பாடலை இவர்கள் இயற்றினர். 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த அந்தப்பாடல், மிகப்பெரும் அளவில் பிரபலமானது. அந்தப் பாடலின் இசைத்தட்டுகள் விற்பனையில் கிடைத்த தொகையை இவ்விரு இசைக்கலைஞர்களும் எத்தியோப்பியாவிற்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும், அவர்கள் மனம் திருப்தி அடையவில்லை. இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று எண்ணினர்.
எத்தியோப்பிய மக்களின் பட்டினியைப் போக்க நிதி திரட்டும் எண்ணத்துடன், Live Aid என்ற இசை விழாவை, இவ்விருவரும் ஏற்பாடு செய்தனர். மைக்கில் ஜாக்சன் உட்பட, பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த இசை விழா, 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. இலண்டன் மாநகரிலும், ஃபிலடெல்ஃபியா மாநகரிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அந்த இசை நிகழ்ச்சி, செயற்கைக்கோள் வழியே, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யட்டது. அதுவரை, விளையாட்டுப் போட்டிகளும், திரைப்பட விழாக்களும் மட்டுமே, உலகின் பல நாடுகளில், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததற்கு ஒரு மாற்றாக, மனிதாபிமானம் மிக்க ஒரு முயற்சி, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பானது, அதுவே முதல்முறை. 150 நாடுகளில் 190 கோடி பேருக்கும் மேற்பட்டோர் இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டனர் என்று சொல்லப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியால் திரட்டப்பட்ட 15 கோடி பவுண்டுகள், அதாவது, 1050 கோடி ரூபாய் நிதியுதவி, எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உலகப் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் Paul McCartney. 1960களில் இசை உலகின் முடி சூடா மன்னர்களாக விளங்கிய Beatles என்ற இசைக்குழுவின் நால்வரில் இவரும் ஒருவர். Live Aid என்ற இசை நிகழ்ச்சியில் இவர் பாடிய “Let It Be” என்ற பாடல், நமது ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கிறது. Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” என்ற பாடலின் பொருள் "அப்படியே ஆகட்டும்" அல்லது "அப்படியே இருக்கட்டும்". இப்பாடலின் முதல் வரிகள் இதோ:
"நான் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அன்னை மரியா என்னிடம் வருகிறார்.
'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.
என் வாழ்வை இருள் சூழும் நேரங்களில் அவர் எனக்கு முன் நிற்கிறார்.
'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவுசெறிந்த வார்த்தைகளை மென்மையாக என்னிடம் சொல்கிறார்" என்று இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.
“Let It Be” என்ற பாடலை தான் எழுதுவதற்குக் காரணம், தன் தாயே என்று, Paul McCartney அவர்கள், தன் பேட்டிகளில் கூறியுள்ளார். Paul McCartney அவர்களின் தாயின் பெயர் மேரி. ஆனால், பாடலின் வரிகளில் அவர் Mother Mary என்று எழுதியிருப்பது பலர் மனதில் அன்னை மரியாவை நினைவுறுத்துகிறது. அதேபோல், “Let It Be”என்று அடிக்கடி இந்தப் பாடலில் இடம்பெறும் சொற்கள், இளம்பெண் மரியா அன்று வானதூதர் கபிரியேலிடம் சொன்ன  புகழ்பெற்ற வார்த்தைகளை நினைவுறுத்துகிறது. உலக மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண் மரியா "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று சொன்ன பதிலும், இன்று நாம் வாசிக்கும் நற்செய்தியாக ஒலிக்கிறது.

எந்த ஒரு வரலாற்று நிகழ்வும், நூல்களில் பதிவாகும்போது, அந்நிகழ்வின் பெருமை, நம் கண் முன்னே அதிகம் தோன்றும். அந்நிகழ்வில் ஈடுபட்டோர் அடைந்த காயங்கள், பெருமளவு பேசப்படுவதில்லை. அதேபோல், விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளை, திருப்பலியில், வாசகங்களாக வாசிக்கும்போது, மேன்மை, புனிதம், ஆகிய உணர்வுகளே மேலோங்குவதால், அந்நிகழ்வுகளின் வேதனைகளையும், காயங்களையும், மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால்தான், இன்று நாம் நற்செய்திப் பகுதியை வாசித்ததும், துணிவோடு "இது இறைவன் வழங்கும் நற்செய்தி" என்று சொல்லிவிட்டோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், வானதூதர் கபிரியேல், இளம்பெண் மரியாவிடம் இச்செய்தியைச் சொன்ன வேளையில், இது கட்டாயம் நல்லதொரு செய்தியாக இருந்திருக்க முடியாது என்பதை உணர்வோம்.

கிறிஸ்மஸ் நெருங்கி வரும் இந்நாட்களில் பல பள்ளிகளில், பங்குத் தளங்களில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். நடிப்பவர்கள், பெரும்பாலும், குழந்தைகள் என்பதால், நாம் இரசிப்போம், சிரிப்போம். இந்த நாடகங்களில் மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, பின்னர், மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறப்பது, இடையரும், மூவேந்தரும் வந்து குழந்தையைப் பார்ப்பது, என்று... அரை மணி நேரத்தில், அழகழகான காட்சிகள் தோன்றி மறையும். இவற்றைப் பார்க்கும்போது மனம் மகிழும்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு நாடகம் முடிந்து திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்று கேட்டார். அந்தக் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது.
வரலாற்றில் நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, ஒளிமயமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச் சூழலைப்பற்றி பல கோணங்களில் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு அந்தச் சூழலிலிருந்து ஒரே ஒரு அம்சத்தைப்பற்றி சிந்திப்போம்.

யூதேயா முழுவதும் உரோமைய ஆதிக்கம், அராஜகம் நடந்து வந்தது. இந்த அடக்கு முறையை உறுதி செய்வதற்கு, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ, எந்த நேரத்திலும், இந்தப் பெண்களுக்கு, படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க, ஐரோப்பிய படைகளால் அந்நாட்டுப் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைக் கேள்விப்பட்டோம். மியான்மார் நாட்டில், இரக்கைன் மாநிலத்தில், ரொஹிங்கியா இனத்தவர், அந்நாட்டு இராணுவத்தினால் அடைந்துவரும் கொடுமைகள், ஒவ்வொரு நாளும், நம் செய்தித்தாள்களில் இடம்பெறுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளவயது கிராமத்துப் பெண் மரியா.
தன் சொந்த நாட்டிலேயே, இரவும் பகலும் சிறையிலடைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா, "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்ட மாட்டாயா இறைவா?" என்று, தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடையளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.
இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனையை வழங்கும் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால், அவர்களை ஊருக்கு நடுவே இழுத்துச்சென்று, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. அவரது தோழிகளில் ஒரு சிலர், உரோமையப் படை வீரர்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்றதால், ஊருக்கு நடுவே, கல்லால் எறியப்பட்டு, கொல்லப்பட்டதை மரியா பார்த்திருப்பார். இதோ, இதையொத்த ஒரு நிலைக்கு தான் தள்ளப்படுவதை மரியா உணர்ந்தார். மணமாகாத தன்னை, தாய்மை நிலைக்கு கடவுள் அழைத்தது, பேரிடிபோல் மரியாவின் செவிகளில் ஒலித்திருக்கும்.

இறைவன் தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், விருப்பப்பட்டு தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக்கொள்வதும்.. எல்லாம் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை, அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. தன் வழியாக, தனது சமுதாயத்திற்கும், இந்த உலகிற்கும் மீட்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த மரியா, அந்த வாய்ப்புடன் வந்த பேராபத்தைப் பெரிதாக எண்ணாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு 'ஆகட்டும்' என்று பதில் சொன்னார். பெரும் போராட்டத்திற்குப் பின் வந்த பதில் அது.

இன்று நாம் வாசித்த நற்செய்தியின் இறுதியில், நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று மரியா சொல்லும் அந்த வார்த்தைகளே, இந்தப் பகுதி முழுவதையும் நற்செய்தியாக மாற்றியுள்ளது. இந்த நம்பிக்கை வரிகள் இல்லையெனில், இன்றைய விவிலிய வாசகத்தை நற்செய்தி என்று சொல்வது மிகக்கடினம். மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத வார்த்தைகள், இத்தனை நூற்றாண்டுகளாக பலருக்கு, பல வழிகளில் நற்செய்தியாக ஒலித்துள்ளன.

1985ம் ஆண்டு Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” பாடல் வழியாக, மரியா சொன்ன அந்த அற்புத வார்த்தைகள், மீண்டும் பலருக்கு நற்செய்தியாக ஒலித்திருக்க வேண்டும். பசிக்கொடுமைகள், போர் கொடுமைகள், பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், சாதி, மதம், இனம் என்று பல்வேறு பாகுபாடுகளால் உருவாகும் கொடுமைகள்... என்று கொடுமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் இந்த உலகில், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் விடிவு இல்லையா என்று மனம் கேள்விகளை எழுப்பும். Live Aid இசை நிகழ்ச்சியைக் கண்ட பலகோடி உள்ளங்களில், எத்தியோப்பியாவின் பட்டினிச்சாவுகள், பல கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு ஏதோ ஒரு வகையில் விடைதரும் வண்ணம் Paul McCartney பாடிய “Let It Be” என்ற இந்தப் பாடல் அமைந்ததென்று சொல்லலாம். நம்பிக்கையற்ற ஒரு சூழலை, நற்செய்தியாக மாற்ற, வானதூதரிடம், 'அப்படியே ஆகட்டும்' என்று சொன்ன மரியாவின் வார்த்தைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்பாடல், பலரது உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்திருக்கும்.

ஆப்ரிக்க நாடுகளில் இன்றும் பட்டினிச் சாவுகள் தொடர்கின்றன. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அநீதிகளாலும், கொடுமைகளாலும் நொறுக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் அனைவருமே துன்பங்களால், துயரங்களால் துவண்டு போகாமல், அவர்களில் ஒருவர் எடுக்கும் துணிவான ஒரு முடிவு, அந்த சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியுள்ளது என்பதற்கு, மரியாவின் 'ஆகட்டும்' என்ற முடிவு, ஓர் எடுத்துக்காட்டு. மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது, அவரது சொந்த சக்தி அல்ல, மாறாக, இறைவன் மட்டில் அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த ஞாயிறு மாலை, அல்லது இரவு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் திருவிழிப்பு திருப்பலிகள் உலகெங்கும் நடைபெற்ற வண்ணம் இருக்கும். அமைதியின் இளவரசாகிய இயேசு பிறந்த பெத்லகேம், அவர் வாழ்ந்த எருசலேம் மற்றும் புனித பூமியின் பல பகுதிகள், இப்போது இறுக்கமான ஒரு சூழலில் உள்ளன. எருசலேமை, இஸ்ரேல் நாட்டின் தலைநகர் என்று, ஒரு தனி மனிதன், தன்னிச்சையாக அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு நிலவும் மோதல்களும், உயிர் பலிகளும், நம்மை வேதனையில் ஆழ்த்துகின்றன.
டிசம்பர் 17, கடந்த ஞாயிறு பாகிஸ்தானின் Quetta என்ற ஊரில், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ கோவிலில், வழிபாட்டின்போது நடைபெற்ற தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். எனவே, பாகிஸ்தானில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு உதவீயாக, ஆயுதம் தாங்கிய கிறிஸ்தவ இளையோர், கோவில்களைச் சுற்றி தயாராக உள்ளனர் என்று கேள்விப்படும்போது, நம் உள்ளங்கள் கலக்கம் அடைகின்றன.
இந்தியாவில், இந்து அடிப்படைவாதக் குழுக்கள், கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டங்கள் நடைபெறக் கூடாது என்ற எச்சரிக்கை விடுவதிலும், அக்கொண்டாட்டங்கள் நடைபெறுவதைத் தடை செய்வதிலும் மிகத் தீவிரமாக, ஈடுபட்டு வருவது நம் உள்ளங்களை வேதனையடையச் செய்துள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வேதனையில் வெந்துகொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவே இறைவன் 'இம்மானுவேலாக' வாழ வந்ததைப்போல், இன்றும், வேதனையில் இருப்போர் நடுவே அவர் மீண்டும் பிறக்கவேண்டும் என்று மன்றாடுவோம். 'இம்மானுவேலை' நம்மிடையே கொணர, இளம்பெண் மரியாவைப்போல, 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லும், நம்பிக்கையையும், துணிவையும், பணிவையும் நமக்கு இறைவன் வழங்கவேண்டும் என்று, அன்னை மரியாவின் பரிந்துரையோடு செபிப்போம்.