29 January, 2017

Beatitudes – ever old and ever new பேறுபெற்றோர் – என்றும் பழையது, என்றும் புதியது



B is for Beatitudes
4th Sunday in Ordinary Time

This Sunday onwards until we begin the Lenten season, for five Sundays, we are given a special treat during the Sunday Liturgy – namely, the Sermon on the Mount. Today’s Gospel gives us the opening section of this great discourse of Jesus, namely, the famous ‘Beatitudes’! Since most of us are familiar with the ‘Beatitudes’, let us turn our attention to the setting of this discourse – namely, the mountain, as well as Jesus, the Giver of Blessings. Today’s Gospel passage (Matt. 5: 1-12) begins with the words: When Jesus saw the crowds, he went up the mountain, and after he had sat down, his disciples came to him. He began to teach them, saying: “Blessed are the poor in spirit…”

Jesus chose the mountain for his discourse… Mountains hold a great magical charm on human beings from time immemorial. We have heard of great sages who had gone to mountain tops seeking ‘enlightenment’. The great silence of the peaks, the pure air and water on mountain tops have been sources of attraction for human beings. From the top of a mountain, our view becomes more enlarged. The lovely aspects of silence, purity and broader vision have prompted many religions to ascribe mountains as the abode of gods.  

Harold Kushner, the Jewish Rabbi, and the author of many interesting books, speaks of two cultures – the ‘mountain culture’ and ‘tower culture’ in his book “The Lord is my Shepherd”. He refers to a book titled ‘The Ecology of Edenwritten by Evan Eisenberg, where these two cultures are discussed. “In mountain cultures, people live in God’s world. They regard the world of nature with reverence, the kind of heart-filling feeling we get when we gaze at a mountain range… By contrast, in tower cultures, people live in a man-made environment. They regard nature as raw material awaiting their efforts to reshape and improve it. They spend a great deal of time admiring the work of their own hands, and, as a result, God is hard to find.” (Harold Kushner) People from the tower cultures, in their quest to build higher towers (from Empire State Building to the Burj Dubai) have chipped away mountains. With the disappearance of the mountain – the abode of God – the presence of God is diminishing in the world.

So, when we hear of Jesus going up the mountain and sitting down with the people, we are invited to join the people belonging to the ‘mountain culture’. The list of Beatitudes that Jesus gives is about the people from this mountain culture, depending on God and living harmoniously with nature and other human beings.

The second aspect we can dwell on from today’s Gospel is – Jesus, the Giver of Blessings. I shall rely heavily on Fr Ron Rolheiser, the Oblate Priest, writer and professor of theology. He has spoken of Jesus as operating out of a ‘Blessed consciousness’. Let me quote extensively from Rolheiser:

There’s a Buddhist parable that runs something like this: One day as the Buddha was sitting under a tree, a young, trim soldier walked by, looked at the Buddha, noticed his weight and his fat, and said: “You look like a pig!” The Buddha looked up calmly at the soldier and said: “And you look like God!” Taken aback by the comment, the soldier asked the Buddha: “Why do you say that I look like God?” The Buddha replied: “Well, we don’t really see what’s outside of ourselves, we see what’s inside of us and project it out. I sit under this tree all day and I think about God, so that when I look out, that’s what I see. And you, you must be thinking about other things!”
There’s an axiom in philosophy that asserts that the way we perceive and judge is deeply influenced and colored by our own interiority. That’s why it’s never possible to be fully objective and that’s why five people can witness the same event, see the same thing, and have five very different versions of what happened. Thomas Aquinas (whose feast was celebrated on January 28) expressed this in a famous axiom: Whatever is received is received according to the mode of its receiver.
If this is true, and it is, then, as the Buddhist parable suggests, how we perceive others speaks volumes about what’s going on inside of us. Among other things, it indicates whether we are operating out of a blessed or a cursed consciousness.
Let’s begin with the positive, a blessed consciousness:  We see this in Jesus, in how he perceived and in how he judged. His was a blessed consciousness. (Fr Rolheiser)

Right from the moment when the Angel Gabriel came to the young lady Mary to talk about Jesus becoming a human, words of blessings were shared: “Hail full of grace…” (Lk. 1:28) was the first blessing that Mary received from the Angel. Later, her cousin Elizabeth heaped more blessings on Mary: “Blessed are you among women and blessed is the fruit of your womb!” (Lk 1: 42) Hence, right from the moment of conception Jesus was blessed.

As the gospels describe it, at his baptism, the heavens opened and God’s voice was heard to say: “This is my blessed one, in whom I take delight.” And, it seems, for the rest of his life Jesus was always in some way conscious of his Father saying that to him: “You are my blessed one!” As a consequence, he was able to look out at the world and say: “Blessed are you when you are poor, or when you are persecuted, or suffering in any way. You are always blessed, no matter your circumstance in life.” He knew his own blessedness, felt it, and, because of that, could operate out of a blessed consciousness, a consciousness that could look out and see others and the world as blessed.
Sadly, for many of us, the opposite is true: We perceive others and the world not through a blessed consciousness but through a cursed consciousness.  We have been cursed and because of that, in whatever subtle ways, we curse others.
If any of us could play back our lives as a video we would see the countless times, especially when we were young, when we were subtly cursed, when we heard or intuited the words: Shut up! Who do you think you are! Go away! You aren’t wanted here! You’re not that important! You’re stupid! You’re full of yourself!  All of these were times when our energy and enthusiasm were perceived as a threat and we were, in effect, shut down.
And the residual result in us is shame, depression, and a cursed consciousness.  Unlike Jesus we don’t see others and the world as blessed. Instead, like the young soldier looking at an overweight Buddha under a tree, our spontaneous judgments are swift and lethal: “You look like a pig!”
Whatever is received is received according to the mode its receiver. Our harsh judgments of others say less about them than they say about us. Our negativity about others and the world speaks mostly of how bruised and wounded, ashamed and depressed, we are – and how little we ourselves have ever heard anyone say to us: “In you I take delight!” (Fr Rolheiser)

The Blessings that Jesus articulated on the mountain, have inspired thousands of great souls. One of them is Mohandas Gandhi, who later on became Mahatma Gandhi. For him, as well as to great stalwarts like Martin Luther King Jr., Dorothy Day, and Archbishop Romero, the Beatitudes were the manifesto of non-violence. It is apt that on the eve of Gandhi’s assassination, which took place on January 30th, this passage is given to us for our reflection.

This passage also has inspired many more to come up with modern-day Beatitudes. Pope Francis on his apostolic trip to Sweden, celebrated Mass on November 1, the Feast of All Saints. The best description of the saints, their “identity card”, the Pope said, is found in the Beatitudes from Jesus’s Sermon on the Mount, which is given as the Gospel for this Feast. In his homily, Pope Francis said that new situations required new energy and a new commitment, and then offered a new list of Beatitudes for modern Christians. Let us close our reflections with the Beatitudes given by Pope Francis:
- Blessed are those who remain faithful while enduring evils inflicted on them by others and forgive them from their heart.
- Blessed are those who look into the eyes of the abandoned and marginalised and show them their closeness.
- Blessed are those who see God in every person and strive to make others also discover him.
- Blessed are those who protect and care for our common home.
- Blessed are those who renounce their own comfort in order to help others.
- Blessed are those who pray and work for full communion between Christians.
  

The Beatitudes
பொதுக்காலம் 4ம் ஞாயிறு

இந்த ஞாயிறும், இனிவரும் நான்கு ஞாயிறுகளும், இயேசு வழங்கும் சவால்கள் நிறைந்த போதனைகள், நம் ஞாயிறு வழிபாடுகளை வழிநடத்துகின்றன. மலைப்பிரசங்கம் மலைப்போதனை, மலைப்பொழிவு என்று, பலவாறாக அழைக்கப்படும் இந்தப் படிப்பினைத் தொகுப்பினை, ஐந்து ஞாயிறு வழிபாடுகளில் தொடர்ந்து சிந்திக்க, இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாய்ப்பிற்காக, நன்றி சொல்வோம். இந்த மலைப்பொழிவின் துவக்கத்தில், 'பேறுபெற்றோர்' என்று இயேசு கூறும் ஆசிமொழிகள், இன்றைய நற்செய்தியாக வந்தடைந்துள்ளன. இப்பகுதியை நாம் அடிக்கடி கேட்டு, சந்தித்திருக்கிறோம். எனவே, இன்றைய சிந்தனைக்கு நாம் இரு எண்ணங்களை முன்வைப்போம். இயேசு மலை மீது அமர்ந்ததையும், அவர் வறியோரை வாழ்த்தி வழங்கிய ஆசி மொழிகளையும் நம் சிந்தனைகளின் மையமாக்குவோம். "இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர்ந்தார்" (மத். 5:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. மலையைப் பற்றிய சிந்தனைகளுடன் நாம் துவங்குவோம்.

மலை... உடலிலும், மனதிலும், மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். மலை முகடுகளைச் சூழ்ந்திருக்கும் அமைதி, மலைப்பகுதிகளில் வீசும் தூய்மையான காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை, நம்மில் புத்துணர்வை உருவாக்கும். மேலும், மலை மீது நிற்கும்போது, நமது பார்வை, பரந்து விரிந்ததாக மாறும். அமைதி, தூய்மை, புத்துணர்வு, பரந்து விரிந்த பார்வை, என்ற உன்னத அம்சங்களைக் கொண்டிருப்பதால், மலைகள், இறைவனின் இருப்பிடங்களாக, பல மதங்களில் கருதப்படுகின்றன.

இறைவன் உருவாக்கியதாக, தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ள ஏதேன் தோட்டத்தைப் பற்றி, Evan Eisenberg என்பவர் எழுதிய “The Ecology of Eden” அதாவது, ‘ஏதேனின் இயற்கைச்சூழல் என்ற நூலில், 'மலைக் கலாச்சாரம்' 'கோபுரக் கலாச்சாரம்' என்று இருவகைக் கலாச்சாரங்களைப் பற்றி பேசுகிறார். இறைவன் வழங்கியுள்ள படைப்பை மதித்து, அந்தப் படைப்புடன் ஒன்றித்து வாழ்ந்து வருவது, மலைக் கலாச்சாரம்.

இதற்கு மாறுபட்டிருப்பது, கோபுரக் கலாச்சாரம். மலையை, கடவுளின் படைப்பாக, இறைவனின் உறைவிடமாகப் பார்த்து இரசிப்பதற்குப் பதில், தான் கட்டவிருக்கும் கோபுரத்திற்குத் தேவையான மூலப் பொருள்களான மண், கல் ஆகியவை இருக்கும் ஒரு கிடங்காக, அந்த மலையைப் பார்க்கும் ஒரு பார்வை இது. இயற்கையுடன் ஒன்றித்து வாழாமல், இயற்கையைப் பகைத்து, இயற்கையை அடக்கி ஆள, இயற்கையை வெல்ல, இயற்கைச் செல்வங்கள் அனைத்தையும் தன் சுயநலனுக்கெனப் பயன்படுத்தி, தன் பெருமையை நிலைநாட்ட, கோபுரங்களைக் கட்டும் கலாச்சாரம் இது. 'கோபுரக் கலாச்சாரத்'தில் சிக்கிய மனிதர்கள் 'பாபேல் கோபுரம்' கட்டியதைப்பற்றி தொடக்க நூலில் (பிரிவு 11) வாசித்திருக்கிறோம். கோபுரக் கலாச்சாரத்தின் அடையாளங்களான, கோபுரங்கள் வளர, வளர... அந்தக் கோபுரங்களுக்கு, மண், கல், இவற்றைத் தந்த மலைகள், காணாமல் போய்விடும். அந்த மலைகளோடு சேர்ந்து, இறைவனும் காணாமற் போய்விடுவார். கடவுள், இந்தக் கலாச்சாரத்தில் காணாமற் போய்விடுவதால், உருவாக்கப்பட்ட பொருட்களையே கடவுளென நினைத்து, மனிதர்கள் வழிபட ஆரம்பித்துவிடுவர்.

மலைமீது அமர்ந்த இயேசு, தன் போதனைகளை, ஆசி மொழிகளுடன் ஆரம்பிக்கிறார். அவர் ஆசீரால் நிறைந்தவர் என்பதால், அவர் இவ்வுலகில் வாழும் அனைவரையும், குறிப்பாக, இவ்வுலகில் துயரங்களைச் சந்திப்போரை, ஆசீர்வதித்து, தன் படிப்பினைகளைத் துவங்குகிறார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீர் நிறைந்த ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.
ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர் அமைதியாக அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார்.
இந்தக் கூற்றை சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று எப்படி சொன்னீர்?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான் இந்த மரத்தடியில் அமர்ந்து இறைவனைத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும் இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார்.

இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும் நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர் பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர் பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தின் மீதும் சாபங்களை அள்ளி வீசும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசீர்களை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை நம் சாபங்களாக பெரிதுபடுத்துவதால், பெரும்பாலான நம் வாழ்வு சபிக்கப்பட்ட மனநிலையிலேயே கழிகிறது.
இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் பகிரவந்த கபிரியேல் தூதர், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். அவரைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று மனநிறைவான ஆசி வழங்கினார்.
இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் நிரப்பப்பெற்றார், இயேசு. ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் மலைப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார். 'பேறுபெற்றோர்' அதாவது, 'ஆசி பெற்றவர்' என்று இயேசு மலை மீது முழங்கிய கூற்றுகள், உலகப் புகழ்பெற்றவை::
மத்தேயு 5 3-10
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; துயருறுவோர் பேறுபெற்றோர்; கனிவுடையோர் பேறுபெற்றோர்; நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்...

மலைமீது அமர்ந்து, இயேசு கூறிய இந்த ஆசி மொழிகள், மலைக் கலாச்சாரத்தில் வாழ்வோரை மையப்படுத்தி சொல்லப்பட்ட ஆசி மொழிகள். இறைவனைச் சார்ந்து, இயற்கையைப் போற்றி வாழும் வறியோர், பேறுபெற்றோர், ஆசி பெற்றோர் என்று இயேசு கூறியுள்ளார். 'கோபுர கலாச்சார'த்தைச் சேர்ந்த மக்கள், இந்த ஆசி மொழிகளைக் கேட்கும்போது, இயேசுவை எள்ளி நகையாடக்கூடும். அவர்களைப் பொருத்தவரை, ஏழையரின் உள்ளத்தினர் அல்ல, செல்வத்தால் நிறைக்கப்பட்டவர்கள், செல்வத்தை கடவுளாக வழிபடும் உள்ளத்தினர் பேறுபெற்றோர்.

'பேறுபெற்றோர்' என்று இயேசு கூறிய ஆசி மொழிகள், பல்லாயிரம் உள்ளங்களில் உன்னத எண்ணங்களை விதைத்துள்ளன. அந்த உன்னத மனிதர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. விவிலியத்தில் காந்தியைக் கவர்ந்த 'பேறுபெற்றோர்' பகுதி, சனவரி 29, இஞ்ஞாயிறன்று தரப்பட்டுள்ளதை ஒரு பொருத்தமான நிகழ்வாக நாம் காணலாம். இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், ஆகியோரை வரிசைப்படுத்தி, வன்முறையற்ற அகிம்சை வழியை, இம்மலைப்பொழிவில் ஆணித்தரமாக அறிவித்துள்ள இயேசுவை, தன் மானசீகத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் காந்தி. அவரைப் போலவே, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ ஆகியோரையும் அதிகம் கவர்ந்த 'பேறுபெற்றோர்' பகுதி, அவர்களை அகிம்சை வழியில் துணிவுடன் செல்ல வழி வகுத்தது. அகிம்சை வழியை உலகில் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தி அவர்கள், வன்முறையாளர் ஒருவரின் குண்டுக்குப் பலியானதை, சனவரி 30ம் தேதி, திங்களன்று நினைவு கூர்கிறோம்.

'பேறுபெற்றோர்' என்று இயேசு வழங்கிய ஆசி மொழிகள், கடந்த 20 நூற்றாண்டுகளாக இன்னும் பல வடிவங்களில், ஆசி மொழிகளாக வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு, நவம்பர் முதல் தேதி, அனைத்து புனிதர் திருநாளன்று, சுவீடன் நாட்டில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய நற்செய்தியில் இடம்பெற்றிருந்த பேறுபெற்றோர் பகுதியை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார். அவ்வேளையில், இன்றையச் சூழலுக்கு ஏற்றதுபோல், மேலும் ஆறு பேறுபெற்றோர் ஆசிகளை திருத்தந்தை இணைத்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைத்த, இந்தப் புதிய ஆறு ஆசிமொழிகளுடன், இன்றைய சிந்தனைகளை நாம் நிறைவு செய்வோம்:

தங்கள் மேல் பிறர் சுமத்தும் தீமைகளை பொறுத்துக்கொண்டு, அவர்களை மனதார மன்னிப்போர், பேறுபெற்றோர்.
கைவிடப்பட்டோர், மற்றும் சமுதாயத்தின் ஓரங்களில் ஒதுக்கப்பட்டோரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, அவர்களுடன் தங்கள் அருகாமையை உணர்த்துவோர், பேறுபெற்றோர்.
ஒவ்வொரு மனிதரிலும் இறைவனைக் காண்போரும், அவ்வாறு கண்ட இறைவனை, மற்றவர்கள் காணவும் முயற்சிகள் மேற்கொள்வோரும், பேறுபெற்றோர்.
நமது பொதுவான இல்லமான இப்பூமியைப் பாதுகாத்து, பேணி வருவோர், பேறுபெற்றோர்.
அடுத்தவருக்கு உதவும் நோக்கத்தோடு, தங்கள் சுகங்களைத் துறப்போர், பேறுபெற்றோர்.
கிறிஸ்தவர்களின் முழுமையான ஒன்றிப்புக்கென செபிப்போர், உழைப்போர், பேறுபெற்றோர்.
இவர்கள் அனைவரும் இறைவனின் இரக்கத்திற்கும், கனிவிற்கும் தூதர்களாய் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் விருதை நிச்சயம் பெறுவர்.


24 January, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 4

Why does God allow Pain and Suffering?

கடந்த ஒரு வாரமாக, தமிழக இளையோர் மேற்கொண்ட ஓர் அறப்போராட்டம், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை மறுக்க இயலாது. குறிப்பாக, இளையோரிடம் காணப்பட்ட கட்டுப்பாடு, ஒற்றுமை, கொள்கையை மட்டும் முன்னிறுத்திப் போராடிய துணிவு, ஆகியவை, அனைவரையும் வியக்கவைத்தன. இளையோருடன், இல்லத்தரசிகள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் என்று அனைவரும் இணைந்தது, நமக்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் அளித்தது. இத்திங்களன்று, இந்தப் போராட்டம், சில கசப்பான திருப்பங்களைச் சந்தித்திருப்பது, மனதை வேதனைப்படுத்துகிறது; பல கேள்விகளை எழுப்புகிறது.

நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றிற்கு விளக்கங்கள் தருவதும், அவை குறித்து கேள்விகள் எழுப்புவதும், மனிதர்களாகிய நாம் எப்போதும் பின்பற்றும் செயல்பாடு. அவற்றில் சில, சரியாக இருக்கும், வேறு சில, குத்துமதிப்பான, அல்லது, கற்பனை கலந்த விளக்கங்களாக இருக்கும். உலகில் தோன்றும் அனைத்து உயிரினங்களிலும், மனிதர்கள் மட்டுமே, 'meaning-makers' அதாவது, 'பொருள் உருவாக்குபவர்கள்' என்பது, பல அறிஞர்களின் கருத்து. இதையே, யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தான் எழுதியுள்ள 'The Book of Job - When Bad Things Happened to a Good Person' அதாவது, 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற நூலின் முதல் பிரிவில் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும், நம் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்வனவற்றையும், உலகில் நிகழ்வனவற்றையும் புரிந்துகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறோம். நம் குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் உருவாகியுள்ளது என்பதை அறிந்ததும், நிலைகுலைந்து போகிறோம். இருப்பினும், விரைவில், அந்த நோய் உருவாகக் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும், அந்தக் காரணத்தை நீக்கவும் முயற்சிகள் எடுக்கிறோம். ஏதோ ஒரு நாட்டில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்ததும், வேதனைப்படுகிறோம்; அந்த இயற்கைப் பேரிடர் ஏன் அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்கிறோம்.
நேரடியாக நம்மைப் பாதிப்பனவற்றிலும், செய்தியாக நம்மை வந்து அடைவனவற்றிலும் காரண, காரியங்களை ஆய்வு செய்து, ஒவ்வொரு நிகழ்வுக்கும் அர்த்தம் தருவதால், அந்த நிகழ்வைக் குறித்து நாம் கொண்டுள்ள அச்சத்தை குறைத்துக்கொள்ள முயல்கிறோம். இல்லையெனில், அந்த அச்சம், நம்மை ஆட்டிப்படைக்கும், செயலிழக்கச் செய்துவிடும்.

சில வேளைகளில், வாழ்வில் எதிர்பாராத மகிழ்வு உண்டாகும்போது, அந்நிகழ்வுகளிலும் அர்த்தம் காண முயல்கிறோம். நாம் தரும் அர்த்தம், கண்டுபிடிக்கும் காரணம், குருட்டு நம்பிக்கையாக, மூட நம்பிக்கையாக, பலருக்குத் தெரியலாம். எடுத்துக்காட்டாக, நம் குடும்பத்தில் ஒருவர், பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருந்த வேலை, அன்று வீடுதேடி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அது நிகழ்ந்ததற்கு, இது காரணம், அது காரணம் என்று பல காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம். அன்றைய தேதியின் எண்களைக் கூட்டினால் வரும் ஒரு குறிப்பிட்ட எண், அன்று காலை நாம் உடுத்தியிருந்த சட்டை, அன்று அதிகாலை நாம் கண்விழித்ததும், நம் கண்ணில் பட்ட முதல் பொருள், அல்லது, முதல் நபர்... என்று பல காரணங்கள், அந்த நல்ல செய்தியுடன் இணைக்கப்படுகின்றன.
ஒருசிலர், வாழ்வில் நிகழும் நல்லவை, தீயவை அனைத்திற்கும், பிறந்த நட்சத்திரம், பிறந்த நேரம், ஜாதகம், கைரேகை என்று பல காரணங்களை முன்னிறுத்துவதையும் காணலாம். இவை அனைத்திற்கும் மேலாக, உலக நிகழ்வுகள், தனிப்பட்ட வாழ்வு நிகழ்வுகள் அனைத்திலும், இறைவனை நாம் இணைக்க முயல்கிறோம். குறிப்பாக, அந்நிகழ்வுகள் துயர நிகழ்வுகளாக இருந்தால், அவற்றை, இறைவன் தந்த தண்டனை என்று எளிதில் சுட்டிக்காட்டிவிடுகிறோம்.

நாம் தற்போது சிந்தித்துவரும் குஷ்னர் அவர்களின் நூலில், ஹெயிட்டி நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டு, சனவரி 12ம் தேதி, ஹெயிட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஏறத்தாழ 1,60,000 பேரின் உயிரைப் பறித்தது. இன்னும் பல இலட்சம் பேரை பெரிதும் பாதித்தது. இந்நிலநடுக்கத்தைப் பற்றி பேசிய ஒரு கிறிஸ்தவப் போதகர், 200 ஆண்டுகளுக்கு முன், ஹெயிட்டியில் வாழ்ந்தவர்கள், தங்கள் நாட்டின் விடுதலைக்காக, சாத்தானுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டனர் என்றும், அதன் விளைவாகவே, இறைவன் அவர்களைத் தண்டித்தார் என்றும் கூறியதை, குஷ்னர் அவர்கள், தன் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறும் எண்ணங்கள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன: "இத்தகைய விளக்கங்கள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, அவை, மிகத் தரக்குறைவான விளக்கங்கள். இத்தகைய விளக்கங்களைக் கொண்டு, இந்த போதகர்கள் இறைவனைப் பாதுகாப்பதாக நினைத்தால், அது, முற்றிலும் தவறு. இவ்விதம் போதிக்கப்படும் இறைவன், நம்மை அச்சத்தால் ஆட்டிப்படைக்கலாம், ஆனால், நம் ஆராதனைக்கு உரியவராக இருக்கமுடியாது."

துன்பம் நம்மைச் சூழும்போது, கடவுள் இருக்கிறாரா, அப்படியே அவர் இருந்தால் என்னதான் செய்துகொண்டிருக்கிறார், இப்போது எங்கே மறைந்துவிட்டார் என்று கேள்விகள் பல மனதில் குவியும். பல சமயங்களில், துன்ப நேரத்தில், நாமே ஒரு சில விடைகளையும் நமக்குச் சொல்லிக்கொள்கிறோம். நமக்கு வந்திருக்கும் துன்பம், கடவுளிடமிருந்து வந்திருக்கிறது என்பது, அந்த விடைகளில் ஒன்று. கடவுளிடமிருந்து வரும் துன்பங்களையும், இரு வழிகளில் நாம் புரிந்துகொள்ள முயல்கிறோம். நாம் செய்த தவறுகளுக்காக, கடவுள், இத்துன்பத்தின் வழியாக, நம்மைத் தண்டிக்கிறார், நமக்குப் பாடம் சொல்லித் தருகிறார் என்பது அடிக்கடி நாம் சொல்லும் பதில். அல்லது, நமது விசுவாசத்தைச் சோதிக்கவோ, பலப்படுத்தவோ, கடவுள் துன்பங்களைத் தருகிறார் என்பது, நாம் சொல்லும் மற்றொரு பதில்.

துன்பங்களின் வழியாக, இறைவன் நம்மைத் கண்டிக்கிறார் என்பது, புதிதான எண்ணங்கள் அல்ல. இஸ்ரயேல் மக்கள் மத்தியில், இத்தகைய எண்ணங்கள் பரவலாக இருந்தன. இதோ ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
இறைவாக்கினர் எசாயா 10: 5
ஆண்டவர் கூறுவதாவது: அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது: தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது.
தாவீதின் மகனான சாலமோனை, தான் எவ்வாறு வழி நடத்துவேன் என்று, நாத்தானின் வழியாக இறைவன் பேசுகிறார்.
சாமுவேல் - இரண்டாம் நூல் 7: 14
நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.
நீதிமொழிகள் நூலின் ஆசிரியர் கூறும் அறிவுரைகளில் ஒன்று இது:
நீதிமொழிகள் 13: 24
பிரம்பைக் கையாளாதவர், தம் மகனை நேசிக்காதவர்: மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.

கடவுள் தண்டிக்கிறார் என்பதை, பல சமயங்களில், வெகு எளிதாக, மேலோட்டமாகப் புரிந்து கொள்கிறோம். நாமே சரியாகப் புரிந்து கொள்ளாத, அல்லது மேலோட்டமாகப் புரிந்து கொண்ட எண்ணங்களை, பிறருக்கு, முக்கியமாக, குழந்தைகளுக்குச் சொல்லியும் தருகிறோம்.
எடுத்துக்காட்டாக, வேகமாக ஓடி, கீழே விழுந்து அடிபடும் குழந்தையிடம், சக்தியை மீறிச் செயல்படுவது ஆபத்து என்று சொல்லித் தருவதற்குப் பதிலாக, "நான் ஓடாதேன்னு சொன்னேன். நீ கேட்கல. இப்பப்பாரு. கடவுள் உன்னைக் கீழே விழவெச்சுட்டார்" என்று, எளிதாகச் சொல்லிவிடுகிறோம். இப்படி நாம் சொல்லும்போது, அக்குழந்தையின் பிஞ்சு மனதில் எவ்வகையான கடவுளை நாம் புகுத்துகிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும். குழந்தையைக் கட்டுப்படுத்த, குழந்தையின் எல்லைகளைச் சொல்லித்தர, நேரம் எடுத்துக்கொள்ளாமல், வெகு எளிதாக, கடவுளை அங்கு நுழைப்பதால், ஒரு தவறான கடவுளை, குழந்தைக்கு ஊட்டிவிடுகிறோம்.

இப்படி, சிறு காரியங்களில், நாம் நுழைத்துவிடும் கடவுளை, சில நேரங்களில் பெரிய விடயங்களிலும் நுழைத்துவிடுகிறோம். கடவுளைப்பற்றி, மக்களிடம் தவறாக எடுத்துச் சொல்லும் போதகர்களைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறேன். சில சமயங்களில் கோபமும் பட்டிருக்கிறேன். அப்படி எனக்குள் கோபத்தை, வருத்தத்தை உண்டாக்கிய ஒரு நிகழ்ச்சி இது.
இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில், தொழு நோயாளர்கள் மத்தியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரும், அவரது இரு மகன்களும், 1999ம் ஆண்டு, சனவரி 23ம் தேதி, இந்து மத அடிப்படைவாதிகளால், உயிரோடு எரிக்கப்பட்டனர். அதே ஆண்டு, அக்டோபர் மாதம், ஒரிஸ்ஸாவில் வீசிய ஒரு பெரும் புயல், மற்றும், வெள்ளத்தில் 10,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். இவ்விரண்டையும் இணைத்துப் பேசிய சில அருள்பணியாளர்கள், மதப் போதகர்கள், ஒரிஸ்ஸாவில்,  கிறிஸ்தவப் போதகரும், அவரது இரு மகன்களும் கொல்லப்பட்ட குற்றத்துக்குத் தண்டனையாக, பெரியதொரு புயலையும், வெள்ளத்தையும் இறைவன் அனுப்பினார் என்று, கடவுள் மேல் பழி சுமத்தினர்.

துன்பத்தையும், இறைவனையும் இணைத்து நாம் மேற்கொள்ளும் சிந்தனைகளில், மிக அதிகமான நெருடல்களை உருவாக்கும் ஒரு கேள்வி, மாசற்றவர்கள், நல்லவர்கள் ஏன் துன்புறவேண்டும் என்ற கேள்வி. விவிலியத்தில் இந்தக் கேள்வி, பல நூல்களில், பல வடிவங்களில் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றில், யோபு நூல், இந்தக் கேள்வியை மிக ஆழமாகச் சிந்திக்க வழிவகுக்கிறது. 42 பிரிவுகளைக் கொண்ட இந்நூலில், யோபு, அவரது மனைவி, நண்பர்கள், இறுதியாக இறைவன் என்று பலரும் பங்கேற்கும் ஓர் உரையாடல், 40 பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. விவிலியத்தில் அதிக சவால்கள் நிறைந்தது, யோபு நூல் என்று குஷ்னர் அவர்கள் குறிப்பிடும் இந்நூலில், நம் தேடல் பயணம் தொடர்கிறது.




22 January, 2017

Celebrating People’s Power… மக்களின் சக்தியைக் கொண்டாட...



The People that walked in darkness

3rd Sunday in Ordinary Time

In the past week, the largest two democracies of the world, namely, India and the U.S., have grabbed media attention for different reasons. Let us come to the U.S. later. First, it is India. In India, especially in Tamil Nadu, the youth have taken up a peaceful protest with utmost control, thus telling the Indian government that people’s power can achieve results. Although the Republic Day of India is celebrated only on January 26, in my opinion, Tamil Nadu had begun its Republic Day Celebrations from January 17.
Republic Day – the special day when the people of India gave themselves the power to rule themselves – calls for celebrations. India does celebrate Republic Day… But, unfortunately, for the last 20 years or more, the Parade in New Delhi is projected as THE CELEBRATION of this wonderful day. This parade does portray the various cultures of the people of India… sure! But, unfortunately, this parade has become more of a show of (show-off) Indian military power to the world! This is VERY UNFORTUNATE… to say the least! The Republic Day Parade is more of a ritual than a real celebration of the Indian Republic – the People’s power. This power is being celebrated in Tamil Nadu by the youth protesting against the ban on ‘Jallikattu’, the bull-fight.
Hats off to the youth of Tamil Nadu, who have not sought the support of any political party as well as the support of the tinsel world. They have taken care not to be divided on lines of caste, religion, political allegiance, fan club etc. They have not resorted to any violence and have gone from strength to strength. To me, this is truly a people’s movement, where no individual steals the limelight. The Central and State governments as well as various MNCs have been forced to take note of this event, and also take stock of their dubious, underhand dealings with people.

This Sunday’s Liturgy invites us to consider another people’s ‘movement’ inaugurated by Jesus – namely, the Kingdom of God! Today’s Gospel talks of the way in which Jesus inaugurated his public ministry… by proclaiming his first message and by calling his first disciples. Today’s liturgy gives us an opportunity to think of inaugurations – their style and content.

The style of inauguration: In today’s Gospel, Matthew describes the inauguration of Jesus’ public ministry with the imagery of light. This imagery was already spoken of by Prophet Isaiah as we hear it from the first reading. The imagery of light for inauguration is a lovely metaphor. I am thinking of two kinds of light, symbolising the spectacular but empty inaugurations and the silent, meaningful ones. The two kinds of light are - lightning and sunlight. Inaugurations as proposed by the commercial, political world can be compared to lightning. Flash, bang… gone. Theoretically speaking, the average lightning bolt contains a billion volts at 3,000 amps, or 3 billion kilowatts of power, enough energy to run a major city for months. (http://www.mikebrownsolutions.com/tesla-lightning.htm) Till date, lightning has caused more damages than being useful. Commercial, political inaugurations can be compared to lightning.
As against this, imagine what sunlight can do and, actually, does to the world. Sunlight comes up not with a bang, not abruptly like a lightning, but very silently, imperceptibly. But, we know that without sunlight nothing can survive on earth. Jesus’ public ministry is compared to the sunlight. “The people walking in darkness have seen a great light; on those living in the land of deep darkness a light has dawned.” (Isaiah 9: 2; Matthew 4:16)

Another aspect of inauguration is the content: When great leaders appear before the public for the first time, what they say and do count. Their words and actions would almost define what type of a leader he or she would be. My mind goes back to January 20, 1961, when John F.Kennedy was sworn in as the 35th President of the United States. He began his inaugural address with these words: “We observe today not a victory of party, but a celebration of freedom – symbolizing an end, as well as a beginning – signifying renewal, as well as change.” Towards the end of this inaugural address, he said: “And so, my fellow Americans: ask not what your country can do for you—ask what you can do for your country. My fellow citizens of the world: ask not what America will do for you, but what together we can do for the freedom of man.” – a well-known quote. JFK was one of the youngest presidents of the US and hence was looked upon as a much needed change in the U.S. political history. His inaugural speech defined him, in a way!
This brings to mind the inauguration of Donald Trump as the 45th President of the U.S., on January 20. We have to wait and see whether this ‘inauguration’ is a lightning, ready to cause more damages than a dawn of sunlight that can do wonders!

The inaugural words of Jesus in his public ministry were: “Repent, for the kingdom of heaven has come near.” (Matthew 4: 17). His first action was to gather a few fishermen with an invitation: “Come, follow me.” Repentance and following of Jesus are two key aspects of Christian life. All of us would easily agree that each Christian is called to repentance; but many of us would hesitate to affirm that every Christian is called to follow Jesus. We would think that ‘following Jesus’ is a privilege of the Religious and Priests.
Repentance and following of Jesus are basic to Christian calling and both are intrinsically connected. Repentance calls for some radical changes. Change is usually challenging. It is easier when these changes are external – like change of one’s profession, abode etc. But, when the change is internal like the one demanded by Jesus, it needs support. We are ready to change for a person whom we love. If we are drawn towards Jesus by love and if we are ready to follow Him, then we would be willing to change from within, even if this is very difficult. We have the examples of Simon, Andrew, James and John, the first Disciples of Jesus, who were willing to change their entire life, giving up their livelihood, their boats, nets… even their father.

Change is the cry of the hour… especially in India! Three years back, as India was facing the general elections and just before the Republic Day, the Hindu published an article about some youth who were questioned on what change they would want in India… They had mentioned the changes required at every walk of life from the government as well as from people. The title of the article hits the nail on the head: “Let’s be the change” (The Hindu, Bangalore Edition, Jan.24, 2014). This was the ‘mantra’ of Gandhiji too, namely, “Be the change that you wish to see in the world.”

Let the change begin from…. Each of US!

‘Jallikattu’ Protest in Madurai

The Marina crowd

பொதுக்காலம் 3ம் ஞாயிறு

சனவரி 26, வருகிற வியாழனன்று, இந்தியாவில் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, இந்த நாளன்று, மத்திய, மாநில அரசுகள், தங்கள் இராணுவம், காவல்துறை ஆகியவற்றின் சக்தியையும், நாட்டின் கலாச்சாரக் கூறுகளையும் விளம்பரப்படுத்த, அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இந்த அணிவகுப்புக்கள், உண்மையான குடியரசு நாள் கொண்டாட்டங்களா, அல்லது, செயற்கையான, போலியான சடங்குகளா என்ற கேள்விகள் எழுகின்றன.
இதற்கு ஒரு மாற்றாக, கடந்த சில நாட்களாக, தமிழகமெங்கும் உண்மையான குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதைக் கண்டு மகிழ்கிறோம். குடிமக்கள் தங்களையே ஆளமுடியும் என்பதையும், இளையோரின் சக்தி எத்தகையது என்பதையும், இந்நாட்களில் உணர்ந்து மகிழ்கிறோம். தமிழக இளையோரின் கட்டுப்பாடு, கலாச்சாரம் ஆகியவை, உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழகத்தின் இளம் பெண்களும், இளைஞர்களும் இணைந்து, மேற்கொண்டுள்ள ஒரு போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களை, தலைநிமிரச் செய்துள்ளது. அரசியல் நாற்றம் அறவே இன்றி நடத்தப்படும் இந்த அறப்போராட்டம், நம்பிக்கையை விதைத்துள்ளது. சுயவிளம்பரம் தேடும் நடிகர்களையும், தலைவர்களையும் சார்ந்திராமல், இளையோர் மேற்கொண்டுள்ள வழிமுறைகள், நம்மை வியக்கவைக்கின்றன. தனிமனிதத் துதியோ, தூற்றுதலோ அதிகம் இல்லாமல், ஒரு கொள்கைக்கென போராட, வீதிக்கு வந்திருக்கும் இளையோர், நம் மதிப்பில் உயர்ந்து நிற்கின்றனர். 'ஜல்லிக்கட்டு' என்ற பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்காக, தமிழக இளையோர் மேற்கொண்டுள்ள இந்தப் போராட்டம், வெற்றிபெற வேண்டும் என்பது நம் வேண்டுதல்.
கொள்கைகளை மையப்படுத்தி, கருத்துக்களை முன்னிறுத்தி, திரண்டுவந்திருக்கும் இளையோரின் சக்தி, ஓர் இயக்கமாக உருவாகி, தமிழகத்தையும், இந்திய நாட்டையும் நல்வழியில் நடத்திச் செல்லவேண்டும் என்பது, நம் தொடர் வேண்டுதலாக இருக்கட்டும். தமிழக மக்களின், இந்திய மக்களின் எதிர்காலம், நேரிய இளையோரின் கரங்களில் உள்ளது என்ற நம்பிக்கை, மக்களிடையே தொடர்ந்து வளரவேண்டும்.

இளையோர் மேற்கொண்ட இந்தப் போராட்டம் எங்கிருந்து உருவானது, யாரால் உருவானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ஒரு கட்டுப்பாடுடன் இது தொடர்ந்து செல்வது, ‘மக்கள் இயக்கம்என்ற கருத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. எந்த ஒரு தனி மனிதரும், தன் சுய இலாபத்தைத் தேடிக்கொள்ளாமல், சமுதாயத்தின் நன்மைக்கென உழைப்பது, ‘மக்கள் இயக்கத்தின் இதயத் துடிப்பாக அமைகிறது.
தன்னலம் அறவே இல்லாத இத்தகைய ஓர் இயக்கத்தை உருவாக்க, இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் 'இறையரசு' என்ற இயக்கத்தை உருவாக்க மேற்கொண்ட முதல் முயற்சிகளை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இயேசு, தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், சீடர்கள் நால்வரை அழைத்ததையும், நற்செய்தியைப் பறைசாற்றியதையும், மக்களை குணமாக்கியதையும் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

இயேசு ஆரம்பித்த பணிவாழ்வினை, ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயாவும், அதே வரிகளை, நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.(எசாயா 9: 2; மத்தேயு 4: 16)

ஆடம்பரங்களை முன்னிலைப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும், ஆழமான, அர்த்தமுள்ள பணியாற்றும் மக்கள் இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க, ஒளி, ஓர் அழகிய உருவகம். இயற்கையில் நாம் காணும் மின்னலும், சூரியஒளியும் இந்த வேறுபாட்டை அழகாக விளக்குகின்றன. அரசியல் கட்சிகளை, மின்னலுக்கு ஒப்பிடலாம். பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலிலும், பெருநகரங்களுக்குத் தேவையான மின்சக்தியைத் தரக்கூடிய அளவு, கோடான கோடி Watts மின்சக்தி வெளிப்படுகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால், மின்னலின் சக்தியைச் சேமித்து வைக்கும் கருவிகள் இல்லாததால், மின்னல்கள், பயனின்றி, தோன்றி மறைகின்றன. பலவேளைகளில், மின்னல்கள் தாக்குவதால், தீமைகள் விளைவதும் உண்டு. அரசியல் கட்சிகளும், ஆடம்பர நிறுவனங்களும் மின்னலைப் போன்றவை.
இதற்கு மாறானது, சூரியஒளி. இரவு முடிந்து, பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு ஒளிக் கீற்றுக்களாய் உதயங்கள் உருவாகும். இயேசுவின் பணி வாழ்வு, பகலவனைப் போல் ஆரம்பமானது. சனவரி 17ம் தேதி துவங்கிய இளையோர் போராட்டம், விடியலைப்போல சிறிது, சிறிதாக ஒளிப்பெற்று, தமிழகமெங்கும் பரவியது. ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாய் உதிக்கும் சூரியஒளியால் பல்லாயிரம் உயிர்கள் பயனடைகின்றன. இளையோர் துவங்கியிருக்கும் மக்கள் இயக்க முயற்சி, இதுபோல், மக்களுக்கு பயன்தரும் என்று நம்புவோம், வேண்டுவோம்.

ஒவ்வொரு தலைவனும் மக்கள் முன்னிலையில் சொல்லும் முதல் கூற்றுகள், செய்யும் முதல் பணி ஆகியவை அந்தத் தலைவன் எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்குச் சொல்லும் அடையாளங்கள். "இன்று நாம் ஒரு அரசியல் கட்சியின் வெற்றியைக் கொண்டாடவில்லை, மாறாக, நமது விடுதலையைக் கொண்டாடுகிறோம்" என்று ஒரு நாட்டின் அரசுத் தலைவர் பதவியேற்ற நாளில் தன் உரையை ஆரம்பித்தார். 1961ம் ஆண்டு சனவரி 20ம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜான் கென்னடி அவர்கள், தன் பதவியேற்பு விழாவில் கூறிய முதல் வார்த்தைகள் இவை. அந்த உரையின் இறுதியில், "நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காதே; மாறாக, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளை அவர் கூறி முடித்தார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன், 2009ம் ஆண்டு, சனவரி 20ம் தேதி, அமெரிக்க அரசுத் தலைவராய் பொறுப்பேற்று, தற்போது பதவி விலகிய பராக் ஒபாமா, நாம் நிற்கும் இந்த வளாகத்தில் உள்ள எந்த உணவகத்திலும் 60 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை ஓர் இருக்கையில் அமர்ந்து காப்பி குடித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்று, இதோ, நான் உங்கள் முன் இந்நாட்டின் தலைவனாக உறுதிமொழி எடுக்க முடிந்திருக்கிறது என்று தன் துவக்க உரையில் கூறினார்.
இவ்விதம், ஒவ்வொரு தலைவனும், முதல் முதலாகச் மக்கள் முன் அறிக்கையிட்டுச் சொல்லும் வார்த்தைகளில், அவர்களது எண்ணங்கள், அவர்களது தீர்மானம் ஆகியவை கணிக்கப்படும். சனவரி 20, இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 45வது அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அவர்கள், கண்களைப் பறிக்கும் மின்னல் ஒளியென தோன்றி மறைந்துவிடுவாரா, அல்லது, நீடித்த நன்மைகள் தரும் சூரிய ஒளிபோல் செயலாற்றுவாரா என்பதை, பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இயேசு என்ற தலைவன் மக்கள் முன் சொன்ன முதல் வார்த்தைகள் என்று மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளும் சொல்வது இதுதான்: "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." (மத்தேயு 4: 17) இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து, இயேசு செய்த முதல் பணி, தன் பின்னே வரும்படி ஒரு சில மீனவர்களை அழைத்தது.

ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் என்ற உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசு பணிவாழ்வை ஆரம்பித்த விதம் ஏமாற்றம் தருவதாக உள்ளது. பெரும் புதுமையொன்றைச் செய்து, அவர் தன் பணியை ஆரம்பித்திருக்கலாம். இதைத்தான் அலகை அவருக்குச் சொல்லித் தந்தது. எருசலேம் ஆலயத்தின் உச்சியில் இருந்து அவரை குதிக்கச்சொன்னது. ஆலய கோபுரத்திலிருந்து இயேசு குதித்திருந்தால், அதுவும் எருசலேம் கோவில் திருவிழாவையொட்டி அவர் இவ்வாறு செய்திருந்தால், எவ்வித போராட்டமும் இன்றி மக்களின் தலைவராக மாறியிருக்கலாம். ஆனால், இயேசு, தன் பணிவாழ்வை, தன் பொது வாழ்வை ஆரம்பித்த விதம் அமைதியாக இருந்தது. அவர் முதன்முதலாகச் சொன்ன வார்த்தைகள் புதிராகவும் இருந்தன. "மனம் மாறுங்கள்" என்று மக்களுக்குச் சொன்னார். "என் பின்னே வாருங்கள்" என்று மீனவர்கள் சிலரிடம் சொன்னார். கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்கள் இவை: மனமாற்றம், இயேசுவைப் பின்தொடர்தல்.

மனமாற்றம், அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானது. இதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், இயேசுவைப் பின்தொடர்தல் என்பது, துறவறத்தார், அருள்பணியாளர்கள் ஆகியோருக்குத்தான்; அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இல்லை என்பது, நாமாகவே எடுத்துக்கொண்ட ஒரு முடிவு. ஆழச் சிந்தித்தால், மனம் மாறுவதும், இயேசுவைப் பின்தொடர்வதும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற உண்மை விளங்கும்..
மாற்றம் உருவாக, குறிப்பாக, மனமாற்றம் உண்டாக, ஒரு முக்கிய உந்துதலாக இருக்கக்கூடியது, அன்பு, பாசம், காதல். நாம் மற்றொருவர்மீது ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது, அந்த இன்னொருவருக்காக நம்மிடம் எத்தனையோ அடிப்படை மாற்றங்களைச் செய்துகொள்ள தயாராகிறோம்.

கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்களான மனம் மாறுங்கள், என் பின்னே வாருங்கள் என்ற இந்த இரு அழைப்பினையும் நாம் இவ்விதம் இணைத்துப்பார்க்க முடியும். இயேசுவின் மீது கொண்ட ஆழமான ஈடுபாட்டால், அவரைப் பின்செல்ல நாம் ஆரம்பித்தால், மாற்றங்கள், மனமாற்றங்கள், வாழ்வின் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். தங்கள் வாழ்வின் அடிப்படைகளான மீன்பிடிக்கும் தொழில், தங்கள் படகுகள், தங்கள் தந்தை என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, இயேசுவைப் பின்சென்ற சீடர்களின் வாழ்வு, முற்றிலும் மாறியதைப் போல், நமது வாழ்வும், இயேசுவின்மீது கொண்ட ஈடுபாட்டால், முற்றிலும் மாற, அவரைப் பின் தொடர முயல்வோம்.

மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது, 'மாற்றங்கள் நாமாக இருப்போம்' (‘Let’s be the change’ – The Hindu, January 24, 2014) என்ற தலைப்புடன் நாளிதழ் ஒன்றில் ஈராண்டுகளுக்குமுன் நான் வாசித்த ஒரு செய்தி என் மனதில் தோன்றுகிறது. அன்றையச் சூழலில், அணுகிவந்த பாராளுமன்றத் தேர்தலும், குடியரசு நாளும் இளையோர் மனதில் உருவாக்கும் ஒரு முக்கிய எண்ணம் என்ன என்று அந்த நாளிதழ், கருத்து கேட்டபோது, இளையோரில் பலர் கூறியது இதுதான்: "இந்தியாவில் எத்தனையோ நல்ல மாற்றங்கள் தேவை. அந்த மாற்றங்கள் என்னிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்று விரும்புகிறேன்" என்ற கருத்து, பல இளையோரிடமிருந்து வந்தது. மிகவும் அற்புதமான ஒரு கருத்து. இந்த உறுதி, இன்றைய இளையோர் அனைவரிடமும் பரவினால், கட்டாயம் இந்தியா ஒரு தலைசிறந்த குடியரசாக உலகில் தலைநிமிர்ந்து நிற்கும். நாளையத் தலைமுறையினர் இந்தியாவை நல்வழியில் அழைத்துச் செல்வர் என்று நம்பிக்கை கொள்வோம். தமிழகமெங்கும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளையோரை, நம் செபங்களால் தாங்கி நிற்போம்.