08 January, 2017

God is not a private property இறைவன் தனியார் உடைமை அல்ல


The Magi


The Epiphany of Our Lord

Let us begin our reflection with an anecdote cited by Fr Ron Rolheiser, the Oblate theologian, in his weekly column: Recently, at an academic dinner, I was sitting across the table from a nuclear scientist. At one point, I asked him this question: Do you believe that there’s human life on other planets? His answer surprised me: “As a scientist, no, I don’t believe there’s human life on another planet. Scientifically, the odds are strongly against it. But, as a Christian, I believe there’s human life on other planets. Why? My logic is this: Why would God choose to have only one child?”

Why would God choose to have only one child? Good logic. Why indeed would an infinite God, capable of creating and loving beyond all imagination, want to do this only once? Why would an infinite God, at a certain point, say: “That’s enough. That’s my limit. These are all the people I can handle and love! Anything beyond this is too much for me! Now is the time to stop creating and enjoy what I’ve done.”

We have heard many stories (news) about UFOs and outer space intelligence. Whenever I read any such news, my curiosity was aroused. I had hardly reflected on God’s role in such ‘outer space beings’. When I read this passage from Rolheiser, it helped me to ‘theologize’ on outer-space beings. Such a reflection brings to mind a God who is capable of and possibly is creating other beings. Such a thought is very liberating and helps us to let God be God, without imposing our limitations on God.

This is the liberation given to us by the Feast of the Epiphany, which we celebrate this Sunday. This Feast tells us one basic truth about God. God is not a private property of any human group… not even of the planet earth. As far as God is concerned, the larger the family, the better… the more, the merrier!

This idea must have shocked quite a few orthodox Jews. They were very sure that the one and only true God was theirs, EXCLUSIVELY. God must have laughed at this idea; but in His/Her parental love, God would have allowed them to hold on to this ‘exclusivism’. God waited for the opportune time. By inviting the wise men from the East to visit the Divine Babe at Bethlehem, God had broken the myth of exclusivism! God is a true iconoclast, indeed!

God cannot be the exclusive treasure of any human group. This message is still very relevant to us, especially in the light of all the divisions created by various individuals and groups who have used God and religion as a political weapon. God is surely not party to any divisive force! Unifying, reconciling… these are God’s ways. Let us pray on the Feast of the Epiphany that the whole human family may live together as one inclusive, divine family. As pilgrims who have traversed the Extraordinary Jubilee of Mercy, let us pray that we become ‘merciful as God’ and learn to embrace the whole human family without any prejudice!

Although this feast is mainly about Jesus revealing Himself to the whole world (that’s the meaning of the word ‘Epiphany’), still, popularly, this feast is about the so called ‘Magi’. Very little is given about these persons (Kings? Wise men? Astrologers?) in the Bible. Only Matthew’s Gospel talks about these persons (Matthew 2: 1-12).
Matthew simply introduces these open minded seekers, as ‘wisemen from the East’. There is not even a mention of the number. Tradition has made them not only Kings, but also made them THREE KINGS because in Matthew’s gospel three gifts (gold, frankincense and myrrh) have been mentioned. Keeping this traditional point of view, we can say that today’s gospel talks of FOUR kings – three from the East and one, residing in Jerusalem, namely, Herod.

Fr Ron Rolheisser makes a lovely observation on these four persons.
The wise men follow the star, find the new king, and, upon seeing him, place their gifts at his feet. What happens to them afterwards? We have all kinds of apocryphal stories about their journey back home, but these, while interesting, are not helpful. We do not know what happened to them afterwards and that is exactly the point. Their slipping away into anonymity is a crucial part of their gift. The idea is that they now disappear because they can now disappear. They have placed their gifts at the feet of the young king and can now leave everything safely in his hands. His star has eclipsed theirs. Far from fighting for their former place, they now happily cede it to him. Like old Simeon, they can happily exit the stage singing: Now, Lord, you can dismiss your servants! We can die! We're in safe hands!
We can add to this list, St John the Baptist, who proclaimed “He must increase and I must decrease” (John 3:30), St Paul the Apostle who said: “It is no longer I who live but Christ lives in me” (Gal. 2:20), as well as millions of Saints down the centuries.

In contrast to this glorious band of witnesses, we have Herod who did not wish to give an inch to God. Fr Rolheiser talks about Herod thus: And Herod, how much to the contrary! The news that a new king has been born threatens him at his core since he is himself a king. The glory and light that will now shine upon the new king will no longer shine on him. So what is his reaction? Far from laying his resources at the feet of the new king, he sets out to kill him. Moreover, to ensure that his murderers find him, he kills all the male babies in the entire area. An entire book on anthropology might be written about this last line. Fish are not the only species that eats its young! But the real point is the contrast between the wise men and Herod: The former see new life as promise and they bless it; the latter sees new life as threat and he curses it.

We have just begun a new year. Do we see the New Year as a blessing or a threat? The media have heaped on us a depressing account of the past year. It has also managed to slip in some anxieties about the New Year. Are we so dumb as to go along these lines and begin the New Year with trepidation? Or, are we ready to drench in the shower of mercy that comes from above? Are we willing to surrender to the divine and then joyfully slip away into anonymity? Or, are we going to cling on to our own stardom – whether recognised as such by others or not?

Every New Year opens with promises and resolutions. It is one thing to make resolutions and quite a different thing to put them to practice. When the wisemen decided to follow the star, they must have faced quite many questions and ridicules. But, they did not give up. Their journey must have been torturous. Following a star is possible mostly at night. Stars are not visible during the day. This means that these wise men must have done most of their journey in the night – not an easy option given their mode of transportation etc. It must have been very difficult to gaze upon one little star among the hundreds on a clear sky. What if the sky was not clear? Then they would have to wait until clouds and mist clear. So, their journey must have taken nights, many nights. Relentlessly they pursued their decision to follow the star. This alone is reason enough to celebrate!

On January 6, last Friday, the Feast of the Epiphany was celebrated in Vatican. Pope Francis celebrated Mass in St Peter’s Basilica. He spoke about the journey of the wisemen in the following words: These men saw a star that made them set out. The discovery of something unusual in the heavens sparked a whole series of events. The star did not shine just for them, nor did they have special DNA to be able to see it. As one of the Church Fathers rightly noted, “the Magi did not set out because they had seen the star, but they saw the star because they had already set out” (cf. Saint John Chrysostom). Their hearts were open to the horizon and they could see what the heavens were showing them, for they were guided by an inner restlessness. They were open to something new.

The term ‘star’ is used to indicate someone or something special. Unfortunately, the commercial world uses this term very generously and frivolously… It creates too many stars – mega stars, super stars – mainly from the entertainment world and the sports field! It is also unfortunate that lots of people ‘follow these stars’ and reach nowhere. The less said about this, the better.
For us living in the 21st century, real stars in the sky are rare to see. With our city lights blinding our eyes, and the smog constantly spreading a blanket over our heads, it is hard to see clear skies and stars. To see the stars, we must get out of our cities… and there seems to be no time for that. We have no time to look up. We are dazzled and even blinded by too many artificial stars and hence real stars have receded from our view. We hardly look up.

A parting thought on ‘following a star’ is this: When we begin to follow a star, let us look for real, inspiring stars even if this means lots of challenges and lots of hardships.
“This is my quest
To follow that star
No matter how hopeless
No matter how far”
"The Impossible Dream"
from MAN OF LA MANCHA (1972) written by Joe Darion

Shepherds at the Manger

பாசமுள்ள பார்வையில்...  மரியன்னையின் வாரிசுகள்

திருக்காட்சிப் பெருவிழா, கிறிஸ்மஸ் விழா காலத்தை நிறைவுக்குக் கொணரும் இறுதி விழா. இத்திருவிழா காலத்தில், குழந்தை இயேசுவுக்கு நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இடம் தந்தோமா என்ற கேள்வியை, இந்த இறுதி நாளன்று எழுப்புவது நல்லது.
தன் கருவறையில் இறைமகன் என்ற கருவூலத்தைத் தாங்கிச் சென்ற இளம்பெண் மரியா, அக்கருவூலத்தை இவ்வுலகிற்கு வழங்க ஓர் இடமின்றி தவித்தார். ஏனெனில், பெத்லகேம் சிற்றூரில் அக்குழந்தையை வரவேற்க யாரும் தயாராக இல்லை. மாடடைத் தொழுவமே அவர்களை வரவேற்றது.
அன்னை மரியா, தன் மகனுக்கு, இவ்வுலகைப்பற்றி தந்த அறிமுகம், அதிர்ச்சியளிக்கிறது. மரியா, யோசேப்பு என்ற இரு மனித முகங்களைத் தவிர, அக்குழந்தை, இவ்வுலகில் நுழைந்ததும், கண்டதெல்லாம், மிருகங்களின் முகங்களே.
ஆனால், அந்த எளியத் தொழுவத்தில், இன்னும் பலருக்கு வரவேற்பளித்தனர், அன்னை மரியாவும், யோசேப்பும். குழந்தையைக் காணவந்த இடையர்கள், தொலைதூரத்திலிருந்து குழந்தையைத் தேடிவந்த ஞானிகள் என்று, அறிமுகமற்ற பலருக்கு, அன்னை மரியாவும், யோசேப்பும் வரவேற்பளித்தனர். இன்றும், அறிமுகமற்ற பலரை வரவேற்று, அடைக்கலம் அளிக்கும் அன்னையர், மரியன்னையின் வாரிசுகள்.

திருக்காட்சிப் பெருவிழா

பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்தில், இறையியல் ஆசிரியரும், எழுத்தாளருமான அருள்பணி Ron Rolheiser அவர்கள், அணுவியல் அறிவியலாளர் ஒருவரிடம், "ஏனையக் கோளங்களில் மனித உயிர்கள் உள்ளன என்பதை நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அந்த அறிவியலாளர் தந்த பதில் இதுதான்: "ஏனையக் கோளங்களில் மனித உயிர்கள் உள்ளன என்பதை, ஓர் அறிவியலாளராக, நான் நம்பத் தயாராக இல்லை. ஆனால், ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில், இதை நம்ப விரும்புகிறேன். அதற்கு நான் சொல்லும் காரணம் இதுதான்: இறைவன், ஏன் ஒரே ஒரு குழந்தையை மட்டும் உருவாக்க முடிவெடுக்கவேண்டும்?" அந்த அறிவியலாளர் தந்த பதில், தன்னை வியப்பில் ஆழ்த்தியதுடன், இறைவனைப்பற்றிய ஒரு திருவெளிப்பாடாகவும் அமைந்தது என்று, அருள்பணி Ron Rolheiser அவர்கள், கூறியுள்ளார்.
இறைவன், ஏன் ஒரே ஒரு குழந்தையை மட்டும் உருவாக்க முடிவெடுக்கவேண்டும்? என்பது, நம்மைச் சிந்திக்க அழைக்கும் கேள்வி. உலகையும், மனிதர்களையும் உருவாக்கியத்துடன், இறைவன், தன் படைப்பை நிறுத்திக் கொண்டாரா? எல்லைகள் ஏதுமற்ற இறைவனால், அவ்விதம் நிறுத்திக்கொள்ளத்தான் இயலுமா?
நாம் வாழும் இந்தப் பூமிக்கோளத்தைத் தாண்டி, இன்னும் பல்லாயிரம், பல கோடி பூமிக்கோளங்கள் உள்ளன; அவற்றில் நம்மைப் போன்றவர்கள் வாழ்கின்றனர் என்ற பரந்து, விரிந்த எண்ணம், இறைவனுக்கு நாம் வகுக்கும் எல்லைகளை உடைக்கும் சுதந்திரத்தைத் தருகிறது. அத்தகைய ஒரு சுதந்திரத்தை அனுபவிக்க, இன்றைய ஞாயிறு நமக்கு வாய்ப்பளிக்கிறது. எல்லைகள் ஏதுமற்ற இறைவனை, மனிதர்கள் உருவாக்கிய சிறு, சிறு கட்டங்களுக்குள் பூட்டிவிடாமல், இறைவனை, இறைவனாகவேத் தொழுவதற்கு, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடும் திருநாள், அழைக்கிறது.

இன்று நாம் கொண்டாடும், மூன்று அரசர், அல்லது, மூன்று ஞானிகள் திருநாள், இறைவன் தன்னை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழா எனவும் அழைக்கப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடிவந்த இஸ்ரயேல் குலத்தவருக்கு, இந்தத் திருநாளும், இதில் பொதிந்திருக்கும் உண்மையும், அதிர்ச்சியைத் தந்திருக்கும்.
இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா, இந்தத் திருக்காட்சித் திருநாள்.
நாம் வாழும் இன்றைய உலகில், கடவுளின் பெயரால், பிரிவுகளையும் பிளவுகளையும் உருவாக்கி, வன்முறைகளை வளர்க்கும் பல அடிப்படைவாதக் குழுக்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து, மனமாற்றம் பெறவேண்டுமென மன்றாடுவோம். மதங்களையும், இனங்களையும், சாதிகளையும் மூலதனமாக்கி, மக்களைப் பிரித்து, ஆதாயம் தேடிவரும் அரசியல் தலைவர்களின் சுயநல விளையாட்டை, மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று செபிப்போம்.

இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்த நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது. மேலும், இந்த ஞானிகளை, "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்று, இன்றைய நற்செய்தி அறிமுகம் செய்கிறது. இந்த ஞானிகள், இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதும், கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்ந்து அறிந்தவர்கள் என்பதும், ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.
இந்தியாவிலும், இன்னும் பல ஆசிய நாடுகளிலும் கோள்களை, நட்சத்திரங்களை அடிப்படையாகக்கொண்டு, வாழ்வின் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்பார்க்கலாம். திரைப்படங்கள், விளையாட்டு, அரசியல் ஆகிய உலகங்களில் உருவாகும் 'ஸ்டார்களையும்', நம் ஜாதகத்தில், கைரேகைகளில் பதிந்துவிட்ட 'நட்சத்திரங்களையும்' நம்பி வாழாமல், நல்வழிகாட்டும் இறை நம்பிக்கை, பிறரன்பு என்ற விண்மீன்களை நாம் பின்பற்றவேண்டும் என்பது, இந்த விழா நமக்குச் சொல்லித்தரும் அழகியப் பாடம்.

விண்மீன், இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவில் தங்கள் பயணத்தை, அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற அக்காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. பல இரவுகளில் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில், மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் அவர்கள் பின்தொடர்ந்திருக்கவேண்டும். இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும், ஒரே குறிக்கோளுடன், தொலைதூரம் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி, நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

சனவரி 6, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில், திருக்காட்சிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. அவ்வேளையில், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானிகள் விண்மீனைக் கண்டு பயணம் மேற்கொண்டதைப்பற்றி, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்: "வானில் தோன்றிய ஓர் அற்புதம், பல நிகழ்வுகளைத் துவக்கி வைத்தது. அந்த விண்மீன், ஞானிகளுக்கு மட்டும் தோன்றவில்லை, அல்லது, அந்த விண்மீனைக் காணும் தனிப்பட்ட DNA சக்தியை ஞானிகள்மட்டும் பெற்றிருக்கவில்லை. திருஅவையின் தந்தையர்களில் ஒருவர் கூறுவது இதுதான்: விண்மீனைக் கண்டதால் அவர்கள் தங்கள் பயணத்தைத் துவக்கவில்லை; மாறாக, அவர்கள் ஏற்கனவே இறைவனை நோக்கி தங்கள் பயணத்தை துவங்கியிருந்ததால், அவர்கள் விண்மீனைக் கண்டனர் (புனித ஜான் கிறிஸோஸ்தம்)."

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது, மிகவும் அரிது. வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும் போதும், மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம், கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள!
சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின், கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் விடுக்கும் அழைப்பும் நமக்குக் கிடைக்காது. கருமேகங்களைத் தாண்டி, விண்மீன்களைப் பார்ப்பதற்கு, நம் முகத்தில் உள்ள கண்கள் பயனற்றவை. அகக்கண்கள் தேவை. இதயத்தின் கண்களைத் திறந்து பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கமுடியும். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கமுடியும். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர் இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இந்த மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றும் அழைக்கிறோம். அரசர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு அரசர்களைப் பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன், நாம், ஏரோது அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம். இவர்கள் நால்வரும், இயேசுவைத் தேடினார்கள். விண்மீன் வழிநடத்த, தொலைதூரம் பயணம் செய்த மூன்று அரசர்கள், சுயநலம் மிக்க உள்நோக்கம் எதுவும் இல்லாமல், இயேசுவை, உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக் கண்டதும், தங்களையே அர்ப்பணம் செய்யும் அடையாளமாக, அக்குழந்தையின் காலடியில் காணிக்கைகளைச் சமர்ப்பித்தனர். பின்னர், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப்பற்றி விவிலியத்தில் எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ, காற்றோடு காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல் தெரிகிறது.

இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த பலரது நிலை இதுதான். எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கையிலேந்திய முதியவர் சிமியோன், இயேசுவைக் கண்டதால் உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற விரும்பினார். (லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் நிலையும், (யோவான் 3:30) இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலாத்தியர் 2:20) என்று முழங்கிய புனித பவுலின் நிலையும், இதைப் போன்றதே.  இறைவனை உண்மையிலேயேக் கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை அவரிடம் அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள் அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக? அவரைக் கொல்வதற்காக. அவனது தேடுதல், வெறியாக மாறி, பல நூறு பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிக்க வைத்தது. அவன், இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக் கண்டுவிட்டதாக நினைத்தான். அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை என்ற அந்தக் கடவுளுக்கு, தன் மனைவியரையும், பிள்ளைகளையும் அவன் பலி கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் பலி கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும் எச்சரிக்கைப் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

உண்மையான விண்மீன்களை அடையாளம் கண்டதால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்த ஞானிகளைப்போல், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தடைகள் பல வென்று, தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில், நாமும், இறைவனைக் காணமுயல்வோம். நாம் கண்ட இறைவன், நமக்குக் காட்டும் மாற்றுப்பாதையில், நம் வாழ்வுப் பயணத்தைக் தொடர துணிவு கொள்வோம். அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.


No comments:

Post a Comment