25 May, 2018

Triune God – The joint-family மூவொரு இறைவன் – கூட்டுக் குடும்பம்


The Holy Trinity

Feast of the Most Holy Trinity

Kids in a kindergarten class were deeply immersed in drawing. Their teacher was walking around to see the creative efforts of each child. As she got to one little girl who was working diligently, she asked what she was drawing.
The girl replied, "I'm drawing God."
The teacher paused and said, "But no one knows what God looks like."
Without missing a beat, or looking up from her drawing, the girl replied, "They will, in a minute."
If I were the teacher, listening to that kid, I would have learnt my catechism anew. The adult in us says that God is ‘un-seeable’ while the child (in us) says that God is ‘waiting to be seen’!

Our catechism began with the simplest of prayers – ‘In the name of the Father and of the Son and of the Holy Spirit – Amen’. The mystery behind this simple prayer is very profound – the Mystery of the Holy Trinity. Today we celebrate the Feast of the Most Holy Trinity. To celebrate this Feast, we need to become children again. Otherwise, this mystery will turn us into mental gymnasts, as it did St. Augustine.

Most of us remember the story about St. Augustine, who was involved in a mental gymnastics. He was walking by the seashore one day, attempting to construct an intelligible explanation for the mystery of the Trinity. As he walked along, he saw a small boy on the beach, pouring seawater into a small hole in the sand, with the help of a sea shell. "What are you doing, my child?" asked Augustine. "I am trying to empty the sea into this hole," the boy answered with an innocent smile. "But that is impossible, my dear child,” said Augustine. The boy stood up, looked straight into the eyes of Augustine and replied, “What you are trying to do - comprehend the immensity of God with your small head - is even more impossible.” Then he vanished. The child was an angel sent by God to teach Augustine a lesson. Later, Augustine wrote: "You see the Trinity if you see love." St Augustine learnt to ‘think’ of God with his heart. We can understand something of the mystery of the Holy Trinity more readily with the heart than with our feeble mind. Evagrius of Pontus, a Greek monk of the 4th century said: "God cannot be grasped by the mind. If God could be grasped, God would not be God."

Many of the deep realities of life and the world are simply gifts to be admired and mysteries to be contemplated by the heart than ideas to be grasped by the mind, dissected and labelled into packages. Albert Einstein, one of the greatest scientists of our times, had dissected almost anything and everything under the sun and gave plausible explanation. It was he who made the famous statement: The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.”
As children each of us has the capacity to ‘contemplate’.

I guess this is why Jesus spoke of all of us gaining entry into the Kingdom only by becoming children. In his own inimitable style, Jesus introduced the concept of the Holy Trinity to the Jews and to us. When He spoke of God in terms of relationships, many were surprised and many other ‘grown-up, important persons’ were furious. The God of the Israelites was ONLY ONE. Jesus did not change this fundamental idea, but presented this ONE GOD as a THREE-IN-ONE GOD. Basically what Jesus wanted to tell his listeners (and us) was that God does not exist in isolated individualism but in a community of relationships. In other words, God is not a loner or a recluse. This means that a Christian in search of Godliness (Matthew 5:48) must shun every tendency to isolationism and individualism. The ideal Christian spirituality is not that of flight from the world… (Fr. Ernest Munachi Ezeogu)

Jesus gave us this great gift of the Holy Trinity through simple imageries and stories. We have wrapped that gift in very sophisticated treatises. On many occasions in the history of the Church, the ‘gift-wrapper’ was so heavy and ornamented that the original gift was lost. The Triune God who is the life-giving force of all our relationships, is mostly locked up in well-built cathedrals and churches. The ‘God Family’ presented to us by Jesus needs to be living with us in our daily lives and not ‘treasured’ in magnificent churches as an object of mere adoration. The best way to respond to a lovely gift is to put that gift into day-to-day use and not keep it as a show-piece. This reminds me of a story told by Mark Link about a missionary, gifting his people with a sun-dial!

A missionary from Africa, on his home-leave, came across a beautiful sundial. He thought to himself, “That sundial would be ideal for my villagers in Africa. I could use it to teach them to tell the time of the day.” The missionary bought the sundial, crated it and took it back to Africa. When the village chief saw it, he insisted that it be set up in the centre of the village. The villagers were thrilled with the sundial. They had never seen something so beautiful in their lives. They were even more thrilled when they learned how it worked. The missionary was delighted by everyone’s response to his sundial. He was totally unprepared for what happened a few days later. The people of the village got together and built a roof over the sundial to protect it from the rain and the sun!
Well, I think the sundial is a lot like the Holy Trinity, and we Christians are a lot like the African villagers. The most beautiful revelation of our faith is the teaching about the Holy Trinity, namely, the Father, Son and the Holy Spirit. But instead of putting the teaching to work in our daily lives, we have built a roof over it, just as the villagers did over their sundial. For many of us the Trinity seems of little practical value, when it comes to our daily lives. We treat it more like an ornament of our Faith. (Mark Link in Sunday Homilies; quoted by Fr. Botelho).

The Feast of the Most Holy Trinity, the Feast of God’s Family, calls us to examine our attitude to relationships in general. Due to pressures coming from different directions in our daily life, family relationships become a casualty. May this Feast give us a fresh impetus to rethink our priorities and give due place for the Triune God as well as for our family ties! 


Detail of the painting of the Holy Trinity, by Pierre Mignard (1612-95)

மூவொரு இறைவன் பெருவிழா

மழலையர்பள்ளி ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னாள் அக்குழந்தை. உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னாள்.

'இறைவனை யாரும் பார்த்ததில்லை' என்பது வளர்ந்துவிட்ட ஆசிரியரின் கணிப்பு. 'இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்' என்பது குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதை ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் குழந்தைகள், இறைவனின் அற்புத வெளிப்பாடாக, இறைவன் என்ற பேரொளியின் சிறு பொறிகளாக, இவ்வுலகிற்கு வருகின்றனர். வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது.

மங்கி மறைந்துவரும் அந்த ஒளியை மீண்டும் ஏற்றிவைக்க இந்த ஞாயிறு நமக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழாவை, குழந்தை மனதுடன் அணுகினால் மட்டுமே, இப்பெருவிழாவின் உண்மைப் பொருளை ஓரளவாகிலும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும். மூவொரு இறைவன் என்ற பெருங்கடலில், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் குளித்து மகிழ்வதற்குப் பதில், அக்கடலை தன் சிந்தனைக் குழிக்குள் சிறைப்படுத்த முயன்ற புனித அகுஸ்தின் பற்றிய கதை நமக்கு நினைவிருக்கலாம்.

இறையியல் மேதையான புனித அகுஸ்தின், ஒருநாள், ஆழ்ந்த சிந்தனையோடு கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். நம் இறைவன் மூன்று ஆட்களாய், அதேவேளையில், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து, விடை தேடிக்கொண்டிருந்தார். கடற்கரையில் ஒரு சிறுவன், சிறியதொரு சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இவ்வாறு நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றான். அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு அளவுகடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.

அன்று, புனித அகுஸ்தின், அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது, மூவொரு கடவுளைப் பற்றிய உண்மை அல்ல. தன்னைப் பற்றிய உண்மை. அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தினை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றியச் சிந்தனைகளை, பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் மறைக்கப்பட்ட உண்மைகள், குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டன என்று இயேசு சொன்ன வார்த்தைகளின் (மத். 11: 25; லூக். 10: 21) முழுப் பொருளையும் புனித அகுஸ்தின் தன் அனுபவப் பள்ளியில் பயின்றார்.
வாழ்க்கை என்ற பள்ளியில் நாம் பணிவுடன் காலடி எடுத்துவைத்தால், நம்மைப்பற்றி, உலகைப்பற்றி, கடவுளைப்பற்றி பல அழகான உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியும். இந்தப் பணிவு குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ளது. எனவேதான், அவர்கள் பல ஆழமான உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்.

குழந்தைகளைப் போல மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என்று இயேசு சொன்னது விளையாட்டுக்காக அல்ல; குழந்தைகளைப் போன்ற மனம் கொண்டிருந்தால் மட்டுமே, இறைவனைப் பற்றியும், இறையரசைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும் என்பதை, இயேசு ஆணித்தரமாக நம்பினார். எனவேதான், அவர், இறைவனைப் பற்றியும், இறையரசைப் பற்றியும் நீண்ட இறையியல் விளக்கங்களைத் தருவதற்குப் பதில், குழந்தைகளும், குழந்தைமனம் கொண்டோரும் புரிந்துகொள்ளும் வகையில், எளிய கதைகள் வழியே விளக்கினார்.

நம் இறைவன், தனிமையில், தானாய் உறைந்திருக்கும் ஒருவராக அல்ல, மாறாக, மூவராக உறவுகொண்டிருப்பவர் என்ற பாடத்தை நமக்குச் சொல்லித் தந்தவர், இயேசு. அவர் இவ்விதம் இறைவனை அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை, இஸ்ரயேல் மக்கள் நம்பி, தொழுதுவந்த கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு.
உறவே இறைவனின் உயிர்நாடி என்று இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் இஸ்ரயேல் மக்களும், மதத் தலைவர்களும் மறுத்தனர். அவர்கள் செய்தது தவறு என்று, நாம், வழக்கம்போல், தீர்ப்பிட துடித்துக் கொண்டிருந்தால், ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொள்வோம். இயேசு சொல்லித்தந்த மூவொரு இறைவனை நாம் எவ்விதம் புரிந்துகொள்கிறோம்? ஏற்றுக்கொள்கிறோம்? என்ற கேள்விகளை இன்று எழுப்புவது நல்லது.

வழிபாட்டு ஆண்டின் 'பொதுக் காலத்'தை நாம் ஆரம்பித்துள்ளோம். 'பொதுக்காலம்' என்று சொல்லும்போது, இதுவரை நாம் கடந்துவந்தது ஒரு சிறப்புக் காலம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறோம். ஆம், நாம் கடந்துவந்தது, ஒரு சிறப்புக் காலம்தான். கடந்த ஆறு வாரங்களாக, ஒன்றன்பின் ஒன்றாக நாம் பெருவிழாக்களைக் கொண்டாடிவந்தோம். இந்த விழாக்காலத்தின் சிகரமாக இன்று மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருஅவையில் நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களும், பிறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், விண்ணேற்பு என்ற வரிசையில், ஒரு நிகழ்வை மையப்படுத்தியவை, அல்லது, கிறிஸ்து, மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான் என்ற வரிசையில், ஒரு நபரை மையப்படுத்தியவை. மூவொரு இறைவன் என்ற இந்த விழா மட்டுமே, அறிவு சார்ந்த ஒரு கருத்தை மையப்படுத்திய விழாவோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்குப் பின்னணியில் புதைந்திருக்கும் மற்றொரு முக்கியமான கேள்வி... மூவொரு இறைவன், உயிரோட்டமுள்ள உறவாக நம் மத்தியில் வாழ்கிறாரா? அல்லது, வெறும் அறிவுப் பசிக்கு உணவிடும் கருத்தாக வலம் வருகிறாரா?

திருஅவை வரலாற்றைப் புரட்டும்போது, மூவொரு இறைவன் என்ற பேருண்மை, பெரும்பாலும் ஏட்டளவு சிந்தனையாக, இறையியல் நூல்களின் பக்கங்களையும், பல்வேறு திருச்சங்க ஏடுகளையும் நிறைத்து விட்டனவோ என்ற நெருடல் நம் உள்ளங்களில் எழுகின்றது. மூவொரு இறைவனை, உயிரோட்டமுள்ள ஓர் உறவாக இயேசு நமக்குத் தந்தார். நாமோ அவரை ஒரு கருத்தாக மாற்றி, நூல்களிலும், கோவில்களிலும் பாதுகாத்து வருகிறோமோ என்று சிந்திக்கும்போது, ஆப்ரிக்காவில் சொல்லப்படும் கதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு நாட்டின் பழங்குடியினரிடையே மறைபரப்புப் பணியாற்றிவந்த ஓர் அருள்பணியாளர், விடுமுறைக்கு, தன் தாயகம் திரும்பிச் சென்றார். அங்கு அவர் 'சூரிய மணிகாட்டி' (Sun dial) என்ற அற்புதப் படைப்பைக் கண்டார். அதன் பயனை, தன் மக்கள் புரிந்து, பயன்படுத்தவேண்டும் என்ற ஆவலுடன், அருள்பணியாளர், தன் விடுமுறை முடிந்து திரும்பும்போது, சூரிய மணிகாட்டி ஒன்றை வாங்கிச் சென்றார்.
அவர் கொண்டுவந்திருந்த சூரிய மணிகாட்டியைக் கண்ட பழங்குடியினர், ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தனர். சூரிய மணிகாட்டியின் பயனை, தன் மக்கள் புரிந்துகொண்டனர் என்ற மகிழ்வில், அருள்பணியாளர், அதை அவ்வூருக்கு நடுவே ஒரு பொதுவான இடத்தில் பொருத்தி வைத்தார்.
அடுத்தநாள் காலை, அருள்பணியாளர் அவ்விடம் சென்றபோது அதிர்ச்சி அடைந்தார். அவ்வூர் மக்கள், சூரிய மணிக்காட்டிக்கு மேல் கூரை ஒன்றை அமைத்திருந்தனர். வெயில், மழை இவற்றால் சூரிய மணிகாட்டி பாதிக்கப்படாமல் காக்கும்பொருட்டு அந்தக் கூரையை அமைத்ததாக, அம்மக்கள், அருள்பணியாளரிடம் கூறினர்.

மூவொரு இறைவன் என்ற மறையுண்மையை சூரிய மணிகாட்டியாகவும், நம்மை, அந்தப் பழங்குடியினராகவும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூவொரு இறைவனின் மறையுண்மை, நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்புதமான கொடை. இக்கொடையைப் பெற்றுள்ள நாம், இம்மறையுண்மையை நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதைப் பாதுகாப்பாக வைக்கவேண்டுமென்ற ஆர்வத்தில், அழகியக் கோவில்களை எழுப்பி, அல்லது, மூவொரு இறைவனை, இறையியல் கருத்துக்களாக நூல்களில் எழுதி, அவற்றில், இம்மறையுண்மையை ஒரு காட்சிப் பொருளாக வைத்து, அழகுபார்க்கிறோம். இம்மறையுண்மையை வழிபாட்டிற்குரிய ஓர் உண்மையாக மட்டுமே வணங்குகிறோமே தவிர, நம் வாழ்வின் ஆதாரமாகப் பயன்படுத்தத் தயங்குகிறோம்.

இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவனின் இலக்கணமே உறவு. நம் இறைவன் உறவுகளின் ஊற்று. அப்படியிருக்க, நாமும் உறவுகளுக்கு முதன்மையான, முக்கியமான இடம் தரவேண்டும் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைவிட, செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது, போலியான கொண்டாட்டங்களில் ஈடுபடுவது என்ற மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.
நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது அசீரால் நிறைவோம் என்பதை மோசே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். மோசே தரும் ஆசி மொழிகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
இணைச்சட்டம் 4: 40
நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.


22 May, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1

Where Do We Go Now?

இமயமாகும் இளமை - "இப்போது நாங்கள் எங்கே செல்வது?"

"இப்போது நாங்கள் எங்கே செல்வது?" (w halla' la wayn / Where Do We Go Now?) என்பது 2011ம் ஆண்டு லெபனான் நாட்டில் உருவான ஒரு திரைப்படம். பல திரைப்பட விழாக்களில் பரிசுகளைப் பெற்ற திரைப்படம் இது. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள உறவுப் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.
ஒரு கிராமத்தில் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் எவ்வித பாகுபாடும், கருத்து வேறுபாடும் இன்றி மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர். நாளடைவில், உலகின் வேறு பகுதிகளில் நடைபெறும் மதக்கலவரங்கள் பற்றியச் செய்திகள், இந்த கிராமத்து மக்களையும் பாதிக்கின்றன. பாகுபாடுகள் எழுகின்றன. இந்தப் பாகுபாடுகளை விரும்பாத அந்த கிராமத்து அன்னையர், ஊரில் ஒற்றுமை நிலவ, பாடுபடுகின்றனர். இளையோரும் ஆதரவு தருகின்றனர். இந்தச் சூழலில், அந்த கிராமத்து இளைஞன் ஒருவர் பக்கத்து ஊருக்குச் ஏதோ ஒரு வேலையாகச் செல்கிறார். அங்கு நடந்த ஒரு மதக்கலவரத்தில் அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது உடல் கிராமத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.
தங்கள் நண்பனின் உடலைப் புதைப்பதற்கு அந்த கிராமத்து இளையோர் செல்கின்றனர். இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடுகளின்றி, இணைந்துசெல்லும் அந்த இளையோர் கூட்டம், கல்லறையை அடைகிறது. அங்கு கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் தனித் தனி கல்லறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அருகருகே இந்தக் கல்லறைகள் இருந்தாலும், இடையே செல்லும் பாதை இரு கல்லறைகளையும் பிரித்துக் காட்டுகிறது. அந்தப் பாதையில் தங்கள் நண்பனின் உடலைச் சுமந்து செல்லும் இளையோர், திடீரெனத் திரும்பி, இப்போது நாங்கள் எங்கே செல்வது? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தக் கேள்வியைத் திரை அரங்கத்தில் உள்ளவர்களை நோக்கிக் கேட்பதுபோல் இக்காட்சி பதிவாகியுள்ளது. இந்தக் கேள்வியோடு திரைப்படம் முடிகிறது.
பிறந்தது முதல் இறக்கும் வரை.... ஏன்? இறந்த பின்னரும் பாகுபாடுகளால் இவ்வுலகைக் கூறுபோட்டு வைத்திருக்கிறீர்களே... இப்போது நாங்கள் எங்கே செல்வது என்று இளையோர் நம்மைக் கேட்கின்றனர்.


Jesus feeding 5000

புதுமைகள் அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1

யோவான் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள புதுமைகள் வரிசையில், நான்காம் புதுமையில் நம் தேடல் பயணம் இன்று துவங்குகிறது. இந்த நற்செய்தியின் 6ம் பிரிவில், இயேசு 5000 பேருக்கு அப்பம் பகிர்ந்தளித்த புதுமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு, தன் பணி வாழ்வில் ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது, பொதுவான கருத்து. இவற்றோடு, கன்னியிடமிருந்து பிறந்தது, உயிர்த்தெழுந்தது, விண்ணகம் சென்றது போன்ற, இன்னும் சில புதுமைகளை இணைத்து, இயேசு ஆற்றியப் புதுமைகள் 40 என்று ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர். எந்த ஒரு நற்செய்தியாளரும், அனைத்துப் புதுமைகளையும் ஒரே நூலில் தொகுத்துத் தரவில்லை.
ஒரு சில புதுமைகள், ஒரு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளன. எடுத்துக்காட்டாக, இயேசு கானா திருமணத்தில் தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியப் புதுமை, யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளது (யோவான் 2:1-11). அதேபோல், நயீன் நகர் கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பிக்கும் புதுமை, லூக்கா நற்செய்தியில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 7:11-17). ஒரே ஒரு புதுமை மட்டுமே, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. அதுதான், இயேசு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்தப் புதுமை - (மத். 14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).

நான்கு நற்செய்திகளும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் எழுதப்பட்டன என்பதை நாம் அறிவோம். எனவே, சீடர்கள், தங்கள் நினைவுகளில் பதிந்திருந்த நிகழ்வுகளையும், இயேசுவின் போதனைகளையும் பதிவு செய்ததே, நான்கு நற்செய்திகளாக நம்மை அடைந்துள்ளன. எந்த ஒரு நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளதோ, அந்த நிகழ்வு, சீடர்களின் நினைவுகளில் மிக ஆழமாகப் பதிந்த நிகழ்வாக, இருந்திருக்கவேண்டும் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. இயேசு 5000 பேருக்கு உணவளித்த புதுமை, சீடர்களின் நினைவுகளில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்றால், இப்புதுமையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள் அனைத்தும் நான்கு நற்செய்திகளிலும் மாற்றம் ஏதுமின்றி, ஒரே அளவு எண்ணிக்கைகளாக உள்ளன. பெண்களும் சிறுவர், சிறுமியரும் நீங்கலாக இப்புதுமையால் பயனடைந்த ஆண்களின் எண்ணிக்கை 5000; இப்புதுமையைத் துவக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்டவை, ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்; அனைவரும் வயிறார உண்டபின், மீதமிருந்த துண்டுகள், சேகரிக்கப்பட்டது, பன்னிரண்டு கூடைகளில்... என்று, நான்கு நற்செய்திகளும் ஒரே எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளது, வியப்பைத் தருகிறது.

யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இப்புதுமைக்கு செவிமடுப்போம்.
யோவான் நற்செய்தி 6:3-13

இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார். இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள் என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

இந்தப் புதுமையின் அறிமுக வரிகள் முதலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. (யோவான் 6:3-4)
இந்தப் புதுமை நிகழ்ந்த இடத்தைப்பற்றி குறிப்பிடுகையில், மற்ற மூன்று நற்செய்தியாளர்களும் அவ்விடத்தை பாலைநிலம் என்று குறிப்பிட்டுள்ளனர். யோவான் மட்டுமே, "இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்" என்று மிகத் தெளிவாகக் கூறிப்பிட்டுள்ளார். இச்சொற்களை வாசிக்கும்போது, நம் நினைவு, மத்தேயு நற்செய்தி 5ம் பிரிவின் அறிமுக வரிகளுக்குச் செல்கின்றது.
மத்தேயு 5:1
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை...
என்று, மலைப்பொழிவின் அறிமுக வரிகள் அமைந்துள்ளன. மக்களின் ஆன்மீகப் பசியைத் தீர்க்க, மலைமீது அமர்ந்து போதித்த இயேசுவை, மத்தேயு குறிப்பிட்டுள்ளார். இயேசு, மக்களின் உடல் பசியைத் தீர்த்த புதுமையை அறிமுகம் செய்யும் வேளையில், நற்செய்தியாளர் யோவான், ஏறத்தாழ அதேபோன்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த அறிமுக வரிகளில், மலைப்பகுதி, பாஸ்கா விழா இரண்டையும் நற்செய்தியாளர் யோவான் இணைத்துப் பேசியிருப்பது, நம்மை பழைய ஏற்பாட்டின் பாஸ்கா விழாவுக்கும், சீனாய் மலைக்கும் அழைத்துச் செல்கின்றது. இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து மோசே வெளியே அழைத்து வந்த நிகழ்வுதான், அம்மக்கள் நடுவே பாஸ்கா விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எகிப்தைவிட்டு வெளியேறி, செங்கடலைக் கடந்தபின், மோசே, இஸ்ரயேல் மக்களை, சீனாய் மலையடிவாரத்திற்கு அழைத்துச் செல்கிறார். (விடுதலைப்பயணம் 19) அங்கு, அவர் மலைமீது ஏறிச்சென்று இறைவனைச் சந்திக்கிறார். இந்த நிகழ்வுகளை, நற்செய்தியாளர் யோவான், இவ்வறிமுக வரிகள் வழியே நம் உள்ளங்களில் விதைக்கிறார்.

பாஸ்கா விழா நெருங்கிவந்த வேளையில், மலைமீது ஏறி அமர்ந்த இயேசு, புதிய மோசே என்பதை நற்செய்தியாளர் யோவான் மறைமுகமாகக் கூறுகிறார். பசியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மோசேக்கும், இறைவனுக்கும் எதிராக முணுமுணுத்தபோது, வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தார் இறைவன். (விடுதலைப்பயணம் 16) தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு உணவளிப்பதைப் பற்றி இயேசு முதலில் சிந்திக்கிறார் என்று இப்புதுமையில் கூறப்பட்டுள்ளது. புதிய மோசேயான இயேசு, அம்மக்களுக்கு உணவளிக்க, மீண்டும் வானத்திலிருந்து மன்னாவைக் கொணர்ந்திருக்க முடியும். ஆனால், அவர், வேறு வழிகளில் அம்மக்களுக்கு உணவளிக்க விரும்பினார். அது, புதுமையாக மாறியது.

இந்தப் புதுமையின் அறிமுக வரிகளைத் தொடர்ந்து, இயேசுவுக்கும், பிலிப்புக்கும் இடையே நிகழும் ஓர் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு நற்செய்திகளிலும், யோவான் நற்செய்தியில் மட்டுமே திருத்தூதர் பிலிப்பைக் குறித்த நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஏனைய மூன்று நற்செய்திகளில் அவரது பெயர், பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் என்ற அளவில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

"மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, 'என்னைப் பின்தொடர்ந்து வா' எனக் கூறினார்" (யோவான் 1:43) என்று யோவான், பிலிப்பை அறிமுகம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, பிலிப்பு, நத்தனியேலை, இயேசுவிடம் அழைத்து வருகிறார். (யோவான் 1:45-46). அதைத் தொடர்ந்து, 6ம் பிரிவில், நாம் மீண்டும் பிலிப்பை சந்திக்கிறோம்.

மக்கள் கூட்டத்தைக் கண்டதும், அவர்களுக்கு உணவளிப்பது குறித்து, இயேசு பிலிப்பிடம் பேசுகிறார். இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். (யோவான் 6:5) இதைத் தொடர்ந்து, யோவான் பதிவு செய்துள்ள ஓர் இறைவாக்கியம் புதிரான எண்ணங்களைத் தருகின்றன. தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். (யோவான் 6:6) என்பதை யோவான் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

கானா திருமணத்தில் கலந்துகொள்ள "இயேசுவும் அவருடைய சீடரும் அழைப்புப் பெற்றிருந்தனர்" (யோவான் 2:2) என்று கூறப்பட்டிருப்பதால், பிலிப்பும் அங்கிருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அத்திருமண விருந்தில் இயேசு சாதாரண நீரிலிருந்து தரமான திராட்சை இரசத்தை உருவாக்கிய புதுமையை நேரில் கண்டவர் பிலிப்பு. எனவே, இந்தச் சூழலில், அவரது நம்பிக்கை எவ்வளவு தூரம் வளர்ந்திருந்தது என்பதை 'சோதிப்பதற்காக' இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டார் என்று ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். பிலிப்பின் கவனம் எல்லாம், மக்கள் கூட்டத்தின் மீதே இருந்தது. அவரது கவனம், சிறிது நேரம், தன்னருகில் இருந்த இயேசுவின் பக்கம் திரும்பியிருந்தால், அவரது பதில், "நீர் விரும்பினால், இம்மக்களுக்கு உணவளிக்க முடியும்" என்று சொல்லியிருக்கக்கூடும்.

பிலிப்பு மிகவும் எதார்த்தமாக, நடைமுறைக்கு ஏற்றவாறு பதில் அளிக்கிறார்: "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறு தூண்டும் கிடைக்காதே" என்றார். (யோவான் 6:7) பிலிப்பின் மனதில், 'இயலாது' என்ற எண்ணமே ஆழப்பதிந்திருந்ததால், இத்தகைய பதில் அவரிடமிருந்து எழுந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை நாம் அடுத்த தேடலில் சிந்திப்போம்.


20 May, 2018

The Spirit that unites us நம்மை இணைக்கும் தூய ஆவியார்


Pentecost

The Feast of the Pentecost

Pentecost. The very word spells magic and mystery along with images of tongues of fire as well as ‘gift of tongues’. But, the word simply means the fiftieth (day). Most often in life the greatest and the most profound truths are enveloped in very simple things. This is more true in the life of Christ and the Church than anywhere else. A quick look at the last 50 days will show us that everything around Jesus was simple but steeped in mystery.
In the last 50 days we have had quite a few festivals, celebrations starting from Easter. We celebrated Divine Mercy Sunday, Good Shepherd Sunday, Ascension Sunday and now Pentecost Sunday. There are a few more celebrations lined up… The Feasts of the Holy Trinity, The Body and Blood of Christ, and the Sacred Heart of Jesus… Whenever we use the word ‘celebrate’ we do have certain notions about it. How were the first Easter, Ascension and Pentecost – the core events of our Christian Faith – ‘celebrated’? Were they ‘celebrated’ at all? I wonder…

My impish mind thought of a remote possibility… What if the first Easter was given to an ‘event manager’? I leave it to your imagination! According to the present ‘worldly standards’, the first Easter should have taken place in full splendour… with blaring trumpets and dazzling pyrotechnics. But, it was a non-event, in every sense of the word!
The first Ascension, once again, was a very subdued affair with Jesus spending quiet moments with the disciples on a hillock outside the city before being taken up into heaven. The first Pentecost too was simply the outpouring of the Holy Spirit on Mother Mary and the disciples gathered in prayer in the ‘upper room’. These events are not even a pale shadow of what is defined as ‘celebration’ by the world.
The definition of ‘celebration’ according to the commercial world is pretty clear… Grand, Glamorous, Great, Gigantic…. I was simply trying my luck with the letter G. There are hundreds of other words to define how these celebrations are defined and delivered by the commercial world. Ask an ‘event manager’! Even if there is nothing to celebrate about, the commercial world would invent reasons to celebrate. The frills are more important than the core in these celebrations. In most of these celebrations ‘what’ is celebrated is less important than ‘how’ it is celebrated. When I think of these commercial celebrations, my impish mind (once again) thinks of the famous line from Macbeth: ‘sound and fury signifying nothing’. Such celebrations are fleeting, leaving no lasting impact on the individual. Perhaps it leaves one empty!

Jesus and his disciples defined ‘celebrations’ in a totally different way. They were more interested in the ‘what’ of the event than the ‘how’ of the event. This ‘what’ left a lasting, life-long impression on the disciples. This ‘what’ has left a deep impression on human history for the past twenty centuries.
It would do us a world of good to reflect on the ‘what’ of the Feast of Pentecost. This feast is also the Birthday of the Church. Any child coming into the world raises lots of expectations in others. The ‘first-things’ done by a child will confirm others in their expectations. The expectations of the new-born Church are revealed in what happened on that day in Jerusalem. (Acts 2: 1-11)
What did the new-born child, the Church, do on her Birthday? She unified people coming from many countries and regions. This is typical of many child-births in families. A new-born child tends to bring reconciliation in most families.

Let me stretch the metaphor of the new-born infant a bit more. We don’t need too much of a brain to understand the ‘language’ of a child. In fact we understand the language of an infant with our hearts than with our brains. Something similar happened with the new born Church. When She ‘spoke’ through the disciples everyone understood! The Acts of the Apostles in today’s first reading gives a list of those people who understood the disciples:
 And they were amazed and wondered, saying, "Are not all these who are speaking Galileans? And how is it that we hear, each of us in his own native language? Par'thians and Medes and E'lamites and residents of Mesopota'mia, Judea and Cappado'cia, Pontus and Asia, Phryg'ia and Pamphyl'ia, Egypt and the parts of Libya belonging to Cyre'ne, and visitors from Rome, both Jews and proselytes, Cretans and Arabians, we hear them telling in our own tongues the mighty works of God." (Acts 2: 7-11)

A bunch of Galileans spoke and people from many other nations and regions understood them. The last line of this passage gives us another clue as to how all these ‘different’ people understood what the Galileans spoke… The Galileans spoke about ‘the mighty works of God’. The last line also stresses the ‘hearing’ part of the message more than the speaking part. ‘We hear them telling in our own tongues the mighty works of God.’
To speak of and to hear about the mighty works of God, one does not require intelligent brains but an intuitive heart. The disciples spoke from their heart which was on fire and those who heard them were on fire too since they listened with their hearts. For this to happen, language – a tool invented by human beings – cannot be a block.

So, to come back to the ‘what’ of this Feast… It is the Birthday of the new-born Church. This Birthday brought together many nations, regions and tribes thus making it clear that divisions invented by human intelligence will break down in front of hearts united by the fire of the Spirit!

As a parting thought we can carry the words of St Paul given to us in the second reading today:
But I say, walk by the Spirit, and do not gratify the desires of the flesh…But the fruit of the Spirit is love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, gentleness, self-control; against such there is no law. And those who belong to Christ Jesus have crucified the flesh with its passions and desires. If we live by the Spirit, let us also walk by the Spirit.
(Galatians 5: 16, 22-25)

The Descent Of The Holy Spirit

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா

உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று தூய ஆவியாரின் பெருவிழா. இப்பெருவிழாவை, ‘பெந்தக்கோஸ்துஎன்று அழைக்கிறோம். பெந்தக்கோஸ்துஎன்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று நாம் கொண்டாடி மகிழ, பல ஞாயிறுகள் தொடர்ந்து வந்தன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா, கிறிஸ்துவின் திரு இருதயத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க இம்மறையுண்மைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்த ஒவ்வொரு நிகழ்வும் முதன் முதலில் நடந்தபோது, அமைதியாய் நடந்தன.
எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் அமைதியாக நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை, உயிர்ப்பு. நெருங்கியச் சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் விழாவோ, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. அந்த மேலறை அனுபவத்திற்குப் பின், எருசலேமில் இருந்தோர் பலருக்கு இந்தப் பெருவிழாவின் தாக்கம் வெளிப்பட்டது என்று இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள். விழா என்ற எண்ணத்திற்கு இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை இவ்விழாக்கள் வகுத்துள்ளன.
உலக விழா என்ற இலக்கணத்தில், கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப்பொருத்தே அந்த விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே இவ்விழாக்களின் உயிர்நாடிகளாய் உள்ளன. இந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்பட்டன என்று அடுத்தநாள் கேட்டால்கூட, நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தந்தனர் இயேசுவும் அவரது சீடர்களும். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள்அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஒருநாள் கேளிக்கைகளாகக் கடந்துபோகாமல், வாழ்நாளெல்லாம் நம்முள் மாற்றங்களை உருவாக்கும் கருவிகளாக அமையும்.
இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தரும் விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். தூய ஆவியாரின் பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் மற்றொரு முக்கிய பாடம் - அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. ஒரு கணமும் நம்மைவிட்டு விலகாமல் வாழும் இறை ஆவியாரை உணராமல் நாம் தேடிக்கொண்டிருப்பது, மீன் ஒன்று, கடல் நீரில் நீந்திக்கொண்டே, கடலைத் தேடியதைப் போன்ற ஒரு நிலை.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. கப்பலில் ஓரளவு உணவு இருந்ததால், அவர்களால் சமாளிக்க முடிந்தது. ஆயினும் அவர்களிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற செய்தியை அனுப்பினார் கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கப்பல் தலைவருக்கு கடும்கோபம். கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று அவர் வெறுப்புடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகிலிருந்த உதவியாட்களில் ஒருவர், தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீர் என்பதை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலக்கும் இடம். சுவையான குடிநீர் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நாம் தாகத்தால் தவிக்க முடியும்.
ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார் ஒருவர். அதே இடத்தில் உறங்குவார். பல ஆண்டுகள் அதே இடத்தில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு அமர்ந்திருந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் கிடைத்தது.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போல, நல்ல நீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போலத்தான் நாமும்... வாழ்வுப் பயணத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களை தெரிந்துகொள்ளாமல், தாகத்தில், தேவையில் துடிக்கிறோம். நம்முள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.
நமக்குள் இருக்கும் நல்லவற்றை நமக்குத் தெளிவுபடுத்தும் அணையாத ஒளியாக, நமக்குள் நல்லவற்றை ஒவ்வொருநாளும் பிறப்பிக்கும் வற்றாத ஊற்றாக நம்முள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன், தூய ஆவியார். இவரது பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், இவர் நம்முள் உறையும் இறைவன் என்பதை, முழுமையாக நம்பும் வரத்தை, ஒவ்வொருவருக்காகவும் வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவையின் பிறந்தநாள். ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் இவற்றை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.
திருஅவை என்ற குழந்தை பிறந்தது, ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியார் தீ நாவுகளாய் இறங்கிவந்த அனுபவம், தனியொரு மனிதருக்கு, காட்டின் நடுவில், அல்லது மலை உச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில், தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.
பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு, இறை அனுபவம் கிடைக்கும் என்று, ஏறத்தாழ, எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவத் திருமறையில், இத்தகைய தனிப்பட்ட அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போதும், ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதை, தூயஆவியாரின் வருகைப்பெருவிழா நமக்குச் சொல்லித் தருகிறது.

அர்த்தமுள்ள வகையில் மனிதர்கள் இணைந்து வருவதைத் தடுக்கும் வழிகள் இன்று உலகில் பெருகி வருகின்றன. பொதுவாகவே, நாம் வாழும் இன்றைய உலகம், நம் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, அந்தத் தனிமையில் நாம் நிறைவைக் காணமுடியும் என்ற மாயையை உருவாக்கி வருகிறது. நம்மைச்சுற்றி வளர்ந்துள்ள தொடர்புசாதனக் கருவிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால், அதே வேளையில் இக்கருவிகள் நம்மை உண்மையிலேயே இணைக்கின்றனவா? அல்லது இக்கருவிகளின் தோழமையால் நாம் மனித உறவுகளை, தொடர்புகளை இழந்து வருகிறோமா? என்ற கேள்விகள் எழுகின்றன. கருவிகள் இல்லாமல் தொடர்புகள் இல்லை என்ற அளவு, கருவிகளின் ஆக்கிரமிப்பு வளர்ந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவை என்ற குழந்தை பிறந்த நாள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் இதுதான்: திருஅவை என்பது, நானும், கடவுளும் என்ற, தனிப்பட்ட அனுபவம் அல்ல, குழுவாக, குடும்பமாக நாம் உணரும் ஓர் அனுபவமே திருஅவை.

திருஅவை என்ற குழந்தை பிறந்ததும், அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் என்ன? இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர் பணிகள் நூலில் நாம் வாசிக்கும் வரிகள் இவை: "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்." (திருத்தூதர் பணிகள் 2:4) திருஅவை என்ற குழந்தை பிறந்ததும், பேசத் துவங்கியது; அதுவும், பல்வேறு மொழிகளில், பேசத் துவங்கியது.
தூய ஆவியாரின் வருகையால் பிறந்த திருஅவை, பிறந்ததும், உலகிற்குச் சொல்லித்தந்த அழகானப் பாடங்களில் ஒன்று... மனித இதயங்கள் இணைந்து வரும்போது, மனிதர்கள் உருவாக்கிய மொழி என்ற எல்லை தேவையில்லை என்ற முக்கியமானப் பாடம். அதிலும், நம் இதயங்கள் இணைந்து பேசுவது இறைவனின் அருஞ்செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை என்பதையும், தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.
தூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால், அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா, வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு, அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16, 22-23, 25
தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்... தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.


16 May, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – முப்பத்தெட்டு ஆண்டு வேதனையின் முடிவு - 3


Corporal Doss receiving the Medal of Honor from President Harry S. Truman

இமயமாகும் இளமை - மனசாட்சியின்படி மறுப்பு கூறுவோர் உலகநாள்


1919ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்த டெஸ்மண்ட் டாஸ் (Desmond Doss) என்பவர், தன் இளவயதில், அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். தன் மத நம்பிக்கை மற்றும், மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்து, இராணுவத்தில் துப்பாக்கியைத் தொடப்போவதில்லை என்பதிலும், மற்றொரு மனிதரைக் கொல்லப்போவதில்லை என்பதிலும் அவர் மிக உறுதியாக இருந்தார். அவரது கொள்கைப் பிடிப்பினால், ஏனைய வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் ஏளனத்திற்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளானார். இருப்பினும், தன் உறுதிப்பாட்டிலிருந்து அவர் சற்றும் தளரவில்லை.
இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த வேளையில், இராணுவத்தில் மருத்துவ உதவிகள் செய்யும் பிரிவில், முழு மனதுடன் பணிபுரிந்தார், டெஸ்மண்ட் டாஸ். ஜப்பானின் ஒக்கினாவா (Okinawa) தீவில் நிகழ்ந்த மிகக் கொடூரமானப் போரில், இவரும் மற்ற வீரர்களுடன், போர்க்களத்தின் முன்னணி நிலையில் பணியாற்றினார். போர்க்களத்தில் அடிபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தோரை, தன் தோள்களில் சுமந்து, எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளுக்குத் தப்பித்து, தங்கள் பகுதியில் இருந்த முகாமுக்குக் கொண்டு சென்றார் இளம் வீரர் டாஸ்.
இவ்வாறு, அவர், 75 வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றினார். அவரது வீரத்தையும், தியாகத்தையும் பாராட்டி, அமெரிக்க அரசுத்தலைவர், ஹாரி ட்ரூமன் (Harry Truman) அவர்கள், இராணுவத்தின் மிக உயரிய விருதை அவருக்கு வழங்கினார்.
அரசின் கொள்கைகளும் சட்டங்களும், ஒருவரின் மனசாட்சிக்கு எதிரானதாக இருந்தால், மனசாட்சியின்படி மறுப்பு சொல்பவர்கள் பலர் உள்ளனர். இவர்களில் டெஸ்மண்ட் டாஸ் இராணுவத்தின் மிக உயரிய விருதைப் பெற்றுள்ள முதல் வீரர்.
மனசாட்சியின்படி மறுப்பு கூறுவோர் உலகநாள், (International Conscientious Objectors Day) மே 15, இச்செவ்வாய் சிறப்பிக்கப்பட்டது.

"Rise up, Take up your bed, and Walk"


புதுமைகள் முப்பத்தெட்டு ஆண்டு வேதனையின் முடிவு - 3

பெத்சதா குளத்தருகே, ஆதரவு ஏதுமின்றி, 38 ஆண்டுகள் படுத்துக்கிடந்த நோயாளி, அவரது இறந்த காலத்திலிருந்து வெளியேறி, எதிர்காலத்தை புத்துணர்வுடன் துவங்கவேண்டும் என்ற விருப்பத்தில், இயேசு அவரிடம், "நலம்பெற விரும்புகிறீரா?" (யோவான் 5:6) என்று கேட்கிறார். இக்கேள்வி வழியே, எதிர்காலம் நோக்கி, இயேசு அவரை அழைக்கையில், அவரோ, மீண்டும், தனக்கு உதவிசெய்ய யாரும் இல்லை என்ற புலம்பலுடன், தான் வாழ்ந்துவந்த கடந்த காலத்திற்கே திரும்புகிறார்.

சிரிக்கவும், சிந்திக்கவும் உருவாக்கப்பட்ட 'Peanuts' என்ற தொடரில், கடந்த காலத்தையே பார்க்க விழைவது, எதிர்காலத்தைப் பார்க்கத் துணிவது என்ற இரு கண்ணோட்டங்களை ஒப்பிட்டு, ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது.

Charles Shultz என்பவர் உருவாக்கிய இத்தொடரில், சார்லி என்ற சிறுவனும், லூசி என்ற சிறுமியும் கதாப்பாத்திரங்கள். ஒருநாள், லூசி, சார்லியிடம், "கப்பலின் மேல்தளத்தில் போடப்பட்டுள்ள சாய்வு நாற்காலிகளைப் போல் வாழ்வு அமைந்துள்ளது" என்று சொல்கிறாள். ஒன்றும் புரியாமல், சார்லி, லூசியிடம், "ஏன் அப்படி சொல்கிறாய்?" என்று கேட்கிறான். லூசி விளக்கம் அளிக்கிறாள்: "கப்பலின் மேல் தளத்தில் பயன்படுத்தப்படும் சாய்வு நாற்காலிகளை நினைத்துப் பார். ஒரு சிலர், அந்த நாற்காலிகளை, கப்பல் செல்லும் திசையை நோக்கி, தளத்தின் முன்புறம் போட்டு, தாங்கள் எங்கே போகிறோம் என்பதை அறிய ஆவல் கொண்டிருப்பர். வேறு சிலரோ, அந்த நாற்காலிகளை, கப்பலின் மேல்தளத்தில், பின்புறமாகப் போட்டு, அதுவரை தாங்கள் கடந்துவந்த பாதையைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பர்" என்று விளக்கம் அளிக்கிறாள் லூசி.

பெத்சதா குளத்தருகே படுத்திருந்த நோயாளி, கடந்து வந்த 38 ஆண்டுகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால், "நலம்பெற விரும்புகிறீரா?" என்ற கேள்வி வழியே இயேசு அவருக்குக் கொணர விழைந்த எதிர்காலத்தை, நம்பிக்கையை, அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. குளத்து நீர் கலங்குவதும், அவ்வேளையில், தான் குளத்திற்குள் இறங்கமுடியாமல் போவதும் மட்டுமே அவரது சிந்தனை முழுவதையும் ஆக்ரமித்திருந்ததால், "ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை" (யோவான் 5:7) என்று பதில் சொல்கிறார். ஒருவேளை, அடுத்தமுறை அந்தக் குளத்து நீர் கலங்கும்போது, அறிமுகமற்ற இந்த இளைஞர், தன்னை நீரில் இறக்கவிவிடுவார் என்ற நம்பிக்கையில், நோயாளி, அவ்வாறு கூறியிருக்கக்கூடும்.

வானதூதரால் கலக்கிவிடப்படும் குளத்து நீர் மட்டுமே தனக்கு நலம் கொணரமுடியும் என்று எண்ணிக்கொண்டிருந்த அவரிடம், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" (யோவான் 5:8) என்று இயேசு கூறினார். அவ்வேளையில், நோயாளியின் உள்ளத்தில் ஒரு போராட்டம் நிகழ்ந்திருக்க வேண்டும். எழுந்து நடக்கச் சொல்லும் இந்த இளையவரை நம்புவதா, அல்லது, அவர் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறார் என்றெண்ணி, அதை அசட்டை செய்துவிட்டு, அடுத்த முறை நீர் கலங்கும் தருணத்திற்காகக் காத்திருப்பதா என்ற போராட்டம் அது.
அந்தப் போராட்டம், அதிக நேரம் நீடிக்காதவண்ணம், அவரை இயேசு உடனடியாகக் குணமாக்கினார். இதையே, இந்த புதுமையின் இறுதி வாக்கியம் இவ்வாறு கூறுகிறது. "உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்" (யோவான் 5:9) என்று, இப்புதுமையின் முதல் பகுதி முடிவடைகிறது.

இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் யோவான், இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
யோவான் 5 10-16
அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், "ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்றார்கள். அவர் மறுமொழியாக "என்னை நலமாக்கியவரே, "உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்" என்று என்னிடம் கூறினார்" என்றார். "படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்று உம்மிடம் கூறியவர் யார்?" என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.
பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

பெத்சதா குளத்தைச் சுற்றியிருந்த மண்டபங்களில், 38 ஆண்டுகளாக அடைபட்டுக்கிடந்த மனிதர், தன் படுக்கையை எடுத்துக்கொண்டு வெளி உலகில் அடியெடுத்து வைத்தார். தனக்கு நிகழ்ந்த அற்புதத்தை, அதிசயத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், அவரைச் சந்தித்த யூதர்களுக்கு முதலில் கண்ணில் பட்டது, அவர் படுக்கையைச் சுமந்து சென்ற குற்றம். அவர்களில் ஒருசிலர், அந்தக் குளத்தினருகே அவர் படுத்துக்கிடந்ததைப் பார்த்திருக்கக்கூடும். அவர், படுக்கையைச் சுமந்து, நடந்து வந்ததைக் கண்ட அவர்கள், ஒருவேளை, குளத்தில் ஆண்டவரின் தூதர் நீரைக் கலக்கிய வேளையில் அவர் இறங்கியிருக்கக் கூடும் என்று நினைத்திருக்கலாம். அப்படியே நேர்ந்திருந்தாலும், அவர் குணமடைந்ததை எண்ணி அவர்களும் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கவனத்தை முதலில் ஈர்த்ததுஅவர் குணம் அடைந்த அற்புதம் அல்ல, மாறாக, அவர் படுக்கையைச் சுமந்து சென்றார் என்ற குற்றம் மட்டுமே. உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிடுகின்றனர்: "ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்"

38 ஆண்டுகளாக குளத்தருகே படுத்துக்கிடந்தவருக்கு, ஒய்வு நாளும், மற்ற நாள்களும் ஒன்றுபோலவே இருந்திருக்கும். எனவே, அவர்கள் கூறியதை அவர் பெரிதுபடுத்தாமல், தன்னை குணமாக்கியவர், படுக்கையை எடுத்துக்கொண்டு போகச் சொன்னதால், தான் அவ்வாறு செய்வதாகக் கூறினார்.
உடனே, அங்கு ஒரு வழக்கு ஆரம்பமாகிறது. ஓய்வுநாளை மீறும்படி கட்டளை கொடுத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது. படுக்கையைச் சுமந்து வந்தவருக்கு தன்னைக் குணமாக்கியது யார் என்று கூட தெரியாமல் போனது. அதுதான், இயேசுவின் அழகு. நல்லது ஒன்று நடந்ததும், அவ்விடத்தைவிட்டு மறைந்துவிடுவது, அவரது வழக்கம். பல வேளைகளில், நிகழ்ந்த புதுமையைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்ற கட்டளையையும் இயேசு வழங்கியுள்ளதை, நாம் நற்செய்திகளில் காண்கிறோம்.

இதன்பின், குணமடைந்தவர், தான் நலமடைந்ததற்காக, இறைவனுக்கு நன்றிப்பலி செலுத்த கோவிலுக்குச் சென்றிருக்கவேண்டும். அங்கு, அவர், இயேசுவைச் சந்திக்கிறார். அவர் தொடர்ந்து நலமுடன் வாழவிரும்பினால், பாவம் செய்யக்கூடாது என்ற அறிவுரையை இயேசு வழங்குகிறார். கோவிலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், குணமடைந்த மனிதர், இயேசுவைச் சூழ்ந்திருந்த மக்களில் ஒருவரிடம் அவரைப்பற்றி இன்னும் அதிகமாக கேட்டறிந்திருப்பார்.

இங்கு, நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ள சொற்கள், நம்மை சிறிது அதிர்ச்சியடையச் செய்கின்றன. குணமானவரை நோக்கி, "இனி பாவம் செய்யாதீர்" என்று இயேசு சொல்லி அனுப்பியதும், "அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்" (யோவான் 5:15) என்று யோவான் கூறியிருப்பது, நமக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இது, ஏறத்தாழ இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமம். தன்னுடைய நெருங்கிய சீடர்களில் ஒருவரால் இயேசு காட்டிக்கொடுக்கப்படுவதற்கு, ஓர் ஒத்திகை போல, இயேசுவால் நன்மை பெற்ற ஒருவர், அவரை யூதர்களிடம் அடையாளப் படுத்துகிறார்.
ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். என்று யோவான் தெளிவாகக் கூறியுள்ளார். இன்னும் சில இறைவாக்கியங்களுக்குப் பின், யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு நல்லவை நிகழும்போது, அந்த நன்மையால் உள்ளம் மகிழ்வதற்குப் பதில், என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்று காத்திருப்போர், எதிலும் குறை காண்பதிலேயே குறியாய் இருப்பர். தாங்களும் நன்மை செய்வது கிடையாது, செய்பவர்களையும் அமைதியாய் விடுவது கிடையாது.
தமிழ்நாட்டின் உத்திரமேரூருக்கு அருகில், பாலேஸ்வரத்தில் இயங்கிவரும் புனித ஜோசப் கருணை இல்லத்தைப்பற்றி தவறான, தாறுமாறானச் செய்திகள் இவ்வாண்டு மார்ச் மாதம் பல ஊடகங்களில் உலவி வந்தன. முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் தெருவோரங்களில் இறந்துகொண்டிருக்கும் மக்கள், நல்லதொரு முறையில் மரணமடைய உதவிகள் செய்துவரும் இவ்வில்லத்தைக் குறித்து பொய்யானச் செய்திகள் பரவின. இந்த இல்லத்தை நடத்திவரும் அருள்பணி தாமஸ் அவர்கள், இந்தப் பிரச்சனையைக் குறித்துப் பேசுகையில், அவர் கூறிய ஒரு நிகழ்வு, இயேசுவின் மீது குறை கண்டுபிடித்த யூதர்களை நினைவுறுத்துகிறது.

அருள்பணி தாமஸ் அவர்களை இந்து அடிப்படைவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சந்தித்தபோது, "நீங்கள் எதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கிறீர்கள்? ஒருவர் உடலெல்லாம் புழுத்து, நாற்றமெடுத்து நடுத்தெருவில் கிடந்தால், அது அவருடைய விதி. அதுதான் இந்து மதத்தின் கர்மா. அவர்கள் அப்படித்தான் சாகவேண்டும் என்று அவர்கள் தலையில் எழுதப்பட்ட எழுத்து. அவர்கள் தலையெழுத்தை மாற்ற நீங்கள் முயற்சி செய்தால், அதில் உங்களுக்கு ஏதோ ஆதாயம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்" என்று அவர் பேசியிருக்கிறார்.

38 ஆண்டுகளாக நோயுற்று கிடந்தவருக்கு எவ்வழியிலும் உதவிகள் செய்யாத யூதர்கள், அவர் நலமடைந்து படுக்கையை எடுத்துச் செல்கிறார் என்றதும், அவர் வாழ்வில் குறுக்கிடுகின்றனர். அவருக்கு நலமளித்த இயேசுவின் மீதும் குற்றம் காண்கின்றனர். அவர்களது வெறுப்பு, இயேசுவைக் கொல்லும் அளவுக்கு வளர்ந்துவிடுகிறது.
இவை எதுவும், இயேசுவை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. அவர் தொடர்ந்து நன்மைகள் செய்துவந்தார் என்பதை, இயேசுவின் அடுத்த புதுமை நமக்கு உணர்த்துகிறது. இயேசு 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு அப்பத்தைப் பகிர்ந்தளித்த புதுமையில் நாம் அடுத்தவாரம் அடியெடுத்து வைப்போம்.