The Lord
God took Abram outside… (Gn. 15:5)
2nd Sunday of Lent
Last Sunday, the First Sunday of Lent, we were given
the privilege of seeing a very private experience of Jesus, probably one of the
most vulnerable moments of his life - the temptations. Today, the Second Sunday
of Lent, gives us the opportunity to see Jesus in one of his glorious moments -
the transfiguration. Both temptations and transfiguration (transformation) are
part and parcel of human experience. Both offer us lessons!
Last Sunday we began our reflection on temptations
with a news item, published in BBC: Czech man mauled to death by lion he
kept in back yard. This Sunday, once again, another news feature from BBC
Culture section helps our reflection. It is a feature on Primo Michele Levi, an
Italian Jew, who lived in Turin .
He was deported to Auschwitz in 1944 and after
11 months of agony there, he was released by the Russian soldiers in 1945. Of
the 650 Italians that arrived in Auschwitz on
the same train as Levi, only 20 survived.
After returning to Turin , he began writing his memoires as
books. ‘If This Is a Man’, written almost as soon as he returned home after the
war, describes his time in Auschwitz . ‘The
Truce’, written over a decade later, describes the odyssey between leaving
Auschwitz and returning to Turin .
Three decades after that, and shortly before he died, Levi wrote ‘The Drowned
and the Saved’.
Levi wrote his autobiography in the form of short
stories. Being a chemist, he had given the title: “The Periodic Table”,
since each of the stories have different chemical elements as its title ("Argon"
– The infancy of the author; "Iron" – The adolescence of the author; "Gold"
– A story of imprisonment etc.). In this book, he speaks of the chemical
process of distillation and connects it to life. His thoughts on ‘distillation’
gives us the lead into our Sunday reflection on transfiguration.
“Distilling is beautiful. First of all, because it is
a slow, philosophic, and silent occupation, which keeps you busy but gives you
time to think of other things, somewhat like riding a bike. Then, because it
involves a metamorphosis from liquid to vapour (invisible), and from this once
again to liquid; but in this double journey, up and down, purity is attained,
an ambiguous and fascinating condition, which starts with chemistry and goes
very far.”
“Distillation” … could describe his own journey from Turin to Auschwitz and then back to Turin , where he lived the rest of his life in
the same apartment in which he was born. The experience stripped him of what
ego and vanity he had, and left him clear-eyed. (Primo Levi: a clear-eyed
view of evil, pain and humanity - BBC–Culture, 11 March 2019)
Last week we reflected that everyone born will have to
face temptations. This week we reflect on another common human phenomenon –
CHANGE! Change, in fact, is a key theme for the Lenten season - change of
heart, change of our lifestyle. Levi’s thoughts on ‘distillation’, serve as a
parable on change, leading up to transformation and ‘transfiguration’ in our
life! Change is slow, and silent. Change involves visible as well as
invisible processes. Change, usually, pushes us towards greater purity.
Most of us would tend to believe that when our
surrounding and the people around us change, we also change. On deeper
analysis, we can see that radical, lasting changes begin from within. The first
reading from Genesis (Gn. 15:5-12, 17-18) talk about this. The opening line of
the first reading says: The Lord God took Abram outside and said,
"Look up at the sky"… (Gn. 15:5). The verses preceding this
does not talk about Abram being in his tent etc. Hence, the phrase ‘the Lord
God took Abram outside’ can be interpreted as God challenging Abram to step
out of himself. In fact, the very moment Abram is introduced in the Bible, he
is asked to ‘step out’:
Genesis 12: 1,4
Now the Lord said to Abram, “Go from your country and
your kindred and your father’s house to the land that I will show you... So
Abram went, as the Lord had told him… Abram was seventy-five years old when he
departed from Haran .
75 is not an age to begin adventures in one’s life.
But, Abram is asked to begin his adventure at that age. Abram became ‘Abraham’
when he was 99 years old! (Gn. 17:1-5) This is a great lesson for us: that all
of us, at whatever age we are, are called to ‘step out’. Every time we go out
of ourselves, we can hope to receive the blessings of God. Lent is a graceful
time to ‘step out’!
The Transfiguration of Christ given in today’s gospel
(Luke 9:28b-36) lends itself for varied reflections. I would like to reflect
briefly on three aspects:
First aspect – prayer: And
as he (Jesus) was praying, the appearance of his countenance was altered, and
his raiment became dazzling white. (Luke 9:29)
Every moment of prayer brings about change. Often, we
feel that prayer does not bring ‘results’. We tend to look upon prayer as a
vending machine, where, for every coin dropped, we get something of our choice!
One night a man was sleeping in his cabin when
suddenly his room filled with light and the Saviour appeared. The Lord told the
man he had work for him to do, and showed him a large rock in front of his
cabin. The Lord explained that the man was to push against the rock with all
his might. This the man did, day after day. For many years he toiled from sun
up to sun down, his shoulders set squarely against the cold, massive surface of
the unmoving rock, pushing with all his might. Each night the man returned to
his cabin sore, and worn out, feeling that his whole day had been spent in
vain.
… One day he decided to make it a matter of prayer and
take his troubled thoughts to the Lord.
"Lord" he said, "I have laboured long
and hard in your service, putting all my strength to do that which you have
asked. Yet, after all this time, I have not even budged that rock by half a
millimetre. What is wrong? Why am I failing?"
The Lord responded compassionately, "My friend,
when I asked you to push against the rock with all your strength, never once
did I mention to you that I expected you to move it. Your task was to push. And
now you come to me, with your strength spent, thinking that you have failed.
But, is that really so? Look at yourself. Your arms are strong and muscled,
your back sinewy and brown, your hands are callused from constant pressure, and
your legs have become massive and hard. Through opposition you have grown much
and your abilities now surpass that which you used to have. Yet you haven't
moved the rock. But your calling was to be obedient and to push and to exercise
your faith and trust in My wisdom. This you have done. I, my friend, will now
move the rock."
By all means, exercise the faith that moves mountains,
but know that it is still God who moves the mountains. You just PUSH! P.U.S.H.
= Pray Until Something Happens! (Author Unknown)
The ‘something’ need not be ‘the particular thing’ we
are expecting. We are aware that alms-giving, praying and fasting are the three
pillars of Lent. Hence, Lent gives us an opportunity to look into our habit of
praying and see where we stand!
Second aspect – rooted and grounded: The transfigured Jesus was conversing with Moses and Eli′jah about his death
(Lk. 9:31). Instead of relishing the ‘glorious’ moment of transfiguration, they
spoke about Jesus’ death! We can surely learn a lesson here. When we are
surrounded by glory, we need to keep our feet firmly rooted to the ground and
not lose sight of our life’s purpose. If we start floating in the skies,
without any thought to the reality around us, we may be forced to crash-land
painfully!
Third aspect – getting back to the people: Deep experiences of God should take us back to the people. This is what
happens in the final part of the Transfiguration event. Peter wanted to prolong
the ‘experience’ by erecting tents. Evangelist Luke makes a special mention of
how Peter was talking - not knowing what he said. (Luke 9:33) God
intervened and said, “This is my Son, my Chosen ;
listen to him!” (Luke 9:35) It was an indirect reminder to Peter not to
blabber, but to keep silent and listen to the Son. What would the Son say? “It
is nice to stay on like this. But, we need to get back to the people to
‘transfigure’ them.”
Lessons
from the Mountain!
தவக்காலம் 2ம் ஞாயிறு
20ம்
நூற்றாண்டில் (1919-1987) வாழ்ந்த, இத்தாலிய வேதியியலாளரும், எழுத்தாளருமான ப்ரீமோ
மிக்கேலே லேவி (Primo Michele Levi) அவர்கள், 1944ம் ஆண்டு, ஆஷ்விட்ஸ் (Auschwitz) வதைமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, 11 மாதங்கள் கொடுமைகளுக்கு
உள்ளானபின், 1945ம் ஆண்டு, சனவரி மாதம், இரஷ்யப் படையினரால்
விடுவிக்கப்பட்டு, மீண்டும் இத்தாலிக்குத் திரும்பினார். வதைமுகாமுக்குக்
கொண்டு செல்லப்பட்ட 650 இத்தாலிய யூதர்களில்,
20 பேர் மட்டுமே உயிருடன்
வெளியேறினர். பிறந்த ஊரான தூரின் நகருக்குத் திரும்பி வந்த லேவி அவர்கள், 'The Periodic
Table' அதாவது, 'வேதியியல்
கூறுகளின் அட்டவணை' என்ற தலைப்பில், தன் வாழ்வை 21 சிறுகதைகளாக எழுதியுள்ளார்.
வேதியியலில்
பயன்படுத்தப்படும் ‘வடித்தெடுத்தல்’ அல்லது ‘துளித்தெடுத்தல்’ முறையையும் (Distillation
process), வாழ்வையும் ஒப்பிட்டு, அவர் கூறும் கருத்துக்கள், நம்மை, இன்றைய ஞாயிறு சிந்தனைகளுக்கு அழைத்துச்
செல்கின்றன.
"வடித்தெடுத்தல்
அழகானது. ஏனெனில், அனைத்திற்கும் மேலாக, அது, மெதுவாக, அமைதியாக
நடைபெறுகிறது.
அது நடைபெறும் வேளையில், வேறு பல விடயங்களைச் சிந்திக்க
நேரம் தருகிறது. இரண்டாவதாக, அதில், உருமாற்றம் நிகழ்கிறது. திரவ நிலையிலிருந்து, கண்ணால் காணமுடியாத ஆவி நிலைக்குச் சென்று, மீண்டும் திரவ நிலைக்குத் திரும்புகிறது. இந்த இரட்டைப் பயணம், மீண்டும், மீண்டும் நிகழ்வதால், அந்தத் திரவம் மேலும், மேலும், தூய்மையடைகிறது."
'வடித்தெடுத்தல் முறை'யில் காணப்படும் கூறுகள்,
வேதியியலைத் தாண்டி, வாழ்வைக் குறித்து, வேறுபல எண்ணங்களை வழங்குகின்றன என்று, லேவி
அவர்கள் கூறியுள்ளார். தூரின் நகரில் துவங்கிய தன் வாழ்வு, ஆஷ்விட்ஸ் வதைமுகாமுக்குச் சென்று, மீண்டும் தூரின் நகருக்குத் திரும்பிவந்ததை, 'வடித்தெடுத்தல் முறை'யுடன் ஒப்பிட்டுள்ள லேவி
அவர்கள், வேதனையான இந்தப் பயணம், தான் என்ற அகந்தையையும், பகட்டையும் தன் வாழ்விலிருந்து நீக்கியதோடு, வாழ்வைக் குறித்து தெளிவான பார்வையை தனக்கு வழங்கியது என்று கூறியுள்ளார்.
'வடித்தெடுத்தல் முறை', மெதுவாக, அமைதியாக நடைபெறுவது, அங்கு, சில உருமாற்றங்கள்,
கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்வது, மீண்டும், மீண்டும்
நடைபெறும் இந்த மாற்றங்களின் இறுதியில், தூய்மை உருவாவது, என்ற எண்ணங்கள், இந்த ஞாயிறன்று நாம் சிந்திக்கும்
ஆபிரகாமின் வாழ்வு, மற்றும், இயேசுவின் தோற்றமாற்றம் நிகழ்வு, ஆகியவற்றைக் குறித்து
சில தெளிவுகளைத் தருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு சந்தித்த
சோதனைகளைப்பற்றியும், இரண்டாம் ஞாயிறு,
இயேசு தோற்ற மாற்றம் பெற்ற நிகழ்வையும், சிந்திக்க நற்செய்தி நம்மை அழைக்கின்றது. சோதனைகள்,
மனித வாழ்வின் இன்றியமையாத ஓர் அனுபவம் என்பதுபோல், தோற்ற மாற்றம் உட்பட, மாற்றங்கள், மனித வாழ்வின் மையமான ஓர்
அனுபவம். தவக்காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் ஓர் எண்ணம் – மாற்றம்...
குறிப்பாக, மனமாற்றம்.
மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாகவேண்டும்? என்ற கேள்விக்கு, இன்றைய முதல் வாசகத்தின் அறிமுக
வரிகள் ஓரளவு பதில் தருகின்றன. ஆண்டவருக்கும் ஆபிராமுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு சந்திப்பு, இவ்வாறு அறிமுகமாகிறது. அந்நாள்களில், ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார்" என்றார். (தொடக்க நூல் 15: 5)
ஆண்டவர், ஆபிராமை வெளியே அழைத்து வந்தார்
என்பது மட்டும் கூறப்பட்டுள்ளதே தவிர, எங்கிருந்து அழைத்து வந்தார் என்பது தெளிவாகக்
குறிப்பிடப்படவில்லை. இந்த இறைவாக்கியத்திற்கு முன், ஆபிராம் தன் கூடாரத்தில் தங்கியிருந்ததாக
எந்தக் குறிப்பும் இல்லை. எனவே, இந்த அறிமுக வரிகளை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் சிந்திக்கும்போது, ஆண்டவர், ஆபிராமை, கூடாரத்திலிருந்து வெளியே
அழைத்துவந்தார் என்று எண்ணிப்பார்ப்பதைவிட, ஆபிராமை 'தான்' என்ற குறுகிய நிலையிலிருந்து வெளியே அழைத்துவந்து,
"வானத்தை நிமிர்ந்து பார்க்க"
கட்டளையிட்டார்
என்று எண்ணிப்பார்க்கலாம். ஆண்டவரைச் சந்திக்கவும், அதனால்
உருவாகும் மாற்றங்களுக்கு
வழிவகுக்கவும், 'தான்' என்ற நிலையிலிருந்து முதலில் வெளியேற வேண்டும்.
இது, நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம்.
'தான்' என்ற நிலையிலிருந்து
வெளியேச் செல்வது, கடினமான ஒரு பயணம். ஆபிராமுக்கு இந்த அழைப்பு
தொடர்ந்து வழங்கப்பட்டது. தொடக்க நூலின் 12ம் பிரிவின் ஆரம்பத்தில் ஆபிராம் நமக்கு
அறிமுகமாகிறார். அவர் அறிமுகமாகும் முதல் இறைவாக்கியமே, சவால் நிறைந்த ஓர் அழைப்பாக ஒலிக்கிறது.
தொடக்க
நூல் 12: 1,4
ஆண்டவர்
ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும்
உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்"
என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்... ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது
அவருக்கு வயது எழுபத்தைந்து.
ஆபிராம், தனக்குப் பழக்கமான இடம், உறவு அனைத்தையும் விட்டு, புதியதொரு
வாழ்வைத் துவக்க அழைக்கப்படுகிறார். மாற்றங்களை அதிகம் விரும்பாத 75 வயதில், இது உண்மையிலேயே கடினமானதொரு சவால். ‘ஆபிராம்’ என்ற பெயருடன் துவங்கி, ‘ஆபிரகாம்’ என்ற பெயருக்கு
மாற்றமடைந்தவரின் (தொ.நூ.17:5) வாழ்வில், இறைவன் வழங்கிய சவால்கள் அனைத்தும், தான் என்ற நிலையை, மீண்டும், மீண்டும்
தாண்டி, 'வெளியேச் செல்ல' அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கள் என்பதை உணர்கிறோம். 'ஆபிராம்', 'ஆபிரகாமாக' மாறியது, வெறும் பெயரளவு மாற்றம் அல்ல, ஒரு முழுமையான மனித மாற்றம். மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும்
தவக்காலத்தில், 'தான்' என்ற சிறையிலிருந்து வெளியேறும் முயற்சிகளை
மேற்கொள்கிறோமா என்று ஆய்வு செய்வது நல்லது.
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் தோற்றமாற்றம் பற்றிய நிகழ்வைச் சிந்திக்க நாம்
அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில், இரு அம்சங்களை, சிறிது ஆழமாக
அலசிப் பார்க்கலாம்.
ஒன்று, "அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது
அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய
ஆடையும் வெண்மையாய் மின்னியது”
(லூக்கா 9:29) என்று நற்செய்தியாளர் லூக்கா
குறிப்பிட்டுள்ளார். செபம், ஒருவரது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம்
பலமுறை சிந்தித்திருக்கிறோம்.
பலவேளைகளில், நாம் மேற்கொள்ளும் செபம்
எந்த ஒரு மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்று நாம் மனம் தளர்ந்துபோகிறோம். காசைப் போட்டால்
நாம் விரும்பும் பொருள்களைப் பெறும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் இயந்திரத்தைப் போல,
செபத்தை நாம் உருவகிப்பதால் இந்தப் பிரச்சனை எழுகிறது. கேட்டதைக் கொடுக்கும்
இயந்திரம் அல்ல, செபம்!
உறங்கிக் கொண்டிருந்த அந்த இளையவரின் அறை ஒளி வெள்ளத்தில்
நிறைந்தது. கண் விழித்த அவர் முன் கடவுள் நின்றார். "மகனே, உனக்கு
ஒரு குறிப்பட்ட பணியைத் தருகிறேன். உன் வீட்டுக்கு முன் உள்ள பாறையை முழு வல்லமையோடு
நீ தள்ளவேண்டும்" என்று கடவுள் சொல்லிவிட்டு மறைந்தார்.
அடுத்த நாள் காலை, அந்த இளையவர், வீட்டுக்கு முன் இருந்த
பாறையை, தன் முழு வல்லமையோடு தள்ளினார். அது கொஞ்சமும் அசையவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப்
பின், அடுத்த
நாள் தொடரலாம் என்று விட்டுவிட்டார். அடுத்த நாள், அதற்கடுத்த நாள்
என்று, ஒரு மாதம், இந்த முயற்சியைத் தொடர்ந்தார், அந்த இளையவர். பாறை இருந்த இடத்தை
விட்டு நகர மறுத்தது.
"கடவுளே, ஒரு பயனுமற்ற இந்தப் பணியை ஏன் எனக்குக்
கொடுத்தீர்?" என்று இளைஞர் முறையிட்டார். "மகனே, உன் கரங்கள், உன் தோள், உன் கால்கள்,
உன் உடல் முழுவதையும் ஒரு முறை பார். உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்" என்றார்,
கடவுள். இளையவர், தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டார். அவர் உடல் முழுவதும், ஒவ்வோர்
அங்கமும் வலுவடைந்து, முறுக்கேறி, ஏறக்குறைய அந்த பாறையைப் போல் உறுதியாக
இருந்தது.
"பாறையைத் தள்ளுவதுதான் உனக்குக் கொடுக்கப்பட்ட பணி.
அதை அசைக்கவோ, இடம் பெயர்க்கவோ நான் சொல்லவில்லை. பாறையை இடம் பெயர்ப்பதை
விட, அந்தப்
பாறையைப் போல் நீ மாறவேண்டும் என்பதற்காகவே நான் உனக்கு இந்தப் பணியைக் கொடுத்தேன்"
என்றார் கடவுள்.
‘தள்ளுதல்’ என்று பொருள்படும்
‘PUSH’ என்ற ஆங்கில
சொல்லுக்கு, நான்கு எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும், ஒரு சொல்லின் முதல் எழுத்தாக
எண்ணிப் பார்க்கும்போது, PUSH என்ற சொல்லை, Pray Until Something
Happens என்ற நான்கு சொற்களாக விரிவாக்கலாம். அதாவது, ஏதாவதொன்று
நடக்கும் வரை செபம் செய். 'ஏதாவதொன்று' என்று கூறும்போது, அது, நாம் 'எதிர்பாராததொன்றாக'வும்
இருக்கலாம்.
நாம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிக்கத் துவங்குகிறோம்.
நாம் எதிர்பார்த்த கருத்து, நாம் எதிர்பார்த்த வடிவில் நம்மை வந்து
சேராதபோது,
செபத்தின் மீது நம் நம்பிக்கை குறைகிறது. தர்மம், செபம், நோன்பு
என்ற மூன்று தூண்கள் மீது எழுப்பப்படும் தவக்காலத்தில், செபத்தையும், அது நமக்குள்
உருவாக்கும் மாற்றங்களையும் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களில் தெளிவு பெற,
இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.
இரண்டாவதாக, இயேசு உருமாறியபோது, மோசே, எலியா
இருவருடன் பேசிக் கொண்டிருந்தார் என வாசிக்கிறோம். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தனர்? "மாட்சியுடன்
தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்” (லூக்கா
9:31) என நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒளிவெள்ளம் சூழ்ந்த உன்னதமான
அந்நேரத்தில், பேசுவதற்கு வேறு எந்த விடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? இயேசு, தன் மரணத்தை
முன்னறிவித்ததால், மனமுடைந்து போயிருந்த சீடரின் கலக்கத்தை நீக்கத்தானே இந்த
உருமாற்ற அனுபவம்? இந்நேரத்தில் மீண்டும் அதே மரணம் பற்றி பேச வேண்டுமா? என்ற
கேள்விகள் நமக்குள் எழுகின்றன. நமக்கு ஒரு பாடம் இங்கே உண்டு.
புகழின் உச்சியில், மேகத்தில் மிதந்து வரும்போது, நம்மில்
பலருக்கு, சூழ்நிலை மறந்துபோகும். தலைகனம் கூடிவிடும். அந்த கனம் தாங்காமல், நாம் மிதந்துவரும்
மேகம் கிழிந்துபோகும், பலவந்தமாக பூமியில் விழவேண்டி வரும். அதற்கு மாறாக, என்னதான்
புகழும், பெருமையும், நம்மை உச்சியில் ஏற்றி வைத்தாலும், ஏறிய ஏணியை மறக்கக்கூடாது.
எவ்விடத்திலிருந்து ஏறிவந்தோம் என்பதையும் மறக்கக்கூடாது. புகழின் உச்சியில் இருக்கும்போது,
பல்லக்கில் பவனி வருவதுபோல் உணர்ந்தாலும், அந்த பல்லக்கைத்
தாங்கிவரும் பிறரை, இதுவரை நம்மைத் தாங்கிவந்த மற்றவரை, மறக்காமல் வாழ்வது நல்லது.
இந்தப் புகழ் உச்சி, பயணத்தின் முடிவல்ல, நாம் இன்னும் போகவேண்டிய தூரம் உள்ளது
என்பதையும் மறக்கக்கூடாது. உருமாறிய இயேசு, உள்ளுணர்த்தும் பாடங்கள் இவைதான்.
கண்ணைப் பறிக்கும் ஒளியுடன், இயேசு உருமாறிய வேளையிலும், அவரது வாழ்வின்
குறிக்கோளை, அவர் மேற்கொள்ள வேண்டிய சிலுவை மரணத்தை மறக்கவில்லை.
இறை அனுபவம் எவ்வளவுதான் அற்புதமானதாக இருந்தாலும், அந்த அனுபவத்திலேயே முழு வாழ்வையும் கழித்துவிட முடியாது என்பதை,
இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வின் கடைசிப்பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது,
"நாம் இங்கேயே தங்கி விடலாம்" (லூக்கா 9:33) என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு, "என்
அன்பு மகன் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" (லூக்கா 9:35) என்று இறைவன் பதில் சொன்னார். அவ்விதம் செவிசாய்க்கும்போது, இறைமகன்
இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள், மலையை
விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுவார்.
கடவுள்
அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான்.
ஆனால், கோவில்களிலேயே தங்கிவிட முடியாது.
தங்கிவிடக் கூடாது. இறைவனைக் கண்ட, இறைவனைத் தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்லவேண்டும்.
அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக்
காட்டவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
“Be the change that you wish to see in the world.” அதாவது, "இவ்வுலகில் நீ காண விழையும்
மாற்றமாக,
நீ முதலில் மாறு"
என்று சொன்னவர், மகாத்மா
காந்தி. ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாக வேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால் அனைத்தும்
மாறும்,
இறையன்பு வெறும் உணர்வாக
இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாறவேண்டும் என்று, இயேசுவின் தோற்ற மாற்றம் நமக்குச்
சொல்லித்தரும் பல பாடங்களை இத்தவக் காலத்தில் நாம் கற்றுக்கொள்ள முயல்வோம்.
No comments:
Post a Comment