22 November, 2019

The Crucified King! அறையப்பட்ட அரசர்!


The Church of Christ the King, 
Loyola College, Chennai

Feast of Christ the King

November 23, Saturday, was the memorial of a young priest who was shot to death for the sake of Christ the King. Just before he was shot, he shouted out: “Long live Christ the King!” He was the Mexican Jesuit Priest, Miguel Augustin Pro. On November 23, 1927, Fr Pro was condemned to death without a proper trial. The President of Mexico, Plutarco Calles, wanted the execution of Fr Pro to be photographed and filmed. Hence, he had invited the media personnel to the place of execution. There are two versions for this decision of Mr Calles. One version says that the President had mistakenly assumed that Fr Pro, on reaching the place of execution and seeing the firing squad, would give up his faith and beg for mercy. Mr Calles wanted that moment of defeat to be recorded for posterity! The other version says, that the graphic details of Fr Pro’s execution, when published next day on the front page of every newspaper, would deter the other Christian ‘rebels’ from pursuing their rebellion against the government.
In any case, neither of these wishes of President Calles was fulfilled. Fr Pro, on reaching the place of execution, refused the blindfold offered to him. He simply asked for some moments of prayer as his final wish. Then, he kissed the crucifix which he was carrying. After this, he stretched out his hands in the form of a cross, his right hand holding the crucifix and the left holding the rosary. Then, Fr Miguel Augustin Pro raised his voice and said: “Viva Cristo Rey!” - “Long Live Christ the King!” The shots rang out and he collapsed on the ground. Since Fr Pro did not die of these shots, another man came close to him and shot him at point blank. Thus, Fr Pro met his glorious end, shattering the petty dream of President Calles that he would give up his faith and beg for mercy.
Since the whole execution took place in the full glare of the media, the next day all the papers carried this as the front page news with pictures of Fr Pro standing as the Crucified Christ. This, once again, did not deter the other rebels, but only inspired them to carry on their struggle against the repressive government. Many more martyrs of Mexico walked to their execution, holding the pictures of Fr Miguel Pro’s execution!

Bl. Miguel Pro, standing as the Crucified Christ and dying with the declaration that this Christ was the universal King, brings us to the Gospel scene given to us on the Feast of Christ the King. The combination of the Crucified Christ and Christ the King also brings to mind the Church of Christ the King built in Loyola College, Chennai.
The larger-than-life-size figure of Christ, standing above the main altar, clothed and crowned as a king, is very impressive. A life-sized statue of the crucified Christ is placed on the left side of the altar at ground level, with bare minimum clothes and a crown of thorns. I have seen many devotees standing at the foot of the cross, touching the feet of the crucified Christ and praying.
While Christ the Crucified is so accessible, Christ the King stands beyond easy reach. There is, perhaps, a lesson to be learnt in how these two statues are placed. I have an interesting fantasy: Suppose I take Jesus to Loyola Church and show him both these statues and ask him which one of those two statues would be his favourite… or which one of them would truly represent the Kingship of Christ… he would simply smile at me and ask, “Have you read today’s Gospel?”

Yes, dear friends, not only the Gospel for this year (Year C), but the Gospel passages prescribed for the Feast of Christ the King in all the three cycles - A, B, and C - give us a clear picture of what this feast is all about. Today’s gospel is a scene taken from Calvary (Luke 23: 35-43). Last year’s Gospel was the trial scene of Jesus with Pilate (John 18: 33-37) and next year’s Gospel talks of the Last Judgement (Matthew 25: 31-46). In all the three Gospels, there is hardly a hint of pomp and glory. That is the core of this Feast.

All through the life of Christ he avoided, like plague, the idea of being made a king. Right now five instances flash across my mind. The first one is from Matthew. Soon after Jesus was born, the wise men from the East came looking for the ‘King’. Although the star was leading them, their own pre-conceived notions of a king must have taken them to Jerusalem and to Herod’s palace. The capital city and the palace of the king… where else can one look for a king? They asked Herod: “Where is the one who has been born king of the Jews? We saw his star when it rose and have come to worship him.” (Matthew 2: 2) Their innocent question set in motion the massacre of the Holy Innocents.
The second instance of Christ facing the danger of becoming a king is reported by John. Jesus had fed thousands of people through a miracle. After the people saw the sign Jesus performed, they began to say, “Surely this is the Prophet who is to come into the world.” Jesus, knowing that they intended to come and make him king by force, withdrew again to a mountain by himself. (John 6: 14-15)
The third occasion was on the streets of Jerusalem as recorded in all the four Gospels. The next day the great crowd that had come for the festival, heard that Jesus was on his way to Jerusalem. They took palm branches and went out to meet him, shouting, “Hosanna! Blessed is he who comes in the name of the Lord! Blessed is the king of Israel!” (John 12: 12-13)

Both in the second as well as the third instances, Jesus knew full well that his people were looking for quick solutions to their problems and hence were swayed by the frenzy of the moment. Such ‘loyalty’, Jesus knew, would vanish at the first sign of a problem. It came within days of the glorious entry of Jesus into Jerusalem. The very same streets which resounded with ‘Hosanna’, either fell silent or turned hostile with the chant of ‘crucify him’, prompted by the Pharisees and the religious leaders. Talk of crowd psychology, where ‘loyalty’ is wafer thin!

The fourth instance of Jesus facing the idea of kingship was in front of Pilate. We reflected on this passage last year. “You are a king, then!” said Pilate. Jesus answered, “You say that I am a king. In fact, the reason I was born and came into the world is to testify to the truth. Everyone on the side of truth listens to me.” (John 18: 37) Jesus was trying to tell Pilate how he was mistaken in calling him a king. But Pilate was too pre-occupied with how he should please his emperor, Caesar.

The fifth instance is given in today’s Gospel (Luke 23: 35-43). Jesus was hanging on the cross. The inscription over his head read: Jesus of Nazareth, King of the Jews! What an irony! What Jesus was running away from, all his life, is now nailed along with him on the cross. On Calvary, that day, his kingship was ridiculed by the Roman soldiers. These soldiers had a clear idea of a king or an emperor. They had served quite a few of them. This man on the cross? A king? They must have laughed their heart out, if they had one.
In the midst of such noisy ridicules and taunts, came the feeble voice of one of the crucified persons with a petition to the King: “Jesus, remember me when you come into your kingdom.” (Luke 23: 42) When those around Jesus could not even recognise a human being in the form of the crucified one, how come this man saw a King?

We have heard from history that some of the kings and leaders, by the dignity they showed in times of great trials, even as they walked to their gallows, have earned the respect of their worst enemies. Such was their nobility! They were truly kings! The magnanimity shown by Jesus on the cross must have influenced the ‘good thief’ to submit such a beautiful petition to the King.

In the first four instances of the Gospels, we hardly see Jesus responding to any of them (except in the case of Pilate… and since Pilate was scared of facing the ‘truth’, Jesus could not make any honest impression on him!). In the last instance, on Calvary, Jesus responded to the ‘good thief’… and, what a response! Jesus answered him, “Truly I tell you, today you will be with me in paradise.” (Luke 23: 43) Jesus exercised his regal power to assure the criminal of eternal redemption. When death beckons people, quite many of them become enlightened!

Here is a lovely anecdote on how a dying person gets enlightened by a movie:
The King of Kings is a silent film directed by Cecil B.De Mille in 1927.  It is a religious movie about the last weeks of Jesus on earth. It was a production acclaimed by world-famed scholars, the press and the public in the U. S. and abroad, as the most ambitious presentation of the final years of the life of Jesus ever pictured on the screen. It was seen by over a billion people all over the world. De Mille claimed that the most important tribute to the movie he had ever received came from a woman who had only a few days to live. Her nurse wheeled her to a hall in the hospital to see the movie. After viewing the whole movie she wrote to the producer De Mille: “Thank you sir, thank you for your King of Kings. It has changed my expected death from a terror to a glorious anticipation.”
This dying woman shared the feelings of the good thief who heard the promise of Jesus: “Today you will be with me in paradise.” Both of them were suffering, both expected death and both received new hope from the dying King of kings.
The criminal gives us a lesson in how to look for Christ the King and his Kingdom in the most ‘un-kingly’ circumstances. We pray that God, the Eternal King, helps us become humble enough to learn the lessons taught by the criminal.

Bl.Miguel Agustín Pro

கிறிஸ்து அரசர் திருநாள்

நவம்பர் 23, இச்சனிக்கிழமை, ‘கிறிஸ்து அரசர் வாழ்க என்று சொல்லியபடி, தன் உயிரை வழங்கிய ஓர் இளம் அருள் பணியாளரின் நினைவைக் கொண்டாடினோம். 1927ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி. மெக்சிகோ நாட்டில் ஓர் இளம் இயேசு சபை அருள் பணியாளருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதுவும், ஒரு பொதுவான இடத்தில், காவல் துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்று மெக்சிகோ அரசுத் தலைவர் Plutarco Calles ஆணையிட்டார். காவல் துறையினர் அவரைச் சுடுவதற்கு துப்பாக்கிகளை உயர்த்தியதும்,  அந்த இளம் அருள் பணியாளர் அச்சமுற்று, தன் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டு, மன்னிப்பு கேட்பார் என்று அரசுத் தலைவர் எதிர்பார்த்தார். இளம் அருள் பணியாளர் மன்னிப்பு வேண்டுவதை செய்தித்தாள் நிருபர்கள் காணவேண்டும் என்று எண்ணி, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு ஊடகங்களைச் சேர்ந்த பலரை அரசுத்தலைவர் அழைத்திருந்தார்.

இளம் அருள் பணியாளரை ஒரு சுவருக்கருகே நிறுத்தினர் காவல் துறையினர். அவர்களில் ஒருவர் அவர் கண்களைக் கட்டவந்தபோது, அவர் அதை மறுத்தார். அவருடைய இறுதி ஆவல் என்ன என்று கேட்ட காவல் துறை அதிகாரியிடம், தான் சிறிது நேரம் செபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, செபித்தார். தான் கொண்டுவந்திருந்த சிலுவையை எடுத்து, ஆழ்ந்த அன்புடன் அதை முத்தமிட்டார். பின்னர், அந்தச் சிலுவையைத் தன் வலது கரத்திலும், செபமாலையை இடது கரத்திலும் ஏந்தியபடி, இரு கரங்களையும் விரித்து நின்று, "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்று உரத்த குரலில் முழங்கினார். அந்நேரம், காவல் துறையினரின் குண்டுகள் அவர் மீது பாய அந்த இளம் இயேசு சபை அருள் பணியாளர் தன் உயிரை கிறிஸ்து அரசரின் பாதங்களில் அர்ப்பணம் செய்தார். 36 வயது நிறைந்த அந்த இளம் இயேசு சபை அருள் பணியாளரின் பெயர், மிகுவேல் அகஸ்டின் ப்ரோ (José Ramón Miguel Agustín Pro Juárez).

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மெக்சிகோ நாட்டில் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில், "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்ற அறைகூவலுடன் 'Cristeros' என்ற குழுவினர் போராடிவந்தனர். இக்குழுவின் ஒரு முக்கிய வழிகாட்டியாகச் செயல்பட்டவர், மிகுவேல் ப்ரோ. கிறிஸ்துவின் அரசு மெக்சிகோவில் மீண்டும் தழைத்து வளர, தன்னையே ஒரு விதையாக பூமியில் புதைத்தார், அருளாளரான மிகுவேல் ப்ரோ.
இவரைப் போல பல்லாயிரம் வீர உள்ளங்கள் கிறிஸ்து அரசருக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளனர். நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டிலும் கிறிஸ்தவர்கள் பலர், தங்கள் மதநம்பிக்கைக்காக கொல்லப்படுகின்றனர். இந்த ஞாயிறு நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் திருநாளன்று இந்த வீர உள்ளங்களை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.

நவம்பர் 24, இஞ்ஞாயிறன்று, சென்னை மயிலை உயர் மறைமாவட்டம், சென்னையில் உள்ள லொயோலா கல்லூரியில், நற்கருணை மாநாட்டைக் கொண்டாடுகிறது. கிறிஸ்து அரசர் திருநாளையும், லொயோலா கல்லூரியையும் இணைத்து சிந்திக்கும்போது, இக்கல்லூரி வளாகத்தின் நடுவில் உயர்ந்து நிற்கும் கிறிஸ்து அரசர் ஆலயம் நம் மனதில் தோன்றுகிறது. அந்த ஆலயத்தில், பீடத்திற்கு மேல், கிறிஸ்து அரசரின் திருஉருவம், தன் இரு கரங்களையும் விரித்தபடியே நிற்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் இடது பக்கம், சிலுவையில் இரு கரங்களும் அறையப்பட்டுத் தொங்கும் இயேசுவின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவம், தரைமட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதால், பலர் அந்த உருவத்தின் பாதங்களைத்  தொட்டபடி, கண்களை மூடி செபிப்பதைக் காணலாம்.

கிறிஸ்து அரசரின் உருவம், எளிதில் எட்டமுடியாத உயரத்தில் இருப்பதும், சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் உருவம், மக்களின் கரங்கள் பட்டுத் தேய்ந்திருப்பதும், நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள, இஞ்ஞாயிறு கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் திருவிழா நம்மை அழைக்கிறது. கல்லூரியில் உள்ள அந்தக் கோவிலுக்கு இயேசுவை அழைத்துச் சென்று, கிறிஸ்து அரசர் உருவம், சிலுவையில் தொங்கும் உருவம் இரண்டையும் காட்டி, அவ்விரு உருவங்களில் அவருக்கு மிகவும் பிடித்த உருவம், அல்லது அவரது அரசத் தன்மையைக் காட்டும் உருவம் எது என்று கேட்டால், நம் கேள்விக்குரிய பதில், இன்றைய நற்செய்தியில் உள்ளது என்று இயேசு கூறுவார்.

இன்றைய நற்செய்தி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கென திருஅவை தெரிவு செய்துள்ள நற்செய்தியை வாசிக்கும்போது, இவ்விழாவின் மையப் பொருளை, ‘கிறிஸ்து அரசர் என்ற பட்டத்தின் பொருளை அறிந்துகொள்ள முடியும். இன்றைய நற்செய்தியில் (லூக்கா 23: 35-43) தரப்பட்டுள்ளது, கல்வாரியில் நிகழ்ந்த காட்சி. சென்ற ஆண்டு, இவ்விழாவுக்குத் தரப்பட்ட நற்செய்தி, பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. (யோவான் 18: 33-37) அடுத்த ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி, இறுதித் தீர்வையன்று நடைபெறும் காட்சி. (மத்தேயு 25: 31-46) இம்மூன்று நற்செய்திகளையும் வாசிக்கும்போது, கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பதன் உட்பொருளை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர். நற்செய்தியில், இயேசுவை, அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள், கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து வந்த ஞானிகள் செய்த ஒரே தவறு என்ன? அவர்கள் தேடி வந்த அரசர், உலக அரசரைப் போல் அரண்மனையில் இருப்பார் என்று தப்புக் கணக்கு போட்டனர். எனவே, ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்என்றார்கள். (மத்தேயு 2: 2) கள்ளம் கபடின்றி அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி, பல நூறு கள்ளம் கபடற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்க, காரணமானது.

இரண்டாவது நிகழ்வு, யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இயேசு அப்பத்தைப் பலுகச்செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவான் 6 : 14-15)

மூன்றாவது நிகழ்வு, எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12-13) (மேலும் காண்க: லூக். 19: 38; மாற். 11: 9-10; மத். 21: 9)
வயிறார உண்டதால் மக்கள் நடுவே எழுந்த ஆர்வம், இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களை மீட்க ஒருவர் வரமாட்டாரா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில், ஆரவாரமாய், ஓசன்னா அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வமோ, ஆரவாரமோ நிலைத்திருக்காது என்பது, தொடர்ந்த சில நாட்களிலேயே நிரூபணமானது. இயேசுவுக்கு அரச மரியாதை கொடுத்து வாழ்த்தியக் கூட்டம், அதே வீதிகளில், அவர் சிலுவை சுமந்து சென்றபோது, பயந்து ஒதுங்கியது, அல்லது, இயேசுவின் எதிரணியாகத் திரண்ட கூட்டத்தில் சேர்ந்துவிட்டது.

இயேசுவை அரசர் என்று கூறும் நான்காவது நிகழ்வு, பிலாத்துவின் அரண்மனையில் நடந்தது. இயேசுவை அரசர் என்று, பிறர் சொல்லக்கேட்டு பயம்கொண்ட பிலாத்து, இயேசுவிடமே, நீர் அரசரா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டுபிடிக்கவும் பிலாத்து பயந்தார். இந்த நிகழ்வை, சென்ற ஆண்டு, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, நற்செய்தியின் வழி சிந்தித்தோம். (யோவான் 18 : 37)

அரசர் என்று இயேசு அழைக்கப்பட்ட ஐந்தாவது நிகழ்வு, கல்வாரியில் நடந்தது. இது, இன்றைய நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்கமுடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றன.
உரோமைய வீரர்கள், பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்குப் பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில், குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு, ஒரு பரிதாபமான, போலி அரசனாகத் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில், அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்" என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஏளனக் குரல்களுக்கு நேர்மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல், இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும். (லூக்கா 23: 42) என்று, அந்தக் குற்றவாளியிடமிருந்து விண்ணப்பம் ஒன்று எழுகிறது. மனிதன் என்று கணிக்கமுடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி. அவர் இயேசுவிடம் கண்ட அரசத்தன்மைதான் என்ன?

உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டபோது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி, ஆகியவை, எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்டவைத்தது என்று, வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை, இயேசுவிடம் கண்டார், இந்தக் குற்றவாளி. அவர் கண்களில், இயேசு, அறையுண்டிருந்த சிலுவை, ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. அவர் தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, அந்த அரசரிடம், தன் விண்ணப்பத்தை வைத்தார், அந்தக் குற்றவாளி.

நாம் சிந்தித்த முதல் நான்கு நிகழ்வுகளில், இயேசு தவறான முறையில் "அரசன்" என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டுகொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததால், அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்(லூக்கா 23: 43) என்று உறுதியளிக்கிறார், இயேசு.

1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், "The King of Kings". இந்த மௌனப்படம், இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம், பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர், Cecil B.De Mille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண்.
ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் Cecil அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார். The King of Kings திரைப்படத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என் மனதில், இப்போது, ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு வந்துள்ளது" என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார். அந்தப் பெண் உணர்ந்த எதிர்பார்ப்பு, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் மனதிலும் எழுந்தது.

சிலுவை மரணங்கள் கொடூரமானவை. உரோமையர்கள் கண்டு பிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக விளங்கியது, சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதை பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருந்ததால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு, ஆணிகளால் அறையப்பட்ட கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி, விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் அவர்கள் மரண வேதனை அனுபவித்தார்கள்.
இந்த வேதனையின் உச்சியில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம், வெறுப்புடன் வெளி வரும். தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்என்று வழங்கிய வாக்குறுதி, அந்தக் குற்றவாளிக்கு மட்டுமல்ல, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கோடான கோடி மனிதர்களுக்கு, நம்பிக்கை வழங்கியுள்ளது. அந்த நம்பிக்கையை, நாம், கிறிஸ்து அரசர் திருவிழாவில் கொண்டாடுகிறோம்.

சிலுவை என்ற சிம்மாசனத்தில் அறையப்பட்டிருந்த அரசர் இயேசு, தன் இறுதி மூச்சுவரை, தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு மன்னிப்பு அளித்து, தன் தாயை இவ்வுலகிற்கு வழங்கி, குற்றவாளிக்கு நித்திய மகிழ்வைத் தருவதாக உறுதியளித்து, தன் உயிரை வழங்கினார். இத்தகைய ஓர் அரசரை ஒருநாள் விழாவின் வழியே கொண்டாடுவதற்குப் பதில், வாழ்நாளெல்லாம் பின்பற்றுவதற்கு ஏற்ற துணிவை நாம் பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.


2 comments:

  1. நல்ல பதிவு
    கிறிஸ்து அரசர் ஆடம்பர அரசர் அல்ல எளிமை,இரக்கத்தின் அரசர் பாவவியையும் ஏற்கும் அரசர் என அறிவிக்ககும் விழாவாக கொண்டாட தூண்டும் செய்தி
    தம்பி அம்புரோஸ்.

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தம்பி அம்புரோஸ்,
      உங்கள் கருத்துப் பதிவுக்கு மிக்க நன்றி.
      ஜெரி

      Delete