30 July, 2021

Tragic romance with nuclear energy அணுசக்தியுடன் ஆபத்தான மோகம்

 
Dangers of nuclear plants and nuclear waste

18th Sunday in Ordinary Time

Having suffered from the depressing, repetitive news on COVID-19 for the past 18 months, our minds breathed a sigh of relief on July 23, when Olympic Games began in Tokyo, Japan. This relief seems to be short-lived, as we step into August. Every year, at the beginning of the month of August, haunting memories of two more cities of Japan - Hiroshima and Nagasaki - flood our memory. The gory details of this human massacre are well-known. So, let us not go over those statistics. They can only feed our curiosity. Has Hiroshima and Nagasaki become only museum pieces to be visited once a year or, are they schools where we can learn a lesson or two?
I am afraid that even Japan is treating this tragedy as a ‘treasured museum piece’. Why do I say this? If Japan had treated Hiroshima and Nagasaki as schools, then the ‘Fukushima Daiichi nuclear disaster’ would not have happened in Japan (March 2011). After this disaster, Japan began to close down its nuclear power plants one by one. But this period of ‘enlightenment’ ended soon. Unfortunately, Japan has reopened its nuclear power plants once again!

Sadly, Japan, as well as the whole world are madly… MADLY… in love with nuclear energy still. On a day like this, we need to make a serious assessment of our tragic romance with nuclear energy. The cenotaph at the Hiroshima Peace Park is inscribed with an ambiguous sentence: "Let all the souls here rest in peace; For we shall not repeat the evil" It is true that after Hiroshima and Nagasaki, this evil has not been repeated, namely, atom bombs have not been used on human beings directly. But, with innumerable nuclear testing done, deep inside the earth’s surface and in the sea, the evil of ‘atomic energy’ is unleashed on planet earth and the long lasting effects of the nuclear radiation is borne by unsuspecting, simple folks all over the world. From Hiroshima to Fukushima nuclear mistakes have been, and, still being repeated – all over the world! This begins our reflections…

Why are mistakes repeated? There could be hundreds of reasons. The first and the most obvious reason is this: When mistakes are covered up with falsehood and made to look like the right thing, they tend to be repeated. The mistake of the U.S. government, to attack Japan with atomic bombs, was well covered up. Delayed information, distorted information, downright lies accompanied the dropping of the atomic bombs.
When the atom bomb was dropped on Hiroshima, it was 8.15 a.m. in Japan. It was still night in the U.S. and the people were asleep. One can see that this nation is still struggling to wake up from this sleep and find out the real truth.
The stand taken by the Christians in the U.S. soon after the bombing of Hiroshima and Nagasaki, was remarkable. In 1946, a report by the Federal Council of Churches entitled Atomic Warfare and the Christian Faith, includes the following passage: "As American Christians, we are deeply penitent for the irresponsible use already made of the atomic bomb. We are agreed that, whatever be one's judgment of the war in principle, the surprise bombings of Hiroshima and Nagasaki are morally indefensible." (Wikipedia)

When mistakes are not covered up with lies, we can surely learn from those mistakes, since truth will always set us free. But, unfortunately, every government in the world is dishing out lies as far as nuclear warheads are concerned. It is said that the nuclear arsenal piled up by various countries in the world (especially the U.S. and Russia) are enough to destroy planet earth five times over. But, this truth will never be revealed, since nuclear arsenal is ‘classified information’ all over the world!

As if the threat of nuclear warheads is not enough, every country is moving in the direction of building more and more nuclear plants. On this front as well, lots of lies have been told about the safety of a nuclear plant and about the different accidents that have happened in nuclear plants. Globally, there have been at least 99 (civilian and military) recorded nuclear power plant accidents from 1952 to 2009 that either resulted in the loss of human life and/or property damage. Out of these 99, only one had been talked about and that was Chernobyl in Russia (1986). After 2009, Fukushima is a well-known nuclear plant accident (2011). The rest have been kept ‘top-secret’. Nuclear energy can flourish only on the seedbed of lies!

Why are we so madly in love with nuclear energy? Is there no other alternative? I am not a scientist and hence my answer to this question cannot be scientific. But I am a believer. My belief says that our world can survive, in fact, flourish in safer environment if we depend on other natural sources of energy – wind, water, sunlight… My belief says that the universe is designed in such a way that it can sustain itself when we are able to tap the sources appropriately. The catch words are: tap and appropriately… Unfortunately, our present generation has not tapped natural sources of energy but has exploited them indiscriminately!

Our natural sources of energy can surely sustain the whole of humanity, provided we decide to satisfy our needs and not our greed - our unbridled, unlimited desires of accumulation. The powerful words of Mahatma Gandhi seem ever relevant: “The world has enough for everyone's need, but not enough for everyone's greed.” Our madness of accumulation and pampering of self above everything else has created more demands on our resources. Since nature could not satisfy our mad rush for more and MORE… we looked for artificial sources of energy. Look, where we have landed up… We have landed on a planet that is waiting to explode any time.

The proposal of ‘tapping our natural resources appropriately’, may sound too naïve for us living in the 21st Century. This is due to the ‘indoctrination’ we have been subjected to which makes us believe that relying on our natural resources, will take us back to the ‘stone-age’! On the other hand, the ‘rapid progress’ that exploits nature and environment may soon take us to the ‘ice-age’! We are reminded of the famous quote attributed to Albert Einstein that alludes to our distorted progress. “I do not know with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones.” - Albert Einstein.

If we wish to avoid the total catastrophe of our planet earth, what do we do? God the Father has a simple solution to offer in the first reading today: Then the LORD said to Moses, “Behold, I will rain bread from heaven for you; and the people shall go out and gather a day's portion every day, that I may prove them, whether they will walk in my law or not.” (Exodus 16: 4)
The people were asked to gather only what is needed for the day and not more. Only on the sixth day they were allowed to gather for two days. We see later in this chapter that there were people who did not obey this instruction and gathered more than what they really needed. Greed took upper hand over Need. These were the ancestors of some of the world leaders today who have accumulated mind boggling amount of wealth. We are reminded of a president’s wife who had accumulated more than 1000 pairs of footwear, a chief minister who had more than 1000 dresses, most of which she did not get to wear in her life time, a president who had made his bath tub and toilet seat in pure gold… this list is endless!  Will they carry their ‘collections’ beyond the grave?

And the people of Israel did so; they gathered, some more, some less... He that gathered much had nothing over, and he that gathered little had no lack; each gathered according to what he could eat. And Moses said to them, "Let no man leave any of it till the morning." But they did not listen to Moses; some left part of it till the morning, and it bred worms and became foul; and Moses was angry with them. Morning by morning they gathered it, each as much as he could eat; but when the sun grew hot, it melted. (Ex. 16: 17-21)

The insatiable greed to accumulate has its side-effects, namely, finding short-cuts and least-resistant-routes to satisfy this greed. Today’s Gospel talks of people who were seeking short-cuts. The people who went searching for Jesus were greedy to get ‘free-meal’ every day. Jesus does not mince words in pointing out this greed: “Truly, truly, I say to you, you seek me, not because you saw signs, but because you ate your fill of the loaves.” (John 6: 26)

In the gospel today Jesus gives another simple solution in the very next line: “Do not labour for the food which perishes, but for the food which endures to eternal life, which the Son of man will give to you; for on him has God the Father set his seal.” (John 6: 27)

The solutions given in both these readings, sound extremely simple. We can give them a try. Otherwise, we need to build more temples (nuclear plants) where more and more people will be sacrificed on the altar of nuclear energy!

Feed the NEED not the GREED

பொதுக்காலம் 18ம் ஞாயிறு

கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக, நம்மைக் கட்டிப்போட்டிருக்கும் கோவிட் பெருந்தொற்று என்ற வேதனையிலிருந்து, நம் கவனம் சற்று விடுபட்டு, ஜூலை 23ம் தேதி முதல், ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிகழ்ந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்மீது திரும்பியுள்ளது. இத்தகையச் சூழலில், இன்று நாம், ஆகஸ்ட் மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம். ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானதும், ஜப்பான் நாட்டின் வேறு இரு நகரங்களில் நிகழ்ந்தவை, நம்மை, ஒவ்வோர் ஆண்டும், வேதனையில் ஆழ்த்துகின்றன.
ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாள்கள், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, அணுகுண்டுகளை வீசி, பல்லாயிரம் அப்பாவி மக்களை கொன்றுகுவித்த நினைவுகள், இன்னும் மனித சமுதாயத்தின் மனசாட்சியைக் காயப்படுத்திவருகின்றன. இக்கொடுமையான தாக்குதல்களில் இறந்தோர் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள ஹிரோஷிமா அமைதிப்பூங்காவில், "Let all the souls here rest in peace; for we shall not repeat the evil" அதாவது, "இங்குள்ள அனைத்து ஆன்மாக்களும் அமைதியில் இளைப்பாறட்டும்; ஏனெனில், தீமையை மீண்டும் செய்யமாட்டோம்" என்ற சொற்கள், கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

1945ம் ஆண்டுக்குப்பின், அணுகுண்டுகளை வீசி, மக்களை நேரடியாகக் கொல்லும் தீமை நடைபெறவில்லை, உண்மைதான். ஆனால், அணுஆயுத சோதனைகள், பூமிக்கடியிலும், கடலுக்கடியிலும் நடத்தப்பட்டு, அதன் ஆபத்தான விளைவுகளை, பூமித்தாயும், அப்பாவி மனிதர்களும் இன்றும் சந்தித்துவருகின்றனர். அணுசக்தியை, ஆயுதமாக மாற்றி, அழிவுக்குப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தச் சக்தியை, மின்சக்தியாக மாற்றும் அணு உலைகள், உலகின் பல நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. இங்கும், அழிவுகள் தொடர்கின்றன.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு (1945) அழிவுகள், இரஷ்யாவின் செர்னோபிள், (1986), மற்றும், ஜப்பானின் புக்குஷிமா (2011) அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துகள், ஆகியவற்றைக் கண்டபின்னரும், உலக அரசுகள், அணுசக்தியை இன்னும் நம்பியுள்ளனவே என்ற கவலையை, இறைவனிடம் ஏந்திவருகிறோம், இந்த ஞாயிறு வழிபாட்டில்.
அணுசக்தியையும், அணுஉலைகளையும் பற்றிய சிந்தனைகள், ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு தேவையா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை, இன்று, பெருமளவில் ஆக்ரமித்து, அதேவேளையில், அச்சுறுத்திவரும் ஓர் ஆபத்தை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், விவிலியத்தின் துணைகொண்டு சிந்திப்பதற்கு, ஞாயிறு வழிபாடு நல்லதொரு தருணம்.

அணுசக்தியைப் பற்றிய இரு எண்ணங்களை நாம் இன்று புரிந்துகொள்வது, பயனுள்ள முயற்சியாக அமையும். அணுசக்தியைப் பாதுகாக்க, அரசுகள், மக்களிடம் பொய்களைக் கூறி ஏமாற்றுகின்றன என்பது, முதல் எண்ணம். அணுசக்தியின் ஆபத்துக்களைப் பற்றிய உண்மைகள், மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, வரலாற்று சான்றுகள் பல உள்ளன. ஹிரோஷிமா, மற்றும், நாகசாகியில், அமெரிக்க அரசு, அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள், சங்கடமான கேள்விகளை எழுப்பினர். அக்கேள்விகளுக்கு விடையளிக்கும்வண்ணம், இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர, அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று, James Conant, Harvey Bundy, Henry Stimson என்ற மூவர், அரசின் சார்பில் பேசி, மக்களை நம்பச்செய்தனர். ஆயினும், அன்றுமுதல், இன்றுவரை, மனசாட்சியுள்ள அமெரிக்க மக்கள், அந்தப் பொய்யை, சீரணிக்கமுடியாமல் தவிக்கின்றனர்.

அணுகுண்டு தாக்குதல்களைப்பற்றி பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் உள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் அரசுகள் பொய்சொல்லி வருகின்றன. உலகில் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகை, ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கமுடியும் என்று கூறப்படுகிறது.
உலகை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள், அணு உலைகளைக் கட்டிவருகின்றன. அரசுகள் அமைத்துவரும் அணு உலைகளைப் பற்றியும், இதுவரை, அணு உலைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களைப் பற்றியும் பல பொய்களை, அரசுகள், தொடர்ந்து பரப்பிவருகின்றன.
தமிழகத்தின் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியை உலகில் காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும்.

இவ்வளவு ஆபத்தான அணுசக்தி நமக்குத் தேவைதானா? மாற்று சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்விகள், நமது இரண்டாவது எண்ணத்தை ஆரம்பித்து வைக்கின்றன. அணுசக்திக்கு மாற்றாக, இயற்கை வழங்கும் நீர், காற்று, சூரியஒளி ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்படும் சக்திகளை நாம் பயன்படுத்தமுடியும். அவ்விதம் நாம் உருவாக்கும் சக்திகளைக்கொண்டு, நமது அளவானத் தேவைகளை (need), நாம் நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், அளவின்றி வளர்ந்திருக்கும் நமது பேராசைகளை (greed) நிறைவுசெய்யும் ஆற்றல், இந்தச் இயற்கைச் சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.
பேராசைகளை நீக்கிவிட்டு, தேவைகளை மட்டும் நிறைவுசெய்யும் எளிமையான வாழ்வை ஒவ்வொருவரும் பின்பற்றினால், நமக்கு, இத்தனை பொருட்கள் தேவையில்லை. தேவையற்ற அந்தப் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை. அத்தொழிற்சாலைகளை, இரவுபகலாய் இயக்கும் அணுசக்தியும் தேவையில்லை.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், இயற்கைச் சக்திகளை நம்பினால், கற்காலத்திற்குத் திரும்பவேண்டியிருக்கும் என்ற எண்ணம், நம்மில் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளதால், இயற்கைச் சக்திகளைக் கொண்டு வாழமுடியும் என்ற எண்ணத்தை, எள்ளி நகையாடலாம். ஆனால், அதேவேளை, நம்மில் பெருகியிருக்கும் பேராசைகள், நம்மை கற்காலத்திற்கு இழுத்துச்செல்லும் என்று, ஓர் அறிவியல் மேதை வழங்கியிருக்கும் எச்சரிக்கையையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
அணுசக்தியை, ஆயுதங்களாகப் பயன்படுத்துவதற்கு, ஆரம்பத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்துவந்த, அறிவியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள், விடுத்த எச்சரிக்கை இதோ: I do not know with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones.” - Albert Einstein "மூன்றாம் உலகப்போரில் எவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான்காம் உலகப்போரில், கழிகளும் கற்களும் பயன்படுத்தப்படும்."

அணு உலைகள் என்ற கோவில்களைக் கட்டி, அணுசக்தியை வழிபடும் நமது பேராசை வெறிகளை நீக்கிவிட்டு, தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளும் எளிய வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளமுடியும் என்ற கனவை, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நமக்குள் விதைக்கின்றன. எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் பசியை மையப்படுத்தி முதல் வாசகமும், நற்செய்தியும் பேசுகின்றன.

வேற்று உயிரினங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றால், அமைதியாக வாழும். ஆனால், மனிதர்கள் மட்டும் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறினாலும், நிறைவேற்றமுடியாத தங்கள் பேராசையைத் தீர்ப்பதற்கு, வெறிகொண்டு அலைவர்.
சில ஆண்டுகளுக்குமுன், ஓர் அழகான குறும்படம் வெளியானது. இரு சிறுத்தைகளும் ஒரு மானும் இப்படத்தின் நாயகர்கள். இருசிறுத்தைகள், ஒரு மான் என்றதும், நம்மில் பலர், இந்தக் கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்போம். பாவம், அந்த மான்; இரு சிறுத்தைகளும் அந்த மானை அடித்துக்கொன்று சாப்பிட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அக்காட்சியில் நாம் காண்பது, நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அவ்விரு சிறுத்தைகளும், மானும், அழகாக விளையாடுவதாக, அக்காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த அற்புதக் காட்சியின் இறுதியில், திரையில் தோன்றும் வரிகள் இவை: "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி, வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுறுகிறது.

பசி என்பது ஓர் அடிப்படைத் தேவை. அந்தத் தேவை நிறைவேறியபின், நாம் நிம்மதி அடையவேண்டும். ஆனால், மனிதர்கள் நிறைவும், நிம்மதியும் அடைவதென்பது மிக, மிக, மிக அரிதாகிவிட்டது. 'போதும்' என்று நிம்மதி அடைவதற்குப் பதில், வேண்டும், இன்னும் வேண்டும் என்ற வெறியை நாம் வளர்த்துவருவதாலேயே, நாம், இத்தனைப் பிரச்சனைகளைச் சந்திக்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பசியால் வாடும் இஸ்ரயேல் மக்கள், இறைவனுக்கும், மோசேக்கும் எதிராக முணுமுணுப்பதைக் காண்கிறோம். இறைவன், மோசே வழியாக, அம்மக்களுக்குத் தரும் பதிலுரை இதுதான்: “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப்போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.” (விடுதலைப் பயணம் 16:4)

இறைவன் தந்த இக்கூற்றில், தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும் என்ற சொற்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. வாக்களிக்கப்பட்ட நாட்டில் வளமுடன் வாழ்வதற்குத் தேவையான பாடங்களை, இறைவன், பாலைநிலத்தில், தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார். தன் மக்கள், தேவைகளை மட்டும் நிறைவுசெய்து வாழும் மக்களாக இருக்கவேண்டும், பேராசைகொண்டு, அதிகம் சேர்த்துவைக்கும் மக்களாக இருக்கக்கூடாது என்பதே, 'மன்னா' என்ற கொடையின் வழியே இறைவன் கற்றுத்தந்த பாடம். அந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டனரா என்பதை அறிய, இறைவன் வைத்த தேர்வில், வென்றவரும் உண்டு, தோற்றவரும் உண்டு. அடுத்த நாளுக்கெனச் சேர்த்தவர்களின் உணவு, புழுவைத்து, நாற்றமெடுத்தது என்று, விடுதலைப் பயணம் 16ம் பிரிவின் பிற்பகுதியில் (வி.பயணம் 16:20) நாம் வாசிக்கிறோம்.

அன்றும் சரி, இன்றும் சரி... தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைப்பது, மனிதர்கள் மத்தியில் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. சேர்த்துவைப்பதைத் தாண்டி, குவித்துவைக்கும் தீராத நோயில் சிக்கித்தவிக்கும் பல நாட்டுத் தலைவர்களை, தலைவிகளைப்பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள், நம்மை வேதனையடையச் செய்கின்றன. ஆயிரமாயிரம் காலணிகளை, நகைகளை, உடைகளைச் சேர்த்துவைத்திருந்த தலைவி, பஞ்சுமெத்தையில், பஞ்சுக்குப் பதிலாக, பணக்கட்டுக்களைப் பதுக்கிவைத்திருந்த அரசியல் தலைவர், குளிக்கும் தொட்டியைத் தங்கத்தில் செய்திருந்த அரசுத்தலைவர்... என்று, வரலாறு கூறும் இந்த பட்டியல், நீளமானது. இந்தத் தலைவர்களும், தலைவிகளும் தாங்கள் சேர்த்துவைத்ததில் எதையும் தங்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

குவித்துவைக்கும் பேராசை நோயின் பக்கநோயாக இருப்பது, குறுக்கு வழியைத் தேடும் நோய். இந்த நோயைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். தன்னைத் தேடிவந்த மக்களைப்பார்த்து இயேசு கூறும் சொற்கள், நாம் அனைவரும் குறுக்கு வழியை விரும்புகிறவர்கள் என்பதை நமக்கு நினைவுறுத்துகின்றன. “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 6:24-26) என்று இயேசு அன்று கூறிய எச்சரிக்கை, குறுக்கு வழிகளில் சுகம் தேடும் அனைவருக்கும் தரப்படும் எச்சரிக்கை.

குறுக்கு வழிகள் என்ற மாயை, பேராசை வெறி, ஆகியவற்றைப் போக்குவதற்கு, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித்தரும் ஓர் அழகான வழி இதோ: அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். (யோவான் 6:27)

தேவைகளைப் பெருக்கி, பேராசை வெறியர்களாக நாம் மாறினால், ஆண்டவனை ஒதுக்கிவைத்துவிட்டு, அணுசக்திக்குக் கோவில்களை எழுப்பி, அதில் மக்களைப் பலியிட வேண்டியிருக்கும், எச்சரிக்கை! பேராசை வெறிகளைக் களைந்து, தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவும், நம் தேவைகளை இறைவன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், இந்த ஞாயிறு வழிபாட்டில் உருக்கமாக மன்றாடுவோம்.

28 July, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 16 - பற்றுறுதியும் நம்பிக்கையும் 1

Fr Stan Swamy passes away

இந்திய நடுவண் அரசும், அதன் அடிமையாக செயல்படும் NIA எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பும் மேற்கொண்ட அத்துமீறிய, அநீதியான, அரக்கத்தனமான நடவடிக்கைகளால், ஜூலை 5ம் தேதி, 84 வயது நிறைந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், விசாரணைக்குட்பட்ட ஒரு கைதியாக, மரணமடைந்தார். அந்த மரணம் தந்த அதிர்ச்சி, இன்றளவும், உலகெங்கும், பல்வேறு தாக்கங்களை உருவாக்கிவருகிறது.

அவரது வழக்கை விசாரணை செய்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர்,  அருள்பணி ஸ்டான் அவர்களின் மரணம் தங்களில் உருவாக்கிய தாக்கத்தைப்பற்றி சொன்னவை, ஊடகங்களில் வெளியாயின. கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு பிணையல் வழங்கப்படவேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த மனுவை, அவரது மறைவுக்குப்பின், ஜூலை 19ம் தேதி, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள், S.S.Shinde, N.J.Jamadar ஆகிய இருவரும், அருள்பணி ஸ்டான் அவர்கள் ஆற்றிவந்த பணிகளுக்குப் புகழாரம் சூட்டினர்.
அவ்விசாரணயின்போது பேசிய நீதிபதி ஷிண்டே அவர்கள், பொதுவாக, அடக்கச்சடங்குகளைப் பார்ப்பதற்கு தங்களுக்கு நேரம் இருப்பதில்லை என்றும், ஆனால், அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதிமரியாதை வழிபாட்டை, வலைக்காட்சி வழியாக நேரடியாகப் பார்த்தவேளையில், அது மிகவும் அருள்நிறைந்ததாக இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும், அருள்பணி ஸ்டான் அவர்கள், மிக உன்னதமான மனிதர், அவர் மிகச்சிறந்த சேவையை சமுதாயத்திற்கு ஆற்றியுள்ளார், வறுமைப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றியுள்ள பணிகளுக்கு நாங்கள் மிகுந்த மரியாதை செலுத்துகிறோம் என்று, நீதிபதி ஷிண்டே அவர்கள் குறிப்பிட்டார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள் மீது பொய் வழக்குகளைத் திணித்து, கோவிட் பெருந்தொற்று விதித்திருந்த தடைகளையும் துச்சமாக மதித்து, அவரைச் சிறையில் தள்ளி வதைத்துவந்த தேசியப் புலனாய்வு அமைப்பு, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அருள்பணி ஸ்டான் அவர்களைக் குறித்து வெளியிட்ட புகழுரைகளுக்கு கடுமையான மறுப்பு தெரிவித்தது. எனவே, அந்த கூற்றுகளை நீதிபதிகள் 'வாபஸ்' பெற்றனர். அநீதியான முறையில் அருள்பணி ஸ்டான் அவர்களை சிறையில் அடைத்து கொலை செய்த NIA அமைப்பு, அவரது மரண்த்திற்குப் பின்னரும், இந்திய நீதி மன்றங்களை வாயடைக்கச் செய்வதை எதிர்த்து, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதிகளும், அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை, கடந்த சிலநாள்களாக, ஊடகங்களில் வெளியிட்டுவருகின்றனர். இவை அனைத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தன் மரணத்தின் வழியே, இந்திய சமுதாயத்தின் மனசாட்சியை விழித்தெழச் செய்துள்ளார் என்பதை உணர்கிறோம்.

அத்துடன், நீதிக்காகப் போராடுபவர்கள் புதைக்கப்படுவதில்லை, அவர்கள் விதைக்கப்படுகின்றனர் என்பதை உணர்த்தும் வண்ணம், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் தகனம் செய்யப்பட்டு சாம்பலானபிறகு, அவரது சாம்பல் அடங்கிய கலங்கள், தற்போது, இந்தியாவின் பல பகுதிகளில் வலம்வந்தவண்ணம் உள்ளன.
தமிழகத்தில் பிறந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல் அடங்கிய கலங்கள், தமிழகத்தில் பணியாற்றும் இயேசு சபையினரின் நிறுவனங்கள் மற்றும் பங்குத்தளங்கள் அனைத்திலும், மக்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் வைக்கப்பட்டு வருகின்றன. ஜூலை 18, ஞாயிறன்று, சென்னையில் தன் பயணத்தைத் துவங்கிய ஒரு கலம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி-கடலூர், வேலூர், தருமபுரி, சேலம், ஊட்டி, கோவை ஆகிய மறைமாவட்டங்களில் உள்ள இயேசு சபையினரின் நிறுவனங்களில், ஜூலை 27ம் தேதி, இச்செவ்வாய் வரை கொண்டு செல்லப்பட்டது.

அதேவண்ணம், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல் அடங்கிய மற்றொரு கலம், ஜூலை 22ம் தேதி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் தன் பயணத்தைக் துவக்கியது. இது, தூத்துக்குடி, பாளையங்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய மறைமாவட்டங்களில் பணியாற்றும் இயேசு சபையினரின் பணித்தளங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முடிய கொண்டு செல்லப்படும். இறுதியில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் பயின்ற திருச்சி, புனித யோசேப்பு கல்வி நிறுவனங்களுக்கு, ஆகஸ்ட் 3ம் தேதி, அவரது சாம்பல் அடங்கிய கலம் கொண்டு செல்லப்படும் என்றும், அங்கு நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில், தலத்திருஅவை அதிகாரிகளும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு உழைத்துவரும் பல பெரியோரும், அரசியல் தலைவர்களும் கலந்துகொள்வர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில், மனித உரிமைகளையும், நீதியையும் நிலைநாட்ட உழைத்துவரும் பல்வேறு அமைப்புக்களுடனும், நல்மனம் கொண்டோருடனும் இணைந்து, ஜூலை 28, இப்புதனை, இந்திய இயேசு சபை துறவியர், 'தேசிய நீதி நாள்' (National Justice Day) என, கடைபிடிக்கின்றனர். ஜூலை 28 மாலை, இந்திய நேரம், 6 மணி முதல், 6.45 முடிய, இந்தியாவின் பல்வேறு ஆலயங்கள், துறவியர் இல்லங்கள், நிறுவனங்கள் ஆகிய அனைத்தின் முன்னிலையில், கோவிட் பெருந்தொற்று விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, மக்கள், நீதிகோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கி, அமைதி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இயேசு சபையினர் மேற்கொள்ளும் இந்த முயற்சியில், அனைத்து மறைமாவட்டங்களும் இணையுமாறு, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

தான் வாழ்ந்த 84 ஆண்டுகளில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் பழங்குடியினர், மற்றும் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு உரிய மாண்பை, இந்திய மக்கள், குறிப்பாக, வறியோர் வழங்கிவரும் இந்நாள்களில், பற்றுறுதியும் நம்பிக்கையும் என்ற தலைப்புடன் பதிவாகியுள்ள 16ம் திருப்பாடலிலும், அதைத்தொடர்ந்து, மாசற்றவனின் மன்றாட்டு என்ற தலைப்புடன் பதிவாகியுள்ள 17ம் திருப்பாடலிலும், நாம், விவிலியத்தேடலை மேற்கொள்வதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருள்நிறைத்தருணமாகக் கருதலாம்.

16ம் திருப்பாடலுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன், அப்பாடலுக்குத் தரப்பட்டுள்ள முன்குறிப்பு, நம் கவனத்தை ஈர்க்கிறது. 16ம் திருப்பாடலின் முன்குறிப்பில், இது, "தாவீதின் கழுவாய்ப் பாடல்" என்று கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், இத்திருப்பாடலின் முன்குறிப்பு, "A Miktam of David" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'Miktam' என்ற சொல், எபிரேய மொழியிலிருந்து எடுக்கப்பட்டச் சொல். இதற்கு, விவிலிய விரிவுரையாளர்கள் இருவகை பொருள் தருகின்றனர்.

'Miktam' என்ற சொல்லுக்கு, 'பொறிக்கப்பட்ட' என்ற பொருள் உண்டு. தலைமுறை, தலைமுறையாகப் பாதுகாக்கப்படவேண்டிய கூற்றுகள், கல்லில் அல்லது உலோகத்தில் பொறிக்கப்படுகின்றன. அதேபோல், 16ம் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், பல தலைமுறைகளுக்குப் பயன்படும் வகையில், பொறிக்கப்படவேண்டிய சொற்கள் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
'Miktam' என்ற சொல்லுக்கு, 'மூடப்பட்ட' என்ற மற்றொரு பொருளும் உண்டு. இந்தக் கருத்துடன் சிந்திக்கும்போது, 16ம் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள சொற்கள், உரத்தக்குரலில், வெளிப்படையாக பறைசாற்றப்படாமல், வாயை மூடியவண்ணம், ஒருவர், தனக்குள் கூறும் எண்ணங்கள் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். 'மூடப்பட்ட' என்ற இந்த எண்ணத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும்வண்ணம் 'Miktam' என்ற சொல், திருப்பாடல்கள் நூலில் இன்னும் 5 திருப்பாடல்களுக்கு முன்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது.

16ம் திருப்பாடலின் முன்குறிப்பில், இப்பாடல், 'தாவீதின் கழுவாய்ப் பாடல்', அதாவது, 'தாவீதின் Miktam' என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. 'Miktam' என்ற சொல், மீண்டும் 56 முதல் 60 முடிய உள்ள ஐந்து திருப்பாடல்களில், முன்குறிப்பாக இடம்பெறும்போது, கூடுதலான விவரங்கள் தரப்பட்டுள்ளன:
56ம் திருப்பாடலின் முன்குறிப்பில் – பெலிஸ்தியர், தாவீதை, காத்து என்னுமிடத்தில் பிடித்தவேளை, அவர் பாடிய கழுவாய்ப்பாடல் என்றும்,
57ம் திருப்பாடலின் முன்குறிப்பில் - சவுலுக்குத் தப்பியோடி, குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல் என்றும்,
58ம் திருப்பாடலின் முன்குறிப்பில் - தாவீதின் கழுவாய்ப்பாடல் என்றும்,
59ம் திருப்பாடலின் முன்குறிப்பில் - தாவீதின் வீட்டருகே காத்திருந்து, அவரைக் கொல்வதற்கென்று, சவுல், ஆள்களை அனுப்பியபோது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல் என்றும்,
60ம் திருப்பாடலின் முன்குறிப்பில் - ஆராம் நகராயிம், ஆராம் சோபா என்ற அரசுகளோடு தாவீது போர் புரிகையில், யோவாபு திரும்பிவந்து உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தியபோது, படிப்பினையாக, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல் என்றும், பல்வேறு கூடுதலான விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இத்தருணங்களையெல்லாம் நினைவுபடுத்திப் பார்க்கும்போது, இவை அனைத்துமே, தாவீதுக்கு, பெரும் நெருக்கடிகளை உருவாக்கிய தருணங்கள் என்பதை உணர்கிறோம். அத்தகைய நெருக்கடியான சூழல்களில், தாவீதின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட இறைவேண்டல்களாக இத்திருப்பாடல்கள் உருவாகியுள்ளன.
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். (திருப்பாடல் 16:1) என்று துவங்கும் 16ம் திருப்பாடலில், தாவீது எழுப்பும் வேண்டுதல்களை, அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.


23 July, 2021

Miracle of ‘Multiplying’ or ‘Sharing’? புதுமை எது - பலுகச்செய்வதா, பகிரச்செய்வதா?

 
The lad with five barley loaves and two fish

17th Sunday in Ordinary Time

The opening ceremony of the 32nd Summer Olympics took place in Tokyo, on Friday, July 23. This is the first time in the Olympic history of 125 years (beginning with the Olympics in 1896), that the Games have been postponed by one year due to the pandemic. Earlier, on three occasions the games were cancelled in 1916, 1940, and 1944 due to the two world wars.
These three games were cancelled since the world was not safe enough to conduct the games. Last year we found out that the world was not safe enough from an unseen virus – COVID-19 and hence the games were postponed. Even now, as Tokyo staged the opening ceremony, the question of whether it will continue the full course of the games, lingers on.

Talking about this year’s Olympics, BBC has this report:
Masks, quarantine, saliva tests. Make no mistake, these are an Olympics like no other.
With Tokyo in a state of emergency throughout the Olympics after a spike in Covid-19 infections, the Games have come under huge criticism from the Japanese public, the majority of whom have said they want the Olympics to be cancelled or postponed again.
But safety is paramount for the organisers, and huge precautions are being taken, including holding the Games behind closed doors with no fans, from either Japan or overseas, being permitted inside venues.

Not only these four Olympic Games, but every time Olympic Games are conducted, safety, and security have been the concern of the organisers, especially after the 1972 games in Munich where 11 athletes from Israel were killed by a terrorist attack. In 2012, when the Olympic Games were conducted in London, the following headlines appeared in the media:
  • London Feels More Like a Military Base Than an Olympic Park
  • Unprecedented security measures for London Olympics
  • London's Olympic security headache
With more than 36,000 members of the security force for the 10,000 athletes and a security budget in the range of 1.6 billion pounds, one wonders whether the world needs to conduct a sports festival like this. We still wonder whether the world needs to have the Olympic games when people face insecurity on so many fronts created by COVID-19.

We are painfully aware that one of the greatest problems facing us today is insecurity – physical, social, financial, political, psychological etc…etc. We can easily see that all these are inter-related. The more financial and social insecurity, the greater the violence! There is no strong political will to find a permanent solution to this situation. Any one can easily see that the gap between the haves and the have-nots is becoming a bottomless chasm!
Even during the pandemic, when the poor lost everything, the rich, especially the super-rich amassed wealth. This is obviously, as well as, painfully advertised in the recent trips (July 11 and July 20, 2021) to the outer space taken up by a few ‘filthy-rich’ persons.

The main reason for all the insecurity in the world can be pinned down to this great chasm between the ‘haves’ and the ‘have-nots’. Instead of bridging this gap, most of the governments spend more and more money on weapons. The best shield that can protect us is SHARING of our resources, rather than stocking up wealth and weapons.

Sharing is the main theme in today’s liturgy. The readings from II Kings as well as the Gospel of John talk of the miraculous feeding of people. At first glance, these readings seem to highlight the miraculous intervention of God. But, on a deeper analysis, we can find that God and Jesus did not produce food out of nothing. There was the element of human contribution.
2 Kings 4:42-44
A man came from Ba'al-shal'ishah, bringing the man of God bread of the first fruits, twenty loaves of barley, and fresh ears of grain in his sack. And Eli'sha said, "Give to the men, that they may eat." But his servant said, "How am I to set this before a hundred men?" So he repeated, "Give them to the men, that they may eat, for thus says the LORD, 'They shall eat and have some left.'" So he set it before them. And they ate, and had some left, according to the word of the LORD.

We see a similar scene in John’s gospel – John 6: 1-15. This passage seems like a sequel to last week’s passage from Mark. The closing lines of last week’s gospel gave us a picture of the compassionate shepherd:
Mark 6:34
As he went ashore he saw a great throng, and he had compassion on them, because they were like sheep without a shepherd; and he began to teach them many things.

This week’s gospel begins with Jesus, the Good Shepherd being concerned about feeding the people. His question of how to feed those people met with more questions. Then came a solution: "There is a lad here who has five barley loaves and two fish". Jesus, as if waiting for this clue, told his disciples to make the people sit down for a meal! All that Jesus required was a little effort from one of them and it came via a child!

We know that this is the only miracle that is recorded in all the four Gospels (Mt. 14:13-21; Mk. 6:30-44; Lk. 9:10-17 and Jn. 6:1-15). All the four Gospels record same numbers – five loaves and two fish, 5000 men, not counting women and children, 12 baskets of the left-over pieces of bread… Only the Gospel of John mentions the lad carrying the food items that inaugurated the miracle. While the other three synoptic gospels mention ‘five loaves and two fish’, John makes it more specific saying: "five barley loaves and two fish". Some commentators say that ‘barley loaves’ signify that the lad was from a family with meagre resources. We can easily understand that this lad, from a poor family, was brought up in the spirit of sharing, right from his childhood.

Usually, this miracle is looked upon as a miracle of multiplication performed by Jesus. But, there is another interpretation to this episode. This interpretation stems from the basic question – how is it that a child carried food to the desert? When a family goes on a journey, children do not think of carrying food. This is the job of the parents. They foresee what would be required by children and get prepared.
For the Jews, this foresight was almost second nature. Having suffered slavery and shortage of food for generations, they were careful to carry food whenever they left their house. So, here was a family which had come to the desert to meet Jesus. The mother of the family had prepared five barley loaves and two fish for the family to eat. The child was simply carrying the food packet. We can easily presume that many of those who were there around Jesus, carried some food.

As it was getting late, they began to feel pangs of hunger. They were hesitant to open their packets since they knew that what they had was insufficient to feed the crowd. Hesitations, questions, calculations are typical of adults. Thank God, children are different. Hence, the miracle happened. The little lad heard Jesus discussing with his disciples about feeding the people. Without a second thought, the lad offered what he had carried from home – five loaves and two fish! Once the crowd saw this, then it was easy for them to open their packets and share…

Five loaves + two fish + Jesus’ blessing = more than 5000 people fed + 12 baskets of left-overs!
Not a simple mathematics, but pure magic! I consider this – namely, that Jesus and the child inspiring the people to share – a much more powerful miracle than simply Jesus multiplying the loaves!

The world needs extraordinary miracles of sharing. How do we get rid of the scandal of millions dying of hunger? We can pray for God’s direct intervention; we can hope for efficient actions of governments; we can fight with the haves to share with the have-nots… OR, as the little lad we can start sharing. Let me close these reflections with a news item I read some years ago from the catholic news agency UCAN:
Spearheading a revolution with handful of rice (Source: UCAN-India)
July 15, 2012. Every drop makes an ocean. That adage perhaps never held so true as in the case of a Christian community in one of the poorest areas of India. A small community in Mizoram despite having not much to depend on for themselves have been religiously paying their tithes – “a handful rice.”…
"Buhfai tham"(which means ‘a handful rice’) is a practice where each Mizo family puts aside a handful of rice every time, they cook a meal. Later, they gather it and offer it to the church. The church, in turn, sells the rice and generates income to support its work.
"It is not our richness or our poverty that makes us serve the Lord, but our willingness," said Rev. Zosangliana Colney, leader of Mizoram Presbyterian Church. "So we Mizo people say, 'As long as we have something to eat every day, we have something to give to God every day.'"
With 1,800 missionaries in India and many overseas, the Mizoram church is known as a missionary church around the world. This success is attributed to their selfless and creative giving.
I rest my case.

Five loaves and two fish shared with 5000

பொதுக்காலம் 17ம் ஞாயிறு
 
ஜூலை 23, இவ்வெள்ளியன்று, கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில், துவங்கின. சென்ற ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த விளையாட்டுக்கள், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியால், இவ்வாண்டு நடத்தப்படுகின்றன. 1896ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், இடையே மூன்று முறை நடத்தப்படவில்லை.
முதல், மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்ற காலத்தில், மனிதர்களாகிய நாம், ஒருவரையொருவர் அழித்துவந்ததால், 1916, 1940, 1944 ஆகிய மூன்று ஆண்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தடைப்பட்டன. 2020ம் ஆண்டு துவங்கியது முதல், மனிதர்களாகிய நம் அனைவரையும், கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி அழித்து வருவதால், ஒலிம்பிக் வரலாற்றில், முதல்முறையாக, இந்த விளையாட்டுக்கள் தள்ளிவைக்கப்பட்டன. இப்போதும்கூட, மக்களின் பங்கேற்பு ஏதுமின்றி நடைபெறும் இந்த விளையாட்டுக்கள், ஏத்தருணத்திலும் நிறுத்தப்படலாம் என்ற சந்தேகத்துடன், நடைபெற்று வருகின்றன.

மக்களின் பாதுகாப்பு கருதி, மூன்று முறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால், பாதுகாப்பு என்பது, ஒரு பெரும் ஆபத்தாகவே ஏனைய ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் கருதப்பட்டது.
1972ம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்றபோது, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 11 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவோரின் உள்ளங்களில் ஆழப்பதிந்த ஓர் எச்சரிக்கையாக செயல்படுகிறது. 2012ம் ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், இலண்டனில் நடைபெற்றபோது, பாதுகாப்பு அளிப்பதற்கு மட்டும், பிரித்தானிய அரசு, 1.6 பில்லியன் பவுண்டுகள் செலவு செய்ததாக சொல்லப்படுகிறது. 2016ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு, 895 மில்லியன் டாலர்கள் பாதுகாப்புக்கென செலவழிக்கப்பட்டதென சொல்லப்படுகிறது. இம்முறை, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களில், மக்களின் பங்கேற்பு இல்லாதபோதும், விளையாட்டு வீரர்களை, ஒரு கிருமியிடமிருந்து பாதுகாப்பதற்கு பெருமளவு தொகை செலவாகிறது.

மக்களின் கவலைகளைப் போக்கி, அவர்களை ஒன்றிணைப்பதற்காக, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அதே விளையாட்டுத் திடல்கள் பழிக்குப் பழி வாங்கும் கொலைக்களங்களாகவும், மக்கள் கூடிவரும் இடங்கள், கிருமிகள் பரவும் இடங்களாகவும் மாறுவதைக் காணும்போது, வேதனையடைகிறோம். எந்நேரத்தில், எவ்விடத்திலிருந்து, எவ்வகையில் வன்முறைகள் வெடிக்கும், அல்லது, கிருமிகள் பரவும் என்பது தெரியாமல் வாழ்ந்துவருகிறோம். இன்றைய நமது சமுதாயத்தை, ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தும் ஒரு பெரும் பிரச்சனை, பாதுகாப்பின்மை.

பாதுகாப்புடன் வாழவேண்டும் என்பது, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படை வேட்கை. அண்மையக் காலங்களில், பாதுகாப்பு என்று பேசும்போது, மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதை மட்டும், நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவேண்டும் என்று எண்ணிப்பார்க்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்காமல், அதை அளவுக்கதிகமாக சீரழித்ததால், கோவிட்-19 பெருந்தொற்று, தற்போது, நம்மீது படையெடுத்துள்ளது. நமது சுயநலமும், பேராசையும், நம்மையும் நம் சுற்றுச்சூழலையும், பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன.

சுயநலமும், பேராசையும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிட்டதால், இருப்பவர்கள் தேவைக்கும் அதிகமாக, மிகமிக அதிகமாகச் சேர்த்துக்கொண்டே உள்ளனர். இதன் விபரீத விளைவாக, இல்லாதவர்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளையும் இழந்து தவிக்கின்றனர். கோவிட் பெருந்தொற்று, கோடிக்கணக்கான வறியோரின் வாழ்வாதாரங்களை அடியோடு பறித்துச் சென்றுள்ள அதே வேளையில், ஒரு சில கோடீஸ்வரர்களின் வருமானம் இன்னும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் ஒட்டுமொத்த வடிவமாக, வேதனை தரும் விளம்பரமாக, மிகப்பெரிய செல்வந்தர்கள் சிலர், அண்மைய நாள்களில் (ஜூலை 11, 20 ஆகிய நாள்களில்), கோடி, கோடியாய் பணத்தைச் செலவழித்து, ஒருசில நிமிடங்களே நீடித்த விண்வெளிப் பயணம் ஒன்றை மேற்கொண்ட நிகழ்வை நாம் எண்ணிப்பார்க்கலாம். இந்த வேறுபாடுதான் நமக்குள் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிவிட்டது.

நாடுகளுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையில் வெடிக்கும் வன்முறைகளை, ஆழமாக ஆய்வுசெய்தால், இவற்றின் ஆணிவேராக நாம் காண்பது, இருப்பவர் - இல்லாதவர் என்ற இருவேறு உலகங்களுக்கிடையே நிலவும் அநீதி.
இவ்வாறு பிளவுபட்டு நிற்கும் இந்த உலகங்களை இணைக்கும் வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, இல்லாதவரின் உலகிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, இருப்பவரின் உலகம், ஆயுதங்களையும், அரசியல் அதிகாரங்களையும் நம்பிவாழ்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி... பகிர்வு. இருப்பது சிறிதளவேயாயினும், அதை இல்லாதாரோடு பகிர்ந்தால், இந்த உலகம், அதிகப் பாதுகாப்பில் வளர்ந்து, பல புதுமைகளைக் காணமுடியும் என்பதை, நமக்கு, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன.

மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி, அரசர்கள் இரண்டாம் நூலிலும், யோவான் நற்செய்தியிலும் எழுப்பப்படுகிறது. இருப்பினும், இறைவனை நம்பி, உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள் வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது என்பதை, இரு வாசகங்களிலும் காண்கிறோம்.

இவ்விரு நிகழ்வுகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, மக்களின் பசியைப் போக்க, அல்லது, இல்லாதவர்களின் குறையைத் தீர்க்க, இறைவன் நேரில் வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இவ்விரு வாசகங்களையும் சற்று ஆழமாக ஆய்வுசெய்தால், ஓர் உண்மை தெளிவாகும். இந்த உணவை, இறைவன், ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை. ஒரு மனிதரும், ஒரு சிறுவனும் கொண்டுவந்து கொடுத்த உணவே, இவ்விரு புதுமைகளின் அடித்தளமாக அமைந்ததைப் பார்க்கலாம்.
அரசர்கள் இரண்டாம் நூல் 4: 42
பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப்பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரான எலிசாவிடம் கொண்டு வந்தார்.
என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. ஒருவர் மனமுவந்து தந்த உணவு, ஒரு நூறு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவர் கொண்டுவந்த உணவு அனைவருக்கும் போதுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், ஆண்டவரை நம்பி, அந்த உணவு பகிர்ந்தளிக்கப்பட்டது. மக்கள் உண்டபின், மீதியும் இருந்தது என்று, இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.

பகிர்வைப் பற்றிய அழகியதொரு பாடத்தை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித் தருகிறார். தன்னை நோக்கி பெருந்திரளாய் வந்த மக்களைக் கண்டதும், 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' (யோவான் 6:5) என்ற எண்ணமே, இயேசுவின் உள்ளத்தில் முதலில் எழுந்தது. மக்களுக்கு விருந்து பரிமாற நினைத்த இயேசுவின் ஆர்வத்திற்கு அணைபோடும்வண்ணம், கேள்விகள் எழுகின்றன; பின்னர், ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. சிறுவன் தந்த ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் இயேசு வழங்கிய ஆசீர், ஆகியவை இணைந்தபோது, 5000த்திற்கும் அதிகமானோர், வயிறார உண்டனர்... மீதி உணவும் இருந்தது.

இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு, தனியொருவராய், பலுகச்செய்தல் என்ற புதுமையைச் செய்தார் என்று சிந்திப்பது, பாரம்பரியக் கண்ணோட்டம். அதிலிருந்து மாறுபட்டு, 'பகிர்தல்' என்ற புதுமையை, இயேசு துவக்கிவைத்தார் என்ற இரண்டாவது கண்ணோட்டம், ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. மாறுபட்ட இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திப்பதற்கு நம்மைத் தூண்டுவது, சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான் என்ற ஒரு கேள்வி.

பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக, உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று, குழந்தைகளோ, சிறுவர்களோ எண்ணிப்பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, எடுத்துச்செல்வது, அல்லது, கொடுத்தனுப்புவது, பெற்றோரே. இஸ்ரயேல் மக்கள் மத்தியில், இதுபோன்ற முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?
பல தலைமுறைகளாய், இஸ்ரயேல் மக்கள், அடிமை வாழ்வு வாழ்ந்ததால், உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போதெல்லாம், மறவாமல், மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச்செல்வது, அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. குடும்பமாய்ச் சென்ற அவர்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும், குடும்பத்தலைவி முன்மதியோடு தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

இதில் மற்றொரு நுணுக்கமான தகவலையும் நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ளார். ஏனைய மூன்று ஒத்தமை நற்செய்திகளில், 'ஐந்து அப்பங்கள்' என்று கூறப்பட்டுள்ள வேளையில், அந்தச் சிறுவன் கொண்டுவந்திருந்தது, 'ஐந்து வாற்கோதுமை அப்பங்கள்' என்று, யோவான் மட்டும் குறிப்பிட்டுள்ளார். 'வாற்கோதுமை அப்பங்கள்' என்ற அடையாளத்தின் வழியே, அச்சிறுவனின் குடும்பம், வறுமைப்பட்டக் குடும்பம் என்பதைக் யோவான் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

மாலையானதும், பசி, வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலைநிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் போதனைகளில் பகிர்வைப்பற்றி பேசியது பலருக்கு நினைவிலிருந்தது. ஆனால், எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்வது? இத்தகைய அறிவு சார்ந்தக் கேள்விகளில் பெரியவர்கள் முழ்கி இருந்தபோது, அங்கிருந்த சிறுவனின் எண்ண ஓட்டம் வேறுபட்டிருந்தது. அதுவே, அந்தப் புதுமைக்கு வழிவகுத்தது.

தன்னைத் தேடிவந்த மக்களுக்கு உணவளிப்பது எப்படி என்று இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அச்சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தான். பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், அச்சிறுவன், தன்னிடம் இருந்ததையெல்லாம், இயேசுவிடம் தந்தான். அச்சிறுவனின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர். ஆரம்பமானது, ஓர் அற்புத விருந்து. அந்தப் பகிர்வினால் உருவான மனநிறைவில், அங்கிருந்தவர்களுக்கு, பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான், அவர்கள் உண்டதுபோக, மீதியான உணவை, 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக இன்றைய நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று திபேரியக் கடல் அருகே நிகழ்த்தியது, ஒரு பகிர்வின் புதுமை.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்பது, புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப் பகிரச்செய்தார் என்பதை, நாம் மாபெரும் ஒரு புதுமையாகக் கருதலாம். குழந்தைகளுக்கு, பகிர்வதன் அவசியத்தைக் குறித்து பாடங்கள் பல சொல்லித்தருகிறோம். அக்குழந்தைகள் வளர, வளர, பகிர்வதற்குப் பதில், சேர்த்துவைப்பதைக் குறித்து, சேர்த்ததைப் பாதுகாப்பது குறித்து, அதிகப் பாடங்களைக் கற்றுத்தருகிறோம்.

வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்கமுடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான் இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான் இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, பகிர்வு என்ற புதுமையை, அந்தச் சிறுவனைப் போல், நம்மில் யாரும் ஆரம்பித்துவைக்கலாம். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு மாநிலமான மிசோராம், நமக்குப் பகிர்வுப் பாடத்தைச் சொல்லித் தருகிறது.
"Buhfai tham" அதாவது, "ஒரு கைப்பிடி அரிசி" என்ற ஒரு திட்டம் இங்கு செயல்வடிவம் பெற்றுள்ளது. இங்குள்ள மக்களில், பெரும்பாலானோர், வசதிகள் குறைந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு முறையும் சோறு சமைக்கும்போது, ஒரு கைப்பிடி அரிசியை தனியே எடுத்து வைப்பார்கள். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் சேர்க்கப்படும் அரிசி, ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குக் கோவிலுக்குக் கொண்டு வரப்படும். கோவிலில் சேர்க்கப்படும் அரிசி, அப்பகுதியில் வாழும் மிகவும் வறியோர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும். ஒரு சிலர், அரிசியோடு, தங்கள் தோட்டங்களில் வளர்ந்த காய்களையும், பழங்களையும் காணிக்கையாகத் தருவர். இவை அனைத்துமே, ஞாயிறுத் திருப்பலியின் இறுதியில் வறியோர் மத்தியில் பகிர்ந்து தரப்படும்.

மிசோராம் மக்கள் சொல்லித்தரும் வழியை நாம் அனைவருமே பின்பற்ற முடியுமே! இதைத்தானே இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் சிறுவன் நமக்குச் சொல்லித் தருகிறார்? பகிர்வதால், பாசம் வளரும், பாதுகாப்பும் உலகில் பெருகும். பகிர்வுக்குப் பதில், சுயநலக் கோட்டைகளை, பிரம்மாண்டமாக எழுப்பினால், அந்தக் கோட்டைகளைக் காப்பதற்கு, இன்னும் தீவிரமான பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும். ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உட்பட, இவ்வுலகம் மேற்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் இடித்துரைக்கப்படும் போட்டி, பாதுகாப்பு ஆகிய பாடங்களைப் பயிலப்போகிறோமா? அல்லது, நற்செய்தியில் நாம் சந்திக்கும் சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும், பகிர்வுப் பாடத்தைப் பயிலப்போகிறோமா?

பகிர்வுப் பாடங்களை, பச்சிளம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள, இறைவன், நமக்கு, பணிவான மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம். பகிர்வுப் புதுமைகள், இவ்வுலகில், பலுகிப்பெருகவேண்டும் என்றும் மன்றாடுவோம்.