Fr Stan Swamy
15th
Sunday in Ordinary Time
The entire episode leaves behind a feeling that Stan
Swamy was virtually thrust a sentence of death without charges being framed
against him and without a trial. I wonder if his soul will be able to rest in
peace, but I hope it does. I suppose all that can be said is “Father, forgive
them for they know not what they do”.
These words, were written on July 5, last Monday, the
day when Fr Stan Swamy, (Fr. Stanislaus Lourduswamy SJ) the Jesuit Priest,
breathed his last in the Holy Family Hospital, Mumbai. These words capture the
atrocious crime committed by the central government of India, especially, the
‘honourable’ prime minister Narendra Modi, the ‘honourable’ home minister Amit
Shah and their ‘honourable’ slave - the National Intelligence Agency. These
words were not penned by a journalist, but by Shri Madan B. Lokur, a former
judge of the Supreme Court of India.
Ever since Fr Stan was arrested, and, especially after
his death, there has been an explosion of reactions from, practically, all over
the world. One of the reactions is centred around the strong opinion that Fr
Stan did not die, but was killed by the government of India and the judicial
system. Another reaction is in the form of seeing his death from a spiritual
perspective. In this sense, he is being called a prophet, a martyr, a true
disciple of Christ and a saint. Here are two samples of these different
reactions:
The press statement released by Archbishop Antony Pappusamy. President
of TNBC – the Tamil Nadu Bishops’ Council, was a forthright condemnation of the
government:
“We strongly condemn the government for hunting down and wrongfully
portraying, a Christian religious who showed sincerity in his mission, strong
will power in justice, and half a century of tireless labour to protect human
dignity, as an anti-social and a person creating chaos…
If this is the way a republic government behaves towards a person
fighting for human rights, then there would come forward many more Swamys to
take part in the freedom march of the people.”
The condolence message from Cardinal Charles Maung Bo
SDB, the President of FABC – the Federation of the Asian Bishops’ Conferences goes
like this:
With deep anguish and sorrow, we mourn the death of
the martyr of the marginalized people, Fr. Stan
Swamy SJ. … His mission will
continue and will never succumb to evil.
India has a glorious history, as the cradle of many
world religions, but she also nurses a wounded history. Even the great Mahatma
Gandhi, the saint who lived for the poor, was arrested and incarcerated under
sedition laws by British officials. The same Gandhi is the pivot of Indian
history today. We take solace in the thought that Fr. Stan Swamy, too, followed
Gandhi’s nonviolent path, with a great love for those in the margins. He is the
latest saint of the modern India’s poor.
Fr. Stan Swamy redefined his priesthood, extending his
altar to the streets and hills of those obnoxious corners of injustice,
breaking the bread of good news of human dignity and justice especially among
the indigenous (tribal-Adivasi) people. For too long, the innocent tribals
trudged a merciless way of the Cross inflicted on them by corporate greed and
unjust laws. His tireless struggle to liberate these marginalized communities
brought him to the peak of Calvary, of incarceration, deprivation and ultimate
death. He died as a true disciple of Christ.
Identifying Fr Stan as a prophet, and a true disciple
of Christ, brings us to this Sunday’s liturgy. Last Sunday and this Sunday the
Church has given us an opportunity to think of the prophets.
July 4, last Sunday, in all the Catholic Churches
around the world the liturgical readings focussed on the plight of the prophets.
Most of the prophets had to face the tough opposition from their own people,
especially the rich and the powerful. Most of them were rejected and killed.
While those readings were being read in our churches, on
Sunday, July 4, Stan Swamy was bearing witness to that message as he lay
critically ill in a Mumbai hospital. The next day, July 5, Monday, around 1.20
in the afternoon, he breathed his last – a prophet rejected and killed by the
powerful.
Most of the prophets were not interested in pleasing
people, especially those in power, in order to promote themselves. A powerful example
of a self-effacing prophet is Amos, whom we meet in the First Reading today
(Amos 7:12-15).
The whole book of Amos is a record of all the visions
of Amos… visions that were supposed to serve as warning to the people of
Israel. Amos reels off all these warnings one by one to the people.
There is only one section in this book where another
person – Amaziah, the priest of Bethel, speaks (Amos 7: 10-17). Our first
reading is taken from this section. It is a conversation between Amaziah and
Amos. This conversation brings out the stark contrast between a person who
dedicates her/himself to the service of God, risking one’s own life, as against
another person, who takes up the service of God as a means to enhance personal
gains.
Amaziah and the other priests were leading a secure,
prosperous life in Bethel since they were serving the king. Amos entered this
scene and began speaking what God had told him to speak. His messages were a
threat to the life of compromise the priests were leading. Hence, Amaziah told
Amos to leave their territory. He also suggested that Amos could go to Judah
and earn a living by prophesying there.
Amaziah’s words added fuel to the fire that was
already burning within Amos. He claimed that he was ‘no prophet, nor a
prophet’s son’. When Amos said this, he meant that he was not the type of
prophet as defined by Amaziah, namely, a person who earned a living by
prophesying. If earning a living was his aim, he could as well have been a
herdsman, emphasised Amos! Talk of true and false prophets! It is needless to
say, that we need more and more true prophets like Amos in today’s world.
Fr Stan was a descendent of Amos who lived not for his
personal gains. He had lived most of his Jesuit life, never seeking the
limelight. When the government of India thrust him into limelight, by arresting
him, and denying the basic necessities, he was still thinking of his fellow
prisoners who were languishing in the prison along with him.
While he was admitted in the hospital, his friends
called him to assure him of their prayers. Fr Stan would accept their prayers graciously,
but immediately add that they need to pray for thousands of prisoners,
especially the Adivasi prisoners who are languishing in prisons, denied of all
judicial procedures. A person who constantly carries the people in his/her
heart is truly a prophet! Fr Stan was truly one of them!
The Gospel reading today taken from Mark gives us an
account of Jesus sending his disciples on a mission (Mark 6: 7-13). This
passage gives us some lessons on discipleship or how to live like a prophet.
The first lesson comes from the verse: “Jesus
gave them authority over unclean spirits.” (Mark 6:7) Jesus did not
give his disciples authority over the people, but only authority over the evil
forces that had imprisoned them. Jesus himself had not used his authority over
the people, but only on the evil they were suffering from.
In contrast to this, what we find today is appalling.
We know that those who profess to serve the people, use all their authority
over them in order to crush them. On the other hand, these leaders serve all
the evil forces which need to be crushed.
When these fake ‘servants of the people’ meet a true
servant of the people, a true disciple of God, they want to get rid of him/her.
The present ‘servants’ of India have gotten rid of Fr Stan, since he was a
living challenge to their phony life of service!
The second and third lessons of Jesus come from
his instructions to the disciples. The first instruction is that the disciples
need a simpler life-style while they are on a mission. In our present-day
context, we tend to plan every detail of our mission in such a way that we end
up with more efficiency and less effectiveness. Jesus insisted that our mission
began first with how we lived and then with what we said! The simple life-style
also implied that the disciples shared the life of those whom they served. Any
one who has lived with Fr Stan can easily vouch for his very simple life style,
which was totally in tune with the life of the poor, tribal people he was
serving.
The third and final lesson is a new insight we can
derive from what Jesus said: “If any place will not receive you and they
refuse to hear you, when you leave, shake off the dust that is on your feet for
a testimony against them.” (Mark 6:11) ‘Shaking off the dust’ is
usually interpreted as a warning against those who refused hospitality. We can
also see this as a healthy psychological suggestion coming from Jesus. We can
imagine Jesus telling his disciples: “When you leave a place that has not
welcomed you, don’t carry hurt-feelings and unpleasant memories with you.
Remove them from your mind and heart as you would shake off the dust from your
feet.” Very often in life when we face unwelcome situations, we tend to
carry those feelings and memories not as dust on our feet, but as dust in our
eyes, hurting us constantly!
While most of us were furious with the prison
authorities denying basic necessities to Fr Stan, suffering from Parkinson’s
and other ailments, he was concentrating on the loving gestures of the fellow
prisoners who were helping him with his food and bathing. Given his magnanimous
heart, we can be sure that even now he is blessing all those prison authorities
from heaven!
Let us close our reflection with an examen of consciousness.
Of the many write-ups on Fr Stan Swamy that have appeared in the mainstream and
the social media, the reflections of Mr Valson Thampu, former Principal of St.
Stephen's College, Delhi, help us to make an examen of consciousness. Let these
words help us not only to appreciate Fr Stan Swamy, a true prophet and a true
disciple of Christ, but also examine ourselves and see where we stand…
Fr. Stan Swamy is no more. I feel awkward about
mourning his death. Instead, I feel a strange sort of happiness. An eerie sort
of relief, if you don't mind.
Who are we to mourn his death? We, who dare not utter
a word, fearing for our skin?
Who are we to feel sorry for the loss of this noble
soul, when our concerns rarely go beyond the stomach?
I feel sorry for those of us who are left behind. We
may not be shut up in prisons. There is no need to. We are our own prisons.
So, we survive like scarecrows. But prisons too have
their days; and then they will be no more. A new sun will arise, and mock its
debris….
Sleep well, Fr. Stan. Your struggle is over. Ours
remains; except that we are unequal to it. Our struggle now is only with
ourselves; or, what is left of us.
Fr Stan Swamy
பொதுக்காலம் 15ம் ஞாயிறு
ஸ்டான் சுவாமி அவர்கள் செய்த குற்றம் என்ன
என்பதை நிரூபிக்காமல், வழக்கு
எதையும் நடத்தாமல், அவர்
மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது ஆன்மா உண்மையிலேயே அமைதி அடையுமா என்று தெரியவில்லை.
அது அமைதி அடையும் என்று நம்புகிறேன். இவ்வேளையில் சொல்லக்கூடியது எல்லாம் இதுதான்:
"தந்தையே, இவர்களை
மன்னியும். ஏனெனில், தாங்கள்
செய்வது என்னெவென்று இவர்களுக்குத் தெரியவில்லை."
ஜூலை 5, கடந்த திங்களன்று இயேசு சபை அருள்பணியாளர்
ஸ்டான் சுவாமி (ஸ்தனிஸ்லாஸ் லூர்துசுவாமி சே.ச.) அவர்கள், மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில்
இறையடி சேர்ந்த அதே நாள், செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரையில், இவ்வரிகள் இடம்பெற்றிருந்தன.
இதை எழுதியவர் ஒரு செய்தியாளர் அல்ல, மாறாக, இவ்வரிகளை எழுதியவர், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள்
நீதிபதி, திருவாளர் மதன் லோகுர்
(Madan Lokur) அவர்கள்.
இன்று, நடுவண் அரசையும், இந்தியாவையும் ஆட்டிப்படைக்கும் பிரதமர்
நரேந்திர மோடி அவர்கள் மீதும், உள்துறை அமைச்சர் அமித்
ஷா அவர்கள் மீதும், அவர்களுக்கு கைகட்டி, வாய்ப்பொத்தி, அடிமைப்பணி புரியும் தேசிய
புலனாய்வுத் துறை, மற்றும் நீதித்துறை ஆகியவை
மீதும், முன்னாள் நீதிபதி லோகுர் அவர்கள், இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அருள்பணி ஸ்டான் சுவாமி
அவர்கள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து உலகெங்கிலுமிருந்து
கருத்துக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, ஜூலை 5, கடந்த திங்களன்று, அவர் இறந்த செய்தி
வெளியானதும், இந்த கருத்துக்கள் எரிமலையாக
வெடித்துச் சிதறியவண்ணம் உள்ளன. ஸ்டான் அவர்கள் மரணமடையவில்லை, அவர் இந்திய நடுவண் அரசால், இந்திய நீதித்துறையால் கொல்லப்பட்டார் என்ற கருத்து மிக அதிகமாக ஓங்கி ஓங்கி ஒலித்தது,
ஒருபுறம். மற்றொருபுறம், அவர், ஓர் இறைவாக்கினராக, நீதியின் சாட்சியாக, இயேசுவின் உண்மைச் சீடராக வாழ்ந்தார், இறந்தார்
என்ற கண்ணோட்டத்தில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதோ, இவ்விரு
கண்ணோட்டங்களின் எடுத்துக்காட்டுகள்:
இந்தியத் தலத்திருஅவையின்
சார்பில் வெளியான கருத்துக்களில், தமிழக கத்தோலிக்க ஆயர்
பேரவையின் தலைவரான பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை, தயக்கம் ஏதுமின்றி, இந்திய அரசின் மீது வன்மையான கண்டனத்தைப்
பதிவுசெய்துள்ளது. 'தந்தை
ஸ்டான் சுவாமி அவர்களின் பணி வாழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம்' என்ற தலைப்பில், பேராயர் பாப்புசாமி அவர்கள், இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கிறித்தவத் துறவியொருவர்
தன் பணிவாழ்வில் காட்டிய நேர்மையை, நீதியின்பால் காட்டிய உறுதியை, மானுட மாண்பைக் காக்கின்றவகையில் அரை நூற்றாண்டு
உழைத்த ஒரு துறவியை,
சமூக விரோதியாக, கலகக்காரராகச்
சித்தரித்து, நாளும்
துரத்திவந்த அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று, பேராயர் பாப்புசாமி அவர்கள், இவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
சனநாயக நாட்டில் மனித
உரிமைகளைக் காக்க வாழ்ந்த ஒருவருக்கு சனநாயக அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமானால், ஸ்டான் சுவாமியைப் பின்பற்றி, இனி எத்தனையோ சுவாமிகள் தோன்றி, மக்கள் விடுதலைப் பயணத்தில் பங்கேற்பர்
என்பது உறுதி, என்ற உறுதிமொழியுடன், தமிழக ஆயர் பேரவையின் சார்பாக, பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் வெளியிட்ட
அறிக்கை நிறைவடைகிறது.
அருள்பணியாளர் ஸ்டான்
அவர்களின் அடக்கத் திருப்பலி, மும்பையில் நடைபெற்ற நாளான
ஜூலை 6ம் தேதி, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின்
தலைவர், கர்தினால் சார்ல்ஸ் மாங்
போ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அருள்பணி ஸ்டான் சுவாமி
அவர்கள், அநீதிகள் பெருகியிருக்கும்
தெருக்களிலும், மலை
முகடுகளிலும், தன்
பலிபீடத்தை நிறுவி, அருள்பணித்துவத்திற்கு
ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தார் என்றும், பழங்குடியினரிடையே, மனிதமாண்பு, மற்றும், நீதி, ஆகிய நற்செய்தியை பகிர்ந்துகொண்டார் என்றும் கூறினார்.
பன்னாட்டு வர்த்தகப் பேராசையினால்
ஒவ்வொரு நாளும் சிலுவையில் அறையப்பட்ட அப்பாவி பழங்குடியினரிடையே உழைத்துவந்த அருள்பணி
ஸ்டான் அவர்கள், இறுதியில்
தானே சிலுவையில் அறையப்பட்டு, கிறிஸ்துவின்
உண்மையான சீடராக உயிர்துறந்தார் என்றும், காந்தியடிகளின் வன்முறையற்ற அகிம்சை வழியைப்
பின்பற்றிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தியாவின் வறியோர் நடுவே வாழ்ந்த இன்றைய
புனிதர் என்றும் கர்தினால் போ
அவர்கள், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
அருள்பணி ஸ்டான் அவர்களின்
மரணத்தையொட்டி எழுப்பப்பட்டுவரும் கண்டனக் குரல்கள், மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டம் என்ற இருவகையான
பதிலிறுப்புக்களில், இந்த ஞாயிறன்று, நாம்,
அருள்பணி ஸ்டான் அவர்களின் வாழ்வையும், மரணத்தையும், இறைவாக்கினர் ஒருவரின் வாழ்வோடும், மரணத்தோடும் ஒப்பிட்டு சிந்திக்க முயல்வோம்.
சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் இறைவாக்கினர்களை மையப்படுத்திய
வாசகங்கள் நம் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளன. ஓர் இறைவாக்கினர் எவ்வாறு தன் சொந்த ஊரிலேயே
துன்பங்களை எதிர்கொள்கிறார் என்பதை, ஜூலை 4, சென்ற ஞாயிறு வழிபாட்டில் நாம் சிந்தித்த
வேளையில், மும்பை மருத்துவமனையில்,
அருள்பணி ஸ்டான் அவர்கள், மரணத்தின் நுழைவாயிலை
நெருங்கிக்கொண்டிருந்தார். அதற்கடுத்த நாள், ஜூலை 5, திங்களன்று, இந்திய நேரம், பிற்பகல்
1.20 மணியளவில், அவர் தன் உயிரை இறைவனின்
கரங்களில் ஒப்படைத்தார். சக்தியும், செல்வமும், சுயநலமும் மிகுந்தவர்களால் புறக்கணிக்கப்பட்ட
ஓர் இறைவாக்கினராக, அதேவேளையில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக அவர்,
இவ்வுலகிலிருந்து விடுதலை பெற்றார்.
இறைவாக்கினர்கள் அனைவருமே, தங்களை முன்னிறுத்தாமல், இறைவனையும், அவர் தங்களுக்கு வழங்கிய செய்தியையும், முன்னிறுத்தி உழைத்தவர்கள். தங்களையே மறைத்து, அழித்து, இறைவனை மட்டுமே வெளிப்படுத்திய இறைவாக்கினர்களில்
ஒருவரான ஆமோஸ், இன்றைய முதல் வாசகத்தில்
நமக்கு அறிமுகமாகிறார்.
விவிலியத்தில் நாம் சந்திக்கும்
அத்தனை இறைவாக்கினர்களும் தீப்பிழம்புகள். இவர்களில், இறைவாக்கினர் ஆமோஸ், மிக உக்கிரமாக எரிந்த ஒரு தீப்பிழம்பு. அவரது
நூலில் நாம் கேட்பதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர்
விடுத்த எச்சரிக்கைகள்.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலில்
9 பிரிவுகள் உள்ளன. 146 இறைவாக்கியங்கள் உள்ளன. இவற்றில் 5 இறைவாக்கியங்களே ஒரு நிகழ்வாகத்
தரப்பட்டுள்ளன. இறைவாக்கினர் ஆமோசுக்கும், தலைமைக் குருவான அமட்சியாவுக்கும் இடையே
நிகழும் உரையாடல் அது. இந்த உரையாடல் இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது. ஏனைய
141 இறைவாக்கியங்கள், ஆமோஸ் வழியாக, இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர்
விடுத்த எச்சரிக்கைகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆமோஸ் கூறிவந்த கசப்பான
உண்மைகளைக் கேட்க மறுத்த தலைமைக்குரு அமட்சியா, பெத்தேல் பகுதியைவிட்டு ஆமோசை ஓடிப்போகச்
சொல்கிறார். "அரசனின் இடமான பெத்தேலில் இறைவாக்கு உரைக்காதே, வேண்டுமெனில் யூதேயா நாட்டுக்கு ஓடிப்போய், அங்கு இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்று அமட்சியா அறிவுரைத் தருகிறார்.
அமட்சியா சொல்வதை ஆழ்ந்து
சிந்தித்தால், அவர், இறைவாக்கினர் என்ற
வேடமணிந்த ஓர் அரசியல்வாதி என்பதைப் புரிந்துகொள்ளலாம்: "ஆமோஸ், பெத்தேலில் நாங்கள் அரசனைப் புகழ்ந்து பாடி
பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறோம். அரசனுக்கும், மக்களுக்கும், நீ கூறும் எச்சரிக்கைகள்,
எங்கள் பிழைப்பைக் கெடுத்துவிடும். எனவே, எங்கள் பிழைப்பைக் கெடுக்காமல், நீ யூதேயாவுக்குப் போய், அங்கே இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்பதே, ஆமோசுக்கு, அமட்சியா கூறும் அறிவுரை. ஓர் இறைவாக்கினர்
எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதை, அமட்சியாவின் சொற்களில்
நாம் கற்றுக்கொள்ளலாம்.
அமட்சியாவின் இந்த வார்த்தைகளைக்
கேட்டதும், ஆமோஸ் என்ற தீப்பிழம்பு, இன்னும் அதிகமாகக் கொழுந்துவிட்டு எரிகிறது.
"இறைவாக்கு உரைப்பது ஒரு பிழைப்புக்கென்றால், நான் இறைவாக்கினன் அல்ல. அரசனுக்குத் துதிபாடும்
இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் அல்ல" என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.
"நான் பிழைப்பு தேடிக்கொள்ள வேண்டுமெனில், ஆடு, மாடு மேய்த்து வாழமுடியும்" என்று சுட்டிக்காட்டுகிறார், ஆமோஸ்.
பிழைப்புக்காக இறைவாக்கு
உரைப்பது, மந்திரம் சொல்வது, பலிகள் ஆற்றுவது, போதிப்பது என்று வாழ்ந்த போலி இறைவாக்கினர்கள்
மத்தியில், ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள்
அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர்.
பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு; வாழ்வை, குறிப்பாக, நிலைவாழ்வைத் தேடிக்கண்டடைவது வேறு, என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்வுப்பாதையைப் பிறருக்குக் காட்டிவரும்
அருள்பணி ஸ்டான் போன்ற இறைவாக்கினர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இயேசு தன் சீடர்களை அருள்பணிக்கு
அனுப்பிவைக்கும் இன்றைய நற்செய்திப் பகுதியும் ஒரு சில முக்கியமான பாடங்களைச் சொல்லித்தருகிறது.
முதல் பாடம்... இயேசு
தன் சீடர்களை அனுப்பிய வேளையில், அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் என்று நற்செய்தியில்
வாசிக்கிறோம். எவ்வகை அதிகாரம்? இயேசுவின் சீடர்கள், மக்களுக்குப் பணிபுரியச் செல்கின்றனர். அம்மக்கள்
மீது அதிகாரம் செலுத்த இயேசு அவர்களை அனுப்பவில்லை. மாறாக, அம்மக்கள் மத்தியில் வளர்ந்திருந்த தீய சக்திகள்
மீது அதிகாரம் அளித்தார். மக்களுக்காகப் பணிபுரிந்த இயேசு, அவர்களை, தீய சக்திகளிலிருந்து விடுதலை செய்யவே, தன்
அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அதே பாடத்தை, தன் சீடர்களுக்கும் இயேசு சொல்லித்தந்தார்.
அதே சக்தியை, அவர்களுக்கும் வழங்கினார்.
மக்களுக்குப் பணியாற்றுவதாக
மேடைகளில் முழங்கி, வாக்குகளைப் பெற்று, ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள், மக்களை வதைக்கும் தீய சக்திகளுடன் கரம்கோர்த்து, மக்களை நசுக்குவது, உலகெங்கும் நிகழ்கிறது. இத்தகைய போலியான
மக்கள் பணியாளர்கள், அருள்பணி ஸ்டான் போன்ற
உண்மையான மக்கள் பணியாளர்களைச் சந்திக்கும் வேளையில், தங்கள் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சத்தில், உண்மைப் பணியாளர்களை இவ்வுலகினின்றே அகற்றிவிடுவதை
நாம் மீண்டும், மீண்டும் கண்டுவருகிறோம்.
பணியாளர், வார்த்தைகளால் மட்டும் போதிப்பது பயனளிக்காது, அவரது வாழ்வாலும் போதிக்கவேண்டும் என்பது, இயேசு சொல்லித்தரும் இரண்டாவது பாடம். பணியாளரின்
வாழ்வு, மிக எளிமையான வாழ்வாக
இருக்கவேண்டும் என்பதை, “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு,
பை,
இடைக்கச்சையில் செப்புக்
காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்
கொள்ளலாம்; அணிந்திருக்கும்
அங்கி ஒன்றே போதும்” (மாற்கு 6: 8-9) என்ற இயேசுவின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன.
வாழ்க்கைப் பயணம் எளிமையாய் அமைந்தால், தேவையில்லாத சுமைகளை உள்ளத்தில் தாங்கி, பயணம் முழுவதும் பாடுபடவேண்டாம் என்று இயேசு
சொல்வது எல்லாருக்கும் பொதுவான ஒரு நல்ல பாடம்.
அருள்பணி ஸ்டான் அவர்கள்
வாழ்ந்த மிக எளிமையான வாழ்வுக்கு பல நூறுபேர் சாட்சிகள். தன் பணியின் இலக்குமக்களென
அவர் தெரிவுசெய்த பழங்குடியினர், மற்றும் தாழ்த்தப்பட்டோர்
ஆகியோரின் வாழ்வு முறை, அவரது வாழ்வு முறையாக
மாறியது.
"உங்களை வரவேற்பவருடன்
தங்கி இருங்கள், வரவேற்க
மறுப்பவர்களிடமிருந்து விரைவில் விலகிச்செல்லுங்கள்" என்பது, இயேசு நமக்குச் சொல்லித்தரும் மூன்றாவது
பாடம். வரவேற்பு இல்லாத இடங்களிலிருந்து செல்லும்போது, “உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்” என்பதை இயேசு குறிப்பிட்டுச் சொல்கிறார்.
கால் தூசியை உதறிவிடுவதை, நாம் வழக்கமாக, ஒரு கோபச்செயலாக, நம்மை வரவேற்காதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையாகவே
சிந்தித்துள்ளோம். இச்சொற்களை மற்றொரு கோணத்திலும் சிந்திக்கலாம். பணிசெய்ய செல்லுமிடத்தில்,
சரியான வரவேற்பு இல்லையென்றால், அந்த கசப்பான எண்ணங்களைச்
சுமந்துகொண்டு, அடுத்த இடம் செல்லவேண்டாம். அந்த கசப்பை அங்கேயே விட்டுவிடுங்கள்.
காலில் படிந்த தூசியைத் தட்டுவதுபோல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களை
தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொல்வதாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.
நம் உறவுகள், அல்லது, நண்பர்கள் நடுவே சரியான வரவேற்பு நமக்குக்
கிடைக்கவில்லையென்ற கசப்பான எண்ணங்களை நம்மில் எத்தனை பேர் சுமந்து வருந்துகிறோம்.
பல வேளைகளில், இந்தக் கசப்புணர்வுகள், காலில் படிந்த தூசியாக இல்லாமல், கண்களில் விழுந்த தூசியாக உறுத்திக்கொண்டே
இருக்கும். எந்த ஒரு கசப்பான நினைவையும், எண்ணத்தையும் கால் தூசியெனக் கருதி உதறிவிடுவதும், கண் தூசியாக சுமந்து வருந்துவதும் நமக்குத்
தரப்பட்டுள்ள சுதந்திரம்.
இத்தகையச் சுதந்திரத்தை
தகுந்தமுறையில் பயன்படுத்தியவர், அருள்பணி ஸ்டான் என்பது நிச்சயம். ‘பார்க்கின்சன்ஸ்’ என்ற
நரம்புத்தளர்ச்சி நோயாலும், முதிர்ந்த வயதுக்கே உரிய
உடல்நலக் குறைவுகளாலும் துன்புற்ற ஸ்டான் அவர்களுக்கு, சிறை அதிகாரிகள், அடிப்படை தேவைகளையும் மறுத்தனர் என்பதைக்
கேள்விப்பட்ட நாம், ஆத்திரம் அடைந்தோம். ஆனால், அவரோ, தனக்குக் கிடைக்காதவற்றை கால் தூசியாகத்
தட்டிவிட்டுவிட்டு, தனக்கு உதவிகள் செய்த
உடன் சிறைக்கைதிகளைப் பற்றியே பேசிவந்தார் என்பது, அவர் பெற்றிருந்த உள்மனச் சுதந்திரத்தை உலகறியச்
செய்தது.
இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைக்கப்பட்டுள்ள
நாம் அனைவருமே கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்களை, இன்றைய வாசகங்கள் வழியே, அருள்பணி
ஸ்டான் சுவாமி போன்ற இறைவாக்கினர்கள் வழியே, நமக்குச் சொல்லித்தந்த இறைவனுக்கு, நன்றி
பகர்வோம்.
நம் சிந்தனைகளை நிறைவு
செய்வதற்குமுன், ஓர் ஆன்மீகத் தேடலுக்கு
நம்மையே உட்படுத்துவோம். அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைக் குறித்து ஜூலை 5ம் தேதி
திங்கள் முதல் வெளியாகிவரும் பல்வேறு பதிவுகளில், புதுடில்லி புனித ஸ்தேவான் கல்லூரியின் முன்னாள்
முதல்வர், அருள்திரு வால்சன் தம்பு
(Valson Thampu) அவர்களின் சிந்தனைகள், ஓர் ஆன்ம ஆய்வு செய்ய நம்மை அழைக்கிறது.
"தந்தை
ஸ்டான் சுவாமி அவர்கள் இனி இல்லை. அவரது மரணத்திற்காக துக்கம் கொள்வது எனக்கு சங்கடத்தைத்
தருகிறது. அதற்குப்பதில், எனக்குள் ஒரு புதிரான
மகிழ்வு உண்டாகிறது. இதை, ஒருவகையான நிம்மதி என்றும் சொல்லலாம்.
நம் உயிரைக் காத்துக்கொள்ளும்
அச்சத்தால், ஒரு வார்த்தையும் சொல்ல துணிவில்லாதபோது, அவருடைய மரணத்திற்காக
துக்கம் கொள்ள நாம் யார்?
நம்முடைய கவலைகளெல்லாம் நம் வயிற்றைத் தாண்டிச்செல்ல
தயங்கும்போது, இந்த உன்னத ஆன்மாவின்
மரணத்திற்காக வருத்தமடைய நாம் யார்?
அவர் விட்டுச் சென்ற நம் அனைவருக்காகவும்
நான் வருத்தமடைகிறேன். நாம் சிறைகளில் அடைக்கப்படப்போவதில்லை. அது தேவையும் இல்லை.
நாமே நமது சிறைகளாயிற்றே.
தந்தை ஸ்டான் அவர்களே, நன்றாக துயில் கொள்ளுங்கள்.
உங்கள் போராட்டம் முடிவுற்றது. எங்களுடையது, இன்னும் தொடர்கிறது. எங்கள்
போராட்டம் உங்கள் போராட்டத்திற்கு இணையல்ல. ஏனெனில், எங்கள் போராட்டம், எங்களைச்சுற்றியே
அமைந்துள்ளது."
No comments:
Post a Comment