Palm Sunday
Today we
celebrate the Palm Sunday and along with that, we begin the Holy Week. Hence,
our reflections today revolve around – Palm Sunday and Holy Week.
Let us begin with ‘Palm Sunday’.
When searching
for thoughts on the Palm Sunday, I came across a news headline, namely, “Palm
Sunday Tornado 1920”. I could not have asked for a better starting point
for my reflections. ‘Palm Sunday’
and ‘Tornado’ seem like the first two links to begin a chain of thoughts. Tornadoes, I am told, are a common feature
in the U.S., especially in the months of March and April. Here is the excerpt
from an article in Wikipedia:
The Palm Sunday
tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant tornadoes
across the Midwest and Deep South states on March 28, 1920. The tornadoes left
over 380+ dead, and at least 1,215 injured.
Here is another
excerpt from the same article that acknowledges the discrimination prevalent in
those days: According to Thomas P. Grazulis, head of the Tornado Project,
the death tolls in the southern states on Palm Sunday 1920, could have easily
been much higher, since the deaths of non-whites were omitted as a matter of
official state protocol, even when it came to fatalities from natural disasters…
The tornadoes that hit Deep South on March 28, did in fact strike sections of
towns that had sizable black populations. No survey information was conducted
at this time to determine the actual death toll in these areas which, could be
substantially much higher. (Cf. https://www.rarenewspapers.com/view/568225)
We are sadly aware
that such discrimination prevails even today in the official reporting of the
number of persons killed or affected by natural disasters, communal riots and
wars. For the government circles, these poor people do not count. Among the
Israelites too, during the time of Jesus, there were those who did not count.
Those ‘not-to-be-counted’ people created a tornado in Jerusalem when Jesus
entered the city. Most of the people in Jerusalem, especially those in power,
were caught off-guard by this ‘intruder’ called Jesus, and His ‘not-to-be-counted’
people.
Tornado has another
name ‘twister’ since it twists and turns things at will! Jesus’ entry into Jerusalem must have turned
the lives of the religious leaders and the Roman officials topsy-turvy. As if this
was not enough, Jesus entered the very fortress of the religious leaders –
namely, the Jerusalem Temple – and began to put things in order. Putting things
in order? Well, depends on which point of view one takes. For those in power,
things were thrown completely out of gear; but, for Jesus and for those who
believed in His ways, this was a way to set things straight. This is typical of
a tornado… uprooting, turning things topsy-turvy. A tornado is, possibly, a
call to begin anew!
We turn our attention
to the second term – the Holy Week. The Holy Week begins with the Palm
Sunday. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What
is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial
of another friend, the mock trial, the condemnation of the innocent and the
brutal violence unleashed on Jesus…? None of these comes close to the
definition of holiness. But, for Jesus, definitions are there only to be
‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, He
wanted to redefine God – a God who was willing to suffer.
Jesus had also
redefined holiness and made it very clear that in spite of all the events that
took place during this week, one could call this week Holy since these events
resulted in the Supreme Sacrifice. Death by crucifixion was the most painful
torture the Romans had invented. The cross was the most despised form of
punishment reserved for the worst criminals. Jesus on the Cross had made this
most derogatory symbol of punishment and death into a symbol of veneration and
a channel of salvation. This is the reason we are invited to celebrate this
week as the Holy Week!
One final thought. The culmination of the Holy Week is the
Sacred Triduum, which begins with Maundy Thursday on April 14. On April 14,
people belonging to the Tamil culture celebrate the New Year Day. Every New
Year brings to mind new resolutions. These resolutions are usually meant to
better one’s personal life. But, there have been great thinkers and poets who
have also dreamt of the betterment of human society in general. One such poet
is Bharathi Thasan, who took up this pen name since he was a great admirer of
Bharathi, the immortal Tamil poet. Bharathi Thasan has dreamt of a world where
selfishness and war are to be weeded out.
In his poem ‘Puthiyathor
Ulagam Seyvom’ meaning, ‘We shall create a new world’, Bharathi Thasan says: “Let
us uproot the obnoxious world of war and create a new world order… Let us soak
all the hearts in the river of love and wash away the filth of selfishness”
These lines of
Bharathi Thasan sound all the more relevant, since, April 14, is also observed
as the ‘Global Day of Action on Military Spending (GDAMS)’. Each Spring,
the Stockholm International Peace Research Institute (SIPRI) releases a report
on global military spending. The report released by SIPRI on 26 April 2021
says: Total global military expenditure rose to $1981 billion last year
(2020). The five biggest spenders in 2020… were the United States, China,
India, Russia and the United Kingdom. The 2.6 per cent increase in world
military spending came in a year when global gross domestic product (GDP)
shrank by 4.4 per cent, largely due to the economic impacts of the Covid-19
pandemic.
It is painful to learn
that military spending increased even during the pandemic. Unfortunately, it
increased after Ukraine was invaded. When Vladimir Putin, the Russian President
began invading Ukraine as a result of his madness to extend his power, instead
of condemning his actions or stopping this senseless aggression quite a few
countries have allotted more funds to buy military equipment. If the total
global military expenditure (close to 2 trillion dollars) is spent to ‘wage
war’ against poverty, our world will become a safer place for everyone.
Pope Francis, on his return flight from Malta on
March 3, last Sunday, spoke to the journalists about how we seem to love war
and spend money to buy more war weapons. Here are his words:
Every war stems from an injustice, always, because
that is the pattern of war. This is not a pattern for peace. For example,
making investments to buy weapons. Some people say: ‘But we need them to defend
ourselves.’ This is the pattern of war. When World War II ended everyone
breathed "never more war". There began a wave of work for peace with
the goodwill not to give weapons, atomic weapons, after Hiroshima and Nagasaki.
There existed a great goodwill.
Seventy years later we have forgotten all that.
That's how the pattern of war imposes itself. There was so much hope in the
work of the United Nations then. But the pattern of war has imposed itself
again. We cannot imagine another pattern. We are not used to thinking of the
pattern of peace anymore. There have been great people like Gandhi and others… who
have bet on the pattern of peace. But as humanity we are stubborn. We are in
love with wars, with the spirit of Cain… the "Cainist" spirit of
killing instead of the spirit of peace…
After this, Pope Francis spoke about his visits to
two war memorials in Italy, namely Redipuglia and Anzio. The Redipuglia War
Memorial is a World War I memorial located in the region of north-eastern
Italy. It is the largest war memorial in Italy and one of the largest in the
world, housing the remains of 100,187 Italian soldiers killed between 1915 and
1917.
Anzio War Cemetery, in Italy is a special and
communal cemetery for the local and surrounding peoples. It contains 1,056
graves resulting from Operation Shingle in 1944 as part of World War II. Pope
Francis recalls how he shed tears visiting those war memorials…
I'll tell you something personal: In 2014, when I
was in Redipuglia and saw the names of the dead, I cried. I truly cried out of
bitterness. Then, a year or two later, for the Day of the Dead, I went to
celebrate in Anzio and saw the names the men who fell there. They were all
young men, and I cried there, too. I really did. We must cry on the graves… Youth
does not matter. That makes me wonder. I am grieved. We never learn. May the
Lord have mercy on us, on all of us. Every one of us is guilty!
The Global
Day of Action on Military Spending which coincides with Maundy Thursday of the
Holy Week, reminds us of the senseless wars waged in the world. It also reminds
us of the dream of the Prophet Zechariah. The entry of Jesus into Jerusalem was already dreamt by the Prophet Zechariah as a
process of ‘disarmament’: Rejoice greatly, O Daughter of
Zion! Shout, Daughter of Jerusalem! See, your king comes to you, righteous and
having salvation, gentle and riding on a donkey, on a colt, the foal of a
donkey.
This dream is further expanded to include the
mission of this king: I will take away the chariots from Ephraim and the
war-horses from Jerusalem, and the battle bow will be broken. He will proclaim
peace to the nations. His rule will extend from sea to sea and from the River
to the ends of the earth.
(Zechariah 9: 9-10)
Isn’t this our dream too? A world without weapons? A
world without war?
May the Prince of Peace as envisaged by the Prophet Zechariah, bring true peace
to all the countries, especially Russia, Ukraine, Syria and Sri Lanka, torn by war
and hatred. May all of us, especially the Youth, become architects of a ‘world
without war’ and realize the dream envisaged by the Prince of Peace entering
Jerusalem on the Palm Sunday!
The Prince of Peace
குருத்தோலை ஞாயிறு
திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கிய நாள்களை இன்று நாம் துவக்குகிறோம்.
குருத்தோலை ஞாயிறு அல்லது, பாடுகளின் ஞாயிறு என்றழைக்கப்படும்
இஞ்ஞாயிறை அடுத்துவரும் வாரத்தை, புனித வாரம் என்று
சிறப்பிக்கிறோம். குருத்தோலை ஞாயிறு, மற்றும், புனித வாரம் என்ற இரு
கருத்துக்களை மையப்படுத்தி இன்றைய சிந்தனைகளை மேற்கொள்வோம். முதலில், குருத்தோலை
ஞாயிறு...
இன்று நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக்
கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: குருத்தோலை ஞாயிறு
சூறாவளி 1920 (The Palm Sunday Tornado
1920). அமெரிக்காவின் Georgia,
Indiana, Ohio பகுதிகளில் 1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று உருவான 38
சூறாவளிகளால் பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன. ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மார்ச் முதல், ஜூன் முடிய உள்ள நான்கு மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி
வரும் ஒரு செய்தி சூறாவளிகள். சூறாவளி தாக்கும் மாதங்களில் தான் குருத்தோலை ஞாயிறும்
கொண்டாடப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது,
பல எண்ணங்கள் உருவாகின்றன. முதல் குருத்தோலை ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம்
நகரைத் தாக்கியது. இயற்கை உருவாக்கிய சூறாவளி அல்ல, இயேசு என்ற ஓர் இளையப் போதகரின் வடிவில் எருசலேமுக்குள் நுழைந்த
சூறாவளி அது.
சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு பெயர்த்துவிடும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், எல்லாவற்றையும்
தலைகீழாக மாற்றின என்பதை உணரலாம்.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத்தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியதுபோல்
இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம், இந்தக் குருத்தோலை ஊர்வலம். இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மதத்தலைவர்களின் அதிகாரப்
பீடமாக விளங்கிய எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அவலங்களை சீராக்கினார். எனவே, இந்தக் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு
சூறாவளிதானே!
அடுத்து, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனித வாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா முடிய உள்ள இந்த ஏழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரமாகக் கொண்டாட அழைக்கிறார். வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களை நாம்
நினைவுகூர்வதால், இதை, புனித வாரம் என்றழைக்கிறோம். ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத்
தெரியவில்லையே!
நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார்.
மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற
பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.
நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம்
எங்காவது தெரிந்ததா?
புனிதம் என்ற சொல்லுக்கு, வேறோர் இலக்கணம் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே
மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி,
வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.
கல்வாரி என்றதும் நம் சிந்தனைகளில்
ஆழப்பதியும் ஓர் அடையாளம்... சிலுவை! உரோமையர்கள் கண்டுபிடித்த சித்ரவதைக் கருவிகளிலேயே மிகவும்
கொடூரமானது, சிலுவை. மிகப்பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர்கள் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக்கருவிதான் சிலுவை. அந்த அவமானச்
சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, நாம், கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசு, தன் கொடிய மரணத்தின் வழியே, கோடான கோடி மக்களுக்கு மீட்பைக் கொணர்ந்துள்ளார். அந்த
மீட்பைக் கொண்டாடுவதே, புனித வாரத்தின் முக்கிய நோக்கம்.
இறுதியாக ஒரு சிந்தனை: ஏப்ரல் 14, நாம் பெரிய வியாழன் நிகழ்வுகளை நாம் கொண்டாடும் வேளையில், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடுகிறோம்.
பொதுவாக, புத்தாண்டு நாளன்று, வாக்குறுதிகள் எடுப்பது, பல கலாச்சாரங்களிலும் காணப்படும்
வழக்கம். ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்த எடுக்கப்படும் வாக்குறுதிகள்
இவை. தனிப்பட்ட வாழ்வை மட்டுமல்ல, சமுதாய வாழ்வையும் மேம்படுத்த, கனவுகள் தேவை, கனவுகளை நனவாக்க மன உறுதியுடன் கூடிய வாக்குறுதிகள் தேவை. தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், இவ்வுலகிற்கும் தேவையான கனவை, வாக்குறுதியாக முழங்கிச் சென்றுள்ளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவர் முழங்கிய
வாக்குறுதி இதோ:
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது எனும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)
பாரதிதாசனின் இவ்வரிகளை இவ்வேளையில் எண்ணிப்பார்க்க மற்றொரு
முக்கியக் காரணம் உண்டு. உலகின் பல நாடுகளில், ஏப்ரல் 14, வியாழனன்று, ஓர் உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. "இராணுவச் செலவை எதிர்க்கும் நாள்"
உலகின் பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது. Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற ஆய்வு நிறுவனம்,
ஒவ்வோர் ஆண்டும் இராணுவச் செலவைக் குறித்தப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது.
இந்நிறுவனம், 2021ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 2020ம் ஆண்டு உலக நாடுகள் இராணுவத்திற்கு
செலவிட்ட மொத்தத் தொகை... 1,98,100 கோடி டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
2020ம் ஆண்டு, உலகின் அனைத்து நாடுகளிலும் கோவிட் 19
பெருந்தொற்று பெரும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தியதால் பல்வேறு நாடுகளில் மக்கள்நலத்
திட்டங்கள் பல நிறுத்தப்பட்ட நேரத்திலும், இராணுவச் செலவில் மட்டும் அரசுகள்
கூடுதல் நிதியை ஒதுக்கிவைத்தன என்பதை அறியும்போது, வேதனைப்படுகிறோம்.
2020ம் ஆண்டில் இராணுவத்திற்கு உலக நாடுகள் செலவிட்ட 1,98,100 கோடி டாலர்கள், அதாவது, 1,49,50,600 கோடி ரூபாய் என்ற தொகையில் பத்தில் ஒரு பகுதியையாகிலும, மக்களின்
வறுமை, பசி ஆகியவற்றைப் போக்கும் திட்டங்களுக்குச் செலவிட்டிருந்தால், குறிப்பாக,
கோவிட் பெருந்தொற்றினால் தங்கள் வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்திருந்த மக்களின்
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களுக்குச் செலவிட்டிருந்தால், அனைவரும் பாதுகாப்பு
உணர்வுடன் வாழ்ந்திருக்கமுடியும். உலகில் போர் என்ற எண்ணமே எழாமல் போயிருக்கும்...
இல்லையா?
கடந்த சனி, ஞாயிறு - ஏப்ரல் 2,3 - ஆகிய இரு நாள்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மால்டா
நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து உரோம் நகருக்குத் திரும்பி வந்த விமானப்
பயணத்தில், தன் வழக்கப்படி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உக்ரைன் நாட்டில் நடைபெற்றுவரும் போரைப்பற்றிய கேள்வி எழுந்தபோது, அவர் சொன்ன கருத்துக்கள் நம்மைச் சிந்திக்க தூண்டுகின்றன:
"இரண்டாவது உலகப்போர் முடிவுற்றபோது, 'இனி ஒருபோதும் போர் கிடையாது' என்ற உறுதியான உள்ளத்துடன்,
ஐ.நா. அவையும், உலக நாடுகள் பலவும் அமைதியின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஜப்பான் நாட்டின்
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு உருவாக்கிய அழிவுகளைக் கண்ணுற்ற
உலகத் தலைவர்கள், அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேசிவந்தனர். ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பின்,
மீண்டும் உலகத்தலைவர்கள், அணு ஆயுதங்களையும், வேறு இராணுவக் கருவிகளையும் வாங்கிக் குவிக்கின்றனர்.
போரிடுவது, இன்றைய உலகில் ஊறிப்போன ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.
தன் உடன்பிறந்த ஆபேலைப் கொன்ற காயினின் கொலை வெறியே நமக்குள் ஆழப் புதைந்துள்ளது" என்று கூறினார் திருத்தந்தை.
இதைத்தொடர்ந்து, தன் தனிப்பட்ட அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டார்.
கடந்த சில ஆண்டுகளில், இத்தாலியில், போரில் இறந்த இராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டுள்ள
இரு பெரும் கல்லறைகளுக்கு தான் சென்றதை குறிப்பிட்டுப் பேசினார். போர் என்ற பெயரால், அந்தக் கல்லறைகளில் இலட்சக்கணக்கான இளையோரை கொன்று புதைத்துள்ளதை
எண்ணி தான் கண்ணீர் சிந்தியதாகக் கூறினார். இறுதியாக, "ஆயிரமாயிரம் இளையோரை போர்க்களங்களில் பலியாக்குவதைக் குறித்து
நம் தலைவர்களுக்கு அக்கறை ஏதும் இல்லை. இளையோரை ஒரு பொருட்டாகவே நாம் மதிப்பதில்லை.
இது என்னை அதிகம் வேதனைப்படுத்துகிறது. நாம் எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறோம்? இறைவன் நம் அனைவர் மீதும் இரக்கம் காட்டவேண்டும். நாம் அனைவருமே குற்றம் புரிந்தவர்கள்!" என்று கூறி முடித்தார், திருத்தந்தை.
குருத்து ஞாயிறு, அதைத் தொடரும் தமிழ் புத்தாண்டு நாள், அதே நாளில் கடைபிடிக்கப்படும் "இராணுவச் செலவை எதிர்க்கும் நாள்" ஆகிய
அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கும்போது, அமைதியின் மன்னன் இயேசு எருசலேமில் நுழைவதை குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின்
வார்த்தைகள் நம் எண்ணங்களில் எதிரொலிக்கின்றன:
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ!
உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.
அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும்.
வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.
(செக்கரியா 9: 9-10)
போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி என்ற கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில்
நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய
வேண்டுவோம். குறிப்பாக, உக்ரைன், இலங்கை, சிரியா ஆகிய நாடுகளில் அமைதியின் அரசனாம்
இயேசு வலம்வர வேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம். போரற்ற புத்தம் புது பூமியை உருவாக்கும்
முக்கியச் சிற்பிகள் இளையோர் என்பதால், அவர்களை இறைவன் இன்று சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear Fr. Jerry I was very much moved after reading your reflections on the Palm Sunday. The way you have weaved the reflection on the word 'Holy' in the holy week is highly impressive. Actually I was able feel closely with the Tamil Translation. The choice of words really hits the meaning to the core and the heart to the depth personally. Thank you for your silent but strong and deep service. Wenish.SJ
ReplyDeleteDear Fr Wenish,
ReplyDeleteThank you for the very positive feedback. Your comments suggest that you have given a careful reading of both the English and Tamil versions. I am glad that these reflections have been helpful to you at the start of the Holy Week. Wish you a fruitful Holy Week experience.
Jerry SJ.