Christ is Risen!
Easter
Sunday
‘Risen’, a movie
released in 2016, deals with how the Romans handled the news about the missing
body of Jesus. In this movie, Clavius, a Roman
military tribune, is shown as present on Calvary during the final moments of Jesus. To
ascertain the death of Jesus, Clavius orders a soldier to pierce his side with
a spear. Hence, when he hears of the missing body of Jesus, Clavius begins a violent
hunting of the followers of Christ to find out where they have hidden his body.
In this search, Clavius meets Jesus in the company of the other disciples and,
eventually, becomes a disciple of Jesus. Although Clavius is not mentioned in
the gospels, he represents millions of people who have been searching for the
extraordinary truth about the Resurrection of Christ.
One scene in this
movie, taking place in the palace of Pilate, helps us to reflect on this feast. When the Roman officials
get worried about the missing body of Jesus, and the rumour that He is risen, Pilate
poses the question: “Will the people believe it?”, to which one of the Jewish
priests, standing next to him, says: “The weak will”.
For the past 20
centuries,
we Christians, branded as ‘the weak’, have believed that Jesus is alive and we
celebrate this truth as ‘the Easter’ – the greatest of all our festivals. This
truth has given us, the Christians, to hold on to hope even when everything
around us seems hopeless. Here are a few examples of ‘hope-filled news’ that
emerged out of hopeless situations in the recent times:
On February 24,
2022, the Russian army began its unlawful and ruthless invasion of Ukraine. As
Russia bombarded Kyiv (the capital of Ukraine) on Friday (February 25) night, a
miracle unfolded amid the chaos when a 23-year-old woman, hiding in a subway
shelter, gave birth to a daughter. The young mother’s screams alerted the
Ukrainian police, who rushed to help her deliver the girl before calling for an
ambulance to take them to the hospital. The picture of the baby’s tiny hand
gripping her mother’s hand in the shelter, which was shared in the social
media, has been hailed as a ‘beacon of hope’ for the people of Ukraine in this
hour of crisis.
On October 23,
2011, an earthquake of 7.2 magnitude struck the town of Van in Turkey. As in
many other natural calamities, the loss of life in Van was increasing by the
hour. Yet, there also emerged some very poignant human stories of saving lives.
Here is one such report from thestar.com:
After 48 hours, a
miracle emerged from a narrow slit in the rubble of a Turkish apartment
building: a 2-week-old baby girl, half-naked but still breathing. Stoic rescue
workers erupted in cheers and applause at her arrival - and later for her
mother's and grandmother's rescues… The fact that three generations were saved
in a dramatic operation was all the more remarkable because the infant, Azra
Karaduman - her first name means desert flower in Turkish, reports CBS News
correspondent Mark Phillips - was later declared healthy after being flown to a
hospital in Ankara, the Turkish capital.
Mark Philips, the
CBS correspondent, said, “It is, the small human stories, not the big
statistics, that capture the imagination…” This is true. In the natural
calamities of earthquake and tsunami that occurred in Turkey and Japan (2011),
in Haiti (2010) and in the Asian countries (2004), the statistics may have
faded away from our memory; whereas, the stories of rescue have not only
captured our imagination, but have increased our faith in humanity and in God.
For the last two
years, COVID-19 pandemic has been devastating our world like an earthquake, a
tsunami, a tornado, or, a volcanic eruption. Every day our media was heaping on
us the news about the number of deaths, thus, trying to build a sepulchre in
our minds. Still, occasionally, there have been reports about how individuals
have helped their fellow human beings in their needs. We pray that our
reflections during this Easter Sunday liturgy help us break free from the mental
graveyard created by the media and focus our attention on to those events that
fill our hearts with hope that humanity is still alive.
On January 26,
2010, 15 days after the earthquake that devastated Haiti, Darlene Etienne, a 16-year-old
girl, was rescued from the crumbled concrete and twisted steel. This was
reported as an Easter experience. In the same year, 2010, when 33 miners in
Chile were rescued from the bowels of the earth after 69 days of struggle
(August 5 to October 13), all the bells in the country were rung in
thanksgiving. The president of the Chilean Bishops Conference, Bishop Alejandro
Goic Karmelic urged the whole nation to undertake fasting and prayer from
October 12 when the rescue mission was started. Once the rescue mission was
completed, he asked them to continue their prayers of thanksgiving for making
Chile, a witness to the power of Christ’s Resurrection. Many of those miners,
after their ‘resurrection’, went around the world, sharing their
faith-experience. Similarly, each of us is called to free ourselves from the
COVID-19 grave created by the media and believe in, as well as talk about, the
‘life-saving power’ ever present within us and around us.
The tales of
resurrection we have mentioned here have been headline news. But, in daily life,
‘resurrection’ keeps happening in very tiny little things around us. Most of
them go unnoticed by us, just like the original resurrection of Jesus. To see
those moments of resurrection, we need the eyes of love. Fr Ronald Rolheiser,
an Oblate priest, who is a specialist in the fields of spirituality and
systematic theology, reflects on the art of ‘Seeing the Resurrection’:
God never
overpowers, never twists arms, never pushes your face into something so as to
take away your freedom. God respects our freedom and is never a coercive force…
And nowhere is this more true than in what is revealed in the resurrection of
Jesus…
The resurrection
didn’t make a big splash. It was not some spectacular event that exploded into
the world as the highlight on the evening news. It had the same dynamics as the
incarnation itself: After he rose from the dead, Jesus was seen by some, but
not by others; understood by some, but not by others. Some got his meaning and
it changed their lives, others were indifferent to him, and still others
understood what had happened, hardened their hearts against it, and tried to
destroy its truth.
Notice how this
parallels, almost perfectly, what happened at the birth of Jesus: The baby was
seen by some, but not by others and the event was understood by some but not by
others. Some got its meaning and it changed their lives, others were
indifferent and their lives went on as before, while still others (like Herod)
sensed its meaning but hardened their hearts against it and tried to destroy
the child.
Why the
difference? What makes some see the resurrection while others do not? What lets
some understand the mystery and embrace it, while others are left in
indifference or hatred? Hugo of St. Victor used to say: Love is the eye! When
we look at anything through the eyes of love, we see correctly, understand, and
properly appropriate its mystery. The reverse is also true. When we look at
anything through eyes that are jaded, cynical, jealous, or bitter, we will not
see correctly, will not understand, and will not properly appropriate its
mystery.
We see this in how
the Gospel of John describes the events of Easter Sunday. Jesus has risen, but,
first of all, only the person who is driven by love, Mary Magdala, goes out in
search of him. While the other disciples remain as they are, locked inside
their own worlds, she was not locked up within herself with the pain of Calvary
or the fear of the Romans. She was willing to take the risk at least to embalm
the body of her beloved Master. She was rewarded! She became the ‘first
evangelist’ of the Resurrection.
Christ is risen,
though we might not see him! Especially with the enormous load of bad news that
reach us day after day, the hope of Resurrection fades away. The miraculous
doesn’t force itself on us. It’s there, there to be seen, but whether we see or
not, and what precisely we do see, depends mainly upon what’s going on inside
our own hearts. We need the eyes of love and a heart that holds on to hope to
see the ‘resurrection’ in tiny events around us.
We pray for this
grace from the Risen Jesus!
Mary Magdalene
ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா
இயேசுவின் வாழ்வையும்,
பாடுகளையும் மையமாகக் கொண்டு, பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில்,
இயேசுவின் உயிர்ப்பை மையமாகக்கொண்டு, 2016ம் ஆண்டு வெளிவந்த 'Risen' என்ற திரைப்படம் ஒரு சில
அதிர்வலைகளை உருவாக்கியது. இயேசுவின் உடல் கல்லறையில் இல்லை என்ற செய்தியை உரோமைய
அரசு அதிகாரிகள் எவ்வாறு சந்தித்தனர் என்பதை இத்திரைப்படம் விவரித்தது.
கல்வாரியில் இயேசுவின்
மரணத்தை நேரடியாகக் கண்டதோடு, அதை உறுதிசெய்வதற்கு, இயேசுவின் விலாவை ஈட்டியால்
குத்த உத்தரவிட்ட உரோமையப் படைத்தலைவன் கிளாவியுஸ் என்பவர், இயேசுவின் உடலை யூதர்கள் கடத்திச் சென்றுவிட்டனர் என்ற
எண்ணத்துடன், இயேசுவை பின்தொடர்ந்த அனைவரையும் வேட்டையாடி வதைப்பது,
இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இறுதியில், கிளாவியுஸ், இயேசுவைச்
சந்தித்து, அவருடைய சீடர்களில் ஒருவராக மாறுவது போன்று இத்திரைக்கதை
உருவாக்கப்பட்டுள்ளது. இயேசுவின் உயிர்ப்பை நம்பாமல், பின்னர் அவரது
உயிர்ப்புக்கு சாட்சியாக மாறிய கிளாவியுஸ், நற்செய்திகளில் இடம்பெறாத ஒருவர் என்றாலும், கோடான கோடி மக்களின்
பிரதிநிதியாக அவர் இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.
இத்திரைப்படத்தில்
இடம்பெறும் ஒரு காட்சி, உயிர்ப்பை நம் நம்பிக்கையின்
அடித்தளமாகக் கொண்டு வாழும் நம்மைக் குறித்த சிந்தனைகளை துவக்கி வைக்கிறது. இயேசு
மீண்டும் உயிர்த்துவிட்டார் என்ற செய்தி கலகத்தை உருவாக்கும் என்ற விவாதம்,
கிளாவியுஸ் முன்னிலையில், ஆளுநர் பிலாத்தின் அரண்மனையில் நடைபெறுகிறது. அப்போது, பிலாத்து, "மக்கள் இதை நம்புவார்களா?" என்ற கேள்வியை எழுப்புகிறார். அவர் அருகில் நிற்கும் மதத்
தலைவர் ஒருவர், "சக்தியற்ற கும்பல் இதை
நம்பும்" என்று பதில் சொல்கிறார்.
கடந்த 20 நூற்றாண்டுகளாக, 'சக்தியற்ற கும்பலாக' கருதப்படும் கிறிஸ்தவர்களாகிய
நாம், இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை,
மிகப்பெரும்
விழாவாகக் கொண்டாடி வருகிறோம். நம்மைச் சுற்றி, அனைத்தும் அழிந்துவிட்டதைப்போன்ற
உணர்வைத் தரும் நம்பிக்கையற்ற
சூழலிலும், நம்பிக்கை தருவதற்கு, கிறிஸ்தவ மறையின்
ஆணிவேராக விளங்கும் இயேசுவின் உயிர்ப்பு என்ற உண்மை, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும்
மேலாக நம்மை வழிநடத்தி வந்துள்ளது. அனைத்தும் அழிவுற்ற நிலையிலும், நம்பிக்கையை
வழங்கும் ஒரு சில செய்திகள், அண்மையக் காலங்களில், நம்மை வந்தடைந்துள்ளன. இதோ,
அவற்றில் ஒரு சில:
இவ்வாண்டு பிப்ரவரி 24ம்
தேதி, மதியிழந்த இரஷ்ய
அரசுத்தலைவன் விளாடிமீர் புடின் அளித்த அநீதியான ஆணைக்கு உட்பட்டு, இரஷ்ய இராணுவம் உக்ரைன்
நாட்டின் மீது தாக்குதல்களை துவங்கியது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் (Kyiv) மீது பயங்கரத்
தாக்குதல்கள் நடைபெற்ற பிப்ரவரி 25ம் தேதி இரவில், அந்நகரின் சுரங்க இரயில் நிலையங்களில் மக்கள்
பதுங்கியிருந்தனர். அவ்வேளையில், அங்கிருந்த 23 வயதான
இளம்பெண்ணுக்கு பிரசவ வேதனைத் துவங்கியது. அவர் எழுப்பிய அழுகுரலைக் கேட்ட
காவல்துறையினர், அப்பெண்ணுக்குத் தேவையான
உதவிகள் செய்ததால், அவர் ஒரு பெண்
குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் தாயும்,
சேயும் ஒரு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிருக்குப் பயந்து, சுரங்க இரயில் நிலையத்தில் தங்கியிருந்த இளம் பெண்ணின்
விரலை, அவரது குழந்தையின்
பிஞ்சுக் கரம் பற்றியிருந்த புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வெகு வேகமாகப்
பரவியது. அழிவை எதிர்நோக்கியிருக்கும் சூழலில்,
'நம்பிக்கையின்
ஒளிவிளக்கு' என்ற தலைப்புடன் இந்தப்
புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
2011ம் ஆண்டு, அக்டோபர் 23, ஞாயிறன்று, துருக்கி நாட்டின் Van என்ற நகரில் ஏற்பட்ட
நிலநடுக்கத்தால் (7.2 ரிக்டர் அளவு) பல நூறு கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. அன்றைய
நிலவரப்படி, 300க்கும் அதிகமானோர்
கொல்லப்பட்டனர்; 2000த்திற்கும்
அதிகமானோர் காயமுற்றனர். ஒரு வாரத்தில், இறந்தோரின் எண்ணிக்கை 604 என்றும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 4,100 என்றும் கூறப்பட்டது. மரணங்களின் எண்ணிக்கை குறித்த
செய்திகள் வெளிவந்த அதே நாள்களில், வாழ்வைப்பற்றிய
ஒரு செய்தியும் வெளியானது. பிறந்து, 2 வாரங்களே ஆகியிருந்த, Azra Karaduman என்ற குழந்தை, நிலநடுக்கம் ஏற்பட்டு 48
மணி நேரங்கள் சென்று, இடிபாடுகளின்
நடுவிலிருந்து காப்பாற்றப்பட்டது. அதுமட்டுமல்ல, அக்குழந்தை காப்பற்றப்பட்ட அதே இடத்தில், குழந்தையின் தாயும் (Semiha), பாட்டியும் (Gulsaadet) மீட்கப்பட்டனர்.
இக்குழந்தையை,
"நம்பிக்கையின் முகம்" என்று ஊடகங்கள் அழைத்தன. Azra என்ற அக்குழந்தையின்
பெயருக்கு, "பாலைநிலத்து மலர்"
என்பது பொருள் என்றும், 2 வாரக் குழந்தை, இரு தலைமுறைகளைக்
காப்பாற்றியது என்றும், இந்நிகழ்வை, ஊடகங்கள் விவரித்தன.
அமெரிக்கத் தொலைக்காட்சி
நிறுவனம் (CBS) இச்செய்தியை
ஒளிபரப்பியபோது, Mark Philips என்ற செய்தித் தொடர்பாளர், அழகான ஒரு கருத்தை
பதிவுசெய்தார்: "பெரிய, பெரிய புள்ளிவிவரங்களைக் காட்டிலும், சின்னச் சின்ன
மனிதாபிமானக் கதைகள் நம் கற்பனையைக் கவர்கின்றன" என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், துருக்கியில், ஜப்பானில் (2011), ஹெயிட்டியில் (2010), பல ஆசிய நாடுகளில் (2004), ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப்
பேரிடர்களில் இறந்தோர், காயமுற்றோர்
ஆகியோரின் புள்ளிவிவரங்கள் நம் மனதில் பதிந்ததைவிட, அந்த அழிவுகளின் நடுவிலிருந்து, உயிர்கள் மீட்கப்பட்டச்
செய்திகள், நம்மை அதிகம் கவர்ந்தன
என்பதையும், அவை, நம் உள்ளங்களில், நம்பிக்கை விதைகளை
நட்டுவைத்தன என்பதையும் மறுக்கமுடியாது.
கடந்த இரு ஆண்டுகளுக்கும்
மேலாக, கோவிட்-19 பெருந்தொற்று, நிலநடுக்கமாக, சுனாமியாக, சூறாவளியாக, எரிமலை வெடிப்பாக, இவ்வுலகை பெருமளவு
சிதைத்துவருகிறது. இப்பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோர், மற்றும், இறந்தோரின் எண்ணிக்கையை, ஊடகங்கள், ஒவ்வொரு நாளும், நம் எண்ணங்களில்
வலுக்கட்டாயமாகத் திணித்து, நம் உள்ளங்களை
கல்லறைகளாக மாற்றிவருகின்றன. ஊடகங்களின் கல்லறைச் செய்திகளிலிருந்து உயிர்த்தெழ, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு
உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.
2010ம் ஆண்டு, சனவரி மாதம், ஹெயிட்டியில்
நிலநடுக்கத்தால் எற்பட்ட இடிபாடுகளிலிருந்து, பதினாறு நாட்களுக்குப் பின், Darline Etienne என்ற இளம்பெண் உயிரோடு
மீட்கப்பட்டது, ஓர் உயிர்ப்பு என்று
கூறப்பட்டது. அதே 2010ம் ஆண்டு, சிலே நாட்டு
சுரங்க விபத்தில் அகப்பட்ட 33 தொழிலாளிகள், 69 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டது, உயிர்ப்பெனக் கொண்டாடப்பட்டது.
2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, சிலே நாட்டின் அட்டக்காமா
(Atacama) பாலைநிலத்தில் அமைந்துள்ள, தாமிர, தங்கச் சுரங்கம் ஒன்றில்
சிக்கிக்கொண்ட 33 தொழிலாளர்கள், அக்டோபர் 12ம்
தேதி, அதாவது, 69 நாட்களுக்குப் பின், மீட்கப்பட்டனர். இந்தச்
சாதனை முடிந்ததும், சிலே நாட்டின் ஆயர்
பேரவைத் தலைவர், ஆயர் Alejandro
Karmelic அவர்கள், "சிலே நாடு, இன்று உயிர்ப்பின்
நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது" என்று கூறினார்.
ஆயர் Karmelic அவர்கள், உயிர்ப்பைக் குறித்து, அக்டோபர் மாதத்தில்
குறிப்பிட்டது பொருத்தமாகத் தெரிகிறது. உயிர்ப்புக்கும், வசந்தகாலத்திற்கும்
தொடர்பு உள்ளது என்பதை அறிவோம். பூமியின் வட பாதி கோளத்தில் (Northern
hemisphere), மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரும்
வசந்தகாலத்தையொட்டி, திருஅவையில் தவக்காலமும், உயிர்ப்புத் திருநாளும்
கொண்டாடப்படுகின்றன. பூமியின் தென் பாதி கோளத்தில் (Southern
hemisphere), அமைந்துள்ள சிலே நாட்டில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்
வசந்தகாலம் வரும். எனவே, அந்த சுரங்கத்
தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தில், அவர்கள் உயிர்ப்புத் திருநாளைக் கொண்டாடியிருந்தாலும், பொருத்தமாகவே
இருந்திருக்கும்.
கல்வாரிக்
கொடுமைகளுக்குப் பின்,
சாத்தப்பட்ட
அறையை, ஒரு கல்லறையாக மாற்றி, அதில், தங்களையே பூட்டி
வைத்துக்கொண்ட சீடர்கள், இயேசுவின்
உயிர்ப்பிற்குப் பின்,
அச்சமின்றி, இயேசுவை உலகறியச்
செய்தனர். அதேபோல், பாறைகளால் முற்றிலும்
மூடப்பட்டு, இனி உயிரோடு மீளமாட்டோம்
என்ற அச்சத்தில், சந்தேகத்தில்
புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள், வெளியே வந்தபின், பல நாடுகளுக்குச் சென்று இயேசுவை உலகறியச் செய்தனர். கோவிட்-19 பெருந்தொற்றைக்
குறித்த செய்திகளால், இவ்வுலகின்மீது
வைக்கப்பட்டுள்ள ‘நம்பிக்கையின்மை’ என்ற பாறைகளை அகற்றுவதிலும், மரணத்தைவிட, வாழ்வைக் குறித்து
பேசுவதிலும், நம் சக்தியை பயன்படுத்த, உயிர்த்த இறைவன் நம்மை
அழைக்கிறார்.
இங்கு நாம் குறிப்பிட்ட 'உயிர்ப்பு நிகழ்வுகள்'
ஊடகங்களில்
செய்திகளாக வெளிவந்தவை. ஆனால், ஊடகங்களில் செய்திகளாக
வராமல், நம் ஒவ்வொருநாள்
வாழ்விலும், உயிர்ப்பு, சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியே நடந்தவண்ணம் உள்ளன. இவை
எதுவும் நம் கவனத்தை ஈர்ப்பது கிடையாது. இயேசுவின் உயிர்ப்பு முதல்முறை
நிகழ்ந்தபோதும், அது யாருடைய கவனத்தையும்
ஈர்க்கவில்லை. இத்தகைய உயிர்ப்பு நிகழ்வுகளைக் காண்பதற்கு அன்பின் விழிகள்
அவசியம். அன்பின் விழிகள் கொண்டிருப்பதன் அவசியம் குறித்து, இறையியலிலும், ஆன்மீகத்திலும்
புலமைபெற்ற அருள்பணி Ronald Rolheiser அவர்கள், "உயிர்ப்பைக் காண" என்ற தலைப்பில்
பகிர்ந்துகொண்டிருக்கும் கருத்துக்கள், நம்மை சிந்திக்க அழைக்கின்றன.
இறைவன்
நம் சுதந்திரத்தைப் பறித்து, தன்
வலிமையைத் திணித்து, நம்மை
வலுக்கட்டாயமாக ஒன்றைக் காணும்படி செய்வதில்லை. நம் சுதந்திரத்தை எப்போதும்
மதிப்பவர் அவர். இறைவனின் இந்தப் பண்பு, இயேசுவின்
உயிர்ப்பு நிகழ்வில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. உயிர்ப்பு நிகழ்வு, கண்ணையும், கருத்தையும் பறிக்கும் பிரம்மாண்டமான
நிகழ்வாக, தலைப்புச்
செய்தியாக நிகழவில்லை. இயேசுவின் பிறப்பைப் போலவே, அவரது உயிர்ப்பும் மிக அமைதியாக நிகழ்ந்தது.
இயேசுவின்
உயிர்ப்பை ஒரு சிலர் கண்டனர். மற்றவர்களால் அவரைக் காண இயலவில்லை. உயிர்ப்பு என்ற
பேருண்மை ஒரு சிலரில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. வேறு சிலரோ, அந்த பேருண்மையைப் புரிந்துகொள்ள
மறுத்ததோடு, அதை
அழிக்கவும் முயற்சிகள் செய்தனர். இந்த
வேறுபாடு ஏன்?
12ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித விக்டரின் ஹுகோ என்பவர் கூறுவது இதுதான்:
"அன்பின் கண்களால் காணும்போது, சரியான முறையில் காண முடியும். பேருண்மைகளை சரியான
முறையில் புரிந்துகொள்ள முடியும்."
அன்பின்
கண்கள் கொண்டு பார்த்த மகதலாவின் மரியா, உயிர்ப்பு நாளன்று விடியற் காலையில்
தன் அன்புத் தலைவனின் உடலுக்கு உரிய மாண்பை வழங்க நறுமணத் தைலத்துடன் கல்லறைக்குச்
சென்றார் என்பதை உயிர்ப்பு விழாவின் நற்செய்தியாக வாசிக்கிறோம். மனமெங்கும்
நிறைந்திருந்த அன்புடன் கல்லறைக்குச் சென்ற மரியா, உயிர்ப்பு
என்ற பேருண்மையின் முதல் திருத்தூதராக மாறினார். ஏனைய சீடர்கள் தங்கள் கவலைகளாலும், அச்சத்தாலும்
மூடிய கதவுகளுக்குப் பின் பதுங்கியிருந்த வேளையில், மகதலாவின்
மரியா துணிவுடன் கல்லறைக்குச் சென்றார். உயிர்த்த இயேசுவை சந்தித்த முதல் சீடராக
மாறினார்.
நம்மைச்
சுற்றி ஒவ்வொருநாளும் நிகழ்ந்துவரும் அழிவுச் செய்திகளின் விளைவாக, உயிர்ப்பின்
நம்பிக்கை நம்மைவிட்டு விலகிச் செல்கிறது. இத்தனை அழிவுகளின் நடுவிலும், அன்பின்
கண்கள் கொண்டு பார்க்கப் பழகினால், நம்மைச் சுற்றி சின்னச்சின்ன உயிர்ப்புகள் நிகழ்வதைக்
காணமுடியும். இத்தகைய வரத்தை, உயிர்த்த கிறிஸ்து நமக்கு வழங்கவேண்டும் என்று
மன்றாடுவோம்.
Thanks so much
ReplyDelete