13 October, 2022

Persistent prayer prevails மனம் தளராமல் மன்றாட...

 
The unjust judge and the widow - John Everett Millais

29th Sunday in Ordinary Time

Exodus 17:8-13; 2 Timothy 3:14–4:2; Luke 18:1-8

October 12, 2010. Midnight. Almost the whole country of Chile was awake with anticipation. At 12.10 a.m. on October 13, a narrow tube-like structure emerged out of the rocks and out came Florencio Avalos, a 31-year-old miner. His seven-year-old son and his wife ran to him with tears streaming down their cheeks. Florencio embraced them and kissed them. The whole nation erupted in joy. This cheer and joy continued every hour following this incident. The joy and pride of this nation would have easily matched the joy and pride of USA on July 20, 1969 when Neil Armstrong set foot on the moon. Setting foot on the moon was surely a great achievement for Armstrong, for USA as well as for humankind. Equally great was the achievement of the 33 miners from Chile setting foot on the surface of the earth after 69 days.

On August 5, 2010, 33 miners entered their usual shift, 2,500 feet below the ground level, in the copper and gold mines in Atacama region. A landslide deposited 700,000 tonnes of rock to block the passage. All the 33 miners were literally buried alive. Efforts at contacting them failed and hope began to dwindle. After 17 days, on August 22, they were located and a note was sent through a hole saying that all the 33 were alive. Locating them after 17 long days of suspense, was the first miracle. Initial calculations predicted that it would take anywhere between 3 to 4 months to rescue the miners. So, the families were reconciled to be united to their loved ones for Christmas. The continual efforts bore fruit and all the 33 miners were saved in half the time predicted earlier, namely, in two months plus a week!

The rescue operation in Chile has a special significance to our liturgical readings today, especially the first reading - Exodus 17: 8-13 and the Gospel passage - Luke 18: 1-8. Both the readings speak of the role of prayer, especially persistent, persevering prayer, in the midst of struggles we face in our lives.
Here is an extract from the article in Wikipedia titled: 2010 Copiapó mining accident.

Religious activities of trapped miners:

When a shaft was completed to provide relief for the men, they asked for religious items, including Bibles, crucifixes, rosaries, statues of the Virgin Mary and other saints. Pope Benedict XVI sent each man a rosary which was brought personally to the mine by the archbishop of Santiago, Cardinal, Francisco Javier Ossa. After three weeks in the mine, one man who was civilly married to his wife 25 years earlier asked her to marry him in a sacramental marriage in the Church. They set up a makeshift chapel in the mine, and Mario Gómez, the eldest miner, spiritually counselled his cohorts and led daily prayers. When they were rescued, the miners were all wearing similar t-shirts. The T-shirts, sent down by a brother of one of the miners had "Thank you Lord" on the front and "To Him be the glory and honor" on the back. The quotation was taken from the Book of Psalms 95 verse 4: "...in his hands are the depths of the earth."

As one story in the Daily Mail put it "A deep religious faith powered this rescue; miners and families and rescuers alike believe their prayers were answered." Both government representatives and the Chilean public have repeatedly attributed divine providence with keeping the miners alive and the Chilean public has viewed this rescue operation as a miracle. Chile's president Sebastián Piñera stated, "When the first miner emerges safe and sound, I hope all the bells of all the churches of Chile ring out forcefully, with joy and hope. Faith has moved mountains." When Esteban Rojas, one of the miners, stepped out of the rescue device, he immediately knelt on the ground with his hands together in prayer then raised his arms above him in adoration. His wife then wrapped around him a religious tapestry with Mary on it as they hugged and cried. Though most of the trapped miners were Roman Catholic, three were Protestant or Baptist, and two others were converted during the time.

The trapped miners praying together, while stuck in the belly of the earth, brings back to our minds Jonah’s prayer in the belly of the whale as well as the early Christians holding underground prayer meetings in the catacombs. Their faith was nurtured by these prayers as well as by the imageries their leaders provided them with. One such imagery often used by early Christians is the mythic bird phoenix. It is significant that the tube-like capsule used for bringing the Chilean miners to the surface was named ‘phoenix’, to remind people of the legendary bird which rises out of ashes. The whole operation was named ‘Operation St Lawrence’, the patron of miners. The statue of St Lawrence was taken in a procession around the accident site.

Dire needs bring people to their knees, as it brought Moses. Once the needs are fulfilled, do we forget prayer? The answer lies in the passages from Luke’s Gospel for today as well for the 17th Sunday in Ordinary Time – Luke 11: 1-13 and Luke 18: 1-8.  In both these passages Jesus gives us lovely lessons on prayer, not as a lofty philosophical treatise, but as simple life stories. Isn’t Christ telling us clearly, that prayer should become part of our life and not remain as a subject of intellectual discussion or an antidote used only during emergencies and dire needs? Prayer is the air we breathe, not an oxygen mask!

There are hundreds of stories about the power of prayer, especially the power of persistent prayer. Here is one of them;

Dr Ahmad was a specialist who had undertaken various researches on a rare medical condition. His research findings stunned the medical world. An International Medical Organization invited Dr Ahmad to receive an award at a conference organized in the neighbouring country.

On the day of the award function, Dr Ahmad took a flight to the neighbouring country. One hour after the flight took off, it developed some technical problems and made an emergency landing in a city close by. Dr Ahmad told the airport officials about the conference and requested them whether they could make alternate arrangements. The officials understood the situation but told the doctor that the next flight to his destination will be available only after 10 hours. Meanwhile, if the doctor wished, he could hire a vehicle and go to that city in four hours, they suggested.
Dr Ahmad hired a car, got the road map and began to drive to the city. On the way there was a sudden thunderstorm with heavy wind. Quite a few trees were uprooted and blocked the high way. Hence, the doctor had to take some by lanes. At one place, after driving for almost two hours, Dr Ahmad felt that he had missed the route. He wanted to contact the conference organizers and explain to them his condition. He searched for a house where there might be telephone facility.

He stopped the car near a house and knocked at the door. An old lady opened to door. When the doctor asked her whether there was a telephone in her house, she replied that she did not have a telephone. Looking at the doctor’s condition, she invited him to come into the house and have a cup of hot tea. Since he felt tired driving in the rain, he accepted the invitation and went into the house.

The lady served him some snacks and a cup of hot tea. Then she excused herself saying that she would complete her prayers and then join him. Then she went to a nearby cradle, knelt by its side and began praying with tears streaming down her face.

When the old lady came back, Dr Ahmad asked her what she was praying for and who was in the cradle. The old lady explained that the child in the cradle was her grandson, whose parents died in an accident. The child was suffering from a rare disease. The old lady continued: “I have heard of one Dr Ahmad who is in the neighbouring country. I don’t have money to take my grandson to the neighbouring country. Hence, I am praying to God everyday to take us somehow to Dr Ahmad.”

As the old lady was speaking, Dr Ahmad, with tears streaming down his cheeks, told her, “I am Dr Ahmad.”

We pray to God to give us a better understanding of the power of prayer, and a strong willpower to practise persistent prayer! We are in the middle of the month of October, dedicated to Our Lady of the Holy Rosary. May our Mother Mary teach us to make prayer a powerful tool in our lives!

The Unjust Judge

பொதுக்காலம் - 29ம் ஞாயிறு

விடுதலைப்பயணம் 17:8-13;   2 திமொத்தேயு 3:14–4:2;   லூக்கா 18:1-8

உலகமக்களின் கவனத்தை ஈர்த்த ஓர் அற்புத நிகழ்ச்சி 2010ம் ஆண்டு, அக்டோபர் 12, நள்ளிரவில் நிகழ்ந்தது. தென் அமெரிக்காவின் சிலே நாட்டில், மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் வெடித்தது.
சிலே நாட்டின் Atacama என்ற பகுதியில் பாறையான நிலப்பரப்பில், துளை ஒன்று செய்யப்பட்டிருந்தது. அந்தத் துளை வழியே, குழாய் வடிவக் கருவி ஒன்று வெளியே வந்தது. அந்தக் குழாயிலிருந்து Florencio Avalos என்ற இளைஞர் வெளியேறினார். கண்ணீருடன் ஓடிவந்த அவரது மகன் Bairoவையும், அவரது மனைவியையும் கட்டி அணைத்து முத்தமிட்டார், Florencio. இந்தக் காட்சியைக் கண்டு பலரது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. பூமிக்கடியில் ஏறத்தாழ எழுபது நாட்கள் புதையுண்டிருந்த 33 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரோடு மீட்கப்பட்டச் சாதனையை, சிலே நாடும், இவ்வுலகமும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அன்றிரவு கொண்டாடியது.

சிலே நாட்டுச் சாதனை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும், இது நிகழ்ந்து 12 ஆண்டுகள் சென்றுவிட்டதால், அவற்றின் ஒரு சில விவரங்களை மீண்டும் அசைபோட உங்களை அழைக்கிறேன். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டின் Atacama பகுதியில் தாமிரம், மற்றும் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் 2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பமானது. அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 22ம் தேதி அவர்கள் அனைவரும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையே ஒரு புதுமை என்று பலர் கூறினர். சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. 50 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் சிகரமாக, அக்டோபர் 12 நள்ளிரவு துவங்கி, அக்டோபர் 14ம் தேதி அதிகாலை வரை 33 தொழிலாளர்களும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இந்நிகழ்வை இவ்வளவு விவரமாகக் கூறுவதற்குக் காரணம் இன்றைய ஞாயிறு வாசகங்களே.

புதையுண்ட தொழிலாளர்களுக்கு, பல வழிகளில், உதவிகள் அனுப்பப்பட்டன. உடல் அளவில் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை விட, அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக உதவிகள், செப உதவிகள், ஏராளம்.
அப்போது திருத்தந்தையாக இருந்த 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் கைப்பட ஆசீர்வதித்த செபமாலைகளை அனுப்பிவைத்தார். இத்தொழிலாளர்கள் தாங்கள் அடைபட்டிருந்த இடத்தில் சிறு பீடம் ஒன்றை அமைத்து, செபித்துவந்தனர் என்பதை இவர்கள் தங்கள் பகிர்வுகளில் பின்னர் வெளியிட்டனர். புதையுண்ட தொழிலாளிகள், பீடம் ஒன்றை அமைத்து, செபித்துவந்தனர் என்பதை கேள்விப்பட்டபோது, பழங்கால உரோமைய அரசில் முதல் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த வாழ்வு என் நினைவில் அலைமோதியது. அங்கு, அரசுக்குத் தெரியாமல் பூமிக்கடியில், அல்லது பல மறைவிடங்களில் கூடி வந்து செபித்த கிறிஸ்தவர்களை எண்ணிப் பார்த்தேன். உயிருக்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாத நிலையில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்களுக்கு உறுதி தந்ததெல்லாம் அவர்கள் கூடிவந்து செபித்த நேரங்கள். இன்றும் உலகின் சில நாடுகளில் கிறிஸ்தவர்கள் இதே நிலையில் துன்புறுவதை நாம் நினைவில் கொண்டு, அவர்களுக்காக இறைவனிடம் நம் செபங்களை எழுப்புவோம்.

சிலே நாட்டின் Atacama பகுதியில் மீட்புப் பணி துவங்கிய நேரம் முதல், சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித இலாரன்ஸ் அவர்களின் திரு உருவைத் தாங்கி செப ஊர்வலங்கள் இச்சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 12 முதல் சிலே நாட்டின் பல கோவில்களில் தொடர் செபவழிபாடுகள், முழு இரவு விழிப்புச் செபங்கள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சாதனை முடிந்ததும், அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது."

மனம்தளராமல், நம்பிக்கையுடன் செபிப்பதைக் குறித்து சிந்திக்க இந்த ஞாயிறன்று அழைக்கப்பட்டுள்ளோம். கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும் என்ற நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன.

செபத்தின் வல்லமையால், இஸ்ரயேல் மக்கள், போரில் வெற்றிகொண்டதை, விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் (விடுதலைப் பயணம் 17: 8-13) நமக்குக் கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாடுகளுக்கும், கனவிலும், நனவிலும் அச்சமூட்டுபவர்களாக இருந்தவர்கள் அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தனர். இச்செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து, அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச் செய்தது.

செபத்தின் வலிமையால் எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம் என்பதை விடுதலைப் பயண நூல் வாசகம் சொல்கிறது. மனம் தளராமல் செபிப்பதால், நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை லூக்கா நற்செய்தி (லூக்கா 18: 1-8) சொல்கிறது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து செபியுங்கள்... என்ற சவால்கள் நிறைந்த பாடங்கள், இன்றைய வாசகங்கள் வழியே, நமக்குச் சொல்லித்தரப்படுகின்றன.

அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது (லூக்கா 18: 1) இறைவனுக்கு அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன ஒரு நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார்... இலஞ்சம் கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறிகொண்டு பெறுகிறார். நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து, பாறையாகிப்போன நடுவரின் மனதைத் தன் தொடர்ந்த வேண்டுதல் முயற்சிகளால் கரைத்துவிடுகிறார் அந்தக் கைம்பெண்.

இவ்வுவமையில் இயேசு சித்திரிக்கும் கைம்பெண் பல நாட்கள், ஏன்? பல மாதங்கள், பல ஆண்டுகள் விடாமுயற்சியுடன் நீதிமன்றத்திற்கும், நடுவரின் வீட்டுக்கும், நடுவர் சென்ற அனைத்து இடங்களுக்கும் நடையாய் நடந்து சென்று, தான் தேடியதைப் பெற்றார் என்பதை உணரலாம். எவ்வளவு காலம் இந்தக் கைம்பெண் தன் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லூக்கா நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. "நடுவரோ நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை" (லூக்கா 18:4) என்ற ஒரே ஒரு குறிப்பை மட்டுமே இந்த உவமையில் காண்கிறோம்.

ஏழைகளுக்கு நீதி கிடைக்க, அல்லது அவர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகளை நிறைவேற்ற நீதி மன்றங்களும், அரசு அலுவலகங்களும் எத்தனை காலம் எடுக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த கதைதானே! இவர்களில் பலர் எதிர்பார்த்த நீதியான தீர்ப்புகளோ, விண்ணப்பித்திருந்த கோரிக்கைகளோ அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களை வந்தடைந்த செய்திகளையும் நாம் அவ்வப்போது கேட்டுவருகிறோம். பல ஆண்டுகள், நீதி மன்றங்களின் வாசல்களிலும், அரசு அலுவலகங்களின் வாசல்களிலும் தவமிருந்து தங்கள் வேண்டுதல்களின் பலன்களைக் காண ஏங்கும் பல கோடி ஆதரவற்ற ஏழை மக்களின் பிரதிநிதியாக, இந்த உவமையின் நாயகியான கைம்பெண்ணை நாம் சந்திக்கிறோம். மனம் தளராது, மீண்டும், மீண்டும், மீண்டும் நடுவரைச் சென்று சந்தித்த அந்தக் கைம்பெண்ணை, மனம் தளராமல் செபிப்பதற்கு எடுத்துக்காட்டாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

மனம் தளராமல் செபிப்பதால் விழையும் நன்மைகளைக் கூறும் பல நூறு கதைகளில், என் மனதில் இடம் பிடித்த ஒரு கதை இது:
டாக்டர் அகமத், தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியதால், அகில உலக மருத்துவர் கழகம் அவருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட்டில் நடைபெறும் அகில உலக கருத்தரங்கில் அவ்விருதை பெறுவதற்கு, அக்கழகம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

விருது நாளன்று காலை, அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பி, அடுத்த நாட்டிற்குள் நுழைந்ததும், விமானத்தில் பிரச்சனை ஒன்று உருவானதால், அருகிலிருந்த வேறோர் ஊரில் விமானம் தரையிறக்கப்பட்டது. டாக்டர் அகமத் அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, தன் மாநாட்டைப் பற்றிக் கூறி, எப்படியாவது அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கேட்டார்.

அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே செல்லாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருப்பினும், டாக்டர் அகமத் விரும்பினால், வாடகைக்கு ஒரு காரை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும், அதற்கு நான்கு மணி நேரங்கள் எடுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.

வேறு வழியின்றி, டாக்டர் அகமத் அவர்கள், வாடகைக் கார் ஒன்றை பதிவுசெய்து, செல்லவேண்டிய ஊருக்கு வழியைக் கேட்டுக்கொண்டு, காரை ஓட்டிச்சென்றார். வழியில், திடீரென, முன்னறிவிப்பு ஏதுமின்றி, புயல் ஒன்று உருவானது. கனமழை பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார். அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட்டியபின், களைப்பாலும், பசியாலும் சாலையின் ஓரமாகக் காரை நிறுத்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால், விருது விழாவை ஏற்பாடு செய்தவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று எண்ணினார்.

பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கு சென்று கதவைத் தட்டினார். வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்கு தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட்டதற்கு, தன்னிடம் அந்த வசதி இல்லை என்று கூறிய அப்பெண், டாக்டர் அகமத் அவர்கள், இருந்த நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது சூடாகக் குடியுங்கள் என்று அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு வேண்டிய உணவையும், தேநீரையும் பரிமாறிய அந்தப் பெண், தான் துவங்கிய செபத்தை முடித்துவிட்டு வருவதாகக்  கூறி, அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழந்தாள் படியிட்டு தன் செபத்தைத் தொடர்ந்தார்.

மனமுருகி, கண்ணீருடன் அவர் செபித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர் செபத்தை முடித்துவிட்டு வந்ததும், அவரது கண்ணீருக்கும், செபத்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப் பெண், "இறைவன் என் வேண்டுதல்கள் அனைத்திற்கும் பதில் வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத்திற்கு மட்டும் இறைவன் இன்னும் பதில் தரவில்லை" என்று கூறினார்.

அந்த செபம் என்ன, அந்தத் தொட்டிலில் இருப்பது யார் என்று கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன்னார்: "தொட்டிலில் உறங்குவது என் பேரக்குழந்தை. அவனுடைய பெற்றோர் இருவரும் அண்மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். என் பேரனுக்கு வினோதமான ஒரு நோய் உள்ளது. அந்த நோயைக் குணமாக்கும் திறமை கொண்டவர், பக்கத்து நாட்டில் உள்ள ஒரே ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர் அகமத் என்பது மட்டும் தெரியும். அவரைச் சென்று பார்க்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால், ‘இறைவா, அந்த டாக்டரிடம் எப்படியாவது எங்களைக் கொண்டு சேர்த்துவிடு என்பது ஒன்றே, நான் தினமும் எழுப்பும் வேண்டுதல்" என்று கூறி முடித்தார் அந்தப் பெண்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் அகமத் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொன்னார்... தான் விருது வாங்கப் புறப்பட்டது, விமானம் பழுதடைந்தது, புயலால் தான் வழியைத் தவறவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது என்று, அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்ததையெல்லாம் கூறிய டாக்டர் அகமத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அகமத் நான்தான்" என்று கூறினார்.

செபத்தைக் குறித்து, தொடர்ந்து செபிப்பதைக் குறித்து, நமது எண்ணங்களை தெளிவுபடுத்த, உள்ளங்களை உறுதிபடுத்த, செபம் நமது வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாற, இறைவனிடம் வரம் வேண்டுவோம். செபமாலை அன்னை மரியாவை நினைவுகூரும் அக்டோபர் மாதத்தில், இடைவிடாத செபத்தின் வலிமையைக் குறித்து அன்னை மரியா நமக்கு பாடங்களைச் சொல்லித் தருவாராக!


No comments:

Post a Comment