26th Sunday in Ordinary Time
Cecil John Rhodes, who lived in the 19th century, was an
enormously wealthy man. He was an English-born businessman, mining magnate, and
politician in southern Africa. He was the founder of the diamond company De
Beers, which, from its inception in 1888 until the start of the 21st century,
controlled 80% to 85% of rough diamond distribution and was considered a
monopoly. Mr Rhodes, an ardent believer in colonialism and imperialism, was the
founder of the state of Rhodesia to perpetuate his name. One day a newspaperman
told him, "You must be a very happy man." Rhodes replied, "Happy?
No! I spent my life amassing a fortune only to find that I have spent half of
it on doctors to keep me out of the grave, and the other half on lawyers to
keep me out of jail!" He reminds us of the rich man portrayed by Jesus in
the parable of the Richman and Lazarus (Luke 16:19-31), in which the rich man wants to escape
from the hell fire.
In contrast to Mr Rhodes, who was born in England and migrated to the
African continent to exploit the natural resources to amass personal wealth, we
can turn our attention to the story of Dr Albert Schweitzer who also went from
Europe to the African continent to enrich the people!
30 year old Albert, already a Doctor in Philosophy and Theology, was at
the peak of his career as a professor in Vienna .
He was recognized as one of the best concert organists in all Europe .
Living in Vienna , the ‘City of Music ’, he was a well sought after artist. At
the age of 30, he left all these and pursued medicine, with a single purpose of
going to Africa to help the poor. When people
asked him why he had taken such a drastic decision, the only answer he could
give was that the change was wrought by the famous parable of the Richman and
Lazarus. Not only in Albert, but in thousands of heroic persons, this parable
has brought about radical changes. This Sunday, we are invited to reflect on
this parable. We hope that this parable stirs us out of our comfort zones!
We have heard of the different stages of human growth as proposed by
Sigmund Freud, the first of which is the ‘oral stage’. During the first months,
the infant’s palms are always closed. Whatever we extend, whether it is our
finger or a toy, the infant grabs it and takes it to the mouth. For the infant,
the whole world is there to be consumed. With much care, we try to wean the
child from this stage. We begin teaching things like sharing… “Tom, give the
candy to Jerry… No, don’t grab everything… Let your sister play with the toy
for a while…” etc.
While we tend to ‘preach’ to the child noble ideas of sharing, we
practice very different things. When a child sees the contradiction between
what the adults say and do, it tends to follow the deed rather than the word.
For not helping our children grow up to be caring, sharing adults, all of us
need to stand accused. When we stand accused in the court of the world, the
judgement from above will sound similar to the words used by Amos in today’s
first reading:
Amos 6:
1, 3-7
Woe
to you who are complacent in Zion, and to you who feel secure on Mount Samaria
…
You
lie on beds inlaid with ivory and lounge on your couches. You dine on choice
lambs and fattened calves…
You
drink wine by the bowlful and use the finest lotions, but you do not grieve
over the ruin of Joseph. Therefore, you will be among the first to go into
exile; your feasting and lounging will end.
Greed creates an
introverted look so that we never grow beyond our baby years, namely, the ‘oral
stage’. Jesus warns us of this ‘all-for-me’ attitude in the famous parable –
the Richman and Lazarus.
This parable is a
treasure trove containing many lessons for our life. A detailed analysis of
this parable will be quite long. We shall confine our reflections only to the
first few lines where Jesus introduces the two characters – the rich man and
Lazarus – and try to learn a few lessons.
Luke 16: 19-21
There was a rich
man, who was clothed in purple and fine linen and who feasted sumptuously every
day. And at his gate lay a poor man named Lazarus, full of sores, who desired
to be fed with what fell from the rich man's table; moreover, the dogs came and
licked his sores.
We can identify eight
elements in the above lines, three to introduce the rich man and five to
introduce Lazarus.
Rich man
- A rich man
- Clothed in purple and fine linen
- Feasted sumptuously every day
Poor man
- A poor man named Lazarus
- Lying at his gate
- Full of sores
- Desired to be fed with what fell from the
rich man's table
- Dogs came and licked his sore
Combining these eight
elements, one can draw three comparisons which can teach us valuable lessons. The
first comparison is identification given to the rich and the poor men. The
very opening lines of this parable must have shocked the Pharisees. Jesus
mentions a nameless rich man and a beggar named Lazarus. Of all the parables of
Jesus, this is the only parable where the character in the story gets a proper
name. For a Jew, and more especially for a Pharisee, being rich is a blessing
from God, while being poor is a curse from God. Jesus subverted this equation.
He made the rich man a non-entity and made the poor man a real person with a
proper name… and, what a name! Jesus gives this character the name of one of
his close friends, Lazarus.
Some commentators have
mentioned that the rich man lost his name and identity due to the wealth he had
amassed. He probably found much more happiness in being called a ‘millionaire’
rather than ‘Mr.So-and-So’. Since he relied on his wealth so much, he lost his
true identity. On the other hand, Lazarus (meaning, ‘God helps’), got his
identity by relying on God.
Having lived in
religious communities for many years now, I can safely say that in many of the
houses, the names of the poor workers don’t get registered in the minds of the
community members and most of the time the workers are called simply as ‘Hey,
you’. Jesus calling the poor man with a proper name ‘Lazarus’ is a whiplash for
many of us!
The second
comparison between the rich
man and Lazarus runs a dagger through the heart. The rich man was dressed in
purple linen, while Lazarus was covered with sores. Purple, scarlet, red… all
shades of royalty. While the rich man clothed himself with royalty in an
artificial way, Lazarus was regal in a very different way. He was possibly a
distant image of Jesus, covered with sores, hanging on the cross, which carried
the title: INRI - Jesus of Nazareth, the King of the Jews!
The third
comparison is what brought
trouble to the rich man. He was feasting sumptuously everyday… and therefore
had to face hell. Seems like an unwarranted and disproportionate punishment.
The rich man was not punished for feasting in luxury, but feasting in luxury while
there lay a poor man at his gate. Actually, one can argue that the rich man
was a gentle person… If he wanted, he could have easily got rid of Lazarus. On
second thoughts, I feel that if the rich man had done something like that, his
punishment would have been less. Is this puzzling? Let me explain. If the rich
man had taken some effort to get rid of the poor man, he would have at least
established the fact that he had acknowledged the presence of Lazarus as a
human person. The rich man in this parable did nothing positive or negative about
Lazarus. He simply ignored him. For him, Lazarus was no more than a
piece of furniture in his house… Perhaps, the furniture in his house would have
got enough attention by being wiped with a rag. Lazarus was laid out at his
gate like a piece of rag. For the rich man, Lazarus was no more than the dust
under his feet. We don’t usually pay attention to the dust under our feet
unless the speck of dust soars high and gets into our eyes. This is exactly
what happened in the second part of the parable. Lazarus, the dust, was carried
to the bosom of Abraham and became the yardstick by which the rich man’s
eternity was measured.
Ignoring a human
person is the worst type of treatment one can give to another person. The rich
man was guilty of this and he had to face the consequence. Far too many
Lazaruses are laid out in our life’s journey. Let’s tread carefully! Treat them
with care and respect!
Lazarus and the Rich man
story
பொதுக்காலம் - 26ம் ஞாயிறு
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த Cecil John Rhodes என்ற ஆங்கிலேய செல்வர் ஒருவர், தன் 17வது வயதில்
தெற்கு ஆப்ரிக்காவிற்கு சென்றார். அங்கு, வைரச் சுரங்கம்
ஒன்றின் உரிமையாளராக தன் தொழிலை துவக்கினார். De Beers என்ற நிறுவனத்தின் வழியே, உலகின் வைர வணிகத்தில்
80 விழுக்காடு பங்கை தனக்கென உரிமையாக்கினார்.
அவரது பெயரால், தெற்கு ஆப்ரிக்காவில், Rhodesia என்ற நிலப்பரப்பை உருவாக்கினார். அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவரைச்
சந்தித்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம், "இவ்வளவு செல்வம் குவித்துள்ள நீங்கள் மகிழ்வுடன் இருப்பீர்கள். இல்லையா?" என்று கேட்டார்.
அதற்கு,
Cecil
Rhodes அவர்கள் பதில் மொழியாக, "மகிழ்ச்சியா? இல்லை. என் வாழ்நாளை செலவழித்து, செல்வத்தைக் குவித்தேன். அதில், பாதியை, நான் கல்லறைக்குப் போகாமல் இருப்பதற்காக, மருத்துவர்களுக்கு கொடுத்துவருகிறேன். மீதிப் பாதியை, நான் சிறைக்குப் போகாமல் இருப்பதற்காக, வழக்கறிஞர்களிடம் கொடுத்துவருகிறேன்" என்று கூறினார். சேர்த்த செல்வத்தையெல்லாம், தன்னை சாவிலிருந்தும் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பிக்க செலவிட்ட செல்வந்தர்
Rhodes அவர்கள், இன்றைய நற்செய்தியில் (லூக்கா 16:19-31) தன்னை நரக
நெருப்பிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்யும் செல்வந்தரை நினைவுக்குக் கொணர்கிறார்.
இளம்
வயதில் இங்கிலாந்திலிருந்து ஆப்ரிக்கக் கண்டத்திற்குச் சென்ற Rhodes அவர்கள், அங்கிருந்த இயற்கை வளத்தைச்
சுரண்டி,
செல்வத்தைக்
குவித்தார். இதற்கு முற்றிலும் மாறாக, ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த மற்றோர் இளைஞர், ஆப்ரிக்கக்
கண்டத்திற்கு சென்று, அங்குள்ள
மக்களை,
குறிப்பாக, வசதி வாய்ப்பற்ற வறியோரை
உயர்த்தினார்.
30
வயது நிறைந்த அவ்விளைஞர், இறையியல், மெய்யியல் இரண்டிலும்
முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வியன்னாவில் பேராசிரியராகப்
பணியாற்றிவந்தார். 'ஆர்கன்' என்ற இசைக்கருவியை இசைப்பதில் அதீதத் திறமை
பெற்றிருந்த அவ்விளைஞர், பல இசை நிகழ்ச்சிகளுக்கு
அழைக்கப்பட்டார். மேற்கத்திய இசையின் தலைநகரம் என்றழைக்கப்படும் வியன்னாவில், அவ்விளைஞர் வாசிப்பதைக் கேட்க கூட்டம் அலைமோதும்.
புகழின்
உச்சியில் வாழ்ந்த அவ்விளைஞர், அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு, தன் 30வது வயதுக்குப்பின் மருத்துவம் பயின்றார்.
ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஓர் ஊரில், ஒரு மருத்துவமனையை உருவாக்கி, வறியோருக்குப் பணிகள் ஆற்றினார். 50 ஆண்டுகளுக்கும்
மேலாக அற்புத பணியாற்றி, பிறரன்பிற்கு தலைசிறந்த
எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்த மாமனிதரின் பெயர், Albert
Schweitzer. தன்னலமற்ற இவரது பணியைப்
பாராட்டி, 1952ம் ஆண்டு, உலக அமைதி நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
பேராசிரியராக, இசை மேதையாக வாழ்ந்துவந்த ஆல்பர்ட் அவர்கள், அனைத்தையும் விட்டுவிட்டு, ஆப்ரிக்கா சென்று
பணியாற்ற முடிவெடுத்தபோது, பல கேள்விகள் எழுந்தன.
இயேசு கூறிய 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையே இந்த
முடிவெடுக்க உதவியது என்று ஆல்பர்ட் அவர்கள் பதில் கூறினார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள
செல்வர், ஐரோப்பிய மக்கள் என்றும், இலாசர், ஆப்ரிக்க மக்கள் என்றும் தான் உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்ததாகவும்
அவர் கூறினார். Albert Schweitzer அவர்களின் வாழ்வில்
மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரம் உள்ளங்களில், அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்களை
உருவாக்கக் காரணமாக இருந்த 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை, நமக்குள் மாற்றங்களை உருவாக்க, இந்த ஞாயிறு வழிபாட்டில், நம்மைத்
தேடி வந்துள்ளது.
செல்வத்திற்கு
அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தை, சென்ற வாரம், ‘நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை’ வழியாக இயேசு கூறினார்.
அந்த உவமையின் இறுதியில், 'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை
செய்யமுடியாது' (லூக்கா 16: 13) என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு
உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான
உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.
நிலையான
உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள், நம்மைச் சுற்றி வாழும் ஏழைகளே என்பதை,
'செல்வரும் இலாசரும்' என்ற உவமை வழியாக இயேசு இன்று கூறியுள்ளார்.
ஒரு வைரத்தைப்போல், வெவ்வேறு வண்ணத்தில் ஒளிதரும். இவ்வுவமையின் முழு அழகை இவ்வழிபாட்டின்
குறுகிய நேரத்தில் உணர்வதற்கு வாய்ப்பில்லாததால், உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச்
செலுத்தி, பாடங்களைப் பயில
முயல்வோம்.
லூக்கா
நற்செய்தி 16ம் பிரிவில் காணப்படும் இவ்வுவமையின் முதல் மூன்று இறை வாக்கியங்களில்,
இவ்வுவமையின் இரு நாயகர்களை, இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளில், செல்வரைப்
பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து
குறிப்புக்களும் காணப்படுகின்றன.
செல்வரைப்
பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ:
·
செல்வர் ஒருவர் இருந்தார்.
· விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
·
நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
இலாசரைப்
பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ:
·
இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
·
அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
·
அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
·
செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
·
நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
இந்த
எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம்
உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. “செல்வர் ஒருவர் இருந்தார்.
இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” என்பது முதல் ஒப்புமை.
செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப்
பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல்
மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும், இந்த உவமையில் மட்டுமே,
கதாபாத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்துவம் மிக்க இச்சிறப்பு, தெருவில்
கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது.
செல்வருக்கு
ஏன் பெயர் கொடுக்கப்படவில்லை என்பதை இப்படியும் எண்ணிப் பார்க்கலாம். அந்தச் செல்வரின்
சுய அடையாளங்கள் அனைத்தும் அவரிடம் இருந்த செல்வத்திலிருந்தே வந்ததால், அவர் தன்னுடைய பெயரை இழந்து வாழ்ந்தார்
என்று எண்ணிப்பார்க்கலாம். ஒருவர் குவித்துள்ள செல்வத்தால், 'இலட்சாதிபதி', 'கோடீஸ்வரர்' என்ற பட்டங்களைப் பெற்று, அவரது பெயரை இழக்க வாய்ப்பு உண்டு. குவித்து
வைத்த செல்வத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த செல்வர், தன் பெயரை இழந்துவிட்டார் என்பதை சொல்லாமல்
சொல்லும் இயேசு, ஏழைக்கு 'இலாசர்' என்ற பொருத்தமான பெயரையும் தந்துள்ளார்.
இயேசுவின் மிக நெருங்கிய நண்பரின் பெயரும் 'இலாசர்' என்று உணரும்போது, இயேசு இக்கதையில்
தன் மனதுக்குப் பிடித்த ஒரு பெயரைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்.
'இலாசர்' என்ற இந்தப் பெயர், பழைய
ஏற்பாட்டில் காணப்படும், ‘எலியேசர்’ என்ற பெயரை ஒத்திருந்தது. ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய
ஊழியன், எலியேசர். அந்தப் பெயரின் பொருள்
"இறைவனே என் உதவி" (God
is my help). கடவுளை நம்பி வாழ்ந்தவர்,
இலாசர் என்பதையும், தன் செல்வத்தை நம்பி வாழ்ந்ததால்
பெயரிழந்தவர், அந்த செல்வர் என்பதையும் இயேசுவின் இந்த முதல் ஒப்புமை சொல்கிறது.
இந்த
முதல் ஒப்புமை நமக்குச் சொல்லித்தரும் ஒரு முக்கிய பாடம், நாம் ஏழைகளை எவ்விதம் மதிக்கிறோம் என்பதே.
நம் இல்லங்களில் பணியாற்றுவோரின் பெயர்களை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அவர்களை மரியாதைக் குறைவாய், ஏக வசனத்தில், "ஏய், அடியே, இவனே" என்று அழைப்பது தவறு என்பதை, இந்த உவமையின் அறிமுக வரிகளில் இயேசு சொல்லித்
தருகிறார்.
செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் காணும் இரண்டாவது
ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப்
பற்றியது. செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின்
உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும்
வரிகள் இவை. செல்வர் அணிந்திருந்த மெல்லியச் செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம்.
இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார்.
அரசப்
பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம், சிவப்பு. செல்வர் தன்னைத்தானே ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட
செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். ‘யூதர்களின் அரசன்’ என்ற அறிக்கையுடன், சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின்
முன்னோடியாக இலாசரைப் பார்க்கச் சொல்லி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறாரோ? என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது, இந்த இரண்டாவது
ஒப்புமை.
மூன்றாவது
ஒப்புமையில்
நாம் காணும் வரிகள் நம் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன.
·
செல்வர் நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
·
இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
·
செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
·
நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
செல்வர்
மறுவாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை
பெறுமளவு அச்செல்வர் செய்த தவறுதான் என்ன? அவர்
உண்டு குடித்து மகிழ்ந்தார்.... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.
அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக
இத்தண்டனை கிடையாது... தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது, அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே...
அதற்காக இத்தண்டனை.
ஓர்
ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகளை ஏவிவிட்டு, இலாசரைத் தன் வீட்டு
வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, செல்வர் சார்பில்
வாதாடத் தோன்றுகிறது. செல்வர், இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த
தண்டனை அவருக்குக் கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.
இலாசர்
மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் எதிர்மறையான
நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில், இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே
என்ற குறைந்தபட்ச உணர்வு செல்வருக்கு இருந்தது என்று நம்மால் சொல்லமுடியும். இவ்வுவமையில்
கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை,
இலாசரும்,
அவர் வீட்டில் இருந்த ஒரு மேசை, நாற்காலியும் ஒன்றே... ஒருவேளை, அந்த மேசை
நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை, நாற்காலியைத் துடைக்கும் துணியைவிட
கேவலமாக “இலாசர் அச்செல்வருடைய
வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” (லூக்கா 16: 20) என்று இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல், இலாசரின் அவலநிலையை அழுத்தமாகக் கூறுகிறது.
ஒருவர்
மீது அன்பையோ, வெறுப்பையோ காட்டுவது,
அவர் ஒரு மனிதப் பிறவி என்பதையாவது உறுதிப்படுத்தும் ஒரு நிலை. ஆனால், ஒருவரை குறித்து எந்த உணர்வும் காட்டாமல், அவர் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப்போல்
ஒருவரை நடத்துவது, மிகவும் கொடுமையான தண்டனை. இத்தகையத் தண்டனையை, அச்செல்வர், இலாசருக்கு
வழங்கியதால்தான் அவர் நரக தண்டனை பெற்றார். அந்தத் தெருவில் அலைந்த நாய்கள்கூட இலாசரை
ஒரு பொருட்டாக மதித்தன என்பதையும், இயேசு, இந்த மூன்றாம் ஒப்புமையில் அடிக்கோடிட்டுக்
காட்டுகிறார்.
செல்வரைப்
பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட
தூசியும், இலாசரும், ஒன்று. தூசி காலடியில் கிடக்கும்வரை பிரச்சனை இல்லை; அதே தூசி மேலெழுந்து,
கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும். தூசியாக செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த
இலாசர், மறுவாழ்வில் மேலே
உயர்த்தப்பட்டு, அந்தச் செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை,
இன்றைய நற்செய்தியின் பிற்பகுதியில் காண்கிறோம்.
ஆபிரகாமின்
மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத்
தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்' (லூக்கா 16:
24) என்று மன்றாடுகிறார்.
இந்த வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது, நம் சிந்தனைக்குரியது.
வாழ்நாளெல்லாம் தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரின் பெயர் அச்செல்வருக்குத் தெரிந்திருந்ததா
என்பது சந்தேகம்தான். மறுவாழ்வில் அந்த ஏழையின் பெயரை முதல் முறையாக இச்செல்வர் உச்சரித்திருக்க
வேண்டும் என்று கூறுகின்றனர். மறுவுலகில் அச்செல்வர் இலாசருக்கு அளித்த மதிப்பில்,
ஆயிரத்தில் ஒரு பகுதியை, இவ்வுலகில் அளித்திருந்தால், மீட்படைந்திருப்பாரே என்று எண்ணத்
தோன்றுகிறது.
வான்
வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று சென்ற வாரம் இயேசு எச்சரித்தார்.
நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, மனிதப் பிறவிகள் என்ற அடிப்படை மதிப்பையாவது
அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை மதிப்பை வழங்க மறுத்தால், நரகத்தை நாம் தெரிவுசெய்கிறோம் என்பதை இன்று
இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது, அவருக்குத் தரப்பட்ட ஒரு
பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது, அவரை ஒரு மனிதப் பிறவியாகக்
கூட மதிக்காமல், செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும்.
அந்த நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு, கடவுள் தந்த பாடம், இந்த
மறுவாழ்வு நரகம். இதைக் காட்டிலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?
No comments:
Post a Comment