30 November, 2023

Be awake, aware, alert, and be responsible! விழிப்புடன், பொறுப்புடன் வாழ்க!

 
Be on guard! Stay awake!

I Sunday of Advent 

Three days back, on November 30, the 28th United Nations Climate Change Conference (COP28), began in Dubai. Every year when this conference takes place, the world leaders talk about the climate crisis we have created for ourselves. With the present trend in carbon emission and fossil fuel usage, we are accelerating the climate change that will extinguish life on planet earth. The changes in climate with frequent natural disasters are a clear warning for us to think about the end of the world.

Whenever we face natural disasters – like an earthquake and the resultant tsunami, eruption of a volcano, a hurricane etc. – some of us begin to think of them as the end of the world and, with the availability of the social media, begin spreading facile, false and half-baked explanations about the end. When the whole world was affected by the COVID-19 pandemic, there were so many rumours, mainly on the social media, connecting God’s wrath and the end of the world. Now, the Israel-Hamas war is being interpreted in terms of Biblical predictions.

Apart from natural disasters, certain years and dates create false alarms. About ten years back, some of us may have had anxious moments, due to rumours that the end of the world was imminent. According to the Mayan prediction, 21-12-2012, that is, 21st December 2012 was to be the end of the world. Such predictions and their subsequent anxiety have occurred in human history right from the time of Christ… or, perhaps, even earlier!
  • In A.D. 204, Hippolytus, a Christian writer in Rome, recorded that a bishop was convinced that the Lord was going to return immediately. He urged his followers to sell all their possessions and follow him into the wilderness to await the Lord’s coming.
  • At the end of the first millennium, anticipation of the Second Coming ran high. On the last day of A.D. 999, the basilica of St. Peter’s in Rome was filled with people who were weeping and trembling as they expected the world to end.
  • Because the Bible has designated 666 as the number of the Beast, (cf. Revelation 13:18) many Christians in 17th-century Europe feared the end of the world in the year 1666. The Great London Fire, which lasted from September 2 to September 5 of that year, destroyed much of the city, including 87 parish churches and about 13,000 houses. Many saw it as a fulfillment of the end of the world prophecy.
  • In March 1997, 39 members (21 women and 18 men) of a California cult called Heaven’s Gate, headed by Marshall Applewhite, exploded onto the national scene with their mass suicide in a luxurious mansion at Rancho Santa Fe near San Diego in California. This was their preparation for being safely transported to heaven by a UFO, thus avoiding the tribulations accompanying the immediate end of the world.
  • The ‘end-of-the-world’ anxiety ran high, once again, as we approached the end of 1999 and 2000.
When we speak about ‘The End’, most of our thoughts and conversations are about how ‘terrible that day would be when the Master returns’. I can recall moments in Chennai, when someone would suddenly thrust a paper, or a pamphlet into my hands as I was walking down the road. Those were the roadside preachers who were trying to warn the people of the impending disaster. “The Day of the Lord is at hand”… was their constant theme.

Today we begin a new liturgical year with the First Sunday in Advent. This season is meant to prepare us for the coming of the Divine Child at Christmas. This is also a season where we are invited to think about the Second Coming of Christ. This is the theme of today’s gospel: Mark 13: 33-37

We are NOT SURE of the when, where and how of this Second Coming and the end of the world. It could come tomorrow or hundred thousand years later. But, we are VERY SURE of our going out of this world one day. Instead of spending our time and energy on the end of the world, it would surely be beneficial to us to spend time on our departure from the world. Even in our personal departure, instead of spending time on when we would depart, we can think about how we could or should depart. In today’s gospel, Christ gives us the necessary tips as to how we should prepare for our departure... Be awake! Be aware! Be alert! and Be responsible!

Being watchful and being responsible have different shades of meaning. We can be watchful and responsible out of fear or out of love. We can carry out our responsibilities for the sake of pleasing others (trying to be on our best behaviour in front of the Master) or, simply being honest and sincere in what we are doing, irrespective of whether we are being watched or not. Here is a story that tell us how responsible accomplishment of duties in itself is praiseworthy.
Some years ago, a tourist visited the Castle ‘Villa Asconti’ on the shores of Lake Como in northern Italy. Only the old gardener opened the gates, and the visitor stepped into the garden, which was perfectly kept. The visitor asked when the owner was last there. He was told, "Twelve years ago." Did he ever write? No. Where did he get instructions? From his agent in Milan. Does the master ever come? No. "But, you keep the grounds as though your master were coming back tomorrow." The old gardener quickly replied, "Today, sir, today."

Doing something to please one’s own conscience and, ultimately God, would set the enlightened apart from the unenlightened, who keep doing things to please others all the time. Here is the example of one such enlightened soul, John Wesley, an English cleric, theologian, and evangelist who was a leader of a revival movement within the Church of England known as Methodism: Once John Wesley was asked what he would do if he knew that that day was his last day on earth. He replied, "At 4 o'clock I would have some tea. At 6 I would visit Mrs. Brown in the hospital. Then at 7:30 I would conduct a mid-week prayer service. At 10 I would go to bed and would wake up in glory."
Let us be awake, aware, alert and responsible in all that we do! Let us beg of God to give us this enlightenment!

Our final thoughts turn, once again, towards COP 28. The 28th United Nations Climate Change Conference, is in progress from 30 November until 12 December, at the Expo City, Dubai. The conference has been held annually since the first UN climate conference held in Rio de Janeiro in the year 1992. The COP conferences are intended for governments to agree on policies to limit global temperature rises and other adverse effects on climate change. We can consider COP 28 as a God given opportunity, coming at the beginning of the Advent Season, to reflect on how we can stay awake, aware, alert and assume responsibility to save the planet for our future generations.

Due to the irresponsible lifestyle and attitude of our present generation, July 2023, was the hottest month in the recorded history of temperatures (kept from the year 1880). When this observation was published by the scientists, the U.N. Secretary General Antonio Guterres warned that “the era of global warming has ended” and “the era of global boiling has arrived.”
In the past 27 international conferences on climate change (till COP 27), our leaders have talked about taking the necessary steps to reduce global warming. But the will power of our leaders is still very weak to implement the decisions taken in every international conference. Fortunately, our younger generation has woken up. They are awake, aware, and alert! They have taken responsibility for their own future.

Here are a few examples of young persons who have taken up the reins to guide the future:
  • When the Rio Summit took place in 1992, Severn Suzuki, a 13-year-old girl from Canada spoke to the leaders for 6 minutes and 30 seconds. After enumerating all the problems we are facing in the environment, she told the world leaders: “I'm only a child and I don't have all the solutions, but I want you to realise, neither do you!... If you don't know how to fix it, please stop breaking it!”
  • The awareness and passion to save our planet reached another crescendo when Greta Thunberg, a Swedish girl caught the attention of the media. In August 2018, at age 15, she protested outside the Swedish parliament where she called for stronger action on climate change by holding up a Skolstrejk för klimatet (School Strike for Climate) sign and handing out informational flyers. Soon her protest caught up with the youth around the world. In a matter of 7 months (March 2019), the idea of ‘School Strike for Climate’ caught the imagination of more than one million strikers in 125 countries.
  • Greta Thunberg was called to speak at the UN Climate Change COP24 Conference – Katowice, Poland 2018 and at the UN Climate Action Summit 2019. On both these occasions she told the world leaders that they were acting on selfishness and greed and warned them that the future generations would not keep quiet.
  • A report on global climate litigation by the United Nations Environment Programme shows that people are increasingly turning to the courts to combat the climate crisis. According to a study conducted by the New York University, there were 279 cases filed by the youth against governments worldwide as of late June 2023.
  • In one of those cases, a group of 16 young people in the U.S. state of Montana won a landmark lawsuit in August 2023 when a judge ruled that the state was violating the constitutional right of the youth to “a clean and healthful environment,” as well as their rights to dignity, health and safety, and equal protection of the law. In that case, the plaintiffs, who are now aged between five and 22, argued that the state of Montana was violating their constitutional rights by permitting fossil fuel development without considering its effect on the climate, harming them both mentally and physically. (cf. https://www.ohchr.org)
  • While the young environmental activists around the world are trying to stop the havoc orchestrated by the present world leaders and giant corporations, there are other young persons who are taking positive actions to create (rather, ‘re-create’) the planet earth. Here is the case of Ellyanne Wanjiku, the13-year-old environmental champion with big dreams. Known as the ‘Tree Girl of Africa’, Ellyanne, from Kenya, began her mission of planting trees when she was 4 years old. Now, at the age of 13, she has planted 1.3 million trees with the help of her school mates and the local community. Ellyanne has chosen to light a candle than curse the darkness!
  • Five young persons from India have been named among 17 teen environmental activists from across the globe to receive the 2023 International Young Eco-Hero Award. The young eco-warriors who were recognised for their efforts by the US-based non-profit organisation, "Action For Nature", are: Eiha Dixit from Meerut, Manya Harsha from Bengaluru, Nirvaan Somany and Mannat Kaur from New Delhi and Karnav Rastogi from Mumbai. (cf. https://www.indiatoday.in)
We thank God for the young climate warriors who have taken up the responsibility to shape the future of the planet. Let this Advent Season help us to wake up and stay awake to heal our wounded planet. Let us be aware of the young climate warriors in our neighbourhood and, along with them, try to ‘re-create’ this planet where all the living beings can live in peace and harmony! May this Advent season we have begun, envelop the human family as well as our planet earth in peace and security!

COP28UAE

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

மூன்று நாட்களுக்கு முன்பு, நவம்பர் 30ம் நாள், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த 28வது மாநாடு (COP28) துபாயில் தொடங்கியது. ஒவ்வோர் ஆண்டும் இந்த மாநாடு நடக்கும்போது, மனிதர்களாகிய நாம், குறிப்பாக, பன்னாட்டு நிறுவன உரிமையாளர்கள் உருவாக்கிவரும் பருவநிலை நெருக்கடிகள் குறித்து உலகத் தலைவர்கள் பேசுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன; ஆனால், அவற்றை செயல்முறைப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப் படுவதில்லை. கார்பன் உமிழ்வு, மற்றும் புதைபடிவ எரிபொருள் (பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை) பயன்பாடு ஆகியவற்றை, தற்போதைய ஆபத்தான அளவில் நாம் தொடர்ந்தால், பூமிக்கோளத்தின் முடிவு காலத்தை நாம் விரைவில் கொணர்வோம். அண்மைய பத்து ஆண்டுகளில், அடிக்கடி உருவாகும் இயற்கைப் பேரிடர்கள், பூமிக்கோளத்தின் அழிவைப்பற்றி, உலக முடிவைப்பற்றி சிந்திக்க நமக்கு விடப்படும் தெளிவான எச்சரிக்கைகள்.

நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு, சூறாவளி போன்ற இயற்கைப் பேரழிவுகளை நாம் எதிர்கொள்ளும் போதெல்லாம் - நம்மில் சிலர் அவற்றை உலகின் முடிவு என்று நினைக்கத் தொடங்குகிறோம். நமது கரங்களில் எப்போதும் குடிகொண்டிருக்கும் சமூக ஊடகங்கள் வழியே, உலக முடிவைப்பற்றி எளிதான விளக்கங்களை வதந்திகளாகப் பரப்புகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன், உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று பரவியபோது, கடவுளின் கோபத்தையும், உலகத்தின் முடிவையும் இணைத்து, பல வதந்திகளை, சமுதாய ஊடகங்களில் வெளியிட்டுவந்தோம். தற்போது நடைபெறும் இஸ்ரேல்-ஹமாஸ் போரைக் குறித்து, விவிலிய மேற்கோள்களைக் காட்டி, வதந்திகள் பரவிவருகின்றன.

இயற்கை பேரழிவுகள் தவிர, குறிப்பிட்ட சில ஆண்டுகள் மற்றும் தேதிகள், தவறான எச்சரிக்கைகளை உருவாக்குகின்றன. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம், நம்மில் ஒரு சிலர், கலக்கத்துடன் வாழ்ந்திருக்கக்கூடும். இந்த உலகம் முடியப்போகிறது என்ற கலக்கம் அது. ஆம், 21-12-2012 அதாவது 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி இந்த உலகம் முடியப்போகிறது என்று, மெக்சிகோ நாட்டின் பழம்பெரும் மாயன் கலாச்சாரத்தில் சொல்லப்பட்டிருந்ததாக யாரோ சொல்ல, அது, மக்களிடையே, பெரும் தாக்கத்தை உருவாக்கியது உண்மை.

மனித வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், உலகம் முடியப்போகிறது என்ற செய்தியும், அதன் விளைவாக எழுந்த பீதியும் மக்களை அவ்வப்போது வதைத்துள்ளன.
  • கி.பி. 204ம் ஆண்டு Hippolytus என்ற கிறிஸ்தவ எழுத்தாளர் அப்போது வாழ்ந்த ஆயர் ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். உலகம் முடியப்போகிறது என்பதைத் தீவிரமாக நம்பிய அந்த ஆயர், தன் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தார். அவர்களிடம் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அவருடன் பாலை நிலத்திற்கு வரும்படி அவர்களை அழைத்தார். அங்கு, அவர்கள், இறைவனின் வரவுக்குக் காத்திருக்கலாம் என்று சொன்னார்.
  • கி.பி. 999ம் ஆண்டின் இறுதி நாட்களில் உலகம் முடியப்போகிறது என்று எண்ணிய பல்லாயிரம் கிறிஸ்தவர்கள், உரோம் நகரில், புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடி, அழுகையோடும், அச்சத்தோடும் உலக முடிவை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
  • இருபதாம் நூற்றாண்டில் உலக முடிவு வந்துவிட்டது என்று தீர்மானித்த இரு குழுக்கள் வேதனையான முடிவுகள் எடுத்ததை செய்திகளில் வாசித்தோம். 1978ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டிலும் உலக முடிவு வந்துவிட்டதென்று உணர்ந்த இரு குழுவினர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்ற செய்திகள், நமக்கு அதிர்ச்சியைத் தந்தன.
  • 1999ம் ஆண்டு முடிந்து 2000மாம் ஆண்டு ஆரம்பமாக இருந்தபோது, இதே கலக்கம் மீண்டும் தலைதூக்கியது, நமக்கு நினைவிருக்கலாம்.
இன்று தாய் திருஅவை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில், இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள் சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று நாம் சிந்திப்பது பயனுள்ள முயற்சி. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி - மாற்கு 13: 33-37 - நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.

விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை, இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு. பொறுப்புடன் நடந்துகொள்வது என்பது, தலைவர் இருக்கும்போது நல்ல பெயர் எடுக்கவேண்டும்; அவர் இல்லாதபோது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று நடிப்பது அல்ல. தலைவர் என்னை மதித்து ஒப்படைத்துள்ள பொறுப்பை, எல்லா நேரத்திலும், நானும் மதித்து நடந்து கொள்வதுதான் உண்மையான பொறுப்புணர்வு.

இத்தாலி நாட்டின் வடபகுதியில், Villa Asconti என்ற மிக அழகிய ஒரு மாளிகை இருந்தது. அதைச்சுற்றி அழகான ஒரு தோட்டமும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் கவர்ந்துவந்த இந்த மாளிகையும் தோட்டமும் ஒருவரது மேற்பார்வையில் எந்தக் குறையும் இல்லாமல் விளங்கியது. ஒருநாள் சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மேற்பார்வையாளரிடம், "இந்த மாளிகையின் உரிமையாளர் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன?" என்று கேட்டார். மேற்பார்வையாளர், "12 ஆண்டுகள் ஆகின்றன" என்று சொன்னார். "ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல முதலாளி எதுவும் கடிதமோ, வேறு தொடர்போ வைத்துள்ளாரா?" என்று கேட்டதற்கு, அவர், "இல்லை" என்று பதில் சொன்னார். "நீங்கள் இந்த மாளிகையையும், தோட்டத்தையும் சுத்தம் செய்வதைப் பார்க்கும்போது, உங்கள் முதலாளி ஏதோ நாளையே வரப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று சொன்ன அந்த சுற்றுலாப் பயணியைப் பார்த்து சிரித்தார் மேற்பார்வையாளர். பின்னர், "நாளை இல்லை நண்பரே, இன்றே அவர் வரக்கூடும்" என்று பதில் சொன்னார்.
12 ஆண்டுகளாய் ஒவ்வொரு நாளும் 'தலைவன் இன்றே வரக்கூடும்' என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளைச் செய்த இந்த மேற்பார்வையாளரைப் போல் நாம் இருக்க வேண்டும் என்பதையே இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

தலைவர் வருகிறார் என்பதை உணரும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம், வித்தியாசமாக இருக்கும். ஆன்மீகத்தில் மிகவும் ஆழ்ந்து தெளிந்தவர்களிம் இத்தகைய மாறுதல்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள், எந்த நேரத்திலும், ஒரே விதமான, உண்மையான ஈடுபாட்டுடன், ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல் வாழ்வை மாற்றாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாக வேண்டும்.

ஜான் வெஸ்லி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது பொறுப்புடன் சரியான கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வு என்ற எண்ணத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர். இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "நான் மாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச்செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

இத்தகைய தெளிந்த, அமைதியான மனநிலையுடன் இறைவனின் வரவை எதிர்பார்க்கும் பக்குவத்தை இந்த திருவருகைக் காலத்தில் நாம் கற்றுக்கொள்ள, பெற்றுக்கொள்ள செபிப்போம்.

மீண்டும் நம் எண்ணங்கள் (COP28) என்றழைக்கப்படும் காலநிலை மாற்றம் குறித்த 28வது உலக உச்சிமாநாட்டை நோக்கித் திரும்புகின்றன. இந்த மாநாடு, நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது. 1992ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற முதல் காலநிலை மாநாட்டைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. உலக வெப்பநிலை உயர்வு மற்றும் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளை அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது, COP மாநாடுகளின் நோக்கமாகக் உள்ளன. திருவருகைக் காலத்தின் ஆரம்பத்தில் நடைபெறும் COP மாநாட்டை கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பாக நாம் கருதலாம். நாம் எப்படி விழிப்புணர்வுடனும், நமது வருங்கால சந்ததியினருக்காக இந்த பூமிக்கோளத்தைக் காப்பாற்றும் பொறுப்புடனும் செயல்பட முடியும் என்பதைச் சிந்திக்க இந்த வழிபாட்டுக் காலம் உதவியாக இருக்கவேண்டும்.

இயற்கை சீரழிவு பற்றிய அக்கறை ஏதுமின்றி, இன்று நாம் வாழும் பொறுப்பற்ற வாழ்க்கை முறையின் காரணமாக, இவ்வாண்டு ஜூலை மாதம், மிக அதிக வெப்பமான மாதமாக இருந்தது. 1880ம் ஆண்டு முதல் வெப்பநிலை பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில், 2023 ஜூலை மாதமே மிக அதிகமான வெப்பத்தை எட்டியது என்ற உண்மை அறிவியலாளர்களால் வெளியிடப்பட்டபோது, ஐ.நா.வின் தலைமைப் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் அவர்கள், "புவி வெப்பமடைதல் (Era of Global Warming) என்ற சகாப்தம் முடிந்து உலக கொதிநிலையின் (Era of Global Boiling) சகாப்தம் வந்துவிட்டது" என்று எச்சரிக்கை விடுத்தார்.

காலநிலை மாற்றம் குறித்து, கடந்த ஆண்டு வரை நடைபெற்ற 27 காலநிலை மாநாடுகளில் (COP 27 வரை), புவி வெப்பமயமாதலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து நமது தலைவர்கள் பேசியுள்ளனர். ஆனால், ஒவ்வொரு மாநாட்டிலும் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் நமது தலைவர்கள் இதுவரை தீவிரமாக செயல்படவில்லை. நல்லவேளையாக, நமது இளைய தலைமுறையினர் விழிப்படைந்துள்ளனர்! அவர்கள் தங்கள் எதிர்காலத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

தங்கள் எதிர்காலத்தையும், இந்த பூமிக்கோளத்தின் எதிர்காலத்தையும் பற்றி பொறுப்பேற்றுள்ள இளையோர் சிலரின் எடுத்துக்காட்டுகள் இதோ:
  • 1992ம் ஆண்டு ரியோவில் காலநிலை உச்சி மாநாடு நடந்தபோது, கனடாவைச் சேர்ந்த செவர்ன் சுசுகி (Severn Suzuki) என்ற 13 வயது சிறுமி, மாநாட்டில் கூடியிருந்த உலகத்தலைவர்களுக்கு 6 நிமிடங்கள் 30 நொடிகள் உரையாற்றினார். சுற்றுச்சூழலில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் பட்டியலிட்ட அச்சிறுமி, உலகத் தலைவர்களிடம் கூறிய வெப்பமான சொற்கள் இதோ: “நான் ஒரு குழந்தை, என்னிடம் எல்லா தீர்வுகளும் இல்லை, ஆனால் உங்களிடமும் தீர்வுகள் இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். உடைந்துபோன உலகை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை உடைப்பதை நிறுத்துங்கள்!” என்று அச்சிறுமி கூறியபோது, உலகத் தலைவர்கள், அச்சிறுமியை நிமிர்ந்துபார்க்கவும் முடியாமல், தலைகுனிந்து அமர்ந்திருந்ததை, காணொளியில் நாம் காணலாம்.
  • சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) என்ற 15 வயது நிறைந்த வளர் இளம் பெண், 2018ம் ஆண்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், அவ்விளம்பெண், சுவீடன் பாராளுமன்றத்திற்கு வெளியே, 'காலநிலையைக் காப்பாற்ற பள்ளி செல்லா போராட்டம்' என்ற பலகையுடன் அமர்ந்திருந்தார். விரைவில், அவரது போராட்டம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஈர்த்தது. 7 மாதங்களில் (மார்ச் 2019), 125 நாடுகளில் உள்ள 10 இலட்சத்திற்கும் அதிகமான இளையோர், பள்ளி செல்லா போராட்டத்தை மேற்கொண்டனர்.
  • 2018ம் ஆண்டு, போலந்து நாட்டில் நடைபெற்ற COP24 மாநாட்டிலும், 2019ம் ஆண்டு நடைபெற்ற காலநிலை செயல்திட்டம் உச்சிமாநாட்டிலும் கிரேட்டா பேச அழைக்கப்பட்டார். இந்த இரண்டு மாநாடுகளிலும் உலகத் தலைவர்கள் சுயநலத்துடன் செயல்படுவதாக சுட்டிக்காட்டியதோடு, எதிர்கால சந்ததியினர் இனியும் அமைதியைக் கடைப்பிடித்து வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்று எச்சரித்தார்.
  • காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு இளையோர் பலர் நீதிமன்றங்களை நாடுகிறார்கள் என்பதை, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அறிக்கை, சுட்டிக்காட்டுகிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு கணிப்பின்படி, 2023, ஜூன் மாதத்தின் இறுதியில், உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்கு எதிராக இளைஞர்களால் 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் ஒன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் மொன்டானா (Montana) மாநில அரசுக்கு எதிராக இளையோர் தொடுத்த வழக்கு. அந்த மாநில அரசு புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவித்து, தங்கள் எதிர்காலத்தை ஆபத்திற்கு உள்ளாக்குகிறது என்று இளையோர் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் இளையோருக்கு சாதகமாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • தற்போதைய உலகத் தலைவர்கள் மற்றும் மாபெரும் நிறுவனங்களால் திட்டமிட்டு நடத்தப்படும் இயற்கை அழிவைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள இளயோர் முயற்சி செய்துவரும் அதே வேளையில், காயப்பட்ட நம் பூமியை உருவாக்குவதற்கு நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்கும் இளையோரும் உள்ளனர். 13 வயதான எல்லியான் வான்ஜிகு (Ellyanne Wanjiku), ‘ஆப்ரிக்காவின் மரப்பெண்’ என்று அழைக்கப்படுகிறார். கென்யா நாட்டைச் சேர்ந்த எல்லியான், தனது 4வது வயதில் மரங்கள் நடும் பணியைத் தொடங்கினார். இப்போது, 13வது வயதில், அவர், தனது பள்ளித் தோழர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் 13 இலட்சம் மரங்களை நட்டுள்ளார். இருளைப் பழிப்பதை விட எரியும் மெழுகுதிரியை ஏற்றி வைப்பதை எல்லியான் தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்!
  • 2023ம் ஆண்டின் சர்வதேச இளம் சுற்றுச்சூழல் நாயகர் விருதைப் பெறுவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து வளர் இளம் பருவத்தைச் சேர்ந்த 17 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மீரட்டைச் சேர்ந்த எய்ஹா தீக்ஷித் (Eiha Dixit), பெங்களூரைச் சேர்ந்த மன்யா ஹர்ஷா (Manya Harsha), புது டில்லியைச் சேர்ந்த நிர்வான் சோமானி (Nirvaan Somany), மன்னத் கவுர் (Mannat Kaur) மற்றும் மும்பையின் கர்னவ் ரஸ்தோகி (Karnav Rastogi) ஆகிய ஐவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பூமிக்கோளத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க பொறுப்புடன் போராடிவரும் இளம் பருவநிலை வீரர்களுக்காக நாம் கடவுளுக்கு நன்றி கூறுவோம். காயப்பட்ட நம் பூமிக்கோளத்தை குணப்படுத்தும் பணியில், விழிப்போடும், பொறுப்போடும் செயல்பட, இந்த திருவருகைக்காலம் உதவட்டும். நாம் வாழும் பகுதிகளில் செயலாற்றும் இளம் பருவநிலை வீரர்களைப்பற்றி அறிந்து, அவர்களுடன் இணைந்து, அனைத்து உயிரினங்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய இந்தப் பூமியை ‘மீண்டும் உருவாக்க’ முயற்சிப்போம்! நாம் தொடங்கியிருக்கும் இந்த திருவருகைக்காலம், மனித குடும்பத்தையும், நமது பூமியையும், அமைதி மற்றும் பாதுகாப்பில் சூழ்ந்திருக்கட்டும்!
 

23 November, 2023

Hungry, thirsty… imprisoned King! பசியாய், தாகமாய்... சிறைப்பட்டிருக்கும் அரசர்!

 
Jesus in prison

The Feast of Christ the King

Queen Elizabeth II, the longest serving monarch of the United Kingdom for 70 years, died on September 8, 2022 and the burial ceremony took place on September 19. One of the most striking moments from the burial ceremony was the removal of the imperial state crown, the orb and the sceptre which were displayed on the Queen’s coffin, before it was lowered to the royal vault. Those moments must have brought home the undeniable truth that earthly power is only transient. In spite of such moments of truth, we do see some of the world leaders imagining themselves to be monarchs with unlimited power, for all the ages to come.

Moisés Naím, a Venezuelan journalist and writer who is considered as one of the world's leading thinkers, published a book (February 2022) titled: “The Revenge of Power – How Autocrats are Reinventing Politics for the 21st Century”. In this book, he talks about how some of the world leaders today have become a ‘a new breed of power-seekers’. Here is an excerpt from the introductory chapter of this book:
In recent years, we have seen the success of a new breed of power-seekers… They have arisen all over the world, from the richest countries to the poorest, from the most institutionally sophisticated to the most backward. We have in mind here Donald Trump, of course, but also Venezuela’s Hugo Chávez, Hungary’s Viktor Orbán, the Philippines’ Rodrigo Duterte, India’s Narendra Modi, Brazil’s Jair Bolsonaro, Turkey’s Recep Tayyip Erdoğan, El Salvador’s Nayib Bukele, and many others…
These new autocrats have pioneered new techniques for gaining unlimited power and then keeping it for as long as they can. The ultimate goal—not always attainable but always fought hard for—is power for life... Their success is emboldening others to try to emulate them all around the world.

The author goes on to discuss how some of these power seekers have built their political career on Populism, Polarization and Post-truth and calls them ‘3P autocrats’. He compares these 21st century autocrats to their counterparts in the 20th century: What twentieth-century autocrats (like Hitler, Stalin, Pinochet, Mao Zedong, and Mussolini) did by force, their twenty-first-century counterparts do by stealth. While their twentieth-century predecessors set out to destroy the rule of law with brute force, twenty-first-century autocrats undermine it through the corrosive power of insincere mimicry.
Moises Naim calls this corrosive power “pseudolaw: a corrupt facsimile of the rule of law that is, in fact, its mortal enemy.” These autocrats, with the help of the rubber-stamp army, judiciary and parliament, have bent the law and the system to a great extent to continue in power. Naim cites the example of Vladimir Putin, the Russian president: In March 2020, he (Vladimir Putin) had the Duma, his rubber-stamp parliament, pass a law allowing him to run for a further two terms, through 2036 - thirty-seven years after he first came to power. The vote tally for this change on the floor of the Duma was 383 in favor, 0 against. The proposal then went to the voters: with a 65 percent turnout, 78 percent of Russia’s voters agreed to the proposal.

Putin must have been emboldened by the success of Xi Jinping, his Chinese counterpart. In 2018, Chinese Parliament had approved the removal of the two-term limit on the presidency, which was in vogue since the 1990s, effectively allowing Xi Jinping to remain in power for life. The constitutional changes were passed by the annual sitting of parliament, the National People's Congress. The vote was widely regarded as a rubber-stamping exercise.
Trump, the then President of the U.S., seemed to have said: "President for life... I think it's great. Maybe we'll have to give that a shot some day." We shouldn’t be surprised if Narendra Modi is contemplating a similar move in India as we are approaching the general elections in 2024. All these autocrats are warning signals for us; but are we paying enough attention?

In the opening pages of the book – The Revenge of Power – we see two ominous quotes that make us think about how by our ignorance or silence we create these monsters of power: 
We know that no one ever seizes power with the intention of relinquishing it. (George Orwell, ‘Nineteen Eighty-Four’)
We do not know what is happening to us, and that is precisely the thing that is happening to us. (José Ortega y Gasset, ‘Man and Crisis’)

In the context of such techniques of ‘power-grabbing’ and ‘power-maintenance-at-all-costs’, which are growing in the world, the Church today invites us to reflect on true leadership or kingship. The last Sunday of the Liturgical Year is celebrated as the Feast of Christ the Universal King! Next Sunday we begin the Advent Season and, with it, a new Liturgical Year.

The title ‘Christ the King’ may create some uneasy feelings in us. The other titles, namely, Christ the Shepherd, Christ the Saviour, Christ the Son of David, Christ the Crucified, Christ the Lord do not create problems for us. In fact, the First Reading (Ezekiel 34:11-12,15-17) and, more especially, the Responsorial Psalm of the Good Shepherd (Psalm 23) fill us with a lot of comforting sentiments. Why do we feel so uncomfortable with the title Christ the King? ‘Christ’ and ‘King’ seem to be two opposite, irreconcilable poles. That is why…
The moment we think of a king, pomp and power, glory and glamour, arrogance and avarice… these thoughts crowd our mind. Would Christ be a king this way? No way… Christ does talk about a kingdom. But it is a Kingdom not defined by a territory, a Kingdom not at war with other kingdoms, a Kingdom that can be established only in human hearts. This is the King we are presented with in today’s Feast!

The historical reason for the establishment of this Feast gives us a better understanding of what this feast means to us today. World War I was one of the main reasons for establishing the Feast of Christ the King. Pope Benedict XV, who assumed the leadership of the Church on 3 September 1914, bore the full brunt of World War I. He called that war “senseless massacre” and “the suicide of the civilized Europe”. Pope Pius XI who became his successor in 1922, realized that the main reason for the First World War was the insatiable thirst for power. Hence, in 1925, he proposed an alternate model of kingship in Christ. He created the Feast of Christ the Universal King!

The Gospel passages prescribed for the Feast of Christ the King in all the three cycles - A, B, and C - give us a clear picture of what type of kingship we are celebrating. Today’s gospel (Matthew 25: 31-46), prescribed for Cycle A, talks of the Last Judgement. Next year’s Gospel (Cycle B) will be the trial scene of Jesus in front of Pilate (John 18: 33-37) and the year after, the Gospel (Cycle C) is a scene taken from Calvary – (Luke 23: 35-43), where Jesus, hanging on the Cross, promises to take the repentant criminal to the Kingdom of heaven. In all the three Gospels, there is hardly a hint of pomp and glory. That is the core of this Feast.

In Today’s Gospel (Matthew 25:31-46), we are given the parable of the Final Judgement. This parable begins with a glorious description of the Son of Man: “When the Son of man comes in his glory, and all the angels with him, then he will sit on his glorious throne.” (Mt 25:31). This King, seated on the throne, identifies Himself with those who are hungry, thirsty, naked etc. (Mt 25:34-36) The King does not say, “Come O blessed of my Father, …. For you gave food to the hungry, drink to the thirsty…” etc. The King says clearly: “I was hungry, I was thirsty, I was naked…” etc. A total identification with people in need! The righteous are surprised by this. The conversation between them and the King is more revealing of God’s identity with the needy: Then the righteous will answer him, ‘Lord, when did we see thee hungry and feed thee, or thirsty and give thee drink? And when did we see thee a stranger and welcome thee, or naked and clothe thee? And when did we see thee sick or in prison and visit thee?’ And the King will answer them, ‘Truly, I say to you, as you did it to one of the least of these my brethren, you did it to me.’ (Mt. 25:37-40).

When the King says, “I was hungry, I was thirsty, I was naked… etc.” I could easily accept Jesus in those situations. When he says, “I was in prison…” I tend to give an explanation as to why Jesus was in prison. I find myself saying that Jesus was falsely accused and was put behind bars. Jesus does not give any such reason for his being behind bars. He simply says: “I was in prison and you came to me” (Mt. 25:36). He simply identifies himself with all the prisoners, whether falsely accused or not. Jesus, hungry, thirsty, naked, homeless, etc. doesn’t seem to challenge me; Jesus, in prison is quite challenging.
We are aware that at least half of the prisoners all over the world have been falsely accused or victims of a spiral of events seemingly out of control. We are also sadly aware that many ‘real culprits’ are roaming the streets freely. Or, worse, have ‘stolen’ the powers from the people to put innocent people behind bars.

Seeing Jesus in the prisoners is not the only challenge, to help them get integrated into the community is another real challenge. To help the prisoners ‘turn a new leaf’, the society at large needs to give that person a ‘second chance’. Otherwise, there is every chance that the prisoner can get back to his cell. Here is a story that illustrates this point: A prisoner was getting instructions, since he was willing to receive Baptism. The Priest who was guiding him, approached him on a Saturday and said, “Tomorrow is Sunday. If you wish, I can request the warden to let you go with me to the church for Sunday Mass.” The prisoner looked at the Priest. He then showed the scars on his hands and face and said, “The warden will have no problem in granting me permission to leave the prison; but will the people in the church give me permission to enter the church?” The Priest stood shocked, not knowing what to tell him.
We know of quite many men and women who leave the prison with high hopes of getting integrated into the normal society. Since many of them do not find the proper welcome, their ‘re-entry’ becomes tough. Society denies them the ‘second chance’. The reason for this hesitation or resistance comes from our prejudices.

Three years back, on 22 November 2020, when we read the Gospel of the Last Judgement on the Feast of Christ the King, our attention was drawn towards the words: “I was in prison and you came to me” (Mt. 25:36). We were sadly aware of Fr Stan Swamy who, in spite of his advanced age and frail health condition, was languishing in prison, on blatant unjust charges fabricated by real culprits who occupied (and still occupying) thrones in the government and the judiciary. During his incarceration, Fr Stan sent a letter, written by another prisoner, in which he spoke about how prisoners treated him with great love and concern. Here are some excerpts from the letter written by Fr. Stan Swamy SJ, from the prison, with the help of prison mate Arun Ferreira:
Dear friends: Peace! 
Though I do not have many details, from what I have heard, I am grateful to all of you for expressing your solidarity and support. I am in a cell approximately 13 feet x 8 feet, along with two more inmates. It has a small bathroom and a toilet with Indian commode. Fortunately, I am given a western commode chair.… During the day, when cells and barracks are opened, we meet with each other. From 5.30 pm to 06.00 am and 12 noon to 03.00 pm, I am locked up in my cell, with two inmates. Arun assists me to have my breakfast and lunch. Vernon helps me with bath. My two inmates help out during supper, in washing my clothes and give massage to my knee joints. They are from very poor families. Please remember my inmates and my colleagues in your prayers. Despite all odds, humanity is bubbling in Taloja prison.
Fr. Stan Swamy SJ

The gospel given to us on the Feast of Christ the King hammers home, once again, the theme of the previous Sunday - the World Day of the Poor! For our King, taking care of the least privileged is a sure way to ‘inherit the Kingdom’. Taking care of those in need is THE ONLY guarantee for our salvation, nothing else! This is the invitation extended to us by Christ the King!

A final note… Every year, the Feast of Christ the King is also celebrated as the World Day of the Youth. Let us pray for our youth that they are ready to be counted worthy to enter the Kingdom by serving the hungry, thirsty, naked, sick and imprisoned persons.

Man behind bars

கிறிஸ்து அரசர் பெருவிழா

இங்கிலாந்து நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டுவந்த 2ம் எலிசபெத் அரசி, 2022ம் ஆண்டு, செப்டம்பர் 8ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். அவரது அடக்கச் சடங்கு செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்றது. அந்த சடங்கின் ஒரு பகுதியாக, அரசியின் சவப்பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த அவரது மகுடம், அவரது செங்கோல் ஆகியவை நீக்கப்பட்டு, அந்த பெட்டி கீழே இறக்கப்பட்டது. அவ்வேளையில், உலக அரசர்கள், மற்றும் அரசிகள் அனைவருக்குமே வழங்கப்பட்டுள்ள அதிகாரம் நிரந்தரமற்றது என்ற உண்மை அனைவருக்கும் தெளிவாகப் புரிந்திருக்கவேண்டும். இருந்தாலும், இன்றைய உலகத் தலைவர்களில் சிலர், தாங்கள் நிரந்தரமாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பதாக கனவு கண்டு வருவது நாம் காணும் ஒரு வேதனையான போக்கு.

வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த மொயிசெஸ் நயிம் (Moisés Naím) என்ற சிந்தனையாளர், சென்ற ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு: "அதிகாரத்தின் பழிவாங்குதல் - எதேச்சாதிகாரிகள் 21ம் நூற்றாண்டில் உருவாக்கிவரும் அரசியல்" (“The Revenge of Power – How Autocrats are Reinventing Politics for the 21st Century”அதிகாரத்தைத் தேடும் உலகத் தலைவர்களைப்பற்றி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் அறிமுகப் பிரிவில் அவர் கூறும் ஒரு சில கருத்துக்கள் இதோ:
அதிகாரம் தேடுவோரின் ஒரு புதிய சந்ததியினர், அண்மைய ஆண்டுகளில் அடைந்துவரும் வெற்றியைப் பார்த்துவருகிறோம். இவர்கள், செல்வம் மிகுந்த நாடுகளிலும், வறுமைப்பட்ட நாடுகளிலும், முன்னேற்றம் அடைந்த நாடுகளிலும், முன்னேற்றம் இல்லாத நாடுகளிலும் தோன்றியுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராக இருந்த டொனால்டு டிரம்ப்பை எண்ணிப் பார்க்கிறோம். அதே வேளையில், வெனிசுவேலாவின் ஹ்யூகோ சாவேஸ், ஹங்கேரியின் விக்டர் ஓர்பன், பிலிப்பைன்ஸின் ரொட்ரிகோ துத்தெர்த்தே, இந்தியாவின் நரேந்திர மோடி, பிரேசிலின் ஜெயிர் பொல்சனாரோ, துருக்கியின் ரெசெப் தையிப் எர்டோகன், எல் சால்வதோரின் நயிப் பூக்கலே மற்றும் பலர்…
அதிகாரத்தில் ஊறிப்போயிருக்கும் இவர்கள், வரம்பற்ற சக்தியைப் பெறுவதற்கும், பின்னர் தங்களால் முடிந்தவரை அதை தக்கவைத்துக்கொள்வதற்கும் புதிய நுட்பங்களை முன்னெடுத்துள்ளனர். வாழ்நாளெல்லாம் அதிகாரத்தைப் பெற்றிருப்பது இவர்களது இலக்கு... அவர்கள் அடைந்துள்ள வெற்றி, உலகம் முழுவதும் அவர்களைப்போன்ற முயற்சிகளை மேற்கொள்ள பலரைத் தூண்டுகிறது.

21 ஆம் நூற்றாண்டின் இத்தகைய எதேச்சாதிகாரிகளை 20 ஆம் நூற்றாண்டில் இருந்த எதேச்சாதிகாரிகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் ஆசிரியர். இருபதாம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள் (ஹிட்லர், ஸ்டாலின், பினோஷே, மாவ் சேதுங், மற்றும் முசோலினி போன்றவர்கள்) முரட்டுத்தனமாக செய்ததை, இருபத்தியோராம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள் மறைமுகமாகச் செய்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை, வெறிகொண்டு அழிக்கப் புறப்பட்டனர். இருபத்தியோராம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகளோ, அவர்களுக்குத் துதிபாடும் இராணுவம், நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தின் உதவியுடன் அதிகாரத்தில் நீடிக்க சட்டத்தையும் அமைப்பையும் பெருமளவு மாற்றியமைத்துள்ளனர். இதற்கு, இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் சிறந்த எடுத்துக்காட்டு.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், விளாடிமிர் புடின் அவர்கள், அவரது கைப்பாவையாக இருந்த பாராளுமன்றத்தின் உதவியுடன், 2036ம் ஆண்டு முடிய பதவியில் நீடிக்கும்படி சட்டத்தை இயற்றினார். அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன், 2018ம் ஆண்டு, சீனாவின் அரசுத்தலைவர் ஜி ஜின்பிங்க் அவர்கள், வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருக்கும் முயற்சியை மேற்கொண்டு, சீன பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றார். அவ்வாண்டு அமெரிக்க அரசுத்தலைவராக இருந்த ட்ரம்ப், "வாழ்நாள் முழுவதும் அரசுத்தலைவர் என்பது மிகவும் அருமையான திட்டம்... அதற்கு நாமும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் என்ன?" என்று கூறியதாகத் தெரிகிறது. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் இதேபோன்ற நடவடிக்கையை நரேந்திர மோடி சிந்தித்துப் பார்த்தால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்த எதேச்சாதிகாரிகளின் போக்கு, நாம் விழித்தெழுவதற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை. ஆனால், இதை நாம் கவனத்தில் கொள்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறியே!

அதிகாரத்தின் பழிவாங்குதல் என்ற இந்நூலின் முதல் பக்கங்களில் இரண்டு அச்சுறுத்தும் மேற்கோள்களைக் காண்கிறோம். நமது அறியாமை மற்றும் மௌனத்தால், இத்தகைய அரக்கர்களை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது:
அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் நோக்கத்துடன் யாரும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்லை என்பதை நாம் அறிவோம். (George Orwell, ‘Nineteen Eighty-Four’)
நமக்கு என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவதில்லை. அதுதான் நமக்கு நிச்சயமாக நடந்துகொண்டிருக்கிறது. (José Ortega y Gasset, ‘Man and Crisis’)

இத்தகையதொரு காலக்கட்டத்தில், ‘அனைத்துலகின் அரசர் கிறிஸ்து என்ற திருநாள் வழியே, நாம் விழிப்புணர்வு பெறுவதற்கு, தாய் திருஅவை, இஞ்ஞாயிறன்று, நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
திருஅவையில் நாம் கொண்டாடும் அனைத்துத் திருநாள்களில், இந்த ஒரு திருநாள், நமக்குள் சங்கடங்களை உருவாக்க வாய்ப்பு உண்டு. கிறிஸ்துவை, நல்லாயன், நல்லாசிரியர், நண்பர், மீட்பர், என்று... பல கோணங்களில் எண்ணிப்பார்க்கும்போது, உள்ளம் நிறைவடைகிறது. இன்றைய முதல் வாசகத்தில், (எசேக்கியேல் 34:11-12,15-17) பரிவுகொண்ட ஓர் ஆயனாக, இறைவன், தன்னையே உருவகித்துப் பேசுவதைக் கேட்கும்போது, நம் உள்ளம் மகிழ்கிறது. அதைவிட அதிகமாக, இன்றைய பதிலுரைப்பாடலாக வழங்கப்பட்டுள்ள ஆண்டவரே என் ஆயர் என்ற 23வது திருப்பாடலின் வரிகள், நம் வாழ்வில் பலமுறை நமக்கு ஆறுதல் வழங்கியுள்ளன.  ஆனால், கிறிஸ்துவை, அரசராக கற்பனை செய்து பார்க்கும்போது, சங்கடங்கள் எழுகின்றன. அரசர் என்றதும், மனத்திரையில் தோன்றும் காட்சிகளே, இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம்.

அரசர் என்றதும், பட்டும், வைரமும் மின்னும் உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் ஓர் உருவம், நம் கற்பனையில் வலம் வருவதால், சங்கடமடைகிறோம். அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப்பார்த்தால், இயேசு, நிச்சயமாக அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர். ஓர் அரசை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது!
அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், எல்லைகள் இல்லை, எல்லையைப் பாதுகாக்க, போர் இல்லை, படைகள் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை... ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு, இவை எதுவுமே தேவையில்லை. இத்தகைய மன்னரைக் கொண்டாடவே, கிறிஸ்து அரசர் திருநாள் நம்மை அழைக்கிறது.

கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிவுற்ற பின்னரும், உலகத்தில், பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. முதல் உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள், மற்றும் தலைவர்களின் அத்துமீறியப் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில், தங்கள் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, இன்னும் பலகோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. அரசர்களும், தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார்.

அன்று நிலவிய அதிகார வெறி, முதல் உலகப்போருடன் முடிவடையாமல், இரண்டாம் உலகப்போரையும் உருவாக்கியது. இன்றும், அதே அதிகார வெறி, மூன்றாம் உலகப்போரை, சிறு, சிறு துண்டுகளாக, உலகெங்கும் நடத்திவருகின்றது. இத்தகையப் போர்களை ஊக்குவித்து, மக்களின் உயிர்களைக் கொன்று குவித்து அந்தக் கல்லறைகள் மேல் தங்கள் அரியணைகளை அமைத்து அமர்ந்திருக்கும் தலைவர்களை உலகின் அனைத்து நாடுகளிலும் இன்று காண்கிறோம்.

இத்தகையத் தலைவர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசர் என்று பறைசாற்றுகிறது, கத்தோலிக்கத் திருஅவை. கிறிஸ்து என்ற அரசரிடமிருந்து, மக்கள், குறிப்பாக, தலைவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு, தலைவர்கள், பாடங்களைப் பயில்வார்களா என்பது தெரியவில்லை. நாம் பாடங்களை பயில முன்வருவோமே!

உண்மை அரசரின் பண்புகளை கற்றுக்கொள்ள, இன்று நாம் கேட்கும் நற்செய்தி வாசகம், உதவியாக உள்ளது. மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறும் இந்த இறுதி உவமையில் பங்கேற்கும் கதைமாந்தர்கள் பலருடன், ஆண்டவர் தன்னையே இணைத்து, அவர்கள் வடிவாகவே மாறுகிறார். அரியணையில் வீற்றிருப்பவராகமட்டும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல், இவ்வுலகில் துன்புறும் பலராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் இறைவன். 'பசியால் இருந்தோருக்கு நீங்கள் உணவு கொடுத்தீர்கள்' என்று அரசர் சொல்லவில்லை; மாறாக,நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' (மத்தேயு 25: 35-36) என்று அரசர் சொல்கிறார்.

இறுதித் தீர்வையின்போது, "பசியாய் இருந்தேன், தாகமாய் இருந்தேன்..." என்று இயேசு, தன்னையே அடையாளப்படுத்துவதை நம்மால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. "சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று அவர் கூறும்போது, "எந்தக் குற்றமும் செய்யாத இயேசு, சிறையில் அடைக்கப்பட்டார்" என்று, அந்தக் கூற்றுக்கு, ஒரு விளக்கம் தந்து, இயேசுவை ஒரு சிறைக்கைதியாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இயேசு, அவ்விதம் தன்னை அடையாளப்படுத்தவில்லை. "குற்றமேதும் புரியாத நான் சிறையிலிருந்தேன்" என்று அவர் கூறாமல், பொதுவாக, "நான் சிறையிலிருந்தேன்" என்று மட்டும் கூறியுள்ளார். குற்றம் புரிந்தோ, புரியாமலோ, சிறையில் தள்ளப்பட்டுள்ள அனைவரோடும் இயேசு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டார். இது நமக்குச் சவாலாக அமைகிறது.

சிறைக்கைதிகளில் இயேசுவைக் காண்பதோடு, அவர்கள் விடுதலைபெற்று வெளியே வரும்வேளையில், அவர்களை சமுதாயத்தில் ஒருவராக உணரச்செய்வதும் நம் பொறுப்பு. இது கடினமான ஒரு சவால் என்பதை வெளிப்படுத்தும் ஓர் உண்மை நிகழ்வு இது: சிறைக்கைதிகளில் ஒருவர் திருமுழுக்கு பெறுவதற்கு தன்னையே தயார் செய்துவந்தார். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த அருள்பணியாளர், அவரிடம், "நாளை ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் என்னுடன் கோவிலுக்கு வருவதாக இருந்தால், சிறைக்காவலரிடம் நான் அனுமதி பெறுகிறேன்" என்று கூறினார். அந்தக் கைதி, தன் கைகளிலும், முகத்திலும் கத்தியால் கீறப்பட்ட தழும்புகளை அருள்பணியாளரிடம் காட்டி, "சாமி, சிறையிலிருந்து வெளியேச் செல்வதற்கு, சிறைக் காவலர் எனக்கு எளிதாக அனுமதி தந்துவிடுவார். ஆனால், இந்தத் தழும்புகளுடன் நான் கோவிலுக்குள் நுழைவதற்கு மக்கள் அனுமதி தருவார்களா?" என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், அருள்பணியாளர் அமைதியாக நின்றார்.

மனமாற்றம் பெற்று மறுவாழ்வைத் துவக்கும் எத்தனை கைதிகள், மீண்டும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கொடுமையால், சிறைவாழ்வே மேல் என்று எண்ணி வருகின்றனர்! இவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைப்பதற்குத் தடையாக இருப்பன, நாம் உள்ளத்தில் அவர்களைப்பற்றி செதுக்கி வைத்திருக்கும் முற்சார்பு எண்ணங்களே.

மூன்று ஆண்டுகளுக்கு முன், 2020ம் ஆண்டு, நவம்பர் 20ம் தேதி, கிறிஸ்து அரசர் திருநாளன்று, சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்ற சொற்களை நற்செய்தியில் வாசித்த வேளையில், அநீதியான முறையில் மும்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை நோக்கி நம் எண்ணங்கள் திரும்பின. மற்றொரு சிறைக்கைதியின் உதவியுடன் எழுதி, அருள்பணி ஸ்டான் அவர்கள் வெளியிட்டிருந்த ஒரு மடலில், தான் சிறையில் உணர்ந்துவரும் மனிதாபிமானத்தை புகழ்ந்து பேசியுள்ளார். பார்க்கின்சன்ஸ் நோயினால் துன்புறும் அவர், உண்பதற்கும், குளிப்பதற்கும், அவருடன் தங்கியிருக்கும் இருவர் உதவி செய்ததாக அம்மடலில் கூறியிருந்தார். அவ்விருவரும் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்காக செபிக்கும்படியும் அவர், தன் மடல்வழியே விண்ணப்பித்திருந்தார். அநீதியான பழிகளைச் சுமந்து, மும்பை சிறையில் அடைக்கப்பட்டிந்த 83 வயதான அருள்பணி ஸ்டான் அவர்கள் உருவில், இயேசுவும் அந்தச் சிறையில் அடைபட்டிருந்தார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

ஏழைகள் வடிவில் இறைவன் வாழ்வதை, பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் பல வழிகளில் சொல்லித் தந்துள்ளன. மெக்சிகோவில் வாழ்ந்த Aztec என்ற பழங்குடியினர் எழுதிவைத்த ஒரு கவிதை, இறைவனை இவ்வகையில் அடையாளப்படுத்துகிறது. மண்ணோடு மண்ணாக, சிறு, சிறு துண்டுகளைப்போல் வாழும் மக்களைத் தேடினால், அங்கு அவர்களோடு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இறைவனைக் காணமுடியும் என்பதை, இக்கவிதை கூறுகிறது. இக்கவிதையின் சுருக்கம் இதோ: "வாழ்வுப் பாதையில் நீங்கள் நடந்து செல்லும்போது, உங்கள் வாழ்வை வழிநடத்தும் ஒரு சக்தியை, கடவுளின் ஒரு சிறு பகுதியை நீங்கள் தேடினால், கீழ்நோக்கி நீங்கள் பார்க்கவேண்டியிருக்கும். நீங்கள் தேடும் கடவுள், சின்ன விடயங்களில் இருப்பார், பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பார். ஒருவேளை, பூமிக்கு அடியிலும் அவர் இருக்கலாம். கடவுளைத் தேடுவோர், தலையைத் தாழ்த்தி, கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும், கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும்."
துன்புறும் மனித சமுதாயம், தன்னில் ஒரு பகுதி என்றும்இறைவன் ஏழையாகவே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார் என்றும், இன்றைய நற்செய்தி ஆணித்தரமாகக் கூறுகிறது.

வறியோர் வடிவில் இறைவன் வாழ்வதை மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்ள கடந்த வாரம் சிறப்பித்த வறியோரின் உலக நாள் நமக்கொரு வாய்ப்பை வழங்கியது. இவ்வுலக வாழ்வு முடிந்து, இறுதித் தீர்வை நேரத்தில், கிறிஸ்து அரசருக்கு முன் நாம் நிற்கும் வேளையில், அரசர் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நம்மிடம் கேட்பார்: உன் வாழ்வைக்கொண்டு, உனக்கு வழங்கப்பட்டச் செல்வங்களை, திறமைகளை, வாய்ப்புக்களைக்கொண்டு அடுத்தவருக்கு என்ன செய்தாய்? முக்கியமாக, செல்வம், திறமை, உரிமை, வாய்ப்புக்கள் இவை யாவும் மறுக்கப்பட்டுள்ள வறியோருக்கு என்ன செய்தாய்? என்பது ஒன்றே, இறைவனாக, அரசனாக, நம் முன் தோன்றும் இயேசு கேட்கும் கேள்வி. இறுதித் தீர்வையில் இக்கேள்விக்கு நாம் தரப்போகும் பதில், இன்று முதல் நம் வாழ்வில் செயல்வடிவம் பெறட்டும்!

இறுதியாக ஓர் எண்ணம். ஒரு வேண்டுதல்... ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் திருநாள், இளையோர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு தளங்களில் 'ஸ்டார்'களாக வலம்வரும் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்கள் காட்டும் தவறானப் பாதைகளில் பயணித்து தங்கள் வாழ்வை வீணடித்துவரும் இளையோர், வறியோர், பசித்தோர், நோயுற்றோர், சிறைக்கைதிகள் ஆகியோருடன் தங்களையே இணைத்துக்கொண்டு, அவர்கள் வாழ்வை மேம்படுத்தி, அவர்களுடன் விண்ணக அரசில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.