I Sunday of Advent
Three days back, on
November 30, the 28th United Nations Climate Change Conference (COP28), began
in Dubai. Every year when this conference takes place, the world leaders talk
about the climate crisis we have created for ourselves. With the present trend
in carbon emission and fossil fuel usage, we are accelerating the climate
change that will extinguish life on planet earth. The changes in climate with
frequent natural disasters are a clear warning for us to think about the end of
the world.
Whenever we face
natural disasters – like an earthquake and the resultant tsunami, eruption of a
volcano, a hurricane etc. – some of us begin to think of them as the end of the
world and, with the availability of the social media, begin spreading facile,
false and half-baked explanations about the end. When the whole world was
affected by the COVID-19 pandemic, there were so many rumours, mainly on the
social media, connecting God’s wrath and the end of the world. Now, the
Israel-Hamas war is being interpreted in terms of Biblical predictions.
Apart from natural
disasters, certain years and dates create false alarms. About ten years back, some
of us may have had anxious moments, due to rumours that the end of the world
was imminent. According to the Mayan prediction, 21-12-2012, that is, 21st
December 2012 was to be the end of the world. Such predictions and their
subsequent anxiety have occurred in human history right from the time of
Christ… or, perhaps, even earlier!
- In A.D. 204, Hippolytus, a Christian writer in Rome, recorded that a bishop was convinced that the Lord was going to return immediately. He urged his followers to sell all their possessions and follow him into the wilderness to await the Lord’s coming.
- At the end of the first millennium, anticipation of the Second Coming ran high. On the last day of A.D. 999, the basilica of St. Peter’s in Rome was filled with people who were weeping and trembling as they expected the world to end.
- Because the Bible has designated 666 as the number of the Beast, (cf. Revelation 13:18) many Christians in 17th-century Europe feared the end of the world in the year 1666. The Great London Fire, which lasted from September 2 to September 5 of that year, destroyed much of the city, including 87 parish churches and about 13,000 houses. Many saw it as a fulfillment of the end of the world prophecy.
- In March 1997, 39 members (21 women and 18 men) of a California cult called Heaven’s Gate, headed by Marshall Applewhite, exploded onto the national scene with their mass suicide in a luxurious mansion at Rancho Santa Fe near San Diego in California. This was their preparation for being safely transported to heaven by a UFO, thus avoiding the tribulations accompanying the immediate end of the world.
- The ‘end-of-the-world’ anxiety ran high, once again, as we approached the end of 1999 and 2000.
When we speak about
‘The End’, most of our thoughts and conversations are about how ‘terrible that
day would be when the Master returns’. I can recall moments in Chennai, when
someone would suddenly thrust a paper, or a pamphlet into my hands as I was
walking down the road. Those were the roadside preachers who were trying to
warn the people of the impending disaster. “The Day of the Lord is at hand”…
was their constant theme.
Today we begin a new
liturgical year with the First Sunday in Advent. This season is meant to
prepare us for the coming of the Divine Child at Christmas. This is also a
season where we are invited to think about the Second Coming of Christ. This is
the theme of today’s gospel: Mark 13: 33-37
We are NOT SURE of the
when, where and how of this Second Coming and the end of the world. It could
come tomorrow or hundred thousand years later. But, we are VERY SURE of our
going out of this world one day. Instead of spending our time and energy on the
end of the world, it would surely be beneficial to us to spend time on our
departure from the world. Even in our personal departure, instead of spending
time on when we would depart, we can think about how we could or should depart.
In today’s gospel, Christ gives us the necessary tips as to how we should
prepare for our departure... Be awake! Be aware! Be alert! and Be
responsible!
Being watchful and
being responsible have different shades of meaning. We can be watchful and
responsible out of fear or out of love. We can carry out our responsibilities
for the sake of pleasing others (trying to be on our best behaviour in front of
the Master) or, simply being honest and sincere in what we are doing,
irrespective of whether we are being watched or not. Here is a story that tell
us how responsible accomplishment of duties in itself is praiseworthy.
Some years ago, a
tourist visited the Castle ‘Villa Asconti’ on the shores of Lake Como in
northern Italy. Only the old gardener opened the gates, and the visitor stepped
into the garden, which was perfectly kept. The visitor asked when the owner was
last there. He was told, "Twelve years ago." Did he ever write? No.
Where did he get instructions? From his agent in Milan. Does the master ever
come? No. "But, you keep the grounds as though your master were coming
back tomorrow." The old gardener quickly replied, "Today, sir,
today."
Doing something to
please one’s own conscience and, ultimately God, would set the enlightened
apart from the unenlightened, who keep doing things to please others all the
time. Here is the example of one such enlightened soul, John Wesley, an English
cleric, theologian, and evangelist who was a leader of a revival movement
within the Church of England known as Methodism: Once John Wesley was asked
what he would do if he knew that that day was his last day on earth. He
replied, "At 4 o'clock I would have some tea. At 6 I would visit Mrs.
Brown in the hospital. Then at 7:30 I would conduct a mid-week prayer service.
At 10 I would go to bed and would wake up in glory."
Let us be awake, aware,
alert and responsible in all that we do! Let us beg of God to give us this
enlightenment!
Our final thoughts
turn, once again, towards COP 28. The 28th United Nations Climate Change Conference,
is in progress from 30 November until 12 December, at the Expo City, Dubai. The
conference has been held annually since the first UN climate conference held in
Rio de Janeiro in the year 1992. The COP conferences are intended for
governments to agree on policies to limit global temperature rises and other
adverse effects on climate change. We can consider COP 28 as a God given
opportunity, coming at the beginning of the Advent Season, to reflect on how we
can stay awake, aware, alert and assume responsibility to save the planet for
our future generations.
Due to the
irresponsible lifestyle and attitude of our present generation, July 2023, was
the hottest month in the recorded history of temperatures (kept from the year
1880). When this observation was published by the scientists, the U.N.
Secretary General Antonio Guterres warned that “the era of global warming
has ended” and “the era of global boiling has arrived.”
In the past 27
international conferences on climate change (till COP 27), our leaders have talked
about taking the necessary steps to reduce global warming. But the will power
of our leaders is still very weak to implement the decisions taken in every
international conference. Fortunately, our younger generation has woken up.
They are awake, aware, and alert! They have taken responsibility for their own
future.
Here are a few
examples of young persons who have taken up the reins to guide the future:
- When the Rio Summit took place in 1992, Severn Suzuki, a 13-year-old girl from Canada spoke to the leaders for 6 minutes and 30 seconds. After enumerating all the problems we are facing in the environment, she told the world leaders: “I'm only a child and I don't have all the solutions, but I want you to realise, neither do you!... If you don't know how to fix it, please stop breaking it!”
- The awareness and passion to save our planet reached another crescendo when Greta Thunberg, a Swedish girl caught the attention of the media. In August 2018, at age 15, she protested outside the Swedish parliament where she called for stronger action on climate change by holding up a Skolstrejk för klimatet (School Strike for Climate) sign and handing out informational flyers. Soon her protest caught up with the youth around the world. In a matter of 7 months (March 2019), the idea of ‘School Strike for Climate’ caught the imagination of more than one million strikers in 125 countries.
- Greta Thunberg was called to speak at the UN Climate Change COP24 Conference – Katowice, Poland 2018 and at the UN Climate Action Summit 2019. On both these occasions she told the world leaders that they were acting on selfishness and greed and warned them that the future generations would not keep quiet.
- A report on global climate litigation by the United Nations Environment Programme shows that people are increasingly turning to the courts to combat the climate crisis. According to a study conducted by the New York University, there were 279 cases filed by the youth against governments worldwide as of late June 2023.
- In one of those cases, a group of 16 young people in the U.S. state of Montana won a landmark lawsuit in August 2023 when a judge ruled that the state was violating the constitutional right of the youth to “a clean and healthful environment,” as well as their rights to dignity, health and safety, and equal protection of the law. In that case, the plaintiffs, who are now aged between five and 22, argued that the state of Montana was violating their constitutional rights by permitting fossil fuel development without considering its effect on the climate, harming them both mentally and physically. (cf. https://www.ohchr.org)
- While the young environmental activists around the world are trying to stop the havoc orchestrated by the present world leaders and giant corporations, there are other young persons who are taking positive actions to create (rather, ‘re-create’) the planet earth. Here is the case of Ellyanne Wanjiku, the13-year-old environmental champion with big dreams. Known as the ‘Tree Girl of Africa’, Ellyanne, from Kenya, began her mission of planting trees when she was 4 years old. Now, at the age of 13, she has planted 1.3 million trees with the help of her school mates and the local community. Ellyanne has chosen to light a candle than curse the darkness!
- Five young persons from India have been named among 17 teen environmental activists from across the globe to receive the 2023 International Young Eco-Hero Award. The young eco-warriors who were recognised for their efforts by the US-based non-profit organisation, "Action For Nature", are: Eiha Dixit from Meerut, Manya Harsha from Bengaluru, Nirvaan Somany and Mannat Kaur from New Delhi and Karnav Rastogi from Mumbai. (cf. https://www.indiatoday.in)
We thank God for the
young climate warriors who have taken up the responsibility to shape the future
of the planet. Let this Advent Season help us to wake up and stay awake to heal
our wounded planet. Let us be aware of the young climate warriors in our
neighbourhood and, along with them, try to ‘re-create’ this planet where all
the living beings can live in peace and harmony! May this Advent season we have
begun, envelop the human family as well as our planet earth in peace and
security!
COP28UAE
திருவருகைக்காலம் முதல்
ஞாயிறு
மூன்று
நாட்களுக்கு முன்பு, நவம்பர்
30ம் நாள்,
ஐக்கிய
நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த 28வது மாநாடு (COP28) துபாயில் தொடங்கியது.
ஒவ்வோர் ஆண்டும் இந்த மாநாடு நடக்கும்போது, மனிதர்களாகிய நாம், குறிப்பாக,
பன்னாட்டு நிறுவன உரிமையாளர்கள் உருவாக்கிவரும் பருவநிலை நெருக்கடிகள் குறித்து உலகத்
தலைவர்கள் பேசுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன; ஆனால், அவற்றை செயல்முறைப்படுத்தும்
முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப் படுவதில்லை. கார்பன் உமிழ்வு, மற்றும் புதைபடிவ எரிபொருள் (பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை) பயன்பாடு ஆகியவற்றை, தற்போதைய
ஆபத்தான அளவில் நாம் தொடர்ந்தால், பூமிக்கோளத்தின் முடிவு காலத்தை நாம்
விரைவில் கொணர்வோம். அண்மைய பத்து ஆண்டுகளில், அடிக்கடி உருவாகும் இயற்கைப்
பேரிடர்கள், பூமிக்கோளத்தின்
அழிவைப்பற்றி, உலக முடிவைப்பற்றி சிந்திக்க நமக்கு விடப்படும் தெளிவான எச்சரிக்கைகள்.
நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு, சூறாவளி போன்ற இயற்கைப்
பேரழிவுகளை நாம் எதிர்கொள்ளும் போதெல்லாம் - நம்மில் சிலர் அவற்றை உலகின் முடிவு என்று
நினைக்கத் தொடங்குகிறோம். நமது கரங்களில் எப்போதும் குடிகொண்டிருக்கும் சமூக ஊடகங்கள்
வழியே, உலக முடிவைப்பற்றி எளிதான விளக்கங்களை வதந்திகளாகப் பரப்புகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு
முன், உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று பரவியபோது, கடவுளின் கோபத்தையும், உலகத்தின் முடிவையும் இணைத்து, பல வதந்திகளை, சமுதாய ஊடகங்களில் வெளியிட்டுவந்தோம். தற்போது நடைபெறும்
இஸ்ரேல்-ஹமாஸ் போரைக் குறித்து, விவிலிய மேற்கோள்களைக்
காட்டி,
வதந்திகள் பரவிவருகின்றன.
இயற்கை பேரழிவுகள் தவிர, குறிப்பிட்ட சில ஆண்டுகள் மற்றும் தேதிகள், தவறான எச்சரிக்கைகளை உருவாக்குகின்றன.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம், நம்மில் ஒரு
சிலர், கலக்கத்துடன் வாழ்ந்திருக்கக்கூடும். இந்த உலகம் முடியப்போகிறது என்ற கலக்கம்
அது. ஆம்,
21-12-2012
அதாவது 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி இந்த உலகம் முடியப்போகிறது என்று, மெக்சிகோ
நாட்டின் பழம்பெரும் மாயன் கலாச்சாரத்தில் சொல்லப்பட்டிருந்ததாக யாரோ சொல்ல, அது, மக்களிடையே, பெரும்
தாக்கத்தை உருவாக்கியது உண்மை.
மனித
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், உலகம் முடியப்போகிறது என்ற செய்தியும்,
அதன் விளைவாக எழுந்த பீதியும் மக்களை அவ்வப்போது வதைத்துள்ளன.
- கி.பி. 204ம் ஆண்டு Hippolytus என்ற கிறிஸ்தவ எழுத்தாளர் அப்போது வாழ்ந்த ஆயர் ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். உலகம் முடியப்போகிறது என்பதைத் தீவிரமாக நம்பிய அந்த ஆயர், தன் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தார். அவர்களிடம் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அவருடன் பாலை நிலத்திற்கு வரும்படி அவர்களை அழைத்தார். அங்கு, அவர்கள், இறைவனின் வரவுக்குக் காத்திருக்கலாம் என்று சொன்னார்.
- கி.பி. 999ம் ஆண்டின் இறுதி நாட்களில் உலகம் முடியப்போகிறது என்று எண்ணிய பல்லாயிரம் கிறிஸ்தவர்கள், உரோம் நகரில், புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடி, அழுகையோடும், அச்சத்தோடும் உலக முடிவை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
- இருபதாம் நூற்றாண்டில் உலக முடிவு வந்துவிட்டது என்று தீர்மானித்த இரு குழுக்கள் வேதனையான முடிவுகள் எடுத்ததை செய்திகளில் வாசித்தோம். 1978ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டிலும் உலக முடிவு வந்துவிட்டதென்று உணர்ந்த இரு குழுவினர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்ற செய்திகள், நமக்கு அதிர்ச்சியைத் தந்தன.
- 1999ம் ஆண்டு முடிந்து 2000மாம் ஆண்டு ஆரம்பமாக இருந்தபோது, இதே கலக்கம் மீண்டும் தலைதூக்கியது, நமக்கு நினைவிருக்கலாம்.
இன்று
தாய் திருஅவை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில்
எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில்,
இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.
உலக
முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள்
சென்று வரலாம். ஆனால், நம்
ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு
வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்கவேண்டும்
என்று நாம் சிந்திப்பது பயனுள்ள முயற்சி. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச்
சந்திக்க,
அந்த
முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம்
என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி - மாற்கு 13: 33-37 - நம்மைச் சிறப்பாக
அழைக்கிறது.
விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை, இன்றைய நற்செய்தி
நமக்கு விடுக்கும் அழைப்பு. பொறுப்புடன் நடந்துகொள்வது என்பது, தலைவர் இருக்கும்போது
நல்ல பெயர் எடுக்கவேண்டும்; அவர் இல்லாதபோது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம்
என்று நடிப்பது அல்ல. தலைவர் என்னை மதித்து ஒப்படைத்துள்ள பொறுப்பை, எல்லா நேரத்திலும்,
நானும் மதித்து நடந்து கொள்வதுதான் உண்மையான பொறுப்புணர்வு.
இத்தாலி
நாட்டின் வடபகுதியில், Villa Asconti என்ற மிக அழகிய ஒரு மாளிகை இருந்தது. அதைச்சுற்றி
அழகான ஒரு தோட்டமும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் கவர்ந்துவந்த இந்த
மாளிகையும் தோட்டமும் ஒருவரது மேற்பார்வையில் எந்தக் குறையும் இல்லாமல் விளங்கியது.
ஒருநாள் சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மேற்பார்வையாளரிடம், "இந்த மாளிகையின் உரிமையாளர்
இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன?" என்று கேட்டார். மேற்பார்வையாளர், "12 ஆண்டுகள் ஆகின்றன"
என்று சொன்னார். "ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல முதலாளி
எதுவும் கடிதமோ, வேறு தொடர்போ வைத்துள்ளாரா?" என்று கேட்டதற்கு, அவர், "இல்லை" என்று பதில் சொன்னார்.
"நீங்கள் இந்த மாளிகையையும், தோட்டத்தையும் சுத்தம்
செய்வதைப் பார்க்கும்போது, உங்கள் முதலாளி ஏதோ நாளையே
வரப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று சொன்ன அந்த சுற்றுலாப் பயணியைப்
பார்த்து சிரித்தார் மேற்பார்வையாளர். பின்னர், "நாளை இல்லை நண்பரே, இன்றே அவர் வரக்கூடும்" என்று பதில்
சொன்னார்.
12
ஆண்டுகளாய் ஒவ்வொரு நாளும் 'தலைவன் இன்றே வரக்கூடும்' என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளைச் செய்த இந்த
மேற்பார்வையாளரைப் போல் நாம் இருக்க வேண்டும் என்பதையே இயேசு இன்றைய நற்செய்தியில்
சொல்கிறார்.
தலைவர்
வருகிறார் என்பதை உணரும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம், வித்தியாசமாக இருக்கும்.
ஆன்மீகத்தில் மிகவும் ஆழ்ந்து தெளிந்தவர்களிம் இத்தகைய மாறுதல்கள் இருக்காது. யார்
பார்த்தாலும், பார்க்காமல் போனாலும்
சரி. அவர்கள், எந்த நேரத்திலும், ஒரே விதமான, உண்மையான ஈடுபாட்டுடன், ஒவ்வொரு நாள் செயல்களையும்
செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல் வாழ்வை மாற்றாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின்
வாழ்க்கை நமக்குப் பாடமாக வேண்டும்.
ஜான்
வெஸ்லி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது பொறுப்புடன்
சரியான கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வு என்ற எண்ணத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில்
விதைத்தவர். “இன்று உங்கள் வாழ்வின்
கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "நான் மாலை
நான்கு மணிக்கு வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன்
அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச்செல்வேன்... விழித்தெழும்போது,
என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.
இத்தகைய
தெளிந்த, அமைதியான மனநிலையுடன் இறைவனின் வரவை எதிர்பார்க்கும் பக்குவத்தை இந்த
திருவருகைக் காலத்தில் நாம் கற்றுக்கொள்ள, பெற்றுக்கொள்ள செபிப்போம்.
மீண்டும்
நம் எண்ணங்கள் (COP28) என்றழைக்கப்படும் காலநிலை மாற்றம் குறித்த 28வது உலக
உச்சிமாநாட்டை நோக்கித் திரும்புகின்றன. இந்த மாநாடு, நவம்பர் 30 முதல் டிசம்பர்
12 வரை துபாயில் நடைபெறுகிறது. 1992ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற முதல் காலநிலை
மாநாட்டைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் இந்த மாநாடு
நடத்தப்படுகிறது. உலக வெப்பநிலை உயர்வு மற்றும் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் பாதகமான
விளைவுகளைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளை அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது, COP மாநாடுகளின் நோக்கமாகக் உள்ளன. திருவருகைக்
காலத்தின் ஆரம்பத்தில் நடைபெறும் COP மாநாட்டை கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பாக
நாம் கருதலாம். நாம் எப்படி விழிப்புணர்வுடனும், நமது வருங்கால சந்ததியினருக்காக இந்த பூமிக்கோளத்தைக்
காப்பாற்றும் பொறுப்புடனும் செயல்பட முடியும் என்பதைச் சிந்திக்க இந்த வழிபாட்டுக்
காலம் உதவியாக இருக்கவேண்டும்.
இயற்கை
சீரழிவு பற்றிய அக்கறை ஏதுமின்றி, இன்று நாம் வாழும் பொறுப்பற்ற வாழ்க்கை முறையின்
காரணமாக, இவ்வாண்டு ஜூலை மாதம், மிக அதிக வெப்பமான மாதமாக இருந்தது. 1880ம்
ஆண்டு முதல் வெப்பநிலை பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில், 2023 ஜூலை மாதமே மிக அதிகமான வெப்பத்தை
எட்டியது என்ற உண்மை அறிவியலாளர்களால் வெளியிடப்பட்டபோது, ஐ.நா.வின் தலைமைப் பொதுச்செயலாளர் அந்தோனியோ
குட்டேரெஸ் அவர்கள், "புவி வெப்பமடைதல் (Era of Global Warming) என்ற சகாப்தம் முடிந்து
உலக கொதிநிலையின் (Era of
Global Boiling) சகாப்தம் வந்துவிட்டது" என்று எச்சரிக்கை
விடுத்தார்.
காலநிலை
மாற்றம் குறித்து, கடந்த ஆண்டு வரை நடைபெற்ற
27 காலநிலை மாநாடுகளில் (COP 27 வரை), புவி வெப்பமயமாதலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை
எடுப்பது குறித்து நமது தலைவர்கள் பேசியுள்ளனர். ஆனால், ஒவ்வொரு மாநாட்டிலும் எடுக்கப்படும் முடிவுகளை
நடைமுறைப்படுத்துவதில் நமது தலைவர்கள் இதுவரை தீவிரமாக செயல்படவில்லை. நல்லவேளையாக,
நமது இளைய தலைமுறையினர் விழிப்படைந்துள்ளனர்! அவர்கள் தங்கள் எதிர்காலத்தின் பொறுப்பை
ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.
தங்கள்
எதிர்காலத்தையும், இந்த பூமிக்கோளத்தின் எதிர்காலத்தையும் பற்றி பொறுப்பேற்றுள்ள இளையோர் சிலரின் எடுத்துக்காட்டுகள் இதோ:
- 1992ம் ஆண்டு ரியோவில் காலநிலை உச்சி மாநாடு நடந்தபோது, கனடாவைச் சேர்ந்த செவர்ன் சுசுகி (Severn Suzuki) என்ற 13 வயது சிறுமி, மாநாட்டில் கூடியிருந்த உலகத்தலைவர்களுக்கு 6 நிமிடங்கள் 30 நொடிகள் உரையாற்றினார். சுற்றுச்சூழலில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் பட்டியலிட்ட அச்சிறுமி, உலகத் தலைவர்களிடம் கூறிய வெப்பமான சொற்கள் இதோ: “நான் ஒரு குழந்தை, என்னிடம் எல்லா தீர்வுகளும் இல்லை, ஆனால் உங்களிடமும் தீர்வுகள் இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். உடைந்துபோன உலகை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை உடைப்பதை நிறுத்துங்கள்!” என்று அச்சிறுமி கூறியபோது, உலகத் தலைவர்கள், அச்சிறுமியை நிமிர்ந்துபார்க்கவும் முடியாமல், தலைகுனிந்து அமர்ந்திருந்ததை, காணொளியில் நாம் காணலாம்.
- சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) என்ற 15 வயது நிறைந்த வளர் இளம் பெண், 2018ம் ஆண்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், அவ்விளம்பெண், சுவீடன் பாராளுமன்றத்திற்கு வெளியே, 'காலநிலையைக் காப்பாற்ற பள்ளி செல்லா போராட்டம்' என்ற பலகையுடன் அமர்ந்திருந்தார். விரைவில், அவரது போராட்டம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஈர்த்தது. 7 மாதங்களில் (மார்ச் 2019), 125 நாடுகளில் உள்ள 10 இலட்சத்திற்கும் அதிகமான இளையோர், பள்ளி செல்லா போராட்டத்தை மேற்கொண்டனர்.
- 2018ம் ஆண்டு, போலந்து நாட்டில் நடைபெற்ற COP24 மாநாட்டிலும், 2019ம் ஆண்டு நடைபெற்ற காலநிலை செயல்திட்டம் உச்சிமாநாட்டிலும் கிரேட்டா பேச அழைக்கப்பட்டார். இந்த இரண்டு மாநாடுகளிலும் உலகத் தலைவர்கள் சுயநலத்துடன் செயல்படுவதாக சுட்டிக்காட்டியதோடு, எதிர்கால சந்ததியினர் இனியும் அமைதியைக் கடைப்பிடித்து வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்று எச்சரித்தார்.
- காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு இளையோர் பலர் நீதிமன்றங்களை நாடுகிறார்கள் என்பதை, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அறிக்கை, சுட்டிக்காட்டுகிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு கணிப்பின்படி, 2023, ஜூன் மாதத்தின் இறுதியில், உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்கு எதிராக இளைஞர்களால் 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் ஒன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் மொன்டானா (Montana) மாநில அரசுக்கு எதிராக இளையோர் தொடுத்த வழக்கு. அந்த மாநில அரசு புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவித்து, தங்கள் எதிர்காலத்தை ஆபத்திற்கு உள்ளாக்குகிறது என்று இளையோர் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் இளையோருக்கு சாதகமாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
- தற்போதைய உலகத் தலைவர்கள் மற்றும் மாபெரும் நிறுவனங்களால் திட்டமிட்டு நடத்தப்படும் இயற்கை அழிவைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள இளயோர் முயற்சி செய்துவரும் அதே வேளையில், காயப்பட்ட நம் பூமியை உருவாக்குவதற்கு நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்கும் இளையோரும் உள்ளனர். 13 வயதான எல்லியான் வான்ஜிகு (Ellyanne Wanjiku), ‘ஆப்ரிக்காவின் மரப்பெண்’ என்று அழைக்கப்படுகிறார். கென்யா நாட்டைச் சேர்ந்த எல்லியான், தனது 4வது வயதில் மரங்கள் நடும் பணியைத் தொடங்கினார். இப்போது, 13வது வயதில், அவர், தனது பள்ளித் தோழர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் 13 இலட்சம் மரங்களை நட்டுள்ளார். இருளைப் பழிப்பதை விட எரியும் மெழுகுதிரியை ஏற்றி வைப்பதை எல்லியான் தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்!
- 2023ம் ஆண்டின் சர்வதேச இளம் சுற்றுச்சூழல் நாயகர் விருதைப் பெறுவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து வளர் இளம் பருவத்தைச் சேர்ந்த 17 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மீரட்டைச் சேர்ந்த எய்ஹா தீக்ஷித் (Eiha Dixit), பெங்களூரைச் சேர்ந்த மன்யா ஹர்ஷா (Manya Harsha), புது டில்லியைச் சேர்ந்த நிர்வான் சோமானி (Nirvaan Somany), மன்னத் கவுர் (Mannat Kaur) மற்றும் மும்பையின் கர்னவ் ரஸ்தோகி (Karnav Rastogi) ஆகிய ஐவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பூமிக்கோளத்தின்
எதிர்காலத்தை வடிவமைக்க பொறுப்புடன் போராடிவரும் இளம் பருவநிலை வீரர்களுக்காக நாம்
கடவுளுக்கு நன்றி கூறுவோம். காயப்பட்ட நம் பூமிக்கோளத்தை குணப்படுத்தும் பணியில், விழிப்போடும்,
பொறுப்போடும் செயல்பட, இந்த திருவருகைக்காலம் உதவட்டும். நாம் வாழும் பகுதிகளில் செயலாற்றும்
இளம் பருவநிலை வீரர்களைப்பற்றி அறிந்து, அவர்களுடன்
இணைந்து, அனைத்து உயிரினங்களும்
அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய
இந்தப் பூமியை ‘மீண்டும் உருவாக்க’ முயற்சிப்போம்! நாம் தொடங்கியிருக்கும் இந்த திருவருகைக்காலம்,
மனித குடும்பத்தையும், நமது பூமியையும், அமைதி மற்றும் பாதுகாப்பில் சூழ்ந்திருக்கட்டும்!
No comments:
Post a Comment