4th Sunday in Ordinary Time
Last week, on the Word
of God Sunday, we reflected on the meaning of ‘good news’. Towards the end of
our reflection, we recalled how St Francis of Assisi ‘preached the good news’
more by his life and actions than by his words. In continuation of that idea, in
today’s liturgy, we are invited to reflect on the person who has the authority
to speak on behalf of God, who has the authority to share the good news. Does a
person derive authority from holding a powerful position or, does the person
derive authority due to his / her authentic life?
We begin our
reflection on ‘authority’ by reflecting on a ‘spectacular show’ organised by
the Indian government, spending enormous amounts of money. On January 22, last
Monday, the inauguration of the Ram Temple in Ayodhya was ‘staged’ for the
international media, even though the construction of the temple is yet to be
completed. No one inaugurates a building under construction, unless there is an
ulterior motive. All of us know the ulterior motive of this hurried inaguration
is the upcoming election.
This event, as well as
the date – January 22 – on which this event was staged, help us to
understand the terms ‘power’ and ‘authority’. In the year 1999, on January 22
night, Graham Staines (58) and his two sons Philip (10) and Timothy (6) were
burnt alive in their jeep. The Bajrang Dal group that surrounded the jeep was
raising the slogan ‘Jai Shri Ram’ when it set the jeep on fire with Mr Staines
and his two sons asleep inside.
No one can deny the
fact that any true God, including Lord Ram himself, would have condemned the brute
power exhibited by the Bajrang Dal group which set the jeep on fire
chanting his holy name. In the same way, Lord Ram would have surely appreciated
Graham Staines and his wife Gladys Staines as true authorities of service
since they had served the leprosy patients of Odissa for more than 30 years.
It is a painful and
ominous coincidence that on the 25th anniversary of these brutal
murders, the same slogan ‘Jai Shri Ram’ must have been resounding in Ayodhya.
Whether the choice of January 22 was a mere coincidence or an intentional
reminder to Christians, it has brought back painful memories of the murder of
Mr Staines and his children. We know that the present Hindutva regime is
totally insensitive to the feelings of the minority communities.
We are not sure
whether Lord Ram would have appreciated all the pain and enmity created by the
construction of his temple on the very site where Babri Masjid was demolished.
The dramatic events that took place on December 6, 1992 in demolishing the
mosque as well as the drama enacted last Monday, January 22, 2024, were simply
to show to the world what brute power can do when it is vested with authority.
Against such a
situation, we are invited to reflect on what is real ‘authority’. “What
is this? A new teaching! With authority he commands even the unclean spirits,
and they obey him.” (Mark 1:27) The surprise expressed by the people in
the Synagogue of Caper′na-um
is recorded in today’s Gospel. It was truly a surprise for the people of Caper′na-um
since they had not experienced anything similar until then. Jesus was
‘authority’ personified, but, in a totally and refreshingly different way from
the regular, monotonous authoritative figures! How we wish that our leaders
learn the true meaning of ‘authority’!
The world,
unfortunately, suffers from the whims and fancies of a few world leaders who
seem to wield uncontrolled authority and exhibit brute power in various matters
that affect humanity! There are 195 countries in the world today. If we count
the Presidents and Prime Ministers of all these countries, the number of
persons in authority will be around 300. Among these 300, the media talks about
20 of them over and over again. The attention given by the media to these
pathetic megalomaniacs wanting to hog the spot light all the time, makes us wonder
what true leadership and authority mean.
Twenty years ago, I
was given an opportunity – a grace-filled opportunity, indeed – to learn the
deeper meaning of ‘leadership’ and ‘authority’. I was assigned to take up a responsible
position in one of the Jesuit institutions in India. I did not feel comfortable
about the assignment. I felt I was not cut out for administrative jobs. Hence,
I sought the help of another Jesuit who had held much higher positions than
what was asked of me. What he told me, cleared my doubts and helped me take up
the responsibility with some peace of mind.
This is, in effect,
what he told me: “This is not a position you worked for and achieved; it is an
opportunity given to you to serve. The key requirement to take up such a
responsibility is your credibility. You may lack the intelligence or the
administrative skills to do this job. You may not know how to deal with finance
and the government officials. You can always get the help of others in making
up this lack. But if you lack credibility, then no one can help you fill that
gap.”
What he shared that
day helped me see ‘authority’ in a very different way. The key requirement to
serve in a responsible position is one’s credibility. The other qualities are
added advantages. Credibility comes from within. It is an inner force.
Intelligence and administrative skills can be learnt and nurtured from outside.
One can get help from others when one lacks the know-how of running an
institution. But, when one lacks credibility, the inner force, then he or she
cannot run the institution in the right direction. This is the real meaning of
‘authority’.
Today’s Gospel has a
key sentence which set me thinking about this past experience of mine. This is
what we read in today’s Gospel: “Jesus taught them as one who had
authority and not as the scribes.” (Mark 1: 22) If we can understand
the meaning of authority, we can as well understand how this
‘authority’ set Jesus apart from the scribes. We use the word ‘authority’ in
two different senses. The first sense talks of a person having authority
over this or that. The second sense talks of a person being an authority
on this or that.
The first one is ‘the
power to give orders, make decisions, and enforce obedience’. The second
one is ‘the power to influence others, especially because of one’s
commanding manner or one’s recognized knowledge about something’ (cf. Oxford
Dictionary). The first one is given from outside; the second, develops from
within. Another word that is closely associated with this second type of
‘authority’ is ‘authenticity’… The more authentic a person, the better his or
her authority. This is similar to the ‘credibility’ that my senior Jesuit spoke
to me about.
It will be easier to
understand the second type of ‘authority’ from an imaginary scene. Let us
imagine a function where world leaders are invited. When each of these leaders
arrives, there will be an ‘army’ of bodyguards and other officials surrounding
this leader. The entry of each leader may be accompanied by trumpets and
artificial applause. Let us imagine that at some moment, a Mother Teresa, a
Mahatma Gandhi, a Martin Luther King or a Stan Swamy – walks into the
auditorium. The crowd spontaneously stands up. Instead of the clapping of
hands, most of the hands are folded in a gesture of reverent salutation. The
hush that prevails in the auditorium tells us that we are in the presence of a
person of great dignity. These spontaneous reactions are due to the true
meaning of authority this person holds over our hearts.
I am not here to take
a class on the etymology of the word ‘authority’. I am interested in making a
common human experience clearer to us. Authority is everywhere, starting from
our families (as mentioned in the Second Reading – I Cor. 7:32-35) to
the international arena. We have secular and sacred authority. If the real
meaning of authority can be understood, then we can get rid of so many
complications in our world today.
The authority
enshrined in and exercised by the sacred sphere can create more complications
when understood wrongly. The authority to be a prophet, to speak in God’s name
comes from God. This is explained in the passage given as our First Reading
today (Deuteronomy 18: 15-20). The people of Israel are sad that Moses,
their famous leader, the one who had the authority to interpret God’s plans for
them till now, was on the verge of death. Moses consoles them with these
words:
Moses said to
the people: “And the LORD said to me, ‘I will raise up for them a prophet like
you from among their brethren; and I will put my words in his mouth, and he
shall speak to them all that I command him. And whoever will not give heed to
my words which he shall speak in my name, I myself will require it of him. But
the prophet who presumes to speak a word in my name which I have not commanded
him to speak, or who speaks in the name of other gods, that same prophet shall
die.’” (Deut. 18:
17-20)
How do we understand
authority? How do we exercise authority within our families? Does our authority
come from an inner force, namely, moral power born of inner convictions or from
external conventions that follow worldly compromises? When someone lives by his
/ her convictions without compromises, we admire that person irrespective of
whether the person holds any power or position. We know that such persons are
becoming a rare breed among the world leaders as well as in religious spheres.
We pray God to send us true leaders, in the secular world as well as in
religious institutions, before whom we can truly exclaim: “What is this?
A new teaching! With authority he commands even the unclean spirits, and they
obey him.” (Mark 1:27)
22 Jan: Staines' Tragedy - Ram Mandir Inauguration
பொதுக்காலம்
4ம் ஞாயிறு
கடந்த வாரம் இறை வார்த்தை ஞாயிறைக்
கொண்டாடிய வேளையில், 'நற்செய்தி' என்ற சொல்லின் பொருளை புரிந்துகொள்ள முயன்றோம்.
நம் சிந்தனைகளின் ஒரு பகுதியாக, அசிசி நகர் புனித
பிரான்சிஸ் அவர்கள் எவ்வாறு தனது வார்த்தைகளை விட வாழ்வின் வழியே 'நற்செய்தியைப் போதித்தார்' என்பதை நினைவுகூர்ந்தோம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக, இந்த வாரம், நற்செய்தியை மக்களுடன் பகிர்ந்துகொள்பவரைப்பற்றி சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
கடவுளின் சார்பாகப் பேச யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை முதலில் சிந்திக்க முயல்வோம்.
அதற்கு உதவியாக, 'அதிகாரம்' என்ற சொல்லை முதலில் புரிந்துகொள்வோம். தனியொரு
மனிதர், சக்திவாய்ந்த பதவியில் இருப்பதால்
அதிகாரம் பெறுகிறாரா, அல்லது அவர் உண்மையான நேர்மையான வாழ்க்கையை வாழ்வதன் காரணமாக அதிகாரம் பெறுகிறாரா?
கோடி, கோடியாய் பணத்தைச் செலவழித்து, இந்திய அரசால் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
ஒரு பிரம்மாண்ட விழாவுடன் நம் சிந்தனைகளைத் துவக்குவோம். அயோத்தியில் ராமர் கோயில்
கட்டும் பணி இன்னும் முடிவடையாத நிலையில், ஜனவரி 22ஆம்
தேதி, சர்வதேச ஊடகங்களுக்காக ராமர்
கோயில் திறப்பு விழாவை இந்திய அரசு 'அரங்கேற்றியது'. பொதுவாக, கட்டுமானத்தில்
உள்ள கட்டடத்தை யாரும் திறந்து வைப்பதில்லை. இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைய
இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும்போது, அதை திறந்துவைக்க
இந்திய அரசு காட்டியுள்ள ஆர்வத்திற்கு ஒரே காரணம், இவ்வாண்டு வரவிருக்கும் தேர்தல் மட்டுமே என்பதை அனைவரும் அறிவோம்.
இந்த நிகழ்வும், இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்ட
நாளான - சனவரி 22ம், 'அதிகாரம்' மற்றும் 'சக்தி' என்ற சொற்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. 1999ம்
ஆண்டு சனவரி 22ம் தேதி இரவு, இந்து அடிப்படைவாதக்
குழுவினரால் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒடிஸ்ஸா மாநிலத்தின் மிகவும் ஏழ்மைப்பட்ட
ஓர் ஊரில், 34 ஆண்டுகளாக தொழுநோயாளர்களுக்கென பணியாற்றிவந்த 58 வயதான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், மற்றும்
அவரது இரண்டு மகன்கள், 10 வயதான பிலிப், 6 வயதான திமோதி ஆகிய மூவரும், அவர்கள்
உறங்கிக்கொண்டிருந்த ஜீப்பில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த ஜீப்பை சுற்றி
வளைத்த பஜ்ரங் தள் குழுவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பியபடி அந்த ஜீப்பை தீ
வைத்து கொளுத்தினர்.
ராமர் உட்பட, எந்த ஓர் உண்மையான கடவுளும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது மனைவி
கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் ஆகியோரை உன்னதப் பணியின் அதிகாரப்பூர்வ எடுத்துக்காட்டுகள் என்று
நிச்சயமாகப் பாராட்டியிருப்பார். அதேபோல், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று தன் பெயரைச் சொல்லியவண்ணம்
ஜீப்பை எரித்து மூவரைக் கொன்ற பஜ்ரங் தள் குழுவின் மிருகத்தனமான சக்தியை, ராமர் வன்மையாகக் கண்டனம் செய்திருப்பார்.
இந்தக் கொடூரக் கொலைகளின் 25வது ஆண்டு நினைவு நாளில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற அதே முழக்கம், அயோத்தியில்,
சனவரி 22 கடந்த திங்களன்று ஒலித்திருக்க வேண்டும். இது, தற்செயலாக நடந்ததா? அல்லது, திட்டமிட்டு, கிறிஸ்தவர்களின் உள்ளங்களை புண்படுத்தும்
வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே ராமர் கோவில்
எழுப்பப்பட்டிருப்பது, இஸ்லாமியர் உள்ளங்களில், ஆறாத காயங்களாக இருப்பதை நாம் அறிவோம்.
சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் நடத்தப்பட்ட இந்த கோவில்
திறப்பு விழாவை ராமர் நிச்சயம்
பாராட்டியிருக்கமாட்டார் என்பது உறுதி. ஒருவருக்கு அளிக்கப்படும் அதிகாரம் மிருகத்தனமான
சக்தியாக உருவெடுத்தால் என்ன நிகழும் என்பதை, கடந்த திங்கட்கிழமை, ஜனவரி 22, 2024 அன்று அரங்கேறிய நாடகம், நமக்கு உணர்த்துகிறது.
அயோத்தியில்
இந்திய அரசு மேற்கொண்டுவரும் செயல்பாடுகள்,
அதற்கு முன்னதாக, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் நோக்கத்தோடு, நாட்டின்
பிரதமர், பல கோவில்களில், வழிபாடு என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்த நாடகங்கள்
அனைத்தும், 'அதிகாரம்' என்ற சொல்லுக்கு தவறான இலக்கணங்கள்! இத்தகையச்
சூழலில், அதிகாரத்தின் உண்மையான இலக்கணத்தைப் புரிந்துகொள்ள, இன்றைய
ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன.
இறைவாக்கினர் என்ற பொறுப்பை ஏற்பவர் எத்தகையவராய் இருக்கவேண்டும்
என்பதை இன்றைய முதல் வாசகம் (இணைச்சட்டம்
18: 15-20) நமக்குச்
சொல்லித்தருகிறது. மறைநூல் அறிஞரைப் போலன்றி, தனிப்பட்ட
ஓர் அதிகாரத்துடன் இயேசு கற்பித்தார் என்று, இன்றைய நற்செய்தி (மாற்கு
1: 21-28) நமக்குச்
சொல்கின்றது.
இயேசுவின் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல. அவர்கள்
அதுவரை கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் அந்தப் போதனை ஒலித்தது. இயேசுவுக்கு இந்த
அதிகாரம் எங்கிருந்து வந்தது?
இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், இயேசுவின்
அதிகாரம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.
‘அதிகாரம்’ என்று நாம் தமிழில் பயன்படுத்தும்
சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச்
சொல்லுக்கு Oxford அகராதியில்
இரு வேறுபட்ட அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம், நாம்
வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம்
என்ற அர்த்தங்களில் ஒலிக்கின்றது. இரண்டாவது வகை அர்த்தம்தான் நாம் இன்று
குறிப்பாகச் சிந்திக்கவேண்டியது. இதில், Authority என்ற
வார்த்தைக்கு, ‘the power to influence others, especially because of one’s
commanding manner or one’s recognized knowledge about something’ அதாவது,
"ஒரு விடயத்தைக் குறித்து ஒருவர் பெற்றிருக்கும் அறிவு, அல்லது, ஒருவர்
இயல்பிலேயே பெற்றிருக்கும் தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரணமாக, மற்றவர்கள்
மீது செலுத்தப்படும் தாக்கம்" என்பது, இரண்டாவது
அர்த்தமாகத் தரப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது அர்த்தத்தின் ஆழத்தை, புரிந்துகொள்ள
ஒரு கற்பனைக் காட்சி உதவியாக இருக்கும். உலகத்தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு
கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள், ஒவ்வொரு
தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் பல்வேறு
செயற்கைத்தனமான அடைமொழிகளுடன் அறிவிக்கப்படும், அவர்களைச்
சுற்றி மெய்காப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் என்று, பலர் வருவார்கள். ஒருவேளை,
எக்காளம் ஒலிக்கலாம், அல்லது, ஆடம்பரமான இசை ஒலிக்கலாம். அந்தத் தலைவரைப்
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், கரவொலி எழுப்ப வேண்டியிருக்கும்.
அந்நேரம், அந்த அரங்கத்தினுள், அன்னை தெரேசா, காந்தியடிகள், ஸ்டான்
சுவாமி, அல்லது, கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்
போன்று, மக்களின் மனங்களில் உயர்ந்ததோர் இடம் பிடித்திருக்கும் ஒருவர்
வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச்சுற்றி
பல மெய்காப்பாளர்கள் ஓடிவரவும் தேவையில்லை. ஆடம்பர இசை தேவையில்லை. அவர் அரங்கத்தில்
நுழைந்ததும், அங்கு உருவாகும் மரியாதை, தனிப்பட்ட வகையில் இருக்கும்.
அங்கிருப்போர், யாருடையத் தூண்டுதலும் இல்லாமல், எழுந்து நிற்பார்கள். கரவொலி
எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள்.
இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர், நம்
உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற
வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம்.
இந்த இரண்டாவது வகையில், மற்றோர் அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு
குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான அறிவு, அந்த
அறிவின் அடிப்படையில் அதைப்பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அவர் கொண்டிருக்கும்
அதிகாரம் என்பது, இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம்.
பல ஆண்டுகள், பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு, மின்விளக்கை
உருவாக்கியவர், தாமஸ் ஆல்வா எடிசன். மின்விளக்கைப் பற்றிப் பேச, இவரைவிட, யாருக்கு
‘அதிகாரம்’ இருக்கமுடியும்? எடிசன்
அவர்கள், எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை. கல்வி பயிலவே
அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர், தன்
சொந்த படைப்பாற்றல் கொண்டு, பலநூறு கண்டுபிடிப்புக்களை உலகறியச் செய்தார். தன்
கண்டுபிடிப்புக்களைப் பற்றி பேசும் அதிகாரமும் பெற்றார்.
‘அதிகாரம்’ என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு
மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்துகொண்டால், எத்தனையோ
பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கமுடியும்.
நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக
நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.
போட்டியிட்டுப் பெறும் பதவிகள் வழியே, ஒருவருக்குக் கிடைக்கும்
அதிகாரம் நிரந்தமானது அல்ல. இத்தகைய அதிகாரத்தைப் பெறும் அரசியல்வாதிகள், அந்த
அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் பரிதாபமான, வெறித்தனமான முயற்சிகள்,
நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன.
இதற்கு முற்றிலும் மாறாக, உன்னதமான பண்பு, அல்லது,
உயர்ந்த அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம், அவர்
வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில், ஆணவம் இருக்காது. அடுத்தவரை
அடக்கி ஆளவேண்டும் என்ற வெறி இருக்காது. ஒருவர், சுயமாக, தனக்குள்
வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன
சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேசவைக்கும். அது,
கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை
நோக்கி அவர்களை வழிநடத்தும்.
இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ
பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்த உண்மைகளை
மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே, அவர் சொன்னவை மக்களை வியப்பில் ஆழ்த்தின. அதுவரை,
ஏதோ மனப்பாடம் செய்தவற்றைச் சொல்வதுபோல் மறைநூல் வல்லுனர்கள் கூறிவந்த
பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும்
வேறுபாடுகள் இருந்தன. "இது என்ன? இது
அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும்
இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" (மாற்கு
1:27) என்று மக்கள் இயேசுவைப்பற்றி வியந்து பேசுவதை, இன்றைய நற்செய்தியில்
கேட்கிறோம். கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர்
வியத்தகு அதிகாரத்துடன் போதித்தார்.
கடவுளால் அனுப்பப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப்பற்றி இன்றைய முதல்
வாசகம் நமக்கு விளக்குகிறது. இறைவன் சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு,
அவற்றைத் தங்களுக்கு விளக்கி, தங்களை அதுவரை வழிநடத்தி வந்த மோசே என்ற
இறைவாக்கினர், இறக்கும் நிலையில் இருந்ததால் கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு
ஆறுதல் சொல்லும்வண்ணம் அமைந்திருந்த மோசேயின் சொற்களை இன்றைய முதல் வாசகமாகக்
கேட்கிறோம். (இணைச்சட்டம் 18:15-20)
மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக, தலைவர்களாக
பலர் இருந்தனர். அவர்களில் பலர், அரியணைகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்தவில்லை.
பலர் பரிதாபமான நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன்
பெயரால் பேசுகிறோம் என்ற அந்த உறுதி ஒன்றே, அவர்களுக்கு அதிகாரத்தையும் துணிவையும்
வழங்கியது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக, இறை
வாக்காகவே வந்த இயேசு, ‘அதிகாரம்’
என்ற சொல்லுக்கு இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார். அதிலும் குறிப்பாக, இறுதி
இரவுணவின்போது, சீடர்களின் காலடிகளைக் கழுவி, ஓர்
அடிமையின் பணிகளைப் புரிந்தவேளையில், உண்மையானத்
தலைவர், போதகர், ஆண்டவர் யார் என்ற இலக்கணத்தை அவர்களுக்குச் சொல்லித்தந்தார் (யோவான்
13:12-16)
‘அதிகாரம்’ என்ற சொல்லைக் கேட்டதும், இன்றைய
உலகை, தங்கள் அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கும் ஒரு சில தலைவர்களின் உருவங்கள் நம்
நினைவுகளில் தோன்றியிருக்கும். இந்தத் தலைவர்கள், தலைமைப்பணி, அதிகாரம்
ஆகிய சொற்களுக்கு, தவறான இலக்கணம் வகுத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால், இவர்களை,
நமது ஊடகங்கள், மீண்டும், மீண்டும் பேசி வருவதால், தலைமைப்பணி, அதிகாரம்
என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும், கலக்கமும்
நமக்குள் உருவாகின்றன.
உலகில் இன்று 195 நாடுகள் உள்ளன. இவற்றில் அரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும்
பணியாற்றுவோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 இருக்கும். இவர்களில், உலகினரின் கவனத்தை
அடிக்கடி ஈர்ப்பது, ஒரு சில நாடுகளின் தலைவர்களும், பிரதமர்களும்
மட்டுமே. ஊடகங்களால், மீண்டும், மீண்டும்,
வெளிச்சமிட்டுக் காட்டப்படும் இந்தத் தலைவர்கள், தங்கள்
ஆணவத்தால், தொடர்ந்து தவறுகள் செய்வதை, ஊடகங்கள் பேசி வருகின்றன. இந்தியா போன்ற
நாடுகளில் இயங்கும் பெரும்பாலான ஊடகங்கள், தவறுகளைச் சுட்டிக்காட்ட துணிவில்லாமல்,
பிரதமர் மற்றும் ஏனையத் தலைவர்களின் துதிபாடி வருகின்றன.
"Power corrupts; absolute power corrupts
absolutely" அதாவது, "அதிகாரம், கெடுதலை
விளைவிக்கிறது; அத்துமீறிய
அதிகாரம், அத்துமீறிய கெடுதலை விளைவிக்கின்றது"
என்ற ஆங்கிலக் கூற்றின் எடுத்துக்காட்டுகளாக வாழும் இத்தலைவர்களை எண்ணி, வெட்கமும், வேதனையும்
அடைகிறோம். இத்தலைவர்களின் உள்ளங்களில் உறங்கிக்கிடக்கும் மனசாட்சி என்ற விளக்கு, தூய
ஆவியாரின் தூண்டுதலால் மீண்டும் ஒளியேற்றப்பட்டு, இவர்களை
நல்வழி நடத்தவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம்.
உலகம், தலைவர்கள், அரசு, அதிகாரம்
என்று மற்றவர்களைக் குறித்து சிந்திக்கும்போது, நம்
ஒவ்வொருவர் வாழ்விலும் 'அதிகாரம்' எவ்வகையில்
பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வது நல்லது. நம் குடும்பங்களிலும்,
உறவு, மற்றும் நட்பு வட்டங்களிலும் நிலவும் அதிகாரம், 'யார்
பெரியவர்' என்ற போட்டியாக உருவெடுக்கிறதா? அல்லது, ஒவ்வொருவரிடமும்
உறைந்திருக்கும் நற்பண்புகள், ஒருவர்மீது ஒருவர் காட்டும் மரியாதையாக உருவெடுக்கிறதா? என்பதை
ஆய்வு செய்வோம்.
அயலவரை அடக்கி ஆள்வதால் அல்ல, மாறாக, நமக்குள் நாமே
வளர்த்துக்கொள்ளும் உன்னதப் பண்புகளால், மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறவேண்டும்
என்று, இயேசு வாழ்ந்து காட்டிய அந்த வழியில் நாமும் வாழ, இறையருளை மன்றாடுவோம்.