The Feast of the Epiphany
Last Sunday, being the
final day of 2023, we spoke about the Greek-Roman deity Janus with a face
looking backwards at 2023 and a face looking forward at 2024. We also spoke
about how to step into the New Year with hope and confidence. As we began 2024,
a powerful earthquake hit Japan on New Year's Day killing at least 55 people.
Many of us would have felt this to be a bad omen and some ‘experts’ would have
started talking about all the dangers lurking around the corner for this year. These
‘doomsday astrologers’ would have based their predictions on how the different
stars are aligned against the human family etc.
To counter these
‘doomsday predictions’, the Church keeps presenting to us Biblical figures who
teach us lessons of hope. Last Sunday we reflected on Abraham who was invited
by the Lord to “Look up at the sky and count the stars” (Gen.15:5).
This Sunday, we are invited not only to look up at the sky, but to ‘follow a
star’ as did the wise men from the East. Let us begin our reflection on
these wise men who were seriously searching for God. We begin with a story from
a collection of the lives of saints - the saints of Islam - which concerns a
king of Balkh, named Ebrahim ibn Adam and his search for God.
Ebrahim was wealthy
according to every earthly measure. At the same time, however, he sincerely and
restlessly strove to be wealthy spiritually as well. One night, the king was disturbed
from sleep by the noise of someone walking on the roof above his bed. Alarmed,
he shouted: 'Who's there?' 'A friend,' came the reply from the roof. 'I've lost
my camel.' Perturbed by such stupidity, Ebrahim screamed: 'You fool! Are you
looking for a camel on the roof?' 'You fool!' the voice from the roof answered.
'Are you looking for God in silk clothing, and lying on a golden bed?' Those simple words filled the
king with such enlightenment, that he arose from his sleep to become a
remarkable saint.
Being clothed in silk
and lying on a golden bed are not the most apt modes to search for God. Today’s
Feast - the Feast of the Epiphany - helps us to learn some basic lessons
on how to search for God. Although this Feast is mainly about Jesus revealing
himself to the whole world, still, popularly, the main characters of this feast
are the so called ‘Magi’. Very little is known about these persons (Kings? Wise
men? Astrologers?) from the Bible. Only Matthew’s Gospel (Matthew 2:1-12)
talks about these persons. But, their effort in following the star has inspired
countless men and women to ‘follow the star’ in their lives.
Let us turn our
attention to the phrase – ‘following a star’. Stars are not visible during the
day. Hence, following a star is possible only at night. This means that these
wise men must have taken up most of their journey at night – not an easy option
given their mode of transport etc. It must have been very difficult to gaze
upon one little star among the hundreds, on a clear sky. What if the sky was
not clear? Then they would have to wait until clouds and mist clear. So, their
journey must have taken nights… many nights. Still, they persisted. What a
resolve! Resolutions are part and parcel of every New Year! What better way to
begin the New Year with the feast of ‘the wise men’ who can be honoured as
‘patrons of resolutions’!
Nowadays, the phrase
‘following a star’ is, unfortunately, misinterpreted as following a
star-personality. In India ,
more unfortunately, we have too many of these stars, especially in the cine
field and in cricket. The amount of time and energy wasted by the fans on these
‘stars’ and ‘super-stars’ is shocking, to say the least. By the time these fans
learn that ‘following these stars’ lead them nowhere, it is rather too late. If
only the typical Indian fan can take a new year resolution to treat cinema and cricket
as only entertainments, our country can scale greater heights!
The Gospel of Matthew
says that these wise men were from the East. They were probably experts in
astrology – namely, the study of stars. Hence, when they saw this new star,
they were able to predict the birth of a King. Their study was not confined to
the desk and books. It led them further. They decided to follow the star and
meet the King.
In India as well in
other Asian countries, there are numerous astrologers who claim to predict the
future by studying the star in which one is born. In general, most of the
political leaders in Asia seem to trust these astrologers and the stars which
are connected with their birthday, rather than trust their people. Naturally,
people also don’t seem to trust the politicians!
Why blame political
leaders, who have only one aim in their life – to stay in power? Most of us
abdicate our power to the stars attached to our birth and surrender our future
to them. What these stars predict each week, tends to influence our decisions
to a large extent. Should we allow stars and planets to influence our lives so
much? We set aside time to read ‘stars foretell’ columns in the papers. But,
how many of us have the time to look up at the sky and contemplate the beauty
of the stars?
For us living in the
21st century, there seems to be no time to look to the heavens to gaze upon
stars. We are dazzled and even blinded by too many artificial stars and hence
real stars have receded from our view. We hardly look up. Or, possibly, we look
up to the skies only when dark clouds gather. We look up to the skies with a
question: Will it rain? Similarly, when dark clouds gather in our hearts and
minds, we again look up to the skies with the famous, clichéd question: Is
there a God up there? Doubts drive us to look up, whether they are doubts about
rain or pain.
When the wise men
followed the star, doubts were disturbing their hearts too. But, they were
driven more by desire than by doubts and, hence, could reach their destination.
For our generation, to which patience and persistence seem to have become
obsolete words, the wise men have a lot to teach! This alone is reason enough
to celebrate!
There is one more
reason to celebrate these wise men since they have introduced us to the larger
family of God. Last Sunday we celebrated the Feast of the Holy Family. This
Sunday we are celebrating God’s extended family. Yes… this is the core message
of the Feast of the Epiphany. This Feast tells us one basic truth about God.
God is not a private property of any human group. As far as God is concerned,
the larger the family, the better… the more, the merrier!
This idea must have
shocked quite a few orthodox Jews. They were very sure that the one and only
true God was theirs, EXCLUSIVELY. God must have laughed at this idea; but in
His/Her parental love, God would have allowed them to hold on to this
‘exclusivism’. God waited for the opportune time to challenge the exclusivism
of the Israelites. By inviting the wise men from the East to visit the Divine
Babe at Bethlehem, God had broken the myth of exclusivism!
God cannot be the
private property of any human group. This message is still very relevant to us,
especially in the light of all the divisions created by various individuals and
groups who have used God and religion as political weapons of division. We know
how 2024, being the year of the General Election in India, will be used by the politicians
to divide people in the name of God. The demolition of the Babri Masjid and the
construction of the Ram Temple in Ayodhya has made a deep and bitter rift
between the Hindus and the Moslems. Now, the consecration of that temple on
January 22, will surely be used as a platform to divide the people even more.
It is so sad to see how places of worship, where God wishes to embrace the
whole human race, have become battlefields tearing the human family to shreds. God
is surely not party to any divisive force! Unifying, reconciling… these are
God’s ways. The Feast of the Epiphany teaches us to believe in an INCLUSIVE,
ALL-EMBRACING GOD. Let us pray on the Feast of the Epiphany that the whole
human family may live together as one divine family!
May this New Year 2024,
which is a leap year, bring all of us 366 days filled with Blessings. Every
year, on the very first day of the year, our liturgy of the Feast of Mary,
Mother of God, gives us an opportunity to learn how we can bless others. The
first reading of the Feast taken from the Book of Numbers gives us an account
of God teaching Moses how he and Aaron and all the priests should bless the
people:
The Lord said to
Moses, “Say to Aaron and his sons, Thus, you shall bless the people of Israel:
you shall say to them: ‘The Lord bless you and keep you: The Lord make his face
to shine upon you, and be gracious to you: The Lord lift up his countenance upon
you, and give you peace.’ So, shall they put my name upon the people of Israel,
and I will bless them.”
(Numbers 6:22-27)
Giving blessings is
not an exclusive privilege of the priests. Every one of us is called to bless.
If we can use the words of blessings that God had taught Moses, on one another,
our families and our human family will be filled with blessings. In blessing
others, we become blessed ourselves!
May 2024 be filled
with blessings from above and from one another, as well as, with brilliant
stars that lead all of us – the one INCLUSIVE HUMAN FAMILY – to God!
Three Wise Men
திருக்காட்சிப்
பெருவிழா
கடந்த ஞாயிறு, 2023 ஆம் ஆண்டின்
இறுதி நாளன்று, பின்னோக்கியும் முன்னோக்கியும் காணக்கூடிய இரு முகங்களைக் கொண்ட கிரேக்க-உரோமைய
தெய்வமான ஜானுஸைப்பற்றி குறிப்பிட்டோம். பின்னோக்கிய நம் பார்வையை நிறைக்கும் துயர
நிகழ்வுகளிலிருந்து நம் கவனத்தைத் திருப்பி, நம்பிக்கையுடன் புத்தாண்டில் எப்படி அடியெடுத்து
வைப்பது என்பது பற்றியும் சிந்தித்தோம். 2024ம் ஆண்டின் புத்தாண்டு நாளன்று ஜப்பானில்
ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 55 பேர் இறந்ததை நம்மில் பலர் ஒரு
கெட்ட சகுனமாக உணர்ந்திருப்போம். புலந்திருக்கும் புதிய ஆண்டில் இன்னும் என்னென்ன ஆபத்துக்கள்
காத்திருக்கின்றனவோ என்று எண்ணியிருப்போம். இந்த நிலநடுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மனித குடும்பத்திற்கு எதிராக வெவ்வேறு கோளங்களும் நட்சத்திரங்களும் அணிவகுத்து
உள்ளன என்று கணிக்கும் 'அழிவுகால ஜோதிடர்கள்' தங்கள் கருத்துக்களை
வெளியிட்டதையும் பார்த்திருப்போம்.
நம்பிக்கையைக்
குலைக்கும் இத்தகைய 'அழிவுகாலக் கணிப்புகளுக்கு' மாற்றாக , நம்பிக்கையின் பாடங்களை நமக்கு வழங்கக்கூடிய
விவிலிய நாயகர்களை திருஅவை நமக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஞாயிறன்று, "வானத்தை நிமிர்ந்து
பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார்" (தொ.நூ. 15:5) என்று அழைக்கப்பட்ட ஆபிரகாமை
சந்தித்தோம். இந்த ஞாயிறன்று, வானத்திலுள்ள
விண்மீன்களை எண்ணிப்பார்க்க மட்டுமல்ல, அந்த
விண்மீன்கள் காட்டிய
வழியில் பயணம் மேற்கொண்ட கீழ்த்திசை ஞானிகளைச் சந்திக்கிறோம். அவர்களைப் போல நாமும்
ஒரு தேடலை மேற்கொள்ள அழைக்கப்படுகிறோம். நம் தேடல்
எத்தகையதாய் இருக்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, இஸ்லாமியப் புனிதர்களில் ஒருவரைப்
பற்றி சொல்லப்படும் கதை உதவியாக இருக்கும்.
பல
நூறு ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானின்
வடபகுதியில், பால்க் (Balkh) நாட்டை ஆட்சி செய்த மன்னர் இப்ராகிம், அளவற்ற செல்வங்களால் சூழப்பட்டிருந்தார்.
அதேவேளை, அவர், ஆன்மீக உண்மைகளைத்
தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் இரவு, பட்டாடை அணிந்து, தங்கக்
கட்டிலில் படுத்தவண்ணம், கடவுளை
எங்கு, எப்படி காணமுடியும் என்பதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார், மன்னர். அப்போது, அரண்மனையின் கூரையில்
யாரோ நடந்து செல்வதுபோல் சப்தம் கேட்டது. அரசர் உடனே, "யாரங்கே?" என்று கத்தினார்.
"உங்கள் நண்பன்" என்று, கூரையிலிருந்து பதில்
வந்தது. "இந்த இரவு நேரத்தில் என் கூரைமீது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று மன்னர் எரிச்சலுடன் கேட்க, "தொலைந்துபோன என் ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்"
என்று பதில் வந்தது.
மதியற்ற
அந்தப் பதிலைக் கேட்டு, மேலும் எரிச்சலடைந்த மன்னர், "முட்டாளே! தொலைந்துபோன ஒட்டகத்தை, என் கூரைமீது தேடிக்கொண்டிருக்கிறாயா?" என்று ஏளனமாகக் கேட்டார். உடனே, "முட்டாளே! பட்டாடை அணிந்து, தங்கக்கட்டிலில் படுத்துக்கொண்டு, நீ கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா?" என்ற கேள்வி, கூரையிலிருந்து ஒலித்தது.
பட்டாடை
அணிந்து, தங்கக்கட்டிலில் படுத்துக்கொண்டு, இறைவனைத் தேடுவது கடினம். இறைவனைத்
தேடிக் கண்டுபிடிக்க, கடினமான, ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த உண்மையை உணர்த்தும் திருநாளை, இன்று நாம் கொண்டாடுகிறோம்.
புத்தாண்டின்
முதல் ஞாயிறன்று நாம் கொண்டாடும் திருக்காட்சிப் பெருவிழா, இறைவனைத் தேடிக்
கண்டடையும் வழிகளை நமக்குச் சொல்லித்தருகிறது. இத்திருநாளன்று, இறைவன் தன்னை உலகமனைத்திற்கும்
வெளிப்படுத்தியதால், இதனை, திருக்காட்சிப் பெருவிழா என அழைக்கிறோம்.
கடந்த
ஞாயிறன்று நாம் திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடினோம். இந்த ஞாயிறு, நாம் கடவுளின்
கூட்டுக் குடும்பத்தைக் கொண்டாடுகிறோம். திருக்காட்சிப் பெருவிழாவின் மையப் பொருள்,
கடவுளைப் பற்றிய ஓர் அடிப்படை உண்மையைச் சொல்கிறது. கடவுள் எந்த ஒரு மனிதக் குழுவின்
தனிப்பட்ட சொத்து அல்ல. கடவுளைப் பொருத்தவரையில், இந்த உலகமே அவரது குடும்பம் என்பதே அவ்வுண்மை!
இந்தப்
பேருண்மை, பாரம்பரியத்தைக் கட்டிக்காத்த
யூதர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும். உண்மையான கடவுள் தங்களுக்கு மட்டுமே
என்பதில் பாரம்பரிய யுதர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். குழந்தைத்தனமான அவர்களது
எண்ணத்தைக் கண்டு, கடவுள், தந்தைக்குரிய பரிவோடு புன்முறுவல்
பூத்திருப்பார். ஆனால், அந்த தவறிலிருந்து அவர்களை
வெளிக்கொணரும் முயற்சிகளை அவர் மேற்கொண்டிருப்பார். அதன் ஒரு பகுதியாக, அவர், கீழ்த்திசை ஞானிகளை தன் மகன் பிறந்த வேளையில்
அழைத்துவந்தார். அவர்கள் வழியே, தன் குடும்பம் அனைவரையும்
உள்ளடக்கியது என்பதை இறைவன் அழுத்தந்திருத்தமாக பறைசாற்றினார்.
கடவுள்
எந்த மனித குழுவின் தனிப்பட்ட சொத்தாக இருக்கமுடியாது என்ற இந்த உண்மை, மற்றெல்லா காலங்களையும் விட, இன்று,
மனித குடும்பம் முழுவதற்கும், அதிலும் குறிப்பாக இந்திய சமுதாயத்திற்குத் தேவையான
ஒரு முக்கிய உண்மை. 2024ம் ஆண்டு, இந்தியாவில் பொதுத் தேர்தல்
நடைபெறவுள்ள நிலையில், அரசியல் ஆதாயம்
தேடும் அரசியல்வாதிகள், மக்களைப் பிரிப்பதற்காக, மதத்தையும், கடவுளையும் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதை
நாம் அறிவோம். அயோத்தியில், சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு, மற்றும்
அங்கு எழுப்பப்பட்டுள்ள இராமர் கோவில் ஆகியவை, இந்துக்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே ஏற்படுத்தியுள்ள
ஆழமான, கசப்பான பிளவை நாம் அறிவோம். தற்போது, ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் அந்தக்
கோவிலின் கும்பாபிஷேகம், மக்களை மேலும் பிளவுபடுத்தும்
நிகழ்வாக நிச்சயம் பயன்படுத்தப்படும்.
மனிதக்
குடும்பத்தினர் அனைவரையும் அரவணைக்க, கடவுள் காத்திருக்கும் வழிபாட்டுத் தலங்கள், மனித
குடும்பத்தை பிளவுபடுத்தும் போர்க்களங்களாக மாறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.
கடவுள் நிச்சயமாக எந்த பிரிவினைவாத சக்திக்கும் துணைபோவதில்லை! ஒன்றிணைத்தல், ஒப்புரவாக்குதல் ஆகியவையே கடவுளின் வழிகள்.
மக்களைப் பிரிப்பதற்காக இறைவனை கூறுபோடும் அரசியல் தந்திரங்கள், இந்தப் புத்தாண்டில்
வேரோடு களையப்பட வேண்டுமென முதலில் வேண்டிக்கொள்வோம்.
மூன்று
அரசர்கள், அல்லது, மூன்று ஞானிகள்
என்று அழைக்கப்படும் நமது விழா நாயகர்கள், கடினமான ஒரு பயணத்தின் இறுதியில்,
கடவுளைக் கண்டனர். இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த நிகழ்வை, பல கோணங்களில்
சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் நடந்தனர் என்றும், இறைவனைச்
சந்தித்தபின் இந்த ஞானிகள் வேறுவழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது.
நம் வாழ்க்கையை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதை முதலில் சிந்திக்கலாம். விண்மீன்களின்
துணையோடு, இறைவனைச் சந்தித்தபின், நாம் பின்பற்றவேண்டிய மாற்று வழிகளைப்பற்றி சிந்திக்கலாம்.
விண்மீன்களைக்
கண்டு பயணம் மேற்கொண்ட இந்த ஞானிகள், "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்"
என்பது, இன்றைய நற்செய்தி சொல்லும் மற்றுமொரு விவரம்: இந்த ஞானிகள், ஆசியாவிலிருந்து,
ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்றும், கோள்களை, நட்சத்திரங்களை ஆய்வுசெய்த அறிஞர்கள்
என்றும், சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
உலகின்
பல நாடுகளில், குறிப்பாக, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், கோள்களை, நட்சத்திரங்களை, வைத்து, பல முடிவுகள் எடுக்கப்படுவதை
நினைத்துப்பார்க்கலாம். கோள்களையும், நட்சத்திரங்களையும்,
வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்று நம்பி, நம்மையும், நம் குடும்பங்களையும், சில வேளைகளில்,
நாட்டையும் வழிநடத்தும் பொறுப்பை, நட்சத்திரங்களை வைத்து வியாபாரம் செய்யும்
சோதிடர்களிடம் விட்டுவிடுகிறோமா என்ற ஆய்வை,
ஆண்டின் துவக்கத்தில் மேற்கொள்வது நல்லது. கோள்களையும், நட்சத்திரங்களையும் நம்பி வாழ்வதற்குப் பதில், நட்சத்திரங்களை உருவாக்கிய இறைவனையும், அவர்
காட்டும் வழிகளையும், நம்பிவாழ்வது, எவ்வளவோ
மேல் என்பதை, இத்திருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது.
இந்த
மூன்று ஞானிகள், விண்மீன் வழியே வந்த
அழைப்பை ஏற்று, இறைவனைத் தேடி, பயணத்தை மேற்கொண்டனர்.
விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள்,
இரவு நேரங்களில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள்
அதிகம் இல்லாத அக்காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள்
எளிதல்ல. பல இரவுகள், மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை
மறைத்திருக்கும். அந்நேரங்களில், மேகமும், பனியும்
விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து, தங்கள் பயணத்தை அவர்கள்
தொடர்ந்திருக்க வேண்டும். எத்தனை எத்தனை இரவுகள், எத்தனை எத்தனை இடர்பாடுகள்? அத்தனையின் மத்தியிலும்,
ஒரே குறிக்கோளுடன், பல்லாயிரம் மைல்கள் பயணம்செய்த அந்த ஞானிகளின் மனஉறுதி நமக்கெல்லாம்
நல்லதொரு பாடம்.
நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது.
நம்மில் பலர் வாழ்வது நகரங்கள் என்பதால், அங்கு இரவும் பகலும் எரியும் செயற்கை விளக்குகளின்
ஒளிவெள்ளம், விண்மீன்களை மூழ்கடித்துவிடுகின்றது. வானத்தை நிமிர்ந்து
பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? மேகங்கள் திரண்டு வரும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.
கருமேகம் சூழும்போது, சந்தேகத்தோடு நிமிர்ந்து
வானத்தைப் பார்க்க பழகிவிட்ட நாம், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும், கடவுள் என்ற
ஒருவர் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள, மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்.
சந்தேகம் என்பது, கறுப்புக் கண்ணாடி போன்றது. கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டால், பார்ப்பது எல்லாமே கருமையாகத்தானே தெரியும்.
சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக்
கருமேகங்களுக்குப் பின்னிருந்து, கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள்
கொடுக்கும் அழைப்பும் நமக்குப் புரியாது.
நட்சத்திரங்கள், ‘ஸ்டார்’கள் என்ற சொல், மனதில் ஒருசில எண்ணங்களை
ஏற்படுத்துகின்றது. இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில், திரை உலகில் பல 'ஸ்டார்'களை உருவாக்கி, கடவுளுக்கு இணையான ஓர் இடத்தை அவர்களுக்குக்
கொடுக்கும் பல்லாயிரம் இளையோரை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. இந்த ‘ஸ்டார்’களின் செயற்கை ஒளியை, உண்மை ஒளியென்று
நம்பி, அதைச்சுற்றி வட்டமிட்டு, தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளும் விட்டில் பூச்சிகளாக
வாழும் இரசிகர்களை நினைத்து வேதனையாய் இருக்கிறது. 'ஸ்டார்'களை நம்பி, தங்கள் வாழ்வை அடகுவைக்கும் இரசிகர்கள்,
குறிப்பாக, இளையோர், தங்கள் மயக்கத்திலிருந்து விழித்தெழவேண்டும் என்று மன்றாடுவோம்.
விண்மீன்
காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்ட ஞானிகள், அதன்பின், தங்கள் கனவின் வழியே கடவுள் தந்த எச்சரிக்கைக்கு
செவிமடுத்து, வாழ்க்கைப் பாதையையே மாற்றிக்கொண்டனர். இந்த ஞானிகளைப்போல், எத்தனையோ
நல்ல உள்ளங்கள் இறைவனைச்
சந்தித்தபின், தங்களையும், தங்களைச்
சுற்றியிருந்த உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். உறுதியான உள்ளத்துடன் விண்மீன்களைத்
தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப்
போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில்,
நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும்
விண்மீன்களாய்த் மாறவும், தேவையான இறையருளை வேண்டுவோம்.
இறுதியாக ஓர் எண்ணம் – புத்தாண்டு நாளையொட்டி
தமிழர்கள் பகிர்ந்துகொள்ளும் ஒரு திரைப்படப் பாடலின் பல்லவி, ஆண்டின் ஒவ்வொரு நாளுமே நமக்கு நல்ல நாளாக
அமைவதற்கு வழியைச் சொல்கிறது.
ஆண்டுக்கு
ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர்
நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
அடுத்தவர் நலனை முன்னிலைப்படுத்தி, கனிவு, கரிசனை ஆகிய உணர்வுகளால் நம் உள்ளங்களை நிறைத்துக்கொள்ள
இறைவனை வேண்டுவோம்.
ஆண்டவர் நமக்கு ஆசி வழங்க, எப்போதும் காத்திருக்கிறார்
என்பதை உணர்த்த, ஒவ்வோர் ஆண்டும், சனவரி 1ம் தேதி, மரியா, இறைவனின் தாய்
என்ற பெருவிழாவன்று, நாம் சிறப்பிக்கும் திருப்பலியில் ஒலிக்கும் முதல் வாசகம் நமக்கு
உதவியாக உள்ளது. ஆண்டின் முதல் நாள் திருப்பலியில் நாம் கேட்ட முதல் வாசகம் ஆசி நிறைந்த
சொற்களால் நிறைந்துள்ளன. மோசே, ஆரோன் மற்றும் ஏனைய இறைப்
பணியாளர்கள், இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி
வழங்கும்போது அவர்கள் கூறவேண்டிய சொற்கள் என்ன என்பதை இறைவனே சொல்லித்தருகிறார்: ஆண்டவர்
மோசேயிடம் கூறியது: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு
ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு
ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது
அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண்ணிக்கை 6:22-26)
இறைவன் சொல்லித்தந்துள்ள இந்த ஆசிமொழிகளை, புலர்ந்திருக்கும் இவ்வாண்டில், நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்கு கற்றுக்கொள்வோமாக!
ஆசிமொழிகளை வழங்கும் நாம் ஆசியால் நிறைவோம் என்பது உறுதி!
No comments:
Post a Comment