31 October, 2010

Meeting Christ on a Tree… மரத்தில் ஏறி, இறைவனைக் கண்டவர்...

CACINA - Carry the gospel with you
Posted by frmike on November 17, 2009

Luke’s Gospel is one of my favourite books in the Bible. Where would our Christmas celebrations be if Luke had not written the Infancy narrative? Many popular passages are found only in the Gospel of Luke – Magnificat sung by Mary (echoing the song of Hannah in I Samuel 2: 1-10), the famous Manifesto of Jesus in the synagogue of Nazareth, the most popular parables of the Good Samaritan and the Prodigal Son… All these and more find a place only in Luke’s Gospel and they find a deep place in my heart too.
During this liturgical year (Year C), which will come to a close in a few weeks, we have been fortunate to reflect on a series of passages from Luke’s gospel. For this Sunday, we have another unique passage from Luke, namely, the meeting of Zacchaeus with Jesus – (Luke 19: 1-10). None of the other gospels mention this lovely event. Last year, when I was doing a series of miracles of Jesus for Vatican Radio, I took up this incident too as a miracle of Jesus – a miracle of transformation. (Cf. October 16, 2009 - HE GAVE MY NAME BACK TO ME…என் பெயரை மீண்டும் எனக்கு...)
Time and again human history keeps telling us that God and Christ have been and, can be, found in the most unexpected places. Today’s gospel gives us one more proof of this. Zacchaeus discovers Jesus on the branches of a tree. It is, rather, Jesus who discovers Zacchaeus.

Here is how I visualise this miracle. Jesus was walking along the streets of Jericho. His fame had spread far and wide and so he was surrounded by a crowd. There were many reasons why the crowd followed Jesus. Curiosity… Hope… Jealousy. Most of the poor people who followed him were hopeful that personally or as a nation they would be saved by Jesus. Those who came to Jesus seeking a miracle had to find, discover or invent ways to tackle the crowd. The friends of the paralytic sent him down from the roof. (Luke 5: 17-26) The woman with the flow of blood had to approach Jesus stealthily from behind. (Luke 8: 43-38) Here is another method chosen by Zacchaeus. He climbed up the tree. A miracle brought him down.

Before we go into the miracle part of it, we need to know who this Zacchaeus is. He is a rich person. He is a tax collector. He is short. I see a connection among these three… Being rich and being a tax collector are intrinsically connected. Being a tax collector and being short are also connected. Really? Here is my theory.
Zacchaeus was born in the family of tax collectors. Hence, from his birth, he has been receiving only hatred and curses from the people around him. A child that grows up in hate-filled circumstances never really grows up – even physically! This was the case with Zacchaeus. Why was he surrounded by hatred? The Jews hated the Romans. But they hated another group MORE - the group of Jews who were the betrayers of the Israelites. They were the sycophants of the Romans – the tax collectors. They were simply, THE SINNERS! This label which was stuck on Zacchaeus did not allow him to grow up.

Zacchaeus was curious to see Jesus. If Jesus could have come to the street where he lived, he would have happily stayed at home, gone up to the terrace and seen Jesus and the crowd from the top angle. The top angle or the bird’s eye view (as taught in filmmaking) would have given Zacchaeus a powerful position. Zacchaeus felt that Jesus would not come to where he lived and so, he ventured to meet Him. He feared the ridicule and scorn of the crowd around Jesus and, hence, he invented a new way to encounter Jesus. He climbed up the tree.

Let us come back to the miracle part… Jesus was walking along the streets of Jericho. He saw Zacchaeus sitting on a tree. That was strange! A young person sitting on a tree was acceptable. Why was a middle aged person sitting there? Was he mentally disturbed? He did not seem to be so. Then why? So, Jesus turned around to those who were following him and asked them: “Who is that man?” Those around Jesus looked at the person he was pointing at. “Oh, he is a…” the ever-available-ready-made list of labels and accusations came out. Jesus, as was his wont, swept aside all those irrelevant trash and insisted on knowing his name. After squeezing their collective memory for sometime, they begrudgingly revealed the name: Zacchaeus. Jesus registered the name: ZACCHAEUS! (All caps). He went to the tree and called out: “Zacchaeus, come down immediately. I must stay at your house today.” This was the first part of the miracle!
Some one called Zacchaeus by name… by his REAL, ORIGINAL name. It was as if Zacchaeus was born again and he was ‘re-baptised’. A person, who came from his own tribe which had refused to acknowledge his name and preferred to call him only by labels, called him by his sweet name.

Zacchaeus was called by name and a miracle happened. The miracle of complete transformation. The Bible and our Christian tradition as well as many other religious traditions talk of persons getting completely transformed – making a complete turn-around. Another popular term for this is ‘conversion’. (Please don’t waste your time and energy on ‘conversions’ that are being talked about by the Indian politicians.) This is a much deeper and more meaningful term. We do talk about our own conversions… our new year resolutions or the resolutions we take after a retreat.

The conversion, the transformation of Zacchaeus is something to reflect on. He does not proclaim very vague, general platitudes like: “Oh, Lord, I shall be good. I shall not harm others. I shall give alms.” His statements are more powerful binding commitments. Zacchaeus says: "Look, Lord! Here and now I give half of my possessions to the poor, and if I have cheated anybody out of anything, I will pay back four times the amount." Half my possessions to the poor… pay back four times those I have cheated.
The Gospel says that “Zacchaeus stood up and said to the Lord” during the dinner. He did not whisper this to Jesus. This was a proclamation made from the rooftop, almost. When Zacchaeus stood up to speak, he was SHORT, still. But when he finished saying those lines, he really STOOD TALL. When Zacchaeus climbed the tree, he was a crooked tax collector, carrying a load of labels with him. But, he was brought down from the tree by Jesus as a human being first and, perhaps later, as a saint. This great transformation took place since Jesus CALLED HIM BY NAME thus making him discover his original beauty.
Fr. James Gilhooley begins his homily for October 31, 2010 with these words: “‘A thing of beauty,’ wrote John Keats in Endymion in 1818, ‘is a joy forever.’ Someone has written that as Christians we should love beauty. He went on to say that where beauty is apparent, we should enjoy it. Where beauty is hidden, we should unveil it. Where beauty is defaced, we should restore it. Where there is no beauty at all, we should create it.”
http://www.parishworld.net/
The Gospel gives us a proof of Jesus restoring Zacchaeus to his original beauty. All of us are called to be co-creators of beauty in this world.



Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.



என் மனதுக்கு நெருக்கமான நற்செய்தி லூக்கா நற்செய்தி. இந்தத் திருவழிபாட்டு ஆண்டின் அனைத்து ஞாயிறுகளிலும் இந்த நற்செய்தியின் வாசகங்களை நாம் சிந்தித்து வந்துள்ளது நமக்குக் கிடைத்த பெரும் பேறு. லூக்கா நற்செய்தியைக் கருணையின் நற்செய்தி என்றும் இயேசுவின் மனிதத்தை மையப்படுத்திய நற்செய்தி என்றும் சொல்வார்கள்.
இந்த நற்செய்தியில் ஒரு சில பகுதிகள் என் மனதின் ஆழத்தில் இடம் பிடித்துள்ளன. மரியாவின் புகழ் பாடல், இயேசு தன் பணியின் உட்கருத்தை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் அறிவித்த பகுதி, நல்ல சமாரியன் உவமை, காணாமற்போன மகன் உவமை என்ற ஒரு சில அற்புதமான பகுதிகள் வேறு எந்த நற்செய்தியிலும் காணக் கிடைக்காத பகுதிகள். லூக்கா தனக்கே உரித்தான முத்திரையைப் பதித்தப் பகுதிகளில் ஒன்று இன்றைய ஞாயிறன்று நமக்குத் தரப்பட்டுள்ள நிகழ்வு. இயேசு சக்கேயுவைச் சந்தித்த இந்த நிகழ்வு. இந்த நிகழ்ச்சியைச் சென்ற ஆண்டு ஒரு புதுமை என்ற கண்ணோட்டத்தில் நாம் விவிலியத் தேடலில் சிந்தித்தோம். லூக்கா நற்செய்தி 19ம் பிரிவின் துவக்கத்தில் உள்ள அந்த 10 இறை வசனங்கள் எத்தனை முறை வாசித்தாலும் புதுமையான அனுபவம் தான்.
லூக்கா 19: 1-10
‘இயேசு எரிகோ நகரில் நடந்து போய்க் கொண்டிருந்தார்’ என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. பொதுவாகவே, விவிலியத்தில் வரும் ஒவ்வொரு ஊரும் பல பொருள்களைத் தரும் இடங்களாகக் கருதப்படும். சோதோம், கொமோரா, பெத்லகேம், நாசரேத்து, எருசலேம் என்று பல ஊர்கள் பல எண்ணங்களைத் தருகின்றன. எரிகோ நகரும் பலவகைகளில் தனித்துவம் பெற்றது. கடல் மட்டத்திற்குக் கீழ் அமைத்துள்ள ஒரு நகர் இது. மக்கள் வாழும் நகரங்களில் உலகத்திலேயே மிகத் தாழ்ந்த நிலப்பகுதி இதுதான். பெரும் அழிவுகளுக்கு உள்ளாகாமல் மக்கள் தொடர்ந்து வாழும் ஒரு மிகப் பழமையான நகர் இது. இதன் வரலாறு 11,000 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். இஸ்ரயேலர் மத்தியில் மிகப் புகழ் பெற்ற எருசலேம் கூட 4,000 ஆண்டு வரலாறே கொண்டது. செல்வச் செழிப்புடன் இருந்த ஒரு நகரம் எரிகோ.
லூக்கா நற்செய்தியில் எரிகோ நகரம் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளன. நல்ல சமாரியன் உவமையில் இயேசு இந்நகரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். (10: 30) பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கியது எரிகோ நகருக்கருகே என்று கூறப்பட்டுள்ளது. (18: 35-43) இன்று இயேசு எரிகோ நகரில் சக்கேயுவைச் சந்திக்கிறார். இந்த சம்பவத்தை ஒரு கற்பனைக் காட்சியாக உங்கள் முன் படைக்க நான் விரும்புகிறேன்.

இயேசு எரிகோ நகரில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது புகழ் பரவி வந்ததால், அவரைச் சுற்றிக் கூட்டம் வழக்கம் போல் அலை மோதியது. இந்தக் கூட்டத்தைப் பல்வேறு வழிகளில் சமாளித்து, இயேசுவிடம் புதுமைகள் பெற்றவர்கள் உண்டு. கூட்டத்தில் துணிந்து புகுந்து இயேசுவின் ஆடையைத் தொட்ட பெண், கூரையைப் பிரித்து இறக்கப்பட்ட முடக்குவாத நோயாளி, தூரத்தில் இருந்து கத்தி இயேசுவின் கருணைப் பார்வையைப் பெற்ற பார்வைத்திறன் அற்றவர்... இப்படி பலர் இயேசுவைச் சுற்றி இருந்த கூட்டத்தைப் பல வழிகளில் சமாளித்தனர். இன்று இயேசுவிடம் எந்தப் புதுமையும் எதிர்பார்க்காமல் வந்தவர் சக்கேயு. ஒரு ஆர்வக் கோளாறு அவரை அந்தக் கூட்டத்திற்கு இழுத்து வந்தது. கூட்டத்தைச் சமாளிக்க சக்கேயு வேறொரு வழியைத் தேடுகிறார்.
சக்கேயுவை முதலில் அறிமுகப்படுத்துகிறேன்.
அவர் செல்வந்தர், வரி வசூலிப்பவர்களின் தலைவர், குள்ளமான மனிதர்... நான் சக்கேயுவை அவர், இவர் என்று அழைப்பதை இஸ்ரயேலர்கள் கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சக்கேயு அவர் அல்ல, அவன். அவன் ஒரு பாவி, துரோகி.
இஸ்ரயேலர் உரோமை அரசின் அடிமைகள். வாழ்வது தங்கள் சொந்த நாடானாலும், உரோமையர்களுக்குத் தொடர்ந்து வரி செலுத்த வேண்டிய கட்டாயம். சொந்த நாட்டிலேயே அந்நியனுக்கு வரி செலுத்தி வந்ததால் உரோமையர் மீது ஆழ்ந்த வெறுப்பு. அதைவிட, உரோமையருக்கு வரி வசூல் செய்து கொடுத்த யூதர்களைக் கண்டு மிக அதிக வெறுப்பு. அவர்களை அவலச் சொற்களால் தினமும் அர்ச்சித்தனர். பாவிகள், துரோகிகள், புல்லுருவிகள், நாசக் காரர்கள்... ப்ரூட்டஸ்கள்... இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. நேரம் கருதி இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
சக்கேயு வரி வசூலிக்கும் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்தத் தொழிலை அவர் தானாகவே தேர்ந்தெடுத்திருக்கலாம் அல்லவா? என்னைப் பொறுத்தவரை, சக்கேயு இந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஏன் அப்படிக் கூறுகிறேன்? காரணம்...சக்கேயு குள்ளமாய் இருந்தார். வரி வசூலிப்பவர் குடும்பத்தில் பிறப்பதற்கும், குள்ளமாய் இருப்பதற்கும் என்ன தொடர்பு? சக்கேயு பிறந்தது முதல் மற்றவர்களின் வெறுப்புக்கும், கேலிக்கும் ஆளானவர். அதனால், அவரால் வளர முடியவில்லை. சமுதாயம் அவரைப் பாவி என்றும், துரோகி என்றும் குட்டிக் கொண்டே இருந்ததால், குனிந்து போனார், குள்ளமாய்ப் போனார்.
“இயேசு யார் என்று பார்க்க சக்கேயு விரும்பினார்” என்று நற்செய்தி கூறுகிறது. வெறும் ஆர்வக் கோளாறு. ஒரு பார்வையாளரின் மன நிலைதான். சக்கேயு வாழ்ந்த மாடி வீட்டு பக்கம் இயேசு வந்திருந்தால், மாடியில் நாற்காலி போட்டு, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, இயேசு தன் வீட்டைக் கடந்து போவதைப் பார்த்திருக்கலாம். மாடியிலிருந்து பார்த்திருந்தால், இயேசுவும், அந்தக் கூட்டமும் குள்ளமாகத் தெரிந்திருக்கும். ஊர் மக்களைக் குள்ளமாய் பார்ப்பதில் சக்கேயுவுக்கு ஒரு தனி திருப்தி இருந்திருக்கும். ஆனால், அதற்கு வழி இல்லை. இயேசு சுற்றி வந்த வீதிகள் எல்லாம் ஏழைகள் வாழும் பகுதியாக இருந்தது. தன் வீட்டுப் பக்கம் இயேசு வரமாட்டார் என்று தீர்மானித்த சக்கேயு, தன்னுடை தன்மானத்தை, தற்பெருமையைக் கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு, இயேசுவைத் தேடி வருகிறார். வெறும் ஆர்வம்தான் அவரை இயேசுவிடம் கொண்டு வந்தது என்றாலும், மீட்பின் முதல் படிகளில் சக்கேயு ஏற ஆரம்பித்துவிட்டார். தற்பெருமைக்கு மீண்டும் ஒரு மூட்டை கட்டி விட்டு, ஒரு மரமேறி அமர்ந்தார். இது சக்கேயுவின் பயணம்.

இனி இயேசுவின் பயணம்.
எரிகோ வீதிகளில் இயேசு நடந்து வரும் போது, நிமிர்ந்து பார்க்கிறார். தூரத்தில் ஒரு மரத்தின் மீது நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். இயேசுவுக்கு வியப்பு. சிறுவர்கள் மரமேறி அமர்வது சாதாரண விஷயம். இந்த ஆள், ஏறக்குறைய, 30 அல்லது 40 வயதானவர்... இவர் ஏன் மரமேறியிருக்கிறார்? ஒருவேளை மன நிலை சரியில்லாதவரோ? அப்படியும் தெரியவில்லை. அவர் உடையைப் பார்த்தால், நல்ல வசதி படைத்தவர் போல் தெரிகிறது. பின் ஏன் மரமேறியிருக்கிறார்? இயேசுவுக்கு அவரைப் பற்றி அறிய ஆர்வம். அருகில் இருந்தவர்களிடம் கேட்கிறார், அவர் யார் என்று. கூட்டத்தில் ஒரு சிலர் இயேசு காட்டிய மனிதரைப் பார்க்கின்றனர். கோபம், வெறுப்பு, கேலி அவர்கள் பதிலில் தொனிக்கின்றன. "ஓ, அவனா? அவன் ஒரு பாவி... துரோகி." அவரைப் பற்றியக் குற்றப் பட்டியல்தான் அவர்களிடம் எப்போதும் கைவசம் இருந்ததே. இயேசு அந்தப் பட்டியலை ஒதுக்கிவிட்டு, அவர் பெயரைக் கேட்கிறார். யாருக்கும் அவர் பெயர் தெரியவில்லை. பாவி, துரோகி என்று அடை மொழிகளாலேயே அவரை இதுவரை அழைத்து வந்ததால், அவருடையப் பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. இயேசு விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் பெயரைக் கேட்கிறார். தங்கள் ஞாபகச் சக்தியைக் கசக்கிப் பிழிந்து, இறுதியாக, "சக்கேயு" என்று சொல்கின்றனர். இயேசு அந்த மரத்திற்கு கீழ் வந்தவுடன், மேலே பார்த்து, அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்." என்றார்.
புதுமை ஆரம்பமானது. மக்கள் தன்னை வெறுப்போடு அழைத்த அடைமொழிகளைக் கேட்டுக் கேட்டு, தன் பெயரைத் தானே மறந்து போயிருந்த சக்கேயுவுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. இன்னொரு யூதர் தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயுவின் மனதைப் பூட்டியிருந்த சிறைகள் திறந்தன. சங்கிலிகள் அறுந்தன.

முன் பின் தெரியாத ஒருவர், அதுவும் தான் பிறந்த நேரம் முதல் தன்னைப் பழி சொற்களால் வதைத்து வந்த தன் யூத குலத்திலிருந்து வந்த ஒருவர், தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயு உருமாற்றம் அடைந்தார். உடல் மாறியதா? தெரியவில்லை. மனம் வெகுவாக மாறியது. இந்த மன மாற்றத்தைப் பற்றி சிறிது சிந்திப்போம்.

அன்பர்களே, விவிலியம், கிறிஸ்தவ பாரம்பரியம் இவற்றில் மனம் மாறியவர்களைப் பற்றி பல கருத்துக்கள் கேட்டிருக்கிறோம். சக்கேயுவின் மன மாற்றத்தில் ஒரு தனி சிறப்பு உண்டு. "ஆண்டவரே, இனி நான் நல்லவனாக இருப்பேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன். தான தர்மம் செய்வேன்." என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் சக்கேயு. அதையும் மன மாற்றம் என்று சொல்லியிருப்போம். ஆனால், சக்கேயுவின் கூற்று இவற்றை விட, மிகத் தெளிவாக இருந்தது. "ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை நான் எழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். யாரையாவது ஏமாற்றி, எதையாவது பறித்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பி கொடுத்து விடுகிறேன்." பாதி சொத்து ஏழைகளுக்கு... ஏமாற்றியதற்கு நான்கு மடங்கு பரிகாரம்.
இந்த சொற்களைச் சக்கேயு விருந்தின் போது 'எழுந்து நின்று' சொன்னதாக நற்செய்தி சொல்கிறது. இயேசுவிடம் தனிப்பட்ட விதத்தில் முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல... ஏறக்குறைய, கூரை மீது ஏறி நின்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி. சக்கேயு இந்த வார்த்தைகளை 'எழுந்து நின்று' சொன்ன போது உடல் அளவில் இன்னும் குள்ளமாய்த் தான் இருந்தார். ஆனால், மனதளவில் உயர்ந்திருந்தார். முற்றிலும் உரு மாற்றம் பெற்றார். இந்த மாற்றத்தை உருவாக்கியது இயேசு. அவருடைய பெயரைச் சொல்லி அழைத்த அந்த பரிவு, அன்பு... புதுமை. இயேசுவின் மனதில் உயர்ந்த ஓர் இடம் பிடித்தார். எனவே தான் இயேசு "இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று." என்று ஆணித்தரமாகக் கூறினார்.

கடவுள் பாவிகள் மீது கொள்ளும் இரக்கத்தை இன்றைய முதல் வாசகம் அழகாகக் கூறியுள்ளது:
சாலமோனின் ஞானம் 11: 22-12: 2
ஆண்டவரே, தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது. நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்: மனிதர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர். படைப்புகள் அனைத்தின் மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்? ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்: ஏனெனில் அவை யாவும் உம்முடையன.
உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது. ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்: அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்: ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.

அனபு, மன்னிப்பு ஆகியவை நிரந்தரமான அழகுள்ளவை. "A thing of beauty is a joy forever." "அழகானது என்றென்றும் ஆனந்தம் தருவது." என்று John Keats என்ற கவிஞர் எழுதினார். வேறொருவர் எழுதியது இது: "கிறிஸ்தவர்கள் அழகை விரும்ப வேண்டும். எங்கெங்கு அழகு வெளிப்படையாகத் தெரிகிறதோ, அதை மதிக்க வேண்டும். எங்கெங்கு அழகு மறைக்கப்பட்டுள்ளதோ, அதை வெளிக் கொணர வேண்டும். எங்கெங்கு அழகு அழிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் அதை மீண்டும் உருவாக்க வேண்டும். எங்கெங்கு அழகு இல்லையோ, அங்கெல்லாம் அழகைப் படைக்க வேண்டும்."
இதைத்தான் இயேசு இன்று நற்செய்தியில் செய்திருக்கிறார். நேர்மையற்ற மனிதராய் சக்கேயு மரம் ஏறினார். புனிதராய் அவரை மரத்தினின்று இறக்கினார் இயேசு.
பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம்: ஒருவரை உண்மையில் மாற்ற வேண்டுமானால், ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமானால், அவர் மீது நாம் வழக்கமாகச் சுமத்தும் அடைமொழிகளை, கண்டன அட்டைகளை கிழித்துவிட்டு அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக் காண்போம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

28 October, 2010

ROUNDABOUT RIGHT WAYS நெளிவு, சுளிவுகள் நிறைந்த நேரிய வழி

http://www.annalsofpsychotherapy.com/articles/2007/winter/img/life%20maze_opt.jpeg

“He guides me in straight paths for his name’s sake.” (Psalm 23:3). Harold Kushner, in his book ‘The Lord Is My Shepherd’ begins his reflections on this verse with a story. “There is a story in the Talmud about the traveller who asks a child, ‘Is there a shortcut to such-and-such a village?’ The child answers, ‘There is a shortcut that is long and a long way that is short.’ The story comes to mind as I contemplate this verse from the Twenty-third Psalm because the Hebrew phrase translated ‘straight paths’ actually says something more complex and more interesting than the translation would convey.” Later on in the same chapter, Kushner makes a reference to the Hebrew word “ma’aglei tzedek” used in this Psalm which, when properly translated, would mean: “roundabout ways that end up in the right direction”.

Ever since we began to learn mathematics, we were told that the shortest distance between two points was a straight line. It still is… This is simple geometry. But in life, points are connected in roundabout ways, sometimes in entangled ways. The distance between ‘us’ and ‘our goals’ sometimes resembles a battle field strewn with landmines. Shortcuts, straight lines are not easily available in life. One can pursue shortcuts at one’s own risk. There is no shortcut for a cocoon to turn into a butterfly except through patient struggle. We know of the person who tried to help the butterfly come out by widening the hole. The result? An ugly monster emerged from the cocoon and not a lovely butterfly.
In my last two reflections I have spoken about the Chile miners. I would like to get back to their story… hopefully, for the last time. On August 5th, 33 workers entered the mines as simple, unknown labourers. On October 13th they emerged from the bosom of the earth as world famous heroes. For many of us who had witnessed this famous rescue mission, only two dates, two points remain etched in our memories…August 5 and October 13. For most of us the time between these two dates is a simple straight line, a simple 69 days. But for the 33 labourers this was 69x24 hours… namely, 1656 hours and 99,360 minutes. It was an excruciatingly looooong time. Especially, between August 5, when they were buried underground and August 22 when they were discovered alive, 17 days had rolled by. For us these were 17 days. But for them and for their families these were 1,468,800 seconds ticking ever so slowly. Surely it was not a simple straight line, but a torturous, roundabout path. Fortunately, they were sustained throughout these 69 days by prayers and other forms of support.
Now there are quite many offers to make a movie out of this event. This movie would run to about three hours max. Not more. No one would be interested in seeing all the 1656 hours on screen. We don’t have the patience for it. Yes, dear friends… that is the point. We don’t have the patience. Very many life experiences are long drawn out and dull. We don’t have the patience to see through them all. We are eager to see the end results which are spectacular.
Think of Usain Bolt, Florence Griffith Joyner, Sergey Bubka, Yelena Isinbayeva, Michael Phelps, Michael Jordan, Martina Navratilova, Roger Federer, Sachin Tendulkar, Muthaiah Muralidharan… and millions more… These are world champions in their specific field of sports and games. We have seen them achieve world records; but we have not seen the toil and struggle they have gone through in their lives. For us their achievements seem like simple straight lines; but, for them it was a long-winding, complicated maze. We are also aware of some sportspersons who lost their patience and took the short cut (performance enhancing drugs) to achieve glory. This list, once again, is pretty long. Not only in the field of sports, but also in other fields of scientific research, political career, social work, artistic endeavours men and women have toiled hard. They have travelled the long and hard path to achieve their goals.

When the author of Psalm 23 wrote the line: “He guides me in straight paths for his Name’s sake”, he must have thought about the journey undertaken by his ancestors under the leadership of Moses. This journey was anything but a straight line. When God led them out of Egypt, he led them thorough a roundabout way. “When Pharaoh let the people go, God did not lead them on the road through the Philistine country, though that was shorter. For God said, 'If they face war, they might change their minds and return to Egypt.' So God led the people around by the desert road toward the Red Sea.” (Exodus 13:17-18)
From a simple, geographic perspective, the journey through the Sinai desert must have taken around 2 months at a very very slow pace. But, the Bible tells us that the Israelites took 40 years to cross the desert. 40 is a symbolic number in the Bible. Still, we can understand that the Israelites had taken enormous amount of time to cross the desert to reach the Promised Land. This was not a simple physical journey between two locations – Egypt and Canaan. It was a journey of the Israelites from slavery to freedom. Simple physical movement from one place to another may have required a much less time; but a movement from dependence to self-determination had taken 40 long years.
From our perspective, this whole exercise was a colossal waste of time and energy. Thousands of able-bodied adults simply going around a desert in circles for 40 years was an utter failure in personnel management. God and Moses should have done their SWOT analysis better.

Our age, filled with the myth of more efficient management techniques, pays heavy price for all the quick-fix solutions and shortcuts. I began this reflection with Harold Kushner. Let me conclude with another passage from Kushner. “I can’t count the number of times someone has told me at a funeral, ‘Rabbi, I don’t see the need to take off all those days for the traditional seven-day memorial week. A day or two should be enough. I’m a busy person.’ And I have had to warn those people that if they try to rush through the grieving process, they will end up spending more time with me or with a therapist, trying to deal with the undigested lump of grief in their hearts, than they will save by taking the shortcut.”

Everything in life, whether it is grief or joy, success or failure, family or friends, fame or fortune, work or leisure… everything requires time. Not fleeting, passing minutes from one to another like a butterfly; but long, enduring hours like a cocoon. There is no substitute for hard work. The only substitute could be heart-break. May the Shepherd lead us in “ma’aglei tzedek”, namely, “roundabout ways that end up in the right direction”!


Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.


"அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தன் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்." திருப்பாடல் 23ன் மூன்றாம் இறைவசனம் இது. இதன் முதல் பகுதியை சென்ற இரு வாரங்கள் சிந்தித்தோம். இன்று இரண்டாம் பகுதியில் நம் தேடலை ஆரம்பிக்கிறோம். "தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்." என்ற வரியை "தம் பெயருக்காக எனை நேர்வழியில் நடத்திடுவார்." என்றும் சில மொழிபெயர்ப்புகளில் நாம் காணலாம். நீதி வழி, நேர் வழி என்ற சொற்றொடரைப் பற்றி நமது சிந்தனைகள் இன்று அமையட்டும்.
இரு புள்ளிகளை இணைக்கும் மிகச் சுருக்கமான தூரம் நேர் கொடு. 'ஜியோமிதி' அல்லது 'வடிவக்கணிதம்' என்பதில் கூறப்படும் ஒரு விதிமுறை இது. இது கணிதத்தின் விதி முறை. வாழ்வில், ‘நான்’ என்ற புள்ளிக்கும் ‘எனது இலக்கு’ என்ற புள்ளிக்கும் இடையே உள்ள தூரம் சுருக்கமான நேர் கொடு அல்ல. நெளிவு, சுளிவுகள் நிறைந்த பாதை. பல சமயங்களில் இது சிக்கலான பாதையும் கூட.

திருப்பாடல் 23ன் மூன்றாம் வரிகளைக் குறித்து Harold Kushner தன் புத்தகத்தில் எழுதும் போது, ஒரு கதையுடன் தன் எண்ணங்களை ஆரம்பிக்கிறார். யூதப் படிப்பினைகள் அடங்கிய Talmud என்ற நூலில் காணக் கிடக்கும் ஒரு கதை இது. வழிப் போக்கர் ஒருவர் ஒரு சிறுவனிடம் அருகிலுள்ள ஊருக்கு வழி கேட்கிறார். வழி சொல்கிறான் சிறுவன். அப்போது அவர் அச்சிறுவனிடம், "அந்த ஊருக்குச் செல்ல ஏதாவது குறுக்கு வழி உண்டா?" என்று கேட்கிறார். சிறுவன் பளிச்சென்று ஒரு பதில் சொல்கிறான்: "ஒரு நீண்ட குறுக்கு வழி உள்ளது. அல்லது ஒரு குறுகிய நீண்ட வழி உள்ளது." என்கிறான் சிறுவன்.
திருப்பாடல் 23ல் கூறப்பட்டுள்ள நீதி வழி, நேரிய வழி என்பதைக் குறிக்கும் எபிரேயச் சொற்கள்: "ma’aglei tzedek". இதைச் சரியான மொழிபெயர்ப்பு செய்தால், "நேரியதொரு திசை நோக்கி சுற்றி, வளைந்து செல்லும் பாதை." என்று பொருள் கொள்ளலாம். அடைய வேண்டிய இலக்கு நேரியதென, நல்லதென, உண்மையென நாம் உணர்ந்தால், அதை அடைவதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் நீண்டதாக, பல சமயங்களில் நம் பொறுமையைச் சோதிப்பதாக அமையும்.

எந்த ஓர் உயரிய இலக்கும் தானாகவே மடியில் வந்து விழாது. நாம் தான் அதைத் தேடிப் போக வேண்டும். இந்தப் பயணத்திற்கு மிகுந்த பொறுமை தேவை. கூட்டுப் புழு ஒன்று வண்ணத்துப் பூச்சியாக மாற பொறுமை, போராட்டம் இரண்டும் தேவை என்பது நமக்குத் தெரியும். சென்ற ஆண்டு விவிலியத் தேடலில் இயேசுவின் உருமாற்றம் பற்றி நாம் சிந்தித்தபோது கூட்டுப் புழுவின் பொறுமையான போராட்டம் பற்றி பேசினோம்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, சுரங்கத்தில் பணி செய்ய பூமிக்கடியில் சென்ற 33 மனிதர்கள் வெகு சாதாரணத் தொழிலாளர்களாக அந்தச் சுரங்கத்தில் இறங்கினார்கள். 69 நாட்கள் சென்று அக்டோபர் 13ம் தேதி உலகப் புகழ்பெற்ற வீரர்களாய் பூமிக்கடியிலிருந்து வெளி வந்தனர். கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாவது போல், பூமிக்கடியில் இந்தத் தொழிலாளர்கள் புதைந்திருந்த போது அவர்களில் ஏற்பட்ட அற்புத மாற்றங்களைச் சென்ற விவிலியத் தேடல், ஞாயிறு சிந்தனை இரண்டிலும் சிந்தித்தோம்.
உலகத்தின் பார்வையில், எண்ணங்களில் ஆகஸ்ட் 5, அக்டோபர் 13 என்ற இரு புள்ளிகள் மட்டும் பதிந்துள்ளன. இந்த இரு நாட்களுக்கும் இடையே நாம் ஒரு நேர்கோடு வரைந்து இந்த சம்பவத்தைச் சுருக்கி விட்டோம். இந்த இரு நாட்களுக்கும் இடையே 69 நாட்களே இருந்தன. இது நம் பார்வை, நம் கணக்கு. அந்த 33 தொழிலாளர்களுக்கு இந்த இரு நாட்களுக்குமிடையே, 69 நாட்கள்... இல்லை, இல்லை... 69 யுகங்கள் சென்றன. அதாவது 1,656 மணிகள், 99,360 நிமிடங்கள் இவர்கள் பூமிக்கடியில் இருந்தனர். அதிலும் முக்கியமாக, இவர்கள் பணி செய்த சுரங்கம் பாறைகளால் மூடப்பட்ட ஆகஸ்ட் 5க்கும், இவர்கள் உயிருடன் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஆகஸ்ட் 22க்கும் இடையே, அந்த 17 நாட்கள், வெளி உலகில் இருந்த நமக்கு 17 நிமிடங்களாகப் பறந்திருக்கலாம். ஆனால், அங்கு புதையுண்டிருந்த தொழிலாளர்களுக்கு, அவர்களது குடும்பங்களுக்கு அந்த 17 நாட்கள் 24,480 நிமிடங்களாக, 14,68,800 நொடிகளாக நத்தை வேகத்தில் நகர்ந்திருக்கும். அந்த 69 நாட்கள்... அவர்களைப் பொறுத்தவரை பொறுமையை, போராட்டத்தை, நம்பிக்கையை, செபத்தைச் சொல்லித்தந்த பள்ளிக்கூடம். நம்மைப் பொறுத்தவரை இறுதி இரு நாட்கள் வீர, தீர கண்காட்சி. அவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும் ஆகஸ்ட் 5 அக்டோபர் 13 என்ற இரு புள்ளிகளுக்கிடையே இருந்தது சுருக்கமான நேர்கோடா அல்லது பல திசைகளிலும் வளைந்து நெளிந்து சென்ற நீண்ட கோடா என்று.

பந்தயங்களிலும், விளையாட்டுகளிலும் உலகச் சாதனை படைத்துள்ள Usain Bolt, Florence Griffith Joyner, Sergey Bubka, Yelena Isinbayeva, Michael Phelps, Martina Navratilova, Roger Federer, Sachin Tendulkar, Muthaiah Muralidharan என்ற விளையாட்டு வீரர்களைக் கேட்டு பார்த்தால் தெரியும் அவர்களுக்கும் அவர்கள் அடைந்த சாதனைகளுக்கும் இடையே இருந்தது நேர்கோடா அல்லது நீண்ட, சிக்கலான வளைகோடா என்று. எத்தனையோ விளையாட்டு வீரர்கள் தங்கள் இலக்கை அடைவதற்குள் பொறுமை இழந்து சுருக்கு வழிகள், குறுக்கு வழிகள் என்று போதைப் பொருள்களின் உதவியை நாடியதும் நமக்குத் தெரிந்ததுதான்.
விளையாட்டைப் போலவே, அறிவியல் ஆய்வுகளில், அரசியலில், வர்த்தக நிறுவனங்களில், மக்கள் சேவையில் சாதனைகள் படித்தவர்களில் பலர் நேரிய வழியில், நீண்டு வளைந்து சென்ற கரடு முரடானப் பாதைகளில் பொறுமையுடன் சென்று, வரலாறு படைத்துள்ளனர்.

"தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்." என்ற வரியைத் திருப்பாடலின் ஆசிரியர் சொன்னபோது, பாலைவனத்தில் பல ஆண்டுகள் நீண்டு வளைந்து சென்ற கரடு முரடானப் பாதைகளில் அலைந்த தன் முன்னோரை அவர் நினைத்துப் பார்த்திருப்பார். அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது, கடவுள் அவர்களை வழி நடத்திய விதம் விநோதமாக இருந்தது. இதை விடுதலைப் பயண நூல் இவ்வாறு சொல்கிறது:
விடுதலைப் பயணம். 13: 17-18
மக்களைப் பார்வோன் அனுப்பியபோது, பெலிஸ்தியர் நாட்டு நெடுஞ்சாலைதான் நேர்வழி எனினும், அதன் வழியாகக் கடவுள் அவர்களை நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “போரைக் கண்டு இம்மக்கள் மனம் தளர்ந்து எகிப்திற்கே திரும்பிவிடுவார்கள்” என்றார் கடவுள். கடவுள் மக்களைப் பாலைநிலச் சுற்று வழியாக செங்கடலுக்குப் போகச் செய்தார்.

இஸ்ரயேல் மக்கள் கடந்து சென்ற அந்த சீனாய் பாலைவனத்தை நடந்து கடக்க அதிகப்படியாக இருபது நாட்கள் ஆகும். குழந்தைகள், வயதானோர் ஆகியோரை மனதில் வைத்து இந்தப் பயணம் மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அப்பாலை நிலத்தைக் கடக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். ஆனால் இஸ்ரயேல் மக்கள் எடுத்துக் கொண்ட காலம் நாற்பது ஆண்டுகள்!
நாற்பது என்பது விவிலியத்தில் ஓர் அடையாள எண் எனக் கருதினாலும், அவர்கள் மேற்கொண்ட பயணம் நீண்ட காலம் எடுத்ததென்பது தெரிகிறது. அந்தப் பயணம் எகிப்து என்ற இடம் விட்டு, கானான் என்ற இடத்திற்குக் கடந்து சென்ற பயணம் அல்ல. அடிமைகள் என்ற நிலையைக் கடந்து உரிமை மக்கள், இறைவனின் குலம் என்ற உயரிய நிலையை அந்த மக்கள் உணரச் செய்த ஒரு பயணம் அது. எனவே, இது ஒரு நேர்கோட்டில் நடத்தப்பட்ட அதிவேகப் பயணம் அல்ல. சுற்றி வளைத்து, சிக்கித் தவித்து தங்கள் விடுதலையைத் தாங்களேக் கண்டெடுத்த ஒரு புனித பயணம்.
அசுர வேகத்தில் செல்லும் நமது உலகக் கண்ணோட்டத்தோடு இந்தப் பயணத்தைப் பார்க்கும் போது, அத்தனை ஆயிரம் மக்கள் அத்தனை ஆண்டுகள் வீணடித்து விட்டனரே என்று தான் நாம் கணக்கிடுவோம். நமக்கு எல்லாமே விரைவில், வெகு விரைவில், நொடிப் பொழுதில் நடக்க வேண்டும். நீளமான நடைப் பயணங்கள் (திருத்தலங்களுக்கென்று நாம் மேற்கொள்ளும் பயணங்கள்), அமைதியான ஆழ்நிலை தியானங்கள், ஆர, அமர, நிதானமாகச் செயல்படுதல் என்ற எண்ணங்கள் எல்லாம் நமது தினசரி வாழ்க்கையிலிருந்து மெதுவாக விடை பெற்று வருகின்றன. அமைதி, நிதானம், பொறுமை போன்ற வார்த்தைகள் நமது அகராதியிலிருந்தும் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன.

அவசரமாய், ‘சட்டுபுட்’டென்று காரியங்களைச் செய்வதால், அதன் விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. நமது அவசர உலகைப் படம் பிடித்துக் காட்ட Harold Kushner பகிரும் ஓர் அனுபவம் நமக்கு நல்ல பாடம். குடும்பத்தில் ஒருவர் இறந்தால், யூத மரபுப்படி ஏழு நாட்கள் துக்க நாட்களாக கடைபிடிக்கப்படும். இது பல மதங்களிலும் காணக்கிடக்கும் ஒரு பழக்கம்தான். Kushner ஒரு யூத குரு என்பதால், வியாபாரம் வேலை என்று எப்போதும் பரபரப்பான வாழ்க்கை நடத்தும் ஒரு சிலர் இந்த ஏழு நாட்களைக் குறித்து அவரிடம் கேள்வி எழுப்புவர். ஆலோசனை கேட்பர். தங்களுக்குத் தலைக்கு மேல் வேலைகள் இருப்பதாகவும் எனவே, இந்த ஏழு நாள் சடங்குகளை சுருக்கி ஓரிரு நாட்களில் நிறைவேற்ற முடியாதா? என்றும் அவரிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்களுக்கு Kushner அளிக்கும் பதில் பொருள் நிறைந்த பதில்: “இந்த இழப்பால் உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள வலிகளைப் போக்கவே இந்த ஒரு வாரச் சடங்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவைகளை அவசரப்பட்டு முடித்தால், உங்கள் உள்ளத்தின் காயங்களை, வேதனைகளை ஆற்றுவதற்கு, குணமாக்குவதற்கு நீங்கள் நேரம் கொடுக்காமல் போய்விடுவீர்கள். இதனால் பாதிப்புக்கள் தொடரும். ஆறாத இந்த வேதனைகள் மீண்டும் மீண்டும் தலைதூக்கி உங்கள் வாழ்வை இன்னும் நீண்ட காலம் பாதிக்கும். இந்த ஏழு நாட்கள் நீண்டதொரு பயணம் என்று நினைத்து நீங்கள் சுருக்கினால், உங்களைத் தொடரும் வேதனைப் பயணம் மிக நீண்டதாய், சிக்கலானதாய் இருக்கும்.” என்று Kushner அவர்களை எச்சரிப்பாராம்.
காயங்கள் ஆறுவதற்கு நேரம் கொடுக்க வேண்டும். சாதனைகள் ஆற்றுவதற்கு நேரம் கொடுக்க வேண்டும். பொதுவாகவே வாழ்க்கையைச் சீராக நடத்துவதற்கு நேரம் கொடுக்க வேண்டும்.
வண்ணத்துப் பூச்சியாக மாற விரும்பும் கூட்டுப் புழு பொறுமையாய் போராட வேண்டும். அந்தப் போராட்டத்தினால் அதனுள் பெருகும் திரவம் அழகற்ற கூட்டுப் புழுவை அற்புதமான வண்ணத்துப் பூச்சியாக மாற்றும். கூட்டுப் புழுவின் பொறுமையான போராட்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் கூட்டுப் புழுவின் ஓட்டையை நாம் பெரிதாக்கினால், வெளி வருவது வண்ணத்துப் பூச்சியாக இருக்காது. வண்ணத்துப் பூச்சியைப் போல் வாழ்வை வண்ணமயமாக்கும் முயற்சி ஒரு நாளில் உருவாகும் அவசர முயற்சி அல்ல.அதிலும் சிறப்பாக, சில ஆழமான, அற்புதமான எண்ணங்களை சிந்திக்க, அவைகளைச் செயல் படுத்த நேரம் ஒதுக்க வேண்டும். நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த நெடிய, நீண்ட, நேரிய வழியில் ஆயனாம் இறைவன் நம்மை வழி நடத்த அவரிடம் மன்றாடுவோம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

25 October, 2010

MISSION SUNDAY அனுப்பப்படும் ஞாயிறு

http://www.turnbacktogod.com/world-mission-sunday/

The term ‘Mission Sunday’ brings fond memories of my childhood days. Nothing to do with ‘Mission’ or ‘Sunday’. Simply a day of fun and games. Yes. This Sunday would be announced quite in advance. Posters about this Sunday would appear; raffle tickets would be sold; Mission Sunday Fair would be conducted. All in all, this was a Sunday to look forward to. Later, during my Jesuit formation and priestly ministry I understood that this Sunday was set aside to bring to focus those who were toiling in the Lord’s vineyard in very difficult circumstances. Here is a brief information about ‘The origins of World Mission Sunday’.
In 1922, Pope Pius XI made the Association for the Propagation of the Faith (APF) the official mission-funding society for the whole Catholic Church. On 14 April 1926, Pope Pius XI gave his approval to a request formulated by the APF which, in a plenary assembly, petitioned the Pope to establish ‘a day of prayer and propaganda for the missions to be celebrated on the same day in every Catholic diocese, parish and institute in the world’. The reasons for the request were clearly stated: ‘The day would foster understanding of the greatness of the missionary task, encourage zeal among the clergy and the people; offer an opportunity to make the APF ever more widely known and encourage offerings for the missions...’
http://www.missio.org.uk/pdf/Origins_of_World_Mission_Sunday.pdf
In the past, Asia and Africa were considered fertile ground for missionary activities. Special collections were made to support missionaries who worked in mission stations in far away places.
I can see a marked shift in my thoughts on Mission Sunday. I can see that Asia and Africa have graduated very much from being continents which received missionaries, to continents sending missionaries to other parts of the world. The tide has surely turned around. My present thoughts are not overly concerned about which country or continent sends more missionaries. I am more concerned about how all of us are called to become missionaries, messengers to bring good news to our world.
On June 28th, 2010, the eve of the Feast of Sts Peter and Paul, Pope Benedict XVI announced: "I have decided to create a new organism, in the form of pontifical council, with the specific task of promoting a renewed evangelization in countries where the first proclamation of the faith already resounded, and where Churches are present of ancient foundation, but which are going through a progressive secularization of society and a sort of 'eclipse of the sense of God,' which constitutes a challenge to find the appropriate means to propose again the perennial truth of the Gospel of Christ." Accordingly, in October 2010, he established the Council for New Evangelisation. This world needs to be evangelised anew. It would be more profitable to look at Mission Sunday from this perspective.

I would like to confine my thoughts mainly to the idea of ‘Mission’ – the idea of ‘being sent’. This concept widens the scope of this Sunday from the narrow ‘missionary’ image. The term ‘missionary’ brings to mind only priests and religious, whereas the term ‘mission’ includes all of us. Every one of us is ‘missioned’, namely, ‘sent’.
There is a beautiful saying attributed to Rabindranath Tagore, namely: “Every child comes with the message that God is not yet discouraged of man.” Every one of us coming into the world is a gift from God, a messenger sent by God, bringing a positive message to the world.
When Pope Benedict XVI visited England recently to beatify Cardinal Newman, he quoted from one of the meditations of Newman. “God has created me to do him some definite service. He has committed some work to me which he has not committed to another.”
Helen Keller emphasises our ‘mission’ in these words: “I am only one, but still I am one. I cannot do everything, but still I can do something; and because I cannot do everything, I will not refuse to do something that I can do.”

Stringing together the thoughts of Tagore, Newman and Keller, we can see that the very first ‘mission’ given to each one of us is to cherish ourselves and others as lovely gifts come into this world. Each of us is given a specific mission to fulfil in this world. No one else is assigned to do this mission. How great this world would turn out to be if every child realises that he or she is a unique gift given to this world for a unique purpose!

The second reading for this Sunday is taken from the Second Letter to Timothy, where St Paul looks at his life with a sense of satisfaction having accomplished his mission.
For I am already being poured out like a drink offering, and the time has come for my departure. I have fought the good fight, I have finished the race, I have kept the faith. Now there is in store for me the crown of righteousness, which the Lord, the righteous Judge, will award to me on that day—and not only to me, but also to all who have longed for his appearing. (II Tim. 4: 6-8)

These words of St Paul follow last week’s readings where Paul tells Timothy to preach the good news ‘in season and out of season’. (II Tim. 4:2) Another translation of this verse makes St Paul’s instruction clearer. “Preach the Word God. Be prepared, whether the time is favourable or not.” When the time is favourable, preach the word from the pulpit, from an erected stage via microphones and speakers. In our present day world such loud proclamation may land the messenger in trouble. We can easily recall the amount of tensions created by religious messages delivered via loudspeakers.
When such a chance is not possible, the next best option is the sharing of the Word of God in small groups, beginning with our families. Of all the evangelising, missionary activities undertaken, the sharing of the Word of God in families is the most challenging one. I know of many youngsters who share the Word of God in their work spots, friends circle and prayer groups. When talking of sharing in groups, we can surely think of Basic Christian Communities which have their roots in Latin America and the Philippines. I am happy that in India, Basic Christian Communities have taken strong roots.

Sharing the good news or the Word of God through words is one way of evangelising. In my opinion, a better way of preaching is through not-preaching, but living the Word. For instance, ‘Love your neighbour as yourself’(John 13:34) are powerful words indeed, when spoken. But when this is truly practised in life, the effect is more powerful. ‘Forgive your brother not seven times but seventy times seven…’ (Matthew 18:22) is a power-packed formula. But its practice is surely better. It’s a knock-out punch! Action speaks louder than words. Most of the early Christians did exactly this. Here is a passage from the Acts of the Apostles in which one can see how action spoke louder than words:
Acts 4: 32-35
All the believers were one in heart and mind. No one claimed that any of his possessions was his own, but they shared everything they had. With great power the apostles continued to testify to the resurrection of the Lord Jesus, and much grace was upon them all. There were no needy persons among them. For from time to time those who owned lands or houses sold them, brought the money from the sales and put it at the apostles' feet, and it was distributed to anyone as he had need.

My closing thoughts on the word ‘mission’ come from the commercial world. All of us know that each company, each firm has a ‘mission statement’ or a ‘vision statement’. The commercial world is very clear as to what its ‘mission’ is. It pursues this mission with unparalleled passion and zeal. How great it would be if we can match up to this passion and zeal in living out our ‘Mission’.
Mission Sunday today, especially in the context of the world standing in need of New Evangelisation, is a call, a challenge to all of us. We begin this ‘Mission’ from within. We need to believe that each of us is a gift sent by God to fulfil a specific, unique mission in this world. The second level of ‘Mission’ is the one we owe to our families. We need to share good news in our families as often as possible. All of us may not have the opportunity to preach the good news from a pulpit. But, all of us do have the opportunity to live the good news in our lives.



Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.



இஞ்ஞாயிறை மறைபரப்பு ஞாயிறென்று கொண்டாட திருச்சபை நம்மை அழைக்கிறது. முன்பு இந்த ஞாயிறு விசுவாசப் பரப்புதல் அல்லது வேதபோதக ஞாயிறென்று அழைக்கப்பட்டது. வேதபோதக ஞாயிறு என்றதும் என் மனதில் சிறு வயது எண்ணங்கள் அலை மோதுகின்றன.
சிறு வயதில் வேதபோதக ஞாயிறுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அறிவிப்புக்கள் வெளி வரும். திருத்தந்தையின் உருவம், புனித பேதுரு பசிலிக்காவின் படம் இவைகளைக் கொண்ட சுவரொட்டிகள் கோவிலைச் சுற்றி ஒட்டப்படும். இந்த ஞாயிறையொட்டி விளையாட்டுப் போட்டிகள், பரிசு குலுக்கல்கள் நடத்தப்படும். ஒவ்வொரு பங்கிலும் நிதி திரட்டப்பட்டு, உரோமைக்கு அனுப்பி வைக்கப்படும். வேதபோதக நாடுகளில், மிகக் கடினமானச் சூழ்நிலையில் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குருக்கள், துறவியருக்கு இந்த நிதி அனுப்பப்படும். வேதபோதக, விசுவாசப் பரப்புதல் ஞாயிறென்றால் இவைகளே என் சிறுவயது எண்ணங்களாய் இருந்தன.
இன்று இந்த நாளைப் பற்றி சிந்திக்கும் போது, வேறுபல, வெகுவாக மாறுபட்ட எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்றன. இந்த ஞாயிறைக் குறிக்க நாம் பயன்படுத்தும் Mission Sunday என்ற ஆங்கிலச் சொற்றொடரை அடிப்படையாகக் கொண்டு நம் சிந்தனைகளைப் பகிர்வோம்.

Mission Sunday என்ற ஆங்கிலச் சொற்றொடரை அப்படியே மொழி பெயர்த்தால், 'அனுப்பப்படும் ஞாயிறு' என்று சொல்லலாம். அனுப்பப்படுதல் என்பது அழகான ஓர் எண்ணம்.
"உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது. 'இறைவன் இந்த உலகைக் குறித்து இன்னும் களைப்படையவில்லை' என்பதே அச்செய்தி."
இதைச் சொன்னவர் இந்திய மகாக் கவி இரவீந்திரநாத் தாகூர். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம். ஒரு பரிசாக அனுப்பப்பட்டுள்ளோம். உலக வரலாற்றில், மனித வரலாற்றில் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஓர் இடம் உண்டு. நாம் பிறந்ததற்குத் தனிப்பட்ட ஒரு காரணம் உண்டு. நமக்கேனக் குறிக்கப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்தக் குறிக்கோளை வேறு ஒருவராலும் நிறைவேற்ற முடியாது.
சென்ற மாதம் திருத்தந்தையால் இங்கிலாந்தில் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்ட கர்தினால் நியூமன் எழுதிய ஒரு தியானத்தில் காணப்படும் ஒரு பகுதியைத் திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.
"ஒரு தனிப்பட்டப் பணிக்கென இறைவன் என்னைப் படைத்துள்ளார். வேறு எவருக்கும் அவர் கொடுக்காமல், எனக்கு மட்டுமே அப்பணியைக் கொடுத்துள்ளார்." என்று நியூமன் கூறியுள்ளார்.
கேட்க, பேச, பார்க்க இயலாமல் இருந்தாலும், தன் வாழ்வின் மூலம் சாதனைகளைப் புரிந்து வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ள Helen Kellerம் தாகூர், நியூமன் ஆகியோரின் எண்ணங்களைத் தனக்கே உரிய பாணியில் கூறியுள்ளார்:
"என்னால் இவ்வுலகில் எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஆனாலும், என்னால் ஒரு சிலவற்றைச் செய்ய முடியும். எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்பதற்காக, நான் செய்யக் கூடிய சிலவற்றைச் செய்ய மறுக்க மாட்டேன்."
கடல் மணலைக் கயிறாகத் திரிக்கவோ, வானத்தை வில்லாக வளைக்கவோ நமக்கு அழைப்பு இல்லாமல் போகலாம், அதற்குரிய திறமைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நமக்கென்று மனித வரலாற்றில் தனியிடம் உள்ளது. அதற்காக நாம் அழைக்கப்பட்டுள்ளோம், இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ள பரிசுப் பொருட்கள். பிறரும் பரிசுப் பொருள்கள். அதனால் நாம் அனைவரும் மதிப்பிற்குரியவர்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதொரு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. நம்மால் இயன்றவரை அப்பணியைச் செய்வது நமது பெருமை... நாம் ஒவ்வொருவரும் அவரவர் தனித்துவத்தை உணர்வது, அதன் அடிப்படையில் நம்மை மதித்து, பிறரையும் மதிக்கப் பழகுவது நமக்குத் தரப்பட்டுள்ள முதல் Mission.

வேதபோதக அல்லது மறைபரப்பு ஞாயிறு என்றதும் அது வழக்கமாக குருக்கள், துறவியருக்கென ஒதுக்கப்பட்ட பணி என்று நம்மில் பலர் ஒதுங்கி விடுகிறோம். ஆனால், இந்த நாளை “அனுப்பப்படும் ஞாயிறு” என்று எண்ணிப் பார்த்தால், வேறுபட்ட எண்ணங்கள் மனதில் தோன்றும்.
பிரசங்கம், மறையுரை என்று பீடத்திலிருந்து, அல்லது ஒலிபெருக்கிகள் மூலம் முழங்கினால்தான் இறைவார்த்தையை, நற்செய்தியை, மறையைப் பரப்ப முடியும் என்பது மறைபரப்பின் ஒரு கண்ணோட்டம். Mission என்பதன் முழுமையான கண்ணோட்டம் இது அல்ல. சென்ற ஞாயிறு வாசகங்களில் தரப்பட்ட பவுல் அடியாரின் கூற்று ஒன்று நம் சிந்தனைகளுக்கு உதவும்.
2 திமோ. 4 : 2
"இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் கருத்தாயிரு."
வாய்ப்பு கிடைக்கும் போது, மேடை போட்டு, ஒலிபெருக்கிகள் வைத்து இறைவார்த்தையை உரக்கச் சொல்லலாம். ஆனால், பல நேரங்களில் இப்படிச் சொல்லப்படும் இறைவார்த்தைகள் எவ்வளவு ஆழமான தாக்கங்களை உண்டாக்குகின்றன என்பது கேள்விக் குறியாகிறது. சிறப்பாக, இந்தியாவில் ஏற்படும் மதப் பிரச்சனைகளில் ஒலிபெருக்கிகளுக்கும் ஒரு பங்கு உண்டு என்பது கசப்பான ஓர் உண்மை. மேடையிட்டுக் கூறாமல், சிறு குழுக்களில் பகிரப்படும் இறைவார்த்தையும் பலரது வாழ்வில் தாக்கங்களை உண்டாக்கியுள்ளன.
சிறு குழுக்கள் என்றதும் முதலில் நம் குடும்பங்களை நினைத்துப் பார்க்கலாம். நமது குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தை சிறிது நேரமாவது பகிரப்பட்டால் பல நன்மைகள் விளையும். குடும்பங்களில் நாம் மேற்கொள்ள வேண்டிய மறைபரப்புப் பணி மிகவும் சவால் நிறைந்த ஒரு பணி.
நமது பணிச் சூழல்களில், நண்பர்கள் நடுவில், சிறு குழுக்களில் பகிரப்படும் இறை வார்த்தைகள் ஆழமான தாக்கங்களை உருவாக்குவதை நாம் கண்கூடாகக் காணலாம். Basic Christian Communities என்று இலத்தீன் அமெரிக்காவில், பிலிப்பின்ஸில் உருவான அடிப்படை கிறிஸ்தவக் குழுக்கள் வழியே இறைவனைத் தெரிந்து கொண்டவர்கள், இறைவனிடம் மீண்டும் வந்தவர்கள் பல ஆயிரம் பேர். கடந்த சில ஆண்டுகளாய் இந்தக் குழுக்கள் இந்தியாவிலும் வளர்ந்து வந்துள்ளது மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி.

மேடையிட்டோ, குழுக்களிலோ இறைவார்த்தையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இல்லாத போதும் இறைவார்த்தையை அறிவிக்கச் சொல்கிறார் பவுல் அடியார். வாய் வார்த்தைகளைக் காட்டிலும் வாழ்வினால் நாம் அறிவிக்கும் இறைவார்த்தைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதியும்.
"உன் அயலவர் மீது அன்பு காட்டு" (யோவான் 13:34) என்பதை வார்த்தைகளில் சொல்வது ஒருவகை தாக்கத்தை உண்டாக்கும். அதே வார்த்தைகளை வாழ்ந்து காட்டும்போது, அதன் தாக்கம் இன்னும் ஆழமாக இருக்கும்.
"ஏழு முறையல்ல... எழுபது முறை ஏழு முறை மன்னித்து விடு" (மத்தேயு 18:22) என்று இயேசு விடுத்த சவாலைச் சப்தமாகச் சொல்லிப் புரிய வைக்கலாம். அல்லது தவறிழைக்கும் ஒருவரை ஏழுமுறை எழுபது முறை... அதாவது எந்நேரமும் மன்னிப்பதன் வழியாகவும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறை சாற்றலாம்.
திருச்சபையின் ஆரம்ப காலத்தில் இறை வார்த்தையை, கிறிஸ்துவின் புதிய வழியை வார்த்தைகளால் பறை சாற்றுவதற்குப் பதில், வாழ்வின் வழியாகப் பறை சாற்றியவர்கள் முதல் கிறிஸ்தவர்கள். இந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் அப்போஸ்தலர்களோ, சீடர்களோ, குருக்களோ இல்லை... சாதாரண, எளிய மக்கள். இவர்களது வாழ்வைப் பார்த்து வியந்தவர்கள் அதிகம். அந்த வழியைப் பின்பற்றியவர்கள் அதிகம். திருத்தூதர் பணியின் முதல் சில பிரிவுகளில் இவர்களது வாழ்வைக் குறித்து பல குறிப்புகள் உள்ளன.
திருத்தூதர் பணிகள் 4: 32-35
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை: எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்: அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
திருத்தூதர் பணிகள் 5: 12-14
மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன... மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்.

வாழ்வால் போதித்து வந்த முதல் கிறிஸ்தவர்களின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தவர்கள் பலர். புனித பிரான்சிஸ் அசிசி ஆற்றிய மௌனமான மறையுரையைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். தன் சீடர்களுடன் ஊரைச் சுற்றி அவர் மெளனமாக நடந்ததே அவ்வூர் மக்களுக்கு அரியதொரு மறையுரையானது. அதேபோல், Dr.Albert Schweitzer என்ற புகழ்மிக்க மருத்துவர் ஆப்ரிக்காவில் ஏழைகள் நடுவில் அற்புதமான பணிகள் செய்தவர். அவரை 'நடமாடும் ஒரு மறையுரை' (Walking sermon) என்று சொல்வார்கள்.

இறுதியாக, Mission என்ற சொல்லுக்கு வர்த்தக உலகம் காட்டும் மதிப்பிலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். செல்வம் சேர்ப்பது, இலாபத்தை அதிகரிப்பது என்ற குறிக்கோள்களுக்காக இயங்கும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை உலகறியப் பறைசாற்றும் போது, அந்தக் கொள்கைத் திரட்டிற்கு அவர்கள் அளிக்கும் உயர்ந்ததொரு தலைப்பு என்ன தெரியுமா? Mission Statement, Vision Statement. அவர்கள் தங்கள் சுயநலக் கொள்கைகளை விளக்க இது போன்ற உயர்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது, நாம் ஏன் தயங்க வேண்டும்?

மறைபரப்பு ஞாயிறு, அனுப்பப்படுதல் ஞாயிறு என்பதன் ஆழமான எண்ணங்களை உணர முயல்வோம். உலகில் பிறக்கும் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்டதொரு பணிக்கென அழைக்கப்பட்டுள்ளோம். அனுப்பப்பட்டுள்ளோம். நமது தனித்துவத்தை உணர்ந்து நம்மையும் பிறரையும் மதிக்கக் கற்றுக் கொள்வோம். வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென குறிக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவோம்.
வாய்ப்பு கிடைக்கும்போது, வார்த்தைகளால் வலிமையோடு அறிவிப்போம்.வாய்ப்பு கிடைக்கவில்லையெனில் வாழ்வால் இன்னும் அதிக வலிமையுடன் அறிவிப்போம்.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

21 October, 2010

Rest as I have rested… Love as I have loved… நான் ஓய்வேடுத்ததைப் போல்… நான் அன்பு செய்ததைப் போல்…



Harold Kushner in his book ‘The Lord Is My Shepherd’ recounts an interesting anecdote: “I read of a group of tourists on safari in Africa. They had hired several native porters to carry their supplies while they trekked. After three days, the porters told them that they would have to stop and rest for a day. They were not tired, they explained, but ‘we have walked too far and too fast and now we must wait for our souls to catch up to us.’”
This statement by the native porters may sound pretty strange and even funny at first glance. But, they have a deep meaning. The author of Psalm 23 speaks of the sheep lying down in green pastures and being led by quiet streams of water. These are wonderful imageries of peace and rest. This serenity seems to restore the soul. The suggestion of the African porters as well as the psalmist is very much needed in this fast paced world.

One of the privileges I enjoyed as a college teacher for the past few years was the trust some of my students had in me. Quite a few former students would come back to visit me and, after a bit of warm up chit chat, they would begin to share the problems they face in their profession. One of those problems was the emptiness they would feel on some days. They would say: “Father, when I come home some days I feel very lost and empty. I don’t know what I am doing with my life.” I have discussed this profound sentiment with some of them. What I have discovered in such conversations are these factors:
Almost all the youngsters begin their career with lots of enthusiasm… rather, over enthusiasm. They are not satisfied accomplishing only the tasks assigned to them but voluntarily accept the works of others and try to complete them in quick time… sometimes at lightning speed. Their main focus is to impress the higher-ups favourably. They do not bother about their health, rest, meals, family… even, friends… just work, work and more work.
How long can this go on? If their job is dull drab and monotonously repetitive, then the enthusiasm evaporates after a few months. Fortunately, most of my students are involved in creative jobs. So, their enthusiasm takes a longer time to wane. But, they too are human beings and so other factors begin plaguing them. In my discussions with them, I have found that they feel more lost when they have to compromise on some ethical questions. In other words, when questions of conscience come up, they are more lost.
Following the way of the world, keeping pace with the breakneck speed and the cut-throat competition leaves them high and dry. Many of us know the famous caution given by St Ignatius of Loyola to St Francis Xavier when the latter was pursuing the glory of this world. Ignatius was simply echoing the words of Christ found in all the three synoptic gospels.
Matthew 16: 25-26
For whoever wants to save his life will lose it, but whoever loses his life for me will find it. What good will it be for a man if he gains the whole world, yet forfeits his soul? Or what can a man give in exchange for his soul?
(Also Mark 8: 35-36; Luke 9: 24-25)

When someone does some work with total involvement, we say that they ‘put their heart and soul’ in it. When such works do not bring the expected results, the soul that was put in it does not come back… it probably is lost… like the lamb that gets lost in the desert!
“The world asks so much of us. We give ourselves so totally to our work, to the task of raising our family and running a home, to our volunteer commitments that we often forget to take time to nourish our souls…We lack the wisdom of those native porters, the wisdom to know that we have left our souls behind and we need to stop and let our souls catch up to us… The Bible thought that the need to have God restore our souls was so important that it listed the Sabbath as a day of rest as one of the Ten Commandments, along with the obligation to honour one’s parents and the forbidding of murder and adultery.” (Harold Kushner)

Reading through the passage (Ex. 20: 10-11) that talks of God proposing the Ten Commandments, one thought struck me. The Sabbath day commandment is very unique among all the ten commandments. In all the other commandments it is a simple rule: ‘do this’ or ‘don’t do this’. This is the only commandment where God says ‘do this as I have done’. God has rested from work and therefore we also need to rest.
Exodus 20: 10-11
…the seventh day is a Sabbath to the LORD your God. On it you shall not do any work, neither you, nor your son or daughter, nor your manservant or maidservant, nor your animals, nor the alien within your gates. For in six days the LORD made the heavens and the earth, the sea, and all that is in them, but he rested on the seventh day. Therefore the LORD blessed the Sabbath day and made it holy.

While reading these lines, my mind instinctively went to John’s Gospel where Christ says: “Love one another as I have loved you.” (John 13:34) God and Christ seem to tell us, “Rest as I have rested… Love as I have loved you…” Rest and Love are taught with the most sublime models – God the Father and Christ. Rest and Love – this combination may seem a bit stretched and artificial. But, if we rest for a while and reflect, we shall discover the intrinsic link between resting and loving.
Any rest leaves us refreshed. When problems heap up, one is asked to ‘take a break’ or ‘sleep over it’. Rest can surely help us see things better. In any tough situation, the immediate reaction is panic, anger, irritation, impatience etc… When we take a break and revisit the same situation, control, calmness, clarity and love seem to resurface.

Sometimes we are forced into rest due to various factors. When taken in the right spirit, such forced rest works magic in our life. The whole world had been very relieved with the rescue operation of 33 miners from San Jose mines in Chile. I have shared some of my thoughts about this event in my posting last Sunday (October 17). This forced rest, retreat for those 33 miners underground for 69 days have surely restored their soul and brought God close to their lives. On October 12, when the rescue efforts commenced, the youngest of those miners Jimmy Sanchez, aged 19, sent a message that read like this: “We are actually 34 down here. God is with us and never left us.” Jimmy’s note has created quite a few ripples in the internet world and many youngsters are sharing their views.
Let us learn the art of resting and loving from the supreme models God the Father and Christ. May the Shepherd restore our souls by teaching us how to rest.(If possible kindly re-visit my reflection posted on Sep.08… “Learning to rest… a great art!”)

Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.

ஆப்ரிக்கக் காடுகளில் 'Safari' என்ற சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளப்படும். பலர் இப்பயணங்களை வாகனங்களிலும், ஒரு சிலர் நடைபயணமாகவும் மேற்கொள்வர். நடைபயணமாகச் சென்ற ஒரு சுற்றுலாக் குழுவோடு உள்நாட்டு ஆப்ரிக்கத் தொழிலாளிகள் அவர்களது சுமைகளை எடுத்துக் கொண்டு நடந்தனர். அக்குழுவினர் மூன்று, அல்லது நான்கு நாட்கள் நடந்தபின், அத்தொழிலாளிகள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சுற்றுலாப் பயணிகளிடம், "நாம் இங்கு ஒரு நாள் தங்க வேண்டும்." என்றனர். சுமைகளைச் சுமந்ததால் அதிகம் களைத்துவிட்டனரோ என்று அவர்களை விசாரித்தபோது, அத்தொழிலாளிகள் தந்த பதில் விநோதமாக இருந்தது. "நாங்கள் களைத்துப் போக வில்லை. ஆனால், நமது உடல் வேகமாக இக்காட்டில் நடந்து வந்து விட்டது. நமது ஆன்மா அந்த வேகத்தில் நம்முடன் வரவில்லை. எனவே, ஒரு நாள் இங்கு தங்கினால், நமது ஆன்மாவும் வந்து சேர்ந்துவிடும்." என்றனர் அந்த ஆப்ரிக்கத் தொழிலாளிகள்.
Harold Kushner எழுதியுள்ள ‘The Lord is my Shepherd’ புத்தகத்தில் 23ம் திருப்பாடலின் மூன்றாம் வரியான "He restores my soul" "அவர் என் ஆன்மாவை மீண்டும் எனக்களிக்கிறார்." என்ற வரியை விளக்கும் போது இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்.
ஆப்ரிக்கத் தொழிலாளிகள் சொன்னது சிறிது வேடிக்கையாக, விநோதமாக இருக்கலாம். ஆனால், அதில் உள்ள பொருளை உணர்ந்து கொள்வது நல்லது. வெகு விரைவாக, இராக்கெட் வேகத்தில் செல்லும் இந்த உலகுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கும் நமக்கு, இது போன்ற ஓர் அறிவுரை தேவைதானே. நாம் புத்துயிர் பெறவேண்டும், நமது ஆன்மாவை மீண்டும் பெற வேண்டும் என்று 23ம் திருப்பாடலின் ஆசிரியர் கூறுவதும் இதுதானே.

கல்லூரியில் நான் பணி செய்தபோது, என்னிடம் படித்து முடித்த மாணவர்கள் அவ்வப்போது என்னைச் சந்திக்க வருவார்கள். அவர்களில் பலர் தொலைக்காட்சி, திரைப்படம், விளம்பரம் என்று தொடர்புசாதனத் துறைகளில் பணி செய்பவர்கள். இத்துறைகளில் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் உழைத்தபின், அவர்களில் ஒரு சிலர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு பொதுவான அனுபவம் இது. "Father, இப்பெல்லாம் பல நாட்கள் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, எதையோ தொலைச்சிட்டு வந்ததைப் போல இருக்கு." என்று சொல்வார்கள்.
இப்படி அவர்கள் சொல்லும் போது, அவர்களுடன் இதைப் பற்றி இன்னும் ஆழமாக பேசியிருக்கிறேன். அப்போது ஒரு சில உண்மைகளை நான் கற்றுக் கொண்டேன். எந்த ஒரு துறையிலும் ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் பணியை ஆரம்பிக்கும் போது, ஆர்வம் அவர்களை அதிகம் ஆக்ரமிக்கும். வழி நடத்திச் செல்லும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை விட, அவர்களாகவே பல பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். மேலிடத்தில் உள்ளவர்களின் கவனத்தை நல்ல முறையில் ஈர்க்கவேண்டும் என்று அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இவை. இரவு, பகல், பசி, தூக்கம், உடல் நலம், வீடு, குடும்பம் என்று எதைப் பற்றியும் அதிக அக்கறை கொள்ளாமல் அத்தனை ஈடுபாட்டுடன் உழைப்பார்கள்.

இந்த வேகம், இந்த ஆர்வம், இந்த ஈடுபாடு எத்தனை நாட்கள் இருக்க முடியும்?
இவர்கள் எடுத்துக் கொண்ட பணிகள் வெகு சாதாரணமான வேலைகள், தினம், தினம் செய்யக்கூடிய ஒரே வகையான பணிகள் என்றால், இந்த வேகம் ஈடுபாடு எல்லாம் விரைவில் காய்ந்து விடும், கரைந்து மறைந்து விடும்.
என்னுடைய மாணவர்களில் பலர் கலைநயம் மிக்க, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் என்பதால், இந்த ஈடுபாடு கூடுதல் நாட்கள் நீடிக்கும். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, வருடங்கள் போகப் போக பல்வேறு பிரச்சனைகள் எழும். அந்தப் பிரச்சனைகளை அலசும்போது, அவைகளில் பல பிரச்சனைகள் மனசாட்சி தொடர்பானவைகளாக இருப்பதைக் காணலாம்.
பணி இடங்களில் பல ஆண்டுகள் ஊறிப்போன மூத்தவர்கள் காட்டும் குறுக்கு வழிகள், பிறருடன் எழும் போட்டிகள், அந்தப் போட்டிகளில் வெற்றிபெற மனசாட்சியை அடகு வைத்தல், நேரிய கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான சமரசங்கள், பணத் தொடர்பான பிரச்சனைகள் என்று சிறிது, சிறிதாக மலை போல் குவிந்து விடும் குப்பைகளைக் கண்டு இளையோர் மலைத்து விடுகிறார்கள். அந்தக் குப்பையிலிருந்து எழும் துர்நாற்றம் அவர்களது மூச்சை, அவர்களுக்குள் இருக்கும் மனசாட்சியின் மூச்சை, nephesh என்று சென்ற வாரம் சிந்தித்தோமே அந்த இறைவனின் மூச்சையே நிறுத்தும் போது, இவர்கள் நிலை குலைந்து போகிறார்கள். வழி தடுமாறுகிறார்கள். வீடு திரும்பும் போது, எதையோ பறி கொடுத்ததைப் போல், தொலைத்து விட்டதைப் போல் உணர்கிறார்கள். அவர்கள் முக்கியமாகத் தொலைப்பது அவர்களது மனசாட்சியை, ஆன்மாவை.

இவ்வுலகத்தின் வழிகளுக்கு, வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமெனில் இது போன்ற இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இலோயோலா இஞ்ஞாசியார், பாரிஸ் பல்கலைக் கழகத்தில் உலகப் புகழைத் தேடி ஓடிக் கொண்டிருந்த புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு இந்த ஆபத்தைப் பற்றி எச்சரிக்கை கொடுத்தார் என்ற வரலாறு நம்மில் பலருக்குத் தெரியும். இஞ்ஞாசியார் தன் கற்பனையிலிருந்து இவ்வெச்சரிக்கையைத் தரவில்லை. இயேசு கூறிய எச்சரிக்கையை அவர் எதிரொலித்தார். இயேசு கூறிய இந்த எச்சரிக்கை மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்திகளிலும் காணக்கிடக்கின்றது.
மத்தேயு 16: 25-26
ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
(மாற்கு 8: 35-36; லூக்கா 9: 24-25)

ஆன்மாவை, மனசாட்சியை இழக்காமல் வாழ்ந்த புனித பிரான்சிஸ் சவேரியாரைப் போல இன்னும் பல கோடி புனிதர்கள் நமக்கு வாழ்க்கைப் பாடங்களைத் தந்து சென்றுள்ளனர். அதேபோல், உலகை வெல்வதாய் நினைத்து ஆன்மாவை இழந்து, இறுதியில் தற்கொலையில் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்ட கிளியோபாட்ரா, ராபர்ட் கிளைவ், அடால்ப் ஹிட்லர், போன்றவர்களின் வரலாறும் நமக்குப் பாடமாய் அமைகிறது.

ஒருவர் முழு ஈடுபாட்டுடன் ஒரு பணியைச் செய்வதைக் குறிக்க 'உயிரைக் கொடுத்து வேலை செய்கிறார்' என்று கூறுகிறோம். ஆங்கிலத்தில் 'putting one's heart and soul' என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறோம். அதாவது, ஒருவர் தன் இதயத்தையும், ஆன்மாவையும் தந்து பணி செய்கிறார் என்று சொல்வர். இதைத்தான் குமரகுருபர சுவாமிகள், நீதி நெறி விளக்கம்:52ல் இவ்விதம் கூறியுள்ளார்:
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.

இப்படி எந்நேரமும் இயந்திரகதியில் ஓடும் வாழ்வில் ஆன்மாவை இழக்கும் ஆபத்து உள்ளதென உணர்ந்த இறைவன், ஒய்வுநாளை உண்டாக்கி, அதைப் புனிதமாக்கினார். “நமது உடல் வேகமாக வந்து விட்டது நமது ஆன்மா வந்து சேரும்வரை இங்கு தங்குவோம்” என்று இந்தச் சிந்தனையின் துவக்கத்தில் நாம் குறிப்பிட்ட அந்த ஆப்ரிக்கத் தொழிலாளிகள் சொன்னதையும் இறைவன் நமக்குத் தந்துள்ள இந்த ஒய்வுநாள் கட்டளையுடன் இணைத்துப் பார்க்கலாம்.
கடவுள் தந்த பத்து கட்டளைகளில், தாய் தந்தையை மதித்து நட, கொலை செய்யாதே போன்ற மிக முக்கியமான கட்டளைகளுக்கு இணையாகக் கடவுள் தந்த கட்டளை ஒய்வு நாளை கடைபிடிக்க மறவாதே என்பது. வேறு எந்தக் கட்டளைக்கும் இல்லாத ஒரு தனித்துவம் இந்தக் கட்டளைக்கு மட்டும் உண்டு. வேறு எந்த கட்டளைக்கும் தன்னை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறாத இறைவன், இந்த ஒய்வு நாள் கட்டளையைக் கூறும் போது தன்னையே ஓர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார்.

விடுதலைப் பயணம் 20: 10-11
ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

தான் ஓய்வெடுத்தது போல் நம்மையும் ஓய்வெடுக்க அழைக்கும் இறைவனின் இந்தக் கூற்று நற்செய்தியில் இயேசு சொன்ன மற்றொரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது.
யோவான் நற்செய்தி 13: 34
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

நான் ஓய்வேடுத்ததைப் போல் நீங்களும் ஓய்வெடுங்கள் என்று கூறினார் இறைவன். நான் அன்பு செய்ததைப் போல் நீங்களும் அன்பு செலுத்துங்கள் என்று கூறினார் இயேசு. ஓய்வேடுப்பதையும் அன்பு காட்டுவதையும் இணைத்துப் பார்ப்பது செயற்கையாகத் தெரியலாம். ஆனால், சிறிது நிதானமாக, ஓய்வெடுத்து சிந்தித்தால் இதன் இணைப்பு விளங்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறிது ஒய்வு கிடைக்கும் போது, அந்தச் சூழலைப் பற்றிய தெளிவு கிடைக்கும். முக்கியமாக, பிரச்சனைகள் மத்தியில் நாம் மலைத்துப் போயிருக்கும் நேரத்தில் ஒய்வு கட்டாயம் பல தெளிவுகளை உருவாக்கும். உடலளவில் நாம் எடுக்கும் ஒய்வு உள்ளத்தில் பல விந்தைகளைச் செய்யும்.
சில சமயங்களில் வலுக்கட்டாயமாக நமக்குக் கிடைக்கும் ஓய்வும் நமது வாழ்வின் அவசியமான, அவசியமற்ற உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும். அண்மையில் இந்த உலகமே வியந்து பாராட்டிய சிலே நாட்டு சுரங்க விபத்தில் நடந்ததும் இதுதானே. 69 நாட்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட அந்த 33 தொழிலாளர்களும் இறைவனை அதிகம் நினைத்தனர். இறைவனிடம் நெருங்கி வந்தனர் என்பதற்கு பல சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. அத்தொழிலாளர்களில் மிக இளையவரான 19 வயது நிரம்பிய Jimmy Sanchez என்பவர் அனுப்பிய ஒரு செய்தியில் "இங்கு உண்மையிலேயே 34 பேர் இருக்கிறோம். கடவுள் எங்களை விட்டு எங்கும் செல்லவில்லை. எங்களுடனேயே தங்கி இருக்கிறார்." என்று கூறினார். இந்தச் செய்தி பலரையும், பல வழிகளில் பாதித்துள்ளது. அதிலும் இளையோர் இது குறித்து கணனியில் பல செய்திகள் எழுதி வருகின்றனர்.
ஒய்வு நம் மனதை, உடலை புத்துயிர் பெறச் செய்யும். உயிரைக் கொடுத்து நாம் செய்யும் பணியால் நாம் இழந்த உயிரை, ஆன்மாவை மீண்டும் நமக்குத் தரும் வல்லமை பெற்றது ஒய்வு. இந்த ஒய்வு நேரத்தை நம் குடும்பங்களுடன், அதுவும் குடும்பத்துடன் கூடிவந்து செபிப்பதில் செலவிட்டால், நாம் இழந்த ஆன்மாவை மட்டுமல்ல, நாம் இழந்த நிம்மதி, உடல் நலம், குடும்பப் பாசம் என்று பலவற்றையும் நாம் மீண்டும் கண்டடைய முடியும். "அவர் எனக்குப் புத்துயிர் அளிக்கிறார். என் ஆன்மாவை மீண்டும் எனக்களிக்கிறார்." என்ற 23ம் திருப்பாடலின் வரிகள் நம்மைத் தொடர்ந்து வழி நடத்த வேண்டுவோம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

18 October, 2010

Prayer is the air we breathe, not an oxygen mask… செபம் அபாயச் சங்கு அல்ல. வாழ்வின் ஒரு பங்கு…


Top picture: Juan Carlos Aguilar after he was rescued, with Chilean President Sebastián Piñera. Aguilar's shirt says "In his hand are the depths of the earth…"
Bottom picture: The capsule named ‘Phoenix’.
http://en.wikinews.org/wiki

October 12, 2010. Midnight. Most of Chile was awake with anticipation. At 12.10 a.m. on October 13, a narrow tube like structure emerged out of the rocks and out came Florencio Avalos, a 31 year old miner. His seven year old son and his wife ran to him with tears streaming down their cheeks. Florencio embraced them and kissed them. The whole nation erupted in joy. This cheer and joy continued every hour following this incident. The joy and pride of this nation matched the joy and pride of USA on July 20, 1969 when Neil Armstrong stepped on the moon. Stepping on the moon was surely a great achievement for USA as well as humankind. Equally great was the achievement of Chile in rescuing 33 miners from the copper and gold mines in Atacama region after 69 days.
On August 5, 2010, 33 miners entered their usual shift, 2500 feet below the ground level. A landslide deposited 700,000 tonnes of rock to block the passage. All the 33 miners were literally buried alive. Efforts at contacting them failed and hope began to dwindle. After 17 days, on August 22, they were located and a note saying that all the 33 were alive was sent through a hole. This itself can be considered a miracle. Initial calculations predicted that it would take anywhere between 3 to 4 months to rescue the miners. So, the families were reconciled to be united to their loved ones for Christmas. The continual efforts bore fruit and all the 33 miners were saved in half the time predicted earlier.

The rescue operation in Chile has special significance to our liturgical readings today, especially the first reading from Exodus (17: 8-13) and the Gospel passage from Luke (18: 1-8). Both these readings speak of the role of prayer in our lives.
Here is an extract from the article in Wikipedia titled: 2010 Copiapó mining accident.
Religious activities of trapped miners
When a shaft was completed to provide relief for the men, they asked for religious items, including Bibles, crucifixes, rosaries, statues of the Virgin Mary and other saints. Pope Benedict XVI sent each man a rosary which was brought personally to the mine by the archbishop of Santiago, Cardinal, Francisco Javier Errázuriz Ossa. After three weeks in the mine, one man who was civilly married to his wife 25 years earlier asked her to marry him in a sacramental marriage in the Church. They set up a makeshift chapel in the mine, and Mario Gómez, the eldest miner, spiritually counselled his cohorts and led daily prayers. When they were rescued the miners were all wearing similar t-shirts. The T-shirts, sent down by a brother of one of the miners had "Thank you Lord" on the front and "To Him be the glory and honor" on the back. The quotation was taken from the Book of Psalms 95 verse 4: "...in his hands are the depths of the earth."
As one story in the Daily Mail put it "A deep religious faith powered this rescue; miners and families and rescuers alike believe their prayers were answered." Both government representatives and the Chilean public have repeatedly attributed divine providence with keeping the miners alive and the Chilean public has viewed this rescue operation as a miracle. Chile's president Sebastián Piñera stated, "When the first miner emerges safe and sound, I hope all the bells of all the churches of Chile ring out forcefully, with joy and hope. Faith has moved mountains." When Esteban Rojas, one of the miners, stepped out of the rescue device, he immediately knelt on the ground with his hands together in prayer then raised his arms above him in adoration. His wife then wrapped around him a religious tapestry with Mary on it as they hugged and cried. Though most of the trapped miners were Roman Catholic, three were Protestant or Baptist, and two others were converted during the time.
http://en.wikipedia.org/wiki/2010_Copiap%C3%B3_mining_accident

The president of the Chilean Bishops Conference, Bishop Alejandro Goic Karmelic urged the whole nation to undertake fasting and prayer from October 12 when the rescue mission was started. Once the rescue mission was completed, he asked them to continue their prayers of thanksgiving for making Chile a witness to the power of Christ’s Resurrection. The tube like capsule used for bringing the miners to the surface was named ‘phoenix’ to remind people of the legendary bird which rises out of ashes. The whole operation was dedicated to St Lawrence, the patron of miners. The statue of St Lawrence was taken in a procession around the accident site.

Dire needs bring people to their knees, as it brought Moses. Once the needs are fulfilled, do we forget prayer? The answer lies in the passages from Luke’s Gospel for today as well for 17th Sunday in Ordinary Time – Luke 11: 1-13 and Luke 18: 1-8. In both these passages Jesus talks about prayer not as a lofty philosophical treatise, but as simple life stories. Isn’t Christ telling us clearly that prayer should become part of our life and not a matter of intellectual discussion or an antidote used only during emergencies and dire needs? Prayer is the air we breathe, not an oxygen mask!

There are hundreds of stories about prayer. Here is one of them I received via email. It is titled: How much does a prayer weigh?
Louise Redden, a poorly dressed lady with a look of defeat on her face, walked into a grocery store. She approached the owner of the store in a most humble manner and asked if he would let her charge a few groceries. She softly explained that her husband was very ill and unable to work, they had seven children and they needed food. John Longhouse, the grocer, scoffed at her and requested that she leave his store.
Visualizing the family needs, she said: 'Please, sir! I will bring you the money just as soon as I can." John told her he could not give her credit, as she did not have a charge account at his store. Standing beside the counter was a customer who overheard the conversation between the two. The customer walked forward and told the grocer that he would stand good for whatever she needed for her family. The grocer said in a very reluctant voice, "Do you have a grocery list?” Louise replied "Yes sir" "O.K." he said, "put your grocery list on the scales and whatever your grocery list weighs, I will give you that amount in groceries."
Louise, hesitated a moment with a bowed head, then she reached into her purse and took out a piece of paper and scribbled something on it. She then laid the piece of paper on the scale carefully with her head still bowed. The eyes of the grocer and the customer showed amazement when the scales went down and stayed down. The grocer staring at the scales, turned slowly to the customer and said begrudgingly, "I can't believe it."
The customer smiled and the grocer started putting the groceries on the other side of the scales. The scale did not balance so he continued to put more and more groceries on them until the scales would hold no more. The grocer stood there in utter disgust. Finally, he grabbed the piece of paper from the scales and looked at it with greater amazement. It was not a grocery list, it was a prayer which said: "Dear Lord, you know my needs and I am leaving this in your hands." The grocer gave her the groceries that he had gathered and placed on the scales and stood in stunned silence. Louise thanked him and left the store. The customer handed a fifty-dollar bill to John as he said, "It was worth every penny of it." It was sometime later that John Longhouse discovered the scales were broken; therefore, only God knows how much a prayer weighs.

We pray the good Lord to enlighten our hearts and minds to make prayer as an integral part of our lives.





Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.




அண்மையில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு அற்புத நிகழ்ச்சி இது. அக்டோபர் 12 செவ்வாய் நள்ளிரவு. சிலே நாட்டில் மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் வெடித்தது.
சிலே நாட்டின் Atacama என்ற பகுதியில் பாறையில் செய்யப்பட்ட ஒரு துளை வழியே, குழாய் வடிவக் கருவி ஒன்று வெளியே வந்தது. அந்தக் குழாயிலிருந்து Florencio Avalos என்ற 31 வயது இளைஞர் வெளியேறினார். கண்ணீருடன் ஓடி வந்த அவரது 7 வயது மகன் Bairo வையும், தன் மனைவியையும் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தக் காட்சியைக் கண்டு பலரது கண்களில் ஆனந்த கண்ணீர். நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் அதிர்ந்தது.
சரியாக 41 ஆண்டுகளுக்கு முன் 1969, ஜூலை 20ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் காலடி வைத்தபோது உலகமெங்கும் உண்டான மகிழ்ச்சி ஆரவாரத்தை ஒத்திருந்தது இந்த நிகழ்வு. நிலவில் காலடி எடுத்து வைத்ததைப் போல் அவ்வளவு பெரிய சாதனையா இது? ஆம் அன்பர்களே. பூமியை விட்டு மேலெழும்பி வெண்ணிலவில் அடியெடுத்து வைத்தது ஒரு பெரும் சாதனைதான். அதே போல், பூமிக்கடியில் ஏறத்தாழ எழுபது நாட்கள் புதையுண்டிருந்த 33 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரோடு மீட்கப்பட்டனர் என்பதும் ஒரு சாதனைதான்.
சிலே நாட்டுச் சாதனை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் அவற்றின் ஒரு சில விவரங்களை மீண்டும் அசைபோட உங்களை அழைக்கிறேன். இவ்வாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டில் Atacama பகுதியில் 2300 அடி ஆழத்தில் தாமிர, மற்றும் தங்கச் சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு லட்சம் டன் பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்து விட்டன. அதாவது, இந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் அரைமைல் தூரத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பமானது. அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப் போயின. 17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 22ம் தேதி அவர்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையே ஒரு புதுமை என்று பலர் கூறினர். இவ்வாண்டு ஜனவரியில் ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின் மீட்புப் பணி நேரத்தில் இது போன்ற அற்புதமான நிகழ்வுகளைக் கேள்விப்பட்டோம். 16 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட Darline Etienne, 27 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட Evans Monsigrace இவர்கள் எல்லாம் இந்தப் புதுமைப் பட்டியலில் முதலிடங்களை வகிப்பவர்கள்.
உயிரோடு புதைக்கப்பட்ட 33 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த முயற்சிகளின் பலனாக, அக்டோபர் 14 அதிகாலையில் 33 தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வை இவ்வளவு விவரமாகக் கூறுவதற்குக் காரணம் இன்றைய ஞாயிறு வாசகங்களே.

ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த இந்த விபத்து உலகின் கவனத்தைப் பல வழிகளில் ஈர்த்தது. அதிலும் முக்கியமாக, 17 நாட்கள் கழித்து 33 தொழிலாளர்களும் உயிரோடு பூமிக்கடியில் புதைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்த பிறகு, உலகமே இந்த நிகழ்வைத் தொடர்ந்து கவனித்தது. உயிரோடு புதைக்கப்பட்ட இத்தொழிலாளர்களுக்கு உதவிகள் பல வழிகளில் அனுப்பப்பட்டன. உடல் அளவில் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை விட, அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக உதவிகள், செப உதவிகள் ஏராளம்.
செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் கைப்பட ஆசீர்வதித்த செபமாலைகளை இத்தொழிலாளர்களுக்கு அனுப்பி வைத்தார். இத்தொழிலாளர்கள் தாங்கள் அடைபட்டிருந்த இடத்தில் சிறு பீடம் ஒன்றை அமைத்து, செபித்து வந்தனர் என்று செய்திகள் கூறுகின்றன. இதைக் கேள்விப்பட்ட பொது, என் எண்ணங்கள் பழங்கால உரோமைக்கும் இன்னும் பிற நாடுகளுக்கும் சென்றன. அங்கு, அரசுக்குத் தெரியாமல் பூமிக்கடியில், அல்லது பல மறைவிடங்களில் கூடி வந்து செபித்த கிறிஸ்தவர்களை எண்ணிப் பார்த்தேன்.
இந்த 33 தொழிலாளர்களையும் மீட்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட அந்தக் கருவியின் பெயர் Phoenix. சாம்பலாகி ஒன்றுமில்லாமல் போய்விடும் Phoenix என்ற பறவை மீண்டும் சாம்பலிலிருந்து உயிர் பெற்று வரும் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இந்த மீட்புப் பணிக்கு சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித இலாரன்ஸ் பெயர் சூட்டப்பட்டது. புனித இலாரன்ஸ் திரு உருவைத் தாங்கி செப ஊர்வலங்கள் இச்சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 12 முதல் சிலே நாட்டின் பல கோவில்களில் தொடர் செபவழிபாடுகள், முழு இரவு விழிப்புச் செபங்கள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சாதனை முடிந்ததும், அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "இன்று சிலே நாடு உயிர்ப்பின் மகிமைக்குச் சான்று பகர்ந்துள்ளது."

கடுகளவு விசுவாசம் இருந்தால், அந்த விசுவாசத்துடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்து விடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்து விழும் என்றெல்லாம் நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன.
செபத்தின் வல்லமையால் இஸ்ரயேலர்கள் போரில் வெற்றி கொள்வதை விடுதலைப் பயண நூல் இன்றைய முதல் வாசகத்தில் நமக்குக் கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளுக்கும் சிம்மச் சொப்பனமாக இருந்தவர்கள் அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேலர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தனர். இந்தச் செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து, அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச் செய்தது. விடுதலைப் பயண நூலில் சொல்லப்பட்டுள்ள வரிகள் இவை:

விடுதலைப்பயணம் 17: 8-13
பின்னர் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்... மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்: அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக, அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.

விடுதலைப் பயண நூல், லூக்கா நற்செய்தி இரண்டும் இன்று சொல்லித் தரும் பாடம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து செபியுங்கள். அதுவும் மூடப்பட்டக் கதவுக்கு முன் முழந்தாள் படியிட்டு, அந்த முழந்தாள் காப்புக் காய்த்து கடினமாகும் வரை வேண்டுங்கள். இதுதான் நமக்குத் தரப்படும் பாடம், சவால் நிறைந்த ஒரு பாடம்.
இவ்வாண்டு ஜூலை மாதம் 17வது பொதுக்கால ஞாயிறன்று செபிக்கக் கற்றுத் தரும்படி தன்னிடம் கேட்ட சீடர்களுக்கு இயேசு கூறிய உவமை நினைவிலிருக்கலாம். லூக்கா நற்செய்தி 11: 1-13ல் இரவென்றும் பகலென்றும் பாராமல் செபிக்க வேண்டும் என்பதைச் சொல்வதற்கு, தன் நண்பன் வீட்டை இரவில் தட்டி உணவு கேட்கும் ஒருவரைப் பற்றிய உவமையைச் சொன்னார் இயேசு.
இன்று லூக்கா நற்செய்தி 18: 1-8ல் சொல்லப்பட்டுள்ள உவமையும் செபத்தைக் குறித்து ஒரு தெளிவான பாடம், ஒரு சவால். "அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்" என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. ஊழலில் ஊறிப் போன நடுவரிடம் கைம்பெண் ஒருவர் நீதி பெறுகிறார், இலஞ்சம் கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறி கொண்டு பெறுகிறார். நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்துப் பாறையாகிப் போன நடுவரின் மனதைத் தன் தொடர்ந்த செப முயற்சிகளால் தகர்த்து விடுகிறார் அந்தக் கைம்பெண்.
இவ்விரு உவமைகளிலும் செபத்தைப் பற்றி பெரும் உயர்ந்த தத்துவங்களைச் சொல்லாமல், வெகு எளிதான வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறியுள்ளார் இயேசு. செபம் வெறும் அறிவு வாதங்களாய் இல்லாமல், வாழ்வின் ஒரு பகுதியாக வேண்டும் என்று இதை விடத் தெளிவாகச் சொல்ல முடியாது. இல்லையா? செபம் ஆபத்தில் எழுப்பப்படும் அபாய சங்கு அல்ல. அது வாழ்வின் ஒரு பங்கு.

செபத்தைக் குறித்து, செபிப்பதைக் குறித்து பல நூறு கதைகள் உள்ளன. நான் வாசித்து என் மனதில் இடம் பெற்ற ஒரு கதை இது: செபம் எவ்வளவு கனமானது? இது கதையின் தலைப்பு.
ஏழைப் பெண் ஒருவர் மளிகைக் கடைக்குச் சென்றார். பசியில் வாடும் தன் ஏழு குழந்தைகளுக்கு உணவு சமைக்க மளிகைக் கடைக்காரரிடம் கடனுக்குப் பொருட்கள் தரும்படி கேட்டார். கடைக்காரர் மறுத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வேறொருவர், "அந்தப் பெண்ணுக்கு வேண்டியதைக் கொடுங்கள். நான் பணம் தருகிறேன்." என்று உதவி செய்ய முன் வந்தார். வேண்டா வெறுப்புடன் கடைக் காரர் அந்தப் பெண்ணிடம், "ம். என்னென்ன வேண்டும்? பட்டியல் எதுவும் உள்ளதா?" என்று கொஞ்சம் ஏளனமாய்க் கேட்டார். அந்தப் பெண் ஒரு காகிதத்தை எடுத்து, சிறிது நேரம் கண்களை மூடி செபித்தார். பின்னர் அந்தக் காகிதத்தில் எதையோ எழுதி கடைக்காரரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் படித்தக் கடைக்காரர் இன்னும் ஏளனமாய்ச் சிரித்தார். "இறைவா, என் குடும்பத்தின் தேவைகளை நீர் அறிவீர். அவைகளை மட்டும் எனக்குத் தாரும். நீர் தருவதை நான் வாங்கிச் செல்வேன்." என்று அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது. அதைப் படித்தக் கடைக் காரர் மனதில் அந்தப் பெண்ணை இன்னும் அவமானப் படுத்தும் எண்ணம் எழுந்தது. "சரி, இந்தக் காகிதத்தைத் தராசில் வைக்கிறேன். அந்தக் காகித கனத்திற்குச் சமமானப் பொருட்களை நீ பெற்றுக் கொள்ளலாம்." என்று கடைக்காரர் கூறினார்.
அந்தக் காகிதத்தை அவர் தராசில் வைத்ததும், தராசின் முள் காகிதத் துண்டு வைக்கப்பட்ட பக்கம் முற்றிலும் சாய்ந்து நின்றது. இதைக் கண்ட கடைக்காரருக்கு அதிர்ச்சி. மறுபக்கத் தட்டில் அவர் பொருட்களை வைக்க ஆரம்பித்தார். எவ்வளவு பொருட்கள் வைத்தாலும் காகிதம் இருந்த பக்கமே தராசு சாய்ந்திருந்தது. எதிர்பக்க தட்டு முழுவதும் நிறைந்ததும், அந்தப் பொருட்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் கடைக்காரர். அவைகளை நன்றியோடு பெற்றுக் கொண்டார் அந்தப் பெண். அருகில் இருந்தவர் அந்தப் பொருள்களுக்கு உரிய தொகையைச் செலுத்தினார். தான் கண்ட புதுமைக்கு இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம் என்று அவர் கூறினார். அந்தப் பெண் சென்றபின், தராசைப் பார்த்த கடைக்காரர் அது பழுதடைந்திருப்பதை உணர்ந்தார்.
செபம் எவ்வளவு கனமானது என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். செபத்தைக் குறித்து, செபிப்பதைக் குறித்து நமது எண்ணங்களை தெளிவுபடுத்த, உள்ளங்களை உறுதிபடுத்த, செபம் நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற இறைவனிடம் செபிப்போம்.




இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

HE RESTORES MY SOUL. அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.

In The Forest
Photographer: prozac1


We are making progress. Yes, dear friends, after sixteen weeks of reflections, we are at the third verse of Psalm 23… “He restores my soul.” We are not running at the speed of a greyhound nor are we going at a snail’s pace. We are going slow and steady like the tortoise in the race… You see… I am trying to make a point here... a bit artificially, perhaps. Very often in our conversations and in our thinking, we try to explain human qualities making comparisons with animals. In the previous few sentences we have made references to snail, greyhound and tortoise. We also use expressions like: shrewd as a fox, busy as a bee, industrious like an ant… etc. Does a lamb symbolise any quality of the human being? Certainly. Innocence is personified in the lamb. That is why we call Jesus the Lamb of God.
The lamb or the goat plays a significant role in the lives of the Israelites. It is offered as a sacrifice. There is also the interesting ritual of the lamb or the goat being driven to the desert, taking away the sins of the people. Yom Kippur is a special feast among the Jews where reparation for sins is sought. We have this account from the Book of Leviticus:
Lev. 16: 7-10
Then he is to take the two goats and present them before the LORD at the entrance to the Tent of Meeting. He is to cast lots for the two goats—one lot for the LORD and the other for the scapegoat. Aaron shall bring the goat whose lot falls to the LORD and sacrifice it for a sin offering. But the goat chosen by lot as the scapegoat shall be presented alive before the LORD to be used for making atonement by sending it into the desert as a scapegoat.

Poor scapegoat… Once driven into the desert, it can never come back. It has no internal radar like a dog, a cat or a dove to return to familiar territory. Sheep are not very smart. They have a predictable inclination to lose their way. They can be in a pasture with plenty of grass and adequate water and still wander aimlessly until they have nothing to eat or drink. Once lost, they can't find their way back. Many animals seem to have inborn compasses - not so with sheep. Once lost, the shepherds must go and find them.
http://www.nuggetsoftruth.com/a_study_of_psalms_23Red.htm
A goat or a lamb needs a shepherd all the time. The shepherd needs to show the sheep where to eat, where to drink and where to lie down. When all these necessities are fulfilled, the sheep feel very refreshed and rested… restored! Having been a shepherd himself, the author of Psalm 23 knows what he is talking about when he says: He restores my soul!

What is the meaning of ‘restoring the soul’? The idea of refreshment, restoration and rest are given very different meaning by the world, especially the media world. I am sure you must have seen the TV commercials where a young man walks like a zombie to a wash basin in the morning. The music is a drone at the background. The colour on the screen is drab and dull. Once he puts a little bit of toothpaste in his mouth… bang… the whole world changes. The whole place lights up with lots of colour and the music turns pulsating. The toothpaste creates this magic. Similar commercials are also shown for a cup of tea or for a can of soft drink.

All you need is a little toothpaste, a cup of tea, a can of soft drink to refresh your world completely. Many of you may have seen the campaign of one of the leading soft drinks company with the theme: “Every generation refreshes the world. Now it’s your turn.” I was literally fuming when I saw this campaign theme. Look who’s talking about refreshing the world! We know that two of the leading soft drinks giants (monsters?) have sucked out the ground water from so many places where their factories were established. They have ‘refreshed’ the land around the factory making them a desert. When the people of those areas protested against these companies, they just shifted the factory site to another spot to ‘refresh’ another part of the world. This giant MNC talks of “refreshing the world”. What is more painful is that millions of people in the world, especially the youth, support these two companies by being their ardent clients. As against such quick-fix refreshments of the commercial world, the author of Psalm 23 talks of a very different idea when he talks of how the shepherd ‘restores his soul’.

The Hebrew word ‘Nephesh’ is used to indicate ‘soul’ in this verse. The word Nephesh occurs 754 times in the Hebrew Old Testament. This word is variously translated as life, spirit, soul etc. in English. The closest English word to Nephesh is ‘breath’. This breath was hovering over the water as depicted in the creation narrative: “Now the earth was formless and empty, darkness was over the surface of the deep, and the Spirit of God was hovering over the waters.” (Genesis 1: 2)
This same ‘breath’ was instrumental in the creation of human beings. There is a significant difference between how God created human beings and the rest of the world. All the other beings came into existence by a simple command of God ‘let there be’, whereas God created the human being taking extra effort and care: “The LORD God formed the man from the dust of the ground and breathed into his nostrils the breath of life, and the man became a living being.” (Genesis 2: 7) While talking of how human beings received ‘soul’, Kushner underlines this difference and concludes, “It is that little bit of God within each of us that makes us capable of choosing to be good, choosing to be generous, choosing to be forgiving. Only creatures with souls can do that.” (The Lord Is My Shepherd – Harold Kushner)
This soul needs to be constantly restored in us not in the style of the commercial world, but the gentle guidance of the Shepherd! We shall continue to reflect on how the Shepherd restores our soul.


Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.



"அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." திருப்பாடல் 23ன் மூன்றாம் வரியில் நம் சிந்தனைகளை ஆரம்பிக்கிறோம்.

மனிதர்களின் தோற்றத்தை, குணத்தை வர்ணிப்பதற்கு நாம் அடிக்கடி மிருகங்களைப் பயன் படுத்துகிறோம். மாடு மாதிரி உழைப்பவர்கள், நரி போல் தந்திரம் மிக்கவர்கள், புலியைப் போல் வீரம் உள்ளவர்கள், யானையைப் போல, எலியைப் போல, கிளியைப் போல, மானைப் போல, மயிலைப் போல... என்றெல்லாம் பல உருவகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த உருவகங்களில் ஆடுகளுக்கும் இடம் இருக்கிறதா? இருக்கிறது. கள்ளம், கபடமற்ற, ஒரு பாவமும் அறியாத, அப்பாவியான மனிதர்களைச் செம்மறியாட்டிற்கு ஒப்புமையாகச் சொல்கிறோம். இந்த அடிப்படையில் தானே இறைமகன் இயேசுவையே நாம் ஒரு செம்மறி என்று கூறுகிறோம்.

இஸ்ராயலர்கள் வாழ்வில் ஆடுகளுக்கு, செம்மறி ஆடுகளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. பலிகளுக்கென, பாவப் பரிகாரத்திற்கென ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. இஸ்ராயலர்கள் மத்தியில் 'Yom Kippur' என்ற பாவக் கழுவாய் நிறைவேற்றப்படும் நாள் கடைபிடிக்கப்பட்டது. அந்த நாளன்று இஸ்ராயேல் மக்களின் பாவங்களைப் போக்க ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. இதனை விவரிக்கும் லேவியர் நூலின் பகுதியைக் கேட்போம்.
லேவியர் நூல் 16 : 7 - 10
வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும். ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும். ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும். போக்கு ஆடாக விடப்படுவதற்கெனச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கிடாய், பாவக்கழுவாய்க்கெனப் பாலை நிலத்திற்கு அனுப்பப்படுமாறு, ஆண்டவர் திருமுன் உயிருடன் நிறுத்தி வைக்கப்படும்.

பாலை நிலங்களுக்குத் துரத்தி விடப்படும் ஆடுகள் திரும்பி வருவதில்லை. திரும்பி வரத் தெரியாது. அவ்வளவு அப்பாவிகள் அவை. ஒரு நாய் குட்டியையோ, பூனைக் குட்டியையோ வேறு இடத்தில் விட்டு விட்டு வந்தால், அவை திரும்பி வருவதுண்டு. அதே போல், புறாக்களும் பல இடங்களில் சுற்றிப் பறந்தாலும் மீண்டும் கூடு திரும்பிவிடும். திசை அறிந்து, பழகிய இடத்திற்கே திரும்பக் கூடிய திறமை பல மிருகங்கள், பறவைகளுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், செம்மறி ஆடுகளுக்கு, பாவம், இந்தத் திறமை இல்லாததால், அவை வழிமாறிச் செல்லக்கூடிய, காணாமல் போகக்கூடிய வாய்ப்புக்கள் ஆயிரம் உண்டு.
இப்படி வழி தெரியாமல் தவிக்கும், எளிதில் ஏமாறிவிடும், அப்பாவி ஆடுகளுக்கு ஆயன் அவசியம். அதுவும் பசும் புல் வெளியில் அவைகளுக்கு உணவளித்து, இளைப்பாறுதலையும் அளித்து, அமைதியான நீர்நிலைகளில் அவைகளின் தாகத்தைத் தணிக்கச் செய்யும் ஆயன் அவசியம். பசியும், தாகமும் தீர்ந்து, இளைப்பாறுதலும் அடையும் ஆடுகள் புத்துயிர் பெறுவதைத் தான் திருப்பாடல் 23ன் ஆசிரியர் மூன்றாம் வரியில் சொல்கிறார்: "அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்." ஆங்கிலத்தில் இந்த வரி: "He restores my soul". "என் ஆன்மாவை மீண்டும் எனக்களிக்கிறார்." என்பது இதன் பொருள். புத்துயிர் அளிப்பது... ஆன்மாவை மீண்டும் அளிப்பது... பற்றி சிந்திக்கலாம்.

புத்துயிர் பெறுவதென்றால், புத்துணர்ச்சி பெறுவதா? மறு மலர்ச்சி அடைவதா? புத்துணர்வு, மறுமலர்ச்சி இவைகளைத் தருவதற்கு எத்தனையோ மந்திர வித்தைகளை இன்றைய விளம்பர, வியாபார உலகம் காட்டுகிறது.
தூக்க கலக்கத்துடன் பல் துலக்க வருவான் ஓர் இளைஞன். அவன் வாயில் ஒரு குறிப்பிட்ட பற்பசை பட்டதும்... அவனைச் சுற்றி உலகமே விழித்து எழும், பூக்களெல்லாம் அவனைப் பார்த்து கண் சிமிட்டும், அவன் மீது பூமழை பொழியும், பட்டாம் பூச்சிகள் அவனைச் சுற்றிலும் பறக்கும்... அப்பப்பா, இந்த உலகமே அட்டகாசமாய்த் ஆர்ப்பரிக்கும். அத்தனை மந்திர சக்தி படைத்தது அந்த பற்பசை என்று முழங்கும் அந்த விளம்பரம்.
இன்னொரு விளம்பரத்தில் உழைத்து, களைத்து அப்பா அலுவலகத்திலிருந்து திரும்புவார். அவரது ஐந்து வயது மகன் அவரை விளையாட அழைப்பான். அப்பா சக்தி எல்லாம் இழந்து சோபாவில் துவண்டு விழுவார். அந்நேரம் அம்மாவுக்கு ஓர் எண்ணம் பிறக்கும் அவர் சென்று ஒரு குறிப்பிட்ட பழ ரசத்தை எடுத்து வருவார். அல்லது ஒரு குறிப்பிட்ட தேநீரைக் கொடுப்பார். அதைக் குடித்ததும்... அப்பா சூப்பர்மேன் ஆவார். அப்பாவும் குழந்தையாய் மாறி அங்கு ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்...
அன்புள்ளங்களே, வியாபார உலகம், விளம்பர உலகம் தரும் புத்துயிர், அந்த உலகம் தரும் ஆன்மா இதுதான். இது போன்ற வித்தைகள், சுருக்கு வழிகள், நொடிப் பொழுது தீர்வுகள், இவைகள் விளம்பரங்களில் சாத்தியம். உண்மை வாழ்க்கையில் கதையே வேறு. இது போன்ற விளம்பரங்களால் வரும் ஆபத்து என்னவென்றால், வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமே ஒரு நொடியில், ஒரு பொருளால் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பை இந்த விளம்பரங்கள் மனதில் உண்டாக்கி விடுகின்றன.
சிறு வயதில் கதைகளில் கேட்ட அற்புத விளக்கு, மந்திரக் கோல், பறக்கும் கம்பளம் இவைகள் செய்த வித்தைகளை இக்காலத்து பற்பசை, ஷாம்பூ, குளிர்பானங்கள் செய்கின்றன. இந்த உலகம் தரும் புத்துணர்வு, புத்துயிர், ஆன்மா இவைகளுக்கும் திருப்பாடலின் ஆசிரியர் சொல்லும் புத்துயிர், ஆன்மா இவைகளுக்கும் வேறுபாடுகள் ஏராளம். "என் ஆன்மாவை மீண்டும் எனக்களிக்கிறார்." என்ற வரியில் உள்ள ஆழம் மிக அதிகம்.

எபிரேய மொழியில் ஆன்மாவைக் குறிக்க "Nephesh" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல் பழைய ஏற்பாட்டில் மட்டும் 754 முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எபிரேயச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் Life, Spirit, Soul என்று பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழிலும் ஆவி, ஆன்மா, உயிர் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Nephesh என்ற சொல்லுக்கு மிக நெருங்கிய சொல் "மூச்சு" - "Breath". விவிலியத்தில் இந்தச் சொல் தொடக்க நூலில் முதல் இரு அதிகாரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தொடக்க நூல் 1: 2
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
இரண்டாம் அதிகாரத்தில் மனிதனைப் படைக்கும் போது, இந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதப் படைப்பில் ஓர் அழகிய எண்ணம் இந்த அதிகாரத்தில் வெளியாகிறது. உலகமனைத்தையும், எல்லா உயிரினங்களையும் கடவுள் படைத்ததற்கும் மனிதனைப் படைத்ததற்கும் பெரும் வேறுபாடு உண்டு. எல்லாவற்றையும் தன் ஒரு சொல்லால் படைக்கிறார் கடவுள். "உண்டாகட்டும்" என்று அவர் சொன்னதும் அவை உண்டாயின. மனிதனைப் படைக்கும் போது என்ன நடந்தது? இதோ தொடக்க நூலின் வரிகள்:
தொடக்க நூல் 2: 7
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.
மனிதனைப் படைக்க இறைவன் தனி முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அதோடு கூட தன் மூச்சுக் காற்றையும் கொடுக்க வேண்டியிருந்தது. துவக்கத்தில் நீர்த்திரளின் மீது அசைந்தாடிய ஆவியைக் குறிப்பிடும் போதும், கடவுள் மனிதன் மீது ஊதிய மூச்சுக் காற்றைக் குறிப்பிடும் போதும் 'Nephesh' என்ற எபிரேயச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே சொல் திருப்பாடல் 23ன் மூன்றாம் வரியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனக்குப் புத்துயிர் அளிப்பார்... ஆன்மாவை எனக்களிப்பார் என்று ஆசிரியர் கூறும்போது, மீண்டும் தான் புதுவிதமாய் படைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை, வேண்டுதலைத் தெரிவிக்கிறார்.

உலகில் மிகவும் பிரபலமான ஒரு குளிர் பான நிறுவனம் 2009ம் ஆண்டிலும் இவ்வாண்டிலும் புதியதொரு விளம்பர வரிசையை ஆரம்பித்தது. அந்த வரிசையின் மையக் கருத்து: "Every generation refreshes the world. Now it's your turn." அதாவது, “ஒவ்வொரு தலைமுறையும் உலகத்தைப் புதுப்பிக்கிறது. இப்போது, உங்கள் முறை.”
இந்தக் குளிர் பான நிறுவனமும் வேறொரு குளிர் பான நிறுவனமும் உலகின் பல நாடுகளில் நிலத்தடி நீர் அல்லது நதி நீர் அதிகம் உள்ள பகுதிகளில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து, அப்பகுதியில் உள்ள தண்ணீரை எல்லாம் முற்றிலும் உறுஞ்சி எடுத்து விட்டு, அப்பகுதியை ஒரு பாலை நிலமாக மாற்றி விட்டு, வேறொரு இடத்திற்குத் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கச் சென்றுவிடுவார்கள்.
உலகை இவ்வளவு தூரம் பாழடையச் செய்யும் இவர்கள் உலகத்தைப் புதுப்பிப்பதைப் பற்றி பேசுவது வேதனையாக உள்ளது. அவர்களது புதுப்பிக்கும் சக்தியை நம்பி, மக்கள், சிறப்பாக இளையோர் இன்னும் இந்தப் பானங்களை ஆதரிப்பதைப் பார்க்கும் போது வேதனை இன்னும் அதிகமாகிறது. இவர்கள் உருவாக்கிய பாலை வனங்களை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற துணிச்சலில் இந்த விளம்பர வரிகளைச் சொல்கிறார்கள்.

உலகத்தை, இயற்கையை, ஒவ்வொரு தலைமுறையை, தனிப்பட்ட மனிதர்களை, அவர்களது உயிரை, ஆன்மாவைப் புதுப்பிக்க வல்லவர், புத்துயிர் ஊட்ட வல்லவர் ஆயனாம் இறைவன் ஒருவரே. "அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்." "He restores my soul". "என் ஆன்மாவை மீண்டும் எனக்களிக்கிறார்."




இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org