03 October, 2015

What God United…கடவுள் இணைத்ததை...

Divorce – going my way
www.coffmanfamilylaw.com

27th Sunday in Ordinary Time

October 4, this Sunday, the Synod on the theme of the Family has begun in Vatican. 270 bishops from across the globe, 75 lay and religious participants, and 14 representatives from other Christian Churches are attending the Synod. Among the lay persons, 18 couples from various countries around the world have been specially invited by Pope Francis to attend the Synod. Among those Synod participants there are 30 women, including religious sisters, married couples and professional women working in different areas of family ministry. It is a very healthy sign that the Synod on the ‘Family’ has so many lay participants – especially family members.
‘Family’ has been the theme of the extraordinary Synod that took place last year in Vatican. This theme is again taken up for further, deeper discussion in this Synod. “The Vocation and Mission of the Family in the Church and the Contemporary World” is the theme chosen for this Synod. On this day, it is a God-sent sign that we have the liturgical readings from Genesis (Gn. 2:18-24) and the Gospel of Mark (Mk. 10: 2-16) presenting the theme of family relationships, especially the strong bond that exists, or, should exist between man and wife.

There is a humorous story that quite a few priests use during a homily for a Wedding Mass. A young man went to meet the Parish Priest (PP) to fix the date for his wedding. The PP was a bit curious to find out whether the young man knew his catechism well. So, he put forth a question: “Did Jesus say anything about marriage? If so, what did He say?” The young man thought for a while and brightened up. He said, “Yes, Father, I know what Jesus said about marriage.” The PP was eagerly awaiting what the young man would say. The young man went on: “Jesus said: ‘Father, forgive them; they know not what they do.’”

Jokes apart… this story puts forth some serious questions to us. Do couples know what they are doing when getting married? If so, what do they know? What do they know not? In most marriages, qualification, job, salary etc. are well known and thoroughly discussed. In countries like India, clear ‘business agreements’ are drawn in the name of ‘dowry’. But, knowledge of the qualities of both the partners is given the least importance. Sometimes, they are ignored. Most of the problems in married life come from lack of understanding between partners. This lack leads to separation and divorce. Divorce is the question raised by the Pharisees to Jesus. They presented divorce more like a trade practice, where a product – the woman – is discarded or replaced! To understand this mind-set of the Pharisees, we need to see the Jewish understanding of wedding.

The ancient Jewish term for marriage was ‘kiddushin’, a term that meant sanctification or consecration. Ordinarily, ‘kiddushin’ signified the husband’s absolute consecration to his wife and of the wife to her husband. Thus the Jews had a high ideal of marriage and their rabbis taught: “the very altar sheds tears when a man divorces the wife of his youth.”  But their practice was far from that ideal, and divorce was common and easy. The wife was considered to be a husband's property with no legal rights whatsoever. So Moses commanded the men at least to give the woman they were abandoning, a certificate of divorce which stated: "She is not my wife and I am not her husband."  He would give this paper to his wife and tell her to leave.  They were then legally divorced. That way she would at least be free to remarry. Without that certificate, technically, she was still the property of her former husband. So Moses was trying, in a small way, to give women some protection.
There were two interpretations prevalent in Jewish theological schools concerning the Mosaic Law on divorce by which Moses allowed divorce when the husband found “some indecency” in his wife.  "When a man, after marrying a woman and having relations with her, is later displeased with her because he finds in her something indecent, he writes out a bill of divorce and hands it to her, thus dismissing her from his house” (Deuteronomy 24:1).  The Shammai School interpreted “indecency” as adultery, while the Hillel School interpreted it as anything which the husband did not like in his wife’s word, behavior, actions, or even her appearance. (Prepared by Fr. Antony Kadavil and published in the CBCI Website)

One of the leading dailies in India, Times of India, published an article enlisting some of the silliest reasons for divorce. Here is an excerpt from this article:
If you think reasons for divorce have to be serious enough, like infidelity or lack of compatibility, think again. Gurgaon couples are divorcing over bad breath and snoring too!
Recently, a woman in Kuwait filed for divorce from her husband because he insisted on 'squeezing the toothpaste tube from the middle'. Even in Gurgaon, it isn't just predictable reasons like infidelity or domestic violence or career issues that lead to couples filing for divorces.

Against this almost farcical way of looking at married life, we also hear stories of couples who have successfully completed 50, 60 or 70 years of happy married life.
“The secret of my success in my married life and in my business is the same”, said, Henry Ford on the 50th anniversary of his wedding, “I don’t change models every now and then; instead I stick on to one and try to improve it”.
Percy and Florence Arrowsmith married on June 1, 1925 and celebrated their 80th anniversary on June 1, 2005 (A Guinness World Record). "I think we're very blessed," Florence, 100, told the BBC. "We still love one another, that's the most important part." Asked for the secret of their long marriage, Florence said, “You must never be afraid to say ‘sorry’. You must never go to sleep bad friends,” Florence's husband Percy, 105, said his secret to marital bliss was just two words: "Yes, dear." (Copyright 2005 Reuters Limited)

Let us bring all our families to God – healthy families, that they may be further strengthened in family bonds; and broken families, that the Good Lord will heal the married couples and family members so that they are able to renew their family bonds!
Let us pray in a special way for the members of the ‘Synod on Family’ who will be discussing very important issues of family life for the next three weeks, that they may be guided by the Holy Spirit!

Divorce

பொதுக்காலம் 27ம் ஞாயிறு

அக்டோபர் 4, இஞ்ஞாயிறு, ஆயர்களின் 14வது பொது மாமன்றம் வத்திக்கானில் துவங்குகிறது. அக்டோபர் 25 முடிய நடைபெறும் மாமன்றத்திற்கு, "திரு அவையிலும், இன்றைய உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும்" என்பது, மையக் கருத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 360 பேர் பங்கேற்கும் இம்மாமன்றத்தில், திருத்தந்தையின் சிறப்பான அழைப்பை ஏற்று, உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும், 18 தம்பதியர் உட்பட, 51 பொதுநிலையினர் கலந்துகொள்கின்றனர்.
திருஅவை என்றால், இறைமக்கள் என்பதும், திருஅவையி்ன் அடித்தளம் குடும்பங்கள் என்பதும், அண்மைய ஆண்டுகளில் சக்திவாய்ந்த முறையில் உணரப்படும் உண்மை. இந்த உண்மையை ஆழப்படுத்த, வத்திக்கானில் இஞ்ஞாயிறு முதல் ஆரம்பமாகும் ஆயர்கள் பொது மாமன்றம், பயனுள்ள பரிமாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்று இறைவனிடம் உருக்கமாக வேண்டுவோம்.

குடும்பத்தை மையப்படுத்தி நடைபெறும் ஆயர்கள் பொது மாமன்றம் துவங்கும் இந்த ஞாயிறன்று, திருமணத்தை மையப்படுத்தி நமது ஞாயிறு வாசகங்கள் அமைந்திருப்பது, இறைவன் நமக்குக் காட்டும் ஓர் அருள் அடையாளமாகக் கருதலாம்.
அருள்பணியாளனான எனக்கு, திருமணம், குடும்பம் இவற்றைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது என்று, எனக்குள், அவ்வப்போது கேள்வி எழுவதுண்டு. நானும் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் என்பதும், என் உடன்பிறந்தோர் குடும்ப வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்பதும், எனக்கு இந்தத் தகுதியைத் தந்துள்ளதாக, நான் எனக்கே சமாதானம் சொல்லிக்கொள்வேன். அந்தத் தகுதியின் அடிப்படையில், திருமணம், குடும்பம் இவற்றைப்பற்றி என் எண்ணங்களை உங்கள் முன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

திருமணத்திற்கு நாள் குறிக்க, ஓர் இளைஞன், பங்குத்தந்தையைத் தேடிச் சென்றார்.  பொதுவாக, கிறிஸ்தவத் திருமணங்களுக்கு முன்னால், மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் கிறிஸ்தவ மறைகல்வி எவ்வளவு தெரிந்திருக்கிறதென பங்குத்தந்தை சோதிப்பார். எனவே, திருமணத் தேதியைக் குறிக்க வந்த இளைஞனிடம், பங்குத்தந்தை, இயேசு, திருமணத்தைப்பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" என்று கேட்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த அவ்விளைஞன், "ம்.. சொல்லியிருக்கார் சாமி" என்று கூறவே, பங்குத்தந்தை, "என்ன சொல்லியிருக்கிறார்?" என்று அடுத்தக் கேள்வியைத் தொடுத்தார். அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலோடு பங்குத் தந்தை காத்திருந்தார். இளைஞன், சிறிதும் தயக்கமின்றி, “‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்" என்று பெருமையுடன் சொல்லி முடித்தார். பங்குத்தந்தை அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்.

வேடிக்கைத் துணுக்குகள் சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் உதவும் என்பதை நாம் மறுக்க இயலாது. குடும்ப வாழ்வின் அடிப்படையான திருமணத்தை அறிந்து செய்கிறோமா? அறியாமல் செய்கிறோமா? எவற்றையெல்லாம் அறிந்து செய்கிறோம்? எவற்றையெல்லாம் அறியாமல் செய்கிறோம்? இவை, நல்ல கேள்விகள்...
குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம் இவையனைத்தும் பொருந்தி வருகின்றனவா என்று ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்கிறோம். அடுத்ததாக, படிப்பு, தொழில், சம்பளம், சொத்துக்கள் என்று ஒரு நீண்ட கணக்கு. எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று ஒரு வியாபார ஒப்பந்தம் செய்கிறோம்.

இந்த ஆராய்ச்சிகளுக்கு நாம் செலவிடும் நேரம், ஏற்றுக்கொள்ளக்கூடியது தானா? இத்தனைப் பொருத்தங்களும் பார்த்து நடத்திவைக்கப்படும் திருமணங்கள் வெற்றிகரமாக அமைகின்றனவா? அப்படி அமையாவிட்டால், ஒருவர் ஒருவரைச் சுட்டிக்காட்டும் படலம் ஆரம்பமாகும். திருமண வாழ்வுக்கு முன்னேற்பாடாக எதை நாம் அறிய வேண்டும்?
பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. "கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம். காதலுக்கு மனப் பொருத்தம் அவசியம்." மனப் பொருத்தம் நம்மில் எத்தனைப் பேர் பார்க்கிறோம்? இனம், குலம், மதம், பணம் என்று எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கும் நாம், குணம், மனம் இவற்றின் பொருத்தம் பார்ப்பது, மிகவும் அரிது. மனம், குணம் இவை பொருந்தவில்லை என்றால், போகப் போகச் சரியாகிவிடும் என்று, நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். மனம், குணம் இவற்றில் என்னதான் பொருத்தம் பார்த்தாலும், நாளுக்கு நாள் மாறக்கூடிய இவற்றிற்கு என்ன உத்தரவாதம்? மனம், குணம் இவற்றைப் புரிந்துகொண்டு, பல ஆண்டுகள் பழகியபின் மேற்கொள்ளப்படும் காதல் திருமணங்களில் கூட, இந்த உத்தரவாதம் இல்லையே.

உத்தரவாதத்தைப் பற்றி பேசும்போது, மற்றோர் எண்ணம் எழுகிறது. பொருட்களை வாங்கும்போது உத்தரவாதம் பார்த்து வாங்குகிறோம். தேர்ந்தெடுத்தப் பொருள் சரியில்லை என்றால், திருப்பிக் கொடுத்துவிட்டு, வேறு ஒன்று வாங்கி வருகிறோம். திருமண உறவில், வாழ்வில் இப்படி மாற்றமுடியுமா? இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்திக்குப் பின்னணி.
பரிசேயர் கேட்கும் கேள்வி இது: "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" மனைவி ஏதோ ஒரு பொருள் போலவும், அந்தப் பொருளை ஆண்மகன் திருப்பிக் கொடுப்பது போலவும், இந்தக் கேள்வியின் தொனி அமைந்துள்ளது!

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ள, இஸ்ரயேல் சமுதாயத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிலவிய உறவைப் புரிந்துகொள்ளவேண்டும். யூதப் பாரம்பரியத்தில் திருமணம் ஓர் உயர்ந்த அர்ச்சிப்பு என்ற எண்ணம் இருந்தது. இதைக் குறித்து அறிவுரைகள் வழங்கிய மதத் தலைவர்கள், "திருமண முறிவு நிகழும்போது, கோவில் பீடமே கண்ணீர் வடிக்கும்" என்ற பாணியில் பேசினர். ஆனால், அந்த உன்னத இலட்சியம், நடைமுறைக்கு வந்தபோது, உருக்குலைந்து போனது. 
திருமண ஒப்பந்தத்தின் விளைவாக, மனைவி, கணவனின் உடைமைப் பொருளாகக் கருதப்பட்டார். பெண்ணின் உரிமையும், சுதந்திரமும் பறிபோயின.
மோசே தன் சட்டத்தின் வழியே இந்த அநீதியை ஓரளவு குறைக்க முயன்றார். மனைவியை விலக்கும்போது, அந்தப் பெண் மீண்டும் தன் உரிமைகளைப் பெறுவதற்கும், மறுமணம் செய்வதற்கும் ஏற்றவாறு, 'மணவிலக்குச் சான்றிதழ்' வழங்கச் சொன்னார். இதையே நாம் இணைச்சட்ட நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:
இணைச்சட்டம் 24 1,2
ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள்.

'அருவருக்கத்தக்க செயல்' என்று மோசே குறிப்பிட்டதை, பல வழிகளில் பொருள் கொண்டனர், மதத் தலைவர்கள். ஒரு பகுதியினர், இதற்கு, 'விபச்சாரம்' என்று பொருள் கொண்டனர். மற்றொரு பகுதியினரோ, பெண்ணின் தோற்றம், அவர் சமைக்கும் பாங்கு போன்றவை சரியில்லை என்றாலும், அவரை விலக்கிவிடலாம் என்று அறிவுரை கூறினர்.
இன்றைய உலகிலும் மணமுறிவு என்பது மிக, மிக சிறு காரணங்களால் உருவாவதை அவ்வப்போது செய்திகளாகக் கேட்டு வருகிறோம். மணமுறிவுக்காக நீதி மன்றத்தில் விண்ணப்பித்திருந்த தம்பதியரிடையே, இந்தியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று ஆய்வு நடத்தியது. மணமுறிவுக்கு அவர்கள் தந்த காரணங்கள் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தன.
"நான் செல்லும் விருந்துகளுக்கு என் மனைவி வருவதில்லை" என்று ஆணும், "நான் பொருள்கள் வாங்கச் செல்லும்போது, என் கணவன் உடன் வருவதில்லை" என்று பெண்ணும் சொல்லும் காரணம் துவங்கி, குறட்டை விடுதல், சாப்பாட்டுப் பழக்கங்கள் போன்ற விளையாட்டான காரணங்களும், ஒரு சில விபரீதமான காரணங்களும் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளன.
வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், மனைவி மணமுறிவுக்கு அளித்த காரணம், நம்பமுடியாத அளவு 'சில்லறைத் தனமாக' இருந்தது: "கணவன் எப்போதும் பற்பசையை எடுக்கும்போது, பற்பசை குழாயின் நடுவிலேயே அழுத்தி எடுக்கிறார்"  என்ற காரணத்தைச்  சொல்லி மணமுறிவுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு நேர் மாறாக, அன்றைய கால திருமணங்கள் அமைந்திருந்ததைப் பற்றி கதைகள் சொல்லப்பட்டுள்ளன. கார்களை உருவாக்கும் Ford நிறுவனத்தின் உரிமையாளர், ஹென்றி ஃஃபோர்ட் அவர்கள், தன் திருமண வாழ்வில் 50வது ஆண்டை நிறைவு செய்தவேளையில், அவரிடம், "உங்கள் திருமண வாழ்வின் வெற்றிக்குக் காரணம் என்ன?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் தந்ததாகச் சொல்லப்படும் பதில் இது:  என் திருமண வாழ்வும், என் கார் நிறுவனமும் வெற்றி அடைந்ததற்கு ஒரே காரணம்தான் உள்ளது. நான் அடிக்கடி காரை மாற்றுவது கிடையாது. உள்ள காரை இன்னும் திறம்படச் செயலாற்றும் வழிகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சி வைத்தியம் தந்து ஆழமான உண்மைகளை சொல்லித் தருவது, இயேசுவுக்குக் கைவந்த கலை என்பதை நாம் அறிவோம். திருமணத்தின் புனிதத்தை உணராமல், பெண்ணை ஒரு பொருளெனக் கருதிய பரிசேயர்களுக்கு இயேசு ஓர் அதிர்ச்சி வைத்தியம் தந்திருப்பார் என்பது என் கணிப்பு. அந்த வைத்தியத்திற்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகள் இவ்வாறு இருந்திருக்கலாம்: "கணவன் மனைவியை விலக்கி விடுவது முறையா என்று கேட்கிறீர்கள். சரி! மனைவி கணவனை விலக்கி விடுவது முறையா என்று நான் கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?" இப்படி இயேசு கேட்டிருந்தால், அவர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.
ஆண் பெண் உறவை இயேசு வித்தியாசமாகச் சிந்தித்திருப்பார் என்பதை, மற்றொரு நிகழ்வின் வழியாகவும் நாம் எண்ணிப் பார்க்கலாம். யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இந்த சம்பவத்தில், (யோவான் 8: 1-11) விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, இயேசுவுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர், பரிசேயரும், மதத் தலைவர்களும். அவர்கள் சொல்லும் வார்த்தைகள்: "இப்பெண், விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டவள். இவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்?" என்பன. அவர்களுக்கும் இயேசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்க வேண்டும். "விபச்சாரத்தில் கையும், களவுமாகப் பிடிபட்டவள் என்று சொல்கிறீர்கள், அந்த ஆண் எங்கே?" என்று கேட்டு, அவர்களைச் சங்கடத்தில் வாயடைக்கச் செய்திருக்கலாம். மாறாக, இயேசு குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர் பாவங்களைத்தான் அவர் எழுதிக் கொண்டிருந்தார் என்று ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது மௌனத்தைக் கலைக்க அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்றதால், "உங்களில் பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும்." என்றார். சரியான நெத்தியடி அது!

இன்றைய நற்செய்தியிலும் சீடர்களுடைய கேள்வியில் இருந்த தவறான மதிப்பீடுகள், முரண்பாடுகள் இவற்றை நேரடியாகச் சொல்லாமல், "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம்" என்று ஆணித்தரமாய் சொல்கிறார், இயேசு.
இந்த உண்மையை மட்டும் இந்த உலகம் உணர்ந்தால்...
இந்த உண்மையின் ஆழத்தை மட்டும் இந்த உலகம் மீண்டும் மீண்டும் அசை போட்டால்...
இந்த உண்மையின் ஆழத்தை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடிந்தால்...
அப்படி புரிந்து கொள்வதன் மூலம், இவ்வுண்மையை மனதார ஏற்றுக் கொள்ள முயன்றால்...
ஆண்-பெண் உறவுகள் எவ்வளவோ நலமுடன், சக்தியுடன் வளரும். திருமண வாழ்வின் பிரச்சனைகள் தீரும்.
ஆணா, பெண்ணா, நீயா, நானா,,, யார் பெரியவர் என்ற கேள்வியை எழுப்பாமல், இருவரும் இணை என்று உணரும் போது, வாழ்க்கைப் பிரச்சனைகள், சிறப்பாக, திருமண வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வழியுண்டு.

யார் பெரியவர் என்று போன வார நற்செய்தியில் கேள்வி எழுப்பிய சீடர்கள் மத்தியில் இயேசு ஒரு குழந்தையை வைத்தார். இந்த வார நற்செய்தியிலும், இயேசு "குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். இறையாட்சி அவர்களதே" என்கிறார்.
இந்த மூன்று வாரங்களாய் குழந்தைகளிடமிருந்து பாடங்கள் கற்று கொள்ள இயேசு தொடர்ந்து கூறி வருகிறார்.
வாழ்க்கையின் பிரச்சனைகளைச் சமாளிக்க, வளர்ந்துவிட்ட நமக்கு தெயர்யவில்லை என்றால், குழந்தைகளிடம் பாடங்கள் கற்றுக்கொள்ளலாமே!


No comments:

Post a Comment