"Lord, that I may see"
30th Sunday in
Ordinary Time
The Synod
on the theme of the Family which took place in the Vatican for the past three weeks
has come to a conclusion. 270 bishops from across the globe, 75 lay and
religious participants, and 14 representatives from other Christian Churches
attended the Synod. Among the lay persons, 18 couples from various countries
around the world had participated in the Synod on a special invitation from Pope
Francis. It was a very healthy sign that the Synod on the ‘Family’ had so many
lay participants – especially family members.
‘Family’
has been the theme of the extraordinary Synod that took place last year in Vatican .
This theme was again taken up for further, deeper discussion in this Synod. “The
Vocation and Mission
of the Family in the Church and the Contemporary World” was the theme
chosen for this Synod.
We know
that the family is the nucleus that determines how the society at large,
including the Church, is shaped. Instead of talking about the problems that exist
in families, it would be helpful how we can go forward to make family life more
meaningful! Today’s Gospel gives us two directions in which families and the
society at large can move forward in meaningful ways. They are: “Calling by name” and “Having proper perspective”.
These were the key ideas that crossed my mind when I read today’s Gospel (Mark
10: 46-52). These two ideas are inter-linked. Calling by name gives the basic
respect due to a person. But, many a time this basic respect is not given
because of our refusal to have proper perspective – our refusal to see!
All the
three synoptic gospels record the event of Jesus curing a blind person as the
final miracle before the Passion. It looks as if Jesus was making a final
appeal to those around him that they may see better! Only in Mark, the visually
challenged person is given an identity - Bartimaeus the son of Timaeus.
Usually, in the gospel miracles of curing, the patients are mentioned by
general terms: leprosy patient, one possessed, the paralytic, the deaf and mute
etc… This is the only miracle where the patient, and that too a blind beggar,
is given a proper name. (This reminds us of the only parable where Jesus
mentions one of the characters by name – Lazarus, once again a beggar!) This
gives us an opportunity to reflect on ‘being called by name’. By calling
someone by name, that person who is usually looked upon as a thing, a
furniture… blossoms into a PERSON!
All of us
were born into this world as a mere number – the 304th child in the hospital,
or the fifth child in the family etc. The name given to us changes us from a
number to a unique person. Our name is an identity we carry life-long. This
identity is precious, provided our names are cherished by people around us. But
for many of us, this identity gets twisted, mangled, tarnished, broken,
shattered… So, there are two sides to this coin called ‘calling by name’.
First
the bright side of the coin: In the medical profession, the person who becomes a doctor, is often
called by the title ‘doctor’ than by the name. The same goes for teacher,
professor, police inspector etc… These professional titles almost replace the
names of the individual. Such practices are followed in religious circles too.
The titles - Father, Brother, Sister, My Lord, Your Grace… All these titles can
make one forget one’s name. I guess the identity of the profession is so
respectful that these persons do not mind losing the identity they acquired at
birth – the identity of their own names.
Now, the
darker side of the coin: How do we call those who do menial services like sweeping the streets,
mending shoes, cleaning vessels and clothes in our houses? Are they called by
their ‘profession’? Do we consider these works as ‘profession’ at all? Do we
call these individuals by their names? Do we take the effort to know the names
of these persons? Hardly… For most of us those who are involved in these hard
labours simply belong to the group of “Hei, you”.
In every
institution that I served or visited, I made it a point to learn the names of
those who were doing services like the receptionist, the table boys, the
sweepers, the peons… and called them by name. I have enjoyed the smile my
effort brought to their faces. In the midst of an avalanche of ‘hei, you’
greetings, my attempt to call them by name, surely made a difference. There is
a special power behind calling someone by name, especially those who serve us
in different ways… Try it. You won’t regret this effort!
The second
idea that we can derive from this gospel is “having a proper perspective”.
Bartimaeus
could not see with his physical eyes. But he had a better perspective of Jesus
– calling him by the special title: Jesus, son of David. This is an insight
that Bartimaeus received even before receiving his bodily sight. He could see
with the eyes of the heart… the eyes of faith. The lovely words of Helen Keller
are enlightening: “The most beautiful things in the world can’t be seen or even
touched. They must be felt with the heart.” I am sure Helen Keller knew what
she was talking about.
Let me
remind you of two stories that talk about the power of seeing with the heart
and having proper perspective:
Two men,
both seriously ill, occupied the same hospital room. One man was allowed to sit
up in his bed for an hour each afternoon to help drain the fluid from his
lungs. His bed was next to the room's only window. The other man had to spend
all his time flat on his back. The men talked for hours on end. Every afternoon
when the man in the bed by the window could sit up, he would pass the time by
describing to his roommate all the things he could see outside the window.
The man in
the other bed began to live for those one-hour periods where his world would be
broadened and enlivened by all the activity and color of the world outside. The
window overlooked a park with a lovely lake. Ducks and swans played on the
water while children sailed their model boats. Young lovers walked arm in arm
amidst flowers of every color and a fine view of the city’s skyline could be
seen in the distance. As the man by the window described all this in exquisite
detail, the man on the other side of the room would close his eyes and imagine
the picturesque scene. One warm afternoon the man by the window described a
parade passing by. Although the other man couldn't hear the band - he could see
it in his mind's eye as the gentleman by the window portrayed it with
descriptive words.
Days and
weeks passed. One morning, the nurse arrived to bring water for their baths
only to find the lifeless body of the man by the window, who had died
peacefully in his sleep. She was saddened and called the hospital attendants to
take the body away. As soon as it seemed appropriate, the other man asked if he
could be moved next to the window. The nurse was happy to make the switch, and
after making sure he was comfortable, she left him alone. Slowly, painfully, he
propped himself up on one elbow to take his first look at the real world
outside. He strained to slowly turn to look out the window beside the bed. It
faced a blank wall. He was thoroughly shocked. The nurse asked him why he
looked so shocked. He recounted all that had happened in that room with his
neighbour. What the nurse told him made him freeze in further shock. The nurse
said that the man was blind and could not even see the wall. This visually
challenged person could see beyond the wall… just to make life easier for his
companion.
The other
story also has some connection with a window. Husband and wife move into a new
home. The next day morning, the lady sipping her coffee, sees through her glass
window at the backyard of the next house. She then calls her husband and tells
him, “Oh, our neighbour doesn’t know how to wash clothes. See, how dirty they
are.” This complaint goes on for three days. On the fourth day, the lady is
surprised to see the washed clothes all spick and span. She called her husband
and said: “Our neighbour must have heard my comments. Today she has done a good
job of washing her clothes.” The husband said, “Honey, this morning I cleaned our
window panes.”
Getting a
proper perspective is a gift from God. Let us ask along with Bartimaeus,
“Rabbi, let me see again.”
The healing of Bartimaeus
பொதுக்காலம் 30ம் ஞாயிறு
கடந்த மூன்று வாரங்களாக, வத்திக்கானில் நடைபெற்றுவந்த ஆயர்களின் பொது மாமன்றம், இஞ்ஞாயிறு நிறைவுக்கு வந்துள்ளது. குடும்பத்தை மையப்படுத்தி, "இன்றைய உலகிலும், திருஅவையிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும்" என்ற தலைப்பில், மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் இறைவன் நம் ஆயர்களை
வழிநடத்தி வந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். 360 பேர் பங்கேற்ற இம்மாமன்றத்தில், பல்வேறு நாடுகளிலிருந்து திருத்தந்தையால் அழைக்கப்பட்டிருந்த
18 தம்பதியர் உட்பட, 51 பொது நிலையினர், இந்த மாமன்றத்தில் கலந்துகொண்டனர். சென்ற ஆண்டும், இவ்வாண்டும் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றங்களில் 'குடும்பம்' மையக் கருத்தாக அமைந்தது, கத்தோலிக்கத் திருஅவை, இறைமக்களின் அவை என்பதை உலகறியச் செய்துள்ளது.
இன்றைய உலகச் சமுதாயம்
சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளின் ஆணிவேராக இருப்பது, குடும்பங்களில் தோன்றும் பிரச்சனைகள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
பிரச்சனைகளைப் பற்றி மீண்டும், மீண்டும்
பேசி, மனதை பாரமாக்கிக் கொள்வதற்குப் பதிலாக, அடுத்து என்ன செய்யலாம் என்பதைச் சிந்திக்க முயல்வோம்.
நமது முயற்சிக்கு உதவி செய்யும் வகையில், இன்றைய
நற்செய்தி நமக்கு இரு பாதைகளைத் திறந்துவிடுகிறது. ஒன்று பெயர் சொல்லி அழைப்பது, மற்றொன்று, பார்வை பெறுவது.
மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும்
பிறந்த சில நாட்களில் கிடைக்கும் ஒரு முக்கிய
அடையாளம் நமது பெயர். இந்த அடையாளத்தை நாம் வாழ்நாளெல்லாம் கொண்டு செல்கிறோம். நம்மை
வந்தடையும் பிற அடையாளங்கள் வரும், போகும்... ஆனால், நமது பெயர் நமக்குக் கிடைக்கும் முதல்
மரியாதை. நம்முடன் என்றும் தங்கும் மரியாதை.
இந்த மரியாதையைத் தருவதில்தான் நமக்குள் எத்தனை வேறுபாடுகள்! வேதனை தரும் செயல்பாடுகள்!!
வேறு பல தேவையில்லாத எண்ணங்களால் நமது மனக்கண்கள் பார்வை இழக்கும்போது, ஒருவருக்கு உரிய அடிப்படை மரியாதையையும் வழங்க நாம் மறுத்துவிடுகிறோம்.
பெயர் சொல்லி அழைப்பது, பார்வை பெறுவது அல்லது இழப்பது என்ற இவ்விரு
எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடைய எண்ணங்கள். இவ்விரு எண்ணங்களையும் இணைத்துச் சிந்திக்க
இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.
பார்வைத்திறன் அற்ற ஒருவருக்கு
இயேசு பார்வை தந்த புதுமையை நற்செய்தி கூறுகிறது. மாற்கு எழுதியுள்ள இன்றைய நற்செய்தியில்
கூடுதலான ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பார்வையற்று, பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருவரை, மாற்கு பெயர் சொல்லி குறிப்பிட்டிருக்கிறார்.
இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக
இந்தப் புதுமை மத்தேயு, மாற்கு,
லூக்கா என மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மாற்கு மட்டும்,
பார்வை இழந்த பிச்சைக்காரருக்குப் பெயர், முகவரி
எல்லாம் தந்திருக்கிறார். திமேயுவின் மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று
நற்செய்திகளிலும் இயேசு ஆற்றிய புதுமைகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே புதுமை இது
மட்டுமே. மற்ற புதுமைகளிலெல்லாம், முடவர், பார்வையற்றவர், தொழுநோயாளி என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.
பெயர் சொல்லி அழைப்பதிலேயே, இரு விதங்கள்... இரு பக்கங்கள். ஒருவருக்குரிய
உண்மை மதிப்பளித்து பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் ஒளிமயமான
பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப் போகும் வண்ணம் பெயரோ அடைமொழியோ சொல்லி அழைக்கும்
இருள் சூழ்ந்த பக்கம்.
ஒரு சிலருக்கு அவர்கள்
செய்யும் தொழில் அவர்களது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வான தொழிலாக
இருந்தால், அந்த அடையாளங்களை
நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். எடுத்துக்காட்டாக, மருத்துவத் தொழிலில் இருப்பவர்களைப்
பெயர் சொல்லி அழைப்பதைவிட "டாக்டர்" என்று சொல்லும்போது கூடுதலான மரியாதை.
இதேபோல், ஆசிரியர், பேராசிரியர்,
காவல்துறை கண்காணிப்பாளர்களை, teacher, professor,
inspector என்றெல்லாம் அழைக்கும்போது சொல்வதற்கும்
பெருமையாக இருக்கும், கேட்பதற்கும்
பெருமையாக இருக்கும். மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும் தனிப்பட்ட பெயர் சொல்லி
அழைப்பதை விட மரியாதையான அடைமொழிகளால் அழைப்பதுதான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father,
Brother, Sister, சாமி, குருவே... இப்படி பல பட்டங்கள். இவைபோன்ற அடைமொழிகள் ஒருவரைத் தலைநிமிர்ந்து
நிற்கவைக்கும். பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிநிறைந்த பக்கம் இது.
இனி சிந்திக்க இருப்பது
இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவை சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? தொழிலால் வரும் அடைமொழிகள் இவர்களுக்குக் கிடையாது. அப்படியே அந்த அடைமொழிகளைப்
பயன்படுத்தும்போது அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை.
அவர்கள் எல்லாருமே "ஏய், டேய், அடியே,
இவளே..." என்ற ஏக வசனங்களுக்கு ஆளானவர்கள். இந்திய சமுதாயம் தேடிக்கொண்ட
மற்றொரு சாபம் சாதி முறைகள். இதன் அடிப்படையில் ஒரு சிலர் அவர்கள் பிறந்த குலத்தின்
பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர். இவை இருள் சூழ்ந்த பக்கங்கள்... நம்மைக்
குருடாக்கும் பழக்கங்கள்.
நான் பணி செய்து வந்த ஒரு
அலுவலகத்தில் எங்களுக்குக் காபி கொண்டுவரும் ஒரு இளைஞர் என் நினைவுக்கு வருகிறார்.
மற்ற எல்லாரும் அவரைக் கூப்பிட்ட ஒரே பெயர் "டேய்". நான் அவரது பெயரைக் கற்றுக்கொண்டு
"சங்கர்" என்று அழைத்தேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம் அந்த இளைஞர் முகத்தில்
புன்னகை. என்னைத் தனிப்பட்ட விதத்தில் கவனித்துக் கொள்வார். அவரிடம் அந்த சலுகையைப்
பெறுவதற்காக நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. அவரை "சங்கர்" என்று
அழைக்கும்போது, அவர் தோள்களை
உயர்த்தி சிரித்தது எனக்கு முக்கியமாகப் பட்டது.
நான் தங்கியிருந்த குருக்கள்
இல்லங்களில் எளிய பணி செய்யும் எல்லாருடைய பெயரையும் கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்வேன்.
அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதனால், நான் எந்த வகையிலும் குறைந்து போய் விடவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்து நின்றதை, நிறைவாகச் சிரித்ததை இரசித்துப்
பார்த்திருக்கிறேன். வாழ்வின் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும், முக்கியமாக, சந்தர்ப்பச் சூழல்களால் வாய்ப்புக்களும்,
வசதிகளும் இன்றி எளிய பணிகள் செய்பவரைப் பெயர்சொல்லி அழைக்கும்போது,
உள்ளூர பல புதுமைகள் நடக்கும். முயன்று பார்ப்போம்.
பார்வை பெற வேண்டும்...
இது நமது இரண்டாவது சிந்தனை. உடல்
பார்வை பெற விழைந்தார் பர்த்திமேயு. ஆனால்,
உள்ளத்தில் அவர் ஏற்கனவே தெளிவான பார்வை பெற்றிருந்தார். இயேசுவை உள்ளத்துக்
கண்களால் "தாவீதின் மகன்" என்று பார்த்திருந்தார். விவிலியத்தில் இந்தப்
பட்டத்தை முதன்முதலில் இயேசுவுக்குத் தந்தது உடலளவில் கண் பார்வையற்று, ஆனால் உள்ளத்தளவில்
பார்வை பெற்ற பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்கமுடியும் என்பதற்கு
பர்த்திமேயு நல்லதோர் எடுத்துக்காட்டு.
கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய்
பேசாமல் இருந்த ஹெலன் கெல்லெர் கூறிய அழகான சொற்கள்: “The most
beautiful things in the world can’t be seen or even touched. They must be felt
with the heart.” "உலகில் மிக அழகானவைகளைக்
கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே
உணரமுடியும்."
அகக்கண் கொண்டு பார்க்கும்
விந்தையைச் சொல்லும் எத்தனையோ கதைகள் உண்டு. இதோ இன்னொரு கதை. மருத்துவமனை ஒன்றில்
இருவர் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள். இருவரும் ஏறக்குறைய படுத்த படுக்கையாய் இருந்த
நோயாளிகள். இவ்விருவரில் ஒருவருடைய படுக்கை ஜன்னலுக்கு அருகில் இருந்தது. அவர் ஒவ்வொரு
நாள் மதியமும் மிகவும் சிரமப்பட்டு தன் படுக்கையில் எழுந்து ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பார்.
அந்த ஒரு மணி நேரமும் ஜன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும்
பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள்,
அங்குள்ள சிறு குளத்தில் நீந்திவரும் அன்னப்பறவைகள் என்று அவர் வர்ணனை
ஒரு மணி நேரம் நடக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு அந்த ஒரு மணி நேரம் போவதே
தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்துவந்த அவர் அந்த ஒரு மணி நேரம் கண்களை மூடி,
அடுத்தப் படுக்கைக்காரர் சொல்லும் வர்ணனை வழியாக வெளி உலகத்தைப் பார்த்தார்.
இது பத்து நாட்கள் நடந்தன.
அடுத்த நாள் காலை, ஜன்னலருகே
படுத்திருந்தவர் எழவில்லை. முந்திய இரவு தூக்கத்திலேயே அமைதியாக அவர் இறந்து போனார்.
அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு ஆழ்ந்த வருத்தம். அவரது கண்கள் வழியே அவர் தந்த வர்ணனை
வழியே தான் ஒரு மணி நேரமாவது பார்த்து வந்த உலகம் இப்போது மூடப்பட்டுவிட்டதே என்று
இன்னும் அதிக வருத்தம்.
இரு நாட்கள் சென்றபின், அந்த ஜன்னலருகே இருந்த படுக்கைக்குத் தன்னை
மாற்றச் சொல்லி, நர்ஸிடம் வேண்டிக்கேட்டார். மாற்றப்பட்டார்.
மதிய நேரம் நர்ஸிடம், "தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க
உதவுங்களேன்." என்று கேட்டார். நர்ஸ் உதவியோடு எழுந்து அமர்ந்தார். ஜன்னல் வழியே
வெளி உலகைப் பார்க்க முயன்றவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜன்னல் வழியே அவர்
பார்த்ததெல்லாம் ஒரு வெற்றுச் சுவர். பூங்கா இல்லை, குழந்தைகள்
இல்லை.. ஒன்றும் இல்லை. அவருடைய அதிர்ச்சியைப் பார்த்த நர்ஸ் அவரிடம் விவரம் கேட்டார்.
அப்போது அவர், எப்படி, இந்த படுக்கையில்
இருந்தவர் ஜன்னல் வழியே பார்த்ததை விவரிப்பார் என்று விளக்கினார். இதைக்கேட்டபின்,
அந்த நர்ஸ் சொன்ன செய்தி அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதுவரை
அந்தப் படுக்கையில் இருந்தவர் அந்த வெற்றுச் சுவரையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை,
ஏனெனில், அவருக்கு பார்வைத்திறனே கிடையாது என்று
நர்ஸ் சொன்னது அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. கண்பார்வை உள்ள அவர், ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரமாகிலும் ஓர் அழகான உலகைப் பார்க்க கண் பார்வை அற்ற
ஒருவர் உதவியதை உணர்ந்தார்.
பார்க்கும் திறன் இருந்தால்
மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். ஜன்னலை வைத்து இன்னொரு
கதை. கணவனும், மனைவியும் ஒரு
வீட்டுக்கு குடி வநதனர். தினமும் அந்தப் பெண்மணி, காலையில் காபி
அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டில்
வேலை செய்யும் பெண் துணிகளைக் காய வைப்பதைப் பார்த்து, "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க அந்தத்
துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு.." என்று கணவனிடம் முறையிட்டார். முறையீடுகள்
மூன்று நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் வழக்கம் போல் ஜன்னல் வழியே பார்த்து
குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்" என்று கணவனை அவசரமாக அழைத்து, "அங்க
பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு
நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு." என்று வியந்து
பாராட்டினார். கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுலே ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி
நம்ம ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்." என்று சொன்னாராம்.
No comments:
Post a Comment