30 April, 2017

The Revolution of Tenderness பரிவுப் புரட்சி



Matthias Stom, "Supper at Emmaus,"
3rd Sunday of Easter

Pope Francis has completed his Apostolic Visit to Egypt (April 28,29) and has returned to Vatican. I wanted to add the word ‘successfully’ to the previous sentence… That is, Pope Francis has ‘successfully completed’ his Apostolic Visit to Egypt etc. In this context, the ‘success’ refers to him not being the target of the senseless violence by the terrorists.
We are aware of the bomb blasts that rocked Egypt on Palm Sunday. Soon after those attacks, Pope Francis made it clear that he would not change the dates of his journey to Egypt and that he would not opt for bullet proof vehicles during his visit to Cairo. Keeping all this in mind, I said that his trip was a ‘success’. Still, those 27 hours that Pope Francis spent in Cairo must have been tense moments for thousands of security personnel.

In his very first talk in Cairo delivered at the International Peace Conference at the Al-Azhar conference centre in Cairo, he spoke about violence, masquerading as a religious obligation:
“As religious leaders, we are called, therefore, to unmask the violence that masquerades as purported sanctity and is based more on the “absolutizing” of selfishness than on authentic openness to the Absolute.  We have an obligation to denounce violations of human dignity and human rights, to expose attempts to justify every form of hatred in the name of religion, and to condemn these attempts as idolatrous caricatures of God: Holy is his name, he is the God of peace, God salaam.   Peace alone, therefore, is holy and no act of violence can be perpetrated in the name of God, for it would profane his Name.”

Immediately after addressing this conference, when he met the civil authorities of Egypt, he once again spoke of violence unleashed in the name of God and religion:
“In the fragile and complex situation of today’s world, which I have described as ‘a world war being fought piecemeal’, it needs to be clearly stated that no civilized society can be built without repudiating every ideology of evil, violence and extremism that presumes to suppress others and to annihilate diversity by manipulating and profaning the Sacred Name of God…
All of us have the duty to teach coming generations that God, … can neither demand nor justify violence; indeed, he detests and rejects violence (‘God… hates the lover of violence’: Ps 11:5)… It is our duty to dismantle deadly ideas and extremist ideologies, while upholding the incompatibility of true faith and violence, of God and acts of murder.”

While Pope Francis spoke about the God of love and peace, leaders from countries like North Korea, South Korea and the United States spoke of war. They have been ‘showing off’ their power in terms of weapons of destruction. A statement from North Korea said that 2 or 3 nuclear bombs from their arsenal are enough to destroy the whole world. What bravado! What madness!

The war games played around North Korea brings to mind the recent talk given by Pope Francis - TED Talk, Vancouver, Canada, 25 April 2017. It is worth reading the full text of this talk. But, I would like to quote some excerpts from this talk where the Pope talks of how power corrupts and absolute power corrupts absolutely!
“Please, allow me to say it loud and clear: the more powerful you are, the more your actions will have an impact on people, the more responsible you are to act humbly. If you don’t, your power will ruin you, and you will ruin the other.
There is a saying in Argentina: ‘Power is like drinking gin on an empty stomach.’ You feel dizzy, you get drunk, you lose your balance, and you will end up hurting yourself and those around you, if you don’t connect your power with humility and tenderness.
Through humility and concrete love, on the other hand, power – the highest, the strongest one – becomes a service, a force for good. 

In this wonderful talk, Pope Francis talks about the ‘the revolution of tenderness’ that all of us can take up:  “Yes, tenderness is the path of choice for the strongest, most courageous men and women. Tenderness is not weakness; it is fortitude. It is the path of solidarity, the path of humility… The future of humankind isn't exclusively in the hands of politicians, of great leaders, of big companies. Yes, they do hold an enormous responsibility. But the future is, most of all, in the hands of those people who recognize the other as a ‘you’ and themselves as part of an ‘us’.”

This ‘revolution of tenderness’ brings us to this Sunday’s Gospel (Luke 24: 13-35) where the Risen Jesus, reaches out with tenderness to two of his disciples. Last week, we saw Jesus meeting Thomas who doubted his resurrection. This week Jesus meets two other disciples who, once again, were so caught up with their disillusionment that they paid no heed to the good news of resurrection shared by the women. In short, they too doubted Jesus’ resurrection and walked away from Jerusalem.

The Gospel says that the distance between Jerusalem and Emmaus is 11 k.m. With a heavy heart, those two disciples must have been ‘inching’ their way. It is also said that they were ‘talking with each other about all the things that happened’. (Lk. 24:14) It was not simply a sharing of information. They were sharing their disappointments. Pope Francis, in the Mass celebrated on Saturday in Cairo, speaks about these two disciples as persons who experienced ‘death’.
Death.  The two disciples are returning, full of despair and disappointment, to life as usual.  The Master is dead and thus it is pointless to hope.  They feel disappointment and despair.  Theirs is a journey of return, as they leave behind the painful experience of Jesus’ crucifixion...
They could not believe that their Master and Saviour, who had raised others from the dead and healed the sick, would end up hanging on the cross of shame.  They could not understand why Almighty God had not saved him from such a disgraceful death.  The cross of Christ was the cross of their own ideas about God; the death of Christ was the death of what they thought God to be.  But in fact, it was they who were dead, buried in the tomb of their limited understanding.
Then Pope Francis applies the predicament of these disciples to our situation: How often do we paralyze ourselves by refusing to transcend our own ideas of God, a god created in the image and likeness of man!  How often do we despair by refusing to believe that God’s omnipotence is not one of power and authority, but rather of love, forgiveness and life!

Jesus joins these heart-broken ‘kids’ with motherly care and tenderness. He takes the liberty to admonish them and also enlighten them. As a climax, he breaks the bread with them. In the breaking they recognized Jesus. While talking of this, Pope Francis invites us to break all the moulds we have created for God:
The disciples recognized Jesus in the “breaking of the bread”, in the Eucharist.  Unless we tear apart the veil clouding our vision and shatter the hardness of our hearts and our prejudices, we will never be able to recognize the face of God.

The two disciples who left Jerusalem, completely broken, and totally preoccupied with their own misery, now return to Jerusalem on a mission. Pope Francis concluded his homily in Cairo with an invitation to the people gathered for the Mass. He also extends the same invitation to us:
“So now, like the disciples of Emmaus, filled with joy, courage and faith, return to your own Jerusalem, that is, to your daily lives, your families, your work and your beloved country.  Do not be afraid to open your hearts to the light of the Risen Lord, and let him transform your uncertainty into a positive force for yourselves and for others.  Do not be afraid to love everyone, friends and enemies alike, because the strength and treasure of the believer lies in a life of love!”

Let this Easter Season be an opportunity to begin our ‘revolution of tenderness’!   


Pope Francis hugs Sheikh Ahmed el-Tayeb, Al-Azhar’s grand imam
உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு

ஏப்ரல் 28, 29 ஆகிய இருநாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்து நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார். புனித வாரத்தின் துவக்கத்தில், வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருந்த எகிப்து மக்களுக்கு, குறிப்பாக, அங்கு வாழும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, அமைதியை வழங்கும் திருப்பயணியாக திருத்தந்தை அங்கு சென்றார். குருத்தோலை ஞாயிறன்று எகிப்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடர்ந்து, திருத்தந்தையின் பயணம் தாமதமாகலாம், இரத்து செய்யப்படலாம் என்ற எண்ணங்கள் எழுந்தபோது, திருத்தந்தை, தன் பயணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உடனே தெளிவுபடுத்தியது, அந்நாட்டு மக்களுக்கு பெரும் ஆறுதலைத் தந்திருக்கும்.

இத்திருத்தூதுப்பயணம் ஆறுதலும், மகிழ்வும் தந்த அதேவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்தில் செலவழித்த 27 மணி நேரங்கள், எனக்குள், ஏதோ ஒருவகையில் சிறிது பதைபதைப்பை உருவாக்கியது என்பதும் உண்மை. எந்த நேரத்திலும், எதுவும் நடக்கக்கூடும் என்ற கவலை அது. பல வடிவங்களில் வரும் வன்முறைகள், யாருக்கும் நேரலாம் என்பதை மறுக்க இயலாது. வன்முறையைக் குறித்து, திருத்தந்தை, கெய்ரோவில் வழங்கிய முதல் உரையிலேயே பேசினார்:
"குறிக்கோள் கொண்ட புனிதம் என்ற வேடத்தை அணிந்திருக்கும் வன்முறையின் முகமூடியைக் களைவதற்கு மதத்தலைவர்கள் என்ற முறையில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இந்தப் போலிப்புனிதம், அனைத்தும் வல்ல ஆண்டவனுக்கு உள்ளத்தில் இடம்தராமல், சுயநலத்தை, அனைத்து வல்லமையும் கொண்ட தெய்வமாக மாற்றிவிடுகிறது.... அமைதி மட்டுமே புனிதமானது. இறைவனின் பெயரால் மேற்கொள்ளப்படும் வன்முறை, இறைவனின் பெயரைக் களங்கப்படுத்திவிடும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல் அசார் பன்னாட்டு அமைதிக் கருத்தரங்கில் பேசினார்.

எகிப்தில் திருத்தந்தை மேற்கொண்ட பயணம் ஒருவகைப் பதைபதைப்பை உருவாக்கியது என்றால், கடந்த ஒரு வாரமாக, வட, தென் கொரிய நாடுகளைச் சுற்றித் திரண்டுவரும் போர்மேகங்கள், வேறொரு வகையில் பதைபதைப்பை உருவாக்கி வருகின்றன. வடகொரியா ஒரு புறத்திலும், தென் கொரியாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மறுபுறத்திலும், தங்கள் சக்தியைப் பறைசாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் பறைசாற்ற விளையும் சக்தி, தங்களிடம் உள்ள கொலைக்கருவிகளின் சக்தி.
"இவ்வுலகத்தை முற்றிலும் அழிப்பதற்கு, எங்களிடம் உள்ள 3 அல்லது 4 குண்டுகள் போதும்" என்று தன் அணு ஆயுத சக்தியைப் பற்றி வடகொரியா அறிவித்திருப்பதைக் கேட்கும்போது, வேதனையிலும், வெட்கத்திலும் உள்ளம் குறுகிப் போகிறது. அதிகார மயக்கத்தில் இருப்போரிடம், சக்தியும் சேர்ந்துவிட்டால் எவ்வளவு ஆபத்து என்பதை, அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய காணொளிச் செய்தி, கனடா நாட்டின் வான்கூவர் நகரில், ஏப்ரல் 25, செவ்வாய் மாலை ஒளிபரப்பானது. தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு என்ற பொருள்படும், Technology, Entertainment, Design என்ற மூன்று வார்த்தைகளின் சுருக்கமாக TED என்றழைக்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்வுக்கு, 'The Future You' என்ற தலைப்பில், திருத்தந்தை, இத்தாலிய மொழியில் வழங்கிய காணொளிச் செய்தி, 22 மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டது. சக்தியும், அதிகாரமும் தவறானவர்கள் கையில் சென்று சேர்ந்தால், என்ன ஆகும் என்பதை, திருத்தந்தை தன் உரையில் இவ்வாறு விளக்கினார்:
"தெளிவாக, உரத்தக் குரலில் ஒரு விடயத்தைக் கூற, தயவுசெய்து எனக்கு அனுமதி தாருங்கள். நீங்கள் சக்தி மிக்கவராக இருந்தால், உங்கள் செயல்கள் பலரைப் பாதிக்கும். எவ்வளவுக்கெவ்வளவு உயர்ந்த பொறுப்பில் நீங்கள் இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு பணிவுடன் செயலாற்ற வேண்டும். அவ்வாறு இல்லையெனில், உங்கள் அதிகாரம் உங்களையும், பிறரையும் அழித்துவிடும்" என்று கூறியத் திருத்தந்தை, அர்ஜென்டீனா நாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான கூற்றின் வழியே, தன் கருத்தை மேலும் தெளிவாக்கினார்.
"அர்ஜென்டீனாவில் ஒரு கூற்று உள்ளது: 'அதிகாரம் என்பது, வெறும் வயிற்றில் குடிக்கும் மதுவைப் போன்றது'. வெறும் வயிற்றில் மது அருந்தும்போது, அது உங்களைத் தாக்கும்; உங்களை சுற்றியிருப்போரையும் பாதிக்கும். அதேபோல், அதிகாரத்தால் மயக்கமுறுவோர், தங்கள் அழிப்பதோடு, பலரை அழித்துவிடுவர்" என்று திருத்தந்தை விடுத்த எச்சரிக்கை, பல உலகத் தலைவர்களை நினைவுக்குக் கொணர்வதோடு, அவர்களால் இவ்வுலகிற்கு வரக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறது.

திருத்தந்தை வழங்கிய TED தொலைக்காட்சி உரையில், உலகில் வாழும் நாம் ஒவ்வொருவரும் 'பரிவுப் புரட்சி'யை ஆரம்பித்து, அகிலமெங்கும் பரப்பும்படி வேண்டுகோள் விடுத்தார். “'நீ', 'நான்' என்ற தனிப்பட்டவர்கள் இணைந்தால், அங்கு உருவாகும் 'நாம்' என்ற உணர்வு, இவ்வுலகில், ஒரு புரட்சியை, பரிவை அடைப்படையாகக் கொண்ட ஒரு புரட்சியை, உருவாக்கமுடியும்... இவ்வுலகை மாற்றும் சக்தியும், அதிகாரமும், அரசியல்வாதிகள், தலைவர்கள் ஆகியோரிடம் மட்டும் இல்லை, நாம் ஒவ்வொருவரும் இச்சக்தியைப் பெற்றுள்ளோம். நாம் மனது வைத்தால், பரிவின் அடிப்படையில் ஒரு புரட்சியைக் கொணர முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், TED அமைப்பினர் வழியே வழங்கிய காணொளிச் செய்தியில் கூறினார்.

திருத்தந்தை கூறிய 'பரிவுப்புரட்சி'யின் முதல் பாடங்களை, உயிர்த்த இயேசு தன் சீடர்களுக்கு சொல்லித்தந்தார்.  உயிர்ப்புக்குப் பின் நிகழ்ந்த அனைத்து சந்திப்புக்களிலும் இயேசுவின் தாயன்பும், பரிவும் வெளிப்படையாகத் தெரிந்தன.
தன் உயிர்ப்பின் மீது சந்தேகம் கொண்ட தோமாவை, இயேசு தேடிச்சென்ற நிகழ்வை, சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், இயேசுவின் பரிவுப்புரட்சி மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. எம்மாவு என்ற ஊரை நோக்கிச் சென்ற இரு சீடர்கள் அடைந்த அனுபவம் இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. (லூக்கா 24: 13-35) இவ்விரு சீடர்களில் ஒருவரது பெயர் கிளயோப்பா என்று குறிக்கப்பட்டுள்ளது. (லூக்கா 24:18) மற்றவரது பெயர் குறிக்கப்படவில்லை. அந்த இரண்டாவது சீடராக நம்மை இணைத்து, இப்பயணத்தைத் தொடர்வோம்.

எருசலேமுக்கும் எம்மாவு என்ற ஊருக்கும் இடைப்பட்டத் தூரம் 11 கி.மீ. என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 24:13). இந்த தூரத்தை, நடைப் பயணமாகக் கடக்க இரண்டு, அல்லது, மூன்று மணி நேரங்கள் எடுத்திருக்கும். ஆனால், இந்த நடைப்பயணத்தை, நடைப் பிணங்களைப் போல மேற்கொண்ட அந்த இரு சீடர்களுக்கும் இந்தப் பயணம் முடிவின்றி செல்வதுபோல் தெரிந்திருக்கும்.
இவ்விரு சீடர்களும் போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றனர் என்று நற்செய்தி கூறுகிறது. (லூக்கா 24:14) என்ன பேசியிருப்பார்கள்? அவர்களது உள்ளக் குமுறல்கள் புலம்பல்களாக, கோபமான வார்த்தைகளாக வெடித்திருக்கும். "நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம், இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம். ஆனால், இவ்விதம் ஆகிவிட்டதே..." என்ற குமுறல்கள் எழுந்திருக்கும். இவ்விரு சீடர்களின் குமுறல்கள், பல தலைமுறைகளாய், நம் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு தானே இருக்கின்றன? நாம் எதிர்பார்த்தவை கிடைக்காதபோது, நாம் எதிர்பாராதவை வந்து சேரும்போது, நொறுங்கி, மனம் வெறுத்துப்போன நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.

நொறுங்கிய உள்ளத்துடன் நடந்து சென்ற சீடர்களுடன் இயேசு நடக்க ஆரம்பித்தார். தாயன்போடு அவர்களைத் தேடிச்சென்ற இயேசு, கனிவோடு பேசுகிறார், கடிந்து கொள்கிறார், பொறுமையாய் விளக்குகிறார். அந்தத் தாய், பயணத்தின் இறுதியில், உணவைப் பரிமாறிய அழகில், இவ்விரு சீடர்களின் கண்கள் திறக்கின்றன.

தங்களை வியப்படையச் செய்த மகிழ்வை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவ்விரு சீடர்களும் எருசலேமுக்கு விரைகின்றனர். "மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) தங்களை இருள் சூழ்ந்துகொண்டது என்று பலவாறு புலம்பிக் கொண்டிருந்த அவர்கள் உள்ளங்கள், இந்த மகிழ்வால் ஒளிவெள்ளத்தில் மூழ்கின. வெளி இருளைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல், இரவோடு இரவாக, அவர்கள் இருவரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.
கனமான, உடைந்த உள்ளத்தைச் சுமந்து அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டபோது, அவர்கள் கடந்து சென்ற 11 கி.மீ. தூரம், பல நூறு கி.மீ. போலத் தெரிந்திருக்கும். இப்போதோ, அதே 11 கி.மீ.தூரம், 11 மீட்டர் தூரமாகத் தெரிந்திருக்கவேண்டும். வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வுக்கு இந்த மந்திரச் சக்தி உண்டு.

"வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வு", அல்லது, "வியப்படைய வைக்கும் மகிழ்வு" (Surprised by Joy) என்ற சொற்றொடர், கிறிஸ்தவ சிந்தனையாளர், C.S.Lewis (Clive Staples Lewis) அவர்கள் 1955ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு. இந்நூலில், அவர் தன் மனமாற்றத்தை விவரித்துள்ளார். கடவுள் நம்பிக்கையற்றவராக அவர் வாழ்ந்த நாட்களில், இறைவன் அவரைத் தொடர்ந்தார் என்பதை அழகாகக் கூறியுள்ளார்:
"ஒவ்வொரு நாளும், என் அறைக்குள் நான் தனிமையில், என் வேலைகளில் என்னையே புதைத்துக் கொண்டேன். அவ்வப்போது, நான் புதைந்திருந்த வேலைகளிலிருந்து என் சிந்தனை சிறிது வெளியே எட்டிப் பார்த்தபோது, அங்கு என்னைச் சந்திக்கக் காத்திருந்தார் கடவுள். யாரை நான் சந்திக்கக் கூடாது என்று தீர்மானித்து, விலகிச் சென்றேனோ, அவர் என்னைத் தேடித் தேடி வந்தார்."
சிறிது, சிறிதாக Lewis மனம் மாறத் துவங்கினார். கோவில் வழிபாடுகளில் அரை மனதோடு கலந்துகொண்டார். இங்கிலாந்திலேயே, தயங்கிய, சந்தேகப்பட்ட உள்ளத்துடன் வாழ்ந்த கிறிஸ்தவன் தான் ஒருவனாக மட்டுமே இருந்திருக்கவேண்டும் என்று அவர் தன்னையே விவரித்துள்ளார். இறுதியில், அவரை இறைவன் முழுமையாக ஆட்கொண்ட அனுபவத்தை அவர் இவ்விதம் விவரிக்கின்றார்:
"நான் எப்போது என் இறுதித் தீர்மானத்தை எடுத்தேன் என்பது நன்றாக நினைவிருக்கிறது. அன்று காலை நான் 'Whipsnade' உயிரியல் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தேன். பயணத்தைத் துவக்கியபோது, இயேசு கிறிஸ்து இறைவனின் மகன் என்பதை நம்பாமல் இருந்தேன். அனால், நான் உயிரியல் பூங்காவை அடைந்தபோது, அந்த நம்பிக்கை உறுதி அடைந்தது" என்று அவர் தன் நம்பிக்கைப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். Lewis விவரித்துள்ள இந்த மனமாற்றக் காட்சியை வாசித்தபோது, ஓர் உயிரியல் பூங்காவிற்குச் செல்லும்போது மனமாற்றம் ஏற்படக் கூடுமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

மனமாற்றங்கள், இறைவனின் சந்திப்புக்கள் எங்கும், எவ்வேளையிலும் நிகழும். இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது என்ன? இஸ்ரயேல் மக்களின் உயிர் நாடியான கோவில் இருந்த எருசலேமில் இவ்விரு சீடர்களைச் சந்திக்காத இயேசு, அவர்கள் எம்மாவு சென்ற வழியில் சந்தித்தார், மனமாற்றத்தைக் கொடுத்தார். திருத்தூதர் பவுல், கொலைவெறியுடன் தமஸ்கு நகர் சென்றபோது, வழியில் அவரைச் சந்தித்தார், மனமாற்றம் தந்தார் (திருத்தூதர் பணிகள் 9: 3-9). C.S.Lewis அவர்களுக்கு, உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் வழியில் மனமாற்றம் தந்தார் இறைவன்.

மனமுடைந்து எம்மாவு சென்றாலும்,
மற்றவரை அழிக்கும் வெறியுடன் தமஸ்கு நோக்கி படையெடுத்துச் சென்றாலும்,
உயிரின் ஊற்றான இறைவனைச் சந்திக்க மறுத்து, உயிரியல் பூங்காவிற்குச் சென்றாலும்... சரி,
எங்கு நாம் சென்றாலும், எந்த மனநிலையில் நாம் இருந்தாலும், இறைவன் நம்முடன் பயணிக்கக் காத்திருக்கிறார். அந்தப் பயணத்தில் தன்னையே நமக்குப் பகிர்ந்தளிக்க வருகிறார். தாயன்புடன் நம்மைத் தேடிவரும் உயிர்த்த கிறிஸ்துவை நாம் அடையாளம் கண்டுகொள்ளத் தேவையான வரத்தை நாம் ஒவ்வொருவரும் பெறுவோமாக! உயிர்த்த இயேசு தன் சீடர்கள் வழியே துவக்கி வைத்த 'பரிவுப்புரட்சி'யில் பங்கேற்க திரண்டு வருவோம்!

Pope Francis, right, meets Egyptian President Abdel-Fattah El-Sissi, in Cairo,

25 April, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 17

Job 15:16

கால்வின் அண்ட் ஹாப்ஸ் (Calvin and Hobbes) என்ற 'கார்ட்டூன்' தொடர், 1985ம் ஆண்டு முதல், 1995ம் ஆண்டு முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டு பத்திரிக்கைகளில் வெளியாகி வந்தது. பின்னர், அது 50க்கும் மேற்பட்ட நாடுகளில், 2,400க்கும் அதிகமான பத்திரிக்கைகளில் இடம் பெற்ற ஒரு தொடரானது. கால்வின் என்ற 6 வயது சிறுவன், தன்னிடமிருந்த ஹாப்ஸ் என்ற புலி பொம்மையை, ஒரு நண்பனாகக் கருதி, அந்தப் பொம்மையுடன் வளர்த்துக்கொள்ளும் நட்புறவையும், அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொடர் இது. வாழ்வுக்குத் தேவையான பல ஆழமான உண்மைகளை, சிறுவன் கால்வின் கூறும் கூற்றுகள் வழியே, இத்தொடரின் ஆசிரியர், பில் வாட்டர்சன் (Bill Watterson) அவர்கள், இவ்வுலகிற்குத் தந்துள்ளார்.

கால்வின் அண்ட் ஹாப்ஸ் 'கார்ட்டூன்' தொடரில் இடம்பெறும் ஒரு காட்சி, நம் விவிலியத் தேடலை இன்று துவக்கி வைக்கிறது. ஒருநாள், கால்வின், பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அப்பக்கமாய் மோ (Moe) என்ற மற்றொரு சிறுவன் வருகிறான். உடலில் பலமிக்க மோ, மற்ற சிறுவர்களை அரட்டி, மிரட்டிப் பணியவைப்பதில் தனிப்பட்ட மகிழ்வு கொள்பவன். கால்வின் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை விட்டு அவனை எழுந்துபோகச் சொல்கிறான், மோ. கால்வின் மறுக்கவே, மோ, அவனைக் கீழே தள்ளிவிட்டு, தான் அந்த ஊஞ்சலில் ஏறிக்கொள்கிறான். கீழே விழுந்த கால்வின் தனக்குள், "ஒரு சிலரைச் சாம்பலாக்க, அவர்கள் மீது இடி மின்னல் விழாமல் இருப்பதை பார்க்கும்போது, மத நம்பிக்கையுடன் வாழ்வது, மிகக் கடினமாக மாறுகிறது" என்று முணுமுணுக்கிறான்.

நம்மைச் சுற்றி நிகழும் அக்கிரமங்களைக் காணும்போது, அந்த அக்கிரமங்களைச் செய்வோருக்கு ஏதாவது தண்டனை வராதா என்று ஏங்கியிருக்கிறோம். தவறு செய்தவர்களுக்கு, ஏதாவதொரு துன்பம் வரும்போது, அதை, கடவுளின் தண்டனை என்றும் கூறியிருக்கிறோம். நமது எண்ணங்களுக்கு வலு சேர்ப்பதுபோல், 'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' போன்ற பழமொழிகளும் நம் கைவசம் உள்ளன. சில மாதங்களுக்கு முன், தமிழ் நாட்டில் ஓர் அரசியல் தலைவர் இறந்தது, அத்தலைவருடன் கூட்டு சேர்ந்து தவறு செய்தவருக்குக் சிறை தண்டனை கிடைத்தது அகியவற்றை, நம்மில் பலர், இந்தக் கண்ணோட்டத்தில் கண்டிருப்போம் என்பதை மறுக்க இயலாது. இதைப்போலவே, ஏனையத் தலைவர்களுக்கும் நேரும் என்பதை, ஓர் எச்சரிக்கையாக, நாம் சமூக வலைத்தளங்களில் பலமுறை பகிர்ந்து வந்துள்ளோம்.

தவறு செய்தவர்கள், துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நாம் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, சிலவேளைகளில், நேர் மாறாகவும், சிந்திக்கப்படுவதுண்டு. அதாவது, துன்பம் அனுபவிப்பவர்கள், தவறு செய்திருக்கவேண்டும் என்ற நேர்மாறானச் சிந்தனைகளும் நம்மிடம் எழுவதுண்டு.
யோபு நூலில் நாம் சந்திக்கும், யோபின் நண்பர்களான, எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூன்று பேரும், இத்தகைய சிந்தனையுடன் யோபிடம் வாதாடினர். யோபு அனுபவிக்கும் துன்பங்களுக்கு அவர் செய்த குற்றங்களே காரணம் என்றும், யோபு, தன் குற்றத்தை இறைவன் முன் ஒத்துக்கொள்வதே, அவரை, துன்பத்திலிருந்து விடுவிக்கும் என்றும், அந்த மூவரும் ஒருவர் பின் ஒருவராகக் கூற... அவர்கள் ஒவ்வொருவரிடமும், தான் குற்றமற்றவன் என்பதை, யோபு மீண்டும் மீண்டும் விளக்கிச் சொல்ல... இவ்வாறு, முதல் சுற்று உரையாடல், எவ்விதப் பயனும் இன்றி முடிவுற்றது. இதை, நாம் சென்ற தேடலில் சிந்தித்தோம்.

இரண்டாவது சுற்று உரையாடல், யோபு நூல், 15 முதல் 21 முடிய உள்ள 7 பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. இரண்டாவது சுற்றில், மூன்று நண்பர்களும் பேசும் கருத்துக்கள், முதல் சுற்றில் அவர்கள் பேசிய கருத்துக்களைவிட, நீளமாக உள்ளன; கூடுதல் கோபத்தோடும் பேசப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, எலிப்பாசு, முதல்முறை பேசியது, 4ம் பிரிவில் 21 இறைச் சொற்றொடர்களாகப் பதியப்பட்டுள்ளது. இரண்டாவது முறை பேசியது, 15ம் பிரிவில், 35 இறைச் சொற்றொடர்களாகப் பதியப்பட்டுள்ளது. அதேபோல், சோப்பார் முதல்முறை பேசியது, 11ம் பிரிவில் 20 இறைச் சொற்றொடர்களாகவும், இரண்டாவது முறை பேசியது, 20ம் பிரிவில், 29 இறைச் சொற்றொடர்களாகவும் பதியப்பட்டுள்ளது.

மேலும், எலிப்பாசு முதல்முறை பேசியபோது, யோபின் நற்பண்புகளை நினைவில் கொண்டு பேசினார் என்பதை, 4ம் பிரிவில் இவ்வாறு வாசித்தோம்:
யோபு 4: 3-4
பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்! உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன; தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன.
என்று ஆரம்பித்து, பின்னர், யோபிடம் தான் கண்ட குறைகளைக் கூறினார் எலிப்பாசு. ஆனால், 15ம் பிரிவில் அவர் பேசும்போது,
யோபு 15: 4-6
நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்; இறைச்சிந்தனை இல்லாது போனீர். உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது; வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர். கண்டனம் செய்தது உம் வாயே; நானல்ல; உம் உதடே உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது. என்ற குற்றப்பட்டியலோடு ஆரம்பிக்கிறார்.

யோபு குற்றம் புரிந்தவர் என்பதை, தாங்கள் மூவரும் பல்வேறு வகையில் எடுத்துச் சொல்லியும், யோபு, தன்னை குற்றமற்றவர் என்று கூறிவருவதைக் கண்ட எலிப்பாசு, ஒருவேளை, யோபு தன் குற்றத்திலேயே அதிக நாள் தங்கி, பழகிப்போய்விட்டதால், அவருக்கு தன் குற்றமே தெரியாமல் போய்விட்டது என்ற கோணத்தில் பேசுகிறார். குற்றத்திலேயே ஊறிப்போயிருப்போரைக் குறித்து அவர் கூறும் சொற்கள், கடினமாக ஒலிக்கின்றன:
யோபு 15: 16-17
தீமையை தண்ணீர் போல் குடிக்கும் அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர் எத்துணை இழிந்தோர் ஆவர்? கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்; நான் பார்த்த இதனை நவில்கின்றேன்.
இவ்வரிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓர் உருவகம் நம் கவனத்தை ஈர்க்கிறது. தாகம் உருவாகும்போது தண்ணீர் குடிக்கிறோம். இந்த உருவகத்தைப் பயன்படுத்தி, எலிப்பாசு, தீமை செய்வோரை விவரிக்கிறார். ஒழுக்கமற்ற மனிதருக்கு உருவாகும் தாகம், அவர்களை தீமை செய்யத் தூண்டுவதால், அவர்கள், தீமையை தண்ணீர் போல் குடிக்கின்றனர் என்று கூறுகிறார். தண்ணீர் அருந்தாமல் சாதாரண மனிதர்கள் உயிர் வாழ முடியாததுபோல், தீமையை குடிக்காமல் இவர்களால் வாழ முடியாது என்று சொல்வதன் வழியே, அவர்கள் தீமைக்கு எவ்வளவு தூரம் பழகிப்போயுள்ளனர் என்பதை எலிப்பாசு சித்திரிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, எலிப்பாசு கூறும் வார்த்தைகள், யோபை நேரடியாகத் தாக்காமல், மறைமுகமாகத் தாக்குகின்றன. எலிப்பாசு பயன்படுத்தும் இந்த மறைமுகத் தாக்குதல், நம் உறவுகள் மத்தியில் நமக்கு ஏற்படும் ஓர் அனுபவத்தை நினைவுக்குக் கொணர்கிறது.
நம் உறவினர், அல்லது, நண்பரிடம், அவரது குறையை நேருக்கு நேர் சுட்டிக்காட்டாமல், நாம் மறைமுகமாகப் பேசுவதை எண்ணிப் பார்க்கலாம். "உங்களைப் பற்றி ஊரில் இப்படி பேசிக்கொள்கிறார்களே" என்று ஆரம்பித்து, நாம் அவரைப்பற்றி எண்ணியிருக்கும் குறைகளைக் கூறுவோம். அல்லது, நண்பர்கள் குழுவில், "இங்கே இருக்கும் ஒரு சிலர் இப்படியெல்லாம் செய்கின்றனர். நான் யாரைக் குறித்து சொல்கிறேன் என்பது அவர்களுக்கேத் தெரியும்" என்று பேசுவோம். இத்தகையப் பாணியில், எலிப்பாசு, யோபை மறைமுகமாகத் தாக்கிப் பேசுவதை, 15ம் பிரிவில் நாம் காணலாம்.
'அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்' என்று பொதுவில் ஆரம்பித்து, எலிப்பாசு மேற்கொள்ளும் தாக்குதலில், அவர் யோபை மறைமுகமாக இணைத்துவிடுகிறார். குறிப்பாக, அவர் கூறும் இரு இறைச் சொற்றொடர்கள், யோபுக்கு நேர்ந்த துயரங்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன:
யோபு நூல் 15: 29-30
அவர்கள் செல்வர் ஆகார்; அவர்களின் சொத்தும் நில்லாது; அவர்களது உடைமை மண்ணில் பெருகாது. இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை; அவர்களது தளிரை அனல் வாட்டும். அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும்.

யோபு தன் உடைமைகளை இழந்ததையும், குறிப்பாக, தன் புதல்வர், புதல்வியரை இழந்து நிற்பதையும் இந்த வார்த்தைகள் வழியே எலிப்பாசு குத்திக்காட்டுவது, யோபின் மனதை இன்னும் ஆழமாகப் புண்படுத்தியிருக்கவேண்டும். 15ம் பிரிவின் இறுதியில் எலிப்பாசு கூறும் வார்த்தைகள், யோபின் மீது மறைமுகமாக விடுக்கப்படும் ஒரு சாபமாக ஒலிக்கின்றன:
யோபு நூல் 15: 35
இறையச்சமிலாரின் கூட்டம் கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின் கூடாரம் எரியுண்ணும். இன்னலைக் கருவுற்று அவர்கள் இடுக்கண் ஈன்றெடுப்பர்; வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.

எலிப்பாசு தொடுத்த வேதனைக் கணைகளுக்கு, யோபு அளித்த பதில், நம் அடுத்த தேடலில் இடம்பெறும். அதுவரை, நாம், உயிர்த்த இயேசு காட்டிய ஒப்புரவு வழிகளை ஓரளவாகிலும் பின்பற்ற முயல்வோம். தன்னை மறுதலித்த பேதுரு, தன் உயிர்ப்பைச் சந்தேகப்பட்ட தோமா ஆகியோரைப்பற்றி தவறான முடிவுகள் எடுக்காமல், அவர்களைத் தேடிச்சென்று தன்னுடன் இணைத்துக்கொண்ட இயேசுவின் பரிவு, நம்மையும் நல்வழியில் நடக்கத் தூண்டுவதாக! அடுத்தவரைப்பற்றி தவறான முடிவுகள் எடுப்பதையும், அவர்களை மறைமுகமாகத் தாக்குவதையும் விடுத்து, உறவுகளில் உருவாகும் காயங்களை குணமாக்க, உயிர்த்த இயேசுவைப்போல் நாமும் முபற்சிகள் மேற்கொள்வோமாக!

‘My Lord and my God’ - Thomas

23 April, 2017

Mercy – always unmerited தகுதி கருதி வருவதல்ல இரக்கம்

 Divine Mercy Sunday

Divine Mercy Sunday

In our reflections on Palm Sunday (April 09), we spoke about the Holy Week. There we raised serious doubts about calling this week Holy, since nothing holy took place during the first Holy Week. Betrayal, denial, mock trial and violent crucifixion do not have an iota of holiness in them. Unfortunately, last year, and, this year, the Holy Week, once again, witnessed many unholy violent incidents. 

This year, on April 9, Palm Sunday, two Coptic Orthodox churches were the targets of suicide bombers. 47 people who had come to take part in the liturgical celebrations of Palm Sunday were killed and more than a hundred were wounded. On April 15, Holy Saturday, innocent people, fleeing from the war zone in Syria, were killed by bomb blasts. 126 died, out of whom more than 70 were children.

Last year, at the start of the Holy Week, on March 22, Tuesday, Brussels was devastated by terrorist attacks. On Easter Day, there was a gruesome attack aimed at Christians in a public park in Lahore, Pakistan… This year, a suicide bomber was tackled by the Lahore police, before he could attempt to blast himself during the Holy Week services.

Every tragedy raises more questions than providing answers. When we hear of such tragedies in which innocent people are killed, our minds are filled with the main question – WHY? Most of the times, the Christian response to tragedies, especially tragedies caused by human beings, is forgiveness and prayer. The famous words of Jesus uttered on the Cross for his executioners become the touchstone to examine our willingness to forgive and pray for the perpetrators of violence.

I must say that it was a God-sent opportunity for me to come across the homily written by Fr Ron Rolheiser for Good Friday (March 21, 2016). It was titled: The Understanding and Compassion of Good Friday. This homily, written for Good Friday, also helps us to understand the meaning of this Sunday – the Divine Mercy Sunday. I am quoting extensively from this homily of Fr Rolheiser:

As Jesus is being crucified he utters these words: “Forgive them, they know not what they do.” It is not easy to say these words and it is perhaps even more difficult to grasp them in their depth. What does it mean, really mean, to understand and forgive a violent action against you?
There are various approaches here: For example, in a tragic note, shared countless times on Social Media, a man who lost his wife in the terrorist attacks in Paris in 2015 (Antoine Leiris lost his wife Helene in the Bataclan theatre in Paris.) wrote these words, addressed to those who killed his wife:

“On Friday evening you stole the life of an exceptional person, the love of my life, the mother of my son, but you will not have my hatred. I don’t know who you are and I don’t want to know, you are dead souls. If this God, for whom you kill blindly, made us in his image, every bullet in the body of my wife is a wound in his heart. So no, I will not give you the satisfaction of hating you. You want it, but to respond to hatred with anger would be to give in to the same ignorance that made you what you are. … We are only two, my son and I, but we are more powerful than all the world’s armies… every day of his life this little boy will insult you with his happiness and freedom.”

While this response is wonderfully heroic and virtuous, it does not, I believe, go deep enough in its understanding and compassion. Virtuous as it is, it still carries a note of moral separateness, of a certain superiority. Further still, it lacks all admission of being itself somehow complicit in the unfortunate circumstances of culture and history that helped bring about this horrible act because it avoids the question: Why do you hate me? It is a very positive and helpful note in its refusal of hatred; but, I fear, it may have exactly the opposite effect upon those whom it accuses. It will further enflame their hatred. 

Contrast this with the letter the Trappist Abbott, Christian de Cherge, wrote to his family, just before he, himself, was killed by Islamic terrorists. He writes:
“If it should happen one day—and it could be today—that I become a victim of the terrorism which now seems ready to encompass all the foreigners living in Algeria, I would like my community, my Church, my family, to remember that my life was given to God and to this country. I ask them to accept that the One Master of all life was not a stranger to this brutal departure. … I ask them to be able to associate such a death with the many other deaths that were just as violent, but forgotten through indifference and anonymity. …  I have lived long enough to know that I share in the evil which seems, alas, to prevail in the world, even in that which would strike me blindly. I should like, when the time comes, to have a clear space which would allow me to beg forgiveness of God and of all my fellow human beings, and at the same time to forgive with all my heart the one who would strike me down. …  I do not see, in fact, how I could rejoice if this people I love were to be accused indiscriminately of my murder. It would be to pay too dearly for what will, perhaps, be called “the grace of martyrdom,” to owe it to an Algerian, whoever he may be, especially if he says he is acting in fidelity to what he believes to be Islam. I know the scorn with which Algerians as a whole can be regarded. I know also the caricature of Islam which a certain kind of Islamism encourages. It is too easy to give oneself a good conscience by identifying this religious way with the fundamentalist ideologies of the extremists. …  This is what I shall be able to do, if God wills—immerse my gaze in that of the Father, to contemplate with him his children of Islam just as he sees them, all shining with the glory of Christ, the fruit of his Passion, filled with the Gift of the Spirit, whose secret joy will always be to establish communion and to refashion the likeness, delighting in the differences. … And you also, the friend of my final moment, [my executioner], who would not be aware of what you were doing. Yes, for you also I wish this “thank you”—and this adieu—to commend you to the God whose face I see in yours. And may we find each other, happy ‘good thieves,’ in Paradise, if it pleases God, the Father of us both. Amen.”

Ah, to have grace and compassion, to hope to have a drink one day with our enemies in heaven, laughing together at our former misguided hatred, under the loving gaze of the same God!

The closing lines of the letter of Fr Christian de Cherge talking about ‘good thieves’, enjoying one another’s company in heaven, helped me to imagine that Jesus not only invited the ‘good’ thief into paradise, but also the ‘other one’… in fact, all the ‘others’ who were responsible for his cruel death, when he said: “Father, forgive them!” This forgiveness that Jesus prays for, is not an alms given to them out of pity, but an honest sharing of His heritage in heaven!

How would we react if we meet Pilate, Herod, the Chief Priests, Pharisees as well as Judas in Heaven? Isn’t it high time we prayed for these ‘friends’ of ours that they may share in the Eternal Banquet? I see this as the better option when faced with the violence of ISIS and other mis-guided (or, should I say, differently-guided) groups! “Forgive them, they know not what they do.”

The homily of Fr Rolheiser, written for Good Friday, serves as an apt reflection for the Divine Mercy Sunday too. Jesus, the ‘wounded healer’ comes to show his wounds to Thomas in order to heal him and win him back. Showing the wounds is not a gesture of celebrating the victory of Jesus. It is rather a reminder to the disciples to overcome all the wounded feelings they have accumulated during the Passion. It was an invitation to forgive the Romans and the Jewish Leaders of all the wounds they had inflicted on the disciples and would continue to inflict on them. Jesus invites Thomas, his other disciples and us to feel with him, to suffer with him – the literal meaning of ‘Compassion’.

Abbot Christian de Chergé and his grave 

இறை இரக்கத்தின் ஞாயிறு

பேரரசன் நெப்போலியனிடம் ஒருநாள், வயதான ஒரு தாய், கலங்கிய கண்களுடன் வந்து சேர்ந்தார். படைவீரனான தன் மகன் மீது, பேரரசன் நெப்போலியன் கருணை காட்டவேண்டும் என்று அவ்வீரனின் தாய் மன்றாடினார். பேரரசன் அத்தாயிடம், "உங்கள் மகன் இரண்டாம் முறையாக மிகப்பெரியத் தவறு செய்துள்ளான். எனவே, அவனுக்கு மரண தண்டனை தருவதே நீதி," என்று கூறினார். அத்தாய் உடனே, பேரரசன்முன் மண்டியிட்டு, "நான் உங்களிடம் கேட்பது, நீதியல்ல அரசே! நான் கேட்பது, இரக்கமே!" என்று கூறினார். உடனே பேரரசன், தாயிடம், "அவன் இரக்கம் பெறுவதற்குத் தகுதியற்றவன்" என்று கூறினார். அத்தாய் மன்னரிடம், "தகுதி கருதி வருவது இரக்கம் அல்ல. தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், வெளிப்படுவதுதான் இரக்கம். அந்த இரக்கத்தையே நான் உங்களிடம் கேட்கிறேன்!" என்று மன்றாடினார். சிறிது நேர அமைதிக்குப் பின், பேரரசன் நெப்போலியன் அத்தாயிடம், "நீங்கள் கேட்ட இரக்கத்தை தருகிறேன். உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள்!" என்று கூறினார்.
தகுதி, தரம் பார்க்காமல், தயக்கம் ஏதுமில்லாமல், இரவெல்லாம் இறங்கிவரும் பனிபோல, நம் உள்ளங்களை நனைப்பதே இரக்கம். அதிலும் சிறப்பாக, தகுதியற்றவர்களை, தவறி வீழ்ந்தவர்களைத் தேடி, மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து வருவதே, இறை இரக்கத்தின் இலக்கணம்.

இரக்கத்தின் வடிவே இறைவன் என்பதை, எல்லா மதங்களும் ஆணித்தரமாகச் சொல்கின்றன. இரக்கமே உருவான இறைவனைக் கொண்டாட திருஅவை நம்மை இன்று அழைக்கிறதுஉயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை, இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கிறோம். இறை இரக்கத்தின் ஞாயிறை, வழிபாட்டு காலத்தின் ஒரு பகுதியாக 2000மாம் ஆண்டில் இணைத்தவர், திருத்தந்தை 2ம் ஜான்பால். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய இரவு, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இறைவனின் இரக்கத்தில் இரண்டறக் கலந்தார். 2011ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், முத்திப்பேறு பெற்றவராகவும், 2014ம் ஆண்டு, அதே இறை இரக்கத்தின் ஞாயிறன்று, புனிதராகவும் உயர்த்தப்பட்டார்.
திருத்தந்தையர், 2ம் ஜான்பால் அவர்களையும், 23ம் ஜான் அவர்களையும் புனிதர்களாக உயர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏன் 'இறை இரக்கத்தின் ஞாயிறை'த் தேர்ந்தெடுத்தார் என்று, செய்தியாளர்கள், அவரிடம் கேட்டபோது, அவர், "இவ்வுலகம் என்றுமில்லாத அளவுக்கு இரக்கத்தை இழந்து தவிக்கிறது. எனவே, நாம் வாழும் உலகிற்கு 'இரக்கத்தின் காலம்' (the age of mercy) மிக அதிகமாகத் தேவைப்படுகிறது" என்று பதில் சொன்னார்.
இவ்வுலகம் என்றுமில்லாத அளவு இரக்கத்தை இழந்து தவிக்கிறது என்பதை நம் உள்ளங்களில் ஆணி கொண்டு அறைந்துள்ளது, அண்மையில் நாம் கடந்து வந்த புனித வாரம். ஏப்ரல் 9, புனித வாரத்தின் முதல் நாளான குருத்து ஞாயிறன்று, எகிப்து நாட்டின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கோவில்கள் இரண்டில், வழிபாட்டு நேரத்தில், தற்கொலை குண்டுதாரிகள் இருவர், தங்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததால், 47 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேலானோர் காயமுற்றனர். புனித வாரத்தின் இறுதி நாள், சனிக்கிழமை, சிரியா நாட்டில், போரின் கொடுமையிலிருந்து தப்பித்துச் செல்வோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 126 பேர் கொல்லப்பட்டனர், இவர்களில், 70க்கும் அதிகமானோர், குழந்தைகள்.
கடந்த ஆண்டு, (2016) உலகெங்கும் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடப்பட்டபோது, பாகிஸ்தான், இலாகூர் நகர் பூங்காவில், நிகழ்ந்த தற்கொலை குண்டுவெடிப்பில், 75 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாண்டு, அத்தகைய முயற்சியை இலாகூர் பேராலயத்தில் ஓருவர் மேற்கொள்ளச் செல்லும் வழியில், காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றதால், அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கப்படவில்லை.

அர்த்தம் எதுவுமே இல்லாமல், வன்முறைகள் நிகழும்போது, நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தரப்படும் வழிகள், மன்னிப்பு, மற்றும் செபம். இவ்விரண்டையும் இணைத்து, இயேசு கல்வாரியில் சொன்ன வார்த்தைகள், அடிக்கடி நமக்கு நினைவுறுத்தப்படுகின்றன. "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34) இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடும்போது, கல்வாரியில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு, தன் கொலைகாரர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டிய சொற்களை, இந்த ஞாயிறு வழிபாட்டின்போது புரிந்துகொள்ள முயல்வோம்.

இயேசு கூறிய இவ்வார்த்தைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இருவேறு மடல்கள் உதவியாக இருக்கும். முதல் மடல், கடந்த பல மாதங்களாக, சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு மடல். 2015ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை, பாரிஸ் மாநகரிலும், புறநகர்ப் பகுதியிலும் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தன் இளம் மனைவியை இழந்த ஒருவர், தீவிரவாதிகளுக்கு எழுதியுள்ள திறந்த மடல் இது:

"வெள்ளிக்கிழமை மாலை, ஓர் அற்புத உயிரை நீங்கள் திருடிக் கொண்டீர்கள். அவர்தான் என் அன்பு மனைவி, என் மகனின் தாய். ஆனாலும், என் வெறுப்பை உங்களால் பெறமுடியாது. நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை; நீங்கள் எல்லாருமே இறந்த ஆன்மாக்கள்.
கடவுளுக்காகக் கண்மூடித்தனமாக நீங்கள் கொல்கிறீர்களே; அந்தக் கடவுளின் சாயலில் நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றால், என் மனைவியின் உடலைத்  துளைத்த உங்கள் ஒவ்வொரு குண்டும், அந்தக் கடவுளின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருக்கும்.
முடியாது. என் வெறுப்பைப் பெறும் திருப்தியை உங்களுக்கு நான் தரமுடியாது. அதைத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்! வெறுப்புக்கு, கோபத்தால் நான் விடையளித்தால், உங்களை ஆட்டிப்படைக்கும் அறியாமைக்கு நானும் அடிமையாகிவிடுவேன்.
நான் பயத்தில் வாழவேண்டும், எனக்கு அருகிலிருப்போர் அனைவரையும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். அது நிச்சயம் நடக்காது. நீங்கள் தோற்றுவிட்டீர்கள். என் பாதுகாப்பிற்காக, என் உள்மனச் சுதந்திரத்தை, பலிகொடுக்க மாட்டேன்.
இப்போது இருப்பது, நாங்கள் இருவர் மட்டுமே, நானும், என் மகனும். ஆனால், உலகின் இராணுவங்களை விட, நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள். என் செல்ல மகன், வாழப்போகும் ஒவ்வோரு நாளும், தன் மகிழ்வாலும், சுதந்திரத்தாலும் உங்களை அவன் அவமானப் படுத்திக்கொண்டே இருப்பான்."

Helene Muyal என்ற தன் இளம் மனைவியை இழந்த, Antoine Leiris என்ற பத்திரிகையாளர், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட திறந்த மடல் இது. தெளிவான, துணிவான, உணர்வுகளை வெளியிடும் இம்மடல், வெறுப்புக்குப் பணியமாட்டேன் என்ற உன்னத உண்மையைச் சொல்கிறது. அதேவேளை, இரக்கம் என்ற உண்மைக்குள் இன்னும் ஆழமாகச் செல்லாமல் எழுதப்பட்ட மடலோ என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இத்தகைய மடலை வாசிக்கும் வன்முறையாளர்களின் வெறுப்பு இன்னும் கூடுமோ என்று அச்சமும் எழுகின்றது.

இதிலிருந்து மாறுபட்ட மற்றொரு மடல், ஒரு துறவியால் எழுதப்பட்டது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட Christian de Chergé என்ற ஒரு துறவி, தன் மரணத்திற்கு முன் எழுதிய ஒரு மடலைச் சிந்தித்துப் பார்க்கலாம். Cistercian துறவுச் சபையைச் சேர்ந்த அருள்பணி Christian அவர்கள், அல்ஜீரியா நாட்டில் பணியாற்றியபோது, இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டார். அல்ஜீரியாவில் பணியாற்றுவதற்கென, இவர், இஸ்லாமிய மதத்தையும், குர்ஆனையும் ஆழமாகப் படித்துத் தேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர்.
தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்தபோது, அருள்பணி Christian அவர்கள், எழுதிய ஒரு மடல், உலகில் நிலவும் வன்முறைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றிற்கு நம் பதிலிறுப்பு எவ்விதம் அமையவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். இதோ, அருள்பணி Christian அவர்கள், எழுதிவைத்த இறுதி சாசனம்:

"எந்நேரமும் எனக்கு மரணம் வரலாம் - இன்று, இப்போது அது வரலாம். தீவிரவாதத்தின் பலிகடாவாக நான் மாறும்போது, என் துறவுக் குடும்பம், என் உறவினர் அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். என் வாழ்வு, இறைவனுக்கும், இந்நாட்டுக்கும் முற்றிலும் வழங்கப்பட்டது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். என்னைப் போலவே, கொடூரமான மரணங்களைச் சந்தித்து, மறக்கப்பட்ட பலரை நினைவில் கொள்ளுங்கள்.
என் மரணம் நெருங்கிவரும் வேளையில், என்னை மன்னிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவேண்டும். அதேவண்ணம், என்னைக் கொல்பவர்களுக்கு மன்னிப்பு வேண்டவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும். என் கொலைக்குக் காரணம் இவர்களே என்று, கண்மூடித்தனமாக, இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டால், அது என்னை மகிழ்விக்காது. பொதுப்படையாக எழும் இவ்விதக் குற்றச்சாட்டுகளால், அல்ஜீரிய மக்களையும், இஸ்லாமியரையும் சந்தேகத்தோடு, மரியாதையின்றி பார்க்கக்கூடிய சூழல் உருவாகும்.
இறைவன் விரும்பினால், என் இறுதி நேரத்தில் நான் செய்ய விழைவது இதுதான். தந்தையாம் இறைவன், இஸ்லாமியர் அனைவரையும், தன் அன்புக் குழந்தைகளாகப் பார்ப்பதுபோல், நானும் அவர்களைப் பார்க்கும் வரம் வேண்டுகிறேன். என் இறுதி நேரத்தை நிர்ணயிக்கும் அந்த ஒருவருக்கு நான் நன்றி சொல்கிறேன். இறைவனின் சாயலை உம்மில் காண்கிறேன். இறைவனுக்கு விருப்பமானால், நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சந்திப்போம். ஆமென்.

அருள்பணி Christian அவர்கள் எழுதியுள்ள இம்மடல், காயங்களைத் திறப்பதற்குப் பதில், அந்தக் காயங்களிலேயே மீட்பைக் காண்பதற்கு அழைப்பு விடுக்கிறது. இதுதான், அன்று, இயேசுவுக்கும் தோமாவுக்கும் இடையே நிகழ்ந்தது. கல்வாரியில் காயப்பட்டது போதாதென்று, சீடர்களின் சந்தேகத்தாலும், நம்பிக்கையிழந்த நிலையாலும், இயேசு, மீண்டும் காயப்படுகிறார். இருப்பினும், அந்தக் காயங்களைத் தொடுவதற்கு தன் சீடர்களையும், நம்மையும் அழைக்கிறார். காயங்களைத் தொடுவது, மீண்டும் வலியை உருவாக்கும். ஆனால், அன்புடன், நம்பிக்கையுடன் தொடும்போது, காயங்கள் குணமாவதற்கும் வழி பிறக்கும். இதுதான், அன்று, இயேசுவுக்கும் தோமாவுக்கும் இடையே நிகழ்ந்தது.

தன் காயங்களைத் தொடுவதற்கு இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, தோமா, இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. உடலால், தோமா, இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே, தோமாவின் மனதை, இயேசு, மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை, தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28)
இயேசுவை, கடவுள் என்று அறிக்கையிட்ட முதல் மனிதப்பிறவி, தோமாதான். இவ்விதம் ஆழமாய்த் தொட்டு, தன்னை மீட்புக்கு அழைத்துச்சென்ற இயேசு கிறிஸ்துவை, உலகெங்கும், குறிப்பாக, இந்தியாவில் அறிமுகம் செய்தவர், திருத்தூதர், தோமா.
இறைவனின் இரக்கம், சந்தேகப் புயல்களை அடக்கும்சந்தேக மலைகளைத் தகர்க்கும்; சந்தேகக் கல்லறைகளைத் திறக்கும். உயிர்த்த இறைவனைத் தொட்டுணர அழைக்கும். இந்த இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாஎன்றழைக்கப்படும் புனித தோமையாரின் பரிந்துரையோடு வேண்டுவோம்.