27 November, 2020

As if only a few more days to live… இருப்பதெல்லாம் ஒரு சில நாள்களே...

 
Wating for the Lord

I Sunday of Advent

The cyclonic storm 'Nivar' crossed Tamil Nadu and Puducherry coasts between November 25 and 26. Thankfully, the storm did not cause too much damage as was predicted by the Indian Meterological Department and the media.

Three years back, on Sunday, November 26, 2017, residents of many coastal towns in Tamil Nadu must have lived in panic. There were rumours (created by the irresponsible sharing in the social media) that a tsunami was about to strike the coastal towns of Tamil Nadu, especially Nagapattinam. Thank God, this rumour did not come true. The number 26, and the fact that it was a Sunday, must have brought back memories of the tragic tsunami that devastated India, Sri Lanka, Indonesia and many other Asian countries on December 26, 2004, the day after Christmas, which also was a Sunday – the Feast of the Holy Family. Thousands of families were uprooted on that day due to the tidal waves that crashed on us without any prior warning.

Added to the various natural calamities we have faced so far, this year, 2020, we faced one of the worst calamities in our living memory – COVID-19 pandemic. Many media outlets have spoken of this pandemic as the ‘beginning of the end’ – the end of the world!

When there is a natural disaster – like earthquake, tsunami, eruption of a volcano, hurricane, pandemic etc. – our minds tend to think of the end of the world. A few years back, some of us, or, most of us, may have had anxious moments… anxious because the end of the world was imminent. According to the Mayan prediction, 21-12-2012, that is, 21st December 2012 was to be the end of the world. Such predictions and rumours have caused lots of anxiety for the human race right from the time of Christ… Or, perhaps, even earlier!
  • In A.D. 204, Hippolytus, a Christian writer in Rome, recorded that a bishop was convinced that the Lord was going to return immediately. He urged his followers to sell all their possessions and to follow him into the wilderness to await the Lord’s coming.
  • At the end of the first millennium, anticipation of the Second Coming ran high. On the last day of 999, the basilica of St. Peter’s at Rome was filled with people who were weeping and trembling as they expected the world to end.
  • In 1978 the media flashed the shocking news of the mass suicide of 914 men and women from the U.S.A., belonging to a doomsday cult called The People’s Temple, in Jonestown, Guyana at the instruction of their paranoid leader Rev. Warren (Jim) Jones.
  • In March 1997, 39 members (21 women and 18 men) of a California cult called Heaven’s Gate, headed by Marshall Applewhite, exploded onto the national scene with their mass suicide in a luxurious mansion at Rancho Santa Fe near San Diego in California. This was their preparation for being safely transported to heaven by a UFO, thus avoiding the tribulations accompanying the immediate end of the world.
  • This anxiety ran high, once again, as we approached the end of 1999 and 2000. 
When we speak about ‘The End’, most of our thoughts and conversations are about how ‘terrible that day would be when the Master returns’. Some of us would have come across the experience, when someone would suddenly thrust a paper, or a pamphlet into our hands as we were walking down the road. Those were the roadside preachers who were trying to warn the people of the impending disaster. “The Day of the Lord is at hand”… was their constant theme.

Today we begin a new liturgical year with the First Sunday of Advent. This season is meant to prepare us for the coming of the Divine Child at Christmas. This is also a season where we can think about the Second Coming of Christ. This is the theme of today’s gospel - Mark 13: 33-37

We are NOT SURE of the when, where and how of this Second Coming and the end of the world. It could come tomorrow or after hundred thousand years. But, we are VERY SURE of our going out of this world one day. Instead of spending our time and energy worrying about the end of the world, it would  surely be beneficial to us to spend time on our departure from the world. Even in our departure, instead of spending time on when we would depart, we can think about how we could or should depart. In today’s gospel, Christ gives us the necessary tips as to how we should prepare for our departure... Take heed, be watchful, be responsible!

Being watchful and being responsible have different shades of meaning. We can be watchful and be responsible out of fear or out of love. We can carry out our responsibilities for the sake of pleasing others (trying to be on our best behaviour in front of the Master) or, simply being honest and sincere in what we are doing, irrespective of whether we are being watched or not. Two stories can illustrate how one can work with dedication even if no one is watching over them.

Some years ago, a tourist visited one of the famous villas on the shores of Lake Como in northern Italy. An old gardener opened the gates, and the visitor stepped into the garden, which was perfectly kept. The visitor asked when the owner was last there. He was told, "Twelve years ago." Did he ever write? No. Where did he get instructions? From his agent in Milan. Does the master ever come? No. "But, you keep the grounds as though your master were coming back tomorrow", said the visitor. The old gardener quickly replied, "Not tomorrow, but today, sir, today."

Years ago, when 20th Century Fox advertised in the New York papers to fill a vacancy in its sales force, one applicant replied: "I am at present selling furniture at the address below. You may judge my ability as a salesperson if you will stop in to see me at any time, pretending that you are interested in buying furniture. When you come in, you can identify me by my red hair. And I should have no way of identifying you. Such salesmanship as I exhibit during your visit, therefore, will be no more than my usual workday approach and not a special effort to impress a prospective employer." From among more than 1500 applicants, this person got the job.

Doing something to please one’s own conscience and, ultimately God, would set the enlightened apart from the unenlightened, who keep doing things to please others all the time. Here are two samples from the lives of the enlightened…

John Wesley, an English cleric, theologian and evangelist who was the founder of the Methodist movement, was once asked what he would do if he knew that that was his last day on earth. He replied, "At 4 o'clock I would have some tea. At 6 I would visit Mrs. Brown in the hospital. Then at 7:30 I would conduct a mid-week prayer service. At 10 I would go to bed and would wake up in glory."

Here is an incident from the life of St.Philip Neri: While Philip was playing cards with his friends, one of them asked him what he would do if he knew that his death was imminent. Without any hesitation, Philip told him that he would continue playing cards. Knowing the sense of humour Philip had, one can well imagine that if he had died playing cards, he would simply continue playing cards on the other side of the grave as well. Only his companions would have changed to… God and angles!

Even if we are not so enlightened as John Wesley, or, St Philip Neri, some hard realities of life help each of us to see more clearly the purpose of our lives. Probably most of us have heard of, or, read some of John Grisham’s novels, such as The Firm, Pelican Brief, and The Client. Despite his fame and wealth, Grisham makes a concerted effort to focus on things that have lasting meaning, including his faith in God.
Grisham remembers, as a young law student, the remarkable advice of a friend: “One of my best friends in college died when he was 25, just a few years after we graduated from Mississippi State University. I was in law school, and he called me one day and wanted to get together. So we had lunch, and he told me he had cancer. I couldn't believe it.
‘What do you do when you realize you are about to die?’ I asked. ‘It's real simple,’ he said. ‘You get things right with God, and you spend as much time with those you love as you can. Then you settle up with everybody else.’ Finally, he said, ‘You know, really, you ought to live every day, like you have only a few more days to live.’ Grisham concludes: ‘I haven't forgotten those words’”.
(Will Norton, Jr., in Christianity Today. Christian Reader, Vol.32)

“We ought to live every day, like we have only a few more days to live”.
Let us beg of God to give us this enlightenment! 
As we begin our Advent season this year amidst the trials of the pandemic, cyclone and the aggressive ‘dictatorship-like’ behaviour of our politicians, we pray in the words of the Prophet Isaiah: “O that thou wouldst rend the heavens and come down… to make thy name known to thy adversaries, and that the nations might tremble at thy presence!” (Is. 64:1-2)
Oh that you would rend the heavens...

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

நவம்பர் 25, 26 ஆகிய நாள்களில், தமிழகமும், புதுச்சேரியும், ‘நிவர் (Nivar) புயலின் தாக்கத்தை உணர்ந்தன. இந்தப் புயலைக்குறித்து வானிலை ஆய்வுகளும், ஊடகங்களும் கூறிய, பெரும் அழிவுகளை உருவாக்காமல் இது கடந்துசென்றதற்காக, இறைவனுக்கு நன்றி சொல்வோம். அதேபோல், மூன்று ஆண்டுகளுக்கு முன், 2017ம் ஆண்டு, நவம்பர் 26, ஞாயிறு, தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக, நாகப்பட்டினத்தில் சுனாமி வரக்கூடும் என்ற வதந்தி வலம் வந்தது. கடவுளின் கருணையால், அந்த வதந்தி உண்மையாகவில்லை. பலருடைய மனங்களில், 26 என்ற தேதி, 2004ம் ஆண்டு, டிசம்பர் 26ம் தேதியை நினைவுக்குக் கொணர்ந்திருக்கக்கூடும். அன்று, கிறிஸ்மஸ் முடிந்து அடுத்தநாள், ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் பல ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமிப் பேரலைகள், அழிவுகளைக் கொணர்ந்தன. பல இலட்சம் மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட ஒரு பேரழிவு அது.

இவ்வாறு, அவ்வப்போது, நம்மை வதைத்துவரும் இயற்கைப் பேரிடர்கள் போதாதென்று, 2020 ஆண்டு முழுவதும் உலகின் பல நாடுகளில், கோவிட்-19 கொள்ளைநோயின் பரவல், அலை அலையாக எழுந்து, ஆயிரமாயிரம் உயிர்களைப் பலிவாங்கியவண்ணம் உள்ளது. பலர், இந்தக் கொள்ளைநோயை, உலகமுடிவின் ஓர் அடையாளமாகக் கூறிவருகின்றனர்.

மனித வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், உலகம் முடியப்போகிறது என்ற செய்தி அடிக்கடி பேசப்பட்டுள்ளது. கி.பி.204ம் ஆண்டு Hippolytus என்ற கிறிஸ்தவ எழுத்தாளர், அப்போது வாழ்ந்த ஆயர் ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். உலகம் முடியப்போகிறது என்பதைத் தீவிரமாக நம்பிய அந்த ஆயர், தன் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தார். அவர்களிடம் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அவருடன் பாலை நிலத்திற்கு வரும்படி அவர்களை அழைத்தார். அங்கு அவர்கள் இறைவனின் வரவுக்குக் காத்திருக்கலாம் என்று சொன்னார்.
கி.பி.999ம் ஆண்டின் இறுதி நாட்களில் உலகம் முடியப்போகிறது என்று எண்ணிய பல்லாயிரம் கிறிஸ்தவர்கள், உரோம் நகரில், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடி, அழுகையோடும், அச்சத்தோடும், உலகமுடிவை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் உலகமுடிவு வந்துவிட்டது என்று தீர்மானித்த இரு குழுக்கள் வேதனையான முடிவுகள் எடுத்ததை செய்திகளில் வாசித்தோம். 1978ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டிலும் உலகமுடிவு வந்துவிட்டதென்று உணர்ந்த இரு குழுவினர், நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்ற செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தந்தன. 1999ம் ஆண்டு முடிந்து, 2000மாம் ஆண்டு துவங்கியபோது, இதே கலக்கம் மீண்டும் தலைதூக்கியது, நமக்கு நினைவிருக்கலாம்.

நகரங்களில், அவ்வப்போது, சாலையோரங்களில் யாராவது ஒருவர் நின்றுகொண்டு, போவோர் வருவோர் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை அல்லது சிறு புத்தகங்களை இலவசமாக வழங்குவதை பார்த்திருக்கிறோம். அந்தப் பிரசுரங்களில் அடிக்கடி நாம் காணக்கூடிய ஒரு செய்தி: "ஆண்டவரின் நாள் அண்மித்துவிட்டது... விழித்தெழு" என்ற செய்தி. ஒவ்வொரு முறையும், உலகில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி, கொள்ளைநோய் போன்ற பேரிடர்கள் நிகழும்போது, உலகமுடிவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், சிந்திக்கிறோம்.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று, புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறோம். இறைமகனை, குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருப்பதெற்கென உருவாக்கப்பட்ட திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் இரண்டாம் முறை வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது. - மாற்கு நற்செய்தி 13: 33-37

உலகமுடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள் சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலகவாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்தால், பயன்பெறலாம். எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க, இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.

விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு. பொறுப்புடன் நடந்துகொள்வது என்பது, தலைவர் இருக்கும்போது நல்லபெயர் எடுக்கவேண்டும்; அவர் இல்லாதபோது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று நடிப்பது அல்ல. தலைவர் என்னை மதித்து ஒப்படைத்துள்ள பொறுப்பை, எல்லா நேரத்திலும் நானும் மதித்து நடந்து கொள்வதுதான், உண்மையான பொறுப்புணர்வு.

இத்தாலி நாட்டின் வடபகுதியில் அழகிய ஒரு மாளிகை இருந்தது. அதைச்சுற்றி அழகான ஒரு தோட்டமும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் கவர்ந்துவந்த அந்த மாளிகையையும், தோட்டத்தையும், வயதில் முதிர்ந்த ஒருவர் பராமரித்து வந்தார். ஒருநாள், சுற்றுலாப் பயணி ஒருவர், அந்த மேற்பார்வையாளரிடம், "இந்த மாளிகையின் உரிமையாளர் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன?" என்று கேட்டார். மேற்பார்வையாளர், "12 ஆண்டுகள் ஆகின்றன" என்று சொன்னார். "ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல, முதலாளி, எதுவும் கடிதமோ, வேறு தொடர்போ வைத்துள்ளாரா?" என்று கேட்டதற்கு, அவர், "இல்லை" என்று பதில் சொன்னார். "நீங்கள் இந்த மாளிகையையும், தோட்டத்தையும் சுத்தம் செய்வதைப் பார்க்கும்போது, உங்கள் முதலாளி ஏதோ நாளையே வரப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று சொன்ன அந்த சுற்றுலாப் பயணியைப் பார்த்து சிரித்தார் மேற்பார்வையாளர். பின்னர், "நாளை இல்லை நண்பரே, இன்றே அவர் வரக்கூடும்" என்று பதில் சொன்னார்.

12 ஆண்டுகளாய், ஒவ்வொரு நாளும் 'தலைவன் இன்றே வரக்கூடும்' என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளைச் செய்த இந்த மேற்பார்வையாளரைப் போல் நாம் செயலாற்றவேண்டும் என்பதையே இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார். தலைவன் வந்தாலும் சரி, வராவிடினும் சரி, தனக்கு தரப்பட்டுள்ள பணிகளை சரிவர செய்யவேண்டும் என்று எண்ணுவதற்கு, தனியொரு பக்குவம் பெறவேண்டும்.

20th Century Fox என்ற திரைப்பட நிறுவனம், 'விற்பனை செய்யும் திறமை பெற்றவர் ஒருவர் தேவை' என்று, ஒருமுறை விளம்பரம் வெளியிட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த விளம்பரத்தைக் கண்டு, விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி அனுப்பியிருந்த பதில், நிறுவனத்தினரின் கவனத்தை ஈர்த்தது. அந்த விண்ணப்பத்தில், ஒரு கடையின் முகவரியைக் குறிப்பிட்டு அப்பெண் எழுதியிருந்தது இதுதான்:
"நான் தற்போது இந்தக் கடையில் மேசை, நாற்காலிகள் விற்கும் பணி செய்து வருகிறேன். இந்தக் கடைக்கு நீங்கள் வந்தால் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இங்கிருக்கும் பணியாளர்களில் எனக்கு மட்டுமே தலைமுடி சிவந்த நிறத்தில் உள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி நீங்கள் கடைக்கு வந்து, நான் பணிசெய்யும் விதத்தைக் கவனிக்கலாம். நீங்கள் யாரென்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே உங்கள் நன்மதிப்பைப் பெறும் வகையில், நீங்கள் வரும் நேரம் மட்டும் நான் வித்தியாசமாக நடந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. நான் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யும் திறமையையே நீங்கள் வரும் நாளிலும் நான் வெளிப்படுத்துவேன். அந்தத் திறமை உங்களுக்குப் பிடித்திருந்தால், எனக்கு உங்கள் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுங்கள்" என்று அந்தப் பெண் எழுதியிருந்தார். வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்த 1,500 பேரில், அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை, சொல்லவும் வேண்டுமா?

பிறரது கவனம் நம்மீது இருக்கிறது என்பதை உணரும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் முறை வேறுபட்டிருக்கும். குழந்தைகளிடமும், மிகவும் வயதானவர்களிடமும் இத்தகைய வேறுபாடுகள் அதிகம் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் மிகவும் ஆழ்ந்து தெளிந்தவர்களிடமும் இத்தகைய வேறுபாடுகள் வெளிப்படாது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி, அவர்கள் எந்த நேரத்திலும், ஒரே விதமான, உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். 

"A joyful heart is more easily made perfect than a downcast one." "சோகத்தில் வாழும் ஒரு மனதைவிட, மகிழ்வில் நிறைந்த மனம், எளிதில் உன்னதத்தை அடையும்" என்ற விருதுவாக்குடன் வாழ்ந்தவர், புனித பிலிப் நேரி. நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இப்புனிதரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு இது. புனித பிலிப் நேரி அவர்கள், ஒருநாள், நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப்பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர், அவரிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ சாகப்போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப், அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம்.
சாவை பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள் அதைக் கண்டு பயப்படலாம். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, சாவைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும் நல்ல விதமாக பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு சாவு எந்த வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு புனித பிலிப் நேரி அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு. சாவின் வழியாகத் தன்னைச் சந்திக்கப் போவது அல்லது தான் சென்றடையப் போவது இறைவன் தான் என்றான பிறகு ஏன் பயம், பரபரப்பு எல்லாம்? தேவையில்லையே. பிலிப் நேரியைப் பொருத்தவரை நான் இப்படியும் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த நண்பர் சொன்னது போலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில் அந்த இறைவனோடு தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார் பிலிப். வாழ்க்கையில் இறைவனை அடிக்கடி சந்தித்து வந்த அவருக்கு பயம் பரபரப்பு எதற்கு?

இந்த நிலை எல்லாருக்கும் கிடைக்கும் ஒரு பாக்கியம் அல்ல. சூழலுக்குத் தக்கதுபோல் வாழ்வை மாற்றாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து, நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
ஜான் வெஸ்லி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது பொறுப்புடன் சரியான கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வு என்ற எண்ணத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று அவரிடம் ஒருவர் கேட்டபோது, அவர் சொன்ன பதில் இதுதான்: "நான் மாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை, மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச்செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவற்றை நாம் எவ்வகையில் கண்ணோக்குகிறோம் என்பதை ஆய்வுசெய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதி காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமையவேண்டும் என்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

ஆங்கில மொழியில் நெடுங்கதைகள் எழுதுவோரில் புகழ்பெற்ற எழுத்தாளர், John Grisham அவர்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் இவர் எழுதிய பல நெடுங்கதைகள் (The Firm, The Pelican Brief, The Rainmaker, A Time to Kill) திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. புகழும், செல்வமும் நிறைந்துள்ள இவர், வாழ்வில் நீடித்து நிலைக்கும் உண்மைகளுக்கு, குறிப்பாக, கடவுள் மீது நாம் கொள்ளும் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தான் கல்லூரியில், சட்டப்படிப்பு பயின்றுவந்த வேளையில், தன் நண்பர் ஒருவர் தனக்குச் சொல்லித்தந்த ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைப் பற்றி, அவர் வழங்கிய ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்:
கல்லூரியில் என்னுடன் பயின்ற நெருங்கிய நண்பர் ஒருவர், தன் 25வது வயதில் இறந்துபோனார். நாங்கள் கல்லூரியில் பயின்ற வேளையில், அவர் ஒருநாள் என்னைச் சந்திக்க விழைவதாகக் கூறினார். எனவே, அன்று, மதிய உணவு வேளையில் நாங்கள் சந்தித்தோம். அப்போது, அவர், திடீரென என்னிடம், தனக்கு புற்றுநோய் உள்ளதாகவும், இன்னும் சிலநாள்களே வாழப்போவதாகவும் கூறியதும், நான் அதிர்ச்சியடைந்தேன். சிறிது நேரம் சென்று, நான் அவரிடம், "மரணம் நெருங்கியுள்ளது என்பதை அறியும்போது, என்ன செய்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், எனக்குள் ஆழமான தாக்கங்களை உருவாக்கியது. அவர் சொன்னது இதுதான்: "அது உண்மையிலேயே எளிமையான ஒரு விடயம். மரணம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்ததும், முதலில் கடவுளுடன் அனைத்தையம் சீராக்கவேண்டும். நீ யாரை அதிகம் நேசிக்கிறாயோ, அவர்களுடன் கூடுதலான நேரத்தைச் செலவழிக்கவேண்டும். மற்றவர்களுக்கு உரியவற்றை, திருப்பிக்கொடுக்கவேண்டும்" என்று கூறிய நண்பர், இறுதியாக, "உனக்கு ஒன்று தெரியுமா? உனக்கு இருப்பதெல்லாம் ஒரு சில நாள்களே என்ற எண்ணத்துடன் நீ ஒவ்வொரு நாளும் வாழ்வது, எவ்வளவோ மேலானது" என்று சொல்லிமுடித்தார். அவர் சொன்னதை, இன்றுவரை நான் மறக்காமல் வாழ்கிறேன்.

"உனக்கு இருப்பதெல்லாம் ஒரு சில நாள்களே என்ற எண்ணத்துடன் நீ ஒவ்வொரு நாளும் வாழ்வது, எவ்வளவோ மேலானது" என்று John Grisham அவர்களின் நண்பர் சொன்ன சொற்கள், நம் உள்ளங்களில் தொடர்ந்து எதிரொலிக்கவேண்டும் என்று இறைவனை மன்றாடுவோம்.

இயற்கைப் பேரிடர்கள், கொள்ளைநோய், அரசியல் தலைவர்களின் அத்துமீறிய அநீதிகள் என்ற அச்சுறுத்தும் சூழலில் நாம் திருவருகைக் காலத்தைத் துவக்குகிறோம். இன்றைய வழிபாட்டின் முதல் வாசகத்தில், "நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?" (எசாயா 64:1) என்று இறைவாக்கினர் எசாயா இறைவனிடம், வேண்டுவதுபோல், நாமும், இறைவனை, நம் நடுவே இறங்கிவருமாறு அழைப்போம்.


24 November, 2020

விவிலியத்தேடல்: உயிர்ப்புக்குப்பின்னும் தொடரும் புதுமைகள் 1

  
Jumping frog

விதையாகும் கதைகள் : கேட்கச் செவியின்றி இருப்பதும் நலமே!

தவளைக் கூட்டமொன்று காட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென, அக்கூட்டத்திலிருந்த மூன்று தவளைகள் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டன. இதைக் கண்ட தவளைக் கூட்டம் அந்தக் குழியைச் சுற்றி நின்று கீழே பார்த்தன. அந்த மூன்று தவளைகளும் மீண்டும் மேலே வரும் முயற்சியில் குதிக்க ஆரம்பித்தன. அவை எவ்வளவு முயன்றும், அந்தக் குழியின் ஆழத்தைத் தாண்டி, வெளியில் வருமளவு குதிக்க முடியவில்லை.

இந்தப் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற தவளைகள், ஒன்று சேர்ந்து, கத்த ஆரம்பித்தன. "நீங்கள் என்னதான் முயன்றாலும் வெளியே வரமுடியாது. எனவே, அங்கேயே தங்கிவிடுங்கள்" என்று தவளைகள் அனைத்தும் சேர்ந்து கத்தின. அந்தக் கத்தலையும் மீறி, மூன்று தவளைகளும் தொடர்நது குதித்தன. அவற்றில் இரு தவளைகள், விரைவில் சோர்வுற்று, மற்ற தவளைகள் கத்தியதற்கு ஏற்ப, குதிப்பதை நிறுத்திவிட்டன.

மூன்றாவது தவளை மட்டும், இன்னும் அதிக முயற்சி எடுத்தது. இறுதியில் அந்தத் தவளை குழியின் ஆழத்தையும் தாண்டி மேலே குதித்து, குழியைவிட்டு வெளியேறியது. இதைக் கண்ட மற்ற தவளைகள், "குதிக்கவேண்டாம் என்று நாங்கள் அவ்வளவு கத்தியும் நீ ஏன் கேட்கவில்லை?" என்று கோபமாகக் கேட்டன. அப்போது அந்தத் தவளை, "எனக்கு காது சரியாகக் கேட்காது. எனவே, நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காகத்தான் கத்துகிறீர்கள் என்றெண்ணி, இன்னும் அதிகமாக முயற்சி செய்தேன்" என்று புன்சிரிப்புடன் சொன்னது.

வார்த்தைகள்... ஆக்கவும், அழிக்கவும் வலிமை வாய்ந்தவை. அழிக்கும் வார்த்தைகள், ஓங்கி ஒலிக்கும்போது, அவற்றைக் கேட்காமல் இருப்பது, கூடுதலான வலிமையைத் தரக்கூடும்.

Jesus - after His Resurrection

உயிர்ப்புக்குப்பின்னும் தொடரும் புதுமைகள் 1

இயேசு, தன் பணிவாழ்வில் செய்த புதுமைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக நம் தேடல் பயணத்தை மேற்கொண்டோம். இனிவரும் தேடல்களில், இயேசுவின் உயிர்ப்புக்குப்பின் நிகழ்ந்த புதுமைகளில் நம் தேடல் முயற்சிகளைத் தொடர்வோம்.
தன் பணிவாழ்வில் இயேசு ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது பொதுவான கருத்து. இவையன்றி, இயேசு, பல நூறு புதுமைகளைச் செய்திருக்கக்கூடும். அவை அனைத்தையும் நற்செய்தியாளர்கள் பதிவு செய்யவில்லை. இக்கருத்தை, நற்செய்தியாளர் யோவான் தன் நற்செய்தியின் முடிவுரையாகக் கூறியுள்ளார். "வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை" (யோவான் 20:30) 

யோவான் நற்செய்தியில் மட்டுமல்ல, ஏனைய மூன்று நற்செய்திகளிலும் எழுதப்படாத அரும் அடையாளங்களை இயேசு தன் பணிவாழ்வில் செய்திருக்கக்கூடும். அவற்றில், தங்கள் நினைவுகளில் பதிந்தவற்றை மட்டுமே நான்கு நற்செய்தியாளர்களும் வழங்கியுள்ளனர். அதேவண்ணம், இயேசுவின் உயிர்ப்புக்குப்பின்னரும், பல்வேறு புதுமைகள் நிகழ்ந்திருக்கவேண்டும். இயேசு உயிர்த்தபின், இவ்வுலகில் நாற்பது நாள்கள் தங்கி, பல்வேறு நிகழ்வுகள் வழியே தான் உயிரோடிருப்பதை சீடர்களுக்கு உணர்த்தினார் என்பதை, திருத்தூதர் பணிகள் நூலின் துவக்கத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: இயேசு துன்புற்று இறந்த பின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். (திருத்தூதர் பணிகள் 1:3) இனிவரும் தேடல்களில், இந்தப் புதுமைகளைப்பற்றி நாம் சிந்திக்க முயல்வோம். 

ஒரு கோணத்தில் சிந்தித்தால், தன் உயிர்ப்புக்குப்பின், இயேசு, தன் சீடர்களைச் சந்தித்த அத்தனை நிகழ்வுகளையுமே, நாம் புதுமைகளாக எண்ணிப்பார்க்கலாம். உயிர்ப்பு என்ற எண்ணம் அதிகமாக வளர்ந்திராத யூத சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த சீடர்களுக்கு, இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதே, புரிந்துகொள்ள முடியாத, ஒரு புதுமையாக இருந்திருக்கும். எனவே, உயிர்ப்புக்குப்பின், இயேசு சீடர்களைச் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வும் ஒரு புதுமையாக அமைந்திருக்கும். அவர்கள், தங்கள் கண்களால் கண்டதை நம்ப இயலாமல் தவித்திருக்கலாம். அந்த நம்பிக்கையை வளர்க்கவே, இயேசு அவர்களை பலமுறை சந்தித்தார்.

சீடர்களில் ஒருவரான தோமா மட்டுமே, இயேசுவின் உயிர்ப்பை நம்பவில்லை என்பதை நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார். நம்ப மறுத்த தோமா உயிர்த்த இயேசுவைச் சந்தித்த நிகழ்வை, அவர், தன் நற்செய்தியின் நிறைவாகக் கூறியுள்ளார். (யோவான் 20: 19-31) 

திருத்தூதர் யோவான் எழுதிய நற்செய்தி, 20ம் பிரிவுடன் நிறைவுபெற்றது என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு தகவல். 21ம் பிரிவு, திருத்தூதர் யோவானின் சீடர்களில் ஒருவரால் எழுதப்பட்டது என்பதால், அது, 'பிற்சேர்க்கை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தன் நூலின் இறுதியில், இயேசு தோமாவை சந்தித்த அந்த நிகழ்வை யோவான் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் யோவான் பின்வரும் சொற்களுடன் தன் நற்செய்தியை நிறைவு செய்துள்ளார்: வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன. (யோவான் 20:30-31) 

மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், தான் நற்செய்தியை எழுதியதாக தன் நூலை நிறைவுசெய்யும் புனித யோவான், நம்பிக்கையற்றிருந்த தோமாவைக் குறித்த நிகழ்வை, முடிவரை போல பதிவுசெய்துள்ளார். உயிர்த்த இயேசுவை தோமா சந்தித்த அந்த நிகழ்வைக் கூறும் நற்செய்திப் பகுதியின் ஆரம்பத்தை, கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்தால், இயேசுவின் உயிர்ப்பை, தோமா மட்டும் சந்தேகப்படவில்லை. எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். 

யூதர்களுக்கு அஞ்சி, சீடர்கள், கதவு சன்னல் எல்லாவற்றையும் மூடி வைத்திருந்த (காண்க. யோவான் 20:19) அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றார். மூடியிருந்த கதவு காற்றில் இலேசாக ஆடினாலும், கதவை யாரோ தட்டுவது போலவும், தங்களைத் தாக்க யாரோ வந்துவிட்டது போலவும் சந்தேகத்தில், அச்சத்தில் வாழ்ந்தனர் சீடர்கள். அத்தகையதொருச் சூழலில், கதவு மூடியபடி இருக்க, இயேசு அவர்கள் நடுவே நின்றபோது, அவர்கள் மகிழ்ந்திருப்பார்களா? சந்தேகம் தான். அரண்டு போயிருப்பார்கள். யோவான் நற்செய்தியில் சீடர்கள் அச்சமுற்றதாக நேரடியான குறிப்பு எதுவும் இல்லை ஆனால், சீடர்கள் அச்சமுற்றனர் என்பதை, லூக்கா நற்செய்தி வெளிப்படையாகக் கூறுகிறது.
லூக்கா 24: 36-37
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று,  “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். 

லூக்கா, யோவான் என்ற இரண்டு நற்செய்திகளிலும் இயேசு அவர்களுக்குத் தன் கையையும், விலாவையும் காட்டினார் என்றும், தன்னைத் தொட்டுப் பார்க்க அழைத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. மூடப்பட்ட அறைக்கு நடுவே இயேசு வந்து நின்றதும், சீடர்கள், அவரை, மகிழ்வாய் வணங்கித் தொழுதிருந்தால், இயேசு அவர்களிடம் தன்னை வந்து தொடும்படி அழைப்பு விடுத்திருக்கமாட்டார். இல்லையா? அவர்கள் கண்களில் அச்சமும், சந்தேகமும் தெரிந்ததால், இயேசு இந்த அன்பு அழைப்பைத் தந்தார். 

இயேசுவிடம் கேட்கமுடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த இதே சந்தேகத்தைத்தான், தோமா, வாய்விட்டு சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில் பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்துகொள்ள முயல்வோம். 

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், தங்கள் பெற்றோர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப்போன நேரத்தில், அந்த உலகம் ஆணிவேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது.

எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசு அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர், இக்கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்தது, அவர்களது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது. அதுவரை, அவர்கள், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்துபோனது. 

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த தன் சீடர்களை இயேசு அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். இயேசு அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய, சாத்தப்பட்ட கதவுகள் ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை.  இந்தக் கதவுகள் எம்மாத்திரம். 

சாத்தப்பட்ட அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றதை, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள், புதுமை என்று குறிப்பிட்டுள்ளனர். கதவு, சன்னல்கள் எல்லாம் சாத்தப்பட்ட ஓர் அறைக்குள் உடலோடு ஒருவரால் வரமுடியுமா? முடியாது. இயற்கை நியதிக்கு, அறிவியல் கூற்றுகளுக்கு முரணான ஒரு செயல் அது. இயற்கை நியதிகள், அறிவியல் இவை மீறப்படும்போது, அதை, புதுமை என்று கூறுகிறோம். 

கதவுகள் மூடியிருந்த நிலையில் இயேசு சீடர்கள் முன் வந்து நின்றபோது, புதுமை செய்யும் தன் சக்தியால், அவர்களை, வியப்படையவோ, அச்சம் கொள்ளவோ செய்வது, இயேசுவின் நோக்கமாக இருந்திருக்காது. அவர்கள் எழுப்பியிருந்த சந்தேகச் சுவர்களைத் தகர்த்து, நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே, அவர் மூடியிருந்த கதவுகளைத் தாண்டி அவர்கள் நடுவே வந்தார். உடலோடு தங்கள் நடுவே நின்ற இயேசுவை, எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சீடர்கள் தடுமாறினர். 

இதேபோல், இயேசு, எம்மாவு சென்ற சீடர்களைத் தேடிச்சென்ற நிகழ்விலும், வழியெங்கும் அவர் அவர்களோடு உரையாடியவண்ணம் சென்றபோது, இயேசுதான் தங்களுடன் வருகிறார் என்பதை அவர்களால் உணரமுடியவில்லை. ஆனால், அன்று மாலை, அவர்களோடு உணவு அருந்த அமர்ந்தபோது, இயேசு அவர்கள் கண்களைத் திறந்தார். இந்நிகழ்வையும் விவிலிய விரிவுரையாளர்கள் ஒரு புதுமை என்று குறிப்பிட்டுள்ளனர். எம்மாவு சீடர்களுடன் இயேசு நிகழ்த்திய அச்சந்திப்பை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு சித்திரிக்கிறார்:
லூக்கா 24:30-33
அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 

"எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) என்று, கலக்கத்துடன் வேண்டிக்கொண்ட சீடர்கள், இயேசு அவர்களுடன் அப்பம் பகிர்ந்தபோது, கண்கள் திறக்கப்பட, அதே மாலை நேரத்தில், எவ்வித கலக்கமும் இன்றி, மீண்டும், எருசலேம் திரும்பிச்சென்றனர். இந்த மாற்றம் நிகழ்ந்ததற்குக் காரணம், இயேசுவை அடையாளம் கண்டுகொண்ட புதுமை.

இவ்வாறு, உயிர்த்த இயேசு தன் சீடர்களைச் சந்தித்த ஒவ்வொரு நிகழ்விலும், மாற்றங்கள் என்ற புதுமை, சீடர்களிடம் நிகழ்ந்தது. இச்சந்திப்புக்களின் ஒரு சிகரமாக, யோவான் நற்செய்தியின் பிற்சேர்க்கையில் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்வை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


20 November, 2020

Our King, identified with ‘the least’! ‘மிகச் சிறியோரில்’ ஒருவராக, நம் அரசர்!

 
The Last Judgement – Sistine Chapel - Michelangelo

The Feast of Christ the King

Although the text books of world history say that in many countries around the world the era of monarchy (kings and queens) has given way to democracy, we are witnessing, in recent times, how monarchy and even blatant dictatorship is being revived in many countries. We see many ‘self-crowned’ kings and queens seated firmly on thrones.
In the context of power-grabbing and power-maintenance-at-all-costs, which is growing in the world, the Church today invites us to reflect on true leadership or kingship. The last Sunday of the Liturgical Year is marked as the Feast of Christ the King! Next Sunday we begin the Advent and with it, a new Liturgical Year. 

The figure of Christ the King may create some uneasy feelings in us. Christ the Shepherd, Christ the Saviour, Christ the Son of David, Christ the crucified, Christ the Lord…. So many other images of Christ as Light, Way, Vine, Living Water… all these do not create problems for us. Christ the King? Hmm… ‘Christ’ and ‘King’ seem to be two opposite, irreconcilable poles. Why do we feel so uncomfortable with the title Christ the King?
Our image of a ‘king’ seems to be the cause of the problem. The moment we think of a king, pomp and power, glory and glamour, arrogance and avarice… these thoughts crowd our mind. Christ would be a king this way? No way… Christ does talk about a kingdom. A Kingdom not bound by a territory, a Kingdom not at war with other kingdoms created by human endeavour. A Kingdom that can be established only in human hearts. Is such a Kingdom possible? If this is possible, then Christ the King is possible. This is the King we are presented with in today’s Feast! 

The historical reason for the establishment of this Feast gives us a better understanding of what this feast means for us today. World War I was one of the main reasons for establishing the Feast of Christ the King. Within a few weeks after the start of World War I, (July 28, 1914), Pope St Pius X passed away (August 20, 1914). His successor Pope Benedict XV, who assumed the leadership of the Church on 3 September 1914, bore the full brunt of this war. He called this war “senseless massacre” and “the suicide of the civilized Europe”. Pope Pius XI who became his successor in 1922, realized that the main reason for the First World War was the insatiable thirst for power. Hence, in 1925, he proposed an alternate model of kingship in Christ. He created the Feast of Christ the Universal King! 

The thirst for power did not subside after the First World War. The world suffered from World War II hardly 25 years after World War I. Our world is now witnessing the Third World War in bits and pieces (as mentioned by Pope Francis a few times)! In all these wars, the unbridled hunger for power has played great havoc. Now, as the world is waging a war with the COVID-19 pandemic, the power-hungry leaders have politicized this pandemic to grab more and more power. 

Two headlines from the New York Times talk about the disturbing trend of our leaders for more and more power, bordering on dictatorship: “Trump Wants You to Think You Can’t Get Rid of Him” was the headline on Sep. 24, 2020. True to this headline, Trump is still fighting the elections even after clear verdicts have been given. Similarly, there was another headline talking of the Russian President. “Vladimir Putin Thinks He Can Get Away With Anything” was the headline on Sep. 22, 2020.
Following the example set by these two ‘super-power’ leaders, Alexander Lukashenko, the President of Belarus for the past 26 years has handled the elections in August in total disregard for the people’s verdict. We are also aware of how the President of China, Xi Jinping has become China's President for lifetime. These are clear signs of dictatorship. We have many such persons ruling North Korea, Philippines, Brazil, Venezuela etc. Indian Parliament enacting laws on citizenship, education and agriculture – all during the crisis of the pandemic – is, once again, a clear sign of dictatorship. 

Against such a bleak picture of leadership, the Church turns our attention to the leadership of Christ the King. To help us understand this King, we are given the parable of the Final Judgement (Matthew 25:31-46). This parable begins with a glorious description of the Son of Man: “When the Son of man comes in his glory, and all the angels with him, then he will sit on his glorious throne.” (Mt 25:31). This King, seated on the throne, also identifies Himself with those who are hungry, thirsty, naked etc. While blessing those on his right side for their good deeds, the King says: ‘Come, O blessed of my Father, inherit the kingdom prepared for you from the foundation of the world; for I was hungry and you gave me food, I was thirsty and you gave me drink, I was a stranger and you welcomed me, I was naked and you clothed me, I was sick and you visited me, I was in prison and you came to me.’ (Mt 25:34-36) 

The King does not say, “Come O blessed of my Father, …. For you gave food to the hungry, drink to the thirsty…” etc. The King says clearly: “I was hungry, I was thirsty, I was naked…” etc. A total identification with people in need! The righteous are surprised by this. The conversation between them and the King is more revealing of God’s identity with the needy:
Then the righteous will answer him, ‘Lord, when did we see thee hungry and feed thee, or thirsty and give thee drink? And when did we see thee a stranger and welcome thee, or naked and clothe thee? And when did we see thee sick or in prison and visit thee?’ And the King will answer them, ‘Truly, I say to you, as you did it to one of the least of these my brethren, you did it to me.’ (Mt. 25:37-40)

When the King says, “I was hungry, I was thirsty, I was naked… etc.” I could easily accept Jesus in those roles. When he says, “I was in prison…” I tend to give an explanation of my own, as to why Jesus was in prison. I find myself saying that Jesus was falsely accused and was put behind bars. Jesus does not give any such reason for his being behind bars. He simply says: “I was in prison and you came to me” (Mt. 25:36). He simply identifies himself with all the prisoners, whether falsely accused or not. Jesus, hungry, thirsty, naked, homeless, stranger etc. don’t seem to challenge me; Jesus, in prison is quite challenging.
We are aware that at least half of the prisoners all over the world have been falsely accused or caught in a spiral of events seemingly out of control. We are also sadly aware that many ‘real culprits’ are roaming the streets freely. Or, worse, have grabbed all the powers from the people. 

Seeing Jesus in the imprisoned is not the only challenge, to help them get integrated into the community is another real challenge. To help the prisoners ‘turn a new leaf’, the society at large needs to give that person a ‘second chance’. Otherwise, there is every chance that the prisoner can get back to his cell. Here is a story that I read recently:
A prisoner was getting instructions, since he was willing to receive Baptism. The Priest who was guiding him, approached him on a Saturday and said, “Tomorrow is Sunday. If you wish, I can request the warden to let you go with me to the church for Sunday Mass.” The prisoner looked at the Priest. He then showed the scars on his hands and face and said, “The warden will have no problem in granting me permission to leave the prison; but will the people in the church give me permission to enter the church?” The Priest stood shocked not knowing what to tell him. 

We know of quite many men and women who leave the prison with high hopes of getting integrated into the normal society. Since many of them do not find the proper welcome, their ‘re-entry’ becomes tough. Society denies them the ‘second chance’. The reason for this hesitation or resistance comes from our prejudices. 

“I was in prison and you came to me” (Mt. 25:36) grabs our attention today since we are sadly aware of Fr Stan Swamy is still in prison, on blatant unjust charges of terrorism, in spite of his frail health condition. Fr Stan has recently sent a letter, written by another prisoner, in which he speaks about how prisoners treat him with great love and concern. Here are some excerpts from the letter written by Fr. Stan Swamy SJ, from the prison, with the help of prison mate Arun Ferreira: 
Dear friends,
Peace! Though I do not have many details, from what I have heard, I am grateful to all of you for expressing your solidarity and support. I am in a cell approximately 13 feet x 8 feet, along with two more inmates. It has a small bathroom and a toilet with Indian commode. Fortunately, I am given a western commode chair.
… During the day, when cells and barracks are opened, we meet with each other. From 5.30 pm to 06.00 am and 12 noon to 03.00 pm, I am locked up in my cell, with two inmates. Arun assists me to have my breakfast and lunch. Vernon helps me with bath. My two inmates help out during supper, in washing my clothes and give massage to my knee joints. They are from very poor families. Please remember my inmates and my colleagues in your prayers. Despite all odds, humanity is bubbling in Taloja prison.
Fr. Stan Swamy SJ 

Every year, during the final weeks of the Liturgical year, we are reminded of the final moments of our life on earth. Last week we were told to keep our accounts ready to submit to the king. Today we are told what type of account we need to keep ready. This is an account of how we have put to use our talents, abilities and opportunities, not for our own self-aggrandisement but for the betterment of our neighbour’s life. Especially the neighbours who are in dire needs – like food, shelter and clothing, as well as those who are deprived of their freedom (prisoner), health (the sick) and their identity (stranger)!

The gospel given to us on the Feast of Christ the King hammers home, once again, the theme of the previous Sunday - the World Day of the Poor! For our King, taking care of the least privileged is a sure way to ‘inherit the Kingdom’. Taking care of those in need is THE ONLY guarantee for our salvation, nothing else! This is the invitation extended to us by Christ the King!

The Parable of the Sheep and the Goats

கிறிஸ்து அரசர் பெருவிழா

உலகின் பல நாடுகளில், மன்னராட்சி மறைந்து, மக்களாட்சி மலர்ந்துள்ளதென்று நம் வரலாற்று நூல்கள் சொல்கின்றன. ஆனால், உண்மையில், இன்றைய உலகில், பல தலைவர்கள், அரசர்களாக, அரசிகளாக, வலம்வருகின்றனர் என்பதை அறிவோம். குறிப்பாக, கடந்த ஓராண்டளவாய் இவ்வுலகை வதைத்துவரும் கொள்ளைநோய் காலத்தில், தாங்கள் எது செய்தாலும், தங்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்ற இறுமாப்பில், பல நாடுகளின் தலைவர்கள், சர்வாதிகார அரசர்களைப்போல் நடந்துகொள்வதைக்கண்டு, வெட்கமும், வேதனையும் அடைகிறோம். இத்தகையதொரு காலக்கட்டத்தில், ‘அனைத்துலகின் அரசர் கிறிஸ்து என்ற திருநாள் வழியே, நம் வேதனைக்கு மாற்றுமருந்தைக் கண்டுபிடிக்க, தாய் திருஅவை, இஞ்ஞாயிறன்று, நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

திருஅவையில் நாம் கொண்டாடும் அனைத்துத் திருநாள்களில், இந்த ஒரு திருநாள், நமக்குள் சங்கடங்களை உருவாக்க வாய்ப்பு உண்டு. கிறிஸ்துவை, நல்லாயன், நல்லாசிரியர், நண்பர், மீட்பர், என்று... பல கோணங்களில் எண்ணிப்பார்க்கும்போது, உள்ளம் நிறைவடைகிறது. இன்றைய முதல் வாசகத்தில், (எசேக்கியேல் 34:11-12,15-17) பரிவுகொண்ட ஓர் ஆயனாக, இறைவன், தன்னையே உருவகித்துப் பேசுவதைக் கேட்கும்போது, நம் உள்ளம் மகிழ்கிறது. அதைவிட அதிகமாக, இன்றைய பதிலுரைப்பாடலாக வழங்கப்பட்டுள்ள ஆண்டவரே என் ஆயர் என்ற திருப்பாடல் 23ன் வரிகள், நம் வாழ்வில் பலமுறை நமக்கு ஆறுதல் வழங்கியுள்ளன.  ஆனால், கிறிஸ்துவை, அரசராக கற்பனை செய்து பார்க்கும்போது, சங்கடங்கள் எழுகின்றன. அரசர் என்றதும், மனத்திரையில் தோன்றும் காட்சிகளே, இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம். 

அரசர் என்றதும், பட்டும், வைரமும் மின்னும் உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் ஓர் உருவம், நம் கற்பனையில் வலம் வருவதால், சங்கடமடைகிறோம். அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப்பார்த்தால், இயேசு, நிச்சயமாக அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர். ஓர் அரசை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது!
அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், எல்லைகள் இல்லை, எல்லையைப் பாதுகாக்க, போர் இல்லை, படைகள் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை... ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு, இவை எதுவுமே தேவையில்லை. 

இதில், இன்னும் ஆழமான ஓர் உண்மை என்னவென்றால், இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். இந்த அரசில், எல்லாரும் அரசர்கள். இந்த அரசர்கள் மத்தியில், இயேசு, ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று கற்பனை செய்துகொண்டு, தலையை உயர்த்தி, உயர்வானதோர் இடத்தில் அவரைத் தேடினால், ஏமாற்றமடைவோம். உயர்ந்திருக்கும் நம் தலை தாழ்ந்தால்தான், அவரைக் காணமுடியும். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவியவண்ணம் இருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அவர்கள் காலடிகளைக் கழுவ வரும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே, கிறிஸ்து அரசர் திருநாள் நம்மை அழைக்கிறது. 

கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிவுற்றபின்னரும், உலகத்தில், பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. முதல் உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள், மற்றும் தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில், தங்கள் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, இன்னும் பலகோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. அரசர்களும், தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார். 

அன்று நிலவிய அதிகார வெறி, முதல் உலகப்போருடன் முடிவடையாமல், இரண்டாம் உலகப்போரையும் உருவாக்கியது. இன்றும், அதே அதிகார வெறி, மூன்றாம் உலகப்போரை, சிறு, சிறு துண்டுகளாக, உலகெங்கும் நடத்திவருகின்றது. கொள்ளைநோய் என்ற துயரத்தைக் களைவதற்குப் பதில், அந்தத் துயரத்தை, அரசியலாக்கி, தங்கள் அதிகார வெறியை வளர்த்துக்கொள்ளும் தலைவர்களை இன்று காண்கிறோம்.

நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில், செப்டம்பர் மாதம் வெளியான இரு செய்திகளின் தலைப்புகள், அதிகார வெறிகொண்ட தலைவர்களில் இருவரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. "அவரை நீக்க இயலாது என்ற எண்ணத்தை, உங்கள் மீது சுமத்த டிரம்ப் விரும்புகிறார்" (Trump Wants You to Think You Can’t Get Rid of Him) என்பது, செப்டம்பர் 24ம் தேதி வெளியான ஒரு செய்தியின் தலைப்பு
இச்செய்தியை உறுதிசெய்வதுபோல், டிரம்ப் அவர்கள் செயல்படுவதைக் காண்கிறோம். அமெரிக்க ஐக்கிய நாட்டில், நவம்பர் மாதத் துவக்கத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகி, இரண்டு வாரங்கள் சென்ற பிறகும், தன் தோல்வியை ஏற்று, அடுத்தவருக்கு வழிவிட மறுக்கும் டொனால்டு டிரம்ப் அவர்கள், முடிசூடா மன்னர்களாக, அரியணைகளில் தங்களையே பிணைத்துக்கொண்ட பல தலைவர்களுக்கு பரிதாபமான ஓர் எடுத்துக்காட்டு. இதேபோல் செயல்படும் இரஷ்யத் தலைவரைப்பற்றி மற்றொரு செய்தி வெளியானது. "தான் என்ன செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று விளாடிமிர் புடின் நினைக்கிறார்" (Vladimir Putin Thinks He Can Get Away With Anything) என்பது, செப்டம்பர் 22ம் தேதி வெளியான செய்தியின் தலைப்பு.

வல்லரசுகள் என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் இவ்விரு நாடுகளின் தலைவர்களைப்போலவே, இன்னும் பல்வேறு நாட்டுத் தலைவர்களும், பிரதமர்களும் நடந்துகொள்கின்றனர். பெலாருஸ் நாட்டில் கடந்த 26 ஆண்டுகளாக அரசுத்தலைவராக இருந்த அலெக்சாண்டர் லுக்கஷென்கோ (Alexander Lukashenko) அவர்கள், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் தான் மீண்டும் வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்துக்கொண்டதும், அந்த தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எழுந்த போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதும், இன்றையத் தலைவர்கள், தங்கள் அரியணைகளை விட்டு அகல மறுக்கும் சர்வாதிகாரப் போக்கின் ஓர் அடையாளம்.

சீனா, வடகொரியா, பிலிப்பீன்ஸ், பிரேசில், வெனிசுவேலா என்று பல நாடுகளில், தற்போது தலைவர்களாக இருப்போர், முடிசூடா மன்னர்களாக தங்களை எண்ணி வருகின்றனர். இந்தியாவின் பிரதமரும், அவரைச்சுற்றி துதிபாடும் ஏனையோரும், கொள்ளைநோயினால் உருவான முழுஅடைப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்கள்மீது பல்வேறு சட்டங்களைத் திணித்துவருவதும், கேள்வி கேட்பவர்களை சிறையில் அடைப்பதும், சர்வாதிகாரப்போக்கின் வெளிப்பாடுகளே. 

இத்தகையத் தலைவர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசர் என்று பறைசாற்றுகிறது, கத்தோலிக்கத் திருஅவை. கிறிஸ்து என்ற அரசரிடமிருந்து, மக்கள், குறிப்பாக, தலைவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு, தலைவர்கள், பாடங்களைப் பயில்வார்களா என்பது தெரியவில்லை. நாம் பாடங்களை பயில முன்வருவோமே! 

உண்மை அரசரின் பண்புகளை கற்றுக்கொள்ள, இன்று நாம் கேட்கும் நற்செய்தி வாசகம், உதவியாக உள்ளது. மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறும் இந்த இறுதி உவமையில் பங்கேற்கும் கதைமாந்தர்கள் பலருடன், ஆண்டவர் தன்னையே இணைத்து, அவர்கள் வடிவாகவே மாறுகிறார். கதையின் துவக்கத்தில் நாம் வாசிக்கும் வரிகள் இவை: “வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்." (மத்தேயு 25:31-32).

அரியணையில் வீற்றிருப்பவராகமட்டும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல், இவ்வுலகில் துன்புறும் பலராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் இறைவன். 'பசியால் இருந்தோருக்கு நீங்கள் உணவு கொடுத்தீர்கள்' என்று அரசர் சொல்லவில்லை; மாறாக,நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' (மத்தேயு 25: 35-36) என்று அரசர் சொல்கிறார். 

அரசரின் இந்தக் கூற்றைக் கேட்டதும் அங்கிருந்தோர் ஆச்சரியமடைகின்றனர். ஏழைகள் சார்பாக, ஏழைகளுக்குத் துணையாக இறைவன் இருப்பார் என்பதை நேர்மையாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இறைவன், ஓர் ஏழையாகவே மாறி, அவர்களைச் சந்தித்தார் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்கள், இது எவ்வாறு நிகழ்ந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்கும்போது, அரசர் சொல்லும் பதில், இதோ: அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார். (மத்தேயு 25: 40) 

இறுதித் தீர்வையின்போது, "பசியாய் இருந்தேன், தாகமாய் இருந்தேன்..." என்று இயேசு, தன்னையே அடையாளப்படுத்துவதை நம்மால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. "சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று அவர் கூறும்போது, "எந்தக் குற்றமும் செய்யாத இயேசு, சிறையில் அடைக்கப்பட்டார்" என்று, அந்தக் கூற்றுக்கு, ஒரு விளக்கம் தரும்போது, இயேசுவை ஒரு சிறைக்கைதியாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இயேசு, அவ்விதம் தன்னை அடையாளப்படுத்தவில்லை. "குற்றமேதும் புரியாத நான் சிறையிலிருந்தேன்" என்று அவர் கூறாமல், பொதுவாக, "நான் சிறையிலிருந்தேன்" என்று மட்டும் கூறியுள்ளார். குற்றம் புரிந்தோ, புரியாமலோ, சிறையில் தள்ளப்பட்டுள்ள அனைவரோடும் இயேசு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டார். இது நமக்குச் சவாலாக அமைகிறது. 

சிறைக்கைதிகளில் இயேசுவைக் காண்பதோடு, அவர்கள் விடுதலைபெற்று வெளியே வரும்வேளையில், அவர்களை சமுதாயத்தில் ஒருவராக உணரச்செய்வதும் நம் பொறுப்பு. இது கடினமான ஒரு சவால் என்பதை வெளிப்படுத்தும் ஓர் உண்மை நிகழ்வு இது:
சிறைக்கைதிகளில் ஒருவர் திருமுழுக்கு பெறுவதற்கு தன்னையே தயார் செய்துவந்தார். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த அருள்பணியாளர், அவரிடம், "நாளை ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் என்னுடன் கோவிலுக்கு வருவதாக இருந்தால், சிறைக்காவலரிடம் நான் அனுமதி பெறுகிறேன்" என்று கூறினார். அந்தக் கைதி, தன் கைகளிலும், முகத்திலும் கத்தியால் கீறப்பட்ட தழும்புகளை அருள்பணியாளரிடம் காட்டி, "சாமி, சிறையிலிருந்து வெளியேச் செல்வதற்கு எனக்கு எளிதாக அனுமதி கிடைத்துவிடும். ஆனால், இந்தத் தழும்புகளுடன் நான் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், அருள்பணியாளர் அமைதியாக நின்றார்.

மனமாற்றம் பெற்று மறுவாழ்வைத் துவக்கும் எத்தனை கைதிகள், மீண்டும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கொடுமையால், சிறைவாழ்வே மேல் என்று எண்ணி வருகின்றனர்! இவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைப்பதற்குத் தடையாக இருப்பன, நாம் உள்ளத்தில் அவர்களைப்பற்றி செதுக்கி வைத்திருக்கும் முற்சார்பு எண்ணங்களே. 

சிறையில் இருக்கும் இயேசுவைப்பற்றி இன்று கூடுதலாகச் சிந்திக்க, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் ஒரு முக்கிய காரணம். அநீதியான முறையில் மும்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் அவர்கள், மற்றொரு சிறைக்கைதியின் உதவியுடன் எழுதி, அண்மையில் வெளியிட்டிருந்த ஒரு மடலில், தான் சிறையில் அனுபவித்துவரும் மனிதாபிமானத்தை புகழ்ந்து பேசியுள்ளார். பார்க்கின்சன்ஸ் நோயினால் துன்புறும் அவர், உண்பதற்கும், குளிப்பதற்கும், அவருடன் தங்கியிருக்கும் இருவர் உதவி செய்வதாகக் கூறியுள்ளார். இவ்விருவரும் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களுக்காக செபிக்கும்படியும் அவர், தன் மடல்வழியே விண்ணப்பித்துள்ளார். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்ற அநீதியான பழியைச் சுமந்து, மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 83 வயதான அருள்பணி ஸ்டான் அவர்கள் உருவில், இயேசுவும் அந்தச் சிறையில் தங்கியுள்ளார் என்று நாம் உறுதியாக நம்பலாம். 

ஏழைகள் வடிவில் இறைவன் வாழ்வதை, பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் பல வழிகளில் சொல்லித் தந்துள்ளன. மெக்சிகோவில் வாழ்ந்த Aztec என்ற பழங்குடியினர் எழுதிவைத்த ஒரு கவிதை, இறைவனை இவ்வகையில் அடையாளப்படுத்துகிறது. மண்ணோடு மண்ணாக, சிறு, சிறு துண்டுகளைப்போல் வாழும் மக்களைத் தேடினால், அங்கு அவர்களோடு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இறைவனைக் காணமுடியும் என்பதை, இக்கவிதை கூறுகிறது. இக்கவிதையின் சுருக்கம் இதோ: "வாழ்வுப் பாதையில் நீங்கள் நடந்து செல்லும்போது, உங்கள் வாழ்வை வழிநடத்தும் ஒரு சக்தியை, கடவுளின் ஒரு சிறு பகுதியை நீங்கள் தேடினால், கீழ்நோக்கி நீங்கள் பார்க்கவேண்டியிருக்கும். நீங்கள் தேடும் கடவுள், சின்ன விடயங்களில் இருப்பார், பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பார். ஒருவேளை, பூமிக்கு அடியிலும் அவர் இருக்கலாம். கடவுளைத் தேடுவோர், தலையைத் தாழ்த்தி, கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும், கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும்"
துன்புறும் மனித சமுதாயம், தன்னில் ஒரு பகுதி என்றும்இறைவன் ஏழையாகவே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார் என்றும், இன்றைய நற்செய்தி ஆணித்தரமாகக் கூறுகிறது. 

வறியோர் வடிவில் இறைவன் வாழ்வதை மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்ள கடந்த வாரம் சிறப்பித்த வறியோரின் உலக நாள் நமக்கொரு வாய்ப்பை வழங்கியது. இவ்வுலக வாழ்வு முடிந்து, இறுதித் தீர்வை நேரத்தில், கிறிஸ்து அரசருக்கு முன் நாம் நிற்கும் வேளையில், அரசர் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நம்மிடம் கேட்பார்: உன் வாழ்வைக்கொண்டு, உனக்கு வழங்கப்பட்டச் செல்வங்களை, திறமைகளை, வாய்ப்புக்களைக்கொண்டு அடுத்தவருக்கு என்ன செய்தாய்? முக்கியமாக, செல்வம், திறமை, உரிமை, வாய்ப்புக்கள் இவை யாவும் மறுக்கப்பட்டுள்ள வறியோருக்கு என்ன செய்தாய்? என்பது ஒன்றே, இறைவனாக, அரசனாக, நம் முன் தோன்றும் இயேசு கேட்கும் கேள்வி. இறுதித் தீர்வையில் இக்கேள்விக்கு நாம் தரப்போகும் பதில், இன்று முதல் நம் வாழ்வில் செயல்வடிவம் பெறட்டும்!