19th
Sunday in Ordinary Time
Last Sunday, we had
spent some time reflecting on the use of atomic energy, since, unfortunately,
our lives are very much tied up with this. This Sunday, we spend some time on
Olympic Games – not only because Tokyo Olympic Games comes to an end today – August
8, 2021, but also, such an occasion which comes once in four years (this time,
after five years) can help us to reflect on our world, especially the
‘competitive world’.
One can easily see
that Olympic Games, as we have them now, are no more a simple sports event. It
is a media event. Especially this year, with no participation of audience, the
Tokyo Olympic Games had become a total media event. And, as happens always in
the media, it is more interested in feeding us with drama than sports. For this
drama, the media writes a script – a script creating the hero and the villain
in every event. The fight between good and evil. Such a script constantly
brings to focus that Olympic Games is all about COMPETITION and even CONFLICT.
This is a far cry from
the well-known Olympic Motto: “The most important thing is not to win but to
take part!” This motto was introduced by Pierre de Coubertin, who is
the founder of the International Olympic Committee, and is considered the
father of the modern Olympic Games. It is said that De Coubertin got this motto
from a sermon given by the Bishop of Pennsylvania during the 1908 London Games.
Of course, the media
would quote another motto of the Olympics – namely, “Citius, Altius,
Fortius”, which is Latin for “Faster, Higher, Stronger”. This motto,
once again, was proposed by Pierre de Coubertin in 1894.
Comparative terms in
English imply competition. But, on a deeper analysis, one can interpret
‘faster, higher, stronger’ in terms of oneself rather than as against someone
else. I can be faster than what I was yesterday. I can also be faster than XY
and Z.
Comparisons between
athletes reach its climax with the award of the medals – Gold, Silver and
Bronze. Gold is the summit of achievement. What about Silver and Bronze? Those
who win these medals are looked upon… not as winner of Silver and Bronze, but
losers of Gold. Nike, the famous athletic apparel company, posted a billboard
in Atlanta at the time of the 1996 Summer Olympics: “You Don’t Win Silver — You
Lose Gold.” Similar sports sayings include “First is first and second is last”
and “Second place is the first loser.”
In spite of this ‘glorification
of competition’, the Olympic Games have never been short on heart-warming
displays of courage, team spirit, and camaraderie among competitors. Especially
in a tough year of the pandemic that has taken a physical and emotional toll on
everyone, including athletes, every act of kindness and sportsmanship between
Olympians competing at the highest level of their sport, feels especially
meaningful. Here are two of those moving moments of the 2020 Tokyo Olympics:
One: When runners Isaiah Jewett of the U.S. and
Nijel Amos of Botswana fell during the 800-meter race, they helped each other
up, put their arms around each other, and jogged to the finish line together. "Regardless
of how mad you are, you have to be a hero at the end of the day," Jewett
said. "Because that’s what heroes do: They show their humanity through
who they are and show they’re good people."
Two: When two rivals and friends chose to share a
gold medal instead of breaking their tie in the high jump competition. It took
Gianmarco Tamberi of Italy and Mutaz Essa Barshim of Qatar mere seconds to
decide that they would share the gold medal at the Olympic men's high jump
final, creating one of the most memorable moments of this year's Games. Both
athletes were tied after completing a jump of 2.37 meters but failing to
complete the 2.39 meters jump in three attempts each. They could settle it with
a jump-off or share the gold.
While an Olympic
official was explaining the rule, Barshim interrupted to ask, "Can we have
two golds?" When he was told that it was possible, with a quick look of
agreement and a handshake, the two of them decided to share the gold, prompting
an ecstatic Tamberi to jump on Barshim in celebration as the crowd went wild.
"I look at him,
he looks at me, and we know it. We just look at each other and we know, that is
it, it is done. There is no need," Barshim said after the win, CBC
reported. "He is one of my best friends, not only on the track, but
outside the track. We work together. This is a dream come true. This is beyond
sport,” Barshim said. “This is the message we deliver to the young generation.”
Ever since 2010, when
both Barshim and Tamberi had taken part in the Junior Olympics, they have
developed a special bond between the two of them. Between 2010 and now, both
had tough times with injuries. During those moments of pain and frustration,
they had encouraged and counselled one another. Now, in 2020 Tokyo Olympics,
they had, in a way, awarded themselves with the gold medal for their
friendship!
There have been other
occasions when medals had been shared by athletes; but the decisions were made
by the Olympic Committee. This is the only occasion, in the history of Olympic
Games, when two athletes had decided to share the gold medal.
Every Olympic Games can
re-live some special moments like these, where the raw emotions of competition
give way to noble emotions of friendship and human concern. Such lovely moments
that display the nobility of the human spirit are rare and far between. They
get drowned out by the din of competition and the hunger for more…
This brings us to this
Sunday’s liturgical readings. For the past three weeks, our Sunday reflections revolve around the 6th
chapter of St John. All the three Sundays have given us a few biblical events dealing
with hunger and feeding. Although these readings talk of the physical hunger of
individuals and people, when one goes deeper into the passages, we can see
other forms of hunger that we humans suffer from and the adverse consequences
of such hungers!
For
instance, today’s first reading, taken from I Kings, 19:4-8, talks of
the Prophet Elijah, praying to God in the wilderness for his death and the
angel of the Lord visiting him with food. On the surface, this looks like a
simple anecdote of a hungry man being fed by the angel. But, a deeper analysis
of this passage takes us to the questions of why Elijah was in the wilderness
and why did he pray for his death. The answer to these questions reveals the
hunger for revenge nursed by a queen. Prophet Elijah was running away from
queen Jezebel who was hungry to devour the prophet, since he had interfered
with her ‘god’ - Baal. Elijah had proved to King Ahab that Baal, brought into Israel by
Jezebel, was a false god.
Creating
and worshipping false gods (like power, money etc.) is an insatiable hunger for
some human beings. Those who have the courage to tear down the façade of such
false gods are put to death. That was the story of Jezebel and Elijah. God
intercepted Elijah’s wishful trip to death and gives him enough strength to
carry on his mission of demolishing false gods. Strengthened by the nourishment
from the angel, Elijah continued his struggle with the worldly powers that were
sheltering and worshipping false gods!
Down the
centuries prophets like Elijah have waged a war against false gods with the
only weapon called truth. Most of these prophets were silenced by the powers
that worshipped false gods. In this long list, we can, once again, remember Fr
Stan Swamy who was killed by the Central Government and the Judicial System in
India for speaking the truth! During this Sunday’s liturgy, we remember the
thousands of common people who had protested against these ‘gods’ and laid down
their lives. May those who have laid down their lives in the fight against
these false gods, inspire the rest of us to carry on with the struggle!
Listening
to the truth is, perhaps, one of the hardest challenges for human beings. It
requires a noble mind to swallow the bitter pill of truth. More often, when a
bitter ‘truth-pill’ is given, one tends to spit it out and, get angry with the
one who provided the ‘truth pill’. This is the scene described in today’s
Gospel – John 6: 41-51.
Let us back
track a little bit. People in thousands followed Jesus to the desert to listen
to him. Jesus had pity on them and fed them with five loaves and two fish.
(Gospel on the 17th Sunday) Having seen an easy way to fill their
stomach, the people followed Jesus to the next spot. If Jesus, were a ‘fame
hungry’ or ‘power hungry’ person, he would have performed miracles to keep the
people always following him, singing ‘hosanna’. But, Jesus was different. He
did not hesitate to tell them the hard truth: “Truly, truly, I say to
you, you seek me, not because you saw signs, but because you ate your fill of
the loaves. Do not labor for the food which perishes, but for the food which
endures to eternal life” (John 6: 26-27) - (Gospel of last Sunday) This
was indeed a bitter pill to swallow.
Sometimes,
when faced with bitter truths, some tend to resort to a defensive tactics –
namely, trying to find loop holes in not ‘what is said’ but ‘who said it’. This
is what happened to Jesus when he invited the people to a higher plane of
getting nourished by the person of Jesus. The Jews (namely, the religious
leaders) began attacking the person of Jesus rather than what he said. Jesus
does not buckle down under this attack, but continues to invite them to a share
of his life – eternal life!
Let our closing
thoughts be on Tokyo Olympics. It is significant that the closing ceremony of
the Tokyo Olympic Games takes place on August 8, a day that is in between
August 6 and 9 which are dates filled with painful memories of the U.S.
government killing thousands of innocent people in Hiroshima and Nagasaki.
As we conclude the
Tokyo Olympics, our minds go back to the Summer Games opening ceremony at the
1964 Tokyo Olympics. That was the first Olympics in Asia and an opportunity for
Japan to show to the world that it was rebuilding after the second World War
and the atomic bombing of Hiroshima and Nagasaki.
So, nothing could have
been more iconic than the Japanese athlete Sakai Yoshinori lighting up the
cauldron. Yoshinori, aka 'Baby Hiroshima' was born on 6 August 1945, the day
the US bombed Hiroshima. This was a clear message to the world about the human
spirit that is capable of rising from the ashes, like the phoenix!
As we commemorate the
twin atomic attack on Japan and also celebrate the closing ceremony of Tokyo
Olympics, we pray that as God had given the Japanese people the power to rise
again from the ruins of atomic bombs, God will give us the power to rise again
from the ruins caused by COVID-19! May God teach us how to develop hunger for
peace rather than hunger for power!
Sakai Yoshinori
lighting the Olympic flame 1964
பொதுக்காலம் 19ம் ஞாயிறு
சென்ற ஞாயிறு, ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளானதால், நம் எண்ணங்கள் ஜப்பானை நோக்கி
திரும்பின. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில், அமெரிக்க ஐக்கிய
நாடு நிகழ்த்திய அணுகுண்டு தாக்குதல்களையும், அந்த அழிவுகளைப் பார்த்தபின்னரும், தொடர்ந்து, அணுசக்தியை நம்பி, நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும்
ஆபத்துக்களையும் சிந்தித்தோம். இந்த ஞாயிறு, மீண்டும் ஒருமுறை, ஜப்பான்
நாட்டுக்குத் திரும்புகிறோம். அங்கு, டோக்கியோ நகரில், கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த ஒலிம்பிக்
கோடை விளையாட்டுக்கள், ஆகஸ்ட் 8, இந்த ஞாயிறன்று நிறைவுபெறுகின்றன. இவ்வேளையில், ஒலிம்பிக் விளையாட்டுகளையும், அவற்றின் வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய
பாடங்களையும் நம் ஞாயிறு சிந்தனைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்வோம்.
நான்கு
ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது, ஒலிம்பிக் விளையாட்டுக்களா? ஒலிம்பிக் போட்டிகளா? என்ற கேள்வியிலிருந்து நம்
சிந்தனைகளைத் துவக்குவோம். ஆங்கிலத்தில் நாம் Olympic Games என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். Olympic Competitions என்ற சொற்களைப் பயன்படுத்துவதில்லை.
தமிழிலோ, பெரும்பாலான நேரம், நாம் ஒலிம்பிக் போட்டிகள் என்றே குறிப்பிடுகிறோம்.
வெகு சிலரே இதை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்று குறிப்பிடுவர்.
'விளையாட்டுக்கள்' என்று சொல்வதற்கும், 'போட்டிகள்' என்று சொல்வதற்கும் வேறுபாடுகள் அதிகம்
உண்டு. மதம், அரசியல், கல்வி, வேலை என்ற அனைத்து தளங்களிலும் போட்டிகளை
உருவாக்குவதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ள இவ்வுலகப் போக்கு, விளையாட்டுக்களையும், போட்டிகள் என்ற கோணத்தில் மட்டுமே காண்பதற்கு
நமக்குக் கற்றுத்தருகிறது. ஒலிம்பிக் விளையாட்டுக்கள், தொலைக்காட்சி வழியே, நேரடியாக
ஒளிபரப்பாகத் துவங்கியதிலிருந்து, வெறும் விளையாட்டுப் போட்டியை, உணர்ச்சிகள் நிறைந்த வாழ்வுப் போட்டியாக
வடிவமைத்து, விளையாட்டுத்
திடல்களை, போர்க்களம்போல, ஊடகங்கள்
காட்டிவருவது, கவலையைத் தருகிறது.
நவீன
கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தந்தை என்று அழைக்கப்படும் Pierre de Coubertin அவர்கள், "வெற்றியடைவது மிகவும்
முக்கியமல்ல, பங்கேற்பதே மிகவும் முக்கியம்" என்ற சொற்களை, ஒலிம்பிக் விளையாட்டுக்களின் விருதுவாக்காக
வழங்கினார். இந்த எண்ணத்தை, அவர், 1908ம் ஆண்டு, இலண்டனில்
நடைபெற்ற விளையாட்டுக்களின்போது, ஞாயிறு மறையுரை ஒன்றில்
கேட்டதாகக் கூறியுள்ளார்.
ஒலிம்பிக்
விளையாட்டுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு விருதுவாக்கு, மேலே கூறப்பட்ட விருதுவாக்கைவிட
புகழ்பெற்றது. அதுதான், இலத்தீன் மொழியில் “Citius,
Altius, Fortius” என்ற விருதுவாக்கு. "இன்னும் வேகமாக, இன்னும் உயரமாக, இன்னும் சக்திமிகுந்ததாக" என்பது
இதன் பொருள். இந்த இரு விருதுவாக்குகளையும் Coubertin அவர்களே வழங்கியிருந்தாலும், ஒலிம்பிக் விளையாட்டுக்களில், ஒப்புமையையும், போட்டியையும் வலியுறுத்தும், இரண்டாவது விருதுவாக்கே அதிகமாக
அறியப்படுகிறது.
ஒலிம்பிக்
விளையாட்டுக்களில் பெரிதுபடுத்தப்படும் ஒப்புமைகளும் போட்டிகளும், இறுதியில், வீரர்கள் பெறும் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வழியே உறுதிசெய்யப்படுகின்றன.
தங்கம் வெல்வதை, ‘வெற்றி’ என்றும், வெள்ளி, அல்லது வெண்கலம் வெல்வதை ஏறத்தாழ 'தோல்வி'க்கு ஈடாகவும் எண்ணிப்பார்க்கும் போக்கு
நிலவிவருகிறது.
1996ம்
ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அட்லாண்டா நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற
வேளையில், விளையாட்டுப் பொருள்கள்
விற்பதில் புகழ்பெற்ற Nike நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு விளம்பரத்தில், "நீ வெள்ளியை வெல்வது வெற்றியல்ல... நீ தங்கத்தை
இழக்கிறாய்" என்ற வாசகம் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. விளையாட்டுக்களைப்
பொருத்தவரை, இதையொத்த வேறு பல வாக்கியங்களும்
விளம்பரங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "முதல் என்றால் முதல்தான், இரண்டாவது என்பது கடைசிதான்" என்றோ, "இரண்டாவது இடம், தோற்றவர்களில் முதன்மையானவரின் இடம்"
என்றோ கூறப்படுகின்றது.
இவ்வாறு
போட்டிகளை வளர்த்து, தங்கம் பெற்றவரை மட்டும்
கொண்டாடிவரும் ஒலிம்பிக் நிகழ்வுகளின் நடுவே, விளையாட்டு வீரர்களின் உண்மையான உன்னத உணர்வுகளை, அவர்களுக்குள் இருக்கும் நட்பை, பரிவை வெளிக்கொணரும் நிகழ்வுகளும் ஒவ்வொரு
ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் இடம்பெறுகின்றன. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றின் காரணமாக, விளையாட்டு வீரர்கள் உட்பட, மனித குடும்பம் முழுமையும் கடந்த 18 மாதங்களுக்கும்
மேலாக கடினமான ஒரு காலத்தில் வாழ்ந்துவரும்போது, வீரர்களுக்கு நடுவே உருவாகும் உன்னதமான நட்பு
உறவுகள், நம்மில் உன்னதமான எண்ணங்களை விதைக்கின்றன. தற்போது முடிவுற்ற டோக்கியோ ஒலிம்பிக்
விளையாட்டுக்களில் ஏற்பட்ட இரு அழகான நிகழ்வுகள் இதோ:
முதல்
நிகழ்வு: 800 மீட்டர் தடகளப் போட்டி
நிகழ்ந்தபோது, அமெரிக்க ஐக்கிய நாட்டைச்
சேர்ந்த Isaiah Jewett என்ற வீரரும், போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த Nijel Amos என்ற வீரரும், ஒருவர்
மீது ஒருவர் மோதி, இருவரும் கீழேவிழுந்தனர்.
ஏனையோர், அந்த ஓட்டத்தை ஓடிமுடித்தனர். கீழே வீழ்ந்த இருவரும், தங்களது நான்கு ஆண்டுகள்
பயிற்சி, ஒரு நொடியில் பாழானதை உணர்ந்தாலும், மீண்டும் எழுந்து, இருவரும், ஒருவர் தோள் மீது மற்றொருவர் கரங்களை
வளைத்துப்போட்டு, அந்த ஓட்டத்தை இணைந்து
முடித்தனர். "வெற்றியின் வழியே ஒருவர் 'ஹீரோ' ஆவதைவிட, அவர், தன் மனிதத்தை வெளிப்படுத்தும்போது, ஓர் உண்மையான 'ஹீரோ' உலகிற்கு அறிமுகமாகிறார்" என்று Jewett அவர்கள்,
பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.
இரண்டாவது
நிகழ்வு:
உயரம் தாண்டும் போட்டியின் இறுதிச் சுற்றில், 2.37 மீட்டர் (7.77 அடி) உயரத்தை, ஏனைய வீரர்களால் தாண்ட இயலாதபோது, கத்தார் நாட்டைச் சேர்ந்த Mutaz
Essa Barshim அவர்களும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த Gianmarco
Tamberi அவர்களும் தாண்டிவிட்டனர்.
அதைத்தொடர்ந்து, இருவரும், 2.39 மீட்டர் தாண்ட முயன்று தோற்றனர். அவ்வேளையில், மீண்டும், மீண்டும் போட்டியிட்டு, அந்த உயரத்தைத் தாண்டி தங்கப்பதக்கம்
வெல்லும் வாய்ப்பு, இருவருக்கும் தரப்பட்டது. அவ்வாறு போட்டியிட்டு, ஒருவர் தங்கமும், ஒருவர் வெள்ளியும் பெறுவதற்குப் பதில், இருவரும் இணைந்து, தங்கப்பதக்கத்தைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்.
Barshim, Tamberi ஆகிய
இருவரும் 2010ம் ஆண்டு ஜுனியர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஈடுபட்ட ஆண்டிலிருந்து
நண்பர்கள். 2010க்கும், 2021க்கும் இடைப்பட்ட
காலத்தில் இவ்விரு வீரர்களும் வெவ்வேறு நேரங்களில், காலில் ஏற்பட்ட சிக்கல்களால், ஒரு
சில போட்டிகளில் கலந்துகொள்ள இயலாமல் போனது. அவ்வேளைகளில், அவ்விருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக
இருந்து, தங்கள் கால்கள் குணமாகி,
மீண்டும் போட்டிகளில் ஈடுபட உற்சாகமூட்டிவந்தனர். எனவே, அவ்விருவரும் ஆகஸ்ட் 1, கடந்த ஞாயிறன்று, தங்கப்பதக்கத்தை தங்களுக்குள்
பகிர்ந்துகொண்டது, தங்கள் விளையாட்டுத் திறமைக்கு
மட்டுமல்ல, அதைவிட
கூடுதலாக தங்கள் நட்பிற்கு அவர்கள் வழங்கிக்கொண்ட தங்கப்பதக்கம் என்று கூறினர். "விளையாட்டுப்
போட்டிகளைத் தாண்டி, எங்கள்
கனவுகளுக்கு நாங்கள் கொடுத்துள்ள வடிவம், இந்த தங்கப்பதக்கத்தை பகிர்ந்துகொண்ட
நிகழ்வு. இதை, நாங்கள்
இளைய தலைமுறையினருக்கு ஒரு செய்தியாக சொல்ல விழைகிறோம்" என்று Barshim அவர்கள் கூறினார்.
ஏனைய ஒலிம்பிக் விளையாட்டுகளில்
பதக்கங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும், ஒலிம்பிக்
நிர்வாகக் குழுவால் தீர்மானம் செய்யப்பட்ட பதக்கப் பகிர்வுகள். ஒலிம்பிக்
வரலாற்றில், இரு வீரர்கள், தங்களுக்குள் தங்கப்பதக்கங்களைப் பகிர்ந்துகொள்ள
முடிவெடுத்தது, இதுவே முதல்முறை. நட்புக்கு
முக்கியத்துவம் கொடுத்து, இதுபோன்ற ஒரு முடிவு இனி எடுக்கப்படுமா, அல்லது, போட்டியும்,
வெற்றியும் மட்டுமே உயர்த்திப் பிடிக்கப்படுமா என்பதை, காத்திருந்து
பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு
ஒலிம்பிக் விளையாட்டிலும் இத்தகைய அழகான நிகழ்வுகள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. ஆனால்,
இந்த உன்னத உணர்வுகளை மூழ்கடிக்கும் வண்ணம், முதலிடத்தைப்
பெறுவதற்காக காட்டப்படும் தீராத பசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
போட்டி, வெற்றிபெறும் தீராத பசி
போன்ற வெறிகளை ஊதி வளர்க்கும் உலகப்போக்கைப்பற்றி சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.
கடந்த
இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும் இணைக்கும் விவிலியப் பகுதிகளைச்
சிந்தித்து வந்துள்ளோம். இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் இன்றைய வாசகங்களில்
கூறப்பட்டுள்ளன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி, உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் கூறப்பட்டாலும், இவற்றைச் சிறிது ஆழமாக ஆய்வு செய்யும்போது, மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல்வேறு ‘பசி’கள், இந்த வாசகங்களில் வெளிப்படுவதை நாம் உணரலாம்.
எடுத்துக்காட்டாக, பாலைநிலத்தில் அமர்ந்து, தான்
சாகவேண்டுமென்று மன்றாடிய இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது (1அர.19:4-8).
இப்பகுதியைமட்டும் வாசிக்கும்போது, பசித்திருந்த இறைவாக்கினருக்கு
வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது சிந்தனைகள் நின்றுபோக வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலைநிலத்திற்குச் சென்றார், அவர்
ஏன் சாகவிரும்பினார் என்பதை சிந்திக்கும்போது, இந்நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுவகையானப்
பசிகளும், அவைகளால் உருவாகும் வெறிகளும்
வெளிப்படுகின்றன.
இஸ்ரயேல்
அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறியில்
–பசியில் - இருந்ததால், எலியா, பாலைநிலத்திற்கு ஓடவேண்டியதாயிற்று. அரசி
ஈசபேல் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பாகால் தெய்வம், போலியான தெய்வம் என்பதை, இறைவாக்கினர் எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறிகொண்டார்.
தெய்வ
வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும்
ஓர் உன்னத முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பணம், பதவி, போன்ற போலி தெய்வங்களை வழிபடும் மனிதர்களை அவ்வப்போது
சந்தித்துவருகிறோம். அத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போர், தங்கள் தெய்வங்கள் போலியானவை என்று,
துணிவுடன் சொன்னவர்களை, தங்கள் கொலைப்பசிக்கு
இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.
இறைவாக்கினர்
எலியாவைப்போல, மனித வரலாற்றில், பல்வேறு காலங்களில் தோன்றிய இறைவாக்கினர்கள், போலி தெய்வங்களை வணங்குவோருக்கு சவால்விடும்வண்ணம்
உண்மைகளை எடுத்துரைத்துள்ளனர். அந்த வரிசையில், நாம் வாழ்ந்துவரும் இக்காலத்தில், இந்திய நடுவண் அரசின் பிரதமரும், ஏனைய அமைச்சர்களும் தொழுதுவரும்,
பதவியும், பணமும், போலி தெய்வங்கள் என்று, துணிவுடன் பேசிய, அருள்பணி ஸ்டான் சுவாமி
அவர்கள், இவ்வாண்டு ஜூலை 5ம் தேதி
கொலையுண்டது, இன்னும் நம் நினைவுகளைவிட்டு
அகலமறுக்கிறது. இவரைப்போல, உண்மையை எடுத்துரைத்து, அதன் விலையாக தங்கள் உயிரை வழங்கிவரும் இறைவாக்கினர்களை, இந்த ஞாயிறன்று நினைவுகூர்ந்து, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
பொதுவாகவே, உண்மைகள் கசக்கும். அந்தக் கசப்பான மருந்தை
அருந்தி, குணம் பெறுவதற்குப் பதில், மருந்தைத் துப்பிவிட முயல்கிறோம். ஒருசில
வேளைகளில், அந்த மருந்தைத் தந்தவர்மீதும்
நமது கோபத்தைக் காட்டுகிறோம். இத்தகைய ஒரு சூழலை இன்றைய நற்செய்தி சித்திரிக்கிறது.
யோவான் நற்செய்தி 6: 41-51
இயேசு
கூறிய உண்மைகளைக் கேட்பதற்கு, அவரைத் தேடி ஆயிரக்கணக்கான
மக்கள், பாலைநிலம் சென்றனர் என்பதையும், அவர்களது உள்ளப்பசியைப் போக்கிய இயேசு, அவர்களது வயிற்றுப்பசியையும் தீர்த்தார்
என்பதையும், இருவாரங்களுக்கு முன் நற்செய்தியாகக் கேட்டோம். தங்கள் பசிபோக்கும் எளிதான,
குறுக்குவழி, இயேசுவே, என்றெண்ணிய மக்கள், அவரை, மீண்டும் தேடிச்சென்றனர் என்பதை, சென்றவார நற்செய்தியில் கேட்டோம். தன்னைத்
தேடிவந்த மக்களைப் பயன்படுத்தி, தன் புகழை வளர்த்துக்கொள்ளும்
பசிகொண்ட சாதாரண அரசியல் தலைவராக இயேசு வாழ்ந்திருந்தால், உணவைப் பலுகச்செய்த புதுமையை மீண்டும், மீண்டும் நிகழ்த்தி, தன் புகழ் பசியைத் தீர்த்திருப்பார். அதற்குப்
பதிலாக, இயேசு, மக்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு சில உண்மைகளைக் கூறினார்.
மக்கள்
பேராசைப் பசி கொண்டதும், அதைத் தீர்க்க, தன்னை ஒரு குறுக்கு வழியாகக் கருதி, அவர்கள் தேடி வந்ததும் தவறு என்ற உண்மைகளை, இயேசு, வெளிப்படையாகக் கூறினார். அவர் வழங்கிய கசப்பு
மருந்தை ஏற்க மறுத்த யூதர்கள், மருந்தைக் கொடுத்த இயேசுவை எதிர்க்கும் முயற்சிகளில்
இறங்கினர்.
உண்மையைக்
கூறும் ஒருவரை, கருத்தளவில் எதிர்க்க
முடியாதவர்கள், பொதுவாகப் பயன்படுத்தும்
மற்றொரு வழி, உண்மையைச் சொன்னவரின்
பிறப்பு, குலம் இவற்றை கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவது! இத்தகைய எதிர்ப்புக் கணைகளையே, யூதர்கள் இயேசுவின் மீது தொடுத்தனர். தனது
பிறப்பைக்குறித்து அவர்கள் ஏவியக் கணைகளைப் பொருட்படுத்தாத இயேசு, மனம் தளராமல், மக்களுக்கு நலம் தரும் உண்மைகளைத்
துணிவுடன் சொன்னார். அவர்கள், நிலையான, நிறைவான வாழ்வைப்
பெறுமாறு அழைத்தார்.
இறுதியாக
ஓர் எண்ணம்... ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6ம் தேதி, இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை திருஅவை கொண்டாடும்
வேளையில், ஜப்பானின் ஹிரோஷிமாவில்
அணுகுண்டு வீசப்பட்ட நிகழ்வையும் சிந்திக்கிறோம். 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் பெரும்
அழிவுகளைச் சந்தித்த ஜப்பான் நாடு, அந்த
அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து, 19 ஆண்டுகளுக்குப் பின், 1964ம் ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டுக்களை முதல்முறையாக
நடத்திய ஆசிய நாடு என்ற பெருமையைப் பெற்றது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அணுகுண்டு வீழ்ந்த அன்று பிறந்த Sakai Yoshinori என்ற குழந்தை, பின்னர் ஒரு விளையாட்டு வீரராக, டோக்கியோ நகரில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக்
விளையாட்டுக்களின் துவக்கவிழாவில், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்தார்.
மனிதர்களாகிய நாம், எத்தனை துன்பங்களால் வதைக்கப்பட்டாலும், மீண்டும் எழக்கூடியவர்கள் என்பதை, ஜப்பான் நாடும், இளம்வீரர் Yoshinori
அவர்களும்
நமக்கு உணர்த்துகின்றனர். தற்போது நம்மை வதைத்துவரும் கோவிட் பெருந்தொற்று என்ற அழிவிலிருந்து
நாம் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை,
இறைவன்
நம் ஒவ்வொருவருக்கும் வழங்கவும், பதவி, பணம் ஆகிய தீராத பசிகளால் இனி இவ்வுலகம்
துன்புறாமல் இருக்கவும், சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
No comments:
Post a Comment