21st Sunday in Ordinary Time
Starting
from the 17th Sunday in Ordinary Time, except for the last Sunday
which was the Feast of the Assumption of the Virgin Mary, we have been
reflecting on passages taken from the 6th chapter of John’s Gospel.
This chapter begins with the grand, miraculous dinner, given by Jesus for 5000
plus people, of course, initiated by the generosity of a boy, who shared 5
loaves and 2 fish. Having witnessed the facility with which Jesus could satisfy
their hunger, people came looking for him for easy solutions to their problems.
Jesus did
not make it easy for them. He gave them a discourse on the physical and
spiritual hunger. As the discourse progressed, Jesus was placing before the
people some hard choices. The final part of chapter 6 of John which we read as
today’s Gospel, talks of the moment of truth, the moment of decision-making.
This gives us an opportunity to think of one of the most potent capacities only
we – the human beings – are endowed with, namely the capacity to DECIDE! While
all the other creatures, in any given situation, act on their instinct, human
beings can take stock of the situation, control their instinct, and act on
their ‘informed’ will power. Decisions are an integral part of human life… decisions,
big and small.
Decisions
are made based on many factors. Decisions taken by political as well as
commercial bigwigs are based mainly on selfishness and profit. We are paying
the price of these political and commercial decisions dictated by extreme
selfishness in terms of the pandemic, political and social unrest, and
ecological disasters. Unfortunately, those who made the decisions don’t pay the
large amount of price for their decisions. Only the poor pay a heavy price for
the selfish decisions of the bigwigs. As opposed to these ‘selfish mistakes’,
many noble souls make decisions based on principles, religious belief and
morality. Such decisions land them in very tough situations, but, deep down
these noble souls feel true peace and liberty.
Talking of
liberty… Last Sunday India celebrated its 75th Independence Day. The
moment we speak of ‘celebration’, we tend to ask whether India is really in a
position to ‘celebrate’ its independence, given the present chains with which
it is bound. Since the independence of India was obtained at midnight, people
often speak of India still not waking up from its midnight slumber. We have
been politically liberated from the British people who have been looting us
right royally. Now, we are being looted by corrupt, selfish politicians. On
every Independence Day, we are faced with the question: How do we, who have
driven away the British from our land, drive away these robbers?
Many noble
souls have made their decision as to how they would deal with these robbers… Of
course, they have paid the price for their decisions. One such person, whom we
cannot easily forget, is Fr Stan Swamy. He had made up his mind to expose the
treachery of these robbers who have grabbed the Parliament and the Courts. He
paid the price for his decisions with being tortured in Mumbai prison for more
than 260 days in prison. Ultimately, he laid down his life hoping that India
will one day see its true liberation.
After his
tragic death on July 5, a book was released with the title: “I AM NOT A
SILENT SPECTATOR” which is ‘au autobiographical Fragment, Memory and
Reflection, written by Fr Stan Swamy himself. In the PROLOGUE of this book,
Stan begins his reflections with some poignant questions and his answers to it,
ending with his decision. Here are the opening lines of this prologue: ‘Why
truth has become so bitter, dissent so intolerable, justice so out of reach?’
because truth has become very bitter to those in power and position, dissent,
so unpalatable to the ruling elite, justice, so out of reach to the powerless,
marginalised, deprived people. Yet, truth must be spoken, right to dissent must
be upheld, and justice must reach the doorsteps of the poor. I am not a silent
spectator.
The world
needs to hear the bitter truth of what is wrong with it. Most of us prefer to
keep silent and not speak up when things go wrong. That is why Martin Luther
King Jr. once said: “History will have to record that the greatest tragedy
of this period of social transition was not the strident clamor of the bad
people, but the appalling silence of the good people.” Very true even
today!
Ella
Wheeler Wilcox, an American poet, wrote a poem titled ‘Protest’. Here are the
first few lines, of this poem:
To sin
by silence, when we should protest,
Makes
cowards out of men. The human race
Has
climbed on protest. Had no voice been raised
Against
injustice, ignorance, and lust,
The
inquisition yet would serve the law,
And
guillotines decide our least disputes.
The few
who dare, must speak and speak again
To right
the wrongs of many.
The opening
slate of the famous movie JFK (based on the murder plot of President John F
Kennedy, popularly known as JFK) by Oliver Stone shows the opening line of the
poem by Wilcox: “To sin by silence when we should protest makes cowards out
of men.”
President
Kennedy was shot dead in November 1963, the same year that Martin Luther King
delivered his memorable “I have a dream” speech. In the movie script of JFK,
there is a dialogue spoken by the actor playing the role of Jim Garison, the
District Attorney of Orleans Parish, Louisiana: “Telling the truth can be a
scary thing sometimes. It scared President Kennedy, and he was a brave man. But
if you let yourself be too scared, then you let the bad guys take over the
country. Then everybody gets scared.” These lines of Mr Garison, more than
ever, ring true in almost all the countries around the world.
When most
of us decide to be ‘silent spectators’ to all the atrocities that happen around
us, Fr Stan Swamy decided - “I AM NOT A SILENT SPECTATOR”. Inspired by
the example of Fr Stan, we can be sure that many more Indians, especially the
youth, will decide not to be ‘silent spectators’
Today’s readings talk
about Joshua and Simon Peter not only making decisions, but also speaking up
under difficult circumstances. “As for me and my house, we will serve the
LORD” (Joshua 24: 15) was the decision of Joshua. When he speaks of his
house, it can be taken not only as his close family but also his
kith and kin… and even his domestic employees! In today’s Gospel, Simon Peter
makes a similar decision on behalf of the twelve disciples. When Jesus asks the
poignant question: “Do you also wish to go away?” Simon Peter answered him in
one of the oft-quoted Bible verses: “Lord, to whom shall we go? You have
the words of eternal life.” (John 6: 68)
Two aspects of these
decisions strike us. The first aspect is the ‘plurality’ of the
decision. Both Joshua and Peter make use of the ‘we’ word! The word ‘we’ seems
to be receding from our vocabulary in subtle ways and the dangerous ‘I’ word
seems to be making subtle inroads into our lives. When crucial decisions have
to be made in families, collective responsibility seems to take the backseat.
Hope we become aware of this trend and take necessary precautions.
When an individual
speaks for the group, we can assume that that person has a good knowledge of
the group and has gained the confidence of the group as well. Such healthy
knowledge and trust will be a great help in families, especially when they are
going through tough times.
We are sadly aware that
‘collective decision-making process is becoming obsolete in our families. There
is more and more ‘touch-me-not’ or ‘leave-me-alone’ attitude prevalent in
families. This leads to individuals making wrong decisions. We can learn from
Joshua and Peter as to how we can make responsible decisions on behalf of our
near and dear ones.
The second aspect
of the decisions made by Joshua and Peter, is the tough situation in which they
were made. When life moves smoothly, there is hardly any need for decisions. Even
if there are a few tiny decisions to be made, they can be made easily. It is
during times of crisis that we need to take major decisions – as in the case of
Joshua, Peter.
Our memories are right
now filled with the painful news and images from Kabul, the capital of
Afghanistan. We saw some persons – mostly young men – clinging on to the army
plane that took off from Kabul airport and falling to their death. Desperate
situations prompt us to make desperate decisions. We pray that the members of
the Taliban who have taken control of Afghanistan are guided by reason and make
decisions that are helpful to restore peace in that country.
All of us keep making
decisions in life – big, small, crucial, casual, tough, easy… At this moment,
we pray especially for those who are at crossroads in their lives to make
important decisions – especially during this pandemic and in the post-pandemic
period! May our leaders who, like Joshua and Peter, have to make decisions on
behalf of the people, be guided by noble principles and not selfish interests.
May Joshua, Simon Peter and noble persons like Fr. Stan Swamy help us make the
right decisions! God-and-people-centred decisions!
பொதுக்காலம் 21ம் ஞாயிறு
கடந்த நான்கு வாரங்களில், தூய கன்னிமரியாவின் விண்ணேற்பு
பெருவிழாவைக் கொண்டாடிய சென்ற ஞாயிறைத் தவிர, முந்தைய மூன்று ஞாயிறு வழிபாடுகளில்,
யோவான் நற்செய்தி 6ம் பிரிவிலிருந்து நற்செய்திப் பகுதிகளை கேட்டுவந்துள்ளோம். இந்த
ஞாயிறன்று, இப்பிரிவின் இறுதிப் பகுதி, நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.
5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு, இயேசு வழங்கிய அற்புத
விருந்துடன், யோவான் நற்செய்தி 6ம் பிரிவு ஆரம்பமாகிறது. அந்த விருந்துக்குப்பின், மக்கள், தங்கள் வயிற்றுப்பசியைத் தீர்க்க, தன்னை, மீண்டும், மீண்டும்
தேடிவருகின்றனர் என்பதை உணர்ந்த இயேசு, அவர்களுக்கு
வழங்கும் உரையில், கசப்பான உண்மைகளைக் கூறுகிறார். கடினமான சவால்களை முன்வைக்கிறார். அவ்வுரையின்
இறுதியில், இயேசுவைப் பின்தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டிய ஓர் இக்கட்டானச்
சூழல் உருவாவதை, இன்றைய நற்செய்தியாக வாசிக்கிறோம்.
முடிவெடுக்கும் திறமை, மனிதர்களாகிய
நமக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள ஓர் அழகியக் கொடை. இக்கொடையைக் குறித்து சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
ஏனைய உயிரினங்கள், சூழ்நிலையால் உந்தப்பட்டு
செயல்படும் வேளையில்,
மனிதர்களாகிய நாம் மட்டுமே, சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, நல்லது, கெட்டது இவற்றை உணர்ந்து, முடிவெடுக்க, ஆற்றல் பெற்றுள்ளோம். நமக்கு
வழங்கப்பட்டுள்ள பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி, காரண, காரியங்களை ஆராய்ந்து, கணக்குப் பார்த்து முடிவெடுப்பது
ஒரு வகை. வர்த்தக உலகிலும், அரசியல்
உலகிலும், சுயநலனும், இலாபமும்,
இந்த முடிவுகளை வழிநடத்துகின்றன.
இதற்கு
மாறாக, இலாப, நட்ட கணக்குகளைப் புறந்தள்ளி, நம் வாழ்வை
வழிநடத்தும் கொள்கைகள், மதநம்பிக்கை, நன்னெறி விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, முடிவெடுப்பது, உன்னதமான மற்றோரு வழி.
இத்தகைய முடிவுகள், அறிவுத்திறனிலிருந்து பிறப்பதைக்காட்டிலும், ஆழ்மனதிலிருந்து பிறக்கும்.
பல வேளைகளில், இத்தகைய முடிவுகள், நடைமுறை வாழ்வில், கடினமான விளைவுகளை
உருவாக்கினாலும், ஆழ்மனதில், உண்மையான விடுதலை உணர்வை வழங்கும்.
ஆகஸ்ட்
15, கடந்த ஞாயிறு, இந்தியாவின் 75வது விடுதலைநாளைக்
கொண்டாடினோம். 'கொண்டாடினோம்' என்ற சொல்லைக் கேட்டதும், 'என்னத்த கொண்டாடினோம்' என்ற விரக்தி கலந்த ஒரு கூற்று, பலரது எண்ணத்தில் எழுந்திருக்கலாம்.
நானும் அதற்கு விதிவிலக்கல்ல. வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலையடைந்தோம், ஆனால், கொள்ளைக்காரர்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகிறோம் என்ற எண்ணம், ஒவ்வொரு
விடுதலை நாளன்றும், நம் உள்ளங்களில், வேதனையை உருவாக்குகின்றது.
நம்
பாராளுமன்றத்தை, சட்டப்பேரவைகளை, நீதி மன்றங்களை ஆக்கிரமித்துள்ள இந்தக் கொள்ளைக்காரர்களைப்பற்றி
என்ன முடிவெடுக்கப்போகிறோம் என்ற கேள்வி எழுந்தால், ‘என்னால் என்ன செய்யமுடியும்’ என்ற ஒரு மலைப்பு நமக்குள்
உருவாகிறது. அந்த மலைப்பு, நம்மைச் செயலிழக்கச் செய்து, விரக்தியில் ஆழ்த்துகிறது.
இந்த
கொள்ளைக்காரர்களையும், அவர்களது அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்த, அருள்பணி ஸ்டான்
சுவாமி அவர்கள் எடுத்த முடிவையும், அதற்கு அவர் தந்த விலையையும்,
நாம் அறிவோம். இந்தியாவின் விடுதலை நாளுக்கு நாற்பது நாள்கள் முன்னதாக, ஜூலை 5ம்
தேதி, இந்தக் கொள்ளைக்காரர்களின் சித்ரவதைகளிலிருந்து விடுதலையடைந்த அருள்பணி ஸ்டான்
அவர்கள், தன் வாழ்வை வழிநடத்திய
எண்ணங்களையும், வெவ்வேறு நிலைகளில் தான்
எடுத்த முடிவுகளையும், வருங்காலத்திற்கு
உதவும் என்ற எண்ணத்தில், தொகுத்துள்ளார். அவரது சிந்தனைத் தொகுப்பு, அவரது மரணத்திற்குப்பின், ஒரு நூலாக, அண்மையில் வெளியிடப்பட்டது.
“I am not a silent
spectator”
அதாவது, "மௌனம் காக்கும் பார்வையாளன் அல்ல நான்" என்று தலைப்பிடப்பட்டுள்ள
இந்நூலின் அறிமுகத்தில், அவர் பதிவுசெய்துள்ள
முதல் வரிகள், அவர், தன் வாழ்வில் எடுத்த
முடிவுகளுக்கு காரணம் என்ன என்பதை, ஓரளவு புரிந்துகொள்ள உதவுகின்றன. அந்த முதல் வரிகள்
இதோ:
உண்மை
ஏன் இவ்வளவு கசப்பாயிற்று, கருத்துவேறுபாடு
இவ்வளவு சகிக்கமுடியாததாயிற்று, நீதி இவ்வளவு எட்டமுடியாததாயிற்று? ஏனெனில், அதிகாரத்தில் இருப்போருக்கு, உண்மை மிகவும் கசந்துபோனது, கருத்துவேறுபாடு விழுங்கமுடியாமல்போனது, சக்தியற்றவர்களுக்கு, சமுதாயத்தின் விளிம்பில்
தள்ளப்பட்டவர்களுக்கு, வாய்ப்புகள்
மறுக்கப்பட்டவர்களுக்கு, நீதி, எட்டமுடியாத தூரத்தில் உள்ளது. இருப்பினும், உண்மை பேசப்படவேண்டும், கருத்துவேறுபாடு கொள்ளும்
உரிமை உயர்த்திப்பிடிக்கப்படவேண்டும், வறியோரின் வாசலை, நீதி அடையவேண்டும். மௌனம்
காக்கும் பார்வையாளன் அல்ல நான்.
அநீதிகள் நிறைந்த சூழலில், நம்மில் பலர், மௌனம் காப்பதே சிறந்த வழி என்று எண்ணுகிறோம். தற்காப்பு என்ற அடிப்படை
மனிதத்தேவையிலிருந்து எழும் முடிவு இது. மௌனம் காக்க முடிவெடுப்போரைக் குறித்து, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறிய ஒரு கூற்று, நினைவில்கொள்ளத்தக்கது: “சமுதாய மாற்றத்தை நோக்கிச்செல்லும் காலத்தின் மிகப்பெரும்
வேதனை என்னவென்று சிந்தித்தால், அது, தீமைகளைச் செய்யும் ஒரு சிலர் போடும் கூப்பாடு அல்ல... மாறாக, நல்லவர்களின்
அதிர்ச்சியூட்டும் அமைதியே, பெரும் வேதனைதரும் காரியம்” என்று, மார்ட்டின் அவர்கள் கூறிய வார்த்தைகள், இன்றும், பொருள் உள்ளவைகளாகத் தெரிகின்றன.
மௌனம் காப்பதே சிறந்த வழி என்று நம்மில் பலர் நினைப்பதைக்
குறித்து, Ella Wheeler Wilcox என்ற அமெரிக்க கவிஞர் கூறும் சொற்கள், கூர்மையாக நம் உள்ளங்களில்
பதிகின்றன:: "எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டிய வேளையில் மௌனம் காத்து, பாவம் புரிவது, நம் அனைவரையும் கோழைகளாக்குகிறது".
அநீதிகள் நடந்தவேளையில், கைகட்டி,
வாய்மூடி, பார்வையாளராக இல்லாமல், அந்த அநீதிகளைத் தட்டிக்கேட்ட போராட்டத்தில் பங்கேற்பாளராக
மாற முடிவெடுத்து, அதன் விலையாக தன் உயிரையே தந்தவர், அருள்பணி ஸ்டான் சுவாமி. அவரைப் பின்பற்றி, ஆயிரமாயிரம் இந்தியர்கள், குறிப்பாக, இளையோர், அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும்
முடிவுகளை எடுப்பதற்கு, அருள்பணி ஸ்டான் அவர்கள், இறைவன் முன் நமக்காகப்
பரிந்துபேசுகிறார் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.
இக்கட்டானச்
சூழல்களில், யோசுவா,
மற்றும்
புனித பேதுரு ஆகிய இருவரும் எவ்வாறு முடிவெடுத்தனர் என்பதை, இன்றைய வழிபாட்டு வாசகங்களில் காண்கிறோம். "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசுவா 24: 15) என்று யோசுவா சொல்வதை,
இன்றைய முதல்வாசகத்தில் கேட்கிறோம். யோவான் நற்செய்தியில், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம்
போவோம்?
நிலைவாழ்வு
அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் 6: 68) என்ற புகழ்பெற்ற சொற்களைப்
பதிலாகச் சொல்கிறார்,
சீமோன்
பேதுரு. யோசுவாவும், பேதுருவும் எடுத்த முடிவுகள், அறிவுத்திறனிலிருந்து பிறக்கவில்லை,
ஆழ்மனதிலிருந்து பிறந்தன. அத்துடன், அவர்கள் எடுத்த முடிவுகள், வாய் வார்த்தைகளாகமட்டும்
இருந்துவிடாமல், செயல்களாகவும் மாறின.
இவ்விருவரும்
எடுத்த முடிவுகளில், மற்றோர் அம்சம், நம் கவனத்தை ஈர்க்கின்றது.
இருவருமே, தங்கள் முடிவுகளை, தனி மனிதர்களாக எடுக்கவில்லை. தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும்
சேர்த்தே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வேன்"
என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, “நானும் என் வீட்டாரும்
ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24: 15) என்று யோசுவா உறுதியுடன்
கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா குறிப்பிட்டுள்ளதை, அவரது குடும்பத்தினர்
என்றுமட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று, தன் குலத்தைச் சார்ந்த அனைவரையும் இந்த வார்த்தையில்
யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி,
சீமோன்
பேதுருவின் வார்த்தைகளிலும் ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், பன்னிரு சீடர்களுக்கும் சேர்த்து அவர் முடிவெடுக்கிறார்.
தங்கள்
குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள் குழுவை, முழுமையாக நம்புகிறவர்களே, இவர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களே,
மற்றவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும்.
இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும்,
நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும்
உள்ளனவா என்பதை ஆய்வுசெய்து பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
மேற்கத்திய
நாடுகளில் வாழும் குடும்பங்களில், 'தாமரை இலை மேல் நீர்' போன்ற உறவுகள் நிலவுவதைக் காணலாம். அத்தகைய
ஒரு போக்கு, தற்போது, ஆசிய நாடுகளிலும் பரவிவருவதை, நாம் வேதனையோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தப் போக்கு, ஒவ்வொருவரையும், தனிமரமாக
மாற்றிவிடுவதால், தவறான முடிவுகள் எடுக்க
வழிவகுக்கிறது. குடும்ப உறவுகள் வலுப்பெற்று, அனைவருக்கும் நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்கும்
சூழல், நம்மிடையே வளரவேண்டும்
என்று இறைவனை வேண்டுவோம்.
எவ்வகையான
சூழல்களில் முடிவுகள் எடுக்கிறோம் என்பதைச் சிந்திக்கவும், இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. வாழ்வில்
எல்லாமே சுமுகமாகச் செல்லும் வேளைகளில், முடிவுகள்
எடுக்கும் தேவையே எழுவதில்லை. அந்நேரங்களில் சிறு, சிறு முடிவுகள் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள்
நம்மை நெருக்கும்போது, முடிவுகள் எடுப்பது, கடினமாக இருக்கும்.
அண்மையில், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளிவந்த செய்திகளும், புகைப்படங்களும், காணொளித் தொகுப்புகளும் நம் நினைவுகளைக்
காயப்படுத்தியுள்ளன. தாலிபான் அமைப்பின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் முடிவில், மக்கள், காபூல் விமான நிலையத்தில் மேற்கொண்ட முயற்சிகள், அமெரிக்க இராணுவ விமானம் கிளம்பியபோது, அந்த விமானத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடியே
செல்ல முடிவெடுத்த சிலர், விமானத்திலிருந்து விழுந்து
உயிர் நீத்தது ஆகியவை, மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
முடிவெடுக்கும் திறமையை ஆய்வுசெய்ய அழைப்புவிடுக்கின்றன.
முக்கியமான
முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக்
கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பி, இந்த முடிவுகளை எடுக்கும்போது, அதனால்
கிடைக்கும் ஆழ்மன அமைதியும், விடுதலையும் மிக உன்னதமானவை. இப்படிப்பட்ட ஓர் உணர்வையே, பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்: "ஆண்டவரே நாங்கள் யாரிடம்
போவோம்? நிலைவாழ்வு அளிக்கும்
வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் 6: 68)
"வேறு
யாரிடம் போவோம்?" என்று பேதுரு கூறுவதை, "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை"
என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் பொருள்கொள்ள முடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும், அவரது
நண்பர்களும், மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று
முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு
விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு இணைந்து, தங்கள் பழையவாழ்வுக்குத் திரும்ப முடிவெடுத்திருக்கலாம்.
ஆனால், கடலையும், படகையும், வலைகளையும் நம்பி, அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை
விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற
வாழ்வு, அவர்களுக்கு, வாழ்வில் ஒரு பிடிப்பைக்
கொடுத்தது. அந்த வாழ்வு, உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும்
உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில்
அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.
பேதுருவும், ஏனையச் சீடர்களும், இயேசுவுடன் தங்குவதற்கு எடுத்த அந்த முடிவு, கொடூரமான மரணம்வரை அவர்களை அழைத்துச் சென்றபோதும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாமல்
இருந்ததால், சக்திமிகுந்த சாட்சிகளாக
இன்றும் வாழ்கின்றனர்.
இயேசுவை
நம்பி தங்கள் வாழ்வையே தகனமாக்கிய சீடர்களைப் பின்பற்றி, கோடான கோடி பெண்களும், ஆண்களும் தங்களுக்காகவும், தங்களைச் சார்ந்தோருக்காகவும் நல்ல முடிவுகள்
எடுத்துள்ளதை, கிறிஸ்தவ வரலாறு தொடர்ந்து
நமக்கு உணர்த்திவருகிறது. இந்த வரிசையில், நல்ல
முடிவுகளை எடுத்து, தன் வாழ்வை தகனப்பலியாக்கி,
இவ்வுலகிலிருந்து அண்மையில் விடைபெற்றவர், அருள்பணி
ஸ்டான் சுவாமி.
தங்கள்
சொந்த வாழ்வில் பெரும் துயரங்களைச் சந்தித்தாலும், அத்துயரங்களின் பாரத்தால் நொறுங்கிப் போகாமல், அத்துயரங்களை மற்றவர்கள் அடையக்கூடாது என்ற
மேலான எண்ணத்துடன், ஆக்கப்பூர்வமான முடிவுகளை
எடுத்து, அவற்றிற்கு செயல்வடிவம்
கொடுத்த அருள்பணி ஸ்டான் சுவாமி போன்ற உன்னத உள்ளங்களுக்காக இறைவனுக்கு இன்று நன்றி
செலுத்துவோம். இவர்கள் உள்ளத்தில் தோன்றிய அந்த உறுதியில், ஒரு சிறிதளவாகிலும், நம் உள்ளத்திலும் தோன்ற, இறைவனை இறைஞ்சுவோம்.
நலமான, உறுதியான குடும்பங்களில், பணிவு, அன்பு என்ற இரு முக்கிய குணநலன்கள், குறையாமல்
வளரவேண்டும் என்று, இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுல் அடியார் கூறியுள்ளார் (எபேசியர் 5: 21-32). பவுல் அடியார், பணிவை, மனைவியின் பகுதியாகவும், அன்பை, கணவனின் பகுதியாகவும்
பிரித்துள்ளார். இத்தகையத் தெளிவானப் பிரிவு, இன்றைய காலக்கட்டத்தில் ஏற்புடையது அல்ல
என்றாலும், ஒரு குடும்பத்தில், பணிவும், அன்பும் இருந்தால், உறுதியான முடிவுகள் எடுப்பதற்கு எளிதாக இருக்கும்
என்பதையும் நாம் மறுக்கமுடியாது.
வாழ்வின்
முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்புள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக்
கொணர்வோம். முக்கியமானத் தருணங்களில்,
குடும்பங்கள்
இணைந்துவந்து முடிவுகள் எடுக்கும் கலையை கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் மன்றாடுவோம்.
யோசுவாவைப் போல, பேதுருவைப் போல, அருள்பணி
ஸ்டான் சுவாமியைப் போல, இறைவனை நம்பி,
இறைவனைச்
சார்ந்து, நம் வாழ்வின் முடிவுகள் அமைய, இறையருளை இறைஞ்சுவோம்.
No comments:
Post a Comment