22 September, 2022

Locked up in riches… Liberated by the poor… செல்வத்தால் சிறை... வறியோரால் விடுதலை...

 
The Rich man and Lazarus

26th Sunday in Ordinary Time

Cecil John Rhodes, who lived in the 19th century, was an enormously wealthy man. He was an English-born businessman, mining magnate, and politician in southern Africa. He was the founder of the diamond company De Beers, which, from its inception in 1888 until the start of the 21st century, controlled 80% to 85% of rough diamond distribution and was considered a monopoly. Mr Rhodes, an ardent believer in colonialism and imperialism, was the founder of the state of Rhodesia to perpetuate his name. One day a newspaperman told him, "You must be a very happy man." Rhodes replied, "Happy? No! I spent my life amassing a fortune only to find that I have spent half of it on doctors to keep me out of the grave, and the other half on lawyers to keep me out of jail!" He reminds us of the rich man portrayed by Jesus in the parable of the Richman and Lazarus (Luke 16:19-31), in which the rich man wants to escape from the hell fire.

In contrast to Mr Rhodes, who was born in England and migrated to the African continent to exploit the natural resources to amass personal wealth, we can turn our attention to the story of Dr Albert Schweitzer who also went from Europe to the African continent to enrich the people!
30 year old Albert, already a Doctor in Philosophy and Theology, was at the peak of his career as a professor in Vienna. He was recognized as one of the best concert organists in all Europe. Living in Vienna, the ‘City of Music’, he was a well sought after artist. At the age of 30, he left all these and pursued medicine, with a single purpose of going to Africa to help the poor. When people asked him why he had taken such a drastic decision, the only answer he could give was that the change was wrought by the famous parable of the Richman and Lazarus. Not only in Albert, but in thousands of heroic persons, this parable has brought about radical changes. This Sunday, we are invited to reflect on this parable. We hope that this parable stirs us out of our comfort zones!  

We have heard of the different stages of human growth as proposed by Sigmund Freud, the first of which is the ‘oral stage’. During the first months, the infant’s palms are always closed. Whatever we extend, whether it is our finger or a toy, the infant grabs it and takes it to the mouth. For the infant, the whole world is there to be consumed. With much care, we try to wean the child from this stage. We begin teaching things like sharing… “Tom, give the candy to Jerry… No, don’t grab everything… Let your sister play with the toy for a while…” etc.

While we tend to ‘preach’ to the child noble ideas of sharing, we practice very different things. When a child sees the contradiction between what the adults say and do, it tends to follow the deed rather than the word. For not helping our children grow up to be caring, sharing adults, all of us need to stand accused. When we stand accused in the court of the world, the judgement from above will sound similar to the words used by Amos in today’s first reading:
Amos 6: 1, 3-7
Woe to you who are complacent in Zion, and to you who feel secure on Mount Samaria …
You lie on beds inlaid with ivory and lounge on your couches. You dine on choice lambs and fattened calves…
You drink wine by the bowlful and use the finest lotions, but you do not grieve over the ruin of Joseph. Therefore, you will be among the first to go into exile; your feasting and lounging will end.

Greed creates an introverted look so that we never grow beyond our baby years, namely, the ‘oral stage’. Jesus warns us of this ‘all-for-me’ attitude in the famous parable – the Richman and Lazarus.

This parable is a treasure trove containing many lessons for our life. A detailed analysis of this parable will be quite long. We shall confine our reflections only to the first few lines where Jesus introduces the two characters – the rich man and Lazarus – and try to learn a few lessons.
Luke 16: 19-21
There was a rich man, who was clothed in purple and fine linen and who feasted sumptuously every day. And at his gate lay a poor man named Lazarus, full of sores, who desired to be fed with what fell from the rich man's table; moreover, the dogs came and licked his sores.

We can identify eight elements in the above lines, three to introduce the rich man and five to introduce Lazarus.
Rich man        
  • A rich man
  • Clothed in purple and fine linen
  • Feasted sumptuously every day
Poor man
  • A poor man named Lazarus
  • Lying at his gate
  • Full of sores
  • Desired to be fed with what fell from the rich man's table    
  • Dogs came and licked his sore
Combining these eight elements, one can draw three comparisons which can teach us valuable lessons. The first comparison is identification given to the rich and the poor men. The very opening lines of this parable must have shocked the Pharisees. Jesus mentions a nameless rich man and a beggar named Lazarus. Of all the parables of Jesus, this is the only parable where the character in the story gets a proper name. For a Jew, and more especially for a Pharisee, being rich is a blessing from God, while being poor is a curse from God. Jesus subverted this equation. He made the rich man a non-entity and made the poor man a real person with a proper name… and, what a name! Jesus gives this character the name of one of his close friends, Lazarus.

Some commentators have mentioned that the rich man lost his name and identity due to the wealth he had amassed. He probably found much more happiness in being called a ‘millionaire’ rather than ‘Mr.So-and-So’. Since he relied on his wealth so much, he lost his true identity. On the other hand, Lazarus (meaning, ‘God helps’), got his identity by relying on God.

Having lived in religious communities for many years now, I can safely say that in many of the houses, the names of the poor workers don’t get registered in the minds of the community members and most of the time the workers are called simply as ‘Hey, you’. Jesus calling the poor man with a proper name ‘Lazarus’ is a whiplash for many of us!

The second comparison between the rich man and Lazarus runs a dagger through the heart. The rich man was dressed in purple linen, while Lazarus was covered with sores. Purple, scarlet, red… all shades of royalty. While the rich man clothed himself with royalty in an artificial way, Lazarus was regal in a very different way. He was possibly a distant image of Jesus, covered with sores, hanging on the cross, which carried the title: INRI - Jesus of Nazareth, the King of the Jews!

The third comparison is what brought trouble to the rich man. He was feasting sumptuously everyday… and therefore had to face hell. Seems like an unwarranted and disproportionate punishment. The rich man was not punished for feasting in luxury, but feasting in luxury while there lay a poor man at his gate. Actually, one can argue that the rich man was a gentle person… If he wanted, he could have easily got rid of Lazarus. On second thoughts, I feel that if the rich man had done something like that, his punishment would have been less. Is this puzzling? Let me explain. If the rich man had taken some effort to get rid of the poor man, he would have at least established the fact that he had acknowledged the presence of Lazarus as a human person. The rich man in this parable did nothing positive or negative about Lazarus. He simply ignored him. For him, Lazarus was no more than a piece of furniture in his house… Perhaps, the furniture in his house would have got enough attention by being wiped with a rag. Lazarus was laid out at his gate like a piece of rag. For the rich man, Lazarus was no more than the dust under his feet. We don’t usually pay attention to the dust under our feet unless the speck of dust soars high and gets into our eyes. This is exactly what happened in the second part of the parable. Lazarus, the dust, was carried to the bosom of Abraham and became the yardstick by which the rich man’s eternity was measured.

Ignoring a human person is the worst type of treatment one can give to another person. The rich man was guilty of this and he had to face the consequence. Far too many Lazaruses are laid out in our life’s journey. Let’s tread carefully! Treat them with care and respect!

Lazarus and the Rich man story

பொதுக்காலம் - 26ம் ஞாயிறு

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த Cecil John Rhodes என்ற ஆங்கிலேய செல்வர் ஒருவர், தன் 17வது வயதில் தெற்கு ஆப்ரிக்காவிற்கு சென்றார். அங்கு, வைரச் சுரங்கம் ஒன்றின் உரிமையாளராக தன் தொழிலை துவக்கினார். De Beers என்ற நிறுவனத்தின் வழியே, உலகின் வைர வணிகத்தில் 80 விழுக்காடு பங்கை தனக்கென உரிமையாக்கினார்.  அவரது பெயரால், தெற்கு ஆப்ரிக்காவில், Rhodesia என்ற நிலப்பரப்பை உருவாக்கினார். அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவரைச் சந்தித்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம், "இவ்வளவு செல்வம் குவித்துள்ள நீங்கள் மகிழ்வுடன் இருப்பீர்கள். இல்லையா?" என்று கேட்டார். அதற்கு, Cecil Rhodes அவர்கள் பதில் மொழியாக, "மகிழ்ச்சியா? இல்லை. என் வாழ்நாளை செலவழித்து, செல்வத்தைக் குவித்தேன். அதில், பாதியை, நான் கல்லறைக்குப் போகாமல் இருப்பதற்காக, மருத்துவர்களுக்கு கொடுத்துவருகிறேன். மீதிப் பாதியை, நான் சிறைக்குப் போகாமல் இருப்பதற்காக, வழக்கறிஞர்களிடம் கொடுத்துவருகிறேன்" என்று கூறினார். சேர்த்த செல்வத்தையெல்லாம், தன்னை சாவிலிருந்தும் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பிக்க செலவிட்ட செல்வந்தர் Rhodes அவர்கள், இன்றைய நற்செய்தியில் (லூக்கா 16:19-31) தன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்யும் செல்வந்தரை நினைவுக்குக் கொணர்கிறார்.

இளம் வயதில் இங்கிலாந்திலிருந்து ஆப்ரிக்கக் கண்டத்திற்குச் சென்ற Rhodes அவர்கள், அங்கிருந்த இயற்கை வளத்தைச் சுரண்டி, செல்வத்தைக் குவித்தார். இதற்கு முற்றிலும் மாறாக, ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த மற்றோர் இளைஞர், ஆப்ரிக்கக் கண்டத்திற்கு சென்று, அங்குள்ள மக்களை, குறிப்பாக, வசதி வாய்ப்பற்ற வறியோரை உயர்த்தினார்.

30 வயது நிறைந்த அவ்விளைஞர், இறையியல், மெய்யியல் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வியன்னாவில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். 'ஆர்கன்' என்ற இசைக்கருவியை இசைப்பதில் அதீதத் திறமை பெற்றிருந்த அவ்விளைஞர், பல இசை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டார். மேற்கத்திய இசையின் தலைநகரம் என்றழைக்கப்படும் வியன்னாவில், அவ்விளைஞர் வாசிப்பதைக் கேட்க கூட்டம் அலைமோதும்.
புகழின் உச்சியில் வாழ்ந்த அவ்விளைஞர், அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு, தன் 30வது வயதுக்குப்பின் மருத்துவம் பயின்றார். ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஓர் ஊரில், ஒரு மருத்துவமனையை உருவாக்கி, வறியோருக்குப் பணிகள் ஆற்றினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அற்புத பணியாற்றி, பிறரன்பிற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்த மாமனிதரின் பெயர், Albert Schweitzer. தன்னலமற்ற இவரது பணியைப் பாராட்டி, 1952ம் ஆண்டு, உலக அமைதி நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியராக, இசை மேதையாக வாழ்ந்துவந்த ஆல்பர்ட் அவர்கள், அனைத்தையும் விட்டுவிட்டு, ஆப்ரிக்கா சென்று பணியாற்ற முடிவெடுத்தபோது, பல கேள்விகள் எழுந்தன. இயேசு கூறிய 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையே இந்த முடிவெடுக்க உதவியது என்று ஆல்பர்ட் அவர்கள் பதில் கூறினார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வர், ஐரோப்பிய மக்கள் என்றும், இலாசர், ஆப்ரிக்க மக்கள் என்றும் தான் உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார். Albert Schweitzer அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரம் உள்ளங்களில், அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக இருந்த 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை, நமக்குள் மாற்றங்களை உருவாக்க, இந்த ஞாயிறு வழிபாட்டில், நம்மைத் தேடி வந்துள்ளது.

செல்வத்திற்கு அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தை, சென்ற வாரம், நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை வழியாக இயேசு கூறினார். அந்த உவமையின் இறுதியில், 'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (லூக்கா 16: 13) என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.

நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள், நம்மைச் சுற்றி வாழும் ஏழைகளே என்பதை, 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை வழியாக இயேசு இன்று கூறியுள்ளார். ஒரு வைரத்தைப்போல், வெவ்வேறு வண்ணத்தில் ஒளிதரும். இவ்வுவமையின் முழு அழகை இவ்வழிபாட்டின் குறுகிய நேரத்தில் உணர்வதற்கு வாய்ப்பில்லாததால், உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச் செலுத்தி, பாடங்களைப் பயில முயல்வோம்.

லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் காணப்படும் இவ்வுவமையின் முதல் மூன்று இறை வாக்கியங்களில், இவ்வுவமையின் இரு நாயகர்களை, இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளில், செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.
செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ:

·         செல்வர் ஒருவர் இருந்தார்.
·        விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
·         நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ:
·         இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
·         அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
·         அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
·         செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
·         நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

இந்த எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்... என்பது முதல் ஒப்புமை. செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும், இந்த உவமையில் மட்டுமே, கதாபாத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்துவம் மிக்க இச்சிறப்பு, தெருவில் கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது.

செல்வருக்கு ஏன் பெயர் கொடுக்கப்படவில்லை என்பதை இப்படியும் எண்ணிப் பார்க்கலாம். அந்தச் செல்வரின் சுய அடையாளங்கள் அனைத்தும் அவரிடம் இருந்த செல்வத்திலிருந்தே வந்ததால், அவர் தன்னுடைய பெயரை இழந்து வாழ்ந்தார் என்று எண்ணிப்பார்க்கலாம். ஒருவர் குவித்துள்ள செல்வத்தால், 'இலட்சாதிபதி', 'கோடீஸ்வரர்' என்ற பட்டங்களைப் பெற்று, அவரது பெயரை இழக்க வாய்ப்பு உண்டு. குவித்து வைத்த செல்வத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த செல்வர், தன் பெயரை இழந்துவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்லும் இயேசு, ஏழைக்கு 'இலாசர்' என்ற பொருத்தமான பெயரையும் தந்துள்ளார். இயேசுவின் மிக நெருங்கிய நண்பரின் பெயரும் 'இலாசர்' என்று உணரும்போது, இயேசு இக்கதையில் தன் மனதுக்குப் பிடித்த ஒரு பெயரைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்.

'இலாசர்' என்ற இந்தப் பெயர், பழைய ஏற்பாட்டில் காணப்படும், எலியேசர்என்ற பெயரை ஒத்திருந்தது. ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய ஊழியன், எலியேசர். அந்தப் பெயரின் பொருள் "இறைவனே என் உதவி" (God is my help). கடவுளை நம்பி வாழ்ந்தவர், இலாசர் என்பதையும், தன் செல்வத்தை நம்பி வாழ்ந்ததால் பெயரிழந்தவர், அந்த செல்வர் என்பதையும் இயேசுவின் இந்த முதல் ஒப்புமை சொல்கிறது.

இந்த முதல் ஒப்புமை நமக்குச் சொல்லித்தரும் ஒரு முக்கிய பாடம், நாம் ஏழைகளை எவ்விதம் மதிக்கிறோம் என்பதே. நம் இல்லங்களில் பணியாற்றுவோரின் பெயர்களை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அவர்களை மரியாதைக் குறைவாய், ஏக வசனத்தில், "ஏய், அடியே, இவனே" என்று அழைப்பது தவறு என்பதை, இந்த உவமையின் அறிமுக வரிகளில் இயேசு சொல்லித் தருகிறார்.

செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் காணும் இரண்டாவது ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப் பற்றியது. செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள் இவை. செல்வர் அணிந்திருந்த மெல்லியச் செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார்.

அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம், சிவப்பு. செல்வர் தன்னைத்தானே  ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். யூதர்களின் அரசன் என்ற அறிக்கையுடன், சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இலாசரைப் பார்க்கச் சொல்லி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறாரோ? என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது, இந்த இரண்டாவது ஒப்புமை.

மூன்றாவது ஒப்புமையில் நாம் காணும் வரிகள் நம் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன.
·         செல்வர் நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
·         இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
·         செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
·         நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

செல்வர் மறுவாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை பெறுமளவு அச்செல்வர் செய்த தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார்.... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இத்தண்டனை கிடையாது... தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது, அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இத்தண்டனை.

ஓர் ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகளை ஏவிவிட்டு, இலாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, செல்வர் சார்பில் வாதாடத் தோன்றுகிறது. செல்வர், இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.

இலாசர் மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் எதிர்மறையான நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில், இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே என்ற குறைந்தபட்ச உணர்வு செல்வருக்கு இருந்தது என்று நம்மால் சொல்லமுடியும். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை, இலாசரும், அவர் வீட்டில் இருந்த ஒரு மேசைநாற்காலியும் ஒன்றே... ஒருவேளை, அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை, நாற்காலியைத் துடைக்கும் துணியைவிட கேவலமாக இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார் (லூக்கா 16: 20) என்று இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல், இலாசரின் அவலநிலையை அழுத்தமாகக் கூறுகிறது.

ஒருவர் மீது அன்பையோ, வெறுப்பையோ காட்டுவது, அவர் ஒரு மனிதப் பிறவி என்பதையாவது உறுதிப்படுத்தும் ஒரு நிலை. ஆனால், ஒருவரை குறித்து எந்த உணர்வும் காட்டாமல், அவர் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப்போல் ஒருவரை நடத்துவது, மிகவும் கொடுமையான தண்டனை. இத்தகையத் தண்டனையை, அச்செல்வர், இலாசருக்கு வழங்கியதால்தான் அவர் நரக தண்டனை பெற்றார். அந்தத் தெருவில் அலைந்த நாய்கள்கூட இலாசரை ஒரு பொருட்டாக மதித்தன என்பதையும், இயேசு, இந்த மூன்றாம் ஒப்புமையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும், இலாசரும், ஒன்று. தூசி காலடியில் கிடக்கும்வரை பிரச்சனை இல்லை; அதே தூசி மேலெழுந்து, கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும். தூசியாக செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த இலாசர், மறுவாழ்வில் மேலே உயர்த்தப்பட்டு, அந்தச் செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தியின் பிற்பகுதியில் காண்கிறோம்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்' (லூக்கா 16: 24) என்று மன்றாடுகிறார். இந்த வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது, நம் சிந்தனைக்குரியது. வாழ்நாளெல்லாம் தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரின் பெயர் அச்செல்வருக்குத் தெரிந்திருந்ததா என்பது சந்தேகம்தான். மறுவாழ்வில் அந்த ஏழையின் பெயரை முதல் முறையாக இச்செல்வர் உச்சரித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மறுவுலகில் அச்செல்வர் இலாசருக்கு அளித்த மதிப்பில், ஆயிரத்தில் ஒரு பகுதியை, இவ்வுலகில் அளித்திருந்தால், மீட்படைந்திருப்பாரே என்று எண்ணத் தோன்றுகிறது.

வான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று சென்ற வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, மனிதப் பிறவிகள் என்ற அடிப்படை மதிப்பையாவது அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை மதிப்பை வழங்க மறுத்தால், நரகத்தை நாம் தெரிவுசெய்கிறோம் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது, அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது, அவரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்காமல், செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும். அந்த நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு, கடவுள் தந்த பாடம், இந்த மறுவாழ்வு நரகம். இதைக் காட்டிலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?

15 September, 2022

Serving God or Mammon? பணிவிடை... கடவுளுக்கா, செல்வத்துக்கா?

Serving two masters

25th Sunday in Ordinary Time

On September 14, we celebrated the Exaltation of the Holy Cross, followed by the Feast of the Mother of Sorrows on September 15. The figure of Mother Mary, seated at the foot of the cross, carrying the lacerated body of Christ on her lap, is etched deep in every Christian’s mind. This image, painfully, brings to mind, thousands of mothers who mourn the loss of their children in Ukraine, Myanmar, Syria and many other countries where war has become a daily routine.
In every war, we sacrifice young men and women due to the insane decisions made by some selfish monsters called ‘political leaders’. Erich Hartmann, a German fighter pilot during World War II, after the war said: “War is a place where the young kill one another without knowing or hating each other, because of the decision of old people who know and hate each other, without killing each other.” Thus, in the history of the world, the story of Calvary and the ‘Mother of Sorrows’ standing under the cross continues…

September 15, was also the International Day of Democracy. September 21 is the International Day of Peace. Each year on 21 September the World Council of Churches calls churches and parishes to observe the International Day of Prayer for Peace. 21 September is also the United Nations-sponsored International Day of Peace. The International Day of Democracy and the International Day of Peace, coming one after the other, help us to think of Democracy and Peace, a rare commodity in our war-torn world.

Democracy and Peace are probably getting removed from the vocabulary of the next generation. For them, these terms could have only some historical significance. Or, they would be taught another warped definition of Peace and Democracy. One of the most popular definitions of Democracy that our generation can still remember is the famous definition given by Abraham Lincoln: “Democracy is the government of the people, by the people, for the people.” The moment I thought of this quote, my mind instinctively thought of another popular quote of Lincoln, namely: “You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all the people all the time.” Is there an intrinsic connection between these two quotes of Lincoln? Has ‘fooling all the people all the time’ got anything to do with Democracy – and Peace - as we see today? Is deception, an integral part of today’s democracy?

As I was reflecting on the combination – deception and democracy – my mind also thought of the word ‘scam’ and I was literally flooded with information from the web about scams in human history. One of them was titled “THE BIGGEST SCAM IN HISTORY”. This article was about the Federal Reserve Bank, a private company of bankers in the U.S. The opening line of this article goes like this: “Pay attention now, you're about to read about the biggest and most successful scam in History.” For a person living at present, these words would sound like a joke, since we keep hearing of scams right, left and centre. As I was browsing through this article, I came across some interesting data about two presidents of the U.S.A., Lincoln and Kennedy. Here are some extracts from this article:
On June 4, 1963, President Kennedy signed a Presidential decree, Executive Order 11110.  This order virtually stripped the Federal Reserve Bank of its power to loan money to the United States Government at interest.  President Kennedy declared the privately owned Federal Reserve Bank would soon be out of business.  In less than five months after signing that executive order, President Kennedy was assassinated on November 22, 1963.
Lincoln also took on the bankers and that brave bold step may also have cost him his life.
During the Civil War (from 1861-1865), President Lincoln needed money to finance the War for the North. The Bankers were going to charge him 24% to 36% interest. Lincoln was horrified and greatly distressed, and he would not think of plunging his beloved country into a debt that the country would find impossible to pay back.
So, Lincoln advised Congress to pass a law authorizing the printing of full legal tender Treasury notes to pay for the War effort… The Treasury notes were printed with green ink on the back, so the people called them "Greenbacks". Lincoln had printed 400 million dollars worth of Greenbacks (the exact amount being $449,338,902), money that he delegated to be created, a debt-free and interest-free money to finance the War…Lincoln was assassinated shortly after the war and Congress revoked the Greenback Law and enacted, in its place, the National Banking Act…
When you follow the money, you find there was no one in the world who had a better reason to kill these two Presidents than the bankers.

We usually think that the American President is a very powerful person. But, when we read about these two Presidents, our ideas change. There seem to be other super powers controlling the American President – mainly, money power! When money becomes powerful enough to replace God, what becomes of a President? It is interesting that on every dollar bill of the U.S. the words “In God We Trust” are printed. What a paradox! The ‘God’ mentioned in a dollar bill, I presume, is the Dollar itself! The power of money is not a phenomenon specific to the U.S. This is a world-wide phenomenon.

Why are we speaking about money in our Sunday reflection? We are invited to reflect on choosing between God and mammon (money) in today’s Gospel. Jesus closes today’s Gospel with a clear, powerful statement: “You cannot serve God and mammon.” (Luke 16:13)

Any person with some practical sense would hesitate to take these words of Jesus seriously. How does one live without money? – would be the most common-sense question. Is Jesus saying that we need to give up money in order to obtain God? I don’t think so. In the above statement of Jesus, the key word is – Serve. You cannot serve God and mammon. If we look at the whole verse, this becomes clear: No servant can serve two masters; for either he will hate the one and love the other, or he will be devoted to the one and despise the other. You cannot serve God and mammon. (Luke 16:13)

Once a person begins a debate between whom to serve… God or mammon (money), the unseen God gets side-lined while the much-seen money is enthroned on the altar. Unfortunately, such an enthronement relegates not only God, but all human values.

Getting back to our topic of how the U.S. seems to serve mammon, I came across some videos of the interviews given by John Perkins, the author of the famous best-seller of 2004 – namely, Confessions of an Economic Hit Man.
In his interview he spoke about ‘Corporatocracy’ – the reign of corporate people! He claims that whether the U.S. is ruled by the Republicans or the Democrats it is the corporate people who pull all the strings. He talks of how the U.S. got into the Latin America, Asia and the Gulf countries to extend the empire of the corporate giants.

As a member of the group of ‘economic hit men’ sent to the Latin American countries, he seems to be speaking from his personal experience. It is frightening to listen to him. Even if half of what he says is true, it is still disturbing and frightening. Countries like India which suffered heavily under the British colonisation, now suffer from neo-colonisation of the multi-national giants, that is, from ‘Corporatocracy’. During the past few years, we are painfully aware of how the Indian government is controlled by a few very rich individuals. While these few rich people have become richer even during the COVID pandemic, poor people have been massacred by many anti-people laws enacted during the pandemic by the government.

Right from the beginning of human history, selfish, greedy people have been worshipping money. This worship of money resulted in various other evils in which poor people have been sacrificed on the altar of money. We hear Prophet Amos lashing out against these greedy, cunning and selfish people in the first reading today:
Amos 8:4-7
Hear this, you who trample the needy and do away with the poor of the land, saying, “When will the New Moon be over that we may sell grain, and the Sabbath be ended that we may market wheat?” skimping on the measure, boosting the price and cheating with dishonest scales, buying the poor with silver and the needy for a pair of sandals, selling even the sweepings with the wheat. The Lord has sworn by himself, the Pride of Jacob: “I will never forget anything they have done.

Let us put God back on the altar, removing mammon from the prime place in our personal lives, so that we can hope to remove mammon from the high place it holds in our world! By giving God the rightful place, we can give the rightful place for human beings too, thus establishing true Democracy and Peace!

God and Money

பொதுக்காலம் - 25ம் ஞாயிறு

செப்டம்பர் 14, திருச்சிலுவைத் திருநாளையும், செப்டம்பர் 15, துயருறும் அன்னை மரியாவின் திருநாளையும் சிறப்பித்தோம். அதே செப்டம்பர் 15ம் தேதி, அனைத்துலக மக்களாட்சி நாளும் சிறப்பிக்கப்பட்டது. செப்டம்பர் 21, வருகிற பதனன்று, அமைதிக்கென செபிக்கும் உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.
அடுத்தடுத்து வரும் இந்நாள்கள், சிலுவை, துயருறும் அன்னை மரியா, மக்களாட்சி, அமைதி ஆகிய கருத்துக்களைத் தொடர்புபடுத்திப் பார்க்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. சிலுவையில் அறையுண்டு, உருக்குலைந்திருந்த இயேசுவை மடியில் சுமந்து அமர்ந்திருந்த அன்னை மரியாவைப் போல, உருக்குலைந்து கிடக்கும் மக்களாட்சி, அமைதி என்ற மகனையும், மகளையும் மடியேந்தி அழுதுகொண்டிருக்கும் பல தாய்நாடுகளை எண்ணி வேதனைப்பட வேண்டிய நாள்களாக, அமைதி நாளும், அனைத்துலக மக்களாட்சி நாளும் மாறிவிட்டன.

மக்களாட்சி என்ற சொல்லுக்கு, மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அளித்துள்ள இலக்கணம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த இலக்கணத்தை எண்ணிப்பார்க்கும் இவ்வேளையில், லிங்கன் அவர்கள் சொன்ன வேறொரு கூற்றையும், மக்களாட்சியோடு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. நம் கவனத்தை ஈர்க்கும் அவரது கூற்று இதுதான்: எல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது.

ஏமாற்றுவதுபற்றி லிங்கன் அவர்கள் இவ்வாறு சொன்னதற்குக் காரணம் இருந்தது. அமெரிக்காவில் வங்கிகள் தனியார் வசம் இருந்தன. 1861ம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டுப் போரின்போது, அரசுத்தலைவராக பணியாற்றிவந்த லிங்கன் அவர்கள், வங்கி உரிமையாளர்களிடம் போர்ச் செலவுக்குப் பணம் கேட்டார். வங்கி உரிமையாளர்கள் 24 முதல் 36 விழுக்காடு வட்டிக்குப் பணம் தருவதாகச் சொன்னார்கள். இதை ஒரு பகல் கொள்ளை என்றுணர்ந்த லிங்கன் அவர்கள், பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அரசே பண நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தார். இப்படி அச்சிடப்பட்ட 40 கோடி டாலர் பணத்தைக் கொண்டு அவர் உள்நாட்டுப் போரின் செலவுகளைச் சமாளித்தார். உள்நாட்டுப் போர் முடிந்ததும், லிங்கன் அவர்கள் கொல்லப்பட்டார். அவர் கொண்டு வந்த சட்டமும் மாற்றப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்குப்பின், ஜான் கென்னடி அவர்கள் அரசுத் தலைவராக இருந்தபோது, 1963ம் ஆண்டு, ஜூன் 4ம் தேதி, வங்கிகளுக்குச் சாதகமில்லாத ஓர் அரசாணையை வெளியிட்டார். அதே ஆண்டு, நவம்பர் 22ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கன், கென்னடி ஆகிய இருவரின் கொலைகளுக்கும் தெளிவானக் காரணங்கள் இதுவரைத் தெரியவில்லை. இவர்களது கொலைகளுக்கும், பணம் படைத்த வங்கி உரிமையாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது, வரலாற்றில், அவ்வப்போது, அதிக சப்தமில்லாமல் பேசப்படும் கருத்துக்கள்.

இவ்விரு எடுத்துக்காட்டுகளும், ஒரு மாபெரும் பனிப் பாறையின் மேல் நுனிதான் (Tip of the iceberg). பணம் அல்லது செல்வம் என்ற அந்தப் பனிப்பாறையில், தெரிந்தும், தெரியாமலும் மோதி, பல நாடுகள், கடன் என்ற கடலில் மூழ்கி வருவது, இன்றைய அவலநிலை. உலகின் பல நாடுகளிலும், பெயரளவில் நடக்கும் மக்களாட்சியையும், அந்த ஆட்சியை ஆட்டிப்படைக்கும் பண சக்தியையும் குறித்து இந்த ஞாயிறன்று நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு கூறும் திட்டவட்டமான சொற்கள், நம்மை விழித்தெழச் செய்கின்றன: "நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" (லூக்கா 16:13)

இயேசுவின் இந்தக் கூற்று, நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராததுபோல் தெரிகிறது. கடவுளையும் செல்வத்தையும் எதிரும் புதிருமாக வைத்து, இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள, லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 13ம் இறைச் சொற்றொடர் முழுவதையும் சிந்திப்பது உதவியாக இருக்கும்.
லூக்கா 16: 13
"எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறியுள்ளார்.

பணமின்றி, செல்வமின்றி வாழ்க்கை நடத்துங்கள் என்றோ, செல்வத்தைத் துறந்துவிட்டு கடவுளுக்குப் பணிவிடை செய்யுங்கள் என்றோ, இயேசு கூறவில்லை. கடவுளுக்கும் செல்வத்துக்கும் சமமான இடத்தைக் கொடுத்து, இரண்டுக்கும் பணிவிடை செய்வதில்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. ஒருவருடைய வாழ்வில், எப்போது, அவர் சேர்த்த செல்வம், இறைவனுக்குப் போட்டியாக எழுகிறதோ, அப்போது போராட்டம் துவங்குகிறது. இறைவனா, செல்வமா என்ற இந்தப் போட்டியில், கண்ணால் காண முடியாத இறைவனைவிட, கண்ணால் காணக்கூடியச் செல்வத்தை நாம் எளிதில் பீடமேற்றிவிடுகிறோம்.

இன்றைய உலகில் செல்வம் எந்தெந்த வழிகளில் பீடமேற்றப்பட்டு, வணங்கப்படுகிறது என்பதை எண்ணும்போது அதிர்ச்சியாக உள்ளது. செல்வர்கள் ஒருசிலர், இவ்வுலகை எவ்விதம் ஆட்டிப்படைக்கின்றனர் என்பதை John Perkins என்பவர் ஒரு நூலில் எழுதியுள்ளார். 2004ம் ஆண்டு வெளியான இந்நூலின் தலைப்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது: Confessions of an Economic Hit Man” - அதாவது, பொருளாதார அடியாள் ஒருவரின் பாவ அறிக்கை என்பது இந்நூலின் தலைப்பு.

இந்நூலை அவர் எழுதியபிறகு, அளித்துள்ள பல பேட்டிகளில், அமெரிக்க செல்வர்களைப்பற்றி Perkins அவர்கள் சொல்வது இதுதான்... அமெரிக்காவை எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, ஆட்சியில் இருப்போரை ஆட்டிப் படைப்பதெல்லாம் செல்வம் படைத்த ஒரு சிலரே. இச்செல்வர்கள் தங்கள் நாட்டில் வளர்த்துள்ள வர்த்தகம் போதாதென்று, அடுத்த நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்தால், அதற்கு அமெரிக்க அரசும் துணைபோக வேண்டும். உலகிலேயே மிக சக்திவாய்ந்ததெனக் கருதப்படும் அமெரிக்க அரசே, செல்வர்களின் கைப்பொம்மைகள் என்றால், ஏனைய நாடுகளைப்பற்றி சொல்லவும் வேண்டுமா?

செல்வர்கள் அடுத்த நாட்டுக்குள் காலடிவைக்க எடுக்கும் முயற்சிகளை John Perkins அவர்கள் தன் பேட்டியொன்றில் படிப்படியாக விவரித்துள்ளார். பணத்தைக் காட்டி அடுத்த நாட்டுத் தலைவர்களை விலைபேசும் முயற்சிகள் முதலில் நடைபெறும். இந்த முயற்சி தோற்றுப்போனால், மக்களின் போராட்டம் என்ற பெயரில் அந்நாட்டில் குழப்பங்களை உருவாக்கி, அங்கு அமெரிக்க அரசின் இராணுவத் தலையீடு இருக்கும்படி செய்வது அடுத்தக் கட்டம் என்று Perkins கூறியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டு பொருளாதாரம், இராணுவத் தளவாடங்களின் உற்பத்தியை பெருமளவு நம்பியிருப்பதால், உலகில் மோதல்களும், போர்களும் நடப்பது, அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு, செல்வந்தர்களின் இலாபத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்விதம் செல்வம் மிகுந்த நாடுகளில் வாழும் செல்வர்கள், தங்கள் பணபலத்தைக் கொண்டு, இலத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் புகுந்து, அங்குள்ள அரசுகளை ஆட்டிப்படைப்பதை நாம் உணர்ந்து வருகிறோம்.

வெளிநாட்டிலிருந்து வந்துதான் ஒரு நாட்டின் மக்களாட்சியையோ அல்லது அந்நாட்டின் இயற்கை வளங்களையோ அழிக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. நாட்டுக்குள் வாழும் செல்வர்களே இந்த அழிவை உருவாக்கி வருவதை ஒவ்வொரு நாட்டிலும் நாம் காணலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், செல்வர்கள் மட்டுமே ஆட்சி நடத்துகின்றனர் என்பதற்கு, அனைத்து நாடுகளும் எடுத்துக்காட்டுகள். இவ்விதம் செல்வர்கள் சக்தி பெறுவதற்கு, அவர்கள் உருவாக்கி, பீடமேற்றி, தொழுதுவரும் செல்வமே முக்கியக் காரணம். நாடுகளை ஆட்டிப்படைக்கும் செல்வர்களை, நாளெல்லாம் ஆட்டிப்படைப்பது அவர்கள் குவித்து வைத்திருக்கும் செல்வம்.

பேராசையில் வாழும் செல்வர்கள், அனைத்தையும், அனைவரையும் தாங்கள் வழிபடும் செல்வத்திற்குப் பலியாக்குவது தொன்றுதொட்டு மனித வரலாற்றில் நிகழ்ந்துவரும் ஓர் அவலம்தான். இறைவாக்கினர் ஆமோஸ் காலத்தில் வாழ்ந்த செல்வர்களும் இறைவனைவிட செல்வத்திற்கு மதிப்பு அளித்ததால், அவர்களுக்கு ஒய்வு நாளும் ஒரு பெரும் சுமையாக மாறியது. இதோ இறைவாக்கினர் ஆமோஸ் இச்செல்வர்களைப் பார்த்து விடுக்கும் எச்சரிக்கை:
ஆமோஸ் 8: 4-7
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் ஒரு சில செல்வர்களின் சக்தியால், அவர்கள் வழிபடும் செல்வத்தின் சக்தியால், இன்று உலக அரசுகளும், அகில உலக அமைப்புக்களும் சக்தி இழந்து வருகின்றன.
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கோவிட்-19 பெருந்தொற்று, இவ்வுலகின் சுவாசத்தை தன் அரக்கப்பிடியில் வதைத்த வேளையில், உலகின் பொருளாதாரத்தை பெருமளவு சிதைத்த வேளையில், செல்வந்தர்களின் வாழ்விலும், பொருளாதாரத்திலும் எந்த வீழ்ச்சியும் இல்லை. இன்னும் பார்க்கப்போனால், இந்த பெருந்தொற்றின் நெருக்கடிகள் செல்வந்தர்களுக்கு கூடுதல் வருமானத்தைத் தந்தன என்பது வேதனையைத் தருகிறது.

இவ்வுலகில், மக்களாட்சியும், அமைதியும் வளரவேண்டுமெனில், பீடமேற்றி வணங்கப்படும் செல்வம் பீடத்தை விட்டு நீக்கப்படவேண்டும். நாம் உருவாக்கிய செல்வங்கள் நம்மை ஆட்டிப்படைக்கும் கடவுளாக மாறியுள்ள அந்த மயக்கத்திலிருந்து இவ்வுலகம் மீளவேண்டும். இத்தகைய வேண்டுதல்களை இறைவனிடம் இன்று நம்பிக்கையோடு ஏந்திச் செல்வோம்.