The return of the Lost
Son
24th Sunday in Ordinary Time
This
Sunday, September 11 – also denoted as 9/11 – brings to mind the tragedy that
unfolded 21 years back, on September 11, 2001. Most of us watched how the twin
towers of the World Trade Centre in New
York went up in flames due to the collision by two
planes. Then they collapsed one after another.
For the
next few weeks, this tragic scene was played over and over again in our
television. Questions regarding life and death, hope and despair, violence and
love were discussed in many articles. One of those write-ups that appeared in a website was about how this
tragedy brought the people of New York and, perhaps, the whole nation of the U.S.A.
together. Here is the passage written by Cheryl Sawyer, a professor, under the
title – ONE:
As the soot and dirt and ash rained down,
We became one color.
As we carried each other down the stairs of the
burning building,
We became one class.
As we lit candles of waiting and hope,
We became one generation.
As the firefighters and police officers fought
their way into the inferno,
We became one gender.
As we fell to our knees in prayer for strength,
We became one faith.
As we whispered or shouted words of
encouragement,
We spoke one language.
As we gave our blood in lines a mile long,
We became one body.
As we mourned together the great loss,
We became one family.
As we cried tears of grief and loss,
We became one soul.
As we retell with pride of the sacrifice of
heroes,
We become one people.
One color, one class,
one faith, one family… Isn’t this the Heaven-on-Earth most of us dream of? It
is a pity that a tragedy like 9/11 brought down the walls we have erected on
the basis of caste, creed and color, and created this ‘oneness’ at least for a
day or two. Unfortunately, as the ‘dust settled down’ the walls were
re-erected. On 9/11, we lost our carefully prepared labels and found a large
family. Once the pain of the tragedy diminished, we went looking for our lost
labels and stuck them again on ourselves and others. How noble it would be, if
we had lost our walls and labels permanently! Losing, or, getting lost, in some
sense, brings its own blessings.
Losing and finding is
the theme of this Sunday’s Gospel. We shall spend time reflecting more on
losing or getting lost. A young man wants to find and assert his identity, away
from the control of his father. In a foreign land, he loses his identity
completely and then finds it while feeding the swine. That is the first part of
the famous parable – the Parable of the Prodigal Son or Lost Son (Luke
15:1-32).
My inspiration to
focus on the first part of the parable came from Ron Rolheiser, a Catholic
Priest and one of my favourite Columnists and Authors. In one of his
reflections titled ‘Lost is a Place Too’, he writes like this:
During the summer
when I was fourteen, my inner world collapsed. It began with the suicide of a
neighbor. A young man whose health and body I envied, went out one night and
hung himself. Then another young man from our small farming community was
killed in an industrial accident, and the summer ended with a classmate, a close
friend, dying in a horse-back riding accident. I served as an altar-server at
each of their funerals. My outside world stayed the same, but inside…things
were dark, spinning, scary…I felt myself the saddest 14-year-old in the world.
But, as all that pain,
disillusionment, and loss of self-confidence was seeping into my life,
something else was seeping in too, a deeper faith, a deeper vision of things,
an acceptance of my vulnerability and mortality, and a sense of my vocation.
I'm a priest today because of that summer. It remains still the most painful,
insecure, depressed period of my life. But it remains too the time of deepest
growth. Purgatory on earth, I had it when I was fourteen.
Fr Rolheiser goes on
to talk about Christina Crawford who was an ‘adopted and emotionally abused
daughter’. He describes her life in the following words: Her story tells us
what a dark night of the soul can look like. At one point, when things were at
their darkest, she states that she was "completely lost", but adds:
"Lost is a place too!"
The mention of the
phrase ‘dark night of the soul’, brought to my mind some thoughts on St. Mother
Teresa. Last Sunday (September 4) we remembered how Mother Teresa was raised to
the altar in the year 2016. The whole world, irrespective of nation, language,
and religion, keeps talking highly of this great lady. Mother Teresa has been
the model of so many Christian virtues. She could also be a great example of
one whose world fell apart; but who rebuilt it in a matchless way… Hard to
believe that Mother Teresa had tough time in her life? Read on.
A book published in
2007 is titled “Mother Teresa: Come Be My Light - The Private Writings of
the Saint of Calcutta ”
(Edited and with Commentary by Brian Kolodiejchuk, M.C., who was the postulator
of her canonization) I have not read this book. But I saw some enlightening
remarks made by Ron Rolheiser on this book and on Mother Teresa. I quote him
extensively:
A recent book on
Mother Teresa, ‘Mother Teresa: Come Be My Light’, makes public a huge volume of
her intimate correspondence and in it we see what looks like a very intense,
fifty-year, struggle with faith and belief. Again and again, she describes her
religious experience as "dry", "empty", "lonely",
"torturous", "dark", "devoid of all feeling".
During the last half-century of her life, it seems, she was unable to feel or
imagine God's existence.
Many people have
been confused and upset by this. How can this be? How can this woman, a
paradigm of faith, have experienced such doubts? And so, some are making that
judgment that her faith wasn't real…
What Mother Teresa
underwent is called "a dark night of the soul." This is what Jesus
suffered on the cross when he cried out: "My God, my God, why have you
forsaken me?" When he uttered those words, he meant them. At that moment,
he felt exactly what Mother Teresa felt so acutely for more than fifty years,
namely, the sense that God is absent, that God is dead, that there isn't any
God. But this isn't the absence of faith or the absence of God, it is rather a
deeper presence of God, a presence which, precisely because it goes beyond
feeling and imagination, can only be felt as an emptiness, nothingness,
absence, non-existence…
Mother Teresa
understood all of this. That is why her seeming doubt did not lead her away
from God and her vocation but instead riveted her to it with a depth and purity
that, more than anything else, tell us precisely what faith really is.
In her book – “A Call to Mercy: Hearts to Love,
Hands to Serve” – published in
2016, Mother Teresa talks of ‘homelessness’ and compares it to the state of her
own spiritual life. In
a letter to one of her spiritual directors, she claimed that the condition of
the poor in the streets, rejected by all and abandoned to their suffering, was
“the true picture of my own spiritual life.” This interior and excruciating
pain of feeling unwanted, unloved, unclaimed by the God whom she loved with her
whole heart, enabled her to grasp what the homeless felt in their daily life.
She completely identified with their misery, loneliness, and rejection. And the
poor felt this deep compassion of hers, merciful and nonjudgmental; they felt
welcomed, loved, and understood. (Report by Zenit – a web newspaper – on the new book)
I would like to add
this note on Mother Teresa here. What she did for most part of her life (nearly
50 years) would have drained any human being of both physical, emotional and,
more especially, spiritual energy. She was dealing with misery, abandonment and
suffering day after day, year after year. Every night she must have asked quite
a few questions to God about the misery she was witnessing. If those questions
did not haunt her, she was either a robot, simply programmed to do charitable
works, or an angel, camouflaged as a human. She was neither. She was simply an
ordinary human being with an extraordinary heart. That is why even when her
world was totally dark, she brought light to so many thousands. Only a person
like Teresa could have gone through hell for such a long time!
Mother Teresa had a
choice to insulate herself from the harsh realities around her, and get busy
with becoming a saint. This was the case of the elder son in the parable of the
Prodigal Son. Carolyn Arends in an article – The Other Prodigal Son –
talks of how the elder son too was a lost soul!
Only
recently have I begun to discover that the older son in Jesus' story is every
bit as lost as the younger one. In his book ‘The Prodigal God’ Timothy
Keller points out that the two brothers represent the two basic ways people try
to make life work. The younger son pursues "self-discovery"—he's on a
quest to find and fulfill himself, even if a few people have to get hurt along
the way. The older brother is committed to a more socially respectable way of
being in the world—the way of "moral conformity." He's on a program
of self-salvation, earning the approval of his community and the favor of his
father; when he feels the terms of this deal are violated, his good attitude
evaporates into resentment.
All along, the elder
son was leading a well-calculated life. Once his calculations were proved
wrong, he got lost in self-justification. He preferred to go to the tomb, since
his ‘dead brother was alive’ (Lk. 15:32).
Let us come back to
the younger son feeding the pigs… While feeding the swine, he decided not to be
buried in self-pity, but to get up and go back to the father. I have read
somewhere that the difference between a saint and other ordinary mortals like
us is that when a saint comes to the end of a rope, he or she makes a knot and
hangs on. Mother Teresa did. The Prodigal Son did. We are called to do so!
Let us get up… go back
to the Father and in that journey rediscover ourselves. It is good to get lost
once in a while!
The return of the Lost
Son
பொதுக்காலம் - 24ம் ஞாயிறு
இன்று,
செப்டம்பர் 11. செப்டம்பர் 11 அல்லது 9/11 என்று சொன்னதும், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின்
இரு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்த காட்சி நினைவுக்கு வரலாம். வர்த்தக உலகின்
பெருமைக்குரிய சின்னங்களாக உயர்ந்து நின்ற அவ்விரு கோபுரங்களின் மீது இரு விமானங்கள்
மோதிய காட்சியும், ஏறத்தாழ
100 நிமிடங்கள் இரு தீப்பந்தங்களைப்போல் எரிந்த அவ்விரு கோபுரங்களும், பின்னர்,
அவை ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்த காட்சியும், உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டு, அதிர்ச்சியை உருவாக்கின.
தொடர்ந்து
வந்த பல நாட்களில், உலக
ஊடகங்கள், இந்நிகழ்வை மீண்டும், மீண்டும், பல கோணங்களில் காட்டி, அடிப்படையான பல கேள்விகளை
எழுப்பி, பதில்கள் தேட முயன்றன. நியூ யார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு
என்ற வட்டங்களைக் கடந்து, நம் அனைவரையும் ஒரு தேடலில் ஈடுபடுத்தியது,
இந்நிகழ்வு. மரணம், துன்பம், வன்முறை, நம்பிக்கை என்ற
பல கோணங்களில் எழுந்த இத்தேடல்களின் விளைவாக, பல நூறு கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்தன.
இந்த வெளியீடுகளில், 'One' - அதாவது, 'ஒன்று' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த
ஒரு கவிதை,
நம்
ஞாயிறு சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. இக்கவிதையின் ஒரு சில வரிகள் இதோ:
"கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது,
நாம்
ஒரே நிறத்தவரானோம்.
எரியும்
கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது,
நாம்
ஒரே வகுப்பினரானோம்.
சக்தி
வேண்டி, முழந்தாள்படியிட்டபோது,
நாம்
ஒரே மதத்தவரானோம்.
இரத்ததானம்
வழங்க வரிசையில் நின்றபோது,
நாம்
ஒரே உடலானோம்.
இந்தப்
பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது,
நாம்
ஒரே குடும்பமானோம்."
இக்கவிதை
வரிகள் கூறும், ஒரே நிறம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே குடும்பம் என்பதுதானே,
நாம் அனைவரும் கனவு காணும் விண்ணகம். இந்த விண்ணகத்தைத் தொலைத்துவிட்டு, அடிக்கடி தேடி வருகிறோமே!
ஒரே இறைவனின் மக்கள் என்ற உன்னத உண்மை, நாம் எழுப்பும் பிரிவுச் சுவர்களுக்குப்பின்
காணாமல் போய்விடுகிறது. நாம் எழுப்பிய பிரிவுச் சுவர்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி
என்ற அந்த ஒரு நாளிலாவது இடிந்து விழுந்ததே என்று எண்ணி, ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர்
11ம் தேதியன்று, நாம் நன்றி சொல்லவேண்டும். ஒரு கொடூரமான நிகழ்வு, நம்மை ஒருங்கிணைத்தது
என்பதுதான், புதிரான, வேதனையான ஓர் உண்மை. அந்தக் கொடூரத்தின் தாக்கங்கள் குறையக்
குறைய, காணாமற்போன பிரிவுச் சுவர்களை
மீண்டும் தேடிக் கண்டுபிடித்து, கட்டியெழுப்பி, நம்மையே சிறைப்படுத்திக்
கொண்டோம். மத வெறி, நிற
வெறி, சாதிய வெறி, என்ற
சுவர்கள் உயர, உயர, மனிதத்தன்மை காணாமற்போகிறது என்பது, கசப்பான உண்மை.
காணாமல்
போவதையும்,
கண்டுபிடிப்பதையும்
எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு கூறிய உவமைகளில், உலகப் புகழ்பெற்ற உவமையான
'காணாமற்போன மகன் உவமை', இந்த அழைப்பை விடுக்கிறது.
இந்த உவமைக்கு முன்னதாக, 'காணாமற்போன ஆடு' மற்றும் 'காணாமற்போன காசு' என்ற இரு உவமைகளையும்
ஒரு முன்னுரைபோல் தருகிறார், இயேசு (லூக்கா 15:1-32 ).
மூன்று உவமைகளிலும், காணாமற்போவதும், கண்டுபிடிப்பதும் நிகழ்கின்றன. ஆடு, காசு இரண்டும் காணாமல்
போகின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதோ,
அவற்றின் உரிமையாளர்கள். ஆனால், காணாமற்போகும் மகனோ, பன்றிகள் நடுவே,
பசியால் துடித்தபோது, தன்னை முதலில் கண்டுபிடிக்கிறார். பின்னர், தன் தந்தையின்
இல்லம் திரும்பிவந்து, புது வாழ்வையும் கண்டுபிடிக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறியதால்,
காணாமல்போய், மீண்டும் தன்னையே கண்டுபிடித்த இளைய மகனையும், வீட்டைவிட்டு
வெளியேறாமல், வீட்டுக்குள்ளேயே காணாமல்போன மூத்த மகனையும்
நம் சிந்தனைகளின் மையமாக்குவோம்.
முதலில்,
‘காணாமல் போவது’ என்றால் என்ன என்பதை அறிய
முயல்வோம். ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற Ron Rolheiser, OMI என்ற (அமலமரி தியாகிகள்
சபையைச் சேர்ந்த) ஓர் அருள்பணியாளர், இந்த உவமையைப் பற்றி எழுதும்போது, காணாமல் போவதுபற்றி கொஞ்சம்
விரிவாகச் சிந்தித்துள்ளார். தன் வாழ்வில், 14வது வயதில் நடந்தவற்றை இவ்வாறு கூறியுள்ளார்:
“எனக்கு
14 வயதானபோது, கோடை
விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப்போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த, 20 வயதுள்ள
ஓர் இளைஞர், என் வீட்டுக்கருகே வாழ்ந்தார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், பிற்காலத்தில் நானும்
அவரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவர் தூக்கில் தொங்கி
இறந்தார். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவர், வேலை செய்யும் இடத்தில்,
ஒரு விபத்தில் இறந்தார். வேறொரு நண்பர், குதிரை சவாரி பழகும்போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தார்.
இந்த மரணங்கள் எல்லாம், ஒன்றன்பின் ஒன்றாக, ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச்
சடங்கில் நான் பீடச்சிறுவனாய் உதவி செய்தேன்.
வெளிப்படையாக, என் உலகம் மாறாததுபோல்
நான் காட்டிக்கொண்டாலும், என் உள் உலகம் சுக்குநூறாய் சிதறிப்போனது.
இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னைவிட சோகமான, பரிதாபமான, 14 வயது இளைஞன்
ஒருவன் இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.”
அருள்பணி
Rolheiser அவர்கள், தன் சோகமான முடிவிலேயே
தங்கியிருந்திருந்தால், அவரது
வாழ்வு திசைமாறி போயிருக்கலாம். அவர் முற்றிலும் காணாமற் போயிருக்கலாம். ஆனால், அவ்வேளையில் அவருக்கு
வந்த ஓர் உள்ளொளியைப் பற்றி அவர் இவ்விதம் விவரித்துள்ளார்:
“இந்த
சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில்
மெதுவாக, சப்தமில்லாமல்
நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக்கிடந்த
குறைகளோடு என்னையே நான் ஏற்றுக்கொள்ளவும், அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று
ஓர் அருள்பணியாளராக இருப்பதற்கு, அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில்,
என்னைக் காணாமல் போகச்செய்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.”
தனது
14வது வயதில் நடந்தவற்றை இவ்வாறு கூறும் Ron Rolheiser அவர்கள், தொடர்ந்து, Christina Crawford என்பவர் எழுதியுள்ள 'Mummy Dearest',
'Survivor' என்ற
இரு நூல்களைப் பற்றிக் கூறுகிறார். Christina அவர்கள், ஒரு வீட்டில் வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்தவர்.
அந்த வீட்டில் அவர் அடைந்த துன்பங்களையெல்லாம் இந்நூல்களில் விளக்குகிறார். அவர் வாழ்வில்
இருள் மட்டுமே சூழ்ந்திருந்த காலங்களைப்பற்றி அவர் எழுதும்போது, "அந்த நாட்களில் நான் முற்றிலும்
காணாமல் போயிருந்தேன்" என்று எழுதிவிட்டு, உடனே, "காணாமல் போவதும் ஒரு வகை
கண்டுபிடிப்புதான்" என்றும் குறிப்பிடுகிறார்.
ஆம், காணாமல் போவதில் பல உண்மைகளைக் கண்டுபிடிக்கலாம்.
முற்றிலும் காணாமல்போகும், நிலைகள் முடிவுகள் அல்ல.
அந்த இருள், புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, முற்றிலும் காணாமல் போவதும் உதவி செய்யும்.
இதற்கு புனித அன்னை தெரேசா ஓர் எடுத்துக்காட்டு.
செப்டம்பர்
4, சென்ற ஞாயிறன்று, அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட நாள் என்பதை சிந்தித்தோம்.
இந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்ததோர் இடத்தை,
இந்தப் புனிதர், மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைச் சிந்திக்க, அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக
இருக்கும். காணாமல் போவதையும், இப்புனிதரின் வாழ்வையும் இணைத்து நான் பேசுவது ஆச்சரியமாக
இருக்கலாம். எனினும் அந்தப் புதிரைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
அன்னை
தெரேசா அவர்கள் புனிதர் பட்டம் பெறுவதற்குத் தேவையான வழிமுறைகளை ஒருங்கிணைத்துவந்த
அருள்பணி Brian Kolodiejchuk என்பவர், 2007ம் ஆண்டு, "Mother
Teresa - Come Be My Light" என்ற நூலை வெளியிட்டார்.
அன்னை தெரேசா அவர்கள், தனிப்பட்ட வகையில் எழுதிவைத்திருந்த எண்ணங்கள், இந்நூலில் தொகுத்து
வழங்கப்பட்டுள்ளன. தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள், அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவை இந்நூலில் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
ஆறு
ஆண்டுகளுக்கு முன், அவர் புனிதராக உயர்த்தப்படுவதற்கு
முன்னர், 2016ம் ஆண்டு, ஆகஸ்ட்
16ம் தேதி வெளியான மற்றொரு நூலிலும்,
அன்னையின்
உள்மனப் போராட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. “A Call to Mercy: Hearts to
Love, Hands to Serve” என்ற தலைப்பில் வெளியான
இந்நூலில், அன்னை அவர்கள், தன் ஆன்மீக
வழிகாட்டிக்கு எழுதிய ஒரு மடலில் நாம் காணும் வரிகள் இதோ: "அனைவராலும் கைவிடப்பட்டு, தன் துன்பங்களோடு மட்டுமே வாழும் ஓர் ஏழையின்
நிலை, ஆன்மீக வாழ்வில் நான்
உணரும் கைவிடப்பட்ட நிலையின் உண்மையான பிரதிபலிப்பு."
பலரும்
செய்யத்தயங்கும் ஒரு பணியை, ஆழ்ந்த அன்புடன், நாள் தவறாமல் செய்துவந்த அந்த அன்னைக்கு
இப்படி ஒரு நிலையா? அதுவும், அவர் அப்பணிகளைச் செய்துவந்த காலத்தில்,
இப்படி ஒரு நிலையா? அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில்,
50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா? அன்னை தெரேசா அவர்களின் உள்மனப் பதிவுகளை
வாசிக்கும்போது, இத்தகையக் கேள்விகள் நம்மைத்
துளைக்கின்றன.
ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற உன்னத உள்ளங்களால் மட்டுமே
இத்தனை நீண்டகாலம், இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்கமுடியும்
என்பது புரியும். அதிலும் சிறப்பாக,
அன்னை
தெரேசா அவர்கள் செய்துவந்த பணியில், நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் நிகழ்ந்த துன்பங்களையே,
ஒவ்வொரு நாளும், மீண்டும், மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே.
கேள்விகளும்
குழப்பங்களும் இல்லாமல், எவ்வித சலனமுமில்லாமல்
அவர் வாழ்க்கை ஓடியிருந்தால், அவர், உணர்வுகளற்ற ஓர்
இயந்திரமாய் இயங்கியிருக்க வேண்டும். தன்னைச்சுற்றி நிகழ்வனவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் உலகத்திற்குள்ளேயே வாழும் பலருக்கு, காணாமற்போகும் வாய்ப்புக்கள் இருக்காது.
அவ்வாறு காணாமல் போகாமல், பாதுகாப்பாக வாழ்பவர்கள்,
பல உண்மைகளை தொலைத்துவிட வாய்ப்புண்டு. இந்நிலையில் வாழ்ந்தவர், இன்றைய உவமையில் நாம் சந்திக்கும் மூத்த
மகன்.
Timothy Keller என்பவர் எழுதிய 'The Prodigal God' என்ற நூலில், இரு மகன்களும் மேற்கொண்ட வாழ்வுப் பயணத்தை
ஒப்பிடுகிறார். இளைய மகன் தன்னையே கண்டுகொள்ள வேண்டும் என்ற தேடலில், தந்தையின் கட்டுப்பாட்டைவிட்டு விலகிச்செல்கிறார்.
பலரது மனங்களைப் புண்படுத்துகிறார். தான் தேர்ந்துகொண்ட தேடல் பாதை தவறானது என்பதை
உணர்ந்ததும், தாழ்ச்சியுடன் தந்தையைத்
தேடி வருகிறார். தந்தையின் உறவில்தான் தன் மீட்பு உண்டு என்பதைக்
கண்டுபிடிக்கிறார்.
மூத்தவரோ, தன் சொந்த முயற்சியால் மீட்படைய முடியும்
என்ற உறுதியில், தந்தைக்கும், அனைவருக்கும் ஏற்றவராக வாழ்கிறார். ஆனால், தன் வாழ்வுக்கு உரிய வெகுமதிகளை தந்தை வழங்கியிருக்கவேண்டும்
என்ற கணக்குடன் வாழ்ந்துவருகிறார். அவர் போட்டுவைத்த கணக்கு தவறாகிப் போனது என்று அறிந்ததும், அவரது குணம் தலைகீழாக மாறுகிறது. அதுவரை
அவர் அணிந்து வாழ்ந்த முகமூடிகள் வீழ்ந்தால், அவர் வெறுப்பில் காணாமல் போகிறார். வீட்டுக்குள்
அவர் பாதுகாப்பாக வாழ்ந்தாலும், அவர் தனக்குள் வளர்த்துக்கொண்ட
சுயநலக் காட்டில் அவரே தொலைந்துபோகிறார்.
நாம்
எல்லாருமே வாழ்வில் காணாமல் போயிருக்கிறோம். அறியாத, புரியாதச் சூழல்களில்
திகைத்து நின்றிருக்கிறோம். ‘கண்ணைக்கட்டி
காட்டில் விட்டதைப்போல்’ உணர்ந்திருக்கிறோம்.
அந்நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப்
புதைத்துக் கொள்வோர் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள்
உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி
உலகை ஒளி மயமாக்கினர், புனித அன்னை தெரேசாவைப்
போல்.
பன்றிகள்
நடுவே, பசியில் மயங்கியிருந்த
இளைய மகன், பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவையே இனி தன் வாழ்வு என்ற விரக்தியான
எண்ணங்களால் ஒரு பாலைநிலத்தை உருவாக்கி, அங்கு காணாமற் போய்விடாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்"
என்று எழுந்தாரே, அதுதான் அழகு.
காணாமல்
போவதும் ஒரு வகையில் பார்க்கப்போனால் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை, வாழ்வில் காணாமல் போயிருந்த பல உண்மைகளையும்,
நம்பிக்கை உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்கமுடியும்.
இறைவனை
நோக்கி, எழுந்து நடப்போம். மீண்டும்
நம்மையும், நம் இறைவனையும் கண்டுபிடிப்போம்.
No comments:
Post a Comment