10 November, 2022

Facing life with God… கடவுளின் துணையுடன் வாழ...

 
Signs of the End

World Kindness Day

33rd Sunday in Ordinary Time 
World Kindness Day - World Day of the Poor

We begin our liturgical reflection this week on some photoes that are circulated in the social media now and then with the title: “Pictures to Help You Restore Your Faith in Humanity”. These pictures depicted small or big acts of kindness done by individuals or groups for those in need. 
There is the picture of a person who removes his sandals and gives it to a poor girl who is bare-footed, and this takes place on the pavement on a hot, sunny day.
Another picture shows a young girl holding an umbrella over an elderly man with no legs trying to cross the road on a wooden board in pouring rain. There were quite a few people on the road witnessing this, which meant that only the young girl took the decision to help the older person, while she was getting drenched in the rain.
One picture in this collection was taken in a hospital. It showed a young father and mother kissing goodbye to their dying child, while the hospital staff stand around the bed and pay their respects. The caption written under the picture, brought tears to my eyes: “A father and mother kissing their dying little girl goodbye. If you are wondering why all the medic people are bowing: in less than an hour, two small children in the next room are (will be) able to live, thanks to the little girl's kidney and liver.”

Such moments of kindness and care do take place every day around the globe without attracting the attention of our media. We need to pay respect to those involved in these uplifting moments of humanity as we celebrate the World Kindness Day today, November 13. This world day was introduced in 1998 by the World Kindness Movement, a coalition of various NGOs around the world practising kindness.
Tomorrow, November 14, we celebrate Children’s Day in India to honor the birth anniversary of Jawaharlal Nehru, the first Prime Minister of India. Following these two days, UNESCO has promoted the International Day for Tolerance to be observed on November 16. World Kindness Day, Children’s Day, and the International Day for Tolerance coming one after another serve as a special reminder to all of us that  our generation is called to practise more kindness and tolerance in our daily life so that our children can learn to become more kind-hearted and tolerant.

The United Nations Organization, as well as, many other world organizations commemorate World / International / Universal Days to draw our attention to some special qualities to be practized and promoted by the human family.
The Catholic Church, for its part, has introduced quite a few World Days in the Liturgical calendar of the year. January 1 – the New Year Day as the World Day of Peace, February 11 – The Feast of our Lady of Lourdes as the World Day of the Sick, September 1 – The World Day of Prayer for the Care of Creation… are some of the World Days observed in the Catholic Church. Apart from these, we also have the World Youth Days and the World Day of Prayer for Vocations etc.

At the end of the ‘Extraordinary Jubilee of Mercy’, which was celebrated in 2016, Pope Francis introduced the World Day of the Poor as part of the liturgical calendar. Every year, the 33rd Sunday of Ordinary Time is celebrated as the World Day of the Poor.
Today, November 13, being the 33rd Sunday, we are invited to celebrate the World Day of the Poor. For this Sixth World Day of the Poor, Pope Francis has published a message with the title: “For your sakes Christ became poor” (cf. 2 Cor 8:9) taken from the Second Letter of St Paul to the Corinthians.

Pope Francis begins his message with an invitation: “The World Day of the Poor comes this year as a healthy challenge, helping us to reflect on our style of life and on the many forms of poverty all around us.”
Then he goes on to talk about the pandemic and the war in Ukraine: “Several months ago, the world was emerging from the tempest of the pandemic, showing signs of an economic recovery that could benefit millions of people reduced to poverty by the loss of their jobs… Now, however, a new catastrophe has appeared on the horizon, destined to impose on our world a very different scenario.”

Talking about how the world becomes poorer by ‘senseless wars’, the Pope goes on to explain how in every war, the poor suffer the most and raises the question of how we could help. “In these situations, reason is darkened and those who feel its effects are the countless ordinary people who end up being added to the already great numbers of those in need. How can we respond adequately to this situation, and to bring relief and peace to all these people in the grip of uncertainty and instability?”

Pope Francis goes on to spell out our response to the crying need of the poor. Here are a few excerpts from his message:
·    This is the moment for us not to lose heart but to renew our initial motivation. The work we have begun needs to be brought to completion with the same sense of responsibility.
·    That, in effect, is precisely what solidarity is: sharing the little we have with those who have nothing, so that no one will go without.
·    Where the poor are concerned, it is not talk that matters; what matters is rolling up our sleeves and putting our faith into practice through a direct involvement, one that cannot be delegated. At times, however, a kind of laxity can creep in and lead to inconsistent behaviour, including indifference about the poor.
·    No one must say that they cannot be close to the poor because their own lifestyle demands more attention to other areas. This is an excuse commonly heard in academic, business or professional, and even ecclesial circles… None of us can think we are exempt from concern for the poor and for social justice (Evangelii Gaudium, 201).

Similar to the challenges posed by Pope Francis in his message for the World Day of the Poor, today’s Gospel – Luke 21:5-19 – places before us a few challenges.

We are coming to the end of another liturgical year. Next Sunday we shall celebrate the Feast of Christ the King and the week after, we begin a new liturgical year with Advent. When we began this liturgical year last November, we were given a passage from Luke 21 (verses 25-28; 34-36). As we close the liturgical year, we are given a passage, again, from Luke 21 (verses 5-19). Both these passages talk of the end of the world… Is ‘talking of the frightening end’ the best way to begin and end a liturgical year? I am not a great fan of the ‘frightening’ part of the end. But, I do believe that the thought of our end, whether imminent or far off, can surely put things in perspective. If only all of us can be convinced, that we are all pilgrims on earth, so many problems would be solved.

Today’s Gospel begins with Jesus standing in Jerusalem temple and predicting how that magnificent structure would be razed to the ground. It requires lots of courage for anyone to do this – namely, stand right in the middle of the holiest spot for the Israelites and tell them that it would be totally destroyed. One can easily assign this courage (call it bravado?) of Jesus to his divine quality of knowing past-present-and-future. But, we can also see it as part of our way of ‘predicting the future’.

Most of us do have premonitions of our own, or, someone else’s life, from the way that life shapes up. The same premonition can be had for an institution too, looking at the way it is run. Jesus, from the age of twelve, must have been intrigued by the commercial interest that surrounded the temple of Jerusalem. At the age of 33, he felt he had had enough of the temple becoming a market place and he tried to cleanse the temple (Luke 19: 45-46). He probably saw that the temple was returning to its commercial ways just a few days later. Here are the opening lines of today’s Gospel: Some of his disciples were remarking about how the temple was adorned with beautiful stones and with gifts dedicated to God. But Jesus said, “As for what you see here, the time will come when not one stone will be left on another; every one of them will be thrown down.” (Luke 21:5-6)

This is how I would like to rephrase the thoughts / words of Jesus: “You seem to admire these beautiful stones and the ‘gifts’ adorning this temple. These very same things are going to draw the envious eyes of other nations. The wealth that surrounds this temple is going to be its undoing. It would be destroyed.” It does not require a great prophetic quality to predict what would happen to an individual or an institution if only we can observe closely. Simple logic would be sufficient!

This warning given by Jesus brings to mind the present-day Churches, Temples and Mosques that pride themselves as the largest, richest, greatest, tallest… etc. The more wealth is accumulated in places of worship, the greater they have to rely on fortress-like walls. Instead of relying on stone walls, if all the places of worship relied on the community of worshippers, religion will become more humane and, hence, divine!

Jesus does not stop with his prediction of the temple alone. He goes on to predict what would happen to the world and, more especially, what would become of those who follow him. He begins with those who would mislead people with ‘divine revelations’, those who would exploit the anxiety of people about the end of the world. Didn’t we hear enough of these ‘revelations’ at the turn of this millennium? At the dawn of the years 2000 or 2001? The list of things Jesus predicts in today’s Gospel almost read like our headlines today… “Nation will rise against nation, and kingdom against kingdom. There will be great earthquakes, famines and pestilences in various places, and fearful events and great signs from heaven.” (Lk 21: 10-11)

In the following lines (Lk 21: 12-19) Jesus turns his attention to his disciples. Jesus calls a spade, a spade. If his aim was to retain a crowd around him all the time, he would not have revealed such bitter truths… the price to be paid for following him. Betrayal from one's own family, murdering courageous witnesses in order to silence them... Once again, what Jesus lists out here seems to be happening today. Places of worship are becoming targets of fundamentalists more frequently.

Out of all these 15 verses given in today’s Gospel, only three verses give hopeful, soothing words. “For I will give you words and wisdom that none of your adversaries will be able to resist or contradict… not a hair of your head will perish. Stand firm, and you will win life.” (Luke 21: 15, 18-19). The ‘life’ Jesus is talking of, is the ‘afterlife’ we mentioned in our last Sunday’s reflection.

In our last week’s reflection, we spoke about Randy Pausch, the professor who passed away in his forties. We had also mentioned about ‘The Last Lecture’ he had given to his university staff and students. He had given another talk to his students on their graduation day. Here is the gist of what he said: “Pursue your dreams with passion. Before you begin pursuing, make sure what type of dreams you are chasing. Let them not be dreams to acquire more money. Those dreams will not give you satisfaction, since there would always be someone who would have more money than you. Rather, follow dreams of building up human relationships.”

Relationships will save us, not money or possessions. This is exactly what Jesus is saying in today’s Gospel. This is the assurance that Jesus himself experienced in his personal life. But for his personal relationship with his Father, he would have been crushed by the forces of opposition that surrounded him. As we go through life, especially the toughest phases of our life, we can be assured that God will be with us, Christ will be with us.

Win Your Life

World Day of the Poor 2022

பொதுக்காலம் - 33ம் ஞாயிறு
உலக பரிவு நாள் வறியோர் உலக நாள்

சில ஆண்டுகளுக்கு முன் மின்னஞ்சலில் வந்துசேர்ந்த சில புகைப்படங்கள், நம் ஞாயிறு வழிபாட்டு சிந்தனைகளைத் துவக்கிவைக்கின்றன. "மனிதகுலத்தின் மீது நம் நம்பிக்கையை வளர்க்க உதவும் படங்கள்" என்ற தலைப்புடன் அப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. தகிக்கும் வெயிலில் சாலையில் செருப்பில்லாமல் நடந்துசெல்லும் ஓர் ஏழைப் பெண்ணுக்குத் தான் அணிந்திருக்கும் காலணிகளைக் கழற்றித்தரும் ஒரு மனிதர்.... கால்களை இழந்து, பலகையில் அமர்ந்தபடியே நகர்ந்து செல்லும் வயதான ஓருவர், கொட்டும் மழையில் சாலையைக் கடப்பதற்காக தன் குடையை விரித்து அவரை அழைத்துச்செல்லும் இளம்பெண்... இப்படி பல படங்கள்...

இத்தொகுப்பில் இருந்த அனைத்துப் படங்களிலும் இரண்டு என் கவனத்தை அதிகம் ஈர்த்தன. முதுகுத் தண்டுவடம் வளைந்து, கூனல் விழுந்திருக்கும் 97 வயதான ஒரு பெண்மணி, உடல் முழுவதும் செயல் இழந்து படுத்திருக்கும் தன் 60 வயது மகனுக்கு உணவு ஊட்டுகிறார். இவர் இதை கடந்த 19 ஆண்டுகளாகச் செய்கிறார் என்ற குறிப்பும் அப்படத்தின் கீழ் காணப்பட்டது.
அடுத்த படம் ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருந்தது... மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒரு பச்சிளம் குழந்தைக்கு இளம் பெற்றோர் கண்ணீருடன் முத்தமிட்டு விடைபகரும் வேளையில், அக்குழந்தையின் படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த மரியாதையுடன் வணக்கம் செலுத்தியபடி நிற்கிறார்கள். அக்குழந்தைக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்ற கேள்வியும் விளக்கமும் படத்திற்குக்கீழ் கொடுக்கப்பட்டிருந்தன. அக்குழந்தையின் சிறுநீரகங்கள், ஈரல் இவற்றால் வாழப்போகும் வேறு இரு குழந்தைகள் அடுத்த அறையில் காத்திருக்கிறார்கள்... என்பதே அவ்விளக்கம்.

இந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்தும் கனிவு, அன்பு, பரிவு, கருணை ஆகிய உன்னத பண்புகள் இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் பல்வேறு செயல்கள் வழியே வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், நமது ஊடகங்கள் அவற்றை நம் கவனத்திற்கு கொணர்வது மிக அரிது. இன்று அத்தகைய உணர்வுகளை நினைவில் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். இன்று, நவம்பர் 13, உலக பரிவு நாள் (World Kindness Day) சிறப்பிக்கப்படுகிறது. நாளை, நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள், குழந்தைகள் நாள் (Children’s Day) எனக் கொண்டாடப்படுகிறது. உலகப் பரிவு நாளும், குழந்தைகள் நாளும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவது நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகிறது. இவ்வுலகில் நாம் பரிவை அதிகம், அதிகமாக வளர்த்தால், நமது அடுத்த தலைமுறையினரான குழந்தைகள் பரிவுக் கலாச்சாரத்தை இவ்வுலகில் வளர்க்க நாம் உதவியாக இருப்போம் என்ற பாடத்தை இவ்விரு நாள்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன. இவ்விரு நாள்களையும் தொடர்ந்து, நவம்பர் 16ம் தேதி, அனைத்துலக சகிப்புத்தன்மை நாள் (International Day for Tolerance) சிறப்பிக்கப்படுகிறது. பரிவு, சகிப்புத்தன்மை ஆகிய உயரிய பண்புகளில் நம் குழந்தைகளை வளர்ப்பது, இன்றைய உலகின் மிக அவசியமான தேவை.

ஐக்கிய நாடுகள் அவையும், வேறு உலக அமைப்புக்களும், ஒவ்வோர் ஆண்டும், பல உலக நாள்களை உருவாக்கி, அவற்றின் வழியே இவ்வுலகிற்குத் தேவையான உண்மைகளை உணர்த்திவருகின்றன. அதேவண்ணம், கத்தோலிக்கத் திருஅவை, சில உலக நாள்களை உருவாக்கியுள்ளது.
சனவரி 1, புத்தாண்டு நாளன்று, உலக அமைதி நாள், பிப்ரவரி 11, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று, உலக நோயாளர் நாள், செப்டம்பர் 1ம் தேதி, படைப்பைப் பேணி காப்பதற்கென செபிக்கும் உலக நாள், உயிர்ப்புக் காலத்தில் வரும் நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்கென செபிக்கும் உலக நாள் அடுத்த ஞாயிறன்று நாம் கொண்டாடவிருக்கும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, இளையோர் உலக நாள் என்று, தாய் திருஅவை, பல உலக நாள்களை உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், 2016ம் ஆண்டு நாம் சிறப்பித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், வறியோர் உலக நாளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கினார்.

ஒவ்வோர் ஆண்டும், வழிபாட்டு ஆண்டின் நிறைவாக, நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு, அதாவது, பொதுக்காலம், 33ம் ஞாயிறை, வறியோர் உலக நாளாகச் சிறப்பிக்க, திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். 2017ம் ஆண்டு முதல் சிறப்பிக்கப்படும் இந்த உலக நாள், இவ்வாண்டு, ஆறாவது முறையாக, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு நாம் சிறப்பிக்கும் ஆறாவது வறியோர் உலக நாளுக்கென, "கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார்" (2 கொரி . 8:9) என்ற மையக்கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"நம்மைச் சுற்றி நிலவும் வறுமையின் பல்வேறு வடிவங்களைக் குறித்தும், நம்முடைய வாழ்வு முறையைக் குறித்தும் சிந்திக்க, உலக வறியோர் நாள் வந்துள்ளது" என்ற சொற்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கியுள்ள இச்செய்தியில், கோவிட் பெருந்தொற்றினால் வறியோர் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டனர் என்பதை முதலில் குறிப்பிடுகிறார். அந்த பெருந்துன்பத்திலிருந்து இவ்வுலகம் மீண்டு வரும் நேரத்தில், உக்ரைன் போர் போன்ற ஏனைய துயரங்கள் மனித குலத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
போர்கள் அனைத்துமே மதியற்றவை என்றும், அவை இவ்வுலகை மேலும் அதிகமாக வறுமையில் தள்ளுகின்றன என்றும் குறிப்பிடும் திருத்தந்தை, இவ்வேளையில் நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளைக் குறித்து இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியில் கூறப்பட்டுள்ள ஒரு சில எண்ணங்கள் இதோ:
·    வறியோருக்கு நாம் ஆற்றக்கூடிய பணிகள், வெறும் வாய் வார்த்தைகளாக இருக்கக்கூடாது. அப்பணியில் நேரடியாக, முழு மூச்சுடன் ஈடுபடுவதே சிறந்தது. ஒரு சில வேளைகளில், நம் பணியில் தொய்வு ஏற்படலாம், வறியோரைப் பற்றி அக்கறையற்ற மனநிலை உருவாகலாம்.
·    ஒவ்வொருவரும், அவரவர் வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், வறியோருடன் நெருங்கிச் செல்ல இயலாமல் போகிறது என்று நாம் யாரும் சொல்லக்கூடாது. இத்தகைய சாக்குப் போக்கு, கல்வி, வர்த்தகம், ஏன், திருஅவை ஆகிய அனைத்து தளங்களிலும் பொதுவாகக் கேட்கப்படுகிறது. வறியோர் மீது அக்கறை மற்றும் சமுதாய நீதி ஆகிய கடமைகளிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடையாது (Evangelii Gaudium, 201)

நாம் வாழும் உலகில் பரிவு மிகவும் தேவையாக உள்ளது, அதிலும் குறிப்பாக, நம்மைச் சுற்றி வாழும் வறியோருக்கு வெகு அதிகமாக பரிவு தேவைப்படுகிறது என்பதை ஆழமாக உணர்த்த, நவம்பர் 13, இந்த ஞாயிறன்று, உலக பரிவு நாளையும், வறியோர் உலக நாளையும் இணைத்து சிறப்பிக்கிறோம். இதே ஞாயிறு, நம் திருவழிபாட்டு பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறாகவும் அமைந்துள்ளது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுடன், அடுத்த திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறோம். நாம் நிறைவுசெய்யும் இந்த திருவழிபாட்டு ஆண்டு முழுவதும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோருக்கு பரிவு காட்டிய இயேசுவை வெளிச்சமிட்டுக் காட்டும் லூக்கா நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

லூக்கா நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று சொன்னதும், எல்லாமே மனதிற்கு இதமானதைச் சொல்லும் நற்செய்திப் பகுதிகள் என்று பொருள் கொள்ளக்கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும் செய்தி. அந்த நல்ல செய்தி, சில சமயங்களில், அச்சத்தையும், கலக்கத்தையும் உண்டாக்கும். நல்லவை நடக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தரப்படும் எச்சரிக்கையும், நல்ல செய்திதானே. இந்தக் கோணத்திலிருந்து, இன்றைய நற்செய்தியை நாம் பார்க்கவேண்டும்.

லூக்கா நற்செய்தி 21ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இப்பகுதிக்கு முன்னதாக, இயேசு, எருசலேம் கோவிலின் காணிக்கைப் பெட்டிக்கருகே அமர்ந்து, அங்கு காணிக்கை செலுத்துபவர்களைப் பார்த்தார் என்பதையும், காணிக்கை செலுத்திய செல்வர்கள் அனைவரையும் விட, ஏழைக் கைம்பெண் ஒருவர் அதிகமாக காணிக்கை செலுத்தியதை பாராட்டினார் என்பதையும் (லூக்கா 21:1-4) வாசிக்கிறோம். இதைத் தொடர்ந்து, எருசலேம் கோவிலைப் பற்றிய அழிவை இயேசு முன்னுரைக்கும் இப்பகுதி பதிவாகியுள்ளது. இதோ, இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள்...
லூக்கா நற்செய்தி 21: 5-6
அக்காலத்தில், கோவிலைப்பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்என்றார்.
என்று ஆரம்பமாகிறது, இன்றைய நற்செய்தி.

காணிக்கைப் பெட்டியில் சேரும் செல்வம், அழகுபடுத்தப்பட்ட கோவில் என்ற இரு கருத்துக்களையும் நற்செய்தியாளர் லூக்கா தொடர்ந்து பதிவுசெய்துள்ளது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இவ்விரு விடயங்களைப் பற்றியும் இயேசு துணிவாக வெளியிட்டுள்ள எண்ணங்களையும் நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ளார். காணிக்கை செலுத்திய செல்வர்கள் அனைவரையும்விட, ஓர் ஏழைக் கைம்பெண் செலுத்திய காணிக்கையே மிக அதிகம் என்பதையும், அழகாகக் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் தரைமட்டமாகும் என்பதையும் இயேசு துணிவுடன் கூறியுள்ளார்.

இயேசுவுக்கு, ஆனாலும், இவ்வளவு வீரம் தேவைதானா என்று கவலைப்படத் தோன்றுகிறது. இஸ்ரயேல் மக்களின் உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் பேராலயத்தின் நடுவில் நின்றுகொண்டு, கோவிலில் சேரும் காணிக்கையைப் பற்றியும், அந்தப் பேராலயம், தரை மட்டமாக்கப்படும் என்றும் கூறுவதற்கு, தனிப்பட்ட ஒரு வீரம் வேண்டும்.

பின்வருவதை முன்கூட்டியே அறியும் அருள் இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு உறுதியாகப் பேச முடிந்ததென்று, இந்த வீரத்திற்கு, நாம் விளக்கம் சொல்லலாம். ஆனால், அதேநேரம், தனிப்பட்ட ஒருவர் நடந்து கொள்ளும் முறையை வைத்து, அவர் வாழ்வு, அழிவை நோக்கிப் போகிறதா, அல்லது, மகிழ்வை நோக்கிப் போகிறதா என்று சொல்லலாம், இல்லையா? அதேபோல், ஒரு நிறுவனம் நடத்தப்படும் முறையை வைத்தும், அதன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறலாம். எருசலேம் கோவில் நடத்தப்பட்ட முறையை ஆழமாய் உணர்ந்து, இயேசு, அதன் அழிவைப்பற்றி மனவேதனையுடன் பேசினார்.

தனது 12வது வயது முதல், எருசலேம் ஆலயத்தில் நடந்தவற்றைக் கண்டு, இயேசு கவலைப்பட்டிருப்பார். அவரது கவலையையும், ஆதங்கத்தையும் ஒரு சாட்டையாகப் பின்னி, அந்த ஆலயத்தை அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46) அதற்குப் பின்னும், அந்த ஆலயம், மீண்டும் மெதுவாக, தனது பழைய வர்த்தக நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். வர்த்தகத்திற்கு அவ்வளவு தூரம் முதலிடம் தந்த அக்கோவில், கட்டாயம், வேற்று நாட்டவரின் பொறாமைப் பார்வையில் படும்; அக்கோவில் சேர்த்துள்ள செல்வமே, அதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும் என்பதை உணர்த்த, இயேசு, இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கவேண்டும்.

வர்த்தகம் மலிந்து, செல்வச் செழிப்புடன் திகழும் எருசலேம் ஆலயம் தரைமட்டமாகும் என்று இயேசு கூறிய எச்சரிக்கை, இன்றைய உலகில் கட்டப்படும் ஆலயங்களை, கோவில்களை, தொழுகைக்கூடங்களை நம் நினைவுக்குக் கொணர்கின்றது. கோவில்கள், செல்வங்களைக் குவித்துவைக்கும் வங்கிகளாக மாறும்போது, அந்த வங்கிகளைக் காப்பதற்கு, பலமான கதவுகள் தேவைப்படும். அக்கதவுகள் பெரும்பாலான நேரங்களில் சாத்தப்பட்டிருக்க வேண்டும். ஆலயத்தைச் சுற்றி, கோட்டைகள் போல பாதுகாப்பு அமைப்புக்கள் தேவைப்படும். இதற்கு மாறாக, இறைமக்களின் ஒருங்கிணைப்பே இறைவனின் இல்லம் என்பதை மையப்படுத்தும் ஆலயங்கள், எப்போதும் தன் கதவுகளைத் திறந்து, மக்களை வரவேற்கக் காத்திருக்கும். அந்தக் கோவிலில் காணிக்கையாக செலுத்தப்படும் செல்வம், தேவையில் உள்ள மக்களை வாழவைக்கும்.

இன்றைய நற்செய்தியின், முதல் இரு இறைவாக்கியங்களில் கோவிலின் அழிவுபற்றி பேசும் இயேசு, அதன் பின், உலகில் நிகழப்போகும் அழிவுகளைப்பற்றி 13 இறைவாக்கியங்களில் கூறியுள்ளார். அவர்  பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், இயேசு, நாம் வாழும் இக்காலத்தைப்பற்றிப் பேசுவதுபோல் தெரிகிறது. இயேசு கூறும் அந்த அவலங்கள், இதோ:
·         கடவுளின் பெயரைப் பயன்படுத்தியும், உலகம் அழியப்போகிறது என்ற அச்சத்தை உருவாக்கியும், மக்களை வழிமாறிப் போகச் செய்தல்;
·         போர் முழக்கங்கள், குழப்பங்கள், நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து எழுதல்;
·         பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்;
·         அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல்
என்று இயேசு விவரிக்கும் அவலங்கள், நாம் வாழும் காலத்திலும் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்த்துவருகிறோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில் கலங்காமல் இருங்கள் என்றும், இயேசு அழைப்பு விடுக்கிறார்.

உலகில் நிகழும் பயங்கரங்களைக் கூறிய இயேசு, பின்னர், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார். அங்கும் அவர் சொல்பவை, அச்சத்தை உருவாக்கும் ஒரு பட்டியல்தான்.
·         நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;
·         உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;
·         உங்களுக்கு எதிராகச் சான்று பகர்வார்கள்;
·         உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;
·         என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்
இயேசு கூறிய துன்பம் நிறைந்த இவ்வார்த்தைகளை, தங்கள் வாழ்வில், ஒவ்வொருநாளும் சந்திக்கும் கிறிஸ்துவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. கிறிஸ்துவுக்காக, வன்முறைகளைச் சந்திக்கும் இவர்களுக்காக, இன்று சிறப்பாக செபிப்போம்.

இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய இந்த அழிவுகளைக் கேட்கும்போது, இது என்ன நற்செய்தியா என்றுகூடக் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் நினைவில் கொள்வோம்... நற்செய்தி என்றால், இனிப்பான செய்தி அல்ல.
நமக்குள் வளரும் ஒரு நோயைச் சுட்டிக்காட்டும் மருத்துவரை, எதிரி என்றா நாம் கூறுகிறோம்? நாவுக்குக் கசப்பான மருந்துகளைத் தரும் அவர், நமது நன்மைக்காகச் செய்கிறார் என நாம் நம்புவதில்லையா? அதேபோல், இயேசுவும், இந்த உலகத்தைப் பற்றிய கசப்பான உணமைகளைச் சொல்கிறார். முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார். தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் தன்புகழ் பாடும் கூட்டம் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லையே!
தொண்டர்களைத் தவறான வழிகளில் நடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும்போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசைத்திருப்பி, பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல் உயிர்களைப் பறிக்கும் வழிகளைத் தான் காட்டுவார்கள், இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி, மாறுபட்ட வழி...

இத்தனைப் பிரச்சனைகளின் மத்தியிலும் இயேசு தரும் ஒரே வாக்குறுதி... அவரது பிரசன்னம். அழிவுகளையும், குழப்பங்களையும் பட்டியலிட்ட இன்றைய நற்செய்தியின் 15 இறைவாக்கியங்களில் 14,15 என்ற இரண்டு இறைவாக்கியங்களில் மட்டும் மனதுக்குத் துணிவூட்டும் நல்ல செய்தியைச் சொல்கிறார் இயேசு. விசாரணைகளின்போது, என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. (லூக்கா 21: 14-15) என்று உறுதி கூறுகிறார் இயேசு.
இன்றைய நற்செய்தியின் இறுதியிலும், இயேசு, அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள். இங்கு இயேசு கூறும் உஙகள் வாழ்வு இவ்வுலக வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு.

சென்ற ஞாயிறு சிந்தனையின்போது, மறுவாழ்வைப் பற்றிப் பேசினோம். அப்போது சாவுக்கு நாள் குறிக்கப்பட்ட Randy Pausch என்ற பேராசிரியரைப்பற்றியும் சிந்தித்தோம். அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன், தன் பல்கலைக் கழகத்தில் புதிதாகப் பட்டம் பெற்ற இளையோருக்கு வழங்கிய ஓர் உரையில், அவர் கூறிய சில எண்ணங்களின் தொகுப்பு இதோ: உங்கள் வாழ்வில் ஆழ்ந்த தாகத்தோடு கனவுகளைத் துரத்துங்கள். கனவுகளைத் துரத்துவதற்கு முன், அவை எப்படிப்பட்ட கனவுகள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள். பொருளும், புகழும் சேர்க்கும் கனவுகளைத் துரத்த வேண்டாம். நீங்கள் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும், உங்களை விட வேறொருவர் இன்னும் அதிகப் பொருள் சேர்த்திருப்பார்; அது உங்களை மீண்டும் ஏக்கத்தில் விட்டுவிடும். மனித உறவுகளைச் சேகரிக்கும் கனவுகளைத் துரத்துங்கள். மனித உறவு ஒவ்வொன்றும் ஏக்கம் தராது. நிறைவைத் தரும்." என்றார், பேராசிரியர் Randy Pausch.

வாழ்வைச் சந்திக்க, அதிலும் முக்கியமாக, வாழ்வின் பிரச்சனைகளைச் சந்திக்க, துயரங்களை, கவலைகளை, அழிவுகளைச் சந்திக்க நமக்குத் தேவையானவை - பொருள், செல்வம், பதவிகள் அல்ல. மாறாக, நமது உறவுகள்.

இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கை, பிரச்சனைகள் நிறைந்த ஒரு வாழ்க்கை. அந்த வாழ்வில், அவருக்கு உறுதியைத் தந்தது, தந்தையாம் இறைவனுடன் அவருக்கிருந்த உறவு. அந்த உறவில் இயேசு நம்பிக்கை இழந்திருந்தால், அவர் சந்தித்தப் பிரச்சனைகளில் நொறுங்கிப் போயிருப்பார். தன் வாழ்வில் அவர் கண்ட அந்த உறவு அனுபவத்தை, தன்னைப் பின்செல்ல விழைபவர்களுக்கும் அவர் கொடுக்க விழைகிறார். "நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் பேச வேண்டியவற்றை நான் சொல்லித் தருவேன்" என்று அவர் வாக்குறுதி தருகிறார்.

அழிந்துபோகும், மற்றும்,  உலகை அழிக்கும் சக்திகளான, பணம், புகழ் ஆகியவற்றின் மத்தியில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச்செல்வோம். அந்த உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவு, நம்மோடு என்றும் உள்ளது என்ற நம்பிக்கையோடு, உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.

No comments:

Post a Comment