24 November, 2022

Time for ‘Swords into Ploughshares’ வாள்கள் கலப்பைக் கொழுக்களாக...

  
The First Sunday in Advent - Hope

The First Sunday of Advent

There are some messages that do repeated rounds in Whatsapp. One of them is – a strange picture with a stranger message. The picture showed a cobra displaying its seven-headed hood on a roadside. The message below the picture said that that snake was found in Honduras and a seven-headed cobra was a sign that the end of the world was imminent. A closer look at the picture can easily tell us that the picture was not taken in Honduras, but in India. Further ‘investigation’ into this picture revealed that this picture was a ‘cut-and-paste’ work done by a person who knew a bit of ‘photo-shop’, but done rather clumsily. What was more disturbing is the fact that this picture has been doing quite a few rounds in the web for the past eight years with many threatening messages about ‘the imminent end’.

With our high-tech communication gadgets and social media apps at our fingertips, we are flooded with pictures, videos and texts every day. This flood, I am afraid, sweeps us off our feet and we add to this flood without a second thought. When we receive a message, we are keen on sharing it with others immediately without taking time to verify its veracity, source etc. Thus, we seem to spread enough unfounded rumours and cause confusions.

When we witness ‘unusual’ events, our curiosity gets tickled more than our reason. We tend to give facile ‘interpretations’ to those events, especially labelling them as signs of the ‘end-times’ or ‘doomsday’ and pass them on to others.

What is our understanding of the ‘end-times’? This Sunday’s liturgy gives us an opportunity to face this important question with calmness. This Sunday we begin another liturgical year with the First Sunday of Advent. The beginning of a liturgical year, paradoxically, talks about the end.

At the turn of this century, the new millennium, 2000-2001, the frenzy and paranoia of end-times and doomsday reached a peak. During the COVID-19 pandemic, once again, this paranoia re-surfaced. When COVID-19 pandemic was raging over the world, CNN published an article in March 2020 with a title - Coronavirus is bringing a plague of dangerous doomsday predictions. Here are the opening lines of this article:
In the summer of 2008, an elderly psychic who claimed she started receiving premonitions at age 5 published a book that contained an ominous prediction. “In around 2020, a severe pneumonia-like illness will spread throughout the globe, attacking the lungs and the bronchial tubes and resisting all known treatments,” it said. “Almost more baffling than the illness itself will be the fact that it will suddenly vanish as quickly as it arrived, attack again ten years later, and then disappear completely.”
The prediction faded from public memory and the book’s author, Sylvia Browne, died in 2013. But the coronavirus pandemic has brought new attention to Browne’s book, “End of Days: Predictions and Prophecies About the End of the World.” It’s shot up to No. 2 on Amazon’s nonfiction chart, and physical copies are now selling for hundreds of dollars.
Government and public health officials have issued all sorts of guidelines to help people protect themselves against the spread of Covid-19. But there’s another contagion that experts seem helpless to stop: The plague of prophets warning that the coronavirus is a sign we’re at the “end of days.” There is something about pandemics that cause panicked people to empty their minds along with supermarket shelves.

None of us is sure when the world would come to an end. It can be tomorrow or after a million years or it may not end at all. But, we are sure that our life and all life on earth will come to an end. How do we look upon this end? Are we just going to vanish into thin air? Or, are we going to meet our Creator? If it is seen as a meeting, then again, we need to ask another question - whether this meeting is a joyous expectation or a dreaded encounter. Great saints and sages have shown us the way as to how to face one’s death and the afterlife. 

Once John Wesley, the co-founder of the Methodists, was asked what he would do if he knew that that was his last day on earth. He replied, "At 4 o'clock I would have some tea. At 6 I would visit Mrs. Brown in the hospital. Then at 7:30 I would conduct a mid-week prayer service. At 10 I would go to bed and would wake up in glory."
Here is an anecdote from the life of St. Philip Neri. (One of my friends told me that he had heard the same story attributed to another saint. I guess all saints are of the same mould.): While Philip was playing cards with his friends, one of them asked him what he would do if he knew that he would die in a few minutes. Without any hesitation, Philip told him that he would continue playing cards.
We can well imagine that if Philip had died playing cards, he would simply continue playing cards on the other side of the grave as well. Only his companions would have changed to… God and angels!

Let us beg of God to give us this enlightenment!

Does the ‘day of the Lord’ bring in only doom and destruction? Today’s liturgical readings give us two varied opinions. While the ‘day of the Lord’ is painted as a warning in the Letter of Paul (Romans 13:11-14), and in the Gospel (Luke 24:37-44), it is painted as a celebration by Prophet Isaiah - Isaiah 2: 2-5. The scene imagined by the Prophet is very comforting and soothing, especially the final verses where Isaiah thinks of a world without war. They will beat their swords into ploughshares and their spears into pruning hooks. Nation will not take up sword against nation, nor will they train for war anymore. (Isaiah 2:4)

Isn’t this what all of us long for – a world without war? The situation in many parts of the world is very volatile. Even a small spark is enough to set off a series of wars. Pope Francis, on quite a few occasions, has spoken about the ‘third world war’ being fought in ‘bits and pieces’ all over the world – the last one being the war waged in Ukraine for the past ten months. War clouds are ominously gathering over Taiwan, the Korean peninsula and elsewhere. Ever since the end of the Second World War, Japan had decided against building up its military power and military expenditure. But, now, due to the unjust aggression of Russia on Ukraine, the threats posed by China on neighbouring countries and the foolish exhibition of the military power by North Korea, Japan, which had beat its ‘swords into ploughshares’, is rethinking its decision about military build-up and expenditure.

‘Let Us Beat Swords Into Ploughshares’ is a bronze sculpture by artist Evgeniy Vuchetich, a sculptor from the former USSR. The sculpture depicts the figure of a man, holding a hammer aloft in one hand and a sword in the other hand, hammering the sword into a ploughshare, a tool to till land for crops. This action symbolizes man’s desire to put an end to war and transform tools of destruction into tools to benefit humankind. The sculpture was gifted to the United Nations by the USSR on December 4th, 1959. What was sculpted by an artist of the former USSR and gifted to the U.N., has been forgotten by the present president of Russia.

Isaiah’s words are very inspiring as well as challenging. He talks of how destructive efforts (war) can be turned into productive efforts (agriculture). Swords into ploughshares… spears into pruning hooks (sickles). If we can convert all the war gadgets into agricultural gadgets…? If there is no more war training that kills, but only training for nourishing life? This is the desire, the challenge expressed by the Prophet.
At the same time, swords and spears becoming agricultural tools is not a guarantee that war would stop. We have known that even ploughshares and sickles – the agricultural tools – have been used in caste wars in India for the ‘violent harvest’ of innocent lives. Hence, ultimately, it is our will power which will pave way for peace and prosperity for all. Unfortunately, the present-day leaders seem to be lacking in will power to make this world, environmentally and socially safe. 

Many international meetings take place to talk about peace as well as the protection of our environment, COP 27 being the last one held in Egypt (November 6-20, 2022). But the will power of our leaders is still very weak to implement the decisions taken in every international conference. Fortunately, in the recent past, we are reading of quite a few instances where today’s youth has begun to raise serious questions to the governments, especially on environment and about defence budgets.
The budget for education and healthcare in every country seems to be reduced to a trickle, while the defence budget seems to be doubling and tripling. We don’t need to spend time on statistics… It is enough to say that if only the amount of money spent for our defence, or, at least one tenth or one hundredth of this money is diverted to true developmental activities for the poor, and for the environment, this world would breathe easy without the threat of war and climate catastrophe!

The vision that Isaiah has portrayed in the first reading for this Sunday is a good beginning for our Advent… the Season in which we look forward to the Coming of Christ. “He comes, comes ever comes.” (Tagore) He comes in various forms and it is up to us to recognise his coming, his presence in our daily life. This Season is a season to spread hope… to look forward to positive signs in this world.

My suggestion to you, dear friends, is this: let us try to think, speak and act positively in our little spheres of life. Let us try and convert swords into ploughshares! Let us create ripples of peace in our little worlds and lead people to meet the Lord who is constantly coming to us in various events and forms! May the Advent season we have begun envelop the world in peace and security! 

Swords into Ploughshares – UN statue

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

சில ஆண்டுகளுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்கு அடியில், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அந்தப் படத்தையும், எச்சரிக்கையையும் சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், அவற்றில் உள்ள தவறுகள் வெளிச்சமாகும். அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் என்பதும், புரியும். இதில், மற்றொரு வருத்தமான அம்சம் என்னெவெனில், இந்தப் படம், கடந்த பல ஆண்டுகள், நம் சமூக வலைத்தளங்களில், பல்வேறு காரணங்களுக்காக, மீண்டும், மீண்டும் தோன்றி, பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே தகவல் பரிமாற்றங்கள் தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையை, அதனால் விளையும் நன்மை, அல்லது, தீமையைக் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற வேகமே, நம்மிடம் அதிகம் உள்ளதோ என்ற கவலை எழுகிறது. இத்தகையத் துரிதப் பரிமாற்றங்களால், வதந்திகளும், குழப்பங்களுமே அதிகம் உருவாகின்றன என்பதையும் மறுக்கமுடியாது.

"உலகம் முடியப் போகிறது" என்ற வதந்தி, இதுவரை பலமுறை தோன்றி மறைந்துள்ளது. 20ம் நூற்றாண்டு முடிந்து, 21ம் நூற்றாண்டு துவங்கிய 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில், உலக முடிவைப் பற்றிய வதந்திகள் பல வலம்வந்தன. அதேபோல், கடந்த ஈராண்டுகள் நம்மை வதைத்து வந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், இந்நோய், உலக முடிவின் ஓர் அறிகுறி என்ற வதந்தி மீண்டும், மீண்டும் பேசப்பட்டது.

CNN என்ற செய்தி வலைத்தளம், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் "கொரோனா தொற்று உலக முடிவைப் பற்றிய வதந்திகள் என்ற கொள்ளை நோயைக் கொண்டுவந்துள்ளது" என்ற தலைப்பில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில கருத்துக்கள் இதோ:
பின்வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி பெற்ற சில்வியா பிரவுன் என்ற பெண்மணி, 2008ம் ஆண்டு "இறுதி நாள்கள்: உலக முடிவைக் குறித்த முன்னறிவிப்புகள்" என்ற நூலை வெளியிட்டுள்ளார். அந்த நூலில், "2020ம் ஆண்டையொட்டி குளிர் காய்ச்சல் போன்ற ஒரு நோய் உலகெங்கும் பரவும். அந்நோய் ஒருவரது நுரையீரலை பெரிதும் பாதிக்கும்" என்று பிரவுன் அவர்கள் கூறியிருந்தார். 2008ம் ஆண்டு இந்நூல் வெளியானபோது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், 2013ம் ஆண்டு, இந்நூலை உருவாக்கிய பிரவுன் அவர்கள் உயிர் நீத்ததைத் தொடர்ந்து, இந்நூலைப் பற்றிய பரபரப்பு குறைந்தது. கொரோனா தோற்று காலத்தில் மீண்டும் இந்நூல் பிரபலமாகி, விற்பனையில் உச்சத்தை எட்டியது.
கொரோனா நோயைக் கட்டுப்படுத்த ஒவ்வோர் அரசும் கடினமான முயற்சிகளை மேற்கொண்டது. இந்நோயைக் கட்டுப்படுத்துவதைக் குறித்து வழிமுறைகளையும் சொல்லித்தந்தது. ஆனால், இந்நோயை வைத்து அச்சங்களை உண்டாக்கிய சோதிடர்களை கட்டுப்படுத்த அரசுகள் தவறிவிட்டன. ஒவ்வொரு முறையும் தொற்று நோய் உருவாகும்போது ஏற்படும் அச்சத்தால், மக்கள், பெரும் அங்காடிகளில் உள்ள பொருள்களைக் காலி செய்வதுபோல், தங்கள் சிந்திக்கும் திறனையும் காலி செய்துவிடுகின்றனர். என்று CNN செய்தி வலைத்தளம் வெளியிட்ட இக்கருத்துக்கள் சிந்திக்கத்தக்கவை.

நம்மைச்சுற்றி, இயற்கையில், அல்லது, சமுதாயத்தில் உண்டாகும் பல எதிர்பாராத நிகழ்வுகளை, உலக முடிவின் அடையாளங்கள் என்று, எளிதில் முடிவு கட்டிவிடுகிறோம். இறுதி காலத்தைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள், பொதுவாக, பரபரப்பையும், அச்சத்தையும் உருவாக்கும் கருத்துக்களாகவே உள்ளன. உலக முடிவு, இறுதிக்காலம், மானிட மகனின் இரண்டாம் வருகை ஆகியவை நமக்குள் எவ்வகை உணர்வுகளை எழுப்புகின்றன? எவ்வகை உண்மைகளைச் சொல்லித்தருகின்றன? என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க, இந்த ஞாயிறு, தகுந்ததொரு தருணமாக அமைந்துள்ளது.

இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலத்துடன், ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். குழந்தை வடிவில் நம் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. அது நாளையே வரலாம், இன்னும் பல கோடி ஆண்டுகள் சென்று வரலாம், அல்லது, வராமலேயேப் போகலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது, திண்ணமான உண்மை. இந்த முடிவும், எப்போது வரும் என்பது, நிச்சயமற்ற ஒன்று. உலகின் முடிவு, அல்லது, நமது வாழ்வின் முடிவு என்பதைக் குறித்த நம் கண்ணோட்டம் என்ன?

எல்லாம் முடிந்துவிடும், எல்லாம் அழிந்துவிடும் என்ற கோணத்தில் சிந்தித்தால், மனதில் வெறுமை உணர்வுகள் மேலோங்கும், வாழ்வதில் பொருளே இல்லை என்ற சலிப்பு உருவாகும். உலக முடிவில் அல்லது வாழ்வின் முடிவில் நாம் இறைவனைச் சந்திக்கச் செல்கிறோம் என்ற எண்ணம், எதிர்பார்ப்பை உருவாக்கலாம். நாம் சந்திக்கச் செல்வது, நமது அன்புத் தந்தையை, தாயை, அல்லது உற்ற நண்பரை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். நாம் சந்திக்கப் போவது, நம்மைத் தீர்ப்பிடவிருக்கும் ஒரு நீதிபதியை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பு, பயத்தையும், கலக்கத்தையும் உருவாக்கும்.

நமக்குத் தெரியாத ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம், நாம் மற்ற நேரங்களில் நடந்துகொள்ளும் விதத்தைவிட வித்தியாசமாக இருக்கும். அதுவும், நாம் சந்திக்கச் செல்வது, மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நடந்துகொள்வோம். குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் அதிகம் வளர்ந்தவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள் எந்நேரத்திலும் உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல், தன்னைச் சூழ்ந்திருப்போருக்குத் தகுந்ததுபோல், வாழ்வை மாற்றிக்கொள்ளாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை, நமக்குப் பாடமாக அமையவேண்டும்.

நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி அவர்கள், ஒருநாள், நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் ஒரு நிமிடம் சிந்தித்தார். பின்னர் தன் நண்பரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்" என்றார்.

மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள், அதைக் கண்டு பயப்பட வேண்டியிருக்கும். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, மரணத்தைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும், நல்லவிதமாக வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு, சாவு எவ்வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு, புனித பிலிப் நேரி அவர்கள், நல்லதோர் எடுத்துக்காட்டு. சாவின் வழியாக, தன்னைச் சந்திக்கப்போவது அல்லது தான் சென்றடையப்போவது இறைவன்தான் என்பதை ஆழமாக உணர்ந்தபின், பயம், பரபரப்பு எல்லாம் ஏன்? தேவையில்லையே. புனித பிலிப் நேரியைப் பொருத்தவரை, நாம் இப்படி கற்பனை செய்துபார்க்கலாம். நண்பர் சொன்னதுபோலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு சாவு நேரிட்டால், மறுவாழ்வில், அந்த இறைவனோடும் வான தூதர்களுடனும், தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார், பிலிப்.

ஜான் வெஸ்லி என்பவர், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு பணி என்ற எண்ணத்தை, இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "மாலை நான்கு மணிக்கு, நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

புனித பிலிப் நேரியைப் போல், ஜான் வெஸ்லியைப் போல், மனதில் எவ்வித அச்சமுமின்றி, அமைதியாக மரணத்தைச் சந்திக்கும் பக்குவம், ஒரு நாளில் உருவாகும் மனநிலை அல்ல. வாழ்நாளெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தும் மனநிலை அது. இத்தகைய நிலையை அடைந்தவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தவர்கள். அமைதியை, தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகில் பெருகினால், நாம் இன்று ஏங்கித் தவிக்கும் அமைதி, உலகெங்கும் நிறையும்.

அமைதி நிறைந்த உலகை ஒரு கனவாக, கற்பனையாகக் கண்டவர், இறைவாக்கினர் எசாயா. அவரது கற்பனை வரிகள், இந்த ஞாயிறன்று, நமது முதல் வாசகமாக ஒலிக்கின்றன. இறைவாக்கினர் எசாயா கண்ட கனவு, நம் உள்ளத்திலும் நம்பிக்கையை உருவாக்கட்டும்.
எசாயா 2 : 4-5
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இறைவாக்கினர் எசாயாவின் கனவில், போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகின்றன. நாம் வாழும் சூழலில், விவசாயக் கருவிகள், போர் கருவிகளாக மாறிவருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள், இந்தியாவில் நடைபெறும் சாதிய சண்டைகளில், உயிர்களை அறுவடை செய்யும் கருவியாக மாறியுள்ளதை நாம் அறிவோம்.

மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப் பார்க்கும்போது, கலிகாலம், முடிவுகாலம் ஆரம்பித்துவிட்டதோ என்றும் புலம்புகிறோம்.

முடிவு, இறுதி என்பனவற்றை அழிவு என்று பார்க்கலாம், அல்லது நிறைவு என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். அது நம் கண்ணோட்டத்தைப் பொருத்தது. தகுந்த கண்ணோட்டம், நமது எண்ணங்களை மட்டுமல்ல, நமது வாழ்வையே மாற்றும் சக்திபெற்றது.

இறைவாக்கினர் எசாயா காணும் போரற்ற பூமி என்ற கனவுதானே நம்மில் பலர் காணும் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்கவேண்டிய நம் தலைவர்கள், அமைதியை நிலைநாட்டுவதற்குப் பதில், தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட முயலும்போது, போர்களும், வன்முறைகளும் பரவுகின்றன. உக்ரைன் நாட்டில் இரஷ்ய அரசுத்தலைவன் தொடுத்திருக்கும் போர், தைவான் உட்பட பல ஆசிய நாடுகளை அச்சுறுத்திவரும் சீன அரசுத்தலைவனின் முயற்சிகள், உலக அமைதிக்கு பெரும் தடையாக உள்ளன.

உலக அமைதியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மையப்படுத்தி பல்வேறு கருத்தரங்குகள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றன. அண்மையில் எகிப்தில் நடைபெற்ற COP 27 காலநிலை உச்சி மாநாட்டிலும் பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநாட்டிலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு செயல்வடிவம் தருவதற்குத் தேவையான மனஉறுதி நம் தலைவர்களிடம் இல்லாததால், இவ்வுலகில் குழப்பங்களும், மோதல்களும் உருவாகின்றன. மோதல்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக நம் அரசுகள் இராணுவச் செலவினை ஒவ்வோர் ஆண்டும் கூட்டிவருகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இராணுவத்தை கட்டியெழுப்புவதற்குப் பதில், நாட்டைக் கட்டியெழுப்புவதில் தன் முயற்சிகளை ஈடுபடுத்தியது ஜப்பான் நாடு. கடந்த 75 ஆண்டுகளாக மக்களின் முன்னேற்றத்தில் ஈடுபட்டிருந்த அந்நாடு, தற்போது தன் இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சிகளைத் துவக்க தீர்மானித்துள்ளது. இரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளை தற்போது ஆண்டுவரும் மதியற்ற அரசுத்தலைவர்கள் எடுத்துவரும் ஆபத்தான முடிவுகளும், வட கொரியாவின் மதியற்ற இராணுவ முயற்சிகளும், ஜப்பான் அரசின் முடிவுகளில் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.

தலைவர்களும், அரசுகளும் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு ஒரு மாற்றாக, அண்மைய ஆண்டுகளில் இளையோர் தங்கள் எதிர்கால உலகத்தை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. நம்பிக்கையை வளர்க்க தாய் திருஅவை உருவாக்கியுள்ள சிறப்பான காலம், திருவருகைக் காலம். போரற்ற பூமியை உருவாக்குதல், அழிவுக்கருவிகளை, உருவாக்கும் கருவிகளாக மாற்றுதல், போர் பயிற்சிக்குப் பதில், வாழ்வை வளர்க்கும் பயிற்சிகளில் ஈடுபடுதல், உலகின் அனைத்து உயிரினங்களையும் பேணி வளர்த்தல் ஆகிய நம்பிக்கை நிறைந்த செயல்பாடுகளில் நம் இளைய தலைமுறையினர் தங்கள் கருத்தை செலுத்தவேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த திருவருகைக் காலத்தை நாம் துவங்குவோம். இறைவன் நம் நம்பிக்கையை, நம் வருங்கால சந்ததியினரின் நம்பிக்கையை வளர்ப்பாராக!

1 comment:

  1. Dear Jerry,
    Excellent reflection indeed and a Clarion call for a world of peace in our war-torn world. I appreciate the way you have developed the Homily. There is a well of meaningful thoughts inviting us to enter into this holy season hopefully. Many congratulations to you.

    ReplyDelete