21st Sunday in Ordinary Time
An important looking man walks into the
airport. He is restless seeing the long queue and reaches the counter,
bypassing those standing in the queue. The lady at the counter politely tells
him to go back. The man is thoroughly annoyed and says: “Do you know who I am?”
She looks at him with scant respect and attends to the next person in line. He
raises his voice and repeats the question: “Do you know who I am?” The lady at
the counter picks up her microphone and makes an announcement: “Your attention
please! Here is a gentleman who doesn’t know who he is. Can someone help him,
please?” She goes back to her work.
We may have come across persons who think
they are very important and presume that everyone around should know who they
are. At times, we may have felt this way and may have expected everyone to
recognize us. The basic truth is that many of us don’t seem to know who we
really are. ‘Know thyself’ was proposed, by Socrates, as the crowning
wisdom a human being could achieve. Desire for self-knowledge, has made sages
spend their entire life on the question: Who am I?This question is closely linked to ‘Who am
I to others – my family, my friends, my colleagues…?’
I have heard that in government circles an
exercise is taken up every day. What appears on the TV, as evening news and
what appears in the morning papers are collected, categorised, prioritized and
given to the Prime Minister or the Chief Minister. A special officer is
appointed to do this. This is only a hearsay information and you are welcome to
take it with more than a pinch of salt. But, I guess such an exercise is in
place in any organisation. This exercise is undertaken to feel the pulse of the
people. More often, this exercise is undertaken due to the fear of losing the
grip on power. We can easily guess that the first question that may confront
most of the political leaders in the morning will be: what do people think of
me and my government? In other words, who do people say that I am?
When political leaders are not in touch
with their real inner self, not knowing who they really are, and what their
mission is, they need to be constantly worried about clinging on to power. Some
leaders resort to devious ways to assert their power. In recent years, especially in the last few
years of COVID-19 pandemic, we have seen quite a few world leaders who have maintained
a vice-like grip on power. China, Hungary, India, Israel, Russia, Belarus… the
list of persons trying to grab power is long! Here are a few headlines and
excerpts which appeared on various journals while the pandemic was raging
across the globe:
Power-hungry
leaders are itching to exploit the coronavirus crisis
As Covid-19 brings the
world to a halt, some world leaders have spotted an opportunity to tighten
their grip on power… Right now, the world has plenty of power-hungry leaders… It
is not hard to see how this coronavirus global outbreak could be bad news for
democracy, and those who depend on it. (CNN – April 1, 2020)
How Authoritarians
Are Exploiting the COVID-19 Crisis to Grab Power
For
authoritarian-minded leaders, the coronavirus crisis is offering a convenient
pretext to silence critics and consolidate power. Censorship in China and
elsewhere has fed the pandemic, helping to turn a potentially containable
threat into a global calamity. The health crisis will inevitably subside, but
autocratic governments’ dangerous expansion of power may be one of the
pandemic’s most enduring legacies. (Human Rights Watch – April 3, 2020)
Across the World,
the Coronavirus Pandemic Has Become an Invitation to Autocracy
According to COVID-19
State of Emergency Data by the UN’s Centre for Civil and Political Rights, 84
countries have declared a state of emergency since the pandemic began: a
gateway to autocracy. The pandemic has also facilitated governments extending
surveillance on citizens by violating their right to privacy… Joseph Cannataci,
the UN special rapporteur on right to privacy, has rightly observed,
“Dictatorship often starts in the face of a threat”. (The Wire – May 3, 2020)
Against such a
background, this Sunday’s liturgy invites us to reflect on Leadership and
Authority. The first reading from Isaiah, (Isaiah 22:19-23) gives a
detailed description of the investiture of a royal court official. The robe,
the sash, and the keys are insignia of this office. Isaiah tells of
how the keys of authority will be taken away from Shebna, the unfaithful and
proud “master of the royal palace,” and given to the humble and faithful
Eliakim.
The robe, the sash and
the keys are external symbols of power. These symbols speak for themselves
about the true meaning of power. A person is vested with a robe and a sash
while in office. They are not the personal property of the person. They are
given to a person by God or by the people for a particular time and for a
specific purpose. Once the time elapses, and, the purpose is fulfilled, the
robe and the sash are to be passed on, not kept as one’s possession.
Unfortunately, in today’s world, there are quite a few leaders who have
manipulated the government machinery in such a way as to continue in power ‘for
life’.
The third imagery,
namely the key, as a sign of authority and power, is mentioned in the first
reading as well as the Gospel (Matthew 16:13-20). Jesus tells Simon
Peter: “You are Peter, and on this rock, I will build my church… I will
give you the keys of the kingdom of heaven, and whatever you bind on earth
shall be bound in heaven, and whatever you loose on earth shall be loosed in
heaven.” (Mt. 16:18-19) The keys given to Peter is to open the Kingdom
and bring heaven and earth together. Unfortunately, once again, some of the
world leaders who are given the keys of authority tend to lock themselves up in
an ‘ivory tower’, trying to create a heaven (or, a hell?) exclusively for
themselves, far removed from the people.
From the lofty imageries of robe, sash and keys, the focus shifts to
other imageries – a peg and a throne. Through these imageries,
God explains how He would shape his servant-turned-leader! After talking of how
Eliakim will be vested with authority, God says: “I will drive him like a
peg in a firm place, and he will become a throne of glory to his father’s
house.” (Is. 22:23)
A peg is used as the main support to tie up many things. A peg is driven
in the ground to erect a tent; to tether the cattle etc. The peg, although
driven half way into the ground is the main anchor that keeps the tent from
being blown away by strong winds or keeps the cattle in the safe vicinity of
the peg. Moreover, to drive a peg in the ground, one has to hit it on the head!
All these implied details of the imagery of a peg, give us an idea of
what authority and leadership mean. The leader needs to stand firm amidst
raging storms and keep the persons entrusted to his/her care close to him/her.
He or she should be ready to bear painful blows in order to serve as a source
of strength for others tied up with him/her.
The other imagery used here is the throne. A throne is not meant to be
carried around, but designed to carry others. An empty throne that does not
serve to carry others can only be kept as a museum piece. Similarly, a leader
is meant to carry the people on his/her shoulders and not vice-versa!
To serve as a peg ‘driven in a firm place’ or as a throne carrying the
people, the leader needs to have a clear knowledge about self and the mission
entrusted to him/her.
In today’s Gospel
passage we come across Jesus who was in search of his self and mission. All of
us have been on the journey of searching for our real selves. The key question
in this search is - Who am I? This is not a philosophical question, but
a deep thirst to understand ourselves better. Jesus too was in this journey of
self-discovery. As a part of this journey, Jesus posed two very crucial questions
to his disciples: ‘Who do people say that I am?’ ‘Who do you
say that I am?’ (Mt. 16: 13,15)
These questions of
Jesus are not addressed to His disciples alone. Down the centuries they have
been addressed to all of us. They have perennial value, in season and out of
season.
Who do people say
that Jesus is?
On quite many
occasions, surveys have been undertaken to discover who has influenced the
history of humankind. Almost in all these surveys, Jesus Christ has figured
either in the first place or within the first three positions. Such has been
his influence! His influence on humankind has been two-fold.
Remember the Gospel event (Luke 2:21ff) when Jesus was presented in the
temple and the name ‘Jesus’ was given to him? At that moment, Simeon had predicted:
“Behold, this child is set for the fall and rising of many in Israel, and
for a sign that is spoken against…” (Luke 2:34) Down the centuries, people
have been inspired as well as scandalized by the person of ‘Jesus’ and have
said and, still, are saying so many things… good and bad, true and false,
profession of faith and downright blasphemy!
Who do you say that
I am?
Jesus, posing this
question to his disciples, must have shaken them up. Today, this question is
personally addressed to you and me. Who do I say that Jesus is? All the answers
I have been memorising since childhood may not be helpful. Neither is Jesus
interested in my memorised answers. I am now asked to face this question
seriously, personally.
More than a question, it is an invitation – an invitation to be
convinced of the person of Jesus so that I can follow Him more closely. Most of
us become speechless and, perhaps, embarrassed by such a direct question… such
a confrontation… rather, ‘care-frontation’!
The disciples were
speechless as well when Jesus ‘care-fronted’ them with this question. Peter
mustered up enough courage to say: “You are the Christ, the Son of the
living God”. (Mt 16: 16) Jesus was able to see that Peter’s response
was not an intellectual proposition, but a heart-felt prayer. Jesus knew that
no human being had taught Peter to repeat those words by heart. Hence, he
promised to hand over the ‘keys of the kingdom of heaven’, to Peter to lead the
people of God! We pray that those who hold ‘the keys of the kingdom of heaven’
(the Popes), including the 266th Pope - Pope Francis – may lead the
people of God to true knowledge of Jesus and His ways!
We also pray earnestly
for the various world leaders who, even during the onslaught of an unknown
virus (COVID 19), have created and circulated quite a few known viruses like,
power and greed. May God give them light and grace to understand themselves and
their mission and thus be enlightened about the true meaning of authority and
leadership!
Know Thyself -
Socrates
பொதுக்காலம் 21ம் ஞாயிறு
தன்னையே
ஒரு பெரும்புள்ளி என்று எண்ணிக்கொண்டிருந்த ஒருவர், ஒருநாள் தான் தங்கியிருந்த நகரத்தின் விமான
நிலையத்திற்குச் சென்றார். பயணம் பதிவு செய்ய அங்கு நின்றுகொண்டிருந்த நீளமான வரிசையில்
நிற்காமல், முன்னே சென்றார். பயணச்சீட்டை
பதிவுசெய்து கொண்டிருந்த பணியாளர், அவரை
வரிசையில் சென்று நிற்குமாறு கேட்டுக்கொண்டார். இதைக் கேட்டு எரிச்சலுற்ற அந்த பெரும்புள்ளி, "நான் யார் என்று உனக்குத்
தெரியுமா?" என்று கேட்டார். அந்தப்
பணியாளரோ, அவரைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, தன் பணியில் மூழ்கினார்.
இந்தப் பெரும்புள்ளியோ தன் குரலை இன்னும் உயர்த்தி, "நான் யார் என்று உனக்குத் தெரியுமா?" என்று கத்தினார். உடனே, அந்தப் பணியாளர் தன் அருகிலிருந்த
'மைக்'கை எடுத்து, "பயணிகளின்
கனிவான கவனத்திற்கு: இங்கு ஒருவர் தான் யார் என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்.
யாராவது தயவுசெய்து அவருக்கு உதவி செய்யுங்கள்" என்று அறிவித்தார்.
தாங்கள்
யார் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் கற்பனை உலகில் உலாவரும் பெரும்புள்ளிகளை நாம்
வாழ்வில் சந்தித்திருப்போம். ஒரு சில வேளைகளில், நாமும், நம்மைப்பற்றிய சரியான புரிதல் இல்லாமல், இவ்வாறு குழம்பித்
திரிந்திருக்கலாம். ஒருவர் தான் யார் என்பதை உணர்ந்துகொள்வதே ஞானத்தின் சிகரம் என்று
பல மேதைகள் கூறியுள்ளனர். "உன்னையே நீ அறிவாய்" என்பதை நம் உள்ளத்தில்
ஆழப் பதிப்பதற்கு உலக மகா மேதை சாக்ரடீஸ் பெரிதும் முயன்றார் என்பதை நாம் அறிவோம். "நான் யார்?" என்ற கேள்விக்கு தங்கள் வாழ்நாளெல்லாம் விடை
தேடிய ஞானிகளைப் பற்றி நாம் படித்திருக்கிறோம்.
‘நான்
யார்’ என்ற இந்தக் கேள்விக்குள் பல கேள்விகள் உள்ளன... என் குடும்பத்தினருக்கு நான்
யார்? என் நண்பருக்கு நான் யார்? என் பணியிடத்தில், நான் வாழும் சமுதாயத்தில் நான் யார்? இவர்களுக்கெல்லாம் நான் என்னவாகத் தெரிகிறேன்? அடிப்படையில், மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது நம் வாழ்வின் முக்கிய கேள்விகளாக
இருந்துவருகின்றன.
தாங்கள்
யார், குறிப்பாக, மக்களின் பார்வையில் தாங்கள் யார் என்ற தேடலில்
அடிக்கடி ஈடுபடுவது நம் அரசியல் தலைவர்கள். எனக்குப் பழக்கமான அரசு அதிகாரிகள் சொன்ன ஒரு சில தகவல்கள்
இப்போது என் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு, தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, நாட்டின் பிரதமர் அல்லது மாநிலத்தின்
முதலமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத்
தகவல்களைப் திரட்டுவதன் முக்கிய நோக்கம், நாட்டில்
தங்களைப் பற்றிய, தங்கள் ஆட்சி பற்றிய எண்ணங்கள்
என்ன என்பதைத் தெரிந்து கொள்வதே.
ஒவ்வொரு
நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை
ஆக்ரமிக்கும் அந்த கேள்வி: "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" தங்கள் பதவி பறிபோய்விடுமோ என்ற பயமும், சந்தேகமும் இந்தக் கேள்வியை இவர்களிடம் எழுப்புகின்றன.
அண்மைய சில ஆண்டுகளாக, உலகின் ஒரு சில தலைவர்கள், பதவியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்சியில்
வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுவருவதை
நாம் அறிவோம். கண்ணுக்கும், கருத்துக்கும் புலப்படாத கோவிட்-19 கிருமி 2020ம் ஆண்டு முதல், மனிதர்கள் அனைவரையும் தனக்குமுன்
மண்டியிட செய்துகொண்டிருந்த வேளையில்,
ஒரு
சில உலகத் தலைவர்கள், தங்கள் நாட்டு சட்டங்களை
மாற்றியமைத்து, தங்களையே அதிகாரத்தின்
உச்சத்தில் வைக்க முயன்றதையும், இன்னும் முயன்று வருவதையும்
நாம் அறிவோம்.
கோவிட்
19 கிருமி, மனித உயிர்கள் மீது கொண்டிருந்த தணியாத் தாகத்தையும்
விஞ்சும் அளவு, உலகத் தலைவர்கள் பலர், கடந்த மூன்று ஆண்டகளாக, அதிகாரத் தாகத்தை
அளவின்றி வளர்த்துக் கொண்டுள்ளதை நாம் காண்கிறோம். சீனா, இந்தியா, இலங்கை, இஸ்ரேல், இரஷ்யா, பிலிப்பீன்ஸ், ஹங்கேரி, பெலாருஸ் என, பல நாடுகளில், அதிகாரத்தில்
இருப்போர், பல்வேறு வழிகளில், மக்கள் மீது, அடக்குமுறைகளை, நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டிவந்துள்ளனர். தொற்றுக்கிருமியின்
தாக்கத்தால், மக்கள், எவ்வித எதிர்ப்பையும் காட்டஇயலாமல் முழு அடைப்பில்
சிக்கியிருந்த நிலையை, தங்களுக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொண்ட இத்தலைவர்களின் செயல்பாடுகள், 'அதிகாரம்' என்ற சொல்லுக்கு தவறான இலக்கணங்கள்!
இத்தகையச்
சூழலில், அதிகாரத்தின் உண்மையான
இலக்கணத்தைப் புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள்,
நமக்குச் சவால் விடுக்கின்றன. ஒருவருக்கு தரப்படும் அதிகாரம் எத்தைகையது என்பதை இறைவாக்கினர்
எசாயாவும், (எசாயா 22:19-23) நற்செய்தியாளர் மத்தேயுவும்
(மத்தேயு 16:13-20) இன்றைய வாசகங்களில் விவரிக்கின்றனர்.
பதவியிலிருந்த
செபுனா என்ற அதிகாரி, அகந்தை கொண்டு, தன் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாததால், அவரை அதிகாரத்திலிருந்து நீக்கிவிட்டு, எலியாக்கிம் என்பவரை இறைவன் உயர்த்துவதை,
இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகிறார். எலியாக்கிமுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை, பல்வேறு உருவகங்கள் வழியே இறைவன் விவரிக்கிறார்:
எசாயா
22: 20-22
அந்நாளில்
இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு
உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில்
கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில்
ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.
அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்:
எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான்.
அங்கி, கச்சை, தாவீது குடும்பத்தாரின் திறவுகோல் என்ற பல
அடையாளங்கள் வழியே எலியாக்கிமின் அதிகாரம் வரையறுக்கப்படுகிறது.
அங்கி, கச்சை ஆகியவை, ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் உடுத்திக்
கொள்வன. அவை, ஒருவரோடு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை.
அதேபோல், ஒருவருக்கு வழங்கப்படும்
அதிகாரமும், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக, மக்களால் வழங்கப்படுவது. இன்றைய உலகிலோ,
பல தலைவர்கள், அதிகாரத்தை, தங்கள் உரிமைச்
சொத்தாகக் கருதுவதும், ஒரு சிலர், தங்கள் வாழ்நாள் முழுவதும் தலைவராக தங்களை
மாற்றிக்கொள்வதும், அதிகாரம், பொறுப்பு என்ற சொற்களுக்கு முரணான போக்குகள்.
அதேபோல், அதிகாரம், ஒரு திறவுகோல் போன்றது. அது, மூடப்பட்டுள்ள கதவுகளைத் திறந்து, மக்களுக்கு நன்மைகளை வழங்க பயன்படுத்தப்படும்
ஒரு கருவியாக அமையவேண்டும். இன்றைய நற்செய்தியில், இயேசு, பேதுருவுக்கு வழங்கும் தலைமைப் பொறுப்பை, 'திறவுகோல்' என்ற அடையாளத்தைக் கொண்டு குறிப்பிடுவதைக்
காணலாம்: "விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ
தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும்
அனுமதிக்கப்படும்" (மத்தேயு 16:19) என்ற சொற்கள் வழியே, மண்ணுலகையும், விண்ணுலகையும் இணைக்கும் சக்திபெற்ற திறவுகோலான
அதிகாரத்தை, இயேசு, பேதுருவுக்கு வழங்குகிறார்.
எலியாக்கிமுக்கு
இறைவன் வழங்கும் அங்கி, கச்சை, திறவுகோல்
என்ற அடையாளங்களைத் தொடர்ந்து, இறைவன் பயன்படுத்தும் இரு உருவகங்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன.
அதிகாரத்தில் உள்ள ஒருவரை, இறைவன் எவ்விதம் உருவாக்குகிறார் என்பதை, இவ்விரு
உருவகங்களும் தெளிவாக்குகின்றன:
உறுதியான
இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு
மேன்மையுள்ள அரியணையாக இருப்பான். (எசாயா 22:23)
இஸ்ரயேல்
குலத்தின் தலைவனை, இறைவன், உறுதியான இடத்தில் முளைபோல் அடித்துவைப்பார் என்ற சொற்கள், அதிகாரத்தில் இருப்போரிடம் விளங்கவேண்டிய
சில அம்சங்களை விளக்குகின்றன. உறுதியான நிலத்தில் அடிக்கப்படும் முளை, பல வழிகளில் பயன்படுகிறது. பூமிக்குள்
அழமாக ஊன்றப்பட்ட முளையில் கயிறுகட்டி,
கூடாரங்கள்
அமைக்கப்படுகின்றன. எவ்வளவு பலமாகக் காற்றடித்தாலும், அழமாக ஊன்றப்பட்ட முளை, கூடாரத்தைக் காப்பாற்றும். அதேபோல், மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகள் பாதுகாப்பாக மேய்வதற்கு, அடித்துவைக்கப்பட்ட முளையில் அவை கட்டப்படும்.
காக்கும் தொழிலைச் செய்யும் முளைபோல, அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் முக்கியமான
பணி, காக்கும் பணி என்பதை,
இவ்வுருவகம் முதலில் நமக்கு உணர்த்துகிறது.
அத்துடன்,
உறுதியான இடத்தில் ஒரு முளையை ஊன்றுவதற்கு, அது,
தன் தலைமீது அடிகளைத் தாங்கவேண்டும். எவ்வளவு வலிமையாக அடிகள் விழுகின்றனவோ, அவ்வளவு ஆழமாக முளை பூமிக்குள் புதைந்து,
பலன் தரும் வகையில் நிற்கமுடியும். அதேபோல், தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள்மீது விழும், பல அடிகளைத்
தாங்கிக்கொண்டு, உறுதியுடன் நின்றால்,
பயனுள்ள
தலைவர்களாகச் செயல்படமுடியும்.
அடுத்ததாக, இறைவன் பயன்படுத்தும் மேன்மையுள்ள
அரியணை என்ற உருவகமும் தலைவனுக்குரிய ஒரு பண்பை விளக்குகிறது. அரியணையை யாரும்
சுமப்பது கிடையாது; அதுவே மற்றவர்களைச் சுமக்கிறது.
அது மற்றவர்களைத் தாங்கும்போதுதான், பயனும், புகழும்
பெறுகிறது. காலியாக இருக்கும் அரியணை,
வெறும்
காட்சிப்பொருளாக மட்டுமே பயன்படுகிறது. அதேபோல், தலைவர்களும் மற்றவர்களைத் தாங்கும்போதுதான்,
பயனும், புகழும் பெறுகின்றனர்.
முளைபோல்
அடித்துவைக்கப்பட்டாலும், அரியணையாக அடுத்தவரைத் தாங்கி நின்றாலும், சீரான மனநிலையுடன் செயல்படும் தலைவர்கள், தலைமைத்துவம், அதிகாரம் என்ற சொற்களுக்கு
ஆழ்ந்த அர்த்தங்கள் தருகின்றனர். அத்தகையச் சீரான மனநிலையைப் பெறுவதற்கு ஒரு முக்கிய
காரணமாக நான் கருதுவது, அத்தலைவர்கள் தங்களைப்பற்றி கொண்டுள்ள தெளிவான புரிதல் அல்லது, 'சுய அறிவு' (self
knowledge). ஒருவர் தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள, தன்னையே சரியாகப் புரிந்துகொள்ள, சுயத்தேடல்கள் நிகழவேண்டும்.
இத்தகைய ஒரு தேடலை, இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.
ஒவ்வொருவரும்,
வாழ்க்கையில், நம்மை நாமே தேடிய அனுபவங்கள், நம் எல்லாருக்கும் உண்டு. நம்மை நாமே தேடும்
நேரங்களில், பல கேள்விகள், நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக
நம் மனதில் எழும் ஒரு கேள்வி... 'நான் யார்?' என்ற கேள்வி.
இயேசுவுக்கும்
இந்தக் கேள்வி எழுந்தது. இந்த அடிப்படைக் கேள்வியை மையப்படுத்தி, இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது. அவர் இன்றைய
நற்செய்தியில் எழுப்பும் இரு முக்கிய கேள்விகள் நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. பாடங்களைச்
சொல்லித்தருகின்றன. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" - "நான் யார் என்று
நீங்கள் சொல்கிறீர்கள்?" (மத்தேயு 16: 13,15)
"நான்
யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"
என்ற கேள்விக்கு, சிறு வயது முதல், அம்மாவிடம், அப்பாவிடம், மறைகல்வி ஆசிரியர்களிடம் நாம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, பதில்கள் சொல்லிவிடலாம்.
ஆனால், "நான் யார்
என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இரண்டாவது
கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே, இந்தக் கேள்விக்குப்
பதிலாக அமையவேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே, இந்தக் கேள்விக்கு
சரியானப் பதிலைத் தரமுடியும்.
இயேசுவைப்பற்றி
தெரிந்துகொள்ள, பல்லாயிரம் நூல்கள்
உள்ளன. அந்தப் நூல்களிலிருந்து திரட்டிய அறிவால் நாம் நிறைந்திருக்கும்போது, இயேசு நம்மிடம், "நான் யார் என்று
மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நாம் மனப்பாடம் செய்த பதில்கள், மடைதிறந்த
வெள்ளமாகப் பாயும். ஆனால், அந்த மனப்பாடங்களோடு மட்டும்
நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரிந்தியர்
13:1)
எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு
கொடுக்கும் அழைப்புதான், "நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத்தேயு 16:15) என்ற கேள்வியாக
எழுகிறது. இது வெறும் கேள்வி அல்ல, ஓர் அழைப்பு. இயேசுவை நம்பி அவரோடு, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, அவர் தரும்
ஓர் அழைப்பு.
இயேசு
தந்த அந்த அழைப்பை, புரிந்தும் புரியாமலும், புனித பேதுரு, தன் உள்ளத்தில் உணர்ந்த ஓர் உண்மையை எடுத்துரைக்கிறார்.
“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (மத்தேயு 16:16) என்று அறிக்கையிடுகிறார்.
அறிவுத்திறனால் அல்ல, மனதால் தன்னை புரிந்துகொண்ட
பேதுருவைப் பாராட்டும் இயேசு, அவரிடம் விண்ணகத்தின் திறவுகோல்களைக் கொடுத்து, திருஅவையின்
முதல் தலைவராக அவரை நியமிக்கிறார்.
கடந்த
20 நூற்றாண்டுகளாக திருஅவையின் தலைவர்களாகப் பணியாற்றியுள்ள திருத்தந்தையர் பலர்
தங்கள் தலைமைப் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
திருத்தந்தையரில் ஒருசிலர், தங்கள் அதிகாரத்தை சரிவர பயன்படுத்த தவறியுள்ளனர்
என்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது. அத்தகைய தவறுகளையும் சரிசெய்து, திருஅவையை
இன்றளவும் காத்துவரும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். திருஅவையின் 266வது தலைவராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, உடல், உள்ள நலத்துடன் வழிநடத்த வேண்டுமென்று, இறைவனை
உருக்கமாக மன்றாடுவோம்.
மக்களால்
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, தங்கள் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் பல நாடுகளின்
தலைவர்கள், மக்களால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரம், மக்களுக்கு நன்மைகள் செய்யும் பொறுப்பான ஒரு பணி என்பதை
புரிந்துகொள்ளவும், அந்த உணர்வுடன் செயலாற்றவும், இறைவனின் அருளை வேண்டுவோம்.
No comments:
Post a Comment