The Annunciation
IV Sunday of Advent
Tonight, we
celebrate Christmas. To prepare ourselves to welcome the Divine Babe into our lives, we are invited to reflect on an event from the life of a
young lady from Nazareth – Mary – who was asked to welcome the Baby in her
womb. That event was not only a life-changing-moment in the life of Mary, but a
life-changing-moment in human history.
We may have
experienced life-changing-moments in our lives. How have we have responded to
those invitations? Here is an episode that occurred in the life of a young professor
of Theology in Strasbourg who was also well-known for his talents in music.
One fine
evening the young professor was sitting at his desk working on the next day's
lectures. His housekeeper had laid that day’s mail and papers on his desk, and
he began to shuffle through them, discarding most to the wastebasket. He then
noticed a magazine, which was not even addressed to him but had been delivered
to his office by mistake. When the young professor opened the magazine, his
eyes fell on an article titled "The Needs of the Congo Mission.” Casually
he began to read when he was suddenly consumed by the following words: "The
need is great here. We have no one to work the northern
province of Gabon
in the central Congo .
And it is my prayer as I write this article that God will lay His hand on one -
one on whom, already, the Master's eyes have been cast - that he or she shall
be called to this place to help us."
The young Professor
Albert Schweitzer closed the magazine and wrote in his diary: "My search
is over." He gave himself to the Congo Mission. That little article,
hidden in a periodical, intended for someone else, was placed by accident in
Schweitzer's mailbox. By chance he noticed the title. It leaped out at him.
Chance? No. It was one of God's surprises.
This was
possible, not only because God came into the life of Albert, but Albert was
ready to meet God. Since the mid-1890s Albert had formed the inner resolve that
it was needful for him as a Christian to repay to the world something for the
happiness which it had given to him, and he determined that he would pursue the
interests of his younger days until the age of thirty and then give himself to
serving humanity. He drew his inspiration from Jesus who began his public
ministry at the age of 30. The article about ‘Congo Mission’ reached him when
Albert was 30! Chance? No. It was God’s way of stamping his approval on the
resolve of Albert Schweitzer.
Albert
spent the next 7 years to the rigorous pursuit of medicine. He left for Africa
and spent the rest of his life – 60 years – helping the poor and the sick in
Africa. The invitation from God via the magazine, the response, the change of
direction in Albert’s life – from Theology and Music to Medicine, the
challenging life he faced for the rest of his life… all these turn our
attention towards the scene of the Annunciation that changed the life of a
simple village girl, Maria!
Every year,
during the days leading up to Christmas, schools and parishes would enact the
Christmas story. This story usually begins with the scene of the Annunciation,
and then goes on to show the Visitation, the Nativity, the visit of the Shepherds
and the Magi…. all in a matter of half an hour. Usually, children enact these
scenes and hence these scenes are all the more lovely and heavenly! A few years
back, when we were returning home after one such school play, one of my friends
suddenly posed this question: “Was the first Christmas this lovely? This joyful?”
That question was a wake-up call!
What was
the first Christmas like? Surely not such a happy, peaceful event. When history
is transformed into pages in a book, we tend to remember the glorious moments
of that history and tend to forget the real pain and misery behind those
events. Similarly, when reading the Gospels, during our liturgical
celebrations, our minds tend to ‘spiritualize’ these events. Hence, it is so
easy for us to say at the end of the Gospel reading: “This is the ‘Good News’
of the Lord” and respond, “Praise to You, Lord Jesus Christ.” But, was it
really ‘good news’ when Christmas events took place the very first time?
The
original Christmas story was far from happy and holy. It was loaded with pain
and misery. So many things worked against happiness and holiness. We shall
consider only one aspect… namely, that Judea
was an occupied territory. Soldiers are not the best models of virtue, to say
the least. The duty of armed personnel, by definition, is to protect a country.
But, unfortunately, there are soldiers who have joined the army for various
other reasons. Such soldiers are a threat to common people. Women, especially
young girls, who live around army camps, do not live! They die each day in
fear. If people have to fear the soldiers of their own country, what can we say
about soldiers from foreign lands? Their main aim is to terrorize the common
people and thus maintain control. If we can talk to the people of various countries
occupied by the U.S. army (e.g. Afghanistan, Argentina, Cambodia, Chile,
Colombia, Iraq, Philippines, Vietnam etc., in total, 68 countries), or, right
now, the people or Ukraine and Gaza occupied by the troops from Russia and
Israel, we would know what it means to live in a country occupied by foreign
troops.
This was
the plight of Mary, who had to live through horrors enacted by Roman soldiers
day after day. Not a day must have passed, without Mary raising questions and
prayers to God about their liberation. God answered her questions and prayers
with a thunderbolt. God sent the Angel Gabriel to tell Mary, “I shall send my
Son to save you. But, I need your cooperation. I want you to become the mother
of my Son.” Mary wanted to escape the frying pan and God seemed to offer her
the fire. God wanted her to become an unwed mother!
Mary knew
full well what that meant. Sure death… death by being stoned! Mary must have
witnessed such brutal murders. Especially, after the Roman occupation, quite a
few young girls (some of whom might have been Mary’s friends), raped by the
Roman soldiers, must have faced the sentence of being stoned to death and,
hence, the frequency of such gory scenes must have increased, haunting Mary day
and night. When Mary cried to God for liberation, God offered her an
‘impossible’ invitation. God
invited her to become an unwed mother!
Most of us
imagine the scene of the Annunciation in terms of holy light, soft music and
Mary’s immediate ‘Yes’ to God. She would not have said an immediate “Yes, my
Lord…” Much less would she have jumped up in joy to sing “The Magnificat”. She
may have suffered sleepless nights to gather enough courage to say this ‘yes’
to God. Finally, she did say ‘yes’, relying totally on God and not thinking about
all the earthly consequences… Here are the closing lines of today’s Gospel:
And
the angel said to her, "The Holy Spirit will come upon you, and the power
of the Most High will overshadow you; therefore the child to be born will be
called holy, the Son of God. And behold, your kinswoman Elizabeth in her old
age has also conceived a son; and this is the sixth month with her who was
called barren. For with God nothing will be impossible." And Mary said,
"Behold, I am the handmaid of the Lord; let it be to me according to your
word." (Luke
1: 35-38) It is the
‘let it be’ of Mary that makes the whole scene of the Annunciation ‘good
news’. Without that surrender of Mary, trusting ONLY and TOTALLY on God, the
scene of the Annunciation would be far from ‘good news’.
Mary’s ‘let
it be’ was not the complete solution for all the problems; but the starting
point of the salvation history. It required great courage and trust on the part
of Mary to say this ‘let it be’. Instead of filling our hearts and minds on
problems, let us become part of the solution. May Mother Mary teach us this
courage and trust to overcome our personal troubles and the troubles of the
world around us during this Christmas.
“Let it be to me…”
திருவருகைக்காலம் 4ம்
ஞாயிறு
இன்று இரவு, நாம் கிறிஸ்மஸ்
பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். பிறக்கவிருக்கும் தெய்வீகக் குழந்தையை வரவேற்க காத்திருக்கும்
இவ்வேளையில், நாசரேத்தைச் சேர்ந்த இளம் பெண் மரியாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வைச்
சிந்திக்க அழைக்கப்படுகிறோம். மரியாவின் வாழ்க்கையில் நடந்த அந்நிகழ்வு, அவரது தனிப்பட்ட
வாழ்க்கையை மட்டுமல்ல,
மனித வரலாற்றையே புரட்டிப்போட்ட ஒரு தருணம்.
வாழ்வைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
அவர்களில் ஒருவர், பிரான்ஸ் நாட்டின் Strasbourg நகரில், இறையியல் பேராசிரியராகவும், புகழ்பெற்ற இசைக்கலைஞராகவும் வாழ்ந்தவர். ஒரு நாள் மாலையில், அந்த இளம் பேராசிரியர், தன் அறையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்திருந்த
கடிதங்களைப் பிரித்துக்கொண்டிருந்தார். இறையியலிலும், இசையிலும் மேதையாக விளங்கிய அந்த இளம் பேராசிரியருக்கு, பாராட்டுக்களும், அழைப்புக்களும் கடித வடிவில் வந்திருந்தன. அந்தக் கடிதக்கட்டில், ஒரு மாத இதழும் வந்திருந்தது. அந்த மாத இதழ், வேறு ஒருவருக்குச்
செல்லவேண்டிய இதழ். தவறுதலாக, இந்த இளம் பேராசிரியரின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அந்த
இதழின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டுரை, இளையவரின் கவனத்தை ஈர்த்தது.
"காங்கோ பணித்தளத்தின் தேவைகள்" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையை அவர் வாசித்தபோது, பின்வரும் வரிகள் அவரைக் கட்டியிழுத்தன: "இங்கு தேவைகள் மிக அதிகம்.
மத்தியக் காங்கோவின் கபோன் (Gabon)
மாநிலத்தில் பணியாற்ற ஒருவரும் இல்லை. நான் இக்கட்டுரையை
எழுதும்போது,
என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் செபம் ஒன்றே... கடவுள்
ஏற்கனவே தேர்ந்துள்ள ஒருவர், இந்த வரிகளை வாசிக்கவேண்டும், அதன் விளைவாக, அவர் எங்களுக்கு உதவிசெய்ய இங்கு வரவேண்டும்." கட்டுரையின் இந்த வரிகளை வாசித்த அந்த இளம் பேராசிரியர், மாத இதழை மூடினார். பின்னர், தன் ‘டயரி’யைத் திறந்து,
"என் தேடல் முடிவுற்றது" என்று எழுதினார்.
வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு
பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத் தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வடிவத்தில்
வந்து சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இளம் பேராசிரியரின் முகவரிக்கு வராத ஒரு மாத இதழ்; அவ்விதழின் ஏதோ ஒரு பக்கத்தில் வெளியான ஒரு கட்டுரை; அக்கட்டுரையில் பதிந்த அவரது கவனம்... இவை யாவும் எதேச்சையாக நடந்தனவா? இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
இயேசு, தன் பணிவாழ்வை 30வது வயதில் துவக்கியதுபோல், தானும் 30வது வயதில், தனக்காக அல்ல, அடுத்தவருக்காக
வாழ முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் வாழ்ந்து வந்தார் அந்த இளம்
பேராசிரியர். அவர் எடுத்திருந்த தீர்மானத்தின்மீது தன் முத்திரையைப் பதிக்க, இறைவன், அந்த மாத இதழ் வழியே அவரைச் சந்திக்க வந்தார். அந்த இதழை அவர்
வாசித்தபோது அவருக்கு வயது 30. அந்த இளம் பேராசிரியரின் பெயர், Albert Schweitzer. அவரது வாழ்வின் எஞ்சிய 60 ஆண்டுகளை, அவர் ஆப்ரிக்காவில், வறிய மக்கள் நடுவே உழைப்பதற்கென அர்ப்பணித்தார்.
அம்மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த ஆல்பர்ட் அவர்கள், அடுத்த ஏழு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இறையியலிலும், இசையிலும் பல புகழ் உச்சிகளை அடைந்திருந்த ஆல்பர்ட் அவர்கள், அந்தச் சிகரங்களிலிருந்து இறங்கி, யாருக்கும் தெரியாத
ஆப்ரிக்கக் காட்டில் தன் மருத்துவப் பணிகளைத் துவக்கினார். இதுவே, இறைவன் தனக்குத்
தந்த தனிப்பட்ட அழைப்பு என்பதை அவர் முற்றிலும் உணர்ந்தார்.
இறைவன் தந்த அழைப்பு, அந்த அழைப்பு, வாழ்வில்
உருவாக்கியத் தலைகீழ் மாற்றங்கள், அந்த மாற்றங்களைத் தொடர்ந்து வந்த பல சவால்கள், துன்பங்கள்... என்ற கோணங்களில், மருத்துவர் Albert Schweitzer அவர்களின் வாழ்வை
எண்ணிப்பார்க்க நம்மைத் தூண்டுவது, இன்றைய நற்செய்தி. நாசரேத்து என்ற கிராமத்தில், மரியா என்ற ஓர் இளம்பெண்ணுக்கு இறைவன் தந்த அழைப்பு, இன்றைய நற்செய்தியாகத் (லூக்கா 1:26-38) தரப்பட்டுள்ளது.
உலக
மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண்
மரியா ‘ஆகட்டும்’ என்று சொன்ன பதிலும்,
இன்று மீட்பின் வரலாறாக, நற்செய்தியாக
மாறியுள்ளன. எந்த ஒரு வரலாற்று நிகழ்வும் புத்தகத்தில் பதியும்போது, அந்த நிகழ்வின்
அருமை, பெருமைகள் மட்டுமே நம் கண் முன் அதிகம் தோன்றும். அந்நிகழ்வின் பின்புலத்தில்
உருவான காயங்கள் பெருமளவு மறக்கப்படும்; அல்லது, மறைக்கப்படும்.
விவிலியத்தில்
பதிந்துள்ள வரலாற்று நிகழ்வுகளை நாம் திருப்பலியில்
வாசகங்களாக வாசிக்கும்போது, மேன்மை, புனிதம் போன்ற உணர்வுகள் அதிகம் மேலோங்குவதால்,
அந்நிகழ்வுகளின் வேதனைகள், காயங்கள் ஆகியவற்றை நாம் மறந்துவிட வாய்ப்புண்டு.
அதனால்தான் இன்று நாம் இப்பகுதியின் இறுதியில், துணிவோடு, "இது இறைவன் வழங்கும் நற்செய்தி"
என்று சொன்னோம். ஆனால், ஆழமாகச்
சிந்தித்தால், வானதூதர் கபிரியேலுக்கும்,
இளம்பெண் மரியாவுக்கும் இடையே, இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வேளையில், இது நற்செய்தியாக
இருந்திருக்க முடியாது என்பதை உணர்வோம்.
கிறிஸ்மஸ்
விழா நெருங்கிவரும் நாட்களில், பல பள்ளிகளில்,
பங்குத்தளங்களில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். நடிப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகள்
என்பதால், நாம் இரசிப்போம், சிரிப்போம். இந்த நாடகங்களில், மரியாவுக்கு
வானதூதர் தோன்றுவது, மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, பின்னர், மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... அரை மணி நேரத்தில் அழகழகான
காட்சிகள் தோன்றி மறையும். இவற்றைப் பார்க்கும்போது மனம் மகிழும். குறிப்பாக, மங்களவார்த்தை சொல்லப்பட்ட அந்தக் காட்சியில், மரியாவுக்கு வானதூதர் செய்தியைச் சொன்னதும், மரியா உடனே பணிந்து, 'ஆகட்டும்' என்று சொல்வதுபோலவும், வானதூதர் சென்றதும், அவர் தன் வீட்டிலோ, அல்லது, எலிசபெத்து வீட்டிலோ, 'என் ஆன்மா இறைவனைப் புகழ்கிறது' என்ற பாடலை நடனமாடுவது போலவும் காட்சிகள்
அமைக்கப்பட்டிருக்கும். மரியாவின் புகழ்பாடலைக் கேட்டு மனம் மகிழ்வோம்.
ஒரு
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கிறிஸ்மஸ் நாடகம்
முடிந்து திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக,
மகிழ்வாக இருந்திருக்குமா?" என்று கேட்டார். அந்தக்
கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. வரலாற்றில் நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, சுத்தமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச்
சூழலைப்பற்றி பல கோணங்களில் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு, ஒரே ஓர் அம்சத்தைப்பற்றி
சிந்திப்போம்.
யூதேயா
முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை வதைத்து வந்தது. இந்த அடக்கு முறையை
நிலைநாட்ட, உரோமைய அரசு, படைவீரர்களை அதிகம் பயன்படுத்தியது.
அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில்
வாழும் பெண்கள். பகலோ, இரவோ, எந்நேரத்திலும்,
இப்பெண்களுக்கு, படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.
ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், பல இலத்தீன் அமெரிக்க
நாடுகள் என 68 நாடுகளை, அமெரிக்க ஐக்கிய நாட்டு படைகளும், ஐரோப்பிய படைகளும் ஆக்ரமித்தபோது, அந்நாட்டுப்
பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களை முற்றிலும் அறிய வாய்ப்பில்லை.
இப்படிப்பட்ட
ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும்
சிறையில் வதைக்கப்பட்டதைப்போல் உணர்ந்த மரியா, "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க
ஒரு வழியைக் காட்டமாட்டாயா இறைவா?"
என்று
தினமும் வேண்டுதல்களை எழுப்பி வந்திருப்பார். அவரது வேண்டுதல்களுக்கு, இறைவன் விடை
அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.
இது
அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனைத் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் கருவுற்றால்,
அவர்களை ஊருக்கு நடுவே இழுத்துவந்து, கல்லால் எறிந்து கொல்லவேண்டும்
என்பது யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. தன் தோழிகளில் ஒரு சிலர்,
உரோமையப் படை வீரர்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்று, ஊருக்கு நடுவே கல்லால் எறியப்பட்டு இறந்ததை
மரியா பார்த்திருப்பார். அதையொத்த ஒரு நிலைக்கு தான் தள்ளப்படுவதை மரியா உணர்ந்தார்.
மணமாகாத தன்னை, தாய்மை நிலைக்கு கடவுள் அழைத்தது, பெரும் இடியாக மரியாவின் செவிகளில்
ஒலித்திருக்கும்.
இறைவன்
தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத்
தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், விருப்பப்பட்டு தூக்குக்
கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக் கொள்வதும்... எல்லாம் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை
அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று
சொன்னார் மரியா. தன் வழியாக, தனது சமுதாயத்திற்கும், இந்த உலகிற்கும் மீட்பு வரும் வாய்ப்பு உள்ளது
என்பதை அறிந்த மரியா, அந்த வாய்ப்புடன் வந்த
பேராபத்தில் இறைவனின் உதவி தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 'ஆகட்டும்' என்று பதில் சொன்னார். பெரும் போராட்டத்திற்குப்
பின் வந்த பதில் அது.
இன்று
நாம் வாசித்த நற்செய்தியின் இறுதியில்,
“நான்
ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என்று மரியா சொல்லும்
அந்த வார்த்தைகளே, இந்த முழுப் பகுதியையும் நற்செய்தியாக மாற்றியுள்ளன. இந்த நம்பிக்கை
சொற்கள் இல்லையெனில், இன்றைய விவிலியப்
பகுதியை ‘நற்செய்தி’ என்று சொல்வது மிகக்கடினம்.
மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத வார்த்தைகள் இத்தனை நூற்றாண்டுகளாக
பலருக்கு, பல வழிகளில் நற்செய்தியாக
ஒலித்துள்ளன.
உலகின்
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
அநீதிகளாலும், கொடுமைகளாலும் நொறுக்கப்பட்டுள்ள
ஒரு சமுதாயத்தில், அனைவருமே, அத்துயரங்களைக் கண்டு துவண்டுபோகாமல், அவர்களில் ஒருவர் எடுக்கும் துணிவான ஒரு
முடிவு, அந்த சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியுள்ளது என்பதற்கு, இளம் கிராமத்துப் பெண்
மரியா, ஓர் எடுத்துக்காட்டு. மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது, அவரது சொந்த சக்தி
அல்ல, மாறாக, இறைவன் மட்டில் அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதேபோல், தன் தனிப்பட்ட வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து, அதனால் மனம் வெறுத்து, கொடியப் பழக்கங்களுக்கு
அடிமையாகி இருக்கும் ஒருவர், ஆண்டவன் தரும் ஆயிரம் அழைப்புக்களில் ஒரே ஓர் அழைப்பை
உணர்ந்து, 'ஆகட்டும்' என்று ஆண்டவனிடம் சரண் அடையும்போது, அங்கும் புதிய சக்தியும், விடுதலையும் பிறக்கும்.
தனிப்பட்ட
வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி,
நமக்குத் தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு;
தகுந்த
முடிவுகள் எடுக்கும் துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும்
பணிவையும், துணிவையும், இந்த கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும் புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெறுவதற்கு,
அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.
No comments:
Post a Comment