31 January, 2016

The unacceptable prophet ஏற்றுக்கொள்ளமுடியாத இறைவாக்கினர்

A hometown welcome?
 4th Sunday in Ordinary Time
“No prophet is acceptable in his hometown” was the key sentence that grabbed my attention in this Sunday’s gospel (Luke 4: 21-30). This Sunday’s gospel is a sequel to last Sunday’s. But, what a contrast! Last week we heard that the people in the synagogue of Nazareth were in great admiration of Jesus when he began to speak to them. Today we hear of their eagerness to get rid of Jesus… and how! They wanted to take him up a hill and throw him down – a rehearsal to Jesus dying on the hillock near Jerusalem? A complete reversal - from adulation to annihilation!
What triggered such a reversal? Jesus called a spade a spade! Jesus must have observed some hard truths about his own people as he was growing up there. He must have been eager to drive home some basic truth. Speaking the truth brings in enlightenment, sometimes, and estrangement, more often. Jesus probably knew what was awaiting him. So, he made the famous observation: “No prophet is acceptable in his hometown.”

This statement of Jesus has been quoted worldwide, not only in the context of religion but also in many other spheres. Every time this statement is made, the word ‘prophet’ gets different shades of meaning. Who is a prophet? The moment we hear the word ‘prophet’, our minds instinctively think of ‘others’. Today when we talk of prophets, we are not talking about ‘them’; but about ‘us’. All of us are called to take up the role of the prophet at different times and in different places. When we talk of prophets in such inclusive terms, there could be an uneasy feeling in us. We feel like getting away from the hot-seat. Such attempts to escape are nothing new. In the Old Testament, we hardly think of a person who had willingly accepted the call to be a prophet.
There could be many reasons why we feel uneasy to be a prophet and to be in the company of a prophet. To me, the main reason seems to be that the prophet is called to play a unique role. The prophet seems to stand out in a crowd, most of the time, like a sore thumb! This is a call to swim against the current, to become one-in-a-thousand, or, even one-in-a-million! 

Our present day trend is to blend in, to adjust, to compromise. As against this trend, Pope Francis has been appealing, especially to the youth, to ‘go against the current’. Just 15 days after his Election, when Pope Francis celebrated the Mass of the Rite of Confirmation in St Peter’s Square, he told the youth: “Pay attention, my young friends: to go against the current; this is good for the heart, but we need courage to swim against the tide. Jesus gives us this courage!”
After the World Youth Day in Rio, Brazil, Pope Francis met 500 youth from the Italian diocese of Piacenza-Bobbio who were on a Year of Faith pilgrimage in Rome (August 29,2013) and told them: “Go against the current of this civilization that is doing so much harm. Do you understand this? To go against the current; and this means to make noise, to go forward, but with the values of beauty, of goodness and of truth.”
On January 14, 2016, Pope Francis has sent a special message to the teenagers - between 13 to16 -  who will participate in the Jubilee of Boys and Girls in April (23-25), telling them that the Holy Year was an opportunity to grow in holiness and mercy, so that they became Christians capable of making courageous decisions. He repeated the words he spoke during the Confirmation Mass: “Remain steadfast in the journey of faith, with firm hope in the Lord. This is the secret of our journey! He gives us the courage to swim against the tide, because going against the current is good for the heart.”

My favourite columnist Ron Rolheiser talks of the role of a prophet in one of his reflections. The title of this reflection is: Dare To Be One In A Thousand. He begins his reflections with his personal encounter with a youth group in which Fr Rolheiser himself was playing the role of a prophet during this talk. He could have easily dished out some innocuous ‘truths’ about love and sexuality and the youth group would have gone home without being challenged. Fr Rolheiser, instead, gave them some challenges. He goes on to talk about how his talks and writings are challenged by people, young and old, who are protesting against idealism. He goes on to say:
This protest takes many forms. Most commonly, it sounds something like this: “Whether certain principles and values are true or false is not so relevant. What is relevant is that virtually everyone has decided to ignore them and live in a different way. Nobody is living like that anymore... everyone is living in this way now!” Implicit in this is that if everyone is living in a certain way, then this way must be right. Values by common denominator. Principles by Gallup poll.
Occasionally, this critique takes a more cynical bent: “Idealism is naive, for kids. The mature, the realistic, do not live with their heads in the clouds. Hence, adjust, update, recognize what is there and accept it; live like everyone else is living.” What an incredible and tragic loss of idealism! Such a philosophy voices despair because the deepest demand of love, Christianity, and of life itself is precisely the challenge to specialness, to what is most ideal. Love, Christianity and life demand that we take the road less taken… Our culture, on the other hand, is rejecting this and is swallowing us whole. The current culture is reversing Robert Frost's famous adage and telling us “to take the road more taken.” http://www.ronrolheiser.com/columnarchive/?id=782

The final words of today’s Gospel reads like the edge-of-the-seat narrative: 
When they heard this, all in the synagogue were filled with wrath. And they rose up and put him out of the city, and led him to the brow of the hill on which their city was built, that they might throw him down headlong. But passing through the midst of them he went away. (Luke 4:28-30)

Fr Yesu Karuna, a friend of mine and a Biblical research scholar has looked at the imagery of Jesus ‘being led up the hill’ from different angles. Just before coming to Nazareth, evangelist Luke talks of how the devil had taken Jesus to another hill top to tempt him (Lk 4: 5-8). Here comes another temptation, a temptation that a prophet comes across in his life, the temptation of becoming a ‘martyr’ (Martyr complex or Martyr syndrome). When people don’t accept the prophet or his message, the prophet tends to quit – sometimes quit life! As the people were leading Jesus up the hill, he may have thought of various prophets who wanted to quit. But, Jesus gathered enough courage ‘to pass through the midst of them and go away’.
Taking Jesus up the hill also brings to mind the idea of alienation.  The people of Nazareth wanted to keep Jesus away from them. Don’t we place Jesus on pedestals so high that we create a safe distance between him and us? Fr Karuna also talks of how we have placed many created things on high altars. We have also created competition among ‘gods’ to the point of ‘throwing down other gods headlong’.
When we take Jesus up the hill - either to throw him down and replace him with other deities, or to let him stay at the top, safely away from us, he will continue to ‘pass through our midst’. He will continue to walk among us. That is the beauty of Jesus!

There have been and still are thousands of prophets among us who stand apart from the crowd. Their lives become a living message for all of us. When their lives become intolerably different, when their message becomes unbearably true, then the world silences them. We have great examples in Mahatma Gandhi, Martin Luther King Jr., Archbishop Oscar Romero and many more. These great prophets of our times continue to live through the messages they have left behind.
Last Wednesday, January 27, we observed the Holocaust Remembrance Day. Our closing thoughts are on Anne Frank, a 13 year old girl killed by the Holocaust. She had left behind a diary written while she was hiding away from the Nazi. Here is an excerpt from her diary:
“That is the difficulty in these times: Ideals, dreams and cherished hopes rise within us, only to meet the horrible truth and be shattered. It's really a wonder that I haven't dropped my ideals, because they seem so absurd and impossible to carry out. Yet I must uphold my ideals, for perhaps the time will come when I will be able to carry them out." (July 15, 1944, third-last entry into her diary.)

The Diary of Anne Frank
பொதுக்காலம் 4ம் ஞாயிறு
 "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை" - லூக்கா 4: 24. இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் இவ்வார்த்தைகள், இறைவாக்கினர்களைப்பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன. 'இறைவாக்கினர்கள்' என்ற சொல்லைக் கேட்டதும், ', அவர்களா?' என்ற எதிரொலி, நம் உள்ளத்தில் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு. 'இறைவாக்கினர்கள்' – ‘அவர்கள் அல்ல... நாம்தான்! நாம் ஒவ்வொருவரும், பல நிலைகளில், பலச் சூழல்களில், இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதை நாம் முதலில் நம்பி, ஏற்றுக்கொள்ள வேண்டும்.
'இறைவாக்கினர்' என்றதும், அது நமது பணியல்ல என்று சொல்லி, தப்பித்துக்கொள்ளும் பழக்கம் நம் அனைவரிடமும் உள்ளது. பொதுநிலையினர், குருக்கள், துறவியர்... ஏன், திருஅவைத் தலைவர்கள் அனைவரிடமும் இப்பழக்கம் உள்ளதென்பதை நாம் மறுக்க முடியாது. இது, இன்று, நேற்று எழுந்த பழக்கம் அல்ல. முதல் (பழைய) ஏற்பாட்டு காலத்திலும் இதை நாம் காண்கிறோம். 'நான் சொல்வதை மக்களிடம் சொல்' என்ற கட்டளை இறைவனிடமிருந்து வந்ததும், பல வழிகளில் தப்பித்து ஓடியவர்களை, நாம் முதல் (பழைய) ஏற்பாட்டில் சந்திக்கிறோம்.
இறைவாக்கினர் எரேமியாவை, தாயின் கருவிலிருந்தே தேர்ந்ததாகக் கூறும் இறைவன், உன்னை... அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்  (எரேமியா 1: 17-19) என்று எரேமியாவுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளாக இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன... ஆனால், இவ்வாக்குறுதிகளை நம்பி பணிசெய்த எரேமியா, இறைவன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால், தான் மக்கள் முன் அவமானமடைய வேண்டியதாகிவிட்டது என்றும் புலம்புவதை நாம் இந்நூலின் பிற்பகுதியில் காண்கிறோம் (எரேமியா 20:7).

இறைவாக்கினராய் மாற ஏன் இந்த பயம், தயக்கம்? இறைவாக்கினர், கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து, மறைந்து போகாமல், தனித்து நிற்க வேண்டியவர்கள் என்பதே, இந்தப் பயத்தின் முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன். தனித்து நின்றால், தலைவலிதான், எனவே, கூட்டத்தோடு கரைந்துவிடு என்பதே, இன்றைய உலகம், அதிலும் குறிப்பாக விளம்பர, வர்த்தக உலகம் சொல்லித்தரும் மந்திரம். அதுவும், தற்போதைய கணணித்தொடர்பு வலைகளின் உதவியுடன், அனைவரும் ஒரே வகையில் சிந்திக்கும்படி, நாம் 'மூளைச்சலவை' (brainwash) செய்யப்படுகிறோம். இச்சூழலில், விவிலியத்தின்படி, நன்னெறியின்படி, குறிக்கோளின்படி வாழ்வது எளிதல்ல. அப்படி வாழ்வதால், நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயமே, குறிக்கோள்களைக் கைவிட வைக்கிறது.

உலகமனைத்தும் ஒரே வகையான கருத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்போது, தனித்து நிற்பது, அல்லது, எதிர் நீச்சல் அடிப்பது இளையோருக்குத் தேவை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளார். இவ்வுலக உறவுகள், அந்தந்த நேரத்தில் உருவாகி மறைவன என்றும், உண்மைகள், அவரவர் பார்வையில் மாறுவன, எனவே, எதுவுமே நிரந்தரமற்றது என்றும் இவ்வுலகம் தொடர்ந்து அனுப்பி வரும் தவறான கருத்து வெள்ளத்திற்கு எதிராக, தனித்து நிற்கவும், எதிர் நீச்சல் அடிக்கவும் இளையோரை ஊக்கப்படுத்தி வருகிறார், திருத்தந்தை. நம்பிக்கை இழக்கும் வகையில், ஊடகங்கள், நம் மீது திணித்துவரும் செய்திகளை நம்பாமல், இறைவன் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கையை வளர்ப்பது, இளையோரின் மிக முக்கியக் கடமை என்பதையும், அண்மைய ஓராண்டளவாக திருத்தந்தை வலியுறுத்தி வருகிறார்.

எதிர்த்து நிற்பதும், எதிர் நீச்சல் போடுவதும், இறை வாக்கினர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கியக் கடமை என்பதை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் கூறுகின்றன. இக்கடமையைச் செய்யும்போது, ஊராரின் பகையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை, இறை வாக்கினர் நன்கு உணர்ந்திருந்தனர். எனவே, 'ஏன் இந்த வம்பு? ஊரோடு ஒத்துப் போய்விடுவோமே' என்ற சோதனை பலவேளைகளில் அவர்களுக்கு எழுந்தது. 'ஊரோடு ஒத்து வாழ'வேண்டும் என்று, குழந்தைப் பருவம் முதல் சொல்லித் தரப்படும் பாடங்கள் ஆழமாக மனதில் வேரூன்றிப் போகின்றன. அதுவும், நாம் ஒத்து வாழவேண்டிய ஊர், நமது சொந்த ஊர் என்றால், இன்னும் முழுமையாக ஒத்துப்போக வேண்டியிருக்கும். இத்தகையச் சூழலைச் சந்திக்கிறார் இயேசு.
தான் பிறந்து வளர்ந்த ஊராகிய நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில், தன் பணிவாழ்வின் கனவுகளை இயேசு பறைசாற்றினார் என்று சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக, இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர் (லூக்கா 4: 21-22) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.
ஆரம்பம் ஆழகாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து நடந்தது ஆபத்தாக மாறியது. தன் சொந்த ஊரில் இயேசு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களை ஆழமாக அலசிப் பார்த்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல சங்கடமான, உண்மைகளைச் சொன்னார், இயேசு. சங்கடமான உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தபோது, அவர்கள் அதுவரை இயேசுவின் மீது வைத்திருந்த ஈர்ப்பு, மரியாதை, மதிப்பு ஆகியவை, கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெற ஆரம்பித்தன.
இவர் யோசேப்பின் மகன் என்று, இயேசுவின் பூர்வீகத்தை அவர்கள் அலசியபோது, அதை நினைத்து பாராட்டியதாக நற்செய்தி சொல்கிறது. ஆனால், பூர்வீகங்கள் அலசப்படும்போது, பல நேரங்களில் "ஓ, இவன்தானே" என்று ஏகவசனத்தில் ஒலிக்கும் ஏளனம் அங்கு வந்து சேர்ந்துவிடும். (காண்க - மாற்கு 6: 1-6) சாதிய எண்ணங்களில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், தமிழகத்தில் பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்காக அல்ல; மாறாக, தேவையற்ற குப்பைகளைக் கிளற என்பது, நமக்குத் தெரிந்த உண்மை.

உண்மை, கசக்கும், எரிக்கும், சுடும். உண்மை, பலவேளைகளில் நம்மைச் சங்கடப்படுத்தும்; நம் தவறுகளைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும்போது, உண்மையின் மற்றொரு பக்கத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை, விடுவிக்கும். உண்மை, மீட்பைத் தரும்.
உண்மை விளைவிக்கும் சங்கடங்களைச் சமாளிக்கமுடியாமல், பல நேரங்களில் உண்மையை மறைத்துவிட, அழித்துவிட முயற்சிகள் நடக்கின்றன. உண்மை பேசும் இறைவாக்கினர்களின் செயல்பாடுகளைப் பலவழிகளில் நிறுத்த முயன்று, எல்லாம் தோல்விகண்ட பின், இறுதியில் அந்த இறைவாக்கினரின் வாழ்வையே நிறுத்த வேண்டியதாகிறது. உண்மையைச் சொல்பவருக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு உண்டு.

இன்று நற்செய்தியில் இயேசுவுக்கும் அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்கமுடியாமல், அவ்வூர் மக்களுக்கு, முக்கியமாக, தொழுகைக் கூடத்தை நடத்திவந்த மதத் தலைவர்களுக்கு ஏற்பட்ட கோபம், கொலை வெறியாகிறது. எனவே அவர்கள் அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர் (லூக் 4: 29) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

இயேசுவை 'மலையுச்சிக்கு' இழுத்துச் சென்றனர் என்ற கருத்தை, விவிலிய ஆய்வாளரான, அருள்பணி இயேசு கருணா அவர்கள், பல்வேறு கோணங்களில் சிந்தித்துள்ளார். இதோ, அவர் வழங்கும் எண்ணங்கள்:
நாசரேத்து மக்கள் இயேசுவை மலை உச்சிக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு, இயேசுவின் சோதனையை நினைவுபடுத்துகிறது. இயேசுவை சோதித்த சாத்தானும்  அவரை மலை உச்சிக்குத்தான் அழைத்துச் செல்கிறான். இதை, லூக்கா நற்செய்தி 4ம் பிரிவின் துவக்கத்தில் (லூக் 4:1-13, மத் 4:1-11) நாம் காண்கிறோம். அதைத் தொடர்ந்து, இயேசு நாசரேத்து வந்தபிறகு, மீண்டும் அவரை மக்கள் மலையுச்சிக்கு இழுத்துச் சென்றனர். இது, இயேசுவின் பணிவாழ்வில் வந்த இரண்டாவது சோதனை என்று சிந்திக்கலாம்.
தன்னோடு சமரசம் செய்துகொண்டால், இவ்வுலகம் முழுவதுமே இயேசுவின் காலடியில் கிடக்கும் என்ற முதல் சோதனையை, சாத்தான் மலையுச்சியில் கொடுத்தான். அத்தகைய சமரசம் வேண்டாம் என்று விலகி வந்து, இயேசு தன் பணியைத் துவக்கியபோது, தன் சொந்த மக்களிடமிருந்தே அவருக்கு எதிர்ப்பு எழுகிறது. இம்மக்களை வெல்வது கடினம் என்று எண்ணி, இயேசு மறைந்துவிட நினைப்பதையே நாசரேத்து மலையுச்சியில் நிகழ்ந்த இரண்டாவது சோதனை நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவுக்கு வந்த இந்த இரண்டாம் சோதனையை, 'Martyr Complex', அதாவது, ‘உயிரை மாய்த்துக்கொள்ளும் சோதனையாக எண்ணிப்பார்க்கலாம். இந்தச் சோதனை, முதல் (பழைய) ஏற்பாட்டில் எலியா மற்றும் எரேமியா இறைவாக்கினர்களுக்கும் வருகின்றது. தங்களையும், தங்கள் பணியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளாதபோது, தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணுகின்றனர். உயிரை மாய்த்துக்கொள்ளுதல் இதற்கு தீர்வாகுமா? 'நீ மறைசாட்சியானால், எல்லாரும் உன்னை மதிப்பர்' என, சாத்தான், நம் உள்ளத்தையும் சோதித்துப் பார்க்கின்றான். வாழ்வில் வரும் எதிர்ப்புகளைக் கண்டு பயந்து ஓடிவிடச் சொல்கின்றான். அல்லது, எதிர்ப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் எளிதான வழி, தற்கொலை என்றும் சொல்லித் தருகிறான்.
மலையுச்சிக்கு இழுத்துச் செல்லப்பட்ட இயேசு, 'அவர்கள் நடுவே நடந்து சென்று, அங்கிருந்து போய்விட்டார்' (லூக்கா 4: 30) என்று, இன்றைய நற்செய்தி முடிவடைகிறது. அவர் நம்மைப்போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், "இந்த அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி, ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? தேவையில்லை இவர்கள் உறவு" என்று இயேசு ஒதுங்கியிருப்பார். ஆனால், அன்று தன் சொந்த ஊரான நாசரேத்தில் உண்மையைப் பறைசாற்றத் துவங்கிய இயேசுவின் நற்செய்திப்பணி, கல்வாரி மலையுச்சி வரை தொடர்ந்தது. இயேசு செய்ததைப் போல, நம்பிக்கையுடன் நற்செய்திப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு நமக்கு துணிச்சல் இருக்கிறதா?
மேலும், மலை உச்சிக்கு ஏற்றி, இயேசுவை தங்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட நினைக்கிறார்கள் மக்கள். இன்று, நம் வாழ்வும், வழிபாடுகளும்கூட இயேசுவை பல நேரங்களில் நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றன. மலையுச்சியை மற்றொரு கோணத்தில் பார்த்தால், இன்று, கடவுளுக்குப் பதிலாக நாம் மற்ற பொருள்களை உச்சத்தில் ஏற்றி, வழிபட்டு வருகிறோம். அல்லது, எங்கள் கடவுள்தான் மேன்மையானவர் என, மற்ற கடவுளர்களை உச்சியிலிருந்து தள்ளி, கொல்லப் பார்க்கின்றோம்.
கடவுளை நாம் நம் வாழ்விலிருந்து ஒழித்துவிட நினைத்து, அவரை உச்சிக்கு அழைத்துச் சென்றாலோ, அல்லது 'ஊரோடு ஒத்து வாழ்தல்' என்ற பெயரில், படைக்கப்பட்டப் பொருட்களை உச்சியில் வைத்து, கொண்டாட நினைத்தாலோ, அவர் தொடர்ந்து, 'நம் நடுவே நடந்தவண்ணம் இருப்பார்'. ஏனெனில், அவர் கடவுள். உச்சிகளை விரும்பாத அந்த இறைவனை, நம் நடுவே நடந்துவரும் அன்பு இறைவனை அடையாளம் கண்டுகொள்ள, இறைவன் நமக்கு அருளொளி தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... உயிரோடு இருக்கும்போது உண்மைகளைச் சொல்ல வாய்ப்பில்லாத ஆயிரமாயிரம் இறைவாக்கினர்கள், எழுத்துவடிவில் விட்டுச்சென்ற உண்மைகள், அவர்கள் இறந்த பின்னரும் வாழ்வதைக் காண்கிறோம். உண்மையைக் கூறியதால், தங்கள் உயிரை இழந்த மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், பேராயர் ஆஸ்கர் ரோமேரோ ஆகிய இறைவாக்கினர் விட்டுச் சென்றுள்ள எண்ணங்கள், இன்னும் நம் உலகில் உன்னதமான அதிர்வுகளை உருவாக்கத் தவறவில்லையே!
சனவரி 27, கடந்த புதனன்று, அகில உலக தகன நினைவு நாளைக் கடைபிடித்தோம். நாத்சி படையினரால் தகனமாக்கப்பட்டு, உயிரிழந்த Anne Frank என்ற 13 வயது சிறுமி, நாத்சி படையினர் பிடியில் சிக்குவதற்கு முன் ஈராண்டுகள் மறைந்து வாழ்ந்தார். அந்த ஈராண்டுகள், அவர் தன் நாள் குறிப்பேட்டில் எழுதியிருந்த எண்ணங்கள், அவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டன. நாள் குறிப்பேட்டின் ஒரு பக்கத்தில் அவர் எழுதியிருந்த எண்ணங்கள், இதோ:
"குறிக்கோள்கள், கனவுகள் நமக்குள் பிறக்கின்றன. ஆனால், நாம் வாழும் சூழல், இவற்றை சுக்குநூறாகச் சிதறடிக்கிறது. இந்த அவல நிலையிலும் நான் என் குறிக்கோள்களை இழக்கவில்லை. இவையனைத்தும், நிறைவேற்ற முடியாத கனவுகளாகத் தெரிந்தாலும், நான் இவற்றை இதுவரை என் உள்ளத்தில் சுமந்து வந்திருப்பது, எனக்கே வியப்பாக இருக்கிறது. இவ்வுலகம் அவநம்பிக்கையில் மூழ்கினாலும், நான் என் குறிக்கோள்களை இழக்கப்போவதில்லை. ஒருநாள் வரும். அன்று என் குறிக்கோள்கள்களை வாழ்ந்து காட்டுவேன்."
குறிக்கோள்களை இழக்காமல் வாழ்ந்த இளையவர் Anne Frank போல், இன்றும் நம்மிடையே வாழும் வீர உள்ளங்களை, இறைவன், இரக்கத்தின் காலத்தில், தொடர்ந்து காக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.


27 January, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 7

God is not about religion. God is about love.


Peace and Love preached by all religions

நாம் வாழும் இந்நாட்களில், அடையாள அட்டைகள் இன்றி வாழ்வது ஆபத்தானது, நம்மை அடையாளப்படுத்தும் அட்டைகள் இன்றி வீட்டைவிட்டு வெளியேறினால், காணாமற் போகும் வாய்ப்பு அதிகம் உண்டு என்று சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம்.
நம் வாழ்வு, அடையாள அட்டைகளால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது போதாதென்று, நாம் வணங்கும் கடவுளுக்கும் அடையாள அட்டைகள் தந்துள்ளோம் என்பது, நாம் உருவாக்கிக் கொண்ட ஓர் இக்கட்டானச் சூழல். உண்மைக் கடவுள் ஒருவரே என்றாலும், அவருக்கு நாம் ஆயிரமாயிரம் அடையாள அட்டைகளை வழங்கி, கடவுளைக் கூறுபோட்டு வைத்துள்ளோம். இதில், கூடுதலான ஒரு சங்கடம் எழுகின்றது. அடையாள அட்டைகள் இன்றி, நாம் காணாமற் போய்விடுகிறோம். அடையாள அட்டைகளை ஆயிரமாயிரமாய் நாம் குவித்துவிட்டதால், உண்மைக் கடவுள் காணாமற் போய்விட்டார்.
உயர்ந்த, உன்னதமான, உண்மையான மதங்களின் ஊற்றுக்களை நாம் நாடிச் சென்றால், அங்கு நாம் சந்திக்கும் இறைவன், இரக்கமே உருவாக, அன்பே வடிவாக இருப்பார். அவை மட்டுமே அவரது அடையாளங்கள்.

கிறிஸ்தவ மறையிலும், விவிலியம் முழுவதும் நாம் சந்திக்கும் இறைவன், இரக்கமே உருவானவர். இரக்கத்தின் முகம் (Misericordiae Vultus) என்ற மடலின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோசேக்கு தன்னையே அறிமுகப்படுத்திக்கொள்ளும் இறைவனை, நமக்கு அறிமுகப்படுத்துகிறார். துயருறும் இஸ்ரயேல் மக்களோடு தன்னை இணைத்துக் கொள்வதே, இறைவனின் அடிப்படை இயல்பு என, திருத்தந்தை சுட்டிக்காட்டுகிறார்.
மடலின் இரண்டாம் எண்ணில், திருத்தந்தை, மூவொரு இறைவனைப் பற்றி கூறும் அழகிய எண்ணங்கள் இதோ: இரக்கம் என்ற மறையுண்மையை நாம் தொடர்ந்து தியானிக்க கடமைப்பட்டுள்ளோம். நமது மீட்பே அந்த இரக்கத்தைச் சார்ந்தது. மிகப் புனிதமான மூவொரு இறைவன் என்ற மறையுண்மையை வெளிப்படுத்தும் ஒரே சொல், இரக்கம். நம்மைச் சந்திக்க வரும் இறைவனின் மிக உன்னத செயல்பாடு, இரக்கம். வாழ்வுப் பாதையில் சந்திக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரியின் கண்களை நேரிய உள்ளத்துடன் காணவிழையும் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்தில் குடிகொண்டிருப்பது, இரக்கம். இறைவனையும், மனிதரையும் இணைக்கும் பாலம், இரக்கம்.” (இரக்கத்தின் முகம். எண் 2 )

அன்பே சிவம் என்று, இந்துமதப் பாரம்பரியத்தில் சொல்லப்பட்டுள்ளதை நாம் அறிவோம். திருமூலர் எழுதியுள்ள திருமந்திரத்தில் நாம் காணக்கூடிய உன்னத எண்ணங்களை, 'தமிழ் இணையக் கல்விக் கழகம்' (Tamil Virtual Academy) பின்வருமாறு தொகுத்துள்ளது:
அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார்
அன்பே சிவமானது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
அன்பு சிவம் என்பவை இரண்டு பொருள் அல்ல, அன்பே சிவம் என்பதை உணர்ந்தவர் சிலரே. அவர்களே ஞானிகள்; அவர்களே கடவுள் தன்மை பெற்றவர்கள் என்கிறார் திருமூலர்.

இஸ்லாமிய மதத்தின் உயிர் நாடியெனக் கருதப்படும் 'குர்ஆனின்' ஒரே ஒரு பிரிவைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரிவுகளின் துவக்கத்திலும், "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் தொடங்குகிறேன்" என்ற வார்த்தைகள் காணக் கிடக்கின்றன. (விக்கிப்பீடியா) அதேபோல், ஒவ்வொரு பிரிவின் துவக்கத்திலும் சொல்லப்படும் செபம், “In the name of God, Most Gracious, Most Merciful” அதாவது, மிகவும் அருள் செறிந்த, மிகவும் இரக்கம் நிறைந்த இறைவன் பெயரால் என்ற வார்த்தைகள், செபமாகச் சொல்லப்படுகின்றன.

இத்தகையப் பாரம்பரியத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் இருவர், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள, 'இரக்கத்தின் முகம்' என்ற  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மடலை வாசித்தப்பின், தங்கள் கருத்துக்களை வழங்கியுள்ளனர்:
இந்தோனேசியாவின் அலாவுதீன் (Alauddin) அரசு இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் Qasim Mathar அவர்கள், இரக்கம் மற்றும் மன்னிப்பு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மடல், இறைவாக்கினர் முகமது அவர்களின் செய்தியை மீண்டும் நினைவுபடுத்தி, அதற்கு வலிமை சேர்க்கின்றது. திருத்தந்தையின் செய்தி, கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல, இஸ்லாமியருக்கும், பிற மத நம்பிக்கையாளர் அனைவருக்கும் ஏற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் சிறுபான்மை மொழிகள் குழுவின் தலைவர், Akhtarul Wasey என்ற இஸ்லாமியப் பேராசிரியர், இரக்கம் கடவுளுக்குரிய பண்பு, நாம் ஒருவர் ஒருவரிடம் இரக்கமுள்ளவர்களாக வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார், முஸ்லிமாகிய நான், எனது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளோடு சேர்ந்து கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நமக்கு அடுத்திருப்பவரின் வாழும் நிலைகளை மேம்படுத்த, திருத்தந்தை, இம்மடல் வழியே விடுத்துள்ள அழைப்பை ஏற்று, நன்மனம் கொண்ட மனிதர்கள், கத்தோலிக்கத் திருஅவையுடன் இணைந்து செயலாற்றுவர்என்று கருத்து தெரிவித்துள்ளார்.

'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்டுள்ள மடல், இவ்விரு இஸ்லாமிய அறிஞர்களில் உன்னதச் சிந்தனைகளை உருவாக்கியதுபோல், இன்னும் ஏனைய மதங்களைச் சேர்ந்த பல நூறு பேரில் தாக்கங்களை உருவாக்கியிருக்கும் என்பதை நம்பலாம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு சனவரி மாதத்திற்கென வெளியிட்ட செபக் கருத்து, நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதமும் வழங்கிவரும் செபக் கருத்துக்கள், நிகழும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு புதிய முயற்சியாக, முதன் முதலாக, ஒரு காணொளி வடிவில் சனவரி மாதம் 6ம் தேதி வெளியிடப்பட்டது. YouTubeல் 1 நிமிடம், 32 நொடிகள் நீடிக்கும் இக்காணொளித் தொகுப்பினைக் கண்டு பயன்பெற உங்களை அழைக்கின்றேன்.
இக்காணொளித் தொகுப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செபக் கருத்தை இஸ்பானிய மொழியில் விளக்கியுள்ளார். அவரது கூற்றுக்கள், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியம், உட்பட, இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைக்கு மேல், வார்த்தைகளாய் பதியப்பட்டுள்ளன: "இந்த பூமிக் கோளத்தில் வாழும் பெரும்பான்மையானோர், மத நம்பிக்கையுள்ளவர்கள் என்று பறைசாற்றுகின்றனர். இந்த உணர்வு, மதங்களிடையே உரையாடலுக்கு வழிவகுக்க வேண்டும். இந்த உரையாடலுக்காக நாம் செபிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது; வேறுபட்ட சிந்தனையுடைய பிறரோடு ஒத்துழைக்கவும் முயற்சி எடுக்கவேண்டும்" என்று திருத்தந்தை கூறியதும், நால்வர், திரையில் தோன்றுகின்றனர்.
புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் துறவி முதலில் தோன்றி, "நான் புத்தாவை நம்புகிறேன்" என்று கூறுகிறார். இவரைத் தொடர்ந்து, ஒரு யூத மத குரு, "நான் கடவுளை நம்புகிறேன்" என்றும், ஒரு கத்தோலிக்க அருள் பணியாளர், "நான் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்" என்றும் கூறுகின்றனர். இறுதியாகத் தோன்றும், ஓர் இஸ்லாமிய இமாம், "நான் அல்லா, கடவுளை நம்புகிறேன்" என்று கூறுகிறார்.
இவர்கள் அறிக்கையிட்ட இந்த நம்பிக்கை கூற்றுகளைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "பலரும் பலவாறு எண்ணுகிறோம், உணர்கிறோம். இறைவனைத் தேடுவதிலும், சந்திப்பதிலும் நாம் வேறுபட்ட பாதைகளைத் தொடர்கிறோம். இந்த வேறுபாடுகளிடையே, நம்மிடம் உள்ள ஒரே ஓர் உறுதி: நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற உறுதி" என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து, நான்கு மதங்களைச் சேர்ந்தவர்களும் மீண்டும் ஒருமுறை திரையில், ஒருவர் பின் ஒருவராகத் தோன்றி, "நான் அன்பை நம்புகிறேன்" என்று கூறுகின்றனர்.
இக்காணொளி பதிவின் இறுதிப்பகுதியில், திருத்தந்தை, இம்மாதத்திற்குரிய கருத்தை வெளியிடுகிறார்: "பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட ஆண்கள், பெண்கள் நடுவே நிகழும் உண்மையான உரையாடல், அமைதி, நீதி ஆகிய கனிகளை உருவாக்கவேண்டும்" என்பதே, அவர் கூறும் செபக் கருத்து. காணொளியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'உங்கள் செபங்களில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்ற வார்த்தைகளுடன் இந்தக் காணொளிப் பதிவை நிறைவு செய்துள்ளார்.
இந்தக் காணொளித் தொகுப்பின் இறுதிக் காட்சியாக, புத்தம், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்களின் அடையாளங்களை, நால்வரும் கரங்களில் ஏந்தி, அருகருகே கொணர்கின்றனர். காட்சி நிறைவடைகிறது.

பல்வேறு மதங்களின், கலாச்சாரங்களின் தொட்டில் என்று வழங்கப்படும் இந்தியா, தன் 67வது குடியரசு நாளை, சனவரி 26, இச்செவ்வாயன்று சிறப்பித்தது. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குடியரசு விழாவில், தன் இராணுவச் சக்தியை வெளிப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டிவரும் இந்திய அரசு, இந்நாட்டின் மிக முக்கியமான சக்தியான மக்களின் சக்தியை, மக்களின் ஒற்றுமையை, உலகிற்கு உணர்த்த தவறி வருகிறது. பிரித்தாள்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள், இறைவனையும், மதங்களையும் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, மக்களைப் பிரித்து வருகின்றன. "பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட ஆண்கள், பெண்கள் நடுவே நிகழும் உண்மையான உரையாடல், அமைதி, நீதி ஆகிய கனிகளை உருவாக்கவேண்டும்" என்று திருத்தந்தை விடுத்துள்ள செபக்கருத்து, இந்தியாவில் ஆழமாக வேரூன்றவேண்டும் என்று மன்றாடுவோம்.
சனவரி 27, இப்புதனன்று, 'அகில உலக தகன நினைவு நாள்' (International Holocaust Remembrance Day) கடைபிடிக்கப்படுகிறது. மனிதர்கள் தங்களுக்குள் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட மற்றொரு பிரிவு, இனம். யூத இனத்தை வேரோடு அழிக்கும் ஒரு முயற்சியாக உருவான நாத்சி வதை முகாம்களிலிருந்து யூதர்களை விடுவித்த நாளையே, நாம் உலக தகன நினைவு நாளாகக் கடைபிடிக்கிறோம்.
உண்மை இறைவன், அன்பும், இரக்கமும் உருவானவர்; அவரை, பல்வேறு அடையாளங்களால் கூறுபோட்டு காட்டும் மதங்கள், இனங்கள் என்ற அடையாள அட்டைகளைக் களைந்து, நீதி, அமைதி ஆகிய கனிகளை மனிதக் குடும்பம் சுவைப்பதற்கு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நமக்கு உதவவேண்டுமென்று மன்றாடுவோம்.


24 January, 2016

The Grace of the Present Moment நிகழ் பொழுதின் அருள்



Jesus in Nazareth Synagogue
 3rd Sunday in Ordinary Time

Let us imagine a Sunday Mass in progress. The celebrant finishes reading the Gospel and then begins his homily. The very first words of his homily go like this: “Dear Friends, let us talk politics!” The whole congregation ‘wakes up’. A few in the congregation are preparing to leave the Church. They are not willing to listen to politics in the Church, especially during the Holy Mass. Politics, an integral part of human life, does not find a place in our churches. We tend to react negatively towards politics since we give a narrow sense to this word. We identify the word ‘politics’ with ‘party politics’ played by our politicians.
Something similar happened when Jesus began to speak ‘politics’ in the synagogue at Nazareth. Instead of quitting the scene themselves, the people wanted Jesus to quit the world. Still, Jesus did not quit, but went on to talk ‘politics’ in its original sense, namely, the art of governing people; making people better human beings.

The original meaning of ‘politics’ drawn from the root word ‘polis’ (as given in Merriam-Webster Dictionary) goes like this: The Greek word polis, meaning “city” or “community,” and the related word polītēs, meaning “citizen,” give us the roots polis and polit. Words from Greek polis and polītēs have something to do with cities or communities or the citizens who live in them… Politics is the science and art of governing citizens. Today’s Gospel from Luke Chapter 4: 16-21, inspired me to think of ‘politics’ in its original, right sense.
We begin our reflections with two historical events… On January 26, 1950, India celebrated its first Republic Day. This year is the 67th anniversary of this great republic. This day has become more of a show of India’s power – specifically, its military power. As other ‘undemocratic’ ‘non-republic’ powers are being more fore-fronted, the real republic power – the power of the people – seems to recede further and further. Indian Republic seems to have become a distant memory and a past history! The recent death (by suicide) of Rohit Vemula, a research scholar from the Dalit community, adds insult to injury on the celebration of the Indian Republic Day. This is not the plight of India alone.
The second historical event that draws our attention today is the International Holocaust Remembrance Day observed on January 27th every year. This is an international memorial day for the victims of the Holocaust, the genocide that resulted in the annihilation of millions of Jews and other innocent people by the Nazi regime and its collaborators. This day was designated by the United Nations General Assembly, since on January 27, 1945, the prisoners of the largest Nazi death camp, Auschwitz-Birkenau, were liberated by the Soviet troops. The Republic Day of India as well as the International Holocaust Remembrance Day strongly drive home the message that the world stands in need of liberation, STILL!

Jesus proclaimed that he was anointed to proclaim liberation to captives - Luke 4: 16-21. This passage is popularly known as the ‘Manifesto’ of Jesus – his inaugural address, before he took up his public ministry. Unfortunately, the word ‘manifesto’ has many shady connotations now, since the word has been misused by political parties and candidates.
For the past few months, the American television is presenting, not only to the U.S., but also to the rest of the world, a ‘soap opera’ on the candidates contesting the American Presidential Elections. We shall be filled ‘ad nauseam’ with this ‘soap’ almost till the end of this year. In a few weeks, another ‘soap’ will begin in Tamil Nadu, as the parties are preparing for the state elections there. Unfortunately, all the politicians will be filling our ears with their eloquence. In general, when political leaders speak, I have hard time trying to turn off my internal speaker which seems to discredit whatever they are saying.

Against the background of such an empty rhetoric, it would be helpful to analyse the manifesto of Jesus, given in today’s gospel. It is quite interesting to see that Jesus did not create this manifesto. He simply borrowed it from Prophet Isaiah. Real leaders speak to the people from their hearts; they are not interested in being brilliantly original. They are more interested in getting the attention of the people and inspiring them with hope rather than getting their applause. Jesus did this in Nazareth. After quoting extensively from Prophet Isaiah, Jesus made it his own by the master stroke he gave at the end – the punch line. "Today this Scripture has been fulfilled in your hearing."

What was so special about these words? The word ‘Today’ was special. Let me explain.
The Israelites living at the time of Jesus, were trained to look to the future. Many of their teachers and religious leaders were insisting on the time to come. That was a safer bet than telling them that salvation had already come, since things looked as miserable as before. Jesus changed that perspective. He said TODAY fulfilment had come.
We have heard of the famous phrase: Grace of the Present Moment. Jesus lived the present, the here-and-now moment all his life. He tried his best to instil this thought into his people through his words and deeds. In his miracle at Cana (labelled as his first sign), “he told the workers, ‘Now draw some out and take it to the master of the banquet.’” (John 2:8). When Jesus told the workers ‘now’, it was not clear whether water had turned into wine. Still, the workers did it and it was already wine! Perhaps this was Jesus’ way of teaching people to trust the ‘here and now’!
When he asked the ten leprosy patients to go and show themselves to the priests, they were not cured yet. As they were going, they were healed. (Luke 17). Similarly, he tells the paralytic to carry his bed and walk immediately. (Matthew 9). The miracle of feeding the people stranded in the desert, once again, illustrates that Jesus believed in the here and now. When the disciples asked Jesus to send the people away, he asked them how much food they had there and then. (Mark 6:38) He began the miracle with what they had, not with what they would have or could have had.
In the famous prayer taught by Jesus, he asks us to pray: ‘Give us TODAY our daily bread.’

The crowning moment of this ‘here and now’ creed came out when he was hanging on the cross. One of the two men crucified along with Jesus, made an impossible request, namely, to give him a place in the Kingdom. How could someone think of a Kingdom while hanging on a cross? Anyone in that position would have given up on the Kingdom or, at least, postponed such thoughts. If Jesus were a normal political leader, he could have poured out his anger and desperation on the guy who was talking of the Kingdom. Not Jesus. Although he was fighting for every breath on the cross, Jesus still spoke with assurance, “I tell you the truth, TODAY you will be with me in paradise.” (Luke 23:43) What better proof is needed to say that Jesus was a PRESENT, HERE-AND-NOW person. The grace of the present moment was overflowing in him.

Living in the present moment is a real challenge. A quick look at a typical day in our life would prove this point. The moment we wake up, many thoughts crowd our mind… most of them either memories of what happened the previous day, especially the sad ones, or anxieties of the day ahead of us. I am not sure how many of us notice the myriad little miracles that happen around us day after day… like the water that refreshes our mouth and face every morning, the exercises that awaken the body fully. If we are in the habit of doing yoga, or meditation in the morning, I don’t know how many of us are aware of the cool air that enters our nostrils when we breathe in and the hot air that is breathed out.
How many of us eat our meals, not being involved in what we are doing? The result? More visits to the doctor! Being more and more involved in the here and now, cherishing the ‘grace of the present moment’ can help not only our soul but also our body.

If only we are totally involved with the present moment, we can surely avoid many, many mistakes and subsequent regrets. Living in regrets is one sure way to kill TODAY. Jesus told the people in Nazareth that ‘today’s could bring them salvation. Jesus is still giving us the same good news.
Today, if you hear his voice, do not harden your hearts… (Psalm 95: 7-8)

Nation mourns death of Rohith Vemula


பொதுக்காலம் 3ம் ஞாயிறு

சனவரி 17, கடந்த ஞாயிறன்று, ரோஹித் வெமுலா (Rohith Vemula) என்ற மாணவர், தற்கொலை செய்துகொண்டதால், இந்தியாவில், 'சாதிப் போர்' மீண்டும் ஒருமுறை துவங்கியுள்ளது. இந்த வேதனை நிகழ்வு, ஓர் உயர் கல்விக்கூடத்தில் நிகழ்ந்தது என்பது, சில உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. 'சாதி'யை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள், அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தாத இடமே இல்லை என்பதைத்தான், ரோஹித் அவர்களின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. இந்த மரணத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், அரசியல்வாதிகள், இளையோரை இலக்காக்கி, வேட்டையாடி வருவது, பெரும் வேதனையே! இறைவன் பெயரால் இயங்கிவரும் நிறுவனங்களும் 'சாதிய அரசியலில்' சிக்கித் தவிப்பதை நாம் அறிவோம். இத்தகைய ஒரு சூழலில், நாம் இன்றைய ஞாயிறு சிந்தனையை மேற்கொள்கிறோம்.
அரசியல் என்ற சொல்லைக் கேட்டதும், ‘கட்சி அரசியலே நம் எண்ணங்களை ஆக்ரமிப்பதால், கோவிலில், வழிபாட்டு நேரத்தில் (ஞாயிறு சிந்தனையில்) அரசியல் பேச வேண்டாமே என்று சொல்லத் தோன்றுகிறது. வாழ்வையும், வழிபாட்டையும் பிரித்துப் பார்க்கும் நமது மனநிலைக்கு, இன்றைய நற்செய்தி ஒரு சவாலாக அமைகிறது. இயேசு, தொழுகைக் கூடத்தில் நின்று, ‘அரசியல் பேசுவதை, இன்றைய நற்செய்தியாக வாசிக்கிறோம். ஆனால், இங்கு நாம் குறிப்பிடும் அரசியல் என்ற வார்த்தையின் பொருள்... அரசு+இயல்... நம்மை நாமே ஆள்வது எப்படி என்ற பாடம்.
இந்தக் கண்ணோட்டத்தில், இரு வரலாற்று நினைவுகள் நமது ஞாயிறு சிந்தனைக்கு அடித்தளமாக அமைகின்றன. முதல் வரலாற்று நினைவு... இந்தியக் குடியரசு நாள். 1950ம் ஆண்டு, சனவரி 26ம் தேதி, இந்தியாவில் முதல் குடியரசு நாள் கொண்டாடப்பட்டது. வருகிற செவ்வாய்க்கிழமை, 67வது குடியரசு நாளை, கடைபிடிக்கவிருக்கிறோம். முதல் குடியரசு நாள் கொண்டாடப்பட்டது என்று சொன்னேன். 67வது குடியரசு நாளை கொண்டாடவிருக்கிறோம் என்று சொல்லாமல்,  கடைபிடிக்கவிருக்கிறோம் என்று சொன்னேன். இந்த வார்த்தை வேறுபாடே, நான் சொல்லவரும் எண்ணங்களைத் தெளிவாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். இன்றைய இந்தியாவில், 'குடியரசு' என்பது, ஒப்புக்காக, கடமைக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகிவிட்டதால், 'குடியரசு நாள்' என்பதும், ஒரு கடமையாகக் கடைபிடிக்கப்படுகிறது.

குடியரசு அல்லது மக்களாட்சி என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது, அமெரிக்க அரசுத் தலைவர், ஆபிரகாம் லிங்கன் அவர்கள் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள், மனதில் ஒலிக்கின்றன: “Democracy is a government of the people, by the people and for the people.”மக்களாட்சி என்பது, மக்களுடைய ஆட்சி; அது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி.
மக்களாட்சியின் உயிர் துடிப்பாக இருக்கவேண்டிய மக்களை, குறிப்பாக, சாதியக் கொடுமையாலும், சமுதாயப் பாகுபாடுகளாலும் உரிமைகளை இழந்து வாடும் மக்களை, நடைப்பிணங்களாய் மாற்றி, சமுதாயத்தின் ஓரங்களில் புதைத்துவிட்டு, மந்திரிகளையும், பண முதலைகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் நாட்டின் மையத்திற்குக் கொண்டுவரும்போது, அங்கு நடப்பது, மக்களாட்சியா என்ற கேள்வி எழுகிறது. இந்த அவலமான போக்கு, இந்தியாவில் மட்டும் உள்ளதென்று வேதனையடைய வேண்டாம். உலகின் அனைத்து நாடுகளிலும், மக்களாட்சி என்ற பெயரில், பல அவலங்கள் அரங்கேறி வருவதை நாம் காண்கிறோம்.

நாம் சிந்திக்கும் இரண்டாவது வரலாற்று நினைவு நாள் - ஒவ்வோர் ஆண்டும், சனவரி 27ம் தேதி கடைபிடிக்கப்படும் 'அகில உலக தகன நினைவு நாள்' (International Holocaust Remembrance Day). இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்ட நாத்சி வதை முகாம்களிலேயே, மிகப் பெரிய, Auschwitz-Birkenau முகாம்களில் இருந்தோரை, 1945ம் ஆண்டு சனவரி 27ம் தேதி, இரஷ்யப் படையினர் விடுவித்தனர். இந்நாளின் நினைவாக, சனவரி 27ம் தேதி அகில உலக தகன நினைவு நாள் எனக் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியக் குடியரசு நாளும், அகில உலக தகன நினைவு நாளும் சில அடிப்படை உண்மைகளை உணர்த்துகின்றன. மனிதர்கள் இன்னும் தங்களைத் தாங்களே ஆளும் திறமை பெறவில்லை, இன்னும் நாம் முழு விடுதலை அடையவில்லை என்ற உண்மைகளை உரக்கக் கூறும் நாட்கள் இவை!

பல வடிவங்களில் தளையுண்டிருக்கும் மனிதர்களுக்கு விடுதலை வழங்கவே, தான் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளதாக இன்றைய நற்செய்தியில் முழங்குகிறார், இயேசு. தன் பணிவாழ்வின் துவக்கத்தில், அவர் ஆற்றிய முதல் உரை, லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது என்று ஆரம்பமாகும் நற்செய்தி வார்த்தைகள், துறவியர், அருள்பணியாளர், மக்கள் பணிகளில் ஈடுபடுவோர் பலருக்கும் உந்துசக்தியாக விளங்குகின்றன. பல அழைப்பிதழ்களிலும், பாடல்களிலும் இந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதை நாம் காணலாம். மனதைத் தூண்டும் இவ்வார்த்தைகள், இயேசு தன் பணிவாழ்வைத் துவக்கியபோது அறிவித்த 'கொள்கை விளக்க அறிக்கை' (Manifesto)!
கொள்கை விளக்க அறிக்கை என்பது, தற்போது ஓர் அரசியல் ஆயுதமாக, தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. தேர்தல் முடிந்ததும், அந்தச் சொற்கள் மக்கள் நினைவுகளிலிருந்து மறைந்துவிடும் என்ற நம்பிக்கையில், அரசியல் தலைவர்கள், ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் மட்டும், இந்த ஆயுதத்தைத் தூசித் துடைத்து, மக்கள் மீது ஏவி வேடிக்கை காட்டுகின்றனர்.

இன்னும் சில் மாதங்களில் தமிழ்நாட்டிலும், இவ்வாண்டு இறுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் தேர்தல்கள் நடைபெறப் போகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெறப்போகும் அரசுத் தலைவர் தேர்தல், நம் தொலைக்காட்சிகளில் வரும் 'மெகா சீரியல்' போல, ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வருகின்றது. இன்னும் சில நாட்களில், அல்லது, வாரங்களில் இதே போன்றதொரு 'மெகா சீரியல்' தமிழ்நாட்டில் துவங்க உள்ளது. நமது மூளையை மழுங்கடித்துவிட்டு, உணர்வுகளைத் தூண்டிவிடும் தொலைக்காட்சித் தொடர்களைப் போலவே, அரசியல் தலைவர்களின் பின்னணி, அவர்கள் சொல்லும் மதியற்ற கூற்றுகள் ஆகியவற்றைக் கேட்கும் கட்டாயத்திற்கு நாம் உள்ளாகப் போகிறோம்.

பல அரசியல் தலைவர்களின் உரைகளைக் கேட்கும்போது, என் மனம் 'ஸ்டீரியோ' பாணியில் வேலை செய்வதை உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கும் இதையொத்த அனுபவம் இருந்திருக்கும். அதாவது, தலைவர்களின் கூற்றுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், நமது மனங்கள், அக்கருத்துக்களை ஏற்று, அல்லது, மறுத்து, பேசிக் கொண்டேயிருக்கும். பெரும்பாலும் மறுப்பு ஒலிகளே நம் மனதில் அதிகம் எழும். இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது... உரையாற்றும் தலைவருக்கும், அவரது பேசும் கூற்றுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள். இவரை நமக்குத் தெரியாதா? இவர் சொல்வதற்கும், இவரது வாழ்வுக்கும்  தொடர்பில்லையே!” என்ற எண்ணங்கள் 'ஸ்டீரியோ' பாணியில் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தில் நாசரேத்து தொழுகைக் கூடத்தில் துவக்க உரையாற்றினார். தன் 'கொள்கை விளக்க அறிக்கை'யை மக்களுக்கு அளித்தார். இதோ இன்றைய நற்செய்தியில் தன் பணிவாழ்வைப் பற்றி இயேசு கூறும் வார்த்தைகள்:
லூக்கா நற்செய்தி 4 16-21

இயேசுவின் இந்த அற்புத உரையைப் பல்வேறு கோணங்களில் நாம் சிந்திக்கலாம். இன்றைய நற்செய்தியின் இறுதியில் அவர் சொல்லியிருக்கும் ஒரே ஒரு கூற்றை மட்டும் சிறிது ஆழ்ந்து சிந்திக்க உங்களை அழைக்கிறேன்... நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று என்று இயேசு தன் உரையை நிறைவு செய்கிறார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள், ‘நாளை நல்ல காலம் பிறக்கும் என்று கனவு காண்பதற்கு அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம், இயேசு அந்தத் தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை: "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று." இன்று, இப்போது, இங்கு... நிறைவு, விடிவு, மீட்பு வந்துவிட்டது என்று இயேசு கூறினார். தான் கூறியதை நம்பியவர்; வாழ்ந்தும் காட்டியவர், இயேசு.
இயேசு உலகில் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம் அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவற்றைச் சிந்தித்தால், அவர் நிகழ்காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சில...

நாம் கடந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்து கொண்ட கானா திருமணப் புதுமை, இயேசு செய்த முதல் அருங்குறி என்று சொல்லப்படுகிறது. அந்தப் புதுமையில், தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியதைக் குறிக்க அவர் சொன்ன வார்த்தைகள்: (யோவான் 2:8) "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்." அவர் செய்த முதல் புதுமையிலேயே இப்போது என்ற எண்ணத்தை விதைத்தார்.
லூக்கா நற்செய்தியில் பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும்போது, “நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள் என்று சொல்லாமல், (லூக்கா 17:14) நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காட்டுங்கள் என்றார். இயேசு இப்படி சொன்னபோது, தொழுநோய் அவர்களை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போதே நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள்; போகும் வழியில் குணமடைந்தார்கள். இதேபோல், (மத்தேயு 9:6) இயேசு, முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு உடனே நடக்கச் சொன்னார். பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையில் (லூக்கா 9:13, மாற்கு 6:38) நகருக்குச் சென்று உணவு வாங்கி வரலாமா என்ற எதிர்காலத் திட்டம் தீட்டிய சீடர்களிடம், "உங்களிடம் இங்கே எவ்வளவு உணவிருக்கிறது?" என்ற கேள்வியுடன் அந்தப் புதுமையை ஆரம்பித்தார்.
இயேசு சொல்லித்தந்த அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்." என்றா சொல்லித்தந்தார்? இல்லையே. மாறாக, இன்றே தாரும் என்றார். இன்று இப்போது என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில் தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். (லூக்கா 23:43) "இன்றே என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று இயேசு கூறியது அவரது இறுதி வாக்கியங்களில் ஒன்று.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு விரக்தியுடன், என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம் என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது.  நிகழ் பொழுதின் அருள் என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்தால், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், உண்மையான விடுதலை பெறமுடியும். நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது, மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிகப் பயன் தரும்.

நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் இயேசு வாசித்த ஏசாயாவின் சொற்கள், பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக்கூடியவை; அவற்றைப் பற்றி சிந்திக்காமல், இன்று, இப்போது என்று நாம் சிந்தித்தது, இன்றைய நற்செய்திக்குத் தகுந்த விளக்கம் இல்லையோ என்று உங்களில் ஒரு சிலர் தயங்கலாம். 
உடலளவிலும், மனதளவிலும் கட்டுண்டு கிடந்த மனித சமுதாயத்தை விடுவிக்கவே தான் வந்ததாக, இயேசு கூறிய இந்த வார்த்தைகளுக்கு விளக்கங்கள் தேவையில்லையே! சமுதாய நீதி  பற்றிய கனவுகள், என்றாவது, எப்போதாவது, நனவாகுமா என்று, ஏக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இன்றே, இப்போதே அவை நனவாகிவிட்டன, நிறைவேறிவிட்டன என்று இயேசு சொன்ன வார்த்தைகள், நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும் என்றல்ல, இப்போதே வந்துவிட்டது என்று அவர்களை நம்பவைக்க இயேசு முயன்றது, அவரது முதல் அரசியல் வெற்றி என நான் கருதுகிறேன்.

இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால்... அவ்வண்ணமே நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால், சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும் குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல்பட்டு தீர்வுகளைக் கண்டால், உண்மை விடுதலை, தூரத்துக் கனவாக இருக்காது.
ஒன்றே செய்யினும், நன்றே செய்வோம்;
நன்றே செய்யினும், இன்றே, இப்போதே செய்வோம்.