Three wise
men following the star
The Epiphany of Our Lord
Last Sunday
we celebrated the Feast of the Holy Family. This Sunday we are celebrating
God’s extended family. Yes… this is the core message of the Feast of the
Epiphany. This Feast tells us one basic truth about God. God is not a private
property of any human group. As far as God is concerned, the larger the family,
the better… the more, the merrier!
This idea
must have shocked quite a few orthodox Jews. They were very sure that the one
and only true God was theirs, EXCLUSIVELY. God must have laughed at this idea;
but in His/Her parental love, God would have allowed them to hold on to this
‘exclusivism’. God waited for the opportune time. By inviting the wise men from
the East to visit the Divine Babe at Bethlehem ,
God had broken the myth of exclusivism! A true iconoclast, indeed!
God cannot
be the exclusive treasure of any human group. This message is still very
relevant to us, especially in the light of all the divisions created by various
individuals and groups who have used God and religion as a political weapon.
God is surely not party to any divisive force! Unifying, reconciling… these are
God’s ways. Let us pray on the Feast of the Epiphany that the whole human family
may live together as one inclusive, divine family. Especially during this
Extraordinary Jubilee of Mercy, let us pray that we become ‘merciful as God’
and learn to embrace the whole human family without any prejudice!
Although
this feast is mainly about Jesus revealing himself to the whole world (that’s
the Epiphany), still, popularly, this feast is about the so called ‘Magi’. Very
little is given about these persons (Kings? Wise men? Astrologers?) in the
Bible. Only Matthew’s Gospel talks about these persons (Matthew 2: 1-12).
Matthew simply introduces them as ‘wisemen from the East’. There is not even a
mention of the number. Tradition has made them not only Kings, but also made
them THREE KINGS because in Matthew’s gospel three gifts (gold, frankincense and
myrrh) have been mentioned. Keeping this traditional point of view, we can say
that today’s gospel talks of FOUR kings – three from the East and one, residing
in Jerusalem ,
namely, Herod.
Fr Ron
Rolheisser makes a lovely observation on these four persons.
The wise
men follow the star, find the new king, and, upon seeing him, place their gifts
at his feet. What happens to them afterwards? We have all kinds of apocryphal
stories about their journey back home, but these, while interesting, are not
helpful. We do not know what happened to them afterwards and that is exactly
the point. Their slipping away into anonymity is a crucial part of their gift.
The idea is that they now disappear because they can now disappear. They have
placed their gifts at the feet of the young king and can now leave everything
safely in his hands. His star has eclipsed theirs. Far from fighting for their
former place, they now happily cede it to him. Like old Simeon, they can
happily exit the stage singing: Now, Lord, you can dismiss your servants! We
can die! We're in safe hands!
And
Herod, how much to the contrary! The news that a new king has been born
threatens him at his core since he is himself a king. The glory and light that
will now shine upon the new king will no longer shine on him. So what is his
reaction? Far from laying his resources at the feet of the new king, he sets
out to kill him. Moreover, to ensure that his murderers find him, he kills all
the male babies in the entire area. An entire book on anthropology might be
written about this last line. Fish are not the only species that eats its
young! But the real point is the contrast between the wise men and Herod: The
former see new life as promise and they bless it; the latter sees new life as
threat and he curses it.
We have
just begun a new year. Do we see the New Year as a blessing or a threat? The
media have heaped on us a depressing account of the past year. It has also
managed to slip in some anxieties about the New Year. Are we so dumb as to go
along these lines and begin the New Year with trepidation? Or, are we ready to
drench in the shower of mercy that comes from above? Are we willing to
surrender to the divine and then joyfully slip away into anonymity? Or, are we
going to cling on to our own stardom – whether recognised as such by others or
not?
Every New
Year opens with promises and resolutions. It is one thing to make resolutions
and quite a different thing to put them to practice. Here is a small anecdote
to highlight the difference.
The son
asked his father, “There are three frogs sitting on the wall of a well. If one
of them decides to jump in, how many would be left on the wall?” The father
felt that this was too simple. “Oh, there would be two” he answered. The son
said, “Wrong, dad. All the three would be sitting on the wall, since one of
them only decided to jump and did not do it.”
When the
wisemen decided to follow the star, they must have faced quite many questions
and ridicules. But, they did not give up. Their journey must have been torturous.
Following a star is possible only at night. Stars are not visible during the
day. This means that these wise men must have done most of their journey in the
night – not an easy option given their mode of transport etc. It must have been
very difficult to gaze upon one little star among the hundreds on a clear sky.
What if the sky was not clear? Then they would have to wait until clouds and
mist clear. So, their journey must have taken nights, many nights. Relentlessly
they pursued their decision to follow the star. This alone is reason enough to
celebrate!
The term
‘star’ is used to indicate someone or something special. Unfortunately, the
commercial world uses this term very generously and frivolously… It creates too
many stars – mega stars, super stars – mainly from the entertainment world and
the sports field! It is also unfortunate that lots of people ‘follow these
stars’ and reach nowhere. The less is said about this, the better.
For us
living in the 21st century, real stars in the sky are rare to see.
With our city lights blinding our eyes, and the smog constantly spreading a
blanket over our heads, it is hard to see clear skies and stars. To see the
stars, we must get out of our cities… and there seems to be no time for that.
We have no time to look up. We are dazzled and even blinded by too many
artificial stars and hence real stars have receded from our view. We hardly
look up.
A parting
thought on ‘following a star’ is this: When we begin to follow a star, let us
look for real, inspiring stars even if this means lots of challenges and lots
of hardships.
“This is my
quest
To follow
that star
No matter
how hopeless
No matter how far”
"The
Impossible Dream"
from MAN
OF LA MANCHA (1972) written by Joe Darion
King Herod
and the Wise men
திருக்காட்சிப் பெருவிழா ஞாயிறு
சிறுவயதில்
நான் பார்த்த கிறிஸ்மஸ் நாடகங்களில் எனக்குப் பிடித்த பாத்திரங்கள் யார் தெரியுமா? மூன்று இராஜாக்கள். அந்த மூன்று பேரும், பளபளப்பாய் உடை அணிந்து, தலையில் தங்க மகுடம் வைத்து வருவார்கள். சிறுவயதில் என்னை, தங்கள்
ஆடம்பரத்தால் ஈர்த்த இந்த அரசர்கள், இன்று எனக்கு ஆழமான பாடங்களைச் சொல்லித்தருகிறார்கள்.
மூன்று
அரசர்கள், மூவேந்தர்கள் அல்லது மூன்று ஞானிகள் என்று
பலவாறாக அழைக்கப்படும் இந்த மூவரைப்பற்றி வரலாற்றுப்பூர்வமான விவரங்கள் அதிகம்
இல்லை. மத்தேயு நற்செய்தி 2ம்பிரிவில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த மூவரும் பல கோடி மக்களின் மனங்களில் தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்; முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த ஒரு காரணம் போதும், இவர்களுக்கு விழா எடுப்பதற்கு.
இன்று
நாம் கொண்டாடும் மூன்று அரசர் அல்லது மூன்று ஞானிகள் திருநாள், இறைவன் தன்னை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சிப்
பெருவிழா எனக் கொண்டாடப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை
கொண்டாடிவந்த யூத குலத்தவருக்கு இந்தத் திருநாளும், இதில்
பொதிந்திருக்கும் உண்மையும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். வானதூதர்கள் வழியாக, எரியும் புதர் வழியாக தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன், இன்று பிற இனத்தவருக்கும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பது அவர்களுக்கு
அதிர்ச்சி. இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும்
விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.
கடவுளின்
பெயரால் பிரிவுகளையும் பிளவுகளையும் உருவாக்கி,
அவர் பெயரால் வன்முறைகளை
வளர்க்கும் பல அடிப்படைவாதக் குழுக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, மனமாற்றம்
பெறவேண்டுமென மன்றாடுவோம். புலர்ந்திருக்கும் 2016ம் ஆண்டில் தமிழகத்தில் தேர்தல்கள்
நிகழவிருக்கின்றன. மக்களைப் பிரிப்பது ஒன்றையே தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள அரசியல்
தலைவர்கள், இறைவனையும், மதங்களையும், சாதிகளையும் மூலதனமாக்கி நடத்தப் போகும் ஓட்டு வேட்டைக்கு
மக்கள் பலியாகாமல் இருக்கவேண்டும் என்று குறிப்பாக செபிப்போம்.
இந்த
மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்த நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம்.
விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது.
வாழ்க்கையில் நம்மை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதைச் சிந்திக்கலாம். இறைவனைச்
சந்திக்கும்போதும், சந்தித்தபின்னும் நம் வாழ்வில் ஏற்படும்
மாற்றங்களைப் பற்றி சிந்திக்கலாம்.
விண்மீன்கள்
என்றதும் மனதில் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்கள் வலம்
வருகின்றன. இந்தியாவில், முக்கியமாக, தமிழ் நாட்டில், பல ஸ்டார்களை நாம் உருவாக்கிவிட்டதால், ஸ்டார்களுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டது. ஆனால், இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிட்டு, வாழ்வைத் தொலைத்துக்
கொண்டிருக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்து வேதனையாய் இருக்கிறது.
இந்த
ஞானிகளை "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.
இந்த ஞானிகள் இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பது
ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இந்த ஞானிகள் கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்ந்து அறிந்தவர்கள். இந்தியாவிலும், இன்னும் பல ஆசிய நாடுகளிலும் கோள்களை, நட்சத்திரங்களை வைத்து வாழ்வின் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்பார்க்கலாம்.
திரைப்படங்கள், விளையாட்டு, அரசியல் ஆகிய உலகங்களில் உருவாகும்
'ஸ்டார்களையும்', நம் ஜாதகத்தில், கைரேகைகளில் பதிந்துவிட்ட 'நட்சத்திரங்களையும்' நம்பி வாழாமல், நல்வழிகாட்டும் இலட்சியங்கள் என்ற விண்மீன்களை நாம் பின்பற்ற வேண்டும்
என்பது, இந்த விழா நமக்குச் சொல்லித்தரும் மற்றுமோர் அழகியப் பாடம்.
விண்மீன்
இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள்
பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற அக்காலத்தில், இரவில்
மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்லவே. அதுவும் தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனை, பல்லாயிரம்
விண்மீன்களுக்கு நடுவே மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது
அவ்வளவு எளிதல்லவே. பல இரவுகளில் மேகங்களும்,
பனிமூட்டமும் அந்த
விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில் மேகமும், பனியும்
விலகும்வரைக் காத்திருந்து மீண்டும் விண்மீனைப் பார்த்து அவர்கள் நடந்திருக்க வேண்டும். இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள்
பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.
நாம்
வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது.
வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது,
"ஒருவேளை மழை
வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.
அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும் போதும்
மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா
என்பதைத் தெரிந்துகொள்ள.
சந்தேகம்
வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும்.
அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள்
கொடுக்கும் அழைப்பும் தெரியாது. கருமேகங்களைத் தாண்டி விண்மீன்களைப் பார்ப்பதற்கு நம்
முகத்தில் உள்ள கண்கள் பயனற்றவை. அகக்கண்கள் தேவை.
அன்பு
மருத்துவர் அல்லது காதல் மருத்துவர் (Dr Love)
என்று புகழ்பெற்ற
லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்ற ஓரு பேராசிரியர் பகிர்ந்துகொண்ட
ஓர் அனுபவம் இது: அவர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது, அவரிடம் ஜோயல் என்ற மாணவர் படித்துவந்தார். மிகச்சிறந்த அறிவும், பல்வேறு திறமைகளும் கொண்டவர் ஜோயல். பாரம்பரியம்மிக்க யூத குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கடவுளையும், யூத மத நியதிகளையும் விட்டு வெகுதூரம்
விலகிச்சென்றார் ஜோயல். ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல்
குழம்பிப் போன அவர், ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்.
சாவதற்கு
முன், தன் அபிமான ஆசிரியர் லியோ புஸ்காலியாவைப்
சந்திக்கச் சென்றார். தான் எடுத்திருந்த முடிவை அவரிடம் சொன்னார். "உன் வாழ்வை
முடித்துக் கொள்வதற்கு முன், நமது பல்கலைக்கழகத்திற்கு அருகில்
உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று வா" என்றார் லியோ. தன் அபிமான ஆசிரியர் என்ன
சொல்கிறார் என்பதை ஜோயல் புரிந்துகொள்ளவில்லை. எனவே, லியோ விளக்கினார்: "நீ உன் வாழ்வை முடித்துக்
கொள்வதற்கு முன், வாழ்வு என்றால் என்ன என்பதை உன் இதயக்
கண்கள் கொண்டு நீ பார்க்கவேண்டும்" என்றார். "இதயக் கண்களா?" என்று ஜோயல் அழுத்திக் கேட்டதும், லியோ மேலும் விளக்க ஆரம்பித்தார்: "வாழ்க்கையின் அர்த்தமுள்ள தொடர்புகளையெல்லாம் இழந்து, அந்த
முதியோர் இல்லத்தில் வாழ்வோருக்கு உன்னால் என்ன தரமுடியும் என்பதைச் சிந்தித்துப்பார்.
அங்குள்ளவர்களில் யார் எந்த ஓர் உறவினரும் வராமல் பல மாதங்கள் அல்லது வருடங்கள் காத்திருக்கிறார்களோ,
அவர்களைச் சென்று பார்" என்று லியோ சொன்னதும், ஜோயல், "அவர்களிடம் என்ன சொல்லவேண்டும்?" என்று
கேட்டார். "என்ன சொல்ல வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள்.. ஆனால், வாழ்வில் ஒரு பிடிப்பை,
நம்பிக்கையை உண்டாக்கும்
வகையில் எதையாவது அவர்களுக்கு சொல்" என்று சொல்லி அனுப்பினார். பிறருக்குக் கொடுப்பதன்
வழியாக நாம் வாழ்வில் அர்த்தத்தைப் பெற முடியும் என்பதே லியோ கொடுத்த இந்த ஆலோசனையில்
பொதிந்திருந்த இரகசியம்.
இந்தச்
சந்திப்பிற்குப் பின், ஜோயலுக்கு என்ன ஆயிற்று என்பதை
லியோ புஸ்காலியா மறந்துவிட்டார். ஒரு நாள்,
அவர் பல்கலைக் கழகத்தில்
நடைபெற்ற ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்குப் போய்கொண்டிருந்தபோது, ஜோயல் ஒரு பேருந்தில் வந்து இறங்கினார்.
அவருடன் முதியோர் இல்லத்திலிருந்து பத்து அல்லது பதினைந்து பேர் சக்கர
நாற்காலிகளில் வந்து இறங்கினர். ஜோயல்
தன் ஆசிரியர் லியோவிடம்
வந்தார். "சார், இவர்கள் கால்பந்தாட்டப் போட்டியை
நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனவேதான் அவர்களை அழைத்து வந்துள்ளேன்"
என்று சொன்னார். சிறிது தூரம் சென்றபின், லியோவின் கைகளை இறுகப் பற்றியபடி
ஜோயல் பேசினார்: "என் இதயத்தின் கண்களைத்
திறந்து மற்றவர் தேவைகளை எனக்குச் சொல்லித் தந்தீர்கள். மிக்க நன்றி." என்று சொன்னார்.
தான், தனது உலகம் என்ற சிறு வட்டத்திற்குள் வாழ்வின் பொருளைத் தேடி, விரக்தியடைந்து,
வாழ்வையே முடித்துக்கொள்ளத் தீர்மானித்த ஜோயல்,
தன் உலகிற்குள் அடுத்தவரை
அனுமதித்தபோது, தன் வாழ்வின் பொருளை உணர்ந்தார். இதயத்தின்
கண்களைத் திறந்து பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம்.
அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர்
இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.
இந்த
மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றே அழைத்து வந்துள்ளோம். இக்கண்ணோட்டத்தில்
பார்க்கும்போது, இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு
அரசர்களைப் பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன் நாம்
ஏரோது அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம். இவர்கள் நால்வரும் இயேசுவைத் தேடினார்கள்.
விண்மீன் வழிநடத்த, பல நூறு மைல்கள் பயணம் செய்த மூன்று அரசர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இயேசுவை உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக் கண்டதும் தங்களையே
அர்ப்பணம் செய்ததன் அடையாளமாக, காணிக்கைகளை அக்குழந்தையின் காலடியில்
சமர்ப்பித்தனர்... அதன்பின், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத்
திரும்பினர். இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப் பற்றி விவிலியத்தில்
எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ காற்றோடு
காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல் தெரிகிறது.
இறைவனைத்
தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த பலரது நிலை இதுதான். எடுத்துக்காட்டாக, எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கையிலேந்திய முதியவர் சீமோன், இயேசுவைக் கண்டதால் உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற
விரும்பினார். (லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு
யோவானின் நிலையும் (யோவான் 3:30) “இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று முழங்கிய புனித
பவுலின் நிலையும் இதைப் போன்றதே. இறைவனை உண்மையிலேயேக்
கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை அவரிடம்
அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச்
சொல்லித் தருகின்றனர்.
இதற்கு
நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள்
அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக?
அவரைக் கொல்வதற்காக.
அவனது தேடுதல் வெறியாக மாறி, பல நூறு பச்சிளம் குழந்தைகளை அவன்
கொன்று குவித்தான். அவன் இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக் கண்டுவிட்டதாக நினைத்தான்.
அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை
என்ற இந்தக் கடவுளுக்கு, அவன் தன் மனைவியரையும், பிள்ளைகளையும் பலி கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும்
பலி கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும் எச்சரிக்கைப் பாடங்களையும்
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
உண்மையான
விண்மீன்களை அடையாளம் கண்டதால், அந்த விண்மீன் காட்டிய பாதையில்
சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், எத்தனையோ நல்ல
உள்ளங்கள், தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள்.
தடைகள் பல எழுந்தாலும், தளராமல், உன்னத
குறிக்கோள்களான விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு, முயல்வோம்.
அந்த இறைவன் கருணைக் கடல் என்பதை உணர்ந்து, அந்தக் கடலில் கரைவதற்கு இரக்கத்தின்
யூபிலி ஆண்டு நமக்கு உதவுவதாக.
No comments:
Post a Comment