13 March, 2016

Never tiring forgiveness… சலிப்படையாத மன்னிப்பு...



Casting the First Stone
5th Sunday of Lent

March 13, this Sunday, is the third anniversary of the Election of Pope Francis. Three days after his Election, I wrote in my Sunday homily (March 17, 2013) the following lines:

On March 13, 2013, around 8 p.m. the 265th successor to St Peter, Pope Francis, appeared on the balcony of St Peter’s Basilica, wearing a simple white cassock with a simple crucifix – no red mozzetta (red upper piece, covering the shoulders up to the waist), and no golden, ornamented crucifix. Talk of the first impressions! What followed in the next 20 minutes confirmed the positive first impressions that we have a special person in front of us. Pope Francis spoke to the people from his heart, beginning with a simple ‘buona sera’ – good evening. It was like listening to a Parish Priest chatting with his parishioners.

One could sense a remarkable change in the people gathered in St Peter’s Square. They had come for a public celebration, but Pope Francis had turned the ambience to a prayerful mood. What followed was a defining moment which is etched deep in my mind and heart. I am sure millions would share these sentiments of mine. Pope Francis requested the people to pray for him. He said:
And now I would like to give the blessing, but first I want to ask you a favour. Before the bishop blesses the people I ask that you would pray to the Lord to bless me – the prayer of the people for their Bishop. Let us say this prayer – your prayer for me – in silence.
Pope Francis, the Supreme Pontiff of 1.2 billion Catholics around the world, bowed down before the people and asked for their prayers. That gesture was a supreme testimony of the type of person we have as our Holy Father. The silence that prevailed in Peter’s Square would have left lasting impression on millions around the world who were watching this scene on TV. If the Pope can bow down in prayer before the people in the full glare of all the media, then we can be assured of many blessings!

Those were the words I wrote three yeas back. They are still so meaningful to me. We have witnessed blessings in various forms during the past three years. We pray that the Good Lord shower many more blessings on Pope Francis and, through him, may God shower his blessings on the world.

On 17, March, 2013, Pope Francis gave his first Angelus in St Peter’s Square. That was the V Sunday of Lent and the Gospel for that Sunday was the exact same Gospel we have today, namely, Jesus meeting a woman caught in adultery. He spoke of Jesus’ mercy and forgiveness. Here are some excerpts from Pope Francis’ Angelus:

Brothers and Sisters, God's face is the face of a merciful father who is always patient. Have you thought about God's patience, the patience he has with each one of us? … A little mercy makes the world less cold and more just. We need to understand properly this mercy of God, this merciful Father who is so patient....

Then Pope Francis went on to say some memorable words, which he has repeated on various occasions. Let us not forget this word: God never ever tires of forgiving us!... Well, the problem is that we ourselves tire, we do not want to ask, we grow weary of asking for forgiveness. He never tires of forgiving, but at times we get tired of asking for forgiveness.

One can easily see that Jesus meeting the woman caught in adultery as a parable-of-mercy-in-action. Last Sunday when the Scribes and the Pharisees murmured against Jesus, associating himself with sinners, His response came in the form of the great parables: the Lost Sheep, the Lost Coin and the Lost Son. This Sunday the religious leaders challenged Jesus once again by bringing a woman caught in adultery. This time, Jesus preferred not to preach through words but through action. That is why this is called a parable in action.

The opening lines of this passage - John 8: 1-11 - give us something to reflect on. Jesus went to the Mount of Olives. At dawn he appeared again in the temple where all the people gathered around him, and he sat down to teach them.
How do we begin our day? Early mornings are usually spent in quiet, personal works… going to the Church, taking a walk, practising yoga or simply reading the newspaper with a cup of coffee… Usually we do not begin the day with something that would upset us, right? Jesus did what was most pleasing to him. After having spent the night in prayer, he came to the temple at dawn to teach the people…

This peaceful setup was disrupted by the Pharisees and the teachers of the law. What a way to begin the day for those pathetic souls! As Jesus was spending his night in prayer, those religious leaders were spending their night in… plotting against Jesus. Jesus must have felt pity for them as well as felt angry at them for using a woman as a pawn, in their plot.

Using another human person is probably the most grievous of all sins. The ‘use-and-throw-culture’ we have brought on ourselves, unfortunately, not stopped with things alone. With ecological sensitivity gaining momentum in our era, we now speak of how we have “raped” nature. We begin to speak with respect about how to use things and how to treat animals etc. Unfortunately, we are becoming less sensitive towards how we ‘use’ another human being. On many occasions Pope Francis has talked of ‘the throw-away-culture’, ‘the globalisation of indifference’ and ‘the exploitation of nature’.

The Pharisees must have been the synthesis of all the concerns expressed by Pope Francis. For them, Jesus had become the principal or ONLY ‘thorn’ that was to be weeded out! They tried to use anything and anyone to trap Jesus. When they brought the woman before Jesus, they claimed that they had caught her in the very act of committing adultery.

I remember a play on the life of Jesus that I saw many years back. The playwright (Cyril Desbruslais, a Jesuit) had portrayed Jesus more as a revolutionary leader. This scene was enacted in that play with a slight twist. When the Pharisees made this claim of catching this lady red-handed, Jesus asked them: “Where is the man?” The Pharisees and others were silenced by this question.

We do not have such a question recorded in the Gospel of John. But, I am sure such a thought would have surely crossed the mind of Jesus. Especially when the teachers of the law were trying to remind Jesus about the law of Moses, Jesus would have surely thought about the twist they were giving to this law.

The law of Moses clearly states this: If a man commits adultery with another man's wife—with the wife of his neighbor—both the adulterer and the adulteress must be put to death. (Lev. 20:10) Both must be put to death, not the woman alone. It was very obvious that the leaderswho had come with the woman were concerned with only one objective – to trap Jesus. Nothing else. Anything (even the sacred law of Moses) can be bent, anyone can be bent, broken, used, abused… just to trap Jesus. Their pathetic paranoid had silenced Jesus. So he began to scribble something on the ground – a strange occurrence! But, they were bent on getting a statement from him. Then he said: "If any one of you is without sin, let him be the first to throw a stone at her." (John 8:7)     
They did not expect this. They had come for a serious argument on the law and a possible condemnation for the woman. They did not expect this boomerang. They had no other option but leave. Apart from this statement, Jesus kept writing on the ground. One interpretation says that Jesus was writing out the sins of those present there. This may be a far fetched explanation. No such thing was required. The Pharisees and the teachers of the law knew Jesus too well to challenge him further and they simply disappeared, starting from the elders. Jesus then sends away the woman telling her not to sin again.

It is said that the early Church could not handle this passage and hence it was removed from John’s Gospel for quite a few centuries. Why? It showed Jesus as a person too lenient with sin. Thank God, such a stance was corrected soon. Jesus did not condone sin, he was concerned about sinners. This passage is a beautiful example of mercy triumphing over justice.

Jesus became incarnate to prove only one truth – God was unconditional and infinite in loving. Such unconditional love does not become a license to sin. When understood properly, such a love is a great challenge and not a license. It is much easier to live with a just God who punishes us for our mistakes. We would be careful not to get punished. But, such a life would be devoid of freedom. When we are confronted by an all loving, caring God, our life is dictated by love and not fear.
Imagine the prodigal son! After his royal return to the father’s house, would he offend his father again? He could; but would not.

In today’s Gospel the parting words of Jesus to the woman were: “Go, and sin no more” (John 8:7). Was there the need for Jesus to tell her not to sin again? I don’t think so. This incident, steeped in love and mercy, would have completely transformed the woman. Yes, dear friends, unconditional love can work lots of miracles. The illogic of love is stronger than the logic of justice. The madness of love is much more real than the sense of justice. 

On March 17, 2013, when Pope Francis gave the first Angelus in St Peter’s Square, his closing words were: Do not forget this: the Lord never tires of forgiving! It is we who tire of asking forgiveness. Have a good Sunday and a good lunch!



Election of Pope Francis
தவக்காலம் 5ம் ஞாயிறு

மார்ச் மாதம் என்றதும், வசந்தகாலம் பற்றிய எண்ணங்கள் மனதில் வலம் வருவது இயல்பு. மார்ச் 13, இந்த ஞாயிறன்று, வத்திக்கானில் துவங்கிய ஒரு வசந்தகாலத்தைப் பற்றிய நினைவுகள் நம் மனங்களில் அலைமோதுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன், இதேநாள், அதாவது, 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, திருஅவையின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் தலைமைப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மூன்றாம் ஆண்டு நிறைவை, இன்று நினைவில் கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பணிக்கெனத் தேர்ந்த விருதுவாக்கில் (miserando atque eligendo - இரக்கம் கொண்டு தேர்ந்தெடுத்து) இரக்கம் என்ற சொல் இடம்பெற்று்ள்ளது. அதற்கேற்ப, அவர் ஆற்றிவரும் பணிகளில் இரக்கம் முதலிடம் பெற்றுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும், அவரது பணிவாழ்வின் மூன்றாம் ஆண்டு நிறைவையும் கொண்டாடும் இவ்வேளையில், இறைவன், தன் இரக்கத்தால், அவருக்கு நல்ல உடல் நலத்தை வழங்கவேண்டும் என்று மன்றாட்டுடன், இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்குவோம்.

வசந்த காலம் என்று சொன்னதும், வண்ண வண்ண மலர்களால் நிறைந்த ஒரு கற்பனை உலகம் மனதில் நிறைகிறது. வருடம் முழுவதும் வசந்த காலமாகவே இருந்துவிட்டால் நலமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இயற்கைச் சுழற்சியில் வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் என்ற நான்கு காலங்கள் ஒன்றையொன்று தொடர்ந்தால் மட்டுமே, இந்த பூமிக்கோளம் உயிர் வாழமுடியும். நம் சுயநலத்தால், பூமிக் கோளத்தை கூடுதல் வெப்பமடையச் செய்து, இந்த நான்கு காலங்களின் அழகியச் சுழற்சியைத் தடுமாறச் செய்கிறோம் என்பதையும் இவ்வேளையில் நினைவில் கொள்வோம்.

சென்ற ஞாயிறை, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடியபோது, துன்பமும், இன்பமும், மாறி, மாறி வருவதுதான் மனித வாழ்க்கை என்று நம் சிந்தனைகளைத் துவக்கினோம். மனித வாழ்வில் சந்திக்கும் மற்றொரு அனுபவத்தை இன்று நாம் சிந்திப்போம். அதுதான், நம்மைத் தேடிவரும் பிரச்சனைகள். பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியலாம், கோபத்தோடு எதிர்கொண்டு பிரச்சனைகளை இன்னும் பெரிதாக்கலாம். அல்லது, நிதானமாய், தெளிவாய், சிந்தித்து, சிக்கலைத் தீர்க்கலாம். தன்னைத் தேடி வந்த ஒரு பிரச்னையை, இயேசு சமாளித்த அழகை இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் இவர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். ஏன்? இயேசுவை எப்படியும் மடக்கி, அடக்கி விடலாம் என்ற கற்பனையில் அவர்கள் இயேசுவுக்கு விடுத்த சவால்கள், அவரிடமிருந்து அற்புதமான சொற்களை, செயல்களை வெளிக் கொணர்ந்தன.
சென்ற ஞாயிறு நாம் சிந்தித்த காணாமற்போன மகன் உவமை இப்படிப்பட்ட ஒரு சவாலுக்குப் பதிலாகச் சொல்லப்பட்ட உவமை. பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே என்று முணுமுணுத்த பரிசேயர்களுக்குப பதில் சொல்ல, காணமற்போன ஆடு, காணமற்போன காசு, காணமற்போன மகன் என்ற அழகான மூன்று உவமைகளைத் தந்தார்.
இந்த ஞாயிறு கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தியிலும், இயேசுவுக்குச் சவாலாக பரிசேயரும், மறைநூல் அறிஞரும் செயல்படுகின்றனர். இம்முறை, இயேசு எதையும் போதிக்கவில்லை. மௌனம் காத்தார். ஓரிரு வரிகளே பேசினார். இயேசுவின் இச்செயல், ஓர் அற்புதமான பாடமாகிறது... அவர்களுக்கும், நமக்கும்.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் ஒரு விடியற்காலைப் பொழுதைச் சித்திரிக்கின்றன (யோவான் 8:2-3). நம்மில் பலர், காலையில் எழுந்ததும், கோவிலுக்குப் போவது, யோகாசனம் செய்வது, அல்லது உடற்பயிற்சிக்காக நடப்பது, ஒரு கப் காப்பியை வைத்துக்கொண்டு செய்தித்தாளைப் படிப்பது.... என அமைதியான செயல்களிலேயே காலைப்பொழுதைச் செலவழிப்போம். அவ்வேளையில், மனதைக் கஷ்டப்படுத்தும், கோபப்படுத்தும் செயல்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை.
இயேசுவும் அதைத்தான் செய்தார். முந்திய இரவு ஒலிவ மலைக்குச் சென்ற இயேசு, பொழுது விடிந்ததும், கோவிலுக்குத் திரும்பினார் என்று, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் சொல்கின்றன. எதற்காக? இரவு முழுவதும் செபத்தில் தான் சந்தித்த தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்ய, அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
அந்த அமைதியானச் சூழலில், புயல் ஒன்று இயேசுவை நெருங்கியது. மறை நூல் அறிஞர், பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தது அந்த கும்பல். விடிந்ததும், ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தனர் என்றால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும், அடக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களது சதிக்குப் பயன்படுத்திய பகடைக்காய், ஒரு பெண்.

உடலளவில் அந்தப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஓர் ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இழுத்துவரப்பட்டதாக நற்செய்தி சொல்லவில்லை. பரிசேயரும், மறைநூல் அறிஞரும், தங்கள் ஆணவ விளையாட்டில், அந்தப் பெண்ணை மட்டும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த, இழுத்து வந்திருக்கிறார்கள். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.

இன்னொரு மனிதரை சொந்த நலனுக்காக பயன்படுத்துவதை விட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆழமாய் அலசிப்பார்த்தால், பாவங்கள் என்று நாம் பட்டியலிடும் பல செயல்களில், இறுதியில், இந்த உண்மை ஒன்றே, பின்னணியில் இருக்கும்... மற்றொரு மனிதப்பிறவியை நம் சுயநலத்திற்குப் பயன்படுத்துவது, பலியிடுவது மிகப்பெரிய பாவம்.
பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும் குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதில்கூட நாம் கவனமாக இருக்கவேண்டும்; தேவைக்கதிகமாய் பொருட்களைச் சேர்ப்பதும், பயன்படுத்துவதும் அதன் விளைவாக நம் சுற்றுச்சூழலை சீரழிப்பதும் அண்மைக் காலங்களில் பாவங்கள் என்று பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம். நம் சுயநலத்தின் வெளிப்பாடாக வளர்ந்துள்ள 'தூக்கியெறியும் கலாச்சார'த்தைக் குறித்தும், இயற்கைச் சீரழிவைக் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல நேரங்களில் பேசி, நம் மனசாட்சியைத் தட்டியெழுப்பி வருகிறார். 'இறைவா உமக்குப் புகழ்' என்ற திருமடலிலும் இக்கருத்தை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.
பொருட்களையும், இயற்கையையும் பயன்படுத்துவதிலேயே இவ்வளவு கவனம் தேவை என்று சொல்லும்போது, மனிதர்களைப் பயன்படுத்துவதில் எவ்வளவு கவனம் தேவைப்படுகிறது?... ‘மனிதரைப் பயன்படுத்துதல் என்ற சொற்றொடரே அவலமான கருத்து. மனிதர்களோடு பழகுவது, வாழ்வது என்பதுதான் நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள்... ஆனால், நாம் வாழும் இன்றைய உலகில் பொருட்களும், மிருகங்களும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். செல்லப் பிராணிகளுடன் பழகுவது, வாழ்வது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் என்ன, பயிற்சிகள் என்ன... இவ்வளவு முன்னேறியுள்ள நாம், மனிதர்களை, பொருட்களைவிட, மிருகங்களைவிட கீழ்த்தரமாக பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் நம் சமுதாயம் இன்று இழைத்துவரும் பாவம். இதுதான் அன்று இயேசுவுக்கு முன் நடந்தது.

விபச்சாரத்தில் ஒரு பெண்ணைக் கையும் மெய்யுமாகப் பிடித்துவந்ததாகக் கூறுகின்றனர், பரிசேயரும், மறைநூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே! அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம்? இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதற்கு இது ஒரு வாய்ப்பு. அந்த பெண்ணோ, சட்டங்களோகூட முக்கியமில்லை.

நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு நாடகம் என் நினைவுக்கு வருகிறது. அந்த நாடகத்தை எழுதியவர், இயேசுவை ஒரு புரட்சியாளராகவே அதிகம் காட்டினார். அந்த நாடகத்தில், இன்றைய நற்செய்தி நிகழ்வு, ஒரு காட்சியாகக் காட்டப்பட்டது. நாடக ஆசிரியர் வடித்திருந்தக் காட்சியில், இயேசு, பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்பார். "இந்தப் பெண்ணை, விபச்சாரத்தில், கையும் மெய்யுமாகப் பிடித்ததாகச் சொல்கிறீர்களே. அப்படியானால், அந்த ஆண் எங்கே?" என்று இயேசு கேட்க, அவர்கள் மௌனமாகிப் போவார்கள்.
இயேசுவின் இந்தக் கேள்வி, யோவான் நற்செய்தியில் கொடுக்கப்படவில்லை. உண்மைதான். ஆனால், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால், இயேசு, இப்படி ஒரு கேள்வியைக் கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார். அதிலும் முக்கியமாக, பரிசேயர்கள், கல்லால் எறியவேண்டும் என்ற சட்டத்தை இயேசுவுக்கு நினைவுபடுத்தியபோது, இக்கேள்வி கட்டாயம் அவருக்குள் எழுந்திருக்கும். மோசேயின் சட்டப்படி, விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (லேவியர் 20: 10) அப்படியிருக்க, அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றியமைத்து விட்டனர். இவ்விதம், ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்கள் விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார்: உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.  (யோவான் 8: 7)
இயேசுவுக்கு சவால்விட வந்திருந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி, எல்லாரும் போக வேண்டியதாயிற்று. ஆண் வர்க்கத்திற்கு, சிறப்பாக, பெண்களை, போகப்பொருளாக, அடிமைகளாக, பகடைக் காய்களாக நடத்தும் ஆண் வர்க்கத்திற்கு இயேசு கொடுக்கும் ஒரு சாட்டையடி இது... உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் (யோவான் 8: 7)
இயேசு இந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு முன்னும் பின்னும் தரையில் எழுதிக் கொண்டிருந்தார் என்று நற்செய்தி கூறுகிறது. இயேசு அங்கு என்ன எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சிலர் கொடுக்கும் விளக்கம் இது. அந்தப் பெண்ணை நோக்கி கல்லெறிய நினைத்த ஒவ்வொருவரின் பாவங்களையும் அவர் மண்ணில் எழுதினார் என்பது அந்த விளக்கம். இந்த விளக்கமே தேவையில்லை. இயேசுவைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், அந்த பரிசேயர்கள். எனவே அவரது நேர்மையான, தீர்மானமான அந்தக் கூற்றுக்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை. அந்த இடத்தை விட்டு தப்பித்துக் கொள்கின்றனர். இயேசுவுக்கு சவால்விட வந்திருந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி, எல்லாரும் போக வேண்டியதாயிற்று. இறுதியாக, அப்பெண் மட்டும் தனித்து விடப்படுகிறார். இயேசு அந்தப் பெண்ணை மன்னித்து அனுப்புகிறார். இயேசு அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியபோது, "இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி அனுப்புகிறார். அதை அவர் சொல்லவில்லை என்றாலும், இப்படி ஒரு சம்பவத்திற்குப் பிறகு, அப்பெண், முற்றிலும் மாறிய ஒரு வாழ்வை ஆரம்பித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

கருணையோடு நடந்த இச்சம்பவம் ஆதித் திருச்சபையில் பல சங்கடங்களை விளைத்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இச்சம்பவம் யோவான் நற்செய்தியிலிருந்து சில நூற்றாண்டுகள் நீக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆதித் திருச்சபையின் சங்கடம் தான் என்ன?
இயேசுவின் இத்தகையக் கருணை, பாவங்கள் பெருகுவதற்கு வழியாகிவிடும் என்ற கண்ணோட்டமே இச்சங்கடத்தை உருவாக்கியது. இயேசுவின் இந்த மன்னிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், அவரது இரக்கத்தை எப்போதும் பெறலாம் என்ற துணிவில் மக்கள் இன்னும் அதிகம் பாவத்தில் விழக்கூடும் என்று எண்ணத் தோன்றும்.

இது தேவையற்ற, காரணமற்ற பயம். கடவுள் எந்த நிபந்தனையும் இன்றி அன்பு செய்பவர் என்பதை ஆணித்தரமாய் சொல்லத்தானே இயேசு உலகிற்கு வந்தார். அதைச் சொல்லத்தானே காணமற்போன மகன் உவமையைச் சொன்னார். அதே நிபந்தனையற்ற அன்புக்கு, இந்த மன்னிப்பின் வழியே, செயல் வடிவம் கொடுத்தார் இயேசு. நீதியை விட, இரக்கத்தை விரும்பும் கடவுளைத்தான் விவிலியம், அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது.
குற்றங்களைத் தண்டிக்கும் கடவுளோடு வாழ்வது எளிது. குற்றங்களுக்குத் தண்டனைகள் கிடைக்கும் என்று தெரிந்து, அந்த பயத்தில் குற்றம் புரியாமல் வாழ்வது சுதந்திரமான, முழுமையான வாழ்வு அல்ல. ஆனால், எந்நேரமும் எந்நிலையிலும் அன்பு ஒன்றையே வாரி, வாரி, வழங்கும் ஒரு கடவுளோடு வாழ்வது, பெரிய சவால். அந்த அன்புள்ளத்தை துன்பப்படுத்தக் கூடாதென்று நல்வழியில் வாழ முயல்வது தான் சுதந்திரமான, முழுமையான வாழ்வு. இந்த வாழ்வைத்தான் கடவுள் விரும்புகிறார். இயேசுவும் விரும்புகிறார்.
2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி தலைமைப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 17, ஞாயிறன்று புனித பேதுரு வளாகத்தில் முதல் முறையாக நண்பகல் மூவேளை செப உரையை வழங்க வந்தார். அன்று, தவக்காலத்தின் 5ம் ஞாயிறு என்பதால், இன்று நாம் சிந்திக்கும் இந்நிகழ்வு, திருத்தந்தை வழங்கிய முதல் மூவேளை உரையின் மையமாக அமைந்தது. அவர் வழங்கிய உரையில், மன்னிப்பை பற்றிப் பேசியத் திருத்தந்தை, இறுதியில் கூறிய வார்த்தைகள் இதோ:
"விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசு, சாவுக்குத் தீர்ப்பிட வேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் விரும்பினர். அந்த மரண தண்டனையிலிருந்து இயேசு அப்பெண்ணைக் காப்பாற்றினார். அவரிடமிருந்து எந்த ஒரு கடுமையான சொல்லும் வரவில்லை; மாறாக, இரக்கம், அன்பு இவையே அவரிடமிருந்து வெளிப்பட்டன.
இறைவனின் இரக்கத்தை, பொறுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா? அவரது பொறுமைக்கு அளவே இல்லை. இதை நாம் மறந்துவிடக் கூடாது: மன்னிப்பதில் கடவுள் சலிப்படைவதேயில்லை. மன்னிப்பு கேட்பதில் நாம்தான் சலிப்படைந்து விடுகிறோம்."

சலிப்பின்றி மன்னிப்பவரே இறைவன் என்ற உண்மையை, சலிப்பின்றி மீண்டும், மீண்டும் நினைவுறுத்திவரும் திருத்தந்தையின் சொற்கள், நம் உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டட்டும். இரக்கத்தின் யூபிலி ஆண்டில், சோர்வின்றி, சலிப்பின்றி இறைவனின் இரக்கத்தை நாடி, மீண்டும், மீண்டும் வருவோம். நிபந்தனையற்ற அன்பு நம் வாழ்வில் ஆற்றக்கூடிய மாற்றங்களும், புதுமைகளும், உணர்ந்து பார்க்க வேண்டியவை. இறைவனின் நிபந்தனையற்ற அன்பை சவைத்துப் பார்க்க முயல்வோம்.

No comments:

Post a Comment