Pope
Francis leads Good Friday rite at Colosseum in Rome
The Prayer
recited by the Holy Father at the end of the Way of the Cross, conducted in the
Colosseum, Rome ,
on Good Friday – March 25, 2016
O Cross
of Christ, symbol of divine love and of human injustice, icon of the supreme
sacrifice for love and of boundless selfishness even unto madness, instrument
of death and the way of resurrection, sign of obedience and emblem of betrayal,
the gallows of persecution and the banner of victory.
O Cross
of Christ, today too we see you raised up in our sisters and brothers killed,
burned alive, throats slit and decapitated by barbarous blades amid cowardly
silence.
O Cross
of Christ, today too we see you in the faces of children, of women and people,
worn out and fearful, who flee from war and violence and who often only find
death and many Pilates who wash their hands.
O Cross
of Christ, today too we see you in those filled with knowledge and not with the
spirit, scholars of death and not of life, who instead of teaching mercy and
life, threaten with punishment and death, and who condemn the just.
O Cross
of Christ, today too we see you in unfaithful ministers who, instead of
stripping themselves of their own vain ambitions, divest even the innocent of
their dignity.
O Cross
of Christ, today too we see you in the hardened hearts of those who easily
judge others, with hearts ready to condemn even to the point of stoning,
without ever recognizing their own sins and faults.
O Cross
of Christ, today too we see you in expressions of fundamentalism and in
terrorist acts committed by followers of some religions which profane the name
of God and which use the holy name to justify their unprecedented violence.
O Cross
of Christ, today too we see you in those who wish to remove you from public
places and exclude you from public life, in the name of a pagan laicism or that
equality you yourself taught us.
O Cross
of Christ, today too we see you in the powerful and in arms dealers who feed
the cauldron of war with the innocent blood of our brothers and sisters.
O Cross
of Christ, today too we see you in traitors who, for thirty pieces of silver,
would consign anyone to death.
O Cross
of Christ, today too we see you in thieves and corrupt officials who, instead
of safeguarding the common good and morals, sell themselves in the despicable
market-place of immorality.
O Cross
of Christ, today too we see you in the foolish who build warehouses to store up
treasures that perish, leaving Lazarus to die of hunger at their doorsteps.
O Cross
of Christ, today too we see you in the destroyers of our “common home”, who by
their selfishness ruin the future of coming generations.
O Cross
of Christ, today too we see you in the elderly who have been abandoned by their
families, in the disabled and in children starving and cast-off by our
egotistical and hypocritical society.
O Cross
of Christ, today too we see you in the Mediterranean and Aegean Seas which have
become insatiable cemeteries, reflections of our indifferent and anesthetized
conscience.
O Cross
of Christ, image of love without end and way of the Resurrection, today too we
see you in noble and upright persons who do good without seeking praise or
admiration from others.
O Cross
of Christ, today too we see you in ministers who are faithful and humble, who
illuminate the darkness of our lives like candles that burn freely in order to
brighten the lives of the least among us.
O Cross
of Christ, today too we see you in the faces of consecrated women and men –
good Samaritans – who have left everything to bind up, in evangelical silence,
the wounds of poverty and injustice.
O Cross
of Christ, today too we see you in the merciful who have found in mercy the
greatest expression of justice and faith.
O Cross
of Christ, today too we see you in simple men and women who live their faith
joyfully day in and day out, in filial observance of your commandments.
O Cross
of Christ, today too we see you in the contrite, who in the depths of the
misery of their sins, are able to cry out: Lord, remember me in your kingdom!
O Cross
of Christ, today too we see you in the blessed and the saints who know how to
cross the dark night of faith without ever losing trust in you and without
claiming to understand your mysterious silence.
O Cross
of Christ, today too we see you in families that live their vocation of married
life in fidelity and fruitfulness.
O Cross
of Christ, today too we see you in volunteers who generously assist those in
need and the downtrodden.
O Cross
of Christ, today too we see you in those persecuted for their faith who, amid
their suffering, continue to offer an authentic witness to Jesus and the
Gospel.
O Cross
of Christ, today too we see you in those who dream, those with the heart of a
child, who work to make the world a better place, ever more human and just.
In you,
Holy Cross, we see God who loves even to the end, and we see the hatred of
those who want to dominate, that hatred which blinds the minds and hearts of
those who prefer darkness to light.
O Cross
of Christ, Arc of Noah that saved humanity from the flood of sin, save us from
evil and from the Evil One. O Throne of
David and seal of the divine and eternal Covenant, awaken us from the seduction
of vanity! O cry of love, inspire in us
a desire for God, for goodness and for light.
O Cross
of Christ, teach us that the rising of the sun is more powerful than the
darkness of night. O Cross of Christ,
teach us that the apparent victory of evil vanishes before the empty tomb and
before the certainty of the Resurrection and the love of God which nothing can
defeat, obscure or weaken. Amen!
Pope
Francis praying at the end of the Way of the Cross
உரோம்
நகரின் கொலோசேயம் திடலில் மார்ச் 25, புனித வெள்ளியன்று நிகழ்ந்த சிலுவைப்பாதையின்
இறுதியில், திருத்தந்தை கூறிய செபத்தின் (பெரும் பகுதி) தமிழாக்கம்:
ஓ
கிறிஸ்துவின் சிலுவையே, இறையன்பிற்கும், மனித அநீதிக்கும் அடையாளமே, உன்னதத் தியாகத்திற்கும், கட்டுக்கடங்காத
சுயநலத்திற்கும் குறியீடே, மரணத்திற்கும், உயிர்ப்பிற்கும் கருவியே, கீழ்ப்படிதலுக்கும், காட்டிக்கொடுத்தலுக்கும் அடையாளமே,
இன்று
எங்கள் சகோதர, சகோதரிகள் கொல்லப்படுவதிலும், உயிரோடு எரிக்கப்படுவதிலும், அரக்கத்தனமான கத்திகளால் தலையும், கழுத்தும் வெட்டப்படுதலிலும், இவையனைத்தையும் கண்டு அச்சம் கொண்டு மௌனம் காப்பதிலும், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, நீ
உயர்த்தப்படுவதைக் காண்கிறோம்.
போர், வன்முறை, இவற்றிலிருந்து தப்பியோடும் குழந்தைகள், பெண்கள், மக்கள், மீண்டும் தங்கள் மரணத்தைச் சந்திப்பதிலும், பல பிலாத்துகள் கரங்களைக் கழுவுவதிலும், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று
உன்னைக் காண்கிறோம்.
இரக்கத்தையும், வாழ்வையும் கற்றுத்தருவதற்குப் பதில், தண்டனை, மரணம் ஆகிய அச்சங்களை ஊட்டும் மரணத்தின்
அறிஞர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
தங்கள்
தற்பெருமைக் கனவுகளைக் களைவதற்குப் பதில், மாசற்றவர்களின்
மாண்பைக் களைந்துவிடும் நம்பிக்கைத் துரோகம் செய்யும் பணியாளர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று
உன்னைக் காண்கிறோம்.
.............
மாசற்ற
சகோதர, சகோதரிகளின் இரத்தத்தைக் கொண்டு, போர் என்ற சூளையின் தீயை, தொடர்ந்து
வளர்த்துவரும் சக்தி வாய்ந்தவர்கள், போர்க்கருவி வர்த்தகர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
வாசலில்
பசியுடன் கிடக்கும் லாசர்களை அலட்சியம் செய்துவிட்டு, தங்கள் செல்வங்களைக் குவிப்பதற்கு, களஞ்சியங்களை இடித்துக் கட்டும் மதியிழந்தவர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின்
சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
வருங்காலத்
தலைமுறையினரின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் வகையில், தங்கள் சுயநலத்தால் எங்கள் பொதுவான இல்லத்தை அழித்து வருவோரின்
வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
எங்கள்
அக்கறையற்ற, உணர்வு மழுங்கடிக்கப்பட்ட ஆன்மாக்களின் பிரதிபலிப்பாக, தீராதப்
பசிகொண்ட சமாதிக்ளாக மாறிவரும் மத்தியதரைக் கடல், மற்றும் ஐரோப்பியக் கடல்களின்
வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
மற்றவர்களின்
புகழையும், அங்கீகாரத்தையும் பெறுவதைப்பற்றி
கவலைப்படாமல், நல்லவற்றை செய்து, உயிர்ப்பிற்கு வழியாய் அமைவோரின் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
பிறரது
இருள்போக்கும் மெழுகுதிரிகளாய் தங்களை எரித்துக்கொண்டு, பணிவுடன் செயலாற்றும் பணியாளர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
நீதி, நம்பிக்கை இவற்றின் வெளிப்பாடாக, இரக்கத்தைக் கண்டுகொண்ட இரக்கம் நிறைந்தோர் வடிவில், ஓ கிறிஸ்துவின்
சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
..........
திருமண
வாழ்வு என்ற அழைப்பில், பிரமாணிக்கமாய் வாழ்வோரின் குடும்பங்களில்,
ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
தங்கள்
கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்புற்றாலும், தொடர்ந்து
கிறிஸ்துவுக்கும், நற்செய்திக்கும் சாட்சிகளாய் வாழ்வோர்
வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
கனவு
காண்போர், குழந்தை மனம் கொண்டோர், இவ்வுலகை அதிகம் மனிதமுள்ளதாக, நீதியுள்ளதாக மாற்றுவதற்கு உழைப்போர் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
கிறிஸ்துவின்
சிலுவையே, பாவம் என்ற கடலின் வெள்ளப்பெருக்கிலிருந்து
எம்மைக் காக்கும் நோவாவின் பெட்டகமே,
எங்களை, தீயோனிடமிருந்தும்,
தீமைகள் அனைத்திலுமிருந்தும்
காத்தருளும்.
கிறிஸ்துவின்
சிலுவையே, இரவின் இருளைவிட, உதிக்கும் ஞாயிறு சக்தி வாய்ந்ததெனச் சொல்லித் தா!
காலியான
கல்லறை முன்பு, உயிர்ப்பு நிச்சயம் என்ற உண்மைக்கு
முன்பு, இறைவனின் அன்பிற்கு முன்பு, வெற்றி பெறுவதுபோல் தோன்றும் தீமை நிற்கமுடியாது என்பதை எங்களுக்குச்
சொல்லித் தா!
ஆமென்.
No comments:
Post a Comment