Peter jumps
into the water - by James Jacques Tissot
Easter – 3rd Sunday
P.S. – Post
Script. I am not sure about you, but more often I have read the P.S. in a
letter before the letter. And… guess what… I have found them more interesting
than the letter itself. Many of us think that P.S. is an after thought –
‘By-the-way’ or ‘Oh-I-forgot-to-tell-you’ stuff. But, I think it is more than
that. A P.S. usually springs a surprise. It is similar to the famous story of
‘Keep Your Fork… the Best is Yet to Come’. The story is about a senior lady or
a woman with a terminal illness who gave instructions to her Pastor about her
funeral. She told him that she wanted to be buried with a fork in her hand.
Naturally, the curious Pastor wanted to know why such a ‘strange’ request.
The
woman explained: “In all my years of attending church socials and potluck
dinners, I always remember that when the dishes of the main course were being
cleared, someone would inevitably lean over and say, 'Keep your fork.' It was
my favourite part because I knew that something better was coming...like
velvety chocolate cake or deep-dish apple pie. Something wonderful, and with
substance! So, I just want people to see me there in that casket with a fork in
my hand and I want them to wonder ‘What's with the fork?’ Then I want you to
tell them: ‘Keep your fork... the best is yet to come.’” http://blessingsforlife.com
The
pastor's eyes welled up with tears of joy as he hugged the woman good-bye. He
had learnt one of the best imageries for after-life from the dying woman. The
dessert served at dinners is not an after thought, but a well planned surprise.
I consider a P.S. to be somewhat close to this.
In a novel,
or in a movie the final pages or the final moments are usually described as the
climax. In John’s Gospel we reach a climax in the 20th chapter and then there
is a P.S. in the form of the 21st chapter – one of the post-resurrection
apparitions of Jesus by the Sea
of Tibe'ri -as. Keeping
aside all the scriptural investigations about who the author of this chapter
might be (whether John himself or one of his close disciples etc.), we are
thankful to God for this lovely P.S.
We know
well that the whole Gospel of John is not simply a diary of the events and
sayings of Jesus, but more of a theological treatise. In this event, by the Sea of Tibe'ri -as,
we come across one such theological treatises of John.
Chapter 21
of John begins with a list of those who are taking part in this event. One of
them is Thomas called the Twin. We are naturally reminded of the Gospel we
heard last Sunday – how the Risen Christ ‘healed’ the ‘doubting Thomas’. In
today’s Gospel too we come across another healing session – the Risen Christ
healing ‘Peter the coward’, who denied Jesus. Last week we reflected that not
only Thomas, but all the disciples doubted the Resurrection. In the same way,
we can say that not only Peter but almost all the disciples were cowards and,
given a chance, they too would have denied Jesus. Thomas and Peter are only
representatives of the whole group. Hence, it was the first mission of Jesus to
heal the whole group of their fears and doubts.
The
disciples, locked up in the upper room for fear of … almost everyone, including
themselves – probably wanted to give up and get back to their old trade –
fishing! When Peter proposed this, all of them agreed. It was almost like a
full cycle – back to square one! These were simple fishermen and Jesus called
them with a promise that henceforth they would be catching men. (Lk.5:
10). It was true that during the last three years they had learnt this ‘new
trade’ of catching people to some extent… but always with Jesus. Now that he
was gone, they did not dare think of catching people. On the other hand, the
disciples feared that the people were trying to catch them and hand them over
to the Romans. Hence, they had to be in hiding. They were convinced that
without Jesus it was useless to linger on in that life. Hence, they decided to
get back to their old trade which they knew well – to catch fish!
But,
returning to their old ways did not prove to be easy. They went out and got
into the boat; but that night they caught nothing, (John 21:3) says the
evangelist. As fishermen, they have had many a night when they caught nothing.
But on that night in Tibe'ri-as when they caught nothing, their minds,
inadvertently went to a similar night they had spent at the lake of Gennes'aret
when they caught nothing throughout the night. But, their disappointment was
turned into unbelievable joy over the rich haul of fish in the morning (unusual
time for fishing, indeed). This was possible, since they had ventured into the
deep and had let down their nets at the bidding of one stranger called Jesus of
Nazareth. (Luke 5: 4-11)
A similar experience awaits them in Tibe'ri-as
too. They are asked to let down the nets in the morning and when they obeyed,
they caught 153 large fish! This time, the disciples recognize the person
asking them to let down their nets at dawn!
Juxtaposing these similar-looking events at Gennes'aret
and Tibe'ri-as, we learn many things about ourselves as well as about Peter.
When the great haul of fish was seen by Peter in Gennes'aret, he fell down at
Jesus' knees, saying, "Depart from me, for I am a sinful man, O
Lord." (Lk 5: 8). At the Sea
of Tibe'ri -as when a
similar miracle occurred, Peter sprang into the sea and reached Jesus.
At Gennes'aret, we are not sure whether Peter
was aware of what he was saying – about his being sinful as well as about
asking Jesus to leave him. Now, at Tibe'ri-as, Peter was very much aware that
he had sinned – sinned greatly against Jesus and yet he did not want Jesus to
leave him, but, rather he went seeking Jesus.
Sometimes, when we are surrounded by abundant,
unconditional love, we can either surrender ourselves to this undeserved love or,
we can close in on ourselves feeling very unworthy and wanting that
overpowering love to leave us alone. Thus, left alone, we wallow in self-pity.
This is what happened to Peter at Gennes'aret, during the first meeting with
Christ. Fortunately for Peter, he was willing to enter the school of love that
Jesus had invited him in. Hence, after three years, here he was at Tibe'ri-as,
plunging into the sea to reach Jesus, knowing full well that he had sinned
against that very same person.
Once Peter took that initiative, then Jesus
took over. Peter was restored to his original position as the leader of the
group. The one lesson we can learn from Peter in today’s episode at the Sea of Tibe'ri -as
is this: whatever we are, wherever we are, we can ALWAYS get back to God,
to Christ.
This was one of the favourite themes expressed
by our Holy Father Francis in many of his homilies. Pope Francis has said: “Never
forget this: The Lord never gets tired of forgiving us. It is we, who get tired
of asking for forgiveness.”
உயிர்ப்புக் காலம் – 3ம் ஞாயிறு
இளைஞர்
ஒருவர் தன் மாத ஊதியத்திலிருந்து ஒரு கணிசமானத் தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கிவைப்பார்.
மாதத்தின் இறுதி ஞாயிறன்று அருகில் உள்ள சேரியில் வாழும் சில சிறுவர்களை அழைத்துக்கொண்டு
நாள் முழுவதும் பல சுற்றுலா இடங்களுக்குச் செல்வார். மாலையில் ஒரு நல்ல உணவகத்திற்குச்
சென்று,
அச்சிறுவர்கள் விரும்பிய
உணவை வாங்கி, அனைவரும்
சேர்ந்து உண்பர். ஒரு நாள் அவர்கள் அவ்விதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அச்சிறுவர்களில் ஒருவன் இளைஞரை
நோக்கி,"
அண்ணா, உங்க பேர் என்ன, ஜீசஸா?" என்று கேட்டான்.
முன்பின்
அறிமுகம் இல்லாத ஒருவர் நாள் முழுவதும் தங்களை மகிழ்வில் நிறைத்ததைக் கண்ட அந்தச் சிறுவனின்
மனதில் எழுந்த அந்தச் சந்தேகம், இயேசுவுடன் மூன்றாண்டுகள் வாழ்ந்த
சீடர்கள் மனதிலும் எழுந்தது. ஆனால், அவர்களால் கேட்க முடியவில்லை. "சீடர்களுள்
எவரும், 'நீர் யார்?' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்." (யோவான் 21:12) என்று இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரு 'நாவலை' வாசிக்கும்போது அல்லது ஒரு திரைப்படத்தைப்
பார்க்கும்போது இறுதி பக்கங்களில், அல்லது, இறுதி மணித்துளிகளில் வரும் 'கிளைமாக்ஸ்' நமது கவனத்தை அதிகம் ஈர்க்கும். நாவல் முழுவதும் நம் மனதில் தோன்றிய
பல கேள்விகளுக்கு இறுதிப் பகுதியில் பதில்கள் கிடைக்கும். இன்று நமது ஞாயிறு வழிபாட்டில்
வாசிக்கும் பகுதி, யோவான் நற்செய்தியில் வரும் உச்சகட்டம்
- 'கிளைமாக்ஸ்' - என்று சொல்லலாம். உண்மையிலேயே, இது ஒரு பிற்சேர்க்கைதான்.
சில வேளைகளில்
நாம் கடிதங்கள் எழுதும்போது இறுதியில் பி.கு. அதாவது பின்குறிப்பு என்று எழுதி, "ஓ, சொல்ல மறந்துட்டேனே..." என்று
ஒரு மகிழ்வான செய்தியைச் சொல்வோமே, அவ்விதம் இந்த இறுதிப் பிரிவை நாம்
எண்ணி பார்க்கலாம்.
இந்தப்
பிற்சேர்க்கையை நற்செய்தியாளர் யோவானோ அல்லது அவருடைய சீடர்களில் ஒருவரோ இணைத்துள்ளார்
என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. ஆய்வுக்கணிப்புக்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், 21ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வு ஆழமான உண்மைகளை உள்ளத்தில்
விதைக்கின்றது.
யோவான்
தன் நற்செய்தியை, இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவாக எழுதாமல், ஓர் இறையியல் பாடமாக அளித்துள்ளார். இயேசுவின் கூற்றுகள், இயேசுவின் செயல்கள் அனைத்தும் யோவான் நற்செய்தியில் பல இறையியல்
எண்ணங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்திப் பகுதியை ஒரு காட்சித் தியானமாக, ஓர் இறையியல் பாடமாக நாம் அணுகுவோம்.
இந்நிகழ்வின்
ஆரம்பத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த
நத்தனியேல் என்று யோவான் தன் அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். திதிம் என்ற தோமா என்று ஆசிரியர்
குறிப்பிட்டதும், நம்மையும் அறியாமல் நமது நினைவில் சென்ற
வாரம் ஞாயிறன்று சொல்லப்பட்ட நிகழ்வு நிழலாடுகிறது. அந்த நிகழ்வின் நாயகன் தோமா - சந்தேகத்
தோமா. சந்தேகத்துடன் போராடி புண்பட்டிருந்த தோமாவை உயிர்த்த இயேசு சந்தித்து, குணமாக்கியதை சென்றவாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் ஒரு தொடர்ச்சிபோல, மற்றொரு குணமாக்குதல் நிகழ்வு இன்று சொல்லப்படுகிறது. இயேசுவைத்
தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பேதுருவை, உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை இன்றைய
நற்செய்தி சொல்கிறது.
கதாப்பாத்திரங்களின்
அறிமுகத்திற்குப் பின், இன்றைய நற்செய்தி சொல்வது இதுதான்:
"அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு
மீன் ஒன்றும் கிடைக்கவில்லை." (யோவான் 21: 3)
யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து,
மேல் மாடியில் பூட்டிய
அறைக்குள் பதுங்கியிருந்த சீடர்கள், தங்கள் பழைய வாழ்வுக்கேத் திரும்பிவிடலாம்
என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, அவர்களது எண்ணங்களுக்கு ஒரு வடிவம் தந்ததுபோல் ஒலித்தது, பேதுருவிடமிருந்து வந்த யோசனை: "நான் மீன் பிடிக்கப்
போகிறேன்".
மீன்
பிடிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த எளிய மனிதர்களை, "இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மத்.
4:19; மாற். 1:17; லூக். 5:10) என்று உறுதி அளித்து இயேசு அழைத்தார். அந்த அழைப்பைச்
சரியாகப் புரிந்தும், புரியாமலும், தங்களுக்குப் பழக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டு, ஏதோ ஒரு துணிச்சலுடன் இயேசுவின் அழைப்பை ஏற்று அவரைப் பின் சென்றவர்கள்
சீடர்கள். இயேசு அவர்களுடன் இருந்தவரை, மக்களைப் பிடிக்கும் தொழிலை ஓரளவு
புரிந்துகொண்டனர். ஆனால், கல்வாரியில் அவர் சிலுவையில் இறந்தபின்
நிலைமை வெகுவாக மாறிவிட்டது. சீடர்கள் மக்களைப் பிடிப்பதற்குப் பதில், மக்கள் இவர்களைப் பிடித்து உரோமையர்களிடம் ஒப்படைத்து விடுவார்களோ
என்ற பயத்தில்தான் அந்தச் சீடர்கள் பதுங்கி வாழ்ந்தனர். இயேசுவுடன் வாழ்ந்தபோது எப்போதும்
மக்கள் கூட்டம் சூழ எதோ கனவுலகில் வாழ்ந்ததுபோல் இருந்தவர்களுக்கு, கடந்த மூன்று நாட்கள் கசப்பான பாடங்களைச் சொல்லித் தந்தன. எனவே, மக்களைப் பிடிக்கும் கனவுகளையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மீண்டும் பழையபடி மீன்பிடிக்கும் தொழிலுக்கேத் திரும்பலாம் என்று
தீர்மானித்தனர் சீடர்கள். பேதுருவின் அழைப்பு வந்ததுதான் தாமதம்... "நாங்களும்
உம்மோடு வருகிறோம்" என்று அனைவரும் கிளம்பினர். கடந்த மூன்றாண்டுகள் இயேசுவுடன்
அவர்கள் வாழ்ந்த அற்புதமான வாழ்வு இனி திரும்பப் போவதில்லை என்ற தீர்மானத்தில், பழைய பாதுகாப்பான வாழ்வைத் தேடிச்செல்லும் மீனவர்களாக அவர்கள் மாறிவிட்டனர்.
அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்திப்பது ஏமாற்றம். இரவு முழுவதும் முயன்றும், அவர்களுக்கு 'மீன் ஒன்றும் கிடைக்கவில்லை' (21: 3).
மீன்பிடித்
தொழிலில் ஒன்றும் கிடைக்காமல் போன பல இரவுகளைச் சந்தித்தவர்கள் இந்தச் சீடர்கள். இருந்தாலும், அன்று திபேரியக் கடலில் இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும், ஒன்றும் கிடைக்காமல் போனது
அவர்கள் மனதில் கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்தியிருக்கும்.
அந்த நிகழ்வுதானே அவர்கள் வாழ்வை முற்றிலும் மாற்றிய நிகழ்வு! லூக்கா 5ம் பிரிவில்
(5:4-11) சொல்லப்பட்டுள்ள அந்த நிகழ்விலும் அவர்கள் இரவெல்லாம் உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை.
அவர்கள் வாழ்வில் அடிக்கடிச் சந்தித்துப் பழகிப்போன அந்த ஏமாற்றத்தை அவர்கள் மறக்க
முடியாத ஓர் அனுபவமாக இயேசு அன்று மாற்றினார். எனவேதான், இந்த இரவிலும் அந்த நாள் நினைவு அவர்களுக்கு மீண்டும் எழுகிறது.
இயேசுவின்
மரணம் என்ற பெரும் எமாற்றத்திற்குப் பின், தங்கள் பழைய வாழ்வைத் தொடரலாம்
என்று எண்ணியவர்களுக்கு, ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. அந்த
ஏமாற்றம் மீண்டும் அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட ஒரு மாற்றமாக அமைந்தது. கெனசரேத்து
ஏரியில் நிகழ்ந்ததைப்போலவே மீண்டும் ஒருமுறை திபேரியக் கடலில் நிகழ்ந்தது. இரவு முழுவதும்
உழைத்துக் காணாத பலனை விடிந்ததும் இயேசுவின் வடிவில் அவர்கள் கண்டனர். 153 பெரிய மீன்கள்
பிடிபட்டதாக நற்செய்தியாளர் கூறுகிறார். (யோவான் 21:11)
கெனசரேத்து
ஏரியிலும், திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளையும்
இணைத்துச் சிந்திக்கும்போது, சீமோன் பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே உருவான உறவில் ஒரு புதிய ஆழம் புலனாகிறது.
இவ்விரு நிகழ்வுகளின் இணைப்பு நம் வாழ்விலும் ஒரு சில பாடங்களைச் சொல்லித் தரக் காத்திருக்கிறது.
கெனசரேத்து
ஏரியில் கிடைத்த அபரிமிதமான மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, என்னைவிட்டுப் போய்விடும்" (லூக்கா 5: 8) என்று வேண்டினார். திபேரியக் கடலில்
அபரிமிதமான மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு தண்ணீரில் பாய்ந்து செல்கிறார்
இயேசுவை நோக்கி.
கெனசரேத்து
ஏரியில் தான் ஒரு பாவி என்பதை பேதுரு உணர்ந்து சொன்னாரா என்பதில் தெளிவில்லை, ஆனால், இயேசு தன்னை விட்டு விலகவேண்டும்
என்பதைத் தெளிவாக உணர்ந்தார்.
திபேரியக்
கடலில் மீன்பிடிக்க வருவதற்கு முன் தான் எவ்வளவு பெரிய பாவி என்பதை பேதுரு நன்கு உணர்ந்திருந்தார்.
இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுத்த பாவி தான் என்பதை நன்கு உணர்ந்திருந்த பேதுரு, இம்முறை இயேசுவை விட்டு விலகிச் செல்ல எண்ணாமல், இயேசுவை நோக்கிச் செல்கிறார்.
நம் வாழ்வைச்
சிறிது அலசிப் பார்ப்போம். பிரமிப்பூட்டும் ஓர் அற்புதம் நம்மைச் சூழும்போது, எதிர்பாராத அளவில் ஒரு பேரன்பு அனுபவம் நமக்கு ஏற்படும்போது, ஒன்று, அந்த அன்புக்கு முன் முற்றிலும்
சரணடைந்து மகிழ்வோம். அல்லது, அந்த அன்பைக் கண்டு பயந்து, நமக்குள் நாமே ஒளிந்து கொள்வோம். அந்த அன்பு நம்மை விட்டு விலகினால்
போதும் என்று எண்ணுவோம். அப்படி நமக்குள் நாமே ஒளியும்போது, கூடவே நம்மைப் பற்றிய தாழ்வான எண்ணங்களும் நம்மை நிரப்பி, சுய பரிதாபத்தில் (self-pity) நம்மை மூழ்கடிக்கும். கெனசரெத்து ஏரியில் பேதுரு பெற்றது இத்தகைய
அனுபவம். அங்குதான் இயேசுவின் அன்புப்பாடங்கள் அவருக்கு ஆரம்பமாயின.
இயேசுவுடன்
வாழ்ந்த மூன்று ஆண்டுகளில், பேதுரு கற்றுக்கொண்ட ஓர் உயர்ந்த பாடம், இதுதான். எந்த
நிலையில் தான் இருந்தாலும், இயேசுவிடம் தனக்குப் புகலிடம், தஞ்சம் உண்டு என்பதே அந்த அழகிய பாடம். இந்த ஒரு பாடத்தை நாம் கற்றுக்
கொண்டால் நமக்கு மீட்பு உண்டு, வாழ்வு உண்டு. எந்த நிலையில் நாம்
இருந்தாலும், இயேசுவை நாம் அணுகிச் செல்லமுடியும். தந்தையாம்
இறைவனில் நாம் தஞ்சம் அடையமுடியும். இரவெல்லாம் உழைத்தும், பயனேதும் காணாமல் களைத்து,
சலித்துப்போன சீடர்களுக்கு,
உயிர்த்த இயேசு, ஒரு தாயின் கனிவோடு, காலை உணவைத் தயாரித்து, பரிமாறினார். பசியிலும், களைப்பிலும் பரிதவிக்கும் மனிதகுலம்,
உயிர்த்த இயேசுவின் இரக்கத்தையும், அரவணைப்பையும் இரக்கத்தின்
சிறப்பு யூபிலி ஆண்டில் முழுமையாக உணரவேண்டும் என மன்றாடுவோம்.
No comments:
Post a Comment