Briton Rivière -
The Temptation in the Wilderness
First Sunday of Lent
Once
upon a time a certain mother was tempted to quit – quit her job, quit her
family, quit her parish, quit everything. When the parish priest suggested she
read about the temptation of Jesus, she said that she had already and that all
the demands which were made on her, presumably with God’s approval and even
connivance, were about the same as being asked to jump off the parapet of the
temple. How was she supposed to do everything in the family – bring in money,
cook the meals, clean the house, worry about the kids, help with the home work,
keep an eye on the TV the kids were watching – when no one else seemed worried
about these things? She loved her job and she loved her family, but she was
tired and all she wanted to do was quit. Well, said the parish priest, why not
go on strike. The woman thought about that and decided she would.
She
contracted a case of blue flu – too sick to go to her job, too sick to take
care of the house, too sick to help with homework, too sick to worry about the
kids, too sick to do anything but lie in bed and watch TV. The doctor was
summoned and suggested that she needed a long rest. You know what happened
then? The mother found that it was all BORING. The daytime soaps were
particularly BORING! So she improved rapidly, especially when everyone promised
that they would help (which they did, but often just made the mother’s task
more complicated). Temptations, said the mother, look a lot better before
you give into them than afterwards. (Homily from Fr Andrew M. Greeley)
Temptations
come in different shapes and sizes… mostly very attractive. Only after they
take root in our lives do they show their true colours. Every year, the First
Sunday of Lent invites us to think about temptations. Today’s first reading
talks of the temptation faced by our first parents. (Genesis 2: 7-9; 3: 1-7)
The Gospel talks of temptations faced by Jesus. (Matthew 4: 1-11) EVERY human
being was, is, and will be tempted. No exceptions. Not even Jesus.
Some years
back, I was discussing this topic with a friend of mine with a view to prepare
the homily. The moment he saw the theme ‘temptation’, he began singing
an old Tamil film song that talked of the hero being beset with trials - Sothanai
mel sothanai podhumadaa saami. (In Tamil we generally use the word
‘sothanai’ for trials and temptations.) The hero of the film pleads with God
not to send him more temptations.
Does God
send temptations? Every now and then we feel that way. When we are deep in
trouble, we raise our eyes to heaven and blurt out something like this: Oh,
God, why do you send me such trials and temptations? The opening verse of
today’s Gospel gives us some sort of clarity as to who sends us temptations. Then
Jesus was led up by the Spirit into the wilderness to be tempted by
the devil. (Mt. 4:1)
The devil
tempted Jesus and the Holy Spirit led Jesus into this situation, probably,
whispering words of encouragement and support. This seems to explain what we
experience! The devil is ever ready to tempt us. In such a situation, it is God
who stays close and seems to ‘permit’ the evil one to tempt us. This is the
theme of the Book of Job. This is what we see in the Garden of Eden.
If we go
through Chapters 2 and 3 of Genesis (Our first reading is taken from these
chapters), God created a lovely garden; planted all sorts of trees; placed Adam
(and later Eve) in that garden. Till then the story is a fairy tale. Then came
the commandment that they should not touch a particular tree in the garden. It
also looks odd that he created the serpent (we assume that this was the devil)
more cunning than other creatures (Gn. 3:1) and allowed the serpent to interact
with Eve. Why plant a tree in the first place and then forbid the First Parents
from even touching it?
If only God
had not planted that particular tree…
If only God
had not created the serpent more cunning…
If only God
had not allowed the serpent to interact with Eve…
If only…
Well, we are generous in our counsels to God.
Sometimes
we feel that we have better ideas than God as to how things should have been
done.
This is
exactly the beauty of God’s love. While he gave all the other living beings the
simple command – “Be fruitful and multiply…”, he gave the human beings the
special command of ‘making proper choices’. If only God had not given this
capacity to human beings, we would all be ‘programmed’ to follow God’s will to
the minutest detail. No
choices, no problems, no evil… No Original Sin… Wow! If the whole world functioned as a well-oiled
machine, there would be no factions, no frictions, no failures… But that would
be the world of the ‘robots’. God created human beings and not pre-programmed
robots. God placed human beings, including His beloved Son, in the midst of
trials and temptations. This is how I understand that ‘the Spirit led Jesus
to be tempted by the devil’!
All the
three synoptic gospels talk of this experience of Jesus. The temptation-event
in the life of Jesus is different from the other events. While there were quite
a few witnesses to the other events, Jesus was the only eyewitness to this
event. Why did Jesus, who shunned all publicity, tell His disciples about this
personal experience he had all alone in the desert? Why did the three
evangelists record this ‘struggle of Jesus’ for posterity? Perhaps Jesus wanted
us to learn quite a few lessons from this most common of all human experiences.
The
first lesson is
that temptations are very attractive. I am sure many of us have seen the Life
of Christ enacted on stage. In almost all these stage plays, the scene of the
devil tempting Jesus is a must. It would be a dramatic scene with the devil
usually clothed in black, with the face painted also in black, with protruding
teeth, with two horns and with a loud, scary voice entering the stage. If Satan
comes in this fashion, then all of us would flee the scene, or, drive away this
horrible creature from our sight. All of us know that Satan comes clothed in
light… And no wonder, for Satan himself masquerades as an angel of light.
(II Cor. 11:14)
All the
three temptations that Jesus faced were ‘good’ temptations, very logical. This
is the second lesson we need to learn about temptations – that they are
very logical. Jesus was hungry; therefore He was asked to turn the
stones into bread. Jesus wanted to begin his public ministry; therefore
He was asked to begin his ministry with a bang… by jumping off the pinnacle of
the Temple .
Jesus wanted to gain the whole world for His Father; therefore He was
asked to make compromises with the devil. All the three ‘therefore’s
sound very logical.
Satan also
uses an opening salvo to ‘hook’ Jesus into doing his bidding. “If you are
the Son of God, tell these stones to become bread.” “If you are the Son
of God, throw yourself down.” On the one hand, this looks like a
childish challenge. Kids throw such challenges at one another “Hey, Tom, if you
are so brave, why don’t you climb this tree? Why don’t you do this… and why
don’t you do that?” etc. But, a closer analysis of these ‘childish challenges’
also gives us a clue that the Satan was trying to define what the Son of God
must be like. If Jesus was the Son of God, He must use His powers to gratify
himself, to make a spectacular entry into human history, to make compromises with
evil forces even to the point of total surrender to them… In short, this is a
short cut… a path of least resistance… an unholy, compromising alliance.
Jesus tries
to respond to these challenges in his own style. He rewrites the definition of
the Son of God. If someone uses his / her special powers to satiate one’s own
needs or to seek popularity, he or she is a magician and not the Son of God.
Jesus, who refused to use his power to satiate his own hunger in the desert,
used his special powers to feed thousands in another ‘deserted’ place. Jesus,
who refused to surrender to the Satan with a strong rebuttal: “Away from me,
Satan!”, was willing to surrender to the Father while He was in his most
vulnerable moment on the Cross. These are some of the lessons Jesus tries to
teach us about temptations.
Are we
listening? Lenten season is a good time to learn from the desert-school of
Jesus!
தவக்காலம் முதல் ஞாயிறு
பல்வேறு
பிரச்சனைகளால் மனம் தளர்ந்துபோயிருந்த ஓர் இல்லத்தலைவி, பங்குத்தந்தையைச் சந்திக்கச் சென்றார். "சாமி, எல்லாத்தையும் விட்டுட்டு,
எங்கேயாவது, கண்காணாத இடத்துக்கு போயிடணும் போல இருக்கு" என்று அவர் ஆரம்பித்தார்.
வீட்டு வேலை, அலுவலக வேலை, பங்குக்கோவில் வேலை என்று அனைத்தையும் விட்டுவிட நினைத்தார் அவர்.
பல்வேறு ஆலோசனைகளுக்குப்பின், இறுதியாக,
"எல்லாவற்றையும்
விட்டுவிடுவதற்குப் பதில், ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தம்
(strike) செய்யுங்கள்" என்று, பங்குத்தந்தை
சொன்னது, இல்லத்தலைவிக்கு சரியென்று பட்டது.
வீட்டுக்குச்
சென்றவர், தனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி என்று சொல்லிவிட்டு, படுத்துக்கொண்டார். அலுவலகத்திலிருந்தும் விடுமுறை எடுத்துக்கொண்டார்.
அவரது நிலையைக் கண்ட கணவனும், பிள்ளைகளும், அவர் மீது தனி கவனம்
செலுத்த ஆரம்பித்தனர். வீட்டு வேலைகளை, அனைவரும், பகிர்ந்து செய்தனர். இரண்டு நாட்கள்
சென்றன. படுத்திருந்த வீட்டுத்தலைவிக்கு, 'போர்' அடித்தது. தொலைக்காட்சியில் மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்த்து, அலுத்துப் போனது.
உதவி செய்வதாக எண்ணி, கணவனும், பிள்ளைகளும் வேலைகள் செய்துவிட்டுச்
சென்றபின், சமையலறையைப் பார்த்த வீட்டுத்தலைவி, பயந்துபோனார். அவர்கள் செய்த வேலைகளை
மீண்டும் சரிசெய்ய, இன்னும் பல நாட்கள் ஆகுமே என்று பயந்தார்.
ஒரு வார
வேலை நிறுத்தம் என்ற தீர்மானத்தில் இருந்தவர், இரண்டே நாட்களில், மீண்டும், தன் பணிகளை
ஆரம்பித்தார். மூன்றாம் நாள், அவரைக் காண பங்குத்தந்தை சென்றபோது, அவர் வீட்டு வேலைகளை மும்முரமாய் செய்து கொண்டிருந்தார். ஆச்சரியத்துடன்
அவரைப் பார்த்த பங்குத்தந்தையிடம், "சாமி, எந்த ஒரு சோதனையும் வரும்போது அழகாகத்தான் இருக்கு. சோதனைக்கு இடம்
கொடுத்த பிறகுதான், அதனுடைய உண்மை உருவம் தெரியுது" என்று, தான் பெற்ற ஞானோதயத்தை,
வீட்டுத்தலைவி பகிர்ந்துகொண்டார்.
எந்த
ஒரு சோதனைக்கும், முகம் அழகாக இருக்கும், முதுகு, அழுக்காக, அருவருப்பாக
இருக்கும். நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். சோதனைகளைப் பற்றி நாம்
இன்னும் கூடுதலாக தெளிவுபெற, இந்த ஞாயிறு, நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.
ஒவ்வோர்
ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறு, நமக்கு வழங்கப்படும் மையக்கருத்து, 'சோதனை'. சோதனை பற்றி மறையுரையில் என்ன சொல்லலாம்
என்று மற்றொரு அருள்பணியாளரிடம் நான் கேட்டபோது, அவர் உடனே, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற திரைப்படப் பாடலை,
பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக
அமைந்துள்ள இப்பாடலில், சோதனைகளை அனுப்புவது கடவுள் என்ற
கருத்து மறைந்துள்ளது.
சோதனைகள்
கடவுளிடமிருந்து வருவதாக, நம்மில் பலர் எண்ணுகிறோம்; பேசுகிறோம்.
பிரச்சனைகள் நம்மைச் சூழும்போது, "கடவுளே, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?"
என்று, கடவுளிடம்
முறையிடுகிறோம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்னைச்
சோதிக்கிறாரோ, தெரியவில்லை" என்று மற்றவர்களிடம்
புலம்புகிறோம்.
சோதனைகள்
கடவுளிடமிருந்து வருகின்றனவா? என்ற கேள்விக்கு, இன்றைய நற்செய்தி பதில் தருகின்றது. "இயேசு அலகையினால்
சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்"
(மத். 4:1) என்ற அறிமுக வரிகளை ஆய்வு செய்யும்போது, இரு எண்ணங்கள் மனதில் எழுகின்றன. சோதனைகளைத் தருவது, அலகை. அச்சோதனைகளைச் சந்திப்பதற்கு, நம்மை அழைத்துச் செல்வது, தூய ஆவியார். சோதனைகளைச் சந்திக்க, கடவுள் நம்மை 'இழுத்துச் செல்வதில்லை',
'அழைத்துச் செல்கிறார்' என்பது, நாம் கவனிக்க வேண்டிய கருத்து.
இத்தகைய
அழைப்பை, இறைவன், நம் முதல் பெற்றோருக்கும் தந்தார்.
கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும்
(தொ.நூ. 2:9) கொண்ட ஒரு தோட்டத்தை, ஏதேனில்
உருவாக்கிய இறைவன், 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின்
கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது' (தொ.நூ. 3:3) என்று, முதல் பெற்றோரிடம் கட்டளையிட்டார். இதை நாம் வாசிக்கும்போது, மனதில், ஒரு நெருடல் எழுகிறது.
ஒரு மரத்தை
உருவாக்கி, பின்னர், அதைத் தொடக்கூடாது
என்று சொல்வதற்குப் பதில், அந்த மரத்தை அவர் படைக்காமலேயே
இருந்திருக்கலாமே! அதேபோல், பாம்பை, சூழ்ச்சிமிக்கதாய் படைக்காமல் இருந்திருக்கலாமே!
தான் படைத்த பெண்ணை, பாம்புடன் பேசவிடாமல் தடுத்திருக்கலாமே!
கடவுள்
இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே, என்ற
பாணியில், அவ்வப்போது சிந்திக்கும் நாம், சோதனைகள், பிரச்சனைகள்
என்று எதுவுமே இல்லாத ஓர் உலகை இறைவன் படைத்திருக்கலாமே! தீமை என்றால் என்னவென்றே அறியாதவண்ணம்
மனிதர்களை உருவாக்கியிருக்கலாமே! என்று, கடவுளுக்கு, அடுக்கடுக்காய் ஆலோசனைகள் தர,
முன்வருகிறோம்.
பிரச்சனைகள்
ஏதுமற்ற உலகில், தீமையே அறியாத, குறைகளே இல்லாத, படைப்பாக நாம் இருந்திருந்தால், இயந்திரகதியில் இயங்கும்
'ரோபோக்களை'ப்போல் (Robot) உலகில் உலவி வந்திருப்போம். நன்மையையும், தீமையையும், நம் முன் வைத்து, அவற்றில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும்,
சக்தியையும், இறைவன் நமக்கு வழங்குகிறார். இதுதான் அவர் தரும் அழைப்பு.
சோதனை
என்பது, ஆறறிவுள்ள மனிதர் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம். இதற்கு, இறைமகன் இயேசு உட்பட, யாரும் விதிவிலக்கு அல்ல. தன் பணி
வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன், தந்தையாம் இறைவனை, தனியே சந்திக்கச்
சென்றிருந்த இயேசுவை, அலகையும் சந்தித்தது. அலகை, இயேசுவுக்கு தந்த சோதனைகளும், அவற்றை, இயேசு சந்தித்த விதமும், நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன.
சோதனைகள்
அழகானவை என்பது முதல் பாடம். இயேசுவின் வாழ்வைச் சித்திரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கிறோம்.
அந்த நாடகங்களில் காட்டப்படும் சோதனைக் காட்சிகளில், சாத்தான், கருப்பு உடை
உடுத்தி, முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகளோடும்,
நீண்ட இரு பற்களோடும்
பயங்கரமாய் சிரித்துக்கொண்டு வரும். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம்,
அல்லது, அதை விரட்டியடிப்போம்.
ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்கவிருக்கும் சாத்தான்களும், அவை கொண்டுவரும் சோதனைகளும், பயத்தில் நம்மை விரட்டுவதற்குப் பதில், கவர்ந்திழுக்கின்றன என்பதுதானே நம் அனுபவம். அலகை தரும் சோதனைகள்,
அவ்வளவு அழகானவை!
இன்று
நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளையும் மேலோட்டமாகப் பார்த்தால், அவற்றை ‘நல்ல’ சோதனைகள் என்றே சொல்லத்தோன்றுகிறது. கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று, தவறான செயல்களைச்
செய்யச்சொல்லி, அலகை, இயேசுவைத் தூண்டவில்லை.
நாற்பதுநாள்
கடுந்தவத்தை முடித்த இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம், கல்லை, அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை.
இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி, அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது
சாத்தான். தேவைகள் அதிகமாகும்போது, அந்தத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துவிடத்
துடிக்கும்போது, குறுக்கு வழிகளைத் தேடும் சோதனைகள் அதிகமாகின்றன.
நாம்
இன்றைய உலகில் சந்திக்கும் பெரும் சோதனை, பார்க்கும் அனைத்தையும், பசிதீர்க்கும் அப்பமாக
மாற்றும் சோதனை. தேவைக்கும் அதிகமாக பல்வேறு பசிகளைத் தூண்டும் 'நுகர்வுக் கலாச்சாரம்', காணும் அனைத்தையும், நுகர்வது மட்டும் போதாதென்று,
விழுங்கவும் சொல்லித்தருகிறது. இந்த நச்சுக் கலாச்சாரத்திலிருந்து
நம்மை மீட்கும் ஒரே வழி, இறைவார்த்தையை நம்பி வாழ்வது! சுயநலப் பசியைவிட, இன்னும் உன்னதமான உண்மைகள், உணர்வுகள், இவ்வுலகில்
உள்ளன என்ற பாடத்தை, முதல் சோதனையை, தான் எதிர்கொண்ட முறை வழியே, நமக்குச் சொல்லித்தருகிறார்
இயேசு.
இயேசு
சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகை வெல்வதற்கு, எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை,
அலகை, இயேசுவுக்குக் காட்டுகிறது. எருசலேம் ஆலயத்தின் மேலிருந்து இயேசு குதித்தால், உடனே வானம் திறந்து, வானதூதர்கள், ஆயிரக்கணக்கில் இறங்கி
வந்து, இயேசுவின் பாதம், தரையைத் தொடாமல், அவரைத்
தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரும்
காட்சிக்கு ஓர் ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் மக்கள், ஏன்... உலக மக்கள் அனைவரும், இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.
30 ஆண்டுகள்
- மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் - கடினமான பணி, இறுதி 3 நாட்கள் - கடும் வேதனை, இறுதி 3
மணி நேரம் - சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை.
மூன்று நிமிடங்கள் போதும். எருசலேம் ஆலய சாகசம் ஒன்று போதும்... உலகம், இயேசுவின் காலடியில்
கிடக்கும்! சுருக்கமான வழி... எளிதான முயற்சி... எக்கச்சக்கமான
வெற்றி.
இவ்விரு
சோதனைகளிலும் சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே கவர்ச்சியாக அமைந்தது. "நீர்
இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்"; "நீர் இறைமகன் என்றால், கீழே குதியும்" என்று, சாத்தான் சவால் விடுகின்றது.
"நீர்
இறை மகன் என்றால்..." என்று சாத்தான் சொல்வதன் வழியாக, இறைமகன் எப்படிப்பட்டவராய்
இருக்கவேண்டும் என்று, சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன், புதுமைகள் நிகழ்த்தவேண்டும், அதுவும் தன்னுடைய சுயத்தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள, புதுமை செய்யவேண்டும்.
இறைமகனுக்கு
சாத்தான் இலக்கணம் வகுத்ததுபோல், நாமும் அவ்வப்போது இறைவனுக்கு இலக்கணம்
வகுத்துள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். கடவுள் அந்த மரத்தை படைக்காமலேயே இருந்திருக்கலாம்
என்றும், பாம்பை, சூழ்ச்சிமிக்கதாய் படைக்காமல் இருந்திருக்கலாம்
என்றும், நாம் கடவுளுக்குத் தரும் ஆலோசனைகள், இறைவனுக்கு நாம் வகுக்கும் இலக்கணம்!
கல்லை
அப்பமாக்கி, பசியைத் தீர்த்துக்கொள்ள தன் சக்தியைப் பயன்படுத்த மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார்
என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? சுயத்தேவைகளை நிறைவு செய்யவா? பிறர் தேவைகளை
நிறைவு செய்யவா? சிந்திக்கலாம்; இயேசுவிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
மூன்றாவது
சோதனையில், உலகமனைத்தையும்
இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகை, தன் வசமாக்க, மனுவுருவெடுத்த
இயேசு, இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! அவ்விதம், இயேசு, உலகை தன் மயமாக்க
வேண்டுமானால், அவர் சாத்தானோடு சமரசம் செய்யவேண்டும்...
இல்லை, இல்லை, சாத்தானிடம்
சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார்; சாத்தானை
விரட்டியடித்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக்கா 23: 46 ) என்று இறைவனிடம் சரணடைந்தார்; உலகை, தன்
வசமாக்கினார்.
தவறான
வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை, இவற்றிற்கு முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று, தீமைகளைச் சகித்துக்கொள்வதும், தீமைகள் நடக்கும்போது கண்களை மூடிக்கொள்வதும், இவ்விதம் நடப்பது, ஊரோடு ஒத்து வாழ்வதற்காக என்று சமாதானம் சொல்லிக்கொள்வதும், நாம் வாழ்வில் அடிக்கடி,
பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே, நம் வாழ்க்கையாக
மாறிவிட்டதா என்று சிந்திப்பது நல்லது.
கண்மூடித்தனமாக
நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுயநலப்பசியைத் தீர்த்துக்கொள்ள சுருக்கு வழிகளைத் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீய சக்திகளோடு சமரசம் செய்தல் என்று, நம்மை கவர்ந்திழுக்கும்
அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து பாடங்களை நாம்
கற்றுக்கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, தவக்காலம், நல்லதொரு நேரம்.
இயேசுவிடம் பாடங்கள் பயில, பாலைவனப் பள்ளிக்குச் செல்வோம்!
No comments:
Post a Comment