31 January, 2020

Holding Salvation in our hands… கரங்களில் மீட்பை ஏந்தி...

Simeon with Child Jesus
Infirmary chapel, St Peter Canisius, Rome

The Feast of the Presentation

The four Gospels are truly a precious treasure of our Christian tradition and of these four, the Gospel of Luke takes a special place. Although the Infancy narrative is given both by Matthew and Luke, it is the account of Luke that makes Christmas celebration special. The Babe in a manger, the shepherds in the fields and the song of the Angels - found only in the Gospel of Luke - add to the magic of Christmas celebrations. Being an artist himself, the evangelist Luke has painted a very human and tender image of Jesus throughout his Gospel. The most popular parables of the Good Samaritan and the Prodigal Son find a place only in Luke’s Gospel and, hence, they find a deep place in our hearts too.

The accounts given in the first two chapters of Luke’s Gospel have helped the Catholic Church designate three important Feast Days. The Feast of the Annunciation of the Lord (Luke 1:26-38) on March 25, the Birthday of John the Baptist (Luke 1:57-66) on June 24 and the Feast of the Presentation of the Lord (Luke 2:22-40) which we celebrate today, February 2, are made possible only because of the Gospel of Luke.

One of the important lessons we can learn from the Feast of the Presentation is the transformation that takes place when one is willing to carry the Babe of Bethlehem. It is, as it were, holding our salvation in our hands! The following story can help us understand this lesson:
Years ago a young man was riding a bus from Chicago to Miami. He had a stop-over in Atlanta. While he was sitting at the lunch counter, a woman came out of the ladies’ restroom carrying a tiny baby. She walked up to this man and asked, “Would you hold my baby for me? I left my purse in the restroom.” He did. But as the woman neared the front door of the bus station, she darted out into the crowded street and was immediately lost in the crowd. This guy couldn’t believe his eyes. He rushed to the door to call the woman, but couldn’t see her anywhere. Now what should he do? Put the baby down and run? When calmness finally settled in, he went to the Traveler’s Aid booth and together with the local police; they soon found the real mother. You see, the woman who’d left him holding the baby wasn’t the baby’s real mother. She’d taken the child. Maybe it was to satisfy some motherly urge to hold a child or something else. No one really knows. But we do know that this man breathed a sigh of relief when the real mother was found. After all, what was he going to do with a baby?

If we consider this story as a parable, one imagery in the story can serve as a symbol for all of us. The young man on a travel is obliged to hold a child unknown to him. In a way, each of us is in the same sort of situation as this young man. In our journey on earth, every year, during Christmas, God Himself walks up to us and asks, “Would you hold My Baby for Me, please?” and then thrusts the Christ Child into our arms. And we’re left with the question, “What are we going to do with this Baby?” But an even deeper question is just, “Who is this Baby?”

Prophet Isaiah has responded to this question with a list of titles: For to us a child is born, to us a son is given;… and his name will be called "Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace." (Is. 9:6) We hear these titles proclaimed during the Christmas Midnight Mass.

Throughout the Bible, many more titles have been given to this Baby. Among these titles, one stands out as THE favourite – ‘Emmanuel, God with us’ (cf. Mt. 1:23). This God is not a God who stays aloof in the heavens. If it were so, he would have chosen the temple or a great mountain top as the ‘site or his manifestation’. He chose rather to be born in a manger… He, as it were, just slipped into the crowd! It is quite symbolic that today’s gospel talks of how he paid a visit to the Temple on the 40th day … just to fulfil some prescribed laws - (Luke 2: 22).

In the First Reading, Prophet Malachi talks of how the Lord will pay a surprise visit to the temple and how such a visit would ‘purify’ the practices of the temple:  "Behold, the Lord whom you seek will suddenly come to his temple, says the Lord of hosts. But who can endure the day of his coming, and who can stand when he appears? "For he is like a refiner's fire and like fullers' soap; he will sit as a refiner and purifier of silver, and he will purify the sons of Levi and refine them like gold and silver, till they present right offerings to the Lord. (Malachi 3: 1-3)
Malachi was saddened by the ‘defective’ practices… especially the unwholesome sacrifices being offered in the temple: You say, 'How have we despised thy name?' By offering polluted food upon my altar. When you offer blind animals in sacrifice, is that no evil? And when you offer those that are lame or sick, is that no evil? Present that to your governor; will he be pleased with you or show you favor? says the Lord of hosts. (Malachi 1: 6-8)

The Temple in Jerusalem had been a source of scandal during the times of the Prophets as well as during the time of Jesus. Into this temple, the ‘perfect sacrifice’ was brought in by Mary and Joseph. But, the people in the temple were not able to see this extraordinary grace, except two – Simeon and Anna! Simeon, with the help of his inner vision, was able to see the arrival of his salvation. He went up to Mary and made a special request: "Can I hold your Baby for a few minutes, please?"
Holding a new-born baby is an art. We need to be extra careful in handling the fragile body of the baby. The moment the baby is handed over, especially if the baby were asleep, it may scream. There could also be embarrassing moments when the baby answers nature’s call without any warning.
All these ‘problems’ become insignificant when the child, oblivious to the whole world, nestles in our arms and goes to sleep; or, better still, when the child, looking at our face, beams with a heavenly smile. Nothing in this world would match that lovely moment in terms of beauty and satisfaction.

Simeon, overwhelmed by this beauty and filled with satisfaction could say those lovely words of farewell:  "Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word; for mine eyes have seen thy salvation which thou hast prepared in the presence of all peoples, a light for revelation to the Gentiles, and for glory to thy people Israel." (Lk. 2: 29-32)

This privileged moment, enjoyed by Simeon, is shared by Anna, a widow who had lived long years in the temple serving God. This scene of four holy persons surrounding the Divine Babe is a lovely symbol of ‘Consecration’. We can understand why Pope Saint John Paul II, in 1997, chose the Feast of the Presentation to institute the World Day of Consecrated Life. This year we celebrate the 24th World Day for Consecrated Life.

The lovely scene of the Presentation of Our Lord, especially the moment of Simeon holding the Divine Child, is etched deep in my memory due to an incident that happened in one of the Jesuit Communities in Rome. This Jesuit Community has an infirmary reserved for senior Jesuits who need continuous nursing care. On this floor there is a chapel. Some years back, there was a proposal to renovate that chapel with a mosaic as the background for the altar. Some of community members suggested that a scene from the life of Jesus curing a person could be depicted as the background. Fr Marko Rupnik, a Jesuit well-known for his mosaic art, was given this task.

The scene Fr Rupnik suggested took many of the community members by surprise. He suggested that he would like to depict the scene of Simeon holding the Baby Jesus in his arms. When asked for reason, he said that those who came to that community had reached a stage in their life where they were not asking the Lord to heal them; they were rather telling the Lord, like Simeon, “Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word" (Lk. 2:29). This explanation given by Fr Rupnik made more sense to the community members who had suggested other gospel scenes. Hence, this scene was created in the chapel attached to the infirmary.
As we contemplate this lovely scene of Child Jesus in the hands of Simeon, we pray for Priests and Religious the world over who are advanced in age and frail in health. We pray that the final phase of their consecrated life be filled with the satisfaction experienced by Simeon.

We also think of thousands of ‘Anna’s who are spending their lives in doing very silent, menial works in and around Parish Churches. The lines describing Anna seem to suit many of the senior ladies and nuns who devote so much of their time and energy for the Church.
Anna did not depart from the temple, worshiping with fasting and prayer night and day. And coming up at that very hour she gave thanks to God, and spoke of him to all who were looking for the redemption of Jerusalem. (Lk. 2: 37-38)
Anna became an apostle in her own rights. We pray that all the silent workers of our Parishes may become living witnesses to the silent, redemptive power of God!

May the tribe of Simeon and Anna increase!

Simeon and Anna with Child Jesus

ஆண்டவரின் அர்ப்பணத் திருநாள்

கிறிஸ்தவ பாரம்பரியத்தின் தலைசிறந்த கருவூலங்களாகக் கருதப்படும் நான்கு நற்செய்திகளில், லூக்கா நற்செய்தி தனியொரு இடம் வகிக்கிறது என்பதில் ஐயமில்லை. 'கருணையின் நற்செய்தி' என்றழைக்கப்படும் இக்கருவூலத்தை உருவாக்கிய புனித லூக்கா, இயேசுவின் மனித இயல்பை, குறிப்பாக, அவரது கனிவை வெளிக்கொணர்வதில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். நல்ல சமாரியர், காணாமல்போன மகன் போன்ற உலகப் புகழ்பெற்ற உன்னத உவமைகள், லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்படும் சில முக்கியத் திருவிழாக்களுக்கு பின்புலமாக இருப்பது, லூக்கா நற்செய்தி. இயேசுவின் பிறப்பு தொடர்பான நிகழ்வுகள், மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளில் மட்டுமே கூறப்பட்டுள்ளன. இவற்றில், கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட, நமக்கு அதிகம் துணையாக இருப்பது, லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளே. இந்நற்செய்தியில் இடம்பெறும் தீவனத் தொட்டியில் குழந்தை, வயல்வெளி இடையர்கள், வான தூதர்களின் பாடல் போன்ற அம்சங்கள் இன்றி, கிறிஸ்மஸ் விழா, இத்தனை அழகுடன் விளங்குமா?

அதேவண்ணம், லூக்கா நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ள மூன்று நிகழ்வுகளை அடித்தளமாகக் கொண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் மூன்று முக்கியத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 25ம் தேதி சிறப்பிக்கப்படும், இயேசு பிறப்பின் அறிவிப்பு விழா (லூக்கா 1:26-38); ஜூன் 24ம் தேதி சிறப்பிக்கப்படும், திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழா (லூக்கா 1:57-66); மற்றும், இன்று, பிப்ரவரி 2ம் தேதி சிறப்பிக்கப்படும், ஆண்டவரின் அர்ப்பண விழா (லூக்கா 2:22-40) ஆகிய இம்மூன்று முக்கிய விழாக்களின் பின்புல நிகழ்வுகள், லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளன.
இன்று நாம் சிறப்பிக்கும் ஆண்டவரின் அர்ப்பணத் திருவிழா, நமக்குச் சொல்லித்தரும் ஒரு முக்கியப் பாடம் - குழந்தையின் வடிவில் வரும் இறைவனை, கரங்களில் ஏந்துவதால், நம்மில் உருவாகும் மாற்றங்கள் என்ற பாடம். இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள, ஒரு சிறு கதை, உதவியாக உள்ளது.

பெருநகர் ஒன்றை நோக்கி விரைந்தது ஒரு பேருந்து. நீண்ட பயணம் என்பதால், வழியில், உணவு இடைவேளைக்கென பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞர், அங்கிருந்த உணவு விடுதியில், சிற்றுண்டி அருந்த அமர்ந்தார். அந்நேரம், கையில் ஒரு குழந்தையை ஏந்தியவண்ணம் வந்த ஓர் இளம்பெண், இளைஞரை அணுகினார். அப்பெண், அவரிடம், "குழந்தையைக் கொஞ்சநேரம் வைத்திருக்கிறீர்களா? என் 'பர்ஸ்'ஸை 'டாய்லெட்'டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்" என்று கூறியபடி, இளைஞரிடம் அக்குழந்தையை ஒப்படைத்தார். பின்னர், அப்பெண், கழிவறை பக்கம் செல்வதற்குப் பதில், உணவு விடுதியின் வாசலுக்கு விரைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற இளைஞர், குழந்தையுடன் அவர்பின்னே சென்றார். வாயிலை அடைந்ததும், அந்த இளம்பெண், வேகமாக ஓடி மறைந்துவிட்டார்.

இளைஞருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தையுடன், அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று, நடந்ததைக் கூறினார். காவல் துறையினர், உடனடியாகச் செயல்பட்டு, அக்குழந்தையின் தாயைக் கண்டுபிடித்தனர். அத்தாயைக் கண்ட இளைஞர் அதிர்ச்சியுற்றார். ஏனெனில், அவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றது வேறொரு பெண். இப்போது வந்தவர், வேறொருவர். ஆனால், இவர்தான் உண்மையானத் தாய். ஓடிப்போன பெண், அக்குழந்தையை, அருகிலிருந்த ஊரிலிருந்து கடத்திவந்திருந்தார். அவர் மனசாட்சி உறுத்தியதோ, என்னவோ, அக்குழந்தையை இளைஞரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் மறைந்துவிட்டார். குழந்தையை அதன் உண்மையானத் தாயிடம் ஒப்படைத்தத் திருப்தியுடன், இளைஞர், அவ்விடம் விட்டு அகன்றார்.
உலகின் பல இடங்களில் இதையொத்த நிகழ்வுகள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன என்பதை அறிவோம். இந்நிகழ்வை ஓர் உவமைபோல எண்ணி, நாம் இன்றைய திருநாள் சிந்தனைகளைத் தொடர்வோம்.

குழந்தை இயேசுவை, கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்தத் திருநாளை, இஞ்ஞாயிறன்று கொண்டாடுகிறோம். கிறிஸ்மஸ் விழா முடிந்து, சரியாக 40வது நாள், இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்மஸ், மற்றும் இன்றையத் திருநாள் இரண்டையும் இணைத்துச் சிந்திக்க, மேலே கூறிய கதையில் இடம்பெறும் ஒரு காட்சி நமக்கு உதவியாக இருக்கும். அதுதான், பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞரின் கரங்களில், எதிர்பாராதவிதமாக, குழந்தை ஒன்று ஒப்படைக்கப்பட்டக் காட்சி.
நாம் அனைவரும், உலக வாழ்வு என்ற பயணத்தை மேற்கொண்டவர்கள். இந்தப் பயணத்தில், திடீரென, ஒரு குழந்தை குறுக்கிடுகிறது. ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் நாம் சந்திக்கும் உண்மை இது. விண்ணகத் தந்தையாம் இறைவன், நம் உலகப்பயணத்தின்போது குறிக்கிட்டு, "கொஞ்சநேரம் இக்குழந்தையை வைத்திருப்பாயா?" என்று, தன் அன்பு மகனை ஒரு குழந்தையாக நம் கரங்களில் ஒப்படைக்கிறார்.

இயேசு என்ற குழந்தை, கோவிலில் காணிக்கையாக வழங்கப்பட்ட நிகழ்வை இன்று நாம் கொண்டாடும்போது, இக்குழந்தை, இவ்வுலகிற்காக அர்ப்பணிக்கப்பட்ட, அல்லது, நேர்ந்துவிடப்பட்ட குழந்தை என்பதை உணர்கிறோம். நேர்ந்துவிடப்பட்ட இக்குழந்தையைக் கரங்களில் ஏந்தும்போது, "இக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?" என்ற கேள்வி, நம் மனங்களில் எழுகிறது. அத்துடன், அதைவிட இன்னும் ஆழமான, அடிப்படையான, "இக்குழந்தை யார்?" என்ற கேள்வியும் எழுகிறது. இந்த அடிப்படைக் கேள்விக்கு விடையாக, விவிலியம் முழுவதும், இயேசுவுக்கு, பல்வேறு அடைமொழிகள் தரப்பட்டுள்ளன. இந்த அடைமொழிகளில் சிலவற்றை, இறைவாக்கினர் எசாயா இவ்விதம் தொகுத்துள்ளார்.
எசாயா 9: 6
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்.

குழந்தை இயேசுவுக்கு வழங்கப்படும் இந்த அடைமொழிகளை, கிறிஸ்மஸ் விழாவின் இரவுத் திருப்பலியில், நாம் ஒவ்வோர் ஆண்டும் கேட்கிறோம். இந்த அடைமொழிகள் அனைத்திற்கும் மேலாக, இக்குழந்தையைக் குறிப்பிட, நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஓர் அடைமொழி, இம்மானுவேல், அதாவது, கடவுள் நம்மோடு இருக்கிறார் (மத்தேயு 1:23). நம் கடவுள், விண்ணகத்தில், எட்டாத தூரத்தில் வாழ்பவர் அல்ல, மாறாக, அவர் நம்மில் ஒருவர் என்பதை, அழுத்தம் திருத்தமாகக் கூற விழைந்த இயேசு, கடவுளின் இல்லமான கோவிலில் தோன்றாமல், ஓர் எளிய மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். பிறந்து 40 நாட்கள் சென்றபின்னரே, இறைவனின் இல்லம் என்று மக்களால் அழைக்கப்படும் கோவிலுக்கு, முதன்முறையாக, அவர் எடுத்துச் செல்லப்பட்டார்.

தன் சொந்த இல்லத்திற்கு இறைவன் வருவார்; அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் வருவார்; அவரது வரவு சுகமான வரவாக இருக்காது என்பதை, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் மலாக்கி இவ்விதம் கூறியுள்ளார்:
மலாக்கி 3: 1-2
நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார் என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார்.

இறைவாக்கினர் மலாக்கி இவ்விதம் எச்சரிக்கை விடுப்பதற்குக் காரணம் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்தில், எருசலேம் கோவில், தவறுகள் மண்டிப்போயிருந்த ஓர் இடமாக இருந்தது. இத்தவறுகளில் ஒன்றை, இறைவாக்கினர் மலாக்கி, இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்:
மலாக்கி 1: 7-8
உங்களைப் படைகளின் ஆண்டவர் கேட்கிறார். என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்றல்லவோ நினைக்கிறீர்கள்! குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலியிடக் கொண்டு வருகிறீர்கள். அது குற்றமில்லையா? அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ? உனக்கு ஆதரவு அளிப்பானோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

இவ்வுலகத் தலைவர்களிடம் கொடுக்கமுடியாத குறையுள்ள உயிரினங்களை கடவுளுக்குப் பலியிட்டுவந்த எருசலேம் கோவிலில், குறையேதும் அற்ற, முழுமையானப் பலிப்பொருளாக, இறைமகன் இயேசு கொண்டுவரப்பட்டார். அந்த முழுமையானப் பலிப்பொருளை, அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், மக்களின் பார்வை மங்கிப்போயிருந்தது. ஆனால், வயதில் முதிர்ந்த இருவர், அன்று, எருசலேம் கோவிலில் தங்கள் மீட்பரைக் கண்டுகொண்டனர். முதிர்ந்த வயதின் காரணமாக, அவர்களது புறக்கண்களில் பார்வைத்திறன் குறைந்திருந்தாலும், ஆவியாரின் தூண்டுதலால், அகக்கண்களில் தெளிவு பெற்றிருந்த சிமியோன், அன்னா என்ற இருவரும், குழந்தை இயேசுவின் வடிவில் வந்திருந்த பலிப்பொருளைக் கண்ணாரக் கண்டனர். "என் குழந்தையைக் கொஞ்சநேரம் வைத்திருக்கிறாயா?" என்று, கடவுள், சிமியோனின் உள்ளத்தைத் தூண்டியிருக்கவேண்டும். எனவே, அவராகவே முன்வந்து, மரியாவிடம், "அம்மா, உன் குழந்தையை நான் கொஞ்ச நேரம் வைத்திருக்கட்டுமா?" என்று கேட்டு, அவரைத் தன் கரங்களில் ஏந்தி நின்றார்.

பச்சிளம் குழந்தைகளைக் கரங்களில் ஏந்துவது, தனிப்பட்ட ஒரு கலை. குழந்தையை ஏந்தும்போது, அதை, பாதுகாப்புடன் நம்மால் ஏந்தமுடியுமா; நேரம் காலம் தெரியாமல், குழந்தை, இயற்கையின் நியதிகளை நிறைவேற்றினால், அதை சமாளிக்கமுடியுமா என்ற பயங்கள், பலருக்கும் இருக்கும். இவ்வித அச்சங்கள் ஏதுமின்றி, குழந்தையைக் கரங்களில் ஏந்தும்போது, அக்குழந்தை நம்மைப் பார்த்து சிரித்தால், அதில் கிடைக்கும் மனநிறைவு, மிக, மிக உயர்ந்தது.. அதைத்தான், சிமியோனும், அன்னாவும் அடைந்திருக்கவேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 2ம் தேதி சிறப்பிக்கப்படும், ஆண்டவரின் அர்ப்பணத் திருநாள், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் உலக நாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. 1997ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உலக நாள், இவ்வாண்டு, தன் 24வது உலக நாளைக் கொண்டாடுகிறது.
தங்கள் வாழ்வை, இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணமாக்கிய மரியா, யோசேப்பு, சிமியோன், அன்னா ஆகிய நால்வரும், குழந்தை இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்த நிகழ்வைக் கொண்டாடும் திருநாள், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் உலக நாளாகச் சிறப்பிக்கப்படுவது பொருத்தமாக உள்ளது.

குழந்தை இயேசு, கோவிலுக்கு, காணிக்கையாகக் கொண்டுவரப்பட்ட இந்தக் காட்சியைச் சிந்திக்கும்போது, உரோம் நகரில் உள்ள ஒரு சிற்றாலயம் என் நினைவுக்கு வருகிறது. இயேசுசபையில், வயதில் முதிர்ந்து, நோயுற்றிருக்கும் துறவியரைக் கண்காணித்துவரும் ஓர் இல்லத்தில், அமைந்துள்ள சிற்றாலயத்தில், பீடத்திற்குப் பின்புறம், பொருத்தமான ஓவியம் வரைவதென்று முடிவு செய்தபோது, பல கருத்துக்கள் வெளிவந்தன. இயேசு குணமளிக்கும் ஏதாவது ஒரு நிகழ்வு, அந்த ஓவியத்தில் சித்திரிக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. அந்த ஓவியத்தை வண்ணக்கற்கள் கொண்டு உருவாக்கவிருந்த ஓவியர், Marco Rupnik என்ற இயேசுசபை அருள்பணியாளரிடம் கருத்து கேட்டபோது, தான் உருவாக்க விழைவதாக அவர் சொன்ன காட்சி வியப்பளித்தது. வயதில் முதிர்ந்த சிமியோன், எருசலேம் கோவிலில், குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தி நிற்கும் காட்சியே பொருத்தமானது என்று, அருள்பணி Rupnik அவர்கள் கூறினார். அவரிடம் காரணம் கேட்டபோது, அவர் சொன்னது இதுதான்: முதிர்ந்த வயதில், நோயுற்று, இந்த கண்காணிப்பு இல்லத்திற்கு வரும் இயேசுசபைத் துறவிகள், இறைவன் தங்களைக் குணப்படுத்தவேண்டும் என்று வேண்டுவதைவிட, அவர், தங்களை, இவ்வுலகிலிருந்து அமைதியாக அழைத்துக்கொள்ளவேண்டும் என்ற மனநிலையே அவர்களிடம் அதிகம் இருக்கும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
அச்சிற்றாலயத்தில், சிமியோன், குழந்தை இயேசுவை, கரங்களில் தாங்கி நிற்கும் காட்சியே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிமியோன் முகத்தில் காணப்படும் அமைதி, "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன" (லூக்கா 2:29-31) என்று அவர் கூறிய சொற்களை நினைவுறுத்துகின்றது.
குழந்தை இயேசுவைக் காணிக்கையாக அர்ப்பணித்தத் திருநாளில், இக்காட்சியைச் சிந்திக்கும்போது, வயதில் முதிர்ந்து, உடலால் தளர்ந்துள்ள அருள் பணியாளர்களையும், துறவியரையும் எண்ணிப்பார்ப்போம். இவர்கள் ஒவ்வொருவரும், இறைமகனை, தங்கள் உள்ளங்களில் ஏந்தியவண்ணம், மனநிறைவுடன், இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற வேண்டுமென மன்றாடுவோம்.

அதேபோல், கோவிலைவிட்டு நீங்காமல், நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்த கைம்பெண் அன்னா அவர்களும்,  அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார் (லூக்கா 2: 37-38) என்று இன்றைய நற்செய்தியில் வாசித்தோம்.
எவ்வித விளம்பரமும் தேடாமல், நமது கோவில்களில், பல ஆண்டுகள் பணியாற்றிவரும் கைம்பெண்களையும், அருள் சகோதரிகளையும் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். கைம்பெண் அன்னா, கடவுளின் வருகையை எல்லாரிடமும் எடுத்துரைத்த திருத்தூதராக மாறியதுபோல, இவர்களும் தங்கள் பணிகளின் வழியே, கடவுளின் அழகை அமைதியாகப் பறைசாற்றிவருவதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். அவர்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.

28 January, 2020

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – சிந்தும் சிறு துண்டுகள் போதும் 3


Gandhi - London 1906

விதையாகும் கதைகள் : வானத்தை நோக்கி துப்பினால்...

மகாத்மா காந்தி அவர்கள், இலண்டன் மாநகரில், ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த காலத்தில், அங்கு பணியாற்றிவந்த, வெள்ளையினப் பேராசிரியர், பீட்டர்ஸ் அவர்கள், காந்தியின் அறிவுத்திறனைக் கண்டு பொறாமையுற்றார். அடிக்கடி அவர், காந்தி அவர்களை அவமானப்படுத்த முயன்றார்.
ஒருமுறை, பீட்டர்ஸ் அவர்கள், பல்கலைக்கழக உணவு விடுதியில் மதிய உணவருந்திக் கொண்டிருந்தபோது, மாணவர் காந்தி, ஒரு தட்டில் தன் உணவை எடுத்துக்கொண்டு அவருக்கெதிரே அமர்ந்தார். இதைக்கண்ட பேராசிரியர், "காந்தி, உனக்கு இது புரியாமல் இருக்கலாம். ஆனால், பறவையும், பன்றியும், ஒரே இடத்தில் உணவருந்த முடியாது" என்று கூறினார். காந்தி அவர்கள், உடனே, தன் உணவுத் தட்டை கையில் எடுத்துக்கொண்டு, "கவலைப்படாதீர்கள் சார், நான் பறந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, அடுத்த மேசைக்குச் சென்றார்.
உணவு விடுதியில், பலருக்கு முன், காந்தி அவர்கள் கூறிய இந்த பதில், பேராசிரியரை மிகவும் கோபமுறச் செய்தது. சில நாள்கள் சென்று, வகுப்பறையில், அவர், காந்தியிடம், "நீ சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது, அங்கு, ஒரு பையில், அறிவுத்திறனும், ஒரு பையில் பணமும் இருந்தால், நீ எதை எடுப்பாய்?" என்று கேட்டார். காந்தி அவர்கள், சற்றும் தயங்காமல், "பணமுள்ள பையை எடுத்துக்கொள்வேன்" என்று சொன்னார். பேராசிரியர், ஓர் ஏளனச் சிரிப்புடன், "அதுதான், உனக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு. நானாக இருந்தால், அறிவுத்திறன் உள்ள பையைத்தான் எடுத்திருப்பேன்" என்று கூறினார். உடனே காந்தி அவரிடம், "ஒருவரிடம் எது இல்லையோ, அதைத்தானே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
பேராசிரியரின் கோபம் ஒவ்வொருநாளும் கூடி வந்தது. அடுத்து வந்த தேர்வில், காந்தி அவர்கள், மிகச் சிறந்த முறையில் பதில் எழுதியிருந்தார். அதை ஒரு வரியும் வாசிக்காமல், பேராசிரியர் பீட்டர்ஸ் அவர்கள், அந்த விடைத்தாளின் முதல் பக்கத்தில், "முட்டாள்" என்ற சொல்லை மட்டும் பெரிதாக எழுதி, அதை, காந்தியிடம் கொடுத்தார். அதைக்கண்ட காந்தி அவர்களுக்கு எரிச்சல் வந்தாலும், சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் அவர் பேராசியரிடம் சென்று, தன் விடைத்தாளைக் காண்பித்து, "சார், நீங்கள் இந்த விடைத்தாளில் கையொப்பமிட்டுள்ளீர்கள்; ஆனால், மதிப்பெண் வழங்கவில்லையே" என்று கூறினார்.
வானத்தை நோக்கி துப்பப்படும் எச்சில், எங்கு விழும் என்பது, நமக்குத் தெரிந்ததுதானே!

Mother carrying her daughter to school

ஒத்தமை நற்செய்தி சிந்தும் சிறு துண்டுகள் போதும் 3

பெண்களை மையப்படுத்தி இயேசு ஆற்றிய ஏழுப் புதுமைகளில், கானானிய பெண்ணின் மகளை குணமாக்கியப் புதுமையும் ஒன்று. இப்புதுமை பதிவுசெய்யப்பட்டுள்ளப் பகுதிக்கு, தமிழ் விவிலியத்தில் தரப்பட்டுள்ள தலைப்பு - கானானியப் பெண்ணின் நம்பிக்கை, ஆங்கிலப் பதிப்புக்களிலும், The Canaanite Woman’s Faith அல்லது, The Syrophoenician Woman’s Faith என்றே இப்பகுதிக்கு தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இயேசுவைச் சந்திக்க வந்திருந்த பெண்ணின் நம்பிக்கையே, இப்புதுமையின் மையக்கருத்தாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோம்.

பெண்கள், குறிப்பாக, அன்னையர் கொண்டிருக்கும் நம்பிக்கை, அசாத்தியமானது என்பதை நாம் அறிவோம். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு செய்தி, ஓர் ஏழைத்தாயின் அசைக்கமுடியாத உறுதியையும், நம்பிக்கையையும் வெளிக்கொணர்ந்தது. தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற அத்தாயைக் குறித்து இந்து தமிழ் திசையில் வெளியானச் அச்செய்திக்கு, மாற்றுத்திறனாளி மகள்: 12 ஆண்டுகளாக பள்ளிக்கு இடுப்பில் சுமந்து செல்லும் தாய்! என்று தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. அச்செய்தியின் சுருக்கம் இதோ:

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. அவரின் ஒரே மகள் திவ்யா. பிறக்கும்போதே கால்களில் குறைபாட்டுடன் பிறந்தார் திவ்யா. மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால் தந்தை குடும்பத்தை விட்டுச்சென்று விட்டார். இதனால் தனி நபராக திவ்யாவை வளர்த்தார் தாய் பத்மாவதி.
சொந்த ஊரான பெருங்கோழி அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார் திவ்யா. மேல்நிலைக் கல்விக்காக உத்திரமேரூர் வந்த அவர், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
எக்காரணத்துக்காகவும் மகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பத்மாவதி அவர்கள், கடந்த 12 ஆண்டுகளாக, மகளை, இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார். சுமார் 2 கி.மீ. மகளைச் சுமந்துவந்து, அரசுப் பேருந்தில் பயணிக்கும் பத்மாவதி அவர்கள், மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்கு நடந்து செல்கிறார். கருவாய் மகளை 10 மாதங்கள் சுமந்த தாய், கல்விக்காக 12 ஆண்டுகளாகச் சுமப்பது, அங்குள்ள மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் பத்மாவதி அவர்களின் தியாகமும், நம்பிக்கையும், இளம்பெண் திவ்யாவையும் சீரிய முறையில் சிந்திக்க வைத்துள்ளது. அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, ''நான் நன்றாகப் படித்து வேலைக்குச் செல்வேன். இதன் மூலமாக என்னை மாதிரி சிரமப்படுபவர்கள் எல்லாருக்கும் உதவுவேன். நாள் முழுவதும் அம்மா என்னுடனே இருப்பதால், வீட்டுச்சூழல் சிரமமாக இருக்கிறது. என் மேற்படிப்புக்கு முதல்வர் உதவ வேண்டும்''  என்று கூறினார்.

இச்செய்தி, நாளிதழில் வெளியானதையடுத்து, தமிழக அரசு, இளம்பெண் திவ்யாவுக்கு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தை வழங்கியுள்ளது என்ற செய்தி அடுத்த சில நாள்களில் வெளியானது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள், திவ்யாவின் நிலை அறிந்து, அவரின் படிப்புக்கு உதவ முன் வந்துள்ளதாக அவரின் தாய் பத்மாவதி நன்றி தெரிவித்துள்ளார்.
தாய் பத்மாவதி அவர்கள் 12 ஆண்டுகளாக, தன் மகள் மீது நம்பிக்கை கொண்டு அவரைச் சுமந்து சென்ற தியாகம், ஊடகங்களின் கவனத்தை பெறாமல் போயிருந்தாலும், அதன் விளைவாகக் கிடைத்த உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தாலும், அந்த அன்னை பத்மாவதி, தன் மகள் திவ்யாவை, கல்லூரிக்கும் சுமந்து சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. அன்னையரின் நம்பிக்கையும், மன உறுதியும் போற்றுதற்குரியன.

மனித வரலாற்றின் துவக்கத்திலிருந்து, உலகின் ஒவ்வொரு நாட்டிலும், தாய் பத்மாவதி அவர்களைப்போன்று, பலகோடி அன்னையர் வாழ்ந்துள்ளனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அங்கக் குறையுடன் பிறந்த தங்கள் மகள்களையும், மகன்களையும் வாழ்வில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அவர்களில் ஒருவராக, கானானிய இனத்தை, அல்லது, சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த ஒரு தாயை, நாம், இன்றைய விவிலியத்தேடலில் சந்திக்கிறோம்.

நோயுற்ற தன் மகளுக்காக இயேசுவைத் தேடி, அந்த அன்னை வந்த நிகழ்வை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
மாற்கு நற்செய்தி 7: 24-26
இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.

நற்செய்தியாளர் மாற்கு, அப்பெண்ணுக்கு, இரு அடையாளங்களை வழங்கியுள்ளார். அவரை, ஒரு கிரேக்கப்பெண் என்றும், சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 'கிரேக்கப்பெண்' என்று அவர் குறிப்பிட்டுள்ளது, நம் பேச்சு வழக்கில், பிறரை வேறுபடுத்திக் காட்ட நாம் பயன்படுத்தும் சொல்லாடல்களை எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது. யூதர்கள், தங்கள் இனத்தைச் சேராத மற்றவர்களை, புறவினத்தார் என்றோ, 'கிரேக்கர்' என்றோ கூறிவந்தனர்.

திருத்தூதரான புனித பவுல், இறை மக்களிடையே வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்த, யூதர், கிரேக்கர் என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்:
கலாத்தியர் 3: 27-29
கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.
கிறிஸ்தவர்களிடையே நிலவிவந்த வேறுபாடுகளை வலியுறுத்த, புனித பவுல் பயன்படுத்தும் சொற்கள் – யூதர்-கிரேக்கர் என்ற பிரிவு.

நம்மைச் சாராத, அல்லது, நம்மால் புரிந்துகொள்ள இயலாத ஒன்றைக் குறித்து கேள்விப்படும்போது, "That's Greek to me", அதாவது, "அது எனக்கு கிரேக்கமாக உள்ளது" என்ற சொற்றொடரை நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறோம். கிரேக்க நாட்டில் உள்ளவர்கள், தங்களுக்குத் தெரியாத, அல்லது, தங்கள் இனத்தைச் சாராத ஒன்றைக் குறித்து தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும்போது, "அது எனக்கு சீனமாக உள்ளது" அல்லது, "நீ பேசுவது, துருக்கிய மொழிபோல் உள்ளது" என்ற சொற்றொடர்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, உலகெங்கும் உள்ள அனைவரும், தங்களுக்கு விளங்காத மொழியையோ, இனத்தையோ குறிப்பிட்டு, நமக்குள் வேறுபாடுகளை உணர்த்தி வருகிறோம்.

நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை பல்வேறு தருணங்களில் நாம் உணர்ந்தாலும், பிறருக்கு உணர்த்தினாலும், அவசரமான, அவசியமானத் தேவை என்று வரும்போது, மொழியைக் கடந்து, நாம் அடுத்தவருடன் தொடர்புகொள்ள முடிகிறது. சூழ்நிலையின் கட்டாயத்தால் வேற்று நாடுகளுக்கு, அல்லது, இந்தியாவில் வேற்று மாநிலங்களுக்கு நாம் செல்ல நேர்ந்தால், நம் தேவைகளை உணர்த்த ஏதோ ஒரு வழியை நாம் கடைபிடிக்கிறோம். நம் தேவைகளை, மொழி தெரியாத இடங்களிலும், பிறருக்குப் புரியவைத்து விடுகிறோம். தேவைகள், அதிலும், அவசரத் தேவைகள் உருவாகும்போது, மொழி, இனம், சாதி, மதம் என்ற அனைத்து பிரிவுச் சுவர்களும் தானாகவே தரைமட்டமாவது, நாம் அனைவரும் உணர்ந்துள்ள ஓர் அழகிய அனுபவம்.

பேயின் பிடியில் சிக்கியிருந்த தன் மகளை விடுவிக்கவேண்டும் என்ற அவசரத் தேவையுடன், ஒரு தாய், இயேசுவைத் தேடிவந்தார். அவருக்கும், இயேசுவுக்கும் இடையே, இனம், மொழி, மதம் என்று, பல வேலிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தையும் கடந்து, அந்தத் தாய், இயேசுவைத் தேடிவந்து, தன் வேண்டுதலை எழுப்பினார். அவரும், இயேசுவும் பயன்படுத்திய மொழிகள் வேறுபட்டவையாக இருந்திருக்கலாம். இருப்பினும், அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டனர் என்பதை உணர்கிறோம்.

அந்தத் தாய், இயேசுவை அணுகிவந்த நிகழ்வு, மத்தேயு நற்செய்தியில், ஒருசில வேறுபாடுகளுடன், கூடுதல் விவரங்களுடன் கூறப்பட்டுள்ளது.
மத்தேயு நற்செய்தி 15: 21-24
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.

நற்செய்தியாளர் மத்தேயு, இயேசுவைத் தேடி வந்திருந்த தாயை, கானானியப் பெண் என்று குறிப்பிட்டிருப்பதன் பொருளையும், வேற்றினத்தைச் சேர்ந்த அப்பெண், இயேசுவிடம் தன் விண்ணப்பத்தை அளித்த விதம், அதற்கு இயேசு வழங்கிய பதிலிறுப்பு ஆகியவற்றையும், நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

24 January, 2020

Two kinds of light - lightning and sunlight ஒளியின் வடிவங்கள் - மின்னலும், சூரியஒளியும்



3rd Sunday in Ordinary Time – 71st Republic Day

This Sunday, January 26, Indians celebrate their 71st Republic Day. In 1950, on this day, the people of India said ‘Enough is enough’… Yes, the people of India, who had been under the yoke of various kings for thousands of years, and have been ‘colonised’ by foreigners for hundreds of years, said, “Enough is enough… We don’t need anyone to rule us. We are capable of self-rule.” Of course, these words have not been recorded in history; but this, in essence, is what the people of India have told the world on January 26, 1950 – the First Republic Day!

When we look back on the past 70 years of Indian ‘self-rule’, we wonder whether this history was marked by ‘self-rule’ or ‘selfish-rule’! We are sadly aware, that the people of India, and, for that matter, people all over the world, are ruled by selfish politicians. In the past few years, the average Indian has suffered very much due to religious fundamentalism, demonitization, and, recently, by the Citizenship Amendment Act (CAA). The ‘Democracy’ Indians gave themselves is buried under the filthy power game of ‘uncrowned maharajahs’ – the politicians! This tragic drama is enacted in most of the countries – whether they are democratic, republic, or, autocratic! One such drama is taking place in Washington D.C., U:S:A., as a spectacle for the whole world!

One of the most popular definitions of Democracy was given by Abraham Lincoln: “Democracy is the government of the people, by the people, for the people.” The moment I thought of this quote, my mind instinctively thought of another popular quote of Lincoln, namely: “You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all the people all the time.” One can easily see the intrinsic connection between these two quotes of Lincoln. ‘Fooling all the people all the time’ can easily be the label stuck on Democracy as we see it today all over the world and more especially in the biggest Democracy (Republic) of the world, namely, India!

Republic Day – the special day when the people of India gave themselves the power to rule themselves – calls for celebrations. India does celebrate Republic Day… But, unfortunately, in the last 20 years, the Parade in New Delhi is projected as THE CELEBRATION of this wonderful day. This parade does portray the various cultures of the people of India… sure! But, unfortunately, this parade has become more of a show of (show-off) Indian armaments to the world!
The Republic Day Parade is more of a ritual than a real celebration of the Indian Republic – the People’s power. Once in a while, India has witnessed the real power of the common people. One such moment was in January 2017. People’s power was celebrated in Tamil Nadu by the youth protesting against the ban on ‘Jallikattu’, the bull-fight.

Hats off to the youth of Tamil Nadu, who had not sought the support of any political party as well as the support of the tinsel world. They had taken care not to be divided on lines of caste, religion, political allegiance, fan club etc. They had not resorted to any violence and had gone from strength to strength. This was truly a people’s movement, where no individual stole the limelight.

The power of the people has once again come to the fore in the recent protests against the CAA – the Citizenship Amendment Act. One of the most crowded demonstrations at a national level is the one that arose spontaneously in Shaheen Bagh, a crossroads in the majority Islamic neighborhood that connects Delhi to the satellite city of Noida. Women of all denominations have gathered here since December 16, following the assault by security forces on the capital's Jamia Millia Islamia University and the beating of students. (AsiaNews) The ‘Jallikattu’ protests at the beginning of 2017, and the CAA protests at the end of 2019, give us hope about the power of people’s movement!

This Sunday’s Liturgy invites us to consider another ‘people’s movement’ inaugurated by Jesus – namely, the Kingdom of God! Today’s Gospel talks of the way in which Jesus inaugurated his public ministry… by proclaiming his first message and by calling his first disciples.
From a worldly point of view, the inauguration planned by Jesus was very bad. If Jesus wanted to create an impression on the world, He should have done it in a spectacular style with a miracle, like jumping from the pinnacle of the temple of Jerusalem. This was exactly what the devil had in mind (Mt.4:5-7; Lk. 4:9-12). The devil wanted Jesus to begin his public ministry, making a great impression on the people.

‘Making an impression’ is a big preoccupation of the commercial as well as the political worlds! Most of the product launches and the launching of political parties have been very spectacular. But, after the inauguration, they probably disappeared without a trace in history.
History, however, has shown us other examples, counter-formulas, namely, very silent inaugurations, which have stood the test of times. One such example would be the Congregation of the Missionaries of Charity founded by St Mother Teresa of Calcutta. Here is one of the earliest incidents that began a silent revolution by the ‘Saint of the Gutters’ as written by Fr Raymond J.DeSouza:
In 1952, Mother Teresa found a woman dying in the streets, half-eaten by rats and ants, with no one to care for her. She picked her up and took her to the hospital, but nothing could be done. Realizing that there were many others dying alone in the streets, Mother Teresa opened within days Nirmal Hriday (Pure Heart), a home for the dying. In the first 20 years alone, over 20,000 people were brought there, half of whom died knowing the love of the Missionaries of Charity. Nirmal Hriday is where one dying man, lying in the arms of Mother Teresa after being plucked from the gutters and bathed and clothed and fed, told her, "I have lived like an animal, but now I am dying like an angel."

Looking at the courage of this frail woman, 12 other women joined her. The Congregation of the Missionaries of Charity was begun in the same year India became a Republic - 1950. This was a very silent inauguration that has created a unique history for the past 70 years. Mother Teresa and her 12 companions take our minds back to Jesus and his 12 disciples. Today’s Gospel talks of the way in which Jesus inaugurated his public ministry. Today’s liturgy gives us an opportunity to think of inaugurations – their style and content.

The style of inauguration: In today’s Gospel, Matthew describes Jesus’ inauguration with the imagery of light. This imagery was already spoken of by Prophet Isaiah as we hear it from the first reading. “The people walking in darkness have seen a great light; on those living in the land of deep darkness a light has dawned.” (Isaiah 9: 2; Matthew 4:16) The imagery of light for inauguration is a lovely metaphor. I am thinking of two kinds of light symbolising the spectacular but empty inaugurations and the silent but meaningful ones. The two kinds of light are - lightning and sunlight.

Science tells us that each lightning bolt can contain up to one billion volts of electricity. Flash, bang… gone. Theoretically speaking, the average lightning bolt contains a billion volts at 3,000 amps, or 3 billion kilowatts of power, enough energy to run a major city for months. (http://www.mikebrownsolutions.com/tesla-lightning.htm) Till date, science has not discovered a way to store this energy. On the contrary, lightning has caused more damages than being useful. Commercial, political inaugurations can be compared to lightning.
As against this, imagine what sunlight can do and, actually, does to the world. Sunlight comes up not with a bang, not abruptly like a lightning, but very silently, imperceptibly. But, we know that without sunlight nothing can survive on earth. Jesus’ public ministry is compared to the sunlight.

Another aspect of inauguration is the content: The inaugural words of Jesus in his public ministry were: “Repent, for the kingdom of heaven has come near.” (Matthew 4: 17). His first action was to gather a few fishermen with an invitation: “Come, follow me.” (Matthew 4: 19). Repentance and following of Jesus are two key aspects of Christian life. All of us would easily agree that each Christian is called to repentance; but many of us would hesitate to affirm that every Christian is called to follow Jesus. We would think that ‘following Jesus’ is a privilege of the Religious and Priests.

Repentance and following of Jesus are basic to Christian calling and both are intrinsically connected. Repentance calls for some radical changes. Change is usually challenging. It is easier when these changes are external – like change of one’s profession, abode etc. But, when the change is internal like the one demanded by Jesus, it needs support. We are ready to change for a person whom we love. If we are drawn towards Jesus by love and if we are ready to follow Him, then we would be willing to change from within, even if this is very difficult. We have the examples of Simon, Andrew, James and John who were willing to change their entire life giving up their livelihood, their boats, nets… even their father!

Change is the cry of the hour… especially in India, as it is celebrating the 71st Republic Day. But, the question is: Where does the change begin – from inside or from outside? A few years back,
the Hindu – a daily in India – published an article of some youth who were questioned on what change they would want in India… They had mentioned the changes required at every walk of life from the government as well as from people. The title of the article hit the nail on the head: “Let’s be the change” (The Hindu, Bangalore Edition, Jan.24, 2014)

Let the change begin from…. Each of US!

Republic Day 2020:Quotes by key leaders

பொதுக்காலம் 3ம் ஞாயிறு - 71வது குடியரசு நாள்

சனவரி 26, இஞ்ஞாயிறன்று, இந்தியாவில், 71வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள், மன்னர்களின் முடியாட்சி, சில நூறு ஆண்டுகள், அன்னியரின் ஆதிக்கம், என்ற சுமைகளால் துன்புற்ற இந்திய மக்கள், இனி வேறு யாரும் எங்களை ஆட்சி செய்யவேண்டாம்; எங்களை நாங்களே ஆட்சி செய்வோம் என்று, 1950ம் ஆண்டு, சனவரி 26ம் தேதி, உலகறியப் பறைசாற்றிய நாள், குடியரசு நாள்.

குடியரசு, குடியாட்சி அல்லது, மக்களாட்சி என்ற சொல்லை வரையறுக்கும் பல இலக்கணங்களில், அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அளித்த இலக்கணம், அதிகப் புகழ்பெற்றது. மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று, லிங்கன் அவர்கள் சொன்ன இலக்கணத்தை எண்ணிப்பார்க்கும் வேளையில், அவர் சொன்ன வேறொரு கூற்றும் நினைவுக்கு வருகிறது: எல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது. என்பதே அக்கூற்று.
லிங்கன் அவர்கள் கூறிய இவ்விரு கூற்றுகளுக்கும் உள்ளார்ந்த தொடர்பு இருப்பதுபோல், இன்றைய அரசியல்வாதிகள் நடந்துகொள்கின்றனர். மக்களின் பெயரால் ஆட்சியைப் பிடித்துவிட்டு, பின்னர் அந்த மக்களையே அடக்கி ஆள்வது, இன்று, உலகின் அனைத்து நாடுகளிலும், அரசியல்வாதிகள் பின்பற்றும் 'ஏமாற்று வித்தையாக' உள்ளது.

1950ம் ஆண்டு, இந்திய மக்கள் பறைசாற்றிய குடியரசு உரிமையை, கடந்த 70 ஆண்டுகளாக, அரசியல்வாதிகள், சிறிது, சிறிதாகப் பறித்துக்கொண்டனர் என்பது, வேதனையான உண்மை. குறிப்பாக, அண்மைய சில ஆண்டுகளில், மத அடிப்படைவாதம், பணமதிப்பிழப்பு, குடியுரிமை சட்டத்திருத்தம், போன்ற கொடுமைகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இத்தகையச் சூழலில், குடியரசு என்ற உன்னதக் கனவை, மக்கள் கொண்டாடமுடியாமல் தவிக்கின்றனர்.

ஆயினும், ஒவ்வோர் ஆண்டும், அரசு சார்பில், குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாடங்களின் ஒரு முக்கிய நிகழ்வாக, மத்திய, மாநில அரசுகள், இராணுவம், காவல்துறை ஆகியவற்றின் சக்தியை விளம்பரப்படுத்த, அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இந்த அணிவகுப்புக்கள் வழியே, தங்கள் அடக்குமுறைகளை வலியுறுத்த நினைக்கும் அரசுகளுக்கு எதிராக, சாதாரண, எளிய மக்கள், அவ்வப்போது திரண்டு எழுவது, மக்கள் சக்தி என்ற உண்மையின் மீது நமது நம்பிக்கையை வளர்த்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன், 2017ம் ஆண்டு, சனவரி மாதம், பொங்கல் திருநாளையொட்டி, ஏறத்தாழ இரு வாரங்கள், தமிழகமெங்கும், உண்மையான குடியரசு விழா கொண்டாடப்பட்டதை அறிவோம். குடிமக்கள், கட்டுப்பாட்டுடன், தங்களையே வழிநடத்தமுடியும் என்பதையும், இளையோரின் சக்தி ஒருங்கிணைந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதையும், அந்நாள்களில் உலகிற்கு உணர்த்தினோம். 'ஜல்லிக்கட்டு' என்ற பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்காக, சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழ்நாட்டின் வேறுபல நகரங்களிலும், இளையோரும், மக்களும், இணைந்து மேற்கொண்ட அறப்போராட்டம், பெருமளவு வெற்றிபெற்றது.

இந்தப் போராட்டத்தை, மீண்டும் எண்ணிப்பார்க்க, இந்தியாவில், தற்போது, ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய நடுவண் அரசு, குடியுரிமை சட்டத்தில் மாற்றங்களைப் புகுத்தி, டிசம்பர் 12ம் தேதி வெளியிட்ட புதிய சட்டத்திற்கு, நாடெங்கும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, இளையோர், இந்த சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். அதிலும் சிறப்பாக, புது டில்லியில், பெண்களால் துவக்கப்பட்ட ஓர் அமைதியான மறியல் போராட்டம், ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

புதிதாகத் திணிக்கப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து, ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தை அடக்க, காவல் துறையினர்டிசம்பர் 15ம் தேதி, மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 16ம் தேதி, புது டெல்லியில், ஷாஹீன் பாக் (Shaheen Bagh) என்ற இடத்தில் துவங்கிய ஒரு மறியல் போராட்டம், நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களால் துவங்கப்பட்ட இந்த மறியல் போராட்டம், 40நாள்களைக் கடந்து, இன்னும் தொடர்ந்து வருகிறது என்பதும், இப்போராட்டத்தில், இளையோர், முதியோர், என்று, இருபால் இனத்தவரும் கலந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருநாளும் கலந்துவரும் 82 வயது நிறைந்த பெண்மணி ஒருவர், "நான் கடந்த 40 நாள்களுக்கு மேலாக, ஒவ்வொருநாளும், என் வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு, உடைகளை மாற்றிக்கொண்டு மீண்டும் இங்கு வந்துவிடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா, சுதந்திரமும், குடியரசும் அடைவதற்கு முன் பிறந்த இப்பெண்மணி, இதுவரை தான் எந்த போராட்டத்திலும் கலந்துகொண்டது கிடையாது என்றும், இம்முறை, தான் போராட்டத்தில் கலந்துகொள்ள முக்கியக் காரணம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

2017ம் ஆண்டின் துவக்கத்தில், தமிழ்நாட்டில், இளையோரும், மக்களும் மேற்கொண்ட 'ஜல்லிக்கட்டு' போராட்டமும், 2019ம் ஆண்டின் இறுதியில், இந்தியாவின் பல இடங்களில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து, மக்கள் மேற்கொண்டுள்ள இப்போதைய போராட்டங்களும், கட்டுப்பாட்டுடன் நடைபெறுவது, மக்கள் இயக்கம் என்ற கருத்திற்கு  சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன. எந்த ஒரு தனி மனிதரும், தன் சுய இலாபத்தைத் தேடிக்கொள்ளாமல், சமுதாயத்தின் நன்மைக்கென உழைப்பது, ‘மக்கள் இயக்கத்தின் இதயத் துடிப்பாக அமைகிறது.

தன்னலம் அறவே இல்லாத மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க, இறைமகன் இயேசு முயன்றார். 'இறையரசு' என்ற அவ்வியக்கத்தை உருவாக்க, அவர் மேற்கொண்ட முதல் முயற்சிகளை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இயேசு, தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், சீடர்கள் நால்வரை அழைத்ததையும், நற்செய்தியைப் பறைசாற்றியதையும், மக்களைக் குணமாக்கியதையும், இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.
இயேசு ஆரம்பித்த பணிவாழ்வினை, ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயாவும், அதே வரிகளை, நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.(எசாயா 9: 2; மத்தேயு 4: 16) என்ற அழகிய வரிகள் நம்மை சிந்திக்க அழைக்கின்றன.

விளம்பரங்களை நம்பி வாழும் அரசியல் கட்சிகளுக்கும், அர்த்தமுள்ள, பயனுள்ள பணியாற்றும் மக்கள் இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க, ஒளி, ஓர் அழகிய உருவகம். ஒளியின் இரு வடிவங்களாக, நாம் காணும் மின்னலும், சூரியஒளியும் இந்த வேறுபாட்டை அழகாக விளக்குகின்றன.
அரசியல் கட்சிகளை, மின்னலுக்கு ஒப்பிடலாம். பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலிலும், மனிதர்களுக்குத் தேவையான கோடான கோடி வாட்ஸ் (Watts) மின்சக்தி வெளிப்படுகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால், அச்சக்தியைச் சேமித்து வைக்கும் கருவிகள் இல்லாததால், மின்னல்கள், பயனின்றி, தோன்றி மறைகின்றன. பலவேளைகளில், மின்னல்களின் தாக்குதல், தீமைகளை விளைவிப்பதும் உண்டு. அரசியல் கட்சிகள், மின்னலைப் போன்றவை.

இதற்கு மாறானது, சூரியஒளி. இரவு முடிந்து, பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு ஒளிக் கீற்றுக்களாய், உதயம் உருவாகும். ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாய் உதிக்கும் சூரியஒளியால், பல்லாயிரம் உயிர்கள் பயனடைகின்றன. இயேசுவின் பணி வாழ்வு, பகலவனைப் போல் உதயமானது.
மின்னலைப்போல் பளீரெனத் தோன்றிய பல நிறுவனங்கள், பல அரசியல் கட்சிகள் வரலாற்றில் எவ்விதச் சுவடும் பதிக்காமல் சென்றுள்ளன. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லத் தேவையில்லை.

இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் எடுத்துக்காட்டாக, புனித அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த, பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். உடலெல்லாம் புண்ணாகி, நாற்றம் எடுத்து, சாக்கடைக்கருகில் சாகக்கிடந்த ஒரு நோயாளிக்குச் செய்த பணியில் ஆரம்பமானது, இத்துறவுச்சபை. பிறந்த நாட்டைவிட்டு, வேறொரு நாட்டில், தனியொரு பெண்ணாக, அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த அற்புதப் பணிக்கு எந்த ஆரம்பவிழாவும், நடத்தவில்லை. அந்த அன்னையின் மன உறுதியைக் கண்டு, இன்னும் 12 பெண்கள் அவருடன் சேர்ந்தனர்.
இந்தியா குடியரசாக மாறிய 1950ம் ஆண்டு, அன்னை தெரேசா அவர்கள் உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையும் செயலாற்றத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 70 ஆண்டுகளாக, இத்துறவு சபை, உலகெங்கும், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தன் பணிகளைத் தொடர்கின்றது. அர்த்தமுள்ள ஒரு வரலாறு எழுதப்பட்டு வருகின்றது.
பிறரன்புப் பணிக்கென தன்னையே அர்ப்பணித்த ஓர் அன்னையைச் சுற்றி 12 பெண்கள் கூடிவந்தனர் என்ற இந்த வரலாற்றுக் குறிப்பு, நம் நினைவை 20 நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச்செல்கிறது. அன்று நிகழ்ந்ததை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த நிகழ்வையும், தன் பன்னிரு சீடர்களில் ஒரு சிலரை அழைத்ததையும் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஆர்ப்பாட்டம் ஏதுமற்ற, அடக்கமான, ஆழமான ஆரம்பம் இது.

ஒவ்வொரு தலைவனும், தன் பணியைத் துவக்கும் வேளையில், மக்கள் முன்னிலையில் சொல்லும் முதல் சொற்கள், செய்யும் முதல் பணி ஆகியவை, அத்தலைவன் எப்படிப்பட்டவர் என்பதை, மக்களுக்குக் காட்டும் அடையாளங்கள். இயேசு என்ற தலைவன், தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், மக்கள் முன் சொன்ன முதல் செய்தியை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்: "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." (மத்தேயு 4:17; மாற்கு 1:15) என்பதே, இயேசு கூறிய முதல் சொற்கள் என்று, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் பதிவு செய்துள்ளனர். இச்செய்தியைத் தொடர்ந்து, இயேசு செய்த முதல் பணி, தன் பின்னே வரும்படி, ஒரு சில மீனவர்களை அழைத்தது.

உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசு, மக்கள் முன், தன் பொதுவாழ்வை ஆரம்பித்த விதம், ஏமாற்றம் தருவதாக உள்ளது. பெரும் புதுமையொன்றைச் செய்து, அவர் தன் பொதுவாழ்வை ஆரம்பித்திருக்கலாம். இதைத்தான் அலகை அவருக்குச் சொல்லித்தந்தது. எருசலேம் ஆலயத்தின் உச்சியிலிருந்து அவரை குதிக்கச்சொன்னது. (மத். 4:5-7; லூக். 4:9-12) ஆலய கோபுரத்திலிருந்து இயேசு குதித்திருந்தால், அதுவும் எருசலேம் கோவில் திருவிழாவையொட்டி, அவர் அவ்வாறு செய்திருந்தால், ஒரு நொடியில், ஒரு மின்னலைப்போல், மக்களின் தலைவராக மாறியிருக்கலாம். ஆனால், இயேசுவோ, தன் பணிவாழ்வை, ஆரம்பித்த விதம், பகலவனின் உதயத்தைப்போல், அமைதியாக இருந்தது. அவர் முதன்முதலாகச் சொன்ன வார்த்தைகள், புதிராகவும் இருந்தன. "மனம் மாறுங்கள்" என்று மக்களுக்குச் சொன்னார். "என் பின்னே வாருங்கள்" என்று மீனவர்கள் சிலரிடம் சொன்னார். கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்கள் இவை: மனமாற்றம், இயேசுவைப் பின்தொடர்தல்.

மனமாற்றம், அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தேவையானது. இதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், இயேசுவைப் பின்தொடர்தல் என்பது, துறவறத்தார், அருள்பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் தேவையானது; அது, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அல்ல என்பது, நாமாகவே எடுத்துக்கொண்ட ஒரு முடிவு. ஆழச் சிந்தித்தால், மனம் மாறுவதும், இயேசுவைப் பின்தொடர்வதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்ற உண்மை விளங்கும்.
மாற்றம் உருவாக, குறிப்பாக, மனமாற்றம் உண்டாக, ஒரு முக்கிய உந்துதலாக இருப்பது, அன்பு, பாசம், காதல். நாம் மற்றொருவர்மீது ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது, அந்த இன்னொருவருக்காக, நமக்குள் எத்தனையோ அடிப்படை மாற்றங்களைச் செய்துகொள்ள தயாராகிறோம்.

கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்களான மனம் மாறுங்கள், என் பின்னே வாருங்கள் என்ற இந்த இரு அழைப்புக்களையும் நாம் இவ்விதம் இணைத்துப்பார்க்க முடியும். இயேசுவின் மீது கொண்ட ஆழமான ஈடுபாட்டால், அவரைப் பின்செல்ல நாம் ஆரம்பித்தால், மனமாற்றங்கள், வாழ்வின் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். தங்கள் வாழ்வின் ஆதாரங்களாய் இருந்த மீன்பிடிக்கும் தொழில், படகுகள், தங்கள் தந்தை என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, இயேசுவைப் பின்சென்ற சீடர்களின் வாழ்வு, முற்றிலும் மாறியதைப்போல், நமது வாழ்வும், இயேசுவின்மீது கொண்ட ஈடுபாட்டால், முற்றிலும் மாறவேண்டும் என்ற ஆவலுடன், அவரைப் பின்தொடர முயல்வோம்.

மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது, 'மாற்றங்கள் நாமாக இருப்போம்' (‘Let’s be the change’ – The Hindu, January 24, 2014) என்ற தலைப்புடன், இந்திய நாளிதழ் ஒன்றில், சில ஆண்டுகளுக்குமுன் வந்த ஒரு செய்தி மனதில் தோன்றுகிறது. அன்றையச் சூழலில், அணுகிவந்த பாராளுமன்றத் தேர்தலும், குடியரசு நாளும் இளையோர் மனதில் உருவாக்கிய ஒரு முக்கிய எண்ணம் என்ன என்று அந்த நாளிதழ், கருத்து கேட்டபோது, இளையோரில் பலர் கூறியது இதுதான்: "இந்தியாவில் எத்தனையோ நல்ல மாற்றங்கள் தேவை. அந்த மாற்றங்கள் என்னிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்று விரும்புகிறேன்" என்ற அற்புதமான கருத்து, பல இளையோரிடமிருந்து வந்தது. இந்த உறுதி, இளையோர் அனைவரிடமும் பரவினால், இந்தியா, நிச்சயம், ஒரு தலைசிறந்த குடியரசாக தலைநிமிர்ந்து நிற்கும். நாளையத் தலைமுறையினர், இந்தியாவை நல்வழியில் அழைத்துச் செல்வர் என்று நம்பிக்கை கொள்வோம்.

சுற்றுச்சூழல் பிரச்சனை, அரசு இயந்திரங்களின் அத்துமீறிய அடக்குமுறை, என்ற பிரச்சனைகளை அறிவுசார்ந்த முறையில் எதிர்கொள்ள இளையோர் திரண்டு வருவது நல்லதோர் அடையாளம். இளையோரின் முயற்சிகளை முறியடிக்க, அவர்களுக்கு, மதம், மொழி என்ற வெறிகளை ஊட்டி, பிரிக்க முயலும் அரசியல்வாதிகளின் தந்திரங்களை இன்றைய இளையோர் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர் என்பது, நம்பிக்கை தரும் செய்தி.
17 வயது நிறைந்த சுவீடன் நாட்டு இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்களைத் தொடர்ந்து, தங்கள் எதிர்காலத்திற்காக, குறிப்பாக, சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்க, இளையோர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், நம்பிக்கை தருகின்றன. அதேபோல், சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக, ஹாங்காங் இளையோர் நிகழ்த்திவரும் போராட்டங்கள், சிலே, வெனிசுவேலா போன்ற நாடுகளில், இளையோரின் போராட்டங்கள், இந்திய நடுவண் அரசின் பிரித்தாளும் அரசியல் சட்டங்களுக்கு எதிராக, இளையோர் மேற்கொண்டுவரும் போராட்டங்கள், நம்பிக்கையைத் தருகின்றன.
அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளையோருக்குத் தோள்கொடுப்போம். அவர்களை, நம் செபங்களால் தாங்கி நிற்போம்.