Statue of Christ, by Thorvaldsen
2nd Sunday in Ordinary Time
In the Evangelical Lutheran
Church in Copenhagen , Denmark ,
there is a magnificent statue of Jesus by the noted sculptor Bertel
Thorvaldsen. It is called ‘Christus’. When Thorvaldsen first completed the clay
sculpture in his studio, he gazed upon the finished product with great
satisfaction. It was a sculpture of Christ with His face looking upward and
arms raised heavenward. It was a statue of a majestic, conquering Christ. Later
that night, however, after the sculptor had left his fine new work in clay to
dry and harden, something unexpected occurred.
Sea mist
seeped into the studio in the night. The clay did not harden as quickly as
anticipated. The upraised arms and head of the sculpture began to droop. The
majestic Christ with arms lifted up and head thrown back was transformed into a
Christ with head bent forward and arms stretched downward as if in a pose of
gentle invitation. When Thorvaldsen saw this ‘transformation’, he was bitterly
disappointed. As he studied the transformed sculpture, however, he came to see
a dimension of Christ that had not been real to him before. It was the Christ
who is a gentle, merciful Savior. Thorvaldsen inscribed on the base of the completed
statue, "Kommer til mig" ("Come to me") and that picture of
the Lamb of God in His mercy has inspired millions. (Fr. Anthony Kadavil)
The
Christus was not well known outside of Denmark until 1896, when an
American textbook writer wrote that the statue was "considered the most
perfect statue of Christ in the world." Its replicas were made in many
countries around the world. A full-size replica of the Christus is located in
The Johns Hopkins Hospital in Baltimore ,
Maryland ; the hospital refers to
the statue as Christus Consolator. (Wikipedia)
When I read
that Christus was "considered the most perfect statue of Christ in the
world", I began to imagine a scene with Jesus. Suppose the original
version of Thorvaldsen’s statue of Jesus with arms extended upwards was
presented along with the final design created by the sculptor, with Jesus
extending his arms in a gesture of invitation, and if Jesus was asked to choose
one of those statues as a ‘perfect introduction’ of him to the world, we are
sure, that He would have chosen the second version of Christ with ‘Come to me’
invitation. Jesus would like to be introduced to the world as the
compassionate, gentle shepherd inviting and embracing everyone, than a
triumphant king with His eyes and arms raised up.
In today’s
Gospel, Jesus is introduced in a similar way by John the Baptist. The
next day John saw Jesus coming toward him, and said, “Behold, the Lamb of God,
who takes away the sin of the world!” (John 1:29) This is the opening
verse of this Sunday’s Gospel.
This is the
third week in a row that Jesus is ‘introduced’ during the Sunday liturgy. On
January 5, the Feast of the Epiphany, Jesus was revealed to the wise men from
the East. This episode is given only in the Gospel of Matthew. On January 12,
the Feast of the Baptism, Jesus was revealed as ‘the Beloved Son’ in Jordan .
This account is recorded in the synoptic gospels – Matthew, Mark and Luke.
Today, we are given the account of John (John 1:29-34) where John the Baptist
introduces Jesus to his disciples.
In the
Gospel of John the first chapter deals with quite a few introductions. It
begins with the Prologue where Jesus is introduced as the ‘Word’ (Jn. 1: 1-18).
Then comes the self-introduction of John the Baptist (Jn. 1:19-28). John does
not hesitate to emphatically tell the people that he was ‘neither the Christ
(the Messiah), nor Eli′jah, nor the prophet’, but only ‘the voice of one crying
in the wilderness’.
The next
day (after his self-introduction), when John saw Jesus approaching him, he
could have easily pointed out to the people, who were eagerly awaiting the
arrival of the Messiah, – “Behold the Messiah”. That would have been a perfect
way of launching Jesus the hero. But, instead, John declared Jesus as ‘the Lamb
of God’. The figure of the Messiah (or Christ) has the notion of anointing, as
well as a regal or priestly status. Instead of introducing Jesus as the
anointed king or a high priest, John uses the figure of the Lamb. This,
according to the worldly standard, was not the best impression!
In English,
we use the expression – “the first impression is the best impression”. When a
person is introduced, we take care to present that person at his/her best. John
chooses to introduce Jesus as the Lamb. The Lamb is the symbol of sacrifice,
bearer of sin, a dish to be shared as a meal, as well as a shield – as in the
case of the Paschal night when the blood of the lamb protected the Israel .
Between the titles – Messiah, Christ or Lamb, one can imagine that Jesus would
have preferred the title of the ‘Lamb’.
The present
day world with its penchant for advertising, where exaggerated and artificial
titles are given to leaders, actors and players, (especially in countries like
India), we are asked to examine ourselves and see how we would like to be
introduced and remembered in this world.
There have
been and still are very many noble persons who would like to be remembered for
what they stand for, rather than cheap popularity. One such noble soul is –
Martin Luther King Junior. Two months before his assassination, Dr. Martin
Luther King, Jr., spoke to his congregation at Ebenezer
Baptist Church
in Atlanta
about his death in what would oddly enough become his eulogy:
Every
now and then I guess we all think realistically about that day when we will be
victimized with what is life's final common denominator--that something we call
death. We all think about it and every now and then I think about my own death
and I think about my own funeral. And I don't think about it in a morbid sense.
And every now and then I ask myself what it is that I would want said and I
leave the word to you this morning.
If any
of you are around when I have to meet my day, I don't want a long funeral. And
if you get somebody to deliver the eulogy tell him not to talk too long… Tell
him not to mention that I have a Nobel Peace Prize--that isn't important. Tell
not to mention that have 300 or 400 other awards--that's not important…
I'd like
somebody to mention that day that Martin Luther King Jr. tried to give his life
serving others. I'd like for somebody to say that day that Martin Luther King
Jr. tried to love somebody.
I want
you to say that day that I tried to be right and to walk with them. I want you
to be able to say that day that I did try to feed the hungry. I want you to be
able to say that day that I did try in my life to clothe the naked. I want you
to say on that day that I did try in my life to visit those who were in prison.
And I want you to say that I tried to love and serve humanity.
Yes, if
you want to, say that I was a drum major. Say that I was a drum major for
justice. Say that I was a drum major for peace. I was a drum major for
righteousness. And all of the other shallow things will not matter.
I won't
have any money to leave behind. But I just want to leave a committed life
behind. And that is all I want to say. - Martin Luther King, Jr.
At the
request of his widow, these recorded words of Dr. King's last sermon were
played at his funeral. https://genius.com
On Monday,
January 20, we celebrate the Martin Luther King Junior Day.
When the
commercial world tries to assert one’s real worth in terms of possessions,
power and popularity, our liturgical readings today assert that one’s real
worth comes from being honoured in the eyes of the Lord. This is the core of
the first reading today
Isaiah
49:1,5
The
LORD called me from the womb, from the body of my mother he named my name… And
now the LORD says, who formed me from the womb to be his servant, to bring
Jacob back to him, and that Israel
might be gathered to him, for I am honored in the eyes of the LORD, and my God
has become my strength.
A person
who can discover his real worth and thus respect him/herself, is capable of
respecting others. This is illustrated in the Gospel. St John the Baptist was
already a popular preacher. If he had chosen to remain popular, he could have
done so, ignoring Jesus walking towards him. But, the moment John saw Jesus, he
knew that the one superior to him had arrived and he did not hesitate to
acknowledge it (John 1: 29-34).
Jesus on
his part, showered on John one of the best compliments ever given to a human
being – Matthew 11:11. We came across this passage just a few weeks back (III
Sunday of Advent). Acknowledging another as superior to oneself should spring
from one’s own self appreciation. Otherwise, it would be false humility and
would sound faked and hollow. John and Jesus were self-assured, self-respecting
persons and hence they were able to appreciate and respect the other. If only
our world is filled with persons who love and respect themselves and out of that
self-respect, appreciate and respect others, we could build a community of
great persons.
A final
thought on the Christian Unity week – Jan 18-25… When we get introduced
to one another, there is a subtle danger of unconscious walls being raised in
terms of “We, You, They” or “Us vs Them”. In our reflection today, we have used
terms like Evangelical Lutheran
Church , Baptist Church etc. This is the
sad reality that is a thorn in the Mystical Body of the Lamb. Every year,
before the Feast of the Conversion of St Paul (January 25), the Catholic Church
observes a week-long or an octave of prayer for the Unity of Christians. Let us
unite ourselves with all Christians who are praying for a lasting unity among
Christian denominations!
All over
the world, there are more walls raised than bridges built. Such divisions
unfortunately has affected the Christian world too. Let me close with the
famous quote from Dr Martin Luther King Jr., calling for more unity in the
world and with nature: “It really boils down to this: that all life is
interrelated. We are all caught in an inescapable network of mutuality, tied in
a single garment of destiny. Whatever affects one directly, affects all
indirectly. We are made to live together because of the interrelated structure
of reality.” - Dr. Martin Luther King Jr, 1967.
John –
Behold the Lamb of God
பொதுக்காலம் 2ம் ஞாயிறு
டென்மார்க்
நாட்டின் கோபன்ஹேகன் (Copenhagen) நகரிலுள்ள எவாஞ்செலிக்கல் லூத்தரன்
கோவிலில், இயேசுவின் அழகியதொரு திருஉருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
Christus என்றழைக்கப்படும் இச்சிலையை, Bertel Thorvaldsen
என்ற சிற்பி வடிவமைத்தார்.
பளிங்குக்
கல்லில் இயேசுவின் உருவத்தைச் செதுக்க விழைந்த பெர்டெல் அவர்கள், அதை, முதலில், களிமண்ணால் உருவாக்கினார். அவர் வடிவமைத்த உருவத்தின்
முகமும், இரு கரங்களும் விண்ணை நோக்கி உயர்ந்திருப்பதைப்
போல் அமைந்திருந்தன. களிமண்ணால் உருவாக்கப்பட்ட அச்சிலை, காய்ந்து கடினமாவதற்கு, பெர்டெல் அவர்கள், அதை, தன் கலைக்கூடத்தில், இரவு முழுவதும் விட்டுச்சென்றார்.
அன்றிரவு, கடலிலிருந்து வீசிய பனிக்காற்று, அக்கலைக்கூடத்தில் புகுந்து, களிமண்ணால் செய்யப்பட்டிருந்த இயேசுவின் உருவத்தை மேலும் ஈரமாக்கியது.
உயர்த்தப்பட்ட கரங்களுடனும், விண்ணை நோக்கிய முகத்துடனும் வெற்றியை
உணர்த்தும்வண்ணம் பெர்டெல் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இயேசுவின் உருவம், அந்த ஈரப்பதத்தின் காரணமாக,
சிரம் தாழ்த்தி, கரங்களை கீழ் நோக்கி விரித்து, அனைவரையும்
அணைப்பது போல் மாறியிருந்தது.
அடுத்த
நாள் காலையில், கலைக்கூடம் வந்து சேர்ந்த சிற்பி பெர்டெல் அவர்கள், மாற்றமடைந்திருந்த அவ்வுருவத்தைக் கண்டு, அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தார். ஆனால், ஓரிரவில்,
தானாகவே மாற்றமடைந்திருந்த இயேசுவின் உருவம்,
அதுவரை தான் எண்ணிப்பார்க்காத
ஓர் அழகிய இயேசுவை, தனக்குக் காட்டியதாக, சிற்பி பெர்டெல் அவர்கள் உணர்ந்தார். சிரம்
தாழ்த்தி, கரங்களை விரித்து நின்ற அந்த உருவத்தை அவர்
பளிங்குக் கல்லில் செதுக்கி, அந்த உருவத்திற்கு அடியில், "Kommer
til mig" ("Come to me") அதாவது, "என்னிடம் வாருங்கள்" (மத். 11:28) என்ற சொற்களைப் பொறித்தார்.
1838ம்
ஆண்டு, Bertel Thorvaldsen அவர்கள் உருவாக்கிய இந்த உருவச்சிலை, டென்மார்க் நாட்டைத் தாண்டி, வெளி
உலகில் அறிமுகமாகவில்லை. 1896ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில், கலைக் கருவூலங்களைக் குறித்து எழுதப்பட்ட ஒரு நூலில், இச்சிலை, "கிறிஸ்துவின் மிகச் சிறந்த உருவச்சிலை"
என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இச்சிலையின்
பல்வேறு பிரதிகள், உலகின் வெவ்வேறு நாடுகளில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோர் நகரில்
உள்ள ‘த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை’யில் (The Johns
Hopkins Hospital) வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள
அச்சிலை, "ஆறுதல் தரும் கிறிஸ்து" (Christus
Consolator) என்று அழைக்கப்படுகிறது.
வெற்றிப்
பெருமிதத்துடன் விண்ணகம் நோக்கி தன் கண்களையும், கரங்களையும்
உயர்த்தியிருந்த உருவத்தையும், 'என்னிடம் வாருங்கள்' என்று அழைப்பதுபோல் தன் கண்களையும், கரங்களையும் இவ்வுலகை நோக்கித் திருப்பியிருந்த உருவத்தையும், இயேசுவுக்கு காட்டி, அவரை, உலகிற்கு அறிமுகப்படுத்த
எந்த உருவம் பொருத்தமாக இருக்கும் என்று கேட்டால், இயேசுவின்
பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதை, நாம் எளிதில் கற்பனை செய்யமுடியும். இரக்கம், கருணை, வரவேற்பு என்ற பல பண்புகளை வெளிப்படுத்தும்வண்ணம், "என்னிடம் வாருங்கள்" என்று அழைக்கும் வடிவில் தான் அறிமுகமாவதையே
இயேசு விரும்புவார்.
அத்தகைய
ஓர் அறிமுகம், இன்றைய ஞாயிறு வழிபாட்டில் நமக்குத் தரப்பட்டுள்ளது. "இதோ!
கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்."
(யோவான் 1:29) என்று, திருமுழுக்கு யோவான், இயேசுவை அறிமுகம் செய்துவைக்கும்
நற்செய்திக்கு செவிமடுக்கவும், அவ்வாறு அறிமுகமாகும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும்,
இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
மூன்று
வாரங்களாக, இயேசுவை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள்,
நமது ஞாயிறு திருவழிபாடுகளில் இடம்பெற்று வருகின்றன. சனவரி 5ம் தேதி, ஞாயிறன்று, நாம் கொண்டாடிய திருக்காட்சிப்
பெருவிழாவன்று, குழந்தை இயேசு, கிழக்கிலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த ஞானிகள் வழியே, உலகினர் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த அறிமுகம்,
மத்தேயு நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ளது. சனவரி 12, கடந்த ஞாயிறன்று, யோர்தான் நதியில் மக்களோடு மக்களாக
நின்று திருமுழுக்கு பெற்ற இயேசுவை, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே"
(மத்.
3:17) என்று விண்ணகத்
தந்தை அறிமுகம் செய்துவைத்தார். இந்த அறிமுகம்,
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும்
பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று, மூன்றாவது வாரமாக, இயேசு வேறொரு வழியில் அறிமுகமாகிறார். இந்த அறிமுகம், யோவான் நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ளது.
யோவான்
நற்செய்தியின் முதல் பிரிவில் பல அறிமுகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நற்செய்தியின்
ஆரம்பமே ஓர் இறையியல் அறிக்கையாக அமைந்துள்ளது. அந்த அறிக்கையில், இயேசு, இறைவனுடன் வாழ்ந்த வாக்கு என்றும், அந்த வாக்கு மனிதரானார் என்றும் அறிமுகமாகிறார் (யோவான்
1:1-18).
இதைத்
தொடர்ந்து, திருமுழுக்கு யோவானின் அறிமுகம் இடம்பெறுகிறது.
அவர், தான் மெசியாவோ, எலியாவோ, இறைவாக்கினாரோ அல்ல, தான் பாலைநிலத்தில் ஒலிக்கும் குரல் என்று தன்னையே அறிமுகம் செய்கிறார்
(யோவான் 1:19-28).
மறுநாள், அதாவது, தான் யார் என்று மக்களுக்கு அறிமுகம்
செய்துகொண்ட மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!..."
என்றார்
(யோவான் 1:29). இன்றைய நற்செய்தி இவ்வாறு ஆரம்பமாகிறது.
"நான் மெசியா அல்ல" (யோவான் 1:19) என்று முந்தின நாள் திட்டவட்டமாகக் கூறிய
திருமுழுக்கு யோவான், மறுநாள், இயேசுவைக் கண்டதும், 'இதோ மெசியா' என்று அவரை அறிமுகம் செய்திருக்கலாம்.
ஆனால், அதற்கு மாறாக, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" (யோவான் 1:29) என்று அவரை அறிமுகம் செய்து வைக்கிறார்.
'மெசியா' என்ற சொல்லின்
முதல் பொருள், 'அர்ச்சிக்கப்பட்டவர்' என்றாலும், அந்த அர்ச்சிப்பின் விளைவாக, அவர் ஓர் அரசராக, தலைமைகுருவாக மாறும் நிலையும் அச்சொல்லுடன்
இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி, அதிகாரம் என்ற எண்ணங்களுடன் தொடர்புள்ள 'மெசியா' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், 'ஆட்டுக்குட்டி' என்ற சொல்லின் வழியே, இயேசுவின் பணிவாழ்வை அறிமுகப்படுத்துகின்றனர், திருமுழுக்கு யோவானும்,
நற்செய்தியாளர் யோவானும்.
ஒருவரை
முதல் முறையாகச் சந்திக்கும்வேளையில், அல்லது, அவர் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்படும் வேளையில், அவரைப்பற்றி நம் மனதில் பதியும் உருவம், எண்ணம் ஆகியவை ஆழமானதாக,
நீண்ட காலம் நீடிப்பதாக
அமையும் என்பதைக் கூற ஆங்கிலத்தில், "First impression is the best impression" என்ற கூற்று பயன்படுத்தப்படுகிறது. இதை மனதில் கொண்டே, ஒருவர் அறிமுகமாகும் வேளையில், அவரைப்பற்றி
சொல்லப்படும் கருத்துக்களில் அதிக கவனம் செலுத்தப்படும்.
'ஆட்டுக்குட்டி' என்ற சொல்லில், பலியாகுதல், பாவங்களைச் சுமத்தல், விருந்தில் உணவாகுதல் போன்ற எண்ணங்கள்
வெளிப்படுகின்றன. கூடுதலாக, பாஸ்கா இரவன்று, ஆட்டுக்குட்டியின் இரத்தம், கதவு நிலைகளில் பூசப்பட்டதால், இஸ்ரயேல் மக்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டனர். எனவே, 'ஆட்டுக்குட்டி' மக்களின் கவசமாகவும் அமைந்தது.
பலியாதல், பழிதீர்த்தல், உணவாதல், உயிர்களைக் காத்தல் என்ற அனைத்து
அர்த்தங்களும் இயேசுவுக்கு அற்புதமாகப் பொருந்தியிருந்ததால், அவரை, திருமுழுக்கு யோவான், "கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று அறிமுகப்படுத்தினார்.
யோவான்
நற்செய்தி முதல் பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த அறிமுகங்கள், குறிப்பாக, இயேசு, 'கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று அறிமுகமாகும் இன்றைய நற்செய்தி, மனித வாழ்வில் நிகழும் அறிமுகங்கள், அவற்றில் பொதிந்திருக்கும் பொருள்
ஆகியவற்றைச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது.
விளம்பரத்தை
விரும்பும் இன்றைய உலகில், 'மக்கள் திலகம்', 'சூப்பர் ஸ்டார்', 'சாதனைப் புலி', 'லிட்டில் மாஸ்டர்'... போன்ற மிகைப்படுத்தப்பட்ட பட்டங்கள் வழியே தலைவர்கள், நடிகர்கள், மற்றும், விளையாட்டுவீரர்கள் அறிமுகம்
செய்துவைக்கப்படுவதை நாம் அறிவோம். இவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களில் பூசப்பட்டிருக்கும்
செயற்கைத்தனம், நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் நிரப்புகின்றது.
இத்தகைய
ஒரு சூழலில், தங்கள் வாழ்வை மக்களின் நலனுக்காகக் கையளித்த
பல உன்னத மனிதர்கள், தாங்கள் எவ்வாறு நினைவுகூரப்படவேண்டும்
என்பதைக் குறித்து தெளிவான எண்ணங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கறுப்பினத்தவரின் சம உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர்.
1968ம்
ஆண்டு, தன் 39வது வயதில் கொல்லப்பட்ட மார்ட்டின்
லூத்தர் அவர்கள், இறப்பதற்கு இரு மாதங்களுக்கு முன், அட்லான்டா நகரில், அவர் மேய்ப்புப்பணி ஆற்றிவந்த எபனேசர் பாப்டிஸ்ட்
ஆலயத்தில், தன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் அன்று தன் உரையில் கூறிய ஒரு சில எண்ணங்கள் இதோ:
"அவ்வப்போது
நான் என் மரணத்தையும், இறுதி ஊர்வலத்தையும் பற்றி நினைப்பதுண்டு.
என் அடக்கச் சடங்கில் என்ன சொல்லப்படும் என்பதையும் எண்ணிப் பார்த்திருக்கிறேன். உங்களில்
யாராவது அவ்வேளையில் உயிரோடு இருந்தால்,
என் அடக்கச்
சடங்கில் மறையுரை வழங்குபவரிடம், என்னைப்பற்றி அதிகம் பேசவேண்டாம்
என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
நான்
உலக அமைதி நொபெல் விருது பெற்றதைச் சொல்லவேண்டாம். அதேவண்ணம், நான் பெற்றுள்ள ஏனைய விருதுகளைக் குறித்து சொல்லவேண்டாம். அவை முக்கியமல்ல.
மார்ட்டின்
லூத்தர் கிங் ஜுனியர், தன் வாழ்வை, மற்றவர்களுக்குப் பணியாற்றுவதற்காக வழங்கினார் என்று, அந்த மறையுரையாளர் சொல்லட்டும். பசித்தோருக்கு உணவளிக்கவும், ஆடையற்றோரை உடுத்தவும் நான் முயன்றேன். சிறைப்பட்டோரைச் சந்திக்க
முயன்றேன். மனித குலத்திற்குப் பணியாற்ற முயன்றேன். மறையுரையாளர் இவற்றையெல்லாம் சொல்லட்டும்.
நான்
எனக்குப்பின், சொத்துக்களை விட்டுச்செல்லப் போவதில்லை.
ஆனால், ஒரு குறிக்கோளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட
வாழ்வை விட்டுச் செல்வேன். அதைமட்டும்,
என் அடக்கச்
சடங்கில் சொல்லுங்கள்" என்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறினார். இந்த
உரை வழங்கிய இரு மாதங்களில், 1968 ஏப்ரல் 4ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்.
தன் மரணத்தைக்
குறித்தும், தான் எவ்வாறு நினைவுகூரப்படவேண்டும் என்பது
குறித்தும் அவர் வழங்கிய உரை, அன்று பதிவு செய்யப்பட்டதால், இரு மாதங்களுக்குப் பின்,
அவரது அடக்கச் சடங்கில்,
அவ்வுரை மீண்டும் ஒலிபரப்பானது.
மக்களால்
தான் எவ்விதம் நினைவுகூரப்படவேண்டும் என்பதில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் மிகத்
தெளிவான எண்ணங்கள் கொண்டிருந்தார். 1929ம் ஆண்டு, சனவரி 15ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர்
அவர்கள் பிறந்ததையடுத்து, அவரது பிறந்தநாள், அமெரிக்க ஐக்கிய நாட்டில்,
மார்ட்டின் லூத்தர்
கிங் ஜுனியர் நாள் என்று, ஒவ்வோர் ஆண்டும், சனவரி மாதம் மூன்றாம் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 20, இத்திங்களன்று மார்ட்டின் லூத்தர்
கிங் ஜுனியர் நாள் சிறப்பிக்கப்படுகிறது.
நாம்
யார், நாம் எவ்வாறு இவ்வுலகில் நம் அடையாளத்தைப்
பதிக்கப்போகிறோம், எவ்வகையில் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற
விழைகிறோம் என்பனவற்றைக் குறித்த தெளிவுகள் நமக்குத் தேவை. இத்தகையத் தெளிவு
இல்லாதபோது, அவரைப் போல், இவரைப் போல் என்று போலி முகமூடிகளை
அணிந்து வாழவேண்டியிருக்கும். இத்தகையத் தெளிவு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பை நமக்குள்
உருவாக்கும். வேறு யாரும் நம்மை மதிப்பதற்கு முன், நமது பார்வையில்
நாம் மதிப்புப் பெறவேண்டும். நமது பார்வையில்,
இறைவன் பார்வையில்
நாம் மதிப்பு பெற்றவர்கள் என்பதை இறைவாக்கினர் எசாயாவைப்போல், நாமும், நெஞ்சுயர்த்திச்
சொல்ல இயலும்.
இறைவாக்கினர்
எசாயா 49: 3, 5
ஆண்டவர்
என்னிடம், நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன் என்றார்... கருப்பையிலிருந்தே
ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்: ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்.
ஒவ்வொருவரும்
அவரவர் பார்வையில் மதிப்புப் பெறும்போதுதான்,
அடுத்தவரையும் நம்மால்
மதிக்கமுடியும். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் திருமுழுக்கு யோவான், இதற்கு
நல்லதோர் எடுத்துக்காட்டு. தன்னைச் சுற்றிலும் எப்போதும் அலைமோதும் கூட்டத்தை யோவான்
தன்வசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால், அப்படியே செய்திருக்க முடியும். தன்னைச் சுற்றி வாழ்க என்று கூறும்
கூட்டத்தை வைத்து தன் மதிப்பை யோவான் உணரவில்லை. இறைவனின் வழியை ஏற்பாடு செய்வதில்தான்
தன் மதிப்பு அடங்கியுள்ளது என்று அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். எனவே, தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார்
என்பதை உணர்ந்ததும், அவர் மக்களின் கவனத்தை இயேசுவின் பேரில்
திருப்பினார். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.
யோவான்
நற்செய்தி 1:29-30
இயேசு
தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்,
“இதோ!
கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” என்றார்.
தன்னை
விட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று சொல்வதற்கு, வார்த்தையளவில் ஒலிக்கும் தாழ்ச்சி
மட்டும் போதாது. தன்னம்பிக்கையும், தன்னைப் பற்றியத் தெளிவும் தேவை.
இத்தகையத் தெளிவும், நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப்
பேசும்போது, அதில் ஓர் ஏக்கம், ஒரு போலியான தாழ்ச்சி தெரியும். தன்னைப் பற்றிய உயர்வான எண்ணங்களும், தன்னைப் பற்றிய சரியான மதிப்பும் கொண்டிருந்தால் மட்டுமே அடுத்தவரை
உயர்வாக எண்ணமுடியும், மதிக்கமுடியும்.
நாம்
ஒவ்வொருவரும் நம்மைப்பற்றி உண்மையான, உயர்வான மதிப்பு கொள்ளவும், அதன் பயனாக, மற்றவர்களையும் உயர்வாக மதிக்கவும்,
'கடவுளின் ஆட்டுக்குட்டி'யான
இயேசுவும், அவரை உலகிற்கு அறிமுகம் செய்த திருமுழுக்கு யோவானும், நமக்குச் சொல்லித்தர வேண்டுமென மன்றாடுவோம்.
இறுதியாக
ஓர் எண்ணம். நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகும் பல நேரங்களில், நம் நடுவே,
நாங்கள்,
நீங்கள், அவர்கள் என்ற வேற்றுமைகளும்
வெளிவருகின்றன. இத்தகைய வேற்றுமைகள், கிறிஸ்தவ சமுதாயத்தைப் பிரித்துவைத்திருப்பது,
வருத்தம் தரும் உண்மை. எடுத்துக்காட்டாக, நாம் தற்போது மேற்கொண்ட இந்த ஞாயிறு
சிந்தனையில், எவாஞ்செலிக்கல் லூத்தரன், பாப்டிஸ்ட் என்ற ஒரு சில கிறிஸ்தவ சபைகளின் பெயர்களைப் பயன்படுத்தினோம்.
கிறிஸ்தவ
உலகில் நிலவும் இந்த வேறுபாடுகள் அகன்றால், நாம் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அறிமுகம்
செய்வதில் கூடுதல் சக்தி பெறுவோம். கிறிஸ்தவ சமுதாயத்தில் நிலவும் வேற்றுமைகள் நீங்கவேண்டும்
என்ற வேண்டுதலை எழுப்ப, கத்தோலிக்கத் திருஅவையில், சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக
செபிக்கும் வாரம், அல்லது எண்கிழமை என்ற முயற்சி
மேற்கொள்ளப்படுகிறது. சனவரி 25ம் தேதி, திருத்தூதரான பவுல் மனமாற்றம் அடைந்த
திருநாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி நடைபெறும் இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு எண்கிழமை
செப முயற்சியில், நம் செபங்களை இணைப்போம்.
No comments:
Post a Comment