Banksy's 'Scar
of Bethlehem' nativity
The
Feast of the Epiphany
This Sunday
we celebrate the Feast of the Epiphany. This feast brings to a close the
magical Season of Christmas. All the
symbols of Christmas – namely, the crib, the Christmas tree and the stars – are
dismantled and packed for 2020 Christmas. When we are removing the star, we are
asked to reflect on ‘the star’ and ‘the Wise men who followed a star’.
The
Star…
The moment we hear the word ‘star’, many thoughts rush
in. One of the first occasions, probably, we heard this term was in our KG
class… “Twinkle, twinkle little star…” The star is closely associated with
childhood. Stars can enrich the dreams and imagination of a child.
Unfortunately, in the present world, stars are being removed from the world of
children, or, children are being led away from stars.
To see the stars, a child needs to be taught to look
up at the clear night sky. We have polluted the environment so much that it is
hard to have a clear night sky. We have also locked up our children within the
four walls of the house and have taught them to look into gadgets. We fill the
minds of children with artificial ‘stars’.
Children living in countries torn by wars, live in
much worse situations. For many of them, anything shining in the sky is only a
plane that is going to attack them. A few years back, a news item appeared in the
Catholic News Service (CNS). It was about a mobile hospital begun by Christians
and Muslims in Turkish border to help Syrians. Here are the opening lines of
this news item:
KILIS, Turkey (CNS) -- Ali Ahmad was
walking with his young son one evening after dark. It was after they had fled Aleppo , Syria ,
and begun their lives as refugees in southern Turkey . It was a clear, starry night.
"He looks up at the stars and he says, 'Dada, are they coming to bomb us?'
I, I...." Ahmad could not finish the sentence. Even if his English was
better, how could a father explain that his son is afraid of the stars?
We can picturise this agonising scene. Ali Ahmad is walking along a mud
path in the refugee camp. His son (Let’s call him Junior Ali), may have been
just four or five. He is holding on to his dad’s arms and is walking. Suddenly,
he looks up at the starry sky and his grip on his father’s hand tightens. Ali
Ahmad, realising that his son is disturbed, asks him for the reason. Then
Junior Ali blurts out: “Dada, are they coming to bomb us?” At first Ali Ahmad
does not seem to understand what his son meant. The little one points to the
skies and repeats the question. The father understands the reason for his son’s
fear. For the little kid, anything sparkling in the skies could only mean
danger. This question from his little son must have pierced the heart of Ali
Ahmad like a dagger.
"All of us Syrians, we need psychologists.
All of us. We have seen our houses destroyed, all kinds of things," Ahmad
said. Later in the same news, Ole Nasser, an English Teacher also spoke to the
CNS correspondent: "We adults, we can cope 80
percent," said Syrian English teacher and translator Ole Nasser. The
grownups can fall back on their roles as teachers, doctors, husbands, wives,
mothers and fathers. But the children have no mask to hide behind, she said.
Few of them can imagine a future when images of destruction, randomness and
death make up so much of their childhood experience, Nasser
said.
Ali Ahmad’s son is not an exception. He is probably the representative of
children born in the last few years who have seen more violence in their
childhood than many of us, adults, during our whole life. We begin to wonder
what the world would be like when these children grow up!
Instead of creating a world where children can have a broad view of the
society, we have built walls and restricted their view point. When a children
look up at the sky these days, there is every chance that they see a huge
wall blocking their view of the sky.
Instead of looking at the clear blue sky or the starry night sky, they see only
the grey concrete walls. Or else, we have replaced the stars in the sky with
our shiny machines of destruction!
Many of us may have heard of Banksy, an anonymous England-based street
artist and political activist. His satirical street art and subversive epigrams
combine dark humour with graffiti, executed in a distinctive stencilling
technique. His works of political and social commentary have been featured on
streets, walls, and bridges of cities throughout the world.
In 2017, marking the 100th anniversary of the British control of Palestine , Banksy financed the creation of the Walled Off
Hotel in Bethlehem .
This hotel is open to the public, and contains rooms designed by Banksy, Sami
Musa and Dominique Petrin, and each of the bedrooms face the oppressive wall of
partition built by Israel .
It also houses a contemporary art gallery. (cf. Wikipedia)
Banksy has created a new art installation in his hotel
in Bethlehem -
just in time for Christmas – 20, December 2019. It is titled: the 'Scar of
Bethlehem', showing a crib scene with the infant Jesus in a manger, surrounded
by Mary and Joseph, the Ox and the Ass next to Israel 's massive Separation
Barrier, which appears to have been pierced by a blast, creating the shape of a
star.
The 'Scar of Bethlehem' is an apt
statement of what our generation has done to children. Instead of helping them
see the ‘Star of Bethlehem’ we have created only the 'Scar of Bethlehem'.
Now, over to the Wise men…
Last Sunday we celebrated the Feast of the Holy
Family. This Sunday we are celebrating God’s extended family. Yes… this is the
core message of the Feast of the Epiphany. This Feast tells us one basic truth
about God. God is not a private property of any human group. As far as God is
concerned, the larger the family, the better… the more, the merrier!
This idea must have shocked quite a few orthodox Jews.
They were very sure that THE ONE AND ONLY TRUE GOD was theirs, EXCLUSIVELY. God
must have laughed at this idea; but in His/Her parental love, waited for the
opportune time. By inviting the wise men from the East to visit the Divine Babe
at Bethlehem ,
God had broken the myth of exclusivism!
God cannot be the exclusive ‘property’ of any human
group. This message is still very relevant to us, especially in the light of
all the divisions created by various individuals and groups who have used God
and religion as political weapons. God is surely not party to any divisive
force! Unifying, reconciling… these are God’s ways. Let us pray on the Feast of
the Epiphany, that the whole human family may live together as one inclusive,
divine family.
Although this Feast is mainly about Jesus revealing Himself
to the whole world (that’s the Epiphany), still, popularly, this feast is about
the so called ‘Magi’. Very little information is given about these persons
(Kings? Wise men? Astrologers?) in the Bible. Only Matthew’s Gospel talks about
these persons (Matthew 2: 1-12). Matthew simply introduces them as ‘wise
men from the East’. There is not even a mention of the number.
Tradition has made them not only Kings, but also made them THREE KINGS because
in Matthew’s gospel three gifts (gold, frankincense and myrrh) have been
mentioned. (Mt. 2:11)
When the wise men decided to follow the star, they
must have faced quite many questions and ridicules. But, they did not give up.
Their journey must have been torturous. Following a star is possible only at
night. Stars are not visible during the day. This means that these wise men
must have done most of their journey in the night – not an easy option, given
their mode of transport etc. It must have been very difficult to gaze upon one
little star among the hundreds on a clear sky. What if the sky was not clear?
Then they would have to wait until clouds and mist clear. So, their journey
must have taken nights, many nights. Relentlessly they pursued their decision
to follow the star. This alone is reason enough to celebrate!
Following a star would also mean following an ideal.
To follow such stars, one needs to look not with the physical eye, but with an
inner eye, the eyes of our heart. Leo Buscaglia, also known as "Dr.
Love," was an American author and motivational speaker, and a professor in
the Department of Special Education at the University of Southern
California . Once he told a story that happened while
he was a professor at the university.
He had a student, Joel, who was brilliant and filled
with potential. Joel, however, had lost
his meaning and purpose for living. His
Jewish tradition and background did not serve him. God had become a meaningless
symbol. He had no motivation to live
another day and no one could convince him otherwise. On his way to take his life, he stopped by
Leo’s office. Fortunately, the good doctor was in.
The student told Leo that he had everything going for
him even good looks. Yet he had nothing inside. He had created an invisible
gulf that no one could cross, hence, he had decided to end this miserable life.
Leo said, “Before you take your life, I want you to visit some old people at
the Hebrew Home which is adjacent to our campus.” “What for?” Joel
countered. Leo said, “You need to
understand life through the eyes of your heart.” “The eyes of my heart?” he
asked. “Yes, you need to experience what it is like to give to those who have
lost their connection to a meaningful life. Go to the desk and ask if there are
people there who have not been visited for a long time by anyone. You visit
them.” “And say what?” “I don’t know,” Leo said, “Tell them anything that will
give them hope.” Notice Leo’s strategy – We get back what we give. When we give
away what we have, our barriers dissolve.
Leo did not see the student for months. In fact, he had largely forgotten about him.
One day during the fall, he saw him with other students, a bus and a group of
seniors, some who were in wheel chairs. Joel had organized a trip to the
baseball game with a group of his new senior friends who had not been to a game
in years. The two chatted for a moment. Just before parting, Joel said, “Thanks
for helping me find the ‘eyes of my heart.’”
Leo nodded and smiled.
(‘Using The Eyes Of Your Heart’ - Sermon Preached By
Rev. Richard E. Stetler)
A parting thought on ‘following a star’: When we begin
to follow a star, let us look for real, inspiring stars even if this means lots
of challenges and lots of hardships.
“This is my quest
To follow that star
No matter how hopeless
No matter how far”
(‘The Impossible Dream’ - from MAN OF LA MANCHA -1972
- written by Joe Darion)
Wise Men
From The East - Douglas Ramsey
திருக்காட்சிப் பெருவிழா
கிறிஸ்து
பிறப்புப் பெருவிழா காலத்தின் நிறைவாக வரும் திருநாள், திருக்காட்சிப் பெருவிழா. மூன்று அரசர்கள் திருவிழா என்று பாரம்பரியமாக
அழைக்கப்படும் இத்திருவிழாவுடன், கிறிஸ்மஸ் காலம் நிறைவுக்கு வருகிறது.
கிறிஸ்மஸ் காலத்தின் சிறப்பான அடையாளங்களாக, விளங்குபவை, குடில், கிறிஸ்மஸ் மரம் மற்றும் விண்மீன். நமது இல்லங்களிலும், ஆலயங்களிலும், கிறிஸ்மஸ் காலத்தைப் பறைசாற்றிய
இந்த அடையாளங்களை, இன்றோ, நாளையோ, அகற்றி, அவற்றை, பத்திரப்படுத்தி வைக்கிறோம். இந்த அடையாளங்களை அகற்றும் வேளையில்,
விண்மீனைக் குறித்தும், அந்த விண்மீனின் ஒளியில் வழிநடந்த மூன்று
ஞானிகளைக் குறித்தும் சிந்திக்க, திருக்காட்சிப் பெருவிழா நம்மை அழைக்கிறது.
முதலில்
விண்மீன்...
‘விண்மீன்’ என்று சொன்னதும், ‘நட்சத்திரம்’, அல்லது, ‘ஸ்டார்’ என்ற சொல், உள்ளத்தில் உதிக்கின்றது. பெரியவர்களைக் காட்டிலும், குழந்தைகளுடன் அதிகத் தொடர்பு கொண்டது 'ஸ்டார்'. Twinkle, twinkle little star என்ற மழலையர் பள்ளிப் பாடல் வரிகளில் ஆரம்பித்து, பல அழகிய கனவுகளுக்கு அடித்தளமாக 'ஸ்டார்' அமைந்துள்ளது. கனவையும், கறபனையையும் வளர்க்கும் 'ஸ்டார்', குழந்தைகளின் உலகிலிருந்து அகற்றப்படுகிறதோ என்ற கவலையை,
இன்றைய உலகம் உருவாக்குகிறது.
'ஸ்டார்'களைக் காணவேண்டுமெனில், தெளிவான இரவில், வானத்தை, குழந்தைகள் அண்ணாந்து பார்க்கவேண்டும்.
இன்றையச் சூழலில், தெளிவான இரவும் இல்லை, குழந்தைகள் வானத்தை அண்ணாந்து பார்ப்பதும்
இல்லை. தெளிவான இரவு வானத்தை, நாம் உருவாக்கும் புகை மண்டலம், மறைத்துவிடுகிறது. குழந்தைகள்
வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குப் பதில், அவர்கள் பார்வைகளைக் கட்டுப்படுத்தும்
பல விலங்குகளை அவர்களுக்குப் பூட்டுகிறோம். குழந்தைகளின் கரங்களில் பல கருவிகளைத் திணித்து, குழந்தைகளின் கண்களையும்,
எண்ணங்களையும், தவறான
வழிகளில் கட்டிப்போடுகிறோம். அக்கருவிகளின் வழியே, பல செயற்கையான
கற்பனை 'ஸ்டார்'கள் குழந்தைகளின்
உலகை நிறைத்துவிடுகின்றன. அக்கருவிகளிலிருந்து விடுதலை பெற்று, வானத்தை அண்ணாந்து பார்க்கும்
வாய்ப்பு, குழந்தைகளுக்குக் மறுக்கப்படுகிறது.
போரினால்
துன்புறும் நாடுகளில் வாழும் குழந்தைகள், விண்மீன்களை, தங்களைத் தாக்கவரும் விமானங்களாகக் கருதி, அஞ்சுகின்றனர். சில ஆண்டுகளுக்கு
முன் CNS என்ற கத்தோலிக்கச்
செய்தி நிறுவனம் சிரியாவைப்பற்றி வெளியிட்ட ஒரு செய்தி இது:
இளவயது
தந்தை ஒருவரும், அவரது சிறு வயது மகனும், இரவில் நடந்து சென்றபோது, திடீரென, அச்சிறுவன், தந்தையைப் பார்த்து, “அப்பா, அவர்கள் மீண்டும் குண்டுபோட வருகிறார்களா?” என்று கேட்டான். தந்தைக்கு ஒன்றும் விளங்காமல், வானத்தைப் பார்த்தார். வானத்தில் மின்னிய விண்மீன்களை பார்த்து, தன் மகன் அக்கேள்வியைக் கேட்டான் என்பதைப் புரிந்துகொண்டார், தந்தை.
அக்கேள்வி, தன் மனதில் ஆழமான காயங்களை உருவாக்கியது என்றும், விண்மீன்களைக் கண்டு, தன் மகன் பயப்படத் தேவையில்லை என்பதை, எப்படி
தன் மகனுக்குப் புரியவைப்பது என அறியாமல் தான் கலங்கி நின்றதாகவும், தந்தை, இச்செய்தியில்
குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவிலிருந்து
துருக்கிக்குத் தப்பித்துச் சென்ற Ali
Ahmad என்ற அந்த இளவயது தந்தை, ஒரு மருத்துவப் பணியாளர். அவரது மகன், விவரம் தெரிந்த நாள்முதல்,
வானில் ஒளியைக் கண்டபோதெல்லாம்
பயந்து நடுங்கி வாழ்பவன் என்பதை, CNS நாளிதழுக்கு அளித்த பேட்டியில்
கூறும் அகமத் அவர்கள், சிரியாவில்
வாழும் மக்களுக்கு, மிக அதிகமாகத் தேவைப்படுவது, மனநல மருத்துவர்களே
என்று கூறுகிறார். பெரியவர்களைக் காட்டிலும், குழந்தைகளுக்கு இந்தத் தேவை மிக அதிகம்
உள்ளது என்று, சிரியாவில் ஆசிரியராகப் பணியாற்றும் Ole Nasser என்பவர், மற்றொரு
பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில்
மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, பரந்து விரிந்த வானத்தையும், அவற்றில்
மின்னும் விண்மீன்களையும் காட்டி, அவர்கள் உள்ளங்களில் பரந்த மனப்பான்மையை
வளர்ப்பதற்கு நம் தலைமுறை தவறிவிட்டது. பரந்து விரிந்த வானத்தை காணமுடியாத அளவு, இவ்வுலகை நாம் கூறுபோட்டு,
சுவர்களை எழுப்பி
வருவதால், குழந்தைகளின் உள்ளங்கள், குறுகிப்போய்,
அச்சத்திலும், வெறுப்பிலும் வாழும் ஆபத்து உள்ளது.
இங்கிலாந்தில்
வாழும் கலைஞர் ஒருவர், 'தெருக் கலைஞர் பாங்க்ஸி' (street artist Banksy) என்ற புனைப்பெயருடன், சமுதாயப்
பிரச்சனைகள் பலவற்றிற்கு கலைவடிவம் கொடுத்துவருகிறார். எடுத்துக்காட்டாக, நாம் பயன்படுத்தும் கைப்பேசிகள், நம்மை எவ்வளவு தூரம், ஒருவர் ஒருவரிடமிருந்து
விலக்கிவைக்கிறது என்பதைக் கூற, 'Mobile Lovers' என்ற பெயரில் ஓவியம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
ஓர் ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் முத்தமிடுவதற்கு
நெருங்கியிருப்பதுபோல், ஒரு கையால் முன்னிருப்பவரை அணைத்தபடி நின்றுகொண்டு, ஒருவரை ஒருவர் பார்க்காமல்,
அவர்களது மற்றொரு
கையில் ஒளிரும் கைப்பேசித் திரையைப் பார்த்தவண்ணம் நிற்கும் அவ்வோவியம், இன்று நம்மிடையே நிலவும் தொடர்புகளைச் சித்திரிக்கிறது. இந்த ஓவியத்திற்கு
பாங்க்ஸி அவர்கள் சூட்டியுள்ள 'Mobile
Lovers' என்ற தலைப்பிற்கு, 'கைப்பேசிக் காதலர்கள்' என்று பொருள் கொள்ளலாம். அல்லது, ஒருவரையொருவர் 'கடந்துசெல்லும் காதலர்கள்' என்றும் பொருள் கொள்ளலாம். மற்றொரு ஓவியத்தில், பழையதொரு தையல்
இயந்திரத்தைக் கொண்டு, பிரித்தானியக் கொடிகளை, ஒரு தோரணமாகத் தைத்துக்கொண்டிருக்கும்
குழந்தைத் தொழிலாளியைத் தீட்டியுள்ளார், பாங்க்ஸி.
இவ்வாறு, இன்றைய சமுதாயத்தைக் காயப்படுத்தும் பல பிரச்சனைகளை, பாங்க்ஸி அவர்கள்,
ஓவியங்களாக, பல நகரங்களின் சுவர்களில் தீட்டி வருகிறார். தன் குரல், அதாவது, தன் கருத்துக்கள், மக்களைச் சென்றடைந்தால்
போதும், அக்கருத்துகளுக்கு ஒரு முகம் தேவையில்லை
என்று கூறும் இந்தக் கலைஞர், இதுவரை, தன் முகத்தை ஊடகங்களுக்கு
வெளிப்படுத்தவில்லை.
பாங்க்ஸி
அவர்கள், பாலஸ்தீனா நாட்டில், இஸ்ரேல் அரசு, அத்துமீறி ஆக்கிரமித்துள்ள பகுதியில் எழுப்பியுள்ள தடுப்புச்சுவருக்கருகே,The Walled Off
Hotel என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்திவருகிறார்.
பாலஸ்தீன நாட்டில் நிகழும் அநீதிகளை சித்திரிக்கும் ஓவியங்களையும், சிலைகளையும் இந்த ஹோட்டலில் அவர் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்.
அண்மையில் - அதாவது, 2019ம் ஆண்டு, டிசம்பர் 20ம் தேதி - இந்த ஹோட்டலில் ஒரு கிறிஸ்மஸ் குடிலை உருவாக்கியுள்ளார்
பாங்க்ஸி. இஸ்ரேல் அரசின் தடுப்புச்சுவரைப் போன்ற ஒரு வடிவம், இக்குடிலின் பின்புலமாக வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்புச்சுவருக்கு
முன், அன்னை மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, ஒரு மாடு, மற்றும் ஒரு கழுதை ஆகிய உருவங்கள்
வைக்கப்பட்டுள்ளன. குழந்தை இயேசுவுக்கு நேர் மேலே, அந்தத் தடுப்புச்சுவரின் நடுவே, விண்மீன் இருக்கவேண்டிய இடத்தில், சுவரில் குண்டால் துளைக்கப்பட்ட ஓர் ஓட்டை, விண்மீனைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, கிறிஸ்மஸ் காட்சிகளைச் சித்திரிக்கும்போது, "The Star
of Bethlehem", அதாவது, 'பெத்லகேமின் விண்மீன்' என்ற தலைப்பு வழங்கப்படும். "The Star of Bethlehem" என்ற சொற்றொடர், பல்வேறு அழகிய கிறிஸ்மஸ் பாடல்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் ஆகியவை உருவாக தூண்டுதலாக
இருந்துள்ளது. ஆனால், பாங்க்ஸி அவர்கள் உருவாக்கியுள்ள இந்தக்
குடிலுக்கு, "The Scar of Bethlehem",
அதாவது, 'பெத்லகேமின் தழும்பு' என்று பெயர் சூட்டியுள்ளார்.
விண்மீன்களை, காயங்களாக, தழும்புகளாக மாற்றிவிட்ட நம் தலைமுறையினர், மீண்டும், குழந்தைகள், உண்மையான விண்மீன்களைக் காண்பதற்குத்
தேவையானச் சூழலை உருவாக்கும் தெளிவையும், துணிவையும் பெறவேண்டுமென செபிப்போம்.
குறிப்பாக, அமைதியின் இளவரசராம் இயேசு பிறந்த பெத்லகேமில், 'பெத்லகேமின் தழும்பாக' இஸ்ரேல் அரசு எழுப்பியுள்ள
சுவர் தகர்க்கப்பட்டு, 'பெத்லகேமின் விண்மீன்' மீண்டும் அங்கு ஒளிர்விட வேண்டும் என்று மன்றாடுவோம்.
மூன்று
ஞானிகள்...
திருக்காட்சிப்
பெருவிழாவின் நாயகர்களான மூன்று ஞானிகள் மீது நம் சிந்தனைகளைத் திருப்புவோம். கிழக்கிலிருந்து
வந்த ஞானிகள் என்று இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவர்கள், பாரம்பரியமாக, மூன்று அரசர்கள், அல்லது, மூவேந்தர்கள் என்று, அழைக்கப்படுகின்றனர். மத்தேயு நற்செய்தியில்
மட்டும் (மத்தேயு 2:1-12) குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஞானிகள், கடந்த 20 நூற்றாண்டுகளாக,
பல கோடி மக்களின் மனங்களில் நேர்மறைத் தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்று
நாம் கொண்டாடும் திருநாள், இறைவன் தன்னை அனைத்து மக்களுக்கும்
வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழா என அழைக்கப்படுகிறது. இறைவன் தங்களுக்கு
மட்டுமே சொந்தம் என்று எண்ணிவந்த யூத குலத்தவருக்கு, இந்தத் திருநாளில் பொதிந்திருக்கும்
உண்மை, அதிர்ச்சியைத் தந்திருக்கும். வானதூதர்கள் வழியாக, எரியும் புதர் வழியாக, தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன், இன்று பிற இனத்தவருக்கும் தோன்றினார் என்பது, அவர்களுக்கு அதிர்ச்சியைத்
தந்திருக்கும்.
இறைவன்
அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் மதவாதிகள், மற்றும், அரசியல்வாதிகளின்
சூழ்ச்சிகள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா, இந்தத் திருக்காட்சிப்
பெருவிழா. கடவுளின் பெயரால், பிரிவுகளையும், பிளவுகளையும் உருவாக்கும், அரசியல்வாதிகளின்
தந்திரங்களை, மக்கள் புரிந்துகொண்டு, இந்தப் புத்தாண்டில், அவற்றை வேரோடு களையவேண்டுமென
வேண்டிக்கொள்வோம்.
இந்த
மூன்று ஞானிகள், குழந்தை இயேசுவைச் சந்திக்க வந்த நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம்.
விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும், இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும், நற்செய்தி சொல்கிறது.
வாழ்க்கையில் நம்மை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதைச் சிந்திக்கலாம். இறைவனைச்
சந்திக்கும்போதும், சந்தித்தப்பின்னும் நம் வாழ்வில் ஏற்படும்
மாற்றங்களைப் பற்றி சிந்திக்கலாம்.
"கிழக்கிலிருந்து
எருசலேமுக்கு வந்த ஞானிகள்" என்று இன்றைய நற்செய்தி குறிப்பிடும் இந்த ஞானிகள்,
ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பது, ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இவர்கள்
கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்ந்து அறிந்தவர்கள்.
இந்தியாவிலும், இன்னும் பல ஆசிய நாடுகளிலும் கோள்களை, நட்சத்திரங்களை வைத்து வாழ்வின் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்பார்க்கலாம்.
ஒருவர் பிறந்த தேதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும்
நட்சத்திரம், அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக நம்மில் பலர் நம்பி
வருகிறோம்.
திரைப்படங்கள், விளையாட்டு, அரசியல் ஆகிய உலகங்களில் உருவாகும்
'ஸ்டார்களையும்', நம் ஜாதகத்தில், கைரேகைகளில் பதிந்துவிட்ட 'நட்சத்திரங்களையும்' நம்பி வாழாமல், நல்வழிகாட்டும் இலட்சியங்கள் என்ற விண்மீன்களை நாம் பின்பற்ற வேண்டும்
என்பது, இந்த விழா நமக்குச் சொல்லித் தரும் ஓர் அழகிய பாடம்.
வானில்
தோன்றிய ஒரு விண்மீனை தங்கள் எண்ணங்களிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த ஞானிகள் தங்கள் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அந்த விண்மீனைத் தொடர்வதற்கு முடிவெடுத்தனர். அவர்களது
முடிவைக் கேட்டதும், அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அனைவரும், அவர்களை, கேள்விகேட்டு வதைத்திருக்கலாம். கேலி
செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின்
உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத் தொடர்ந்தனர்.
விண்மீன்,
இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவில்,
தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற அக்காலத்தில்,
இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்லவே. அதுவும், தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனை,
பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே, மீண்டும், மீண்டும், அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத்
தொடர்வது, அவ்வளவு எளிதல்லவே. பல இரவுகளில், மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, தங்கள் பயணத்தை அவர்கள் தொடர்ந்திருக்க
வேண்டும். இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும், ஒரே குறிக்கோளுடன்,
பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி, நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.
நாம்
வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது.
வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது,
"ஒருவேளை மழை
வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.
அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும் போதும்,
மீண்டும், வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா
என்பதைத் தெரிந்துகொள்ள.
சந்தேகம்
வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும்.
அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள்
கொடுக்கும் அழைப்பும் தெரியாது. கருமேகங்களைத் தாண்டி விண்மீன்களைப் பார்ப்பதற்கு நமக்கு
வெறும் உடல் கண்கள் பயனற்றவை. இதயக் கண்கள் தேவை.
அன்பு
மருத்துவர், அல்லது, காதல் மருத்துவர் (Dr
Love) என்று புகழ்பெற்ற, லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்ற ஓரு பேராசிரியர் சொன்ன ஒரு
கதை இது: அவர், தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது, அவரிடம் ஜோயல் என்ற மாணவர் படித்துவந்தார். மிகச்சிறந்த
அறிவும், பல்வேறு திறமைகளும் கொண்டவர் ஜோயல். பாரம்பரியம்மிக்க யூத குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கடவுளையும், யூத மத நியதிகளையும் விட்டு வெகுதூரம்
விலகிச்சென்றார் ஜோயல். ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல்
குழம்பிப் போன அவர், ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்.
தான்
சாவதற்கு முன், தன் அபிமான ஆசிரியர் லியோ புஸ்காலியாவைப்
சந்திக்கச் சென்றார். தான் எடுத்திருந்த முடிவை அவரிடம் சொன்னார். "உன் வாழ்வை
முடித்துக் கொள்வதற்கு முன், நமது பல்கலைக்கழகத்திற்கு அருகில்
உள்ள வயது முதிர்ந்தோர் இல்லத்திற்குச் சென்று வா" என்றார் லியோ. தன் அபிமான ஆசிரியர்
என்ன சொல்கிறார் என்பதை ஜோயல் புரிந்துகொள்ளவில்லை. எனவே, லியோ விளக்கினார். "நீ உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், வாழ்வு என்றால் என்ன என்பதை உன் இதயக் கண்கள் கொண்டு நீ பார்க்கவேண்டும்."
"இதயக் கண்களா?" என்று ஜோயல் அழுத்திக் கேட்டதும், லியோ மேலும் விளக்க ஆரம்பித்தார். "வாழ்க்கையின் அர்த்தமுள்ள
தொடர்புகளையெல்லாம் இழந்து, அந்த முதியோர் இல்லத்தில் வாழ்வோருக்கு, உன்னால் என்ன தரமுடியும்
என்பதைச் சிந்தித்துப்பார். அங்குள்ளவர்களில், யார், எந்த ஓர் உறவினரும் வராமல், பல
மாதங்கள், அல்லது, வருடங்கள் காத்திருக்கிறார்களோ, அவர்களைச் சென்று பார்" என்று
லியோ சொன்னதும், ஜோயல், "அவர்களிடம்
என்ன சொல்லவேண்டும்?" என்று கேட்டார். "என்ன சொல்ல
வேண்டும் என்று நீயே தீர்மானித்துக் கொள்.. ஆனால், அவர்களுக்கு
வாழ்வில் ஒரு பிடிப்பை, நம்பிக்கையை உண்டாக்கும்வண்ணம்
எதையாவது சொல்" என்று சொல்லி அனுப்பினார். பிறருக்குக் கொடுப்பதன் வழியாக நாம்
வாழ்வில் அர்த்தத்தைப் பெறமுடியும் என்பதே, லியோ அவர்கள் கொடுத்த ஆலோசனையில் பொதிந்திருந்த
இரகசியம்.
இந்தச்
சந்திப்பிற்குப் பின், ஜோயலுக்கு என்ன ஆயிற்று என்பதை
லியோ புஸ்காலியா அவர்கள் மறந்துவிட்டார். ஒரு நாள், அவர் பல்கலைக்
கழகத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்குப் போய்கொண்டிருந்தபோது, ஜோயல் ஒரு பேருந்தில் வந்து இறங்கினார். அவருடன், முதியோர் இல்லத்திலிருந்து,
பத்து, அல்லது, பதினைந்து பேர், சக்கர நாற்காலிகளில் வந்திறங்கினர். ஜோயல், தன் ஆசிரியர் லியோவிடம் சென்று, "சார், இவர்கள் கால்பந்தாட்டப் போட்டியை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
எனவேதான் அவர்களை அழைத்து வந்துள்ளேன்" என்று சொன்னார். சிறிது தூரம் சென்றபின், லியோவின் கரங்களைப் பிடித்தபடி, "என்
இதயத்தின் கண்களைத் திறந்து மற்றவர் தேவைகளை எனக்குச் சொல்லித் தந்தீர்கள். மிக்க நன்றி."
என்று சொன்னார் ஜோயல். தன்னைமட்டும் மையப்படுத்தி வாழ்ந்தபோது, விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஜோயல், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற விண்மீன் கொடுத்த அழைப்பை ஏற்றதால், அவரது வாழ்வு முற்றிலும் மாறியது.
இதயத்தின்
கண்களைத் திறந்து பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம்.
அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர்
இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.
உண்மையான
விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில்
சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், எத்தனையோ நல்ல
உள்ளங்கள், தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள்.
தடைகள் பல எழுந்தாலும், தளராமல், விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு, இப்புத்தாண்டின் துவக்கத்தில், நமக்கு மனஉறுதியைத்
தந்து, இறைவன் வழிநடத்த வேண்டும் என்று
மன்றாடுவோம்.
No comments:
Post a Comment