The
Samaritan Woman At the Well
3rd Sunday of Lent
Human
history has recorded the onslaught of viruses quite a few times as well as the
human efforts to get rid of those viruses. The only virus that has plagued
human beings for centuries, and for which we have refused to find remedies, is
the virus called ‘divisions’. We have created and have nurtured this virus - in
terms of gender, ethnicity, caste, religion, language, national borders, colour
of the skin, social status… etc. Once in a while, there comes a calamity –
either human-made or natural, to help us get enlighterned about the foolishness
of this divisive virus.
Almost the
whole world witnessed the human-made calamity on September 11, 2001, when the
twin towers of the World Trade Centre in New
York went up in flames after two planes collided with
them. After burning for a while, both the towers collapsed one after another.
For the next few weeks, this tragedy which was called ‘9/11’ was the main theme
of the media. Questions regarding life and death, hope and despair, violence
and love, unity and diversity were discussed in many articles. One of those write-ups that appeared
in a website was about how this tragedy brought the people of New
York and, perhaps, the whole of the US together.
Here is the
passage written by Cheryl Sawyer, a professor, under the title – ONE:
As the soot and dirt and ash rained down, we
became one color.
As we carried each other down the stairs of the
burning building, we became one class.
As we lit candles of waiting and hope, we
became one generation.
As the firefighters and police officers fought
their way into the inferno, we became one gender.
As we fell to our knees in prayer for strength,
we became one faith.
As we whispered or shouted words of encouragement,
we spoke one language.
As we gave our blood in lines a mile long, we
became one body.
As we mourned together the great loss, we
became one family.
As we cried tears of grief and loss, we became
one soul.
As we retell with pride of the sacrifice of
heroes, we become one people.
One color,
one class, one faith, one family… is the Heaven most of us dream of. It is a
pity that a tragedy like 9/11 brought down the walls we have erected on the
basis of caste, creed and color, and created this ‘oneness’ at least for a few
days. Unfortunately, as the ‘dust settled down’ the walls were re-erected. On
9/11, we lost our carefully prepared labels and discovered the truth of
belonging to a large family. Once the pain of the tragedy diminished, we went
looking for our lost labels and stuck them again on ourselves and others.
Almost 20
years later, from December 2019, a natural calamity – in the form of a virus –
is sweeping over the whole world, trying to teach all of us that we are all of
the same family called – ‘vulnerable human species’! We have been made the
single family – ‘patients of COVID-19’.
This virus has compelled us to be concerned about the ‘human family’.
In today’s
Gospel we meet Jesus who is trying to erase human-made divisions between the Jews
and the Samaritans. Jesus meets a Samaritan woman and, through her, meets each
one of us and invites us to erase borders and see the ‘broader picture’ (John 4: 5-42).
This Sunday as well as the next two Sundays, the gospel texts will put us
in touch with three of the most significant spiritual symbols of our Faith:
water, light and life, symbols closely connected with Easter. Today’s gospel
revolves around the well in Samaria ,
with a discourse on water. Next Sunday, it will be the curing of the visually
handicapped person, with thoughts on light. The third week – the final week
before the Holy Week – it will be the miracle of raising Lazarus from the dead
and the discourse on life. All the three passages are taken from the Gospel of
John, which, as we know well, is not a simple narrative of Jesus’ life but a
theological treatise as well.
The conversation between Jesus and the Samaritan woman is one of the
longest (if not the longest) conversations recorded in the four gospels
(John 4:7-26). This conversation is a good example of the inward journey made
by a person (Samaritan woman) who, ultimately, makes this journey towards Jesus
and God.
Jesus voluntarily initiates this conversation with the Samaritan woman
who comes to the well at mid day. The woman’s late visit to the well (women,
usually, gathered at the well early in the morning) may suggest that she was an
outcast in the village, even among the Samaritans, because of her questionable
living situation! Jesus begins this discourse expressing his need for water.
When a Samaritan woman came to draw water,
Jesus said to her, “Will you give me a drink?” (John 4: 7) A simple request for water opens up quite many
issues and ultimately ends on sublime themes related to God and worship. Here
is the first lesson from today’s gospel: that the human-made distinctions of
the ‘sacred’ and ‘secular’ are futile, and there is no location alien to talk
about God. We know that in villages, the well, the tea shop and the banyan tree
in the village square are good spots for gossips, political opinions and even
philosophical thoughts. Jesus shows us that a conversation near a well can also
be profoundly divine!
The initial reaction of the Samaritan woman is a grim reminder of how the
human family has not progressed in certain areas even after centuries. The Samaritan woman said to him, “You are a Jew and I am a Samaritan
woman. How can you ask me for a drink?” (John 4: 9) You-and-I
distinction even in the case of a basic necessity!
Thirst knows no caste and religion. Hence, it would be highly impossible
for any one to refuse water to the one who is thirsty. But, with water becoming
more and more a private property and, hence, scarce and costly, it is becoming
more and more delicate to request for water and to share water even in dire
situations. Due to its rich business proposition, water has been labelled as ‘blue gold’ in our days!
Next Sunday, March 22nd, we shall observe World Water Day 2020. Last
year, World Water Day 2019 was celebrated with the theme - “Leaving no-one
behind”. Pope Francis, in his message sent to the Director General of the FAO
talks of how the world should value and understand its single most precious
resource: water. Here are a few extracts from this message:
World Water Day is celebrated this year with
the slogan: “Leaving no-one behind”. Water is an essential good for the balance
of ecosystems and human survival… Access to this good is a fundamental human
right, which must be respected.
“Leaving
no-one behind” also means being aware of the need to respond with concrete
facts; not only with the maintenance or improvement of water structures, but
also by investing in the future, educating new generations in the use and care
of water. This task of raising awareness is a priority in a world in which
everything is discarded and disdained, and which, in many cases, does not
appreciate the importance of the resources we have at our disposal.
Pope Francis has warned that we
could be moving toward “a major world war for water.” He did so when addressing
participants at the concluding session of an international seminar on “the
human right to water”, held at the Vatican ’s Pontifical Academy of
Sciences on Feb. 23 and 24, 2017.
“I ask if in this piecemeal third world war
that we are living through, are we not going toward a great world war for
water?”, the pope said, departing from his prepared text. Specialists in the
field have already predicted that some of the major armed conflicts in the
future could be over the possession of or access to water, but this is the
first time that Francis has spoken in these terms. (America Magazine)
The great Indian environmentalist and the winner of the ‘Asian Nobel Prize’, the
Magsaysay award, Sunderlal Bahuguna, has expressed similar sentiments when he
said: “There is
untimely rainfall, scorching summers, unbearable winters, rampant droughts and
floods. Everything has become so unpredictable and, ironically, it is all due
to the unmindful activities of the most intelligent species on the earth, human
beings… The situation demands immediate notice and remedial measures from our
governments and policymakers. Otherwise, mankind has to face the wrath of an
inevitable third world war on the issue of water.”
He said
that the first and second world wars were the outcome of “intense gluttony
of western countries to attain power and monopoly over the world’s resources.
These wars had destroyed many nations and the present world cannot withstand
the rage of any more such warfare”.
The thirst
of Jesus and the hesitation of the Samaritan woman still echo in various forms,
in different parts of the world. The great natural gift of God – water – has,
unfortunately, been used as a political and caste weapon, dividing people.
The
conversation between Jesus and the Samaritan woman also highlights another
division among people. Not only the gifts of God, but God himself / herself is
divided under various pretexts. Jesus is rather emphatic in saying that true
God and true worship do not divide the people: “Woman,” Jesus replied,
“believe me, a time is coming when you will worship the Father neither on this
mountain nor in Jerusalem …
Yet a time is coming and has now come when the true worshipers will worship the
Father in the Spirit and in truth, for they are the kind of worshipers the Father
seeks. God is spirit, and his worshipers must worship in the Spirit and in
truth.” (John 4: 21-24)
I don’t
think that any one could make this clearer and easier than Jesus. Curiously,
Jesus begins this statement with a request… almost a plea: “Woman,
believe me…” It is hard for us to believe that God can be worshipped in
such simplicity. But, that is the true worship that ‘the Father seeks’.
Lenten
season is a call to conversion. Let us be converted to using God’s gifts
(especially water) properly without avarice and monopoly. Let us be converted
not to divide God into various human slots, but allow God to be God and try to
worship God in Spirit and in Truth.
Let us also
pray that the present crisis of COVID-19 may teach us to unite under the one banner
- ‘human family’!
My closing
thoughts are on Pope Francis. March 13, last Friday, was the seventh
anniversary of the election of Cardinal Bergoglio who became Pope Francis.
March 19, coming Thursday, the Feast of St Joseph, will be the seventh anniversary
of the Inauguration of Pope Francis’s leadership ministry.
Seven, as
we know from the Bible, is a wholesome number. May God grant Pope Francis good
health of mind and body so that he can continue his mission of leading the
human family in the path of justice, peace and equality.
Jesus and the Samaritan Woman
தவக்காலம் 3ம் ஞாயிறு
மனித வரலாற்றில் தொற்றுக்கிருமிகளின் தாக்கம் பலமுறை ஏற்பட்டுள்ளது.
அவற்றிலிருந்து மீள்வதற்குரிய வழிகளையும் மக்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், மனிதர்கள், தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட ஒரு தொற்றுக்கிருமியின்
தாக்கத்திலிருந்து மீள வழியின்றி, பல்லாயிரம்
ஆண்டுகளாக துன்புற்று வருகின்றனர். இந்தத் தொற்றுக்கிருமியின் பெயர் - பாகுபாடுகள்.
மதம், மொழி, இனம், பணம், பாலினம்
என்ற பல நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுகளை உறுதிசெய்யும் ‘பாகுபாடுகள்’ என்ற தொற்றுக்கிருமியை அழிக்க மனமின்றி,
இந்நோயை, போற்றி வளர்த்துவருகிறோம். ஒரு சில வேளைகளில், இந்நோயிலிருந்து குணமாகும் வழிகளைப் புரிந்துகொள்ள, இயற்கை
வழியாகவோ, அல்லது, ஒரு சில மனிதர்களின் கட்டுக்கடங்கா வெறியின்
வழியாகவோ, நமக்கு வாய்ப்புக்கள்
வருகின்றன.
2001ம்
ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, மனிதர்கள் நிகழ்த்திய ஒரு வெறியாட்டத்தை, நியூ யார்க் நகரில் கண்டோம். வர்த்தக உலகின் பெருமைக்குரிய சின்னங்களாக
உயர்ந்து நின்ற உலக வர்த்தக மையத்தின் இரு கோபுரங்களின் மீது, இரு விமானங்கள் மோதி,
அவ்விரு கோபுரங்களும், ஒன்றன்பின் ஒன்றாக, இடிந்து விழுந்தன.
தொடர்ந்து
வந்த நாட்களில், உலக ஊடகங்கள், இந்நிகழ்வை மீண்டும், மீண்டும், பல கோணங்களில் காட்டி, அடிப்படையான
பல கேள்விகளை எழுப்பின. நியூ யார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு என்ற வட்டங்களைக்
கடந்து, நம் அனைவரையும் ஒரு தேடலில் ஈடுபடுத்தியது,
இந்நிகழ்வு. மரணம், துன்பம், வன்முறை,
நம்பிக்கை என்ற பல கோணங்களில் எழுந்த இத்தேடல்களின் விளைவாக, வெளியான பல பதிவுகளில், 'One' - அதாவது, 'ஒன்று' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த ஒரு கவிதையின் ஒரு சில வரிகள் இதோ:
"கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது, நாம் ஒரே நிறத்தவரானோம்.
எரியும்
கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது, நாம் ஒரே வகுப்பினரானோம்.
சக்தி
வேண்டி, முழந்தாள்படியிட்டபோது, நாம் ஒரே மதத்தவரானோம்.
இரத்ததானம்
வழங்க வரிசையில் நின்றபோது, நாம் ஒரே உடலானோம்.
இந்தப்
பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது, நாம் ஒரே குடும்பமானோம்."
இக்கவிதை
வரிகள் கூறும், ஒரே நிறம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே குடும்பம், ஒரே இறைவனின்
மக்கள் என்ற உன்னத உண்மைகள், நாம் எழுப்பியுள்ள பிரிவுச் சுவர்களுக்குக்கீழ் புதைந்து
போய்விடுகின்றன. இப்பிரிவுச் சுவர்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ந்த கொடூரத்தால் இடிந்து விழுந்தன
என்பதும், அந்த வேதனை, நம்மை ஒருங்கிணைத்தது என்பதும்,
புதிரான உண்மைகள். அந்தக் கொடூரத்தின் தாக்கங்கள் குறையக் குறைய, காணாமற்போன பிரிவுச் சுவர்களை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து, கட்டியெழுப்பி, நம்மையே சிறைப்படுத்திக் கொண்டோம். மத வெறி, நிற வெறி, சாதிய வெறி, என்ற சுவர்கள்
உயர, உயர, மனிதத்தன்மை காணாமற்போகிறது என்பது,
கசப்பான உண்மை.
மனிதர்களின் வெறியால் உருவான இக்கொடுமை, நமக்குப் பாடங்களைச்
சொல்லித்தந்ததுபோல், COVID-19 என்ற தொற்றுக்கிருமியின் கொடுமை, நமக்கு
தற்போது, பாடங்களைச் சொல்லித்தந்தவண்ணம் உள்ளது. மதம், இனம், பணம், நாடு என்ற
அனைத்து பிரிவுகளையும், எல்லைகளையும்
தாண்டி, மனிதர்களாகப் பிறந்த
அனைவருமே, சக்தியற்றவற்றவர்கள்தான்
என்ற அடிப்படையான பாடத்தை நமக்குச் சொல்லித்தருவதற்கு, COVID-19 என்ற
ஆசிரியர், நம் நடுவே உலவி வருகிறார்.
நாம் உருவாக்கியுள்ள பாகுபாட்டு நோய்களைத் தீர்க்க, இயேசு மேற்கொண்ட
ஒரு முயற்சியை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். யூதர்கள், சமாரியர்கள் என்று உருவாக்கப்பட்டிருந்த
செயற்கையான பாகுபாட்டு நோயைக் குணமாக்க முயன்ற இயேசுவை, இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.
இயேசு
வாழ்ந்த காலத்தில் நிலவிய ஆணாதிக்கச் சமுதாயத்தில், ஒரு பெண்ணாக, சமாரியப் பெண்ணாக வாழ்வதென்பது, கடுமையான எதிர்
நீச்சல்தான். அதிலும் குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள
பெண், ஐந்து ஆண்களுடன் வாழ்ந்தபிறகு, ஆறாவது மனிதரோடு வாழ்பவர். இனம், மதம், நன்னெறி, ஊர் கட்டுப்பாடு என்ற பல அளவுகோல்களால்
நசுக்கப்பட்டிருந்த அப்பெண்ணை இயேசு சந்திக்கிறார்.
இன்றைய
நற்செய்தியின் அறிமுக வரிகளில், "அப்போது ஏறக்குறைய நண்பகல்"
(யோவான்
4:6) என்ற குறிப்பு
வழங்கப்பட்டுள்ளது. அந்தப்பெண், தன் சொந்த ஊரிலேயே, எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்
என்பதை, நற்செய்தியாளர் யோவான், இந்த சிறு குறிப்பின்
வழியே உணர்த்துவதாக, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.
எந்த
ஊரிலும், பெண்கள், காலையில்,
சிறு, சிறு குழுக்களாக, பல கதைகள் பேசியபடி ஊர்
கிணற்றிற்குச் சென்று, நீர் எடுத்து வருவது வழக்கம். இன்றைய
நற்செய்தியில் நாம் சந்திக்கும் இப்பெண்ணோ, நண்பகலில் நீர் எடுக்கச் செல்கிறார்.
காரணம் என்ன? அவரும், மற்றவர்களோடு
காலையில் நீர் எடுக்கச் சென்றிருப்பார். அவ்வேளையில், மற்ற பெண்கள், அவரைப்பற்றி ஏளனமாகப் பேசி, கண்டனத் தீர்ப்புக்கள் வழங்கியிருப்பர். நடத்தை சரியில்லாத அவர், அந்தக் கிணற்றில் நீர் எடுப்பதால், கிணற்று நீரே தீட்டுப்படுவதாக அப்பெண்ணுக்கு உணர்த்தியிருப்பர்.
அவர்கள் விடுத்த கண்டனக் கணைகளால் மேலும், மேலும் காயப்படவேண்டாம் என்ற நோக்கத்தில், அப்பெண், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத நண்பகல்
வேளையைத் தேர்ந்தெடுத்திருப்பார்.
தன் ஊர்மக்கள் வாரியிறைத்த சாபங்களைச் சுமந்து வாழ்ந்த அப்பெண்ணை, அச்சாபங்களுக்கு பதிலிறுப்பாக, அதே ஊர்
மக்களுக்கு, நற்செய்தியை அறிவிப்பவராக மாற்றுகிறார், இயேசு. இந்த அற்புத மாற்றம், இன்றைய
நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.
மாற்றங்களை
வலியுறுத்தும் தவக்காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். தவக்காலத்தின் சிகரமான உயிர்ப்புப்
பெருவிழாவுடன் தொடர்புடைய மூன்று அடையாளங்கள் - தண்ணீர், ஒளி, வாழ்வு. இந்த ஞாயிறன்றும், இதைத் தொடரும் இரு ஞாயிறுகளிலும், இம்மூன்று அடையாளங்களை வலியுறுத்தும்
நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இயேசு, சமாரியப் பெண்ணைச் சந்திப்பதும், தண்ணீர் குறித்து பேசுவதும், இந்த வாரம் தரப்பட்டுள்ள நிகழ்ச்சி
(யோவான் 4: 5-42). பார்வை இழந்த ஒருவருக்கு, இயேசு, பார்வை வழங்குவதும், ஒளியைக் குறித்துப் பேசுவதும், அடுத்த வாரம் நாம் வாசிக்கும் நற்செய்தி
(யோவான் 9: 1-41). இறந்த இலாசரை உயிர்ப்பித்து,
வாழ்வைப் பற்றி இயேசு
பேசுவது, மூன்றாம் வாரம் தரப்பட்டுள்ள நற்செய்தி (யோவான் 11: 1-45).
மேலும்,
தவக்காலத்தின் உயிர் நாடியான மாற்றம் என்ற கருத்து, இந்த மூன்று நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமாரியப் பெண்ணின் நெறி பிறழ்ந்த வாழ்விலும்,
அவர் கொண்டிருந்த
இறை நம்பிக்கையிலும் மாற்றம் நிகழ்கின்றது. பார்வை இழந்தவர், தன்னை குணமாக்கியவர் யார் என்பதை அறியாமலேயே, அவர் மீது நம்பிக்கை
கொண்டு, அவரை, பரிசேயர்களுக்கு
முன் உயர்த்திப் பேசுகிறார். பின்னர், இயேசுவைச் சந்தித்ததும், முழு நம்பிக்கையுடன், அவரிடம் சரணடைகிறார். மூன்றாவது நிகழ்வில், உயிரிழந்து, புதைக்கப்பட்ட இலாசர், மீண்டும் உயிர் பெற்றெழும் உன்னத மாற்றம் நிகழ்கிறது.
சமாரியப் பெண்ணிடம் மாற்றங்களை உருவாக்க, இயேசு தேர்ந்தெடுத்த
பள்ளிக்கூடம்... ஒரு கிணற்றடி. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றடி.
ஆச்சரியங்களைத் தருவதில் இயேசுவை மிஞ்ச, இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் என்று எண்ணத்
தோன்றுகிறது. யோவான் நற்செய்தியில் இன்று நாம் சந்திக்கும்
இயேசு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்... சொல்லப்போனால், அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். ஒரு சராசரி யூதன் செய்யக்கூடாத பல செயல்களை இயேசு துணிந்து செய்கிறார்.
பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப்போயிருந்த யூதர், சமாரியர் என்ற
இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக, இயேசுவும், சமாரியப் பெண்ணும், கிணற்றடியில் சந்திக்கின்றனர்.
இயேசு
அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று, "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்"
(யோவான் 4:8) என்று கேட்கிறார். வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல், வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது.
நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உரையாடல்களிலும், யோவான் நற்செய்தி 4ம்
பிரிவில் இயேசுவுக்கும், சமாரியப் பெண்ணுக்கும் இடையே நிகழும்
இந்த உரையாடல்தான் மிக நீளமானது (யோவான் 4:7-26). இந்த உரையாடலின் முடிவில், ஊரால்
ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டுவந்து சேர்த்த பெருமையைப்
பெறுகிறார். இறைவனைப்பற்றிப் பேச, யாருக்கு, சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களில் பலர், இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர்
என்பதை, விவிலியமும், திருஅவை வரலாறும், மீண்டும், மீண்டும் கூறியுள்ளன.
இந்த
நற்செய்திப் பகுதி, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறித்து
சிந்திக்க நம்மை அழைக்கிறது. கிணற்றுமேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்றுமேடு, டீக்கடை, ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று,
வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில், சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள்
அலசப்படுவது, நமக்கெல்லாம் தெரிந்ததுதான். மிகச் சாதாரணமான இவ்விடங்களில் இறைவனைப்
பற்றியப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பதை, கிணற்று மேட்டில் நடக்கும் உரையாடல்
வழியே, இயேசு, இன்று நமக்கு உணர்த்துகிறார். மேலும், புனிதமான இடங்கள், புனிதமற்ற இடங்கள் என்று, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரிவுகள், பயனற்றவை, எந்த இடமும், இறைவனைப்பற்றி பேசுவதற்கு
ஏற்ற இடமே என்பதை, இயேசு தெளிவாகக் கூறுகிறார். இது முதல்
பாடம்.
அடுத்ததாக,
தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும், சமுதாயப் பிரிவுகள் குறுக்கிடுவதை, இந்த உரையாடல்
தெளிவாக்குகிறது. தண்ணீர் தருவதைப்பற்றி பேசும்போது, நெருடலான
பல எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. ஐக்கிய நாடுகள் அவை, மார்ச் 22ம் தேதி, வருகிற
ஞாயிறன்று, உலகத் தண்ணீர் நாளை சிறப்பிக்கிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், தண்ணீரைக் குறித்து, தன் கருத்துக்களை, உரைகளாக,
செய்திகளாகப் பகிர்ந்துள்ளார். "தண்ணீரைப் பெறுவது, மனித உரிமை"
என்ற தலைப்பில், 2017ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் திருத்தந்தை
பேசும்போது, தன் உள்ளத்தில் இருந்த ஒரு வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.
"சிறு, சிறு துண்டுகளாக, தற்போது உலகில்
நிகழ்ந்துவரும் மூன்றாம் உலகப் போரைத் தாண்டி, தண்ணீருக்காக நாம் ஒரு பெரும் உலகப் போரை நோக்கிச் செல்லவில்லையா
என்பதை ஆய்வு செய்யவேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, "சுத்தமானத் தண்ணீர் கிடைக்காத
காரணத்தால், ஒவ்வொரு நாளும், 1000த்திற்கும்
அதிகமான குழந்தைகள் இறக்கின்றனர் என்பதை அறிந்தும், நாம், அக்கறையற்றிருப்பது தவறு" என்று கூறினார்.
இறைவன்
தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, பல வழிகளில் நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர்
தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக,
தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே, நமது பெரும் குற்றம். சாதிக்கொரு கிணறு, குளம் என்று, நாம் உருவாக்கிய அவலம், இன்றும் பல இடங்களில் தொடர்கின்றது.
தண்ணீரை
மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர், ஒரு பொருளாதார முதலீடு
என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி வரும்
கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைந்து,
மறைந்து, தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்துவருகிறது. இந்த வியாபாரத்தால், தண்ணீர்,
'நீலத்தங்கமாய்' (Blue Gold) மாறிவருகிறது.
இந்தியாவின் மற்றொரு காந்தி என்ற புகழுக்குரியவரும், இயற்கையைப்
பாதுகாக்க, பல வழிகளிலும் போராடிவரும் பசுமைப்புரட்சி வீரருமான, 93 வயது நிறைந்த சுந்தர்லால் பகுகுணா
அவர்கள் கூறியது இது: "முதல்,
இரண்டாம் உலகப் போர்கள், இயற்கை வளங்களைச் சுறண்டுவதில்,
ஐரோப்பிய நாடுகள் கொண்ட தீராதப் பேராசைப் பசியால் உருவாயின. மூன்றாம் உலகப் போரென்று
ஒன்று வந்தால், அது நீரைப்
பங்கிடுவது குறித்துதான் எழும்." தண்ணீரை, ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச் செல்வந்தர்களுக்கும்,
சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி வழங்குகிறார்.
இறைவனின்
கொடையான தண்ணீரை, சாதி, இனம், பொருளாதாரம் என்ற காரணங்களைக்
காட்டி பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும், பல காரணங்களுக்காக,
பிரித்து, கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளது. இதையும், இயேசு,
இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு, மலைகளையும், எருசலேம் புனித நகரையும், தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து, அந்த சமாரியப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்களை இன்றைய
நற்செய்தியிலிருந்து கேட்போம்:
யோவான்
நற்செய்தி 4 : 21, 23-24
இயேசு
சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை
இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப
உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது
உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார்.
பாகுபாடுகள்
என்ற நோயினால் துன்புறும் மனிதர்கள், இறைவனையும் பாகுபடுத்த பயன்படுத்தும் இலக்கணங்கள்
அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள்மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. மனிதர்கள் உருவாக்கிய
பிரிவுகளைத் தாண்டி, உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு, அவரை உள்ளத்தில் வழிபடுவதற்கு
இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.
அதேபோல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும், பிளவுகளை வளர்த்துவரும்
நம் சமுதாயம், பாகுபாடுகளைத் தாண்டி, உயிருள்ள ஊற்றான
இறைவனைப் பருகவும், இத்தவக்காலம் நமக்கு உதவுவதாக.
இறுதியாக, நம் செபங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக எழுப்புவோம்:
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டதன் ஏழாம் ஆண்டு நிறைவை,
மார்ச் 13, கடந்த வெள்ளியன்று சிறப்பித்தோம். மார்ச்
19, வருகிற வியாழன், புனித யோசேப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாளின்
ஏழாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறோம்.
ஏழு என்பது, விவிலியத்தில் முழுமையைக் குறிக்கும் ஓர் எண். எனவே, தன் தலைமைப்பணியில் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களுக்கு, இறைவன், நல்ல உடல், உள்ள நலனை வழங்க மன்றாடுவோம். பிரிவுகளைத் தாண்டி, மனித
குடும்பத்தை ஒருங்கிணைக்க திருத்தந்தை மேற்கொண்டுவரும் முயற்சிகளை இறைவன் முழுமையாக
ஆசீர்வதிக்குமாறு மன்றாடுவோம்.
No comments:
Post a Comment