Christ Healing the Man Born Blind – John 9
4th Sunday of Lent
Every year,
we celebrate the 4th
Sunday of Lent as ‘Laetare Sunday’ – Rejoicing Sunday. When we are preparaing
for Easter, we can surely rejoice in the recollection of the moments of grace
we have travelled during the Lenten season. This year, however, our spirit of
joy is very much dampened by the global pandemic. More than other years, this
year we need to keep alive our hope that the Risen Christ is active and alive
in our midst. That hope is a reason for rejoicing.
Our life is
blessed with moments of rejoicing. One such moment is surely when we experience
forgiveness - giving and receiving. To celebrate this Rejoicing Sunday
meaningfully, Pope Francis suggested a ‘feast of forgiveness’ in 2014.
“This
coming Friday and Saturday will be a special penitential moment, called “24
hours for the Lord”. It will be — we could call it — a feast of forgiveness,
which will take place simultaneously in many dioceses and parishes around the
world. It will be a feast of forgiveness.” This was the invitation extended to the whole
world by Pope Francis, on March 23, 2014.
For the
past six years we have been celebrating this ‘Feast of Forgiveness’ on the eve
of the 4th Sunday of Lent. The main event of this feast is the ’24
Hours for the Lord’, in which the churches around the world will be kept
open for 24 hours and priests will be available for the Sacrament of
Reconciliation.
“Unfortunately
in Rome , Italy , and in other nations, this
initiative cannot be held under its traditional format due to the coronavirus
emergency,” said Pope Francis during the Wednesday audience on March 18. But he
urged Catholics in countries without such restrictions to continue “this
beautiful tradition.”
“I
encourage the faithful to draw near sincerely to the mercy of God in Confession
and to pray especially for those suffering due to the pandemic.” For those who are unable to
participate directly in the ‘24 Hours for the Lord’ initiative, Pope Francis
said that they would be able to experience “this penitential moment through
personal prayer.”
Close on the heels of this meaningful ‘Feast of
Forgiveness’, we are given a Gospel passage this Sunday - John 9:1-41 -
which talks of Jesus healing a person who was visually challenged. I consider
it as a worthwhile exercise to combine ‘forgiveness’, and ‘receiving sight’
(enlightenment) in our Sunday reflection.
In 2012, a French Canadian film Rebelle
(in English, War Witch) received many awards in different film
festivals. Rachel Mwanza, a young lady of 17, the protagonist of this
movie, also received quite a few awards. Rachel is the protagonist for our
reflections today. The article on Rachel published by the French journal ‘La
Croix’ gives us the much needed hope in the youth. I wish to share this hope
and also hold Rachel as an example of having the lovely blend of forgiveness
and enlightenment.
Let me share some of the salient features from
the life of Rachel:
Rachel,
third in a family of six children, spent the first part of her childhood in a
region of the Kasai province, a thousand kilometers from Kinshasa . In 2004, everything changed. Her
father sent the mother and the three younger children to Kinshasa , promising to join them. But, he
never did.
In the
capital of the Democratic Republic of Congo (Kinshasa ),
the situation deteriorates. Manipulated by a "false prophet", her
mother suspected Rachel of being responsible for their misfortune. The little
girl is accused of witchcraft and must undergo expensive exorcism sessions of
unprecedented violence. Her grandmother is particularly hostile to her, up to
rubbing her eyes with chilly to "punish". She was barely 10 years.
For four years, rejected by her family and neighbors, who see her as a witch,
Rachel lived outdoors. At night, she ran and hid herself to escape predators.
The article
goes on to explain all the horrors this 10 year old girl faced in the next 7
years. Rachel is very clear that she shared her miseries in various groups not
to gain sympathy for herself; she wants to use her fame to fight for street
children. After she won the award for the film ‘Rebelle’, she was invited to
speak at a meeting in Kinshasa .
When she spoke of her life, many cried. She says to the reporter of this
article: “People cried listening to my testimony, but I do not want them to
cry for me. I want them to cry for street children. Do you find it normal that
girls are sleeping outside and run at night to avoid being raped? Do you find
it normal that girls are forced into prostitution? This is not fair. That's
what needs to be changed.”
She also
says that she considered wearing the school uniform a greater honour than the
red-carpet she walked during film festivals. She wants to create a foundation
for street children along with UNESCO. All her thoughts clearly show that she
is an enlightened soul.
The closing
lines of this article are the main focus of our reflection. They go like this: When
asked if she was angry against her grandmother, she replied simply: "Why
would I want it? What's the point?" Faced with this immense wisdom, one
suddenly feels very small.
All true religions teach that enlightenment is
achieved by a free spirit. In order to free the spirit, one needs to learn the
art of forgiveness. This is clearly seen in Rachel’s statement about her
grandmother.
While
searching the internet with the combination of words - ‘forgiveness’ and
‘receiving sight’ (enlightenment), I was struck by the thought that most of the
results of this search revolved around the Biblical events. When I reversed the
search with the ante-thesis of these words, namely, ‘revenge’ and ‘going
blind’, I could find many news items and world events. One of these news items
caught my special attention. It was from Iran .
In 2004,
Rachel’s grandmother rubbed chilly in the eyes of the child. That same year, a
young man in Iran
threw acid on the face of a young lady, who refused to marry him. Seven years
later, when the judgement of this case came out, it shocked the world. Here is
a report from ‘The Guardian’ dated 13, May 2011:
In a
literal application of the sharia law of an eye for an eye, Iran is ready for the first time to
blind a man with acid, after he was found guilty of doing the same to a woman
who refused to marry him.
Majid
Movahedi, 30, is scheduled to be rendered unconscious in Tehran 's judiciary hospital at noon on
Saturday while Ameneh Bahrami, his victim, drops acid in both his eyes, her
lawyer said.
Bahrami
who had asked for an eye for an eye retribution in the court, was disfigured
and blinded by Movahedi in 2004 when he threw a jar of acid in her face while
she was returning home from work.
The shock
of this court verdict turned into solace on the day when the ‘punishment’ was
supposed to be carried out. Here is a report from CNN, dated 1, August 2011:
Bahrami
stopped the punishment minutes before it was carried out, she said, adding that
Movahedi already had been given anesthetic. She said two men were instrumental
in bringing about her change of heart: a doctor at a clinic in Spain
and Amir Sabouri, an Iranian who helped her get medical attention. Sabouri told
her to forgive Movahedi and prove to the world that Iranians are kind and
forgiving, she said.
There are
millions of angels like Rachel and Ameneh who walk this planet. They teach us
that enlightenment can be achieved by letting go (of past hurts) and letting
God. This was done by the person who was cured by Jesus of his blindness (John
9). As a beggar, this person must have accumulated lots of hurts in his life.
When he was ready to let go of these hurts, he received not only his physical
sight, but also spiritual enlightenment to such an extent that he was able to
‘teach’ the Pharisees.
In the
Gospel passage, John 9: 1-41, the miracle of Jesus curing the visually
challenged person is reported in 7 verses, while the conversations that take
place as a result of this miracle, is recorded in 34 verses. Evangelist John,
as we know, is not a person who records only the events in the life of Jesus,
but, also gives theological interpretations about the event. Last week, we
heard the lengthy conversation between Jesus and the Samaritan woman near the
well. This week we have the curing of the visually challenged person, followed
by a heated discussion between the Pharisees and the cured person. The parents
of the visually challenged person are also summoned for questioning.
The
evangelist portrays the visually challenged person as not only gaining the
physical ability of sight but also the inner light to believe in Jesus even
when he had not seen Him. The progressive enlightenment of the visually
challenged person is indicated by the titles he gives to Christ – from ‘the
man called Jesus’ (Jn. 9:11) to ‘He is a prophet’ (Jn. 9:17).
Ultimately, when he meets Jesus face to face, he surrenders with: ‘Lord, I
believe – in the Son of Man’ (Jn. 9: 35-38).
On the
other hand, we see the Pharisees gradually lose sight and become more and more
blind in their rigid ritualistic practices. The parents of the visually
challenged person are portrayed as ‘partially blinded’ persons. While they were
ready to accept their visually challenged son as the ‘will of God’, they were
scared to accept him as the miraculous sign of God’s mercy. They were blinded
by the fear of rules and regulations, instilled in their hearts by the
Pharisees.
Lent is a
good time to reflect on where we stand, especially in our willingness to let go
of past hurts so that we can gain a clearer vision of Christ. Letting go of
hurts (forgiveness) is a sure way to Letting God into our lives. That is true
enlightenment!
In the
present situation of the pandemic, when accusing voices are heard over who was
responsible for the spread of this virus, we need to learn as to how to help in
the healing of our world, instead of preparing charge-sheets against those who
are ‘guilty’ of this pandemic!
Jesus healing the blind man
தவக்காலம் 4ம் ஞாயிறு
ஒவ்வோர்
ஆண்டும்,
தவக்காலத்தின் 4ம்
ஞாயிறு,
‘Laetare
Sunday’
- அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடப்படுகிறது. உயிர்ப்பை
நோக்கிச் செல்லும் நம் தவக்காலப் பயணத்தில், மகிழ்வை வளர்க்க, தாய் திருஅவை இந்த ஞாயிறை நமக்கு
வழங்கியுள்ளார். இவ்வாண்டு, கொரோனா தொற்றுக்கிருமியால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, நம் அனைவரின் மகிழ்வையும் குலைத்துவருகிறது.
இருப்பினும், நோயையும், மரணத்தையும் கொணரும் இச்சூழலில், மரணத்தை வென்று உயிர்த்த கிறிஸ்து
நம்முடன் வாழ்கிறார் என்ற நம்பிக்கையுடன், இந்த ஞாயிறு சிந்தனையை மேற்கொள்வோம்.
நம் வாழ்வில்
மகிழ்வைக் கொணரும் தருணங்கள் பல உள்ளன. அவற்றில், மிக முக்கியமான
தருணங்கள் - நாம் மன்னிப்பு பெற்ற, மன்னிப்பு வழங்கிய தருணங்கள். தவக்காலத்தின் மகிழும் ஞாயிறுக்கு
முந்தைய இருநாள்களை மன்னிப்பு விழாவாகக் கொண்டாடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
விண்ணப்பித்தார்.
2014ம்
ஆண்டுமுதல், சிறப்பிக்கப்படும் இந்த மன்னிப்பு விழாவின்போது, உலகெங்கும், பல கோவில்கள்,
24 மணி நேரங்கள் திறக்கப்பட்டிருப்பதும், அங்கு, ஒப்புரவு அருளடையாளம் வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பதும், இவ்விழாவின் முக்கிய அம்சங்களாக இருந்துவந்துள்ளன. ஆனால்,
இவ்வாண்டு, கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், நம் கோவில்களில் மக்கள்
கூடிவரும் தருணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மன்னிப்பு விழாவில்,
ஒவ்வொருவரும், தனித்தனியே, உள்ளத்தளவில் ஒன்றித்திருக்குமாறு, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், கடந்த புதன் மறைக்கல்வி உரையில் அழைப்பு விடுத்தார்.
இவ்வாண்டு,
மார்ச் 20,21 ஆகிய இரு நாள்கள் நாம் கொண்டாடிய இந்த
மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் மகிழும் ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும் நிகழ்வு, நற்செய்தியாக
(யோவான் 9: 1-41) நமக்குத் தரப்பட்டுள்ளது. 'மன்னிப்பையும்' ‘பார்வை பெறுவதை'யும் இணைத்துச் சிந்திக்க, மகிழும்
ஞாயிறு நம்மை அழைக்கிறது.
2012ம்
ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில், Rebelle அதாவது, 'புரட்சியாளர்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படத்தில் நடித்த Rachel Mwanza என்ற 17 வயது இளம்பெண், சிறந்த நடிகர் என்ற விருது பெற்றார். கனடா நாட்டைச் சேர்ந்த Kim Nguyen என்பவரால் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தைக்
குறித்தும், விருது பெற்ற இளம் பெண் இரேச்சலைக் குறித்தும், La Croix என்ற இதழில் கட்டுரையொன்று வெளியானது. இக்கட்டுரை ஆசிரியருடன்
இவ்விளம்பெண் மேற்கொண்ட உரையாடலில், 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' இணைந்திருப்பதை நம்மால் புரிந்துகொள்ள
முடிகிறது. எனவே, இளம்பெண் இரேச்சல், நம் சிந்தனைகளின்
மையமாகிறார்.
ஆப்ரிக்காவின்
காங்கோ குடியரசில், ஓர் எளியக் குடும்பத்தில், மூன்றாவதுக் குழந்தையாகப் பிறந்தவர்,
இரேச்சல். அவருக்கு 8 வயதானபோது, வாழ்க்கை முற்றிலும் மாறியது. இரேச்சலின் தந்தை, தன் மனைவியையும், ஆறு குழந்தைகளையும், அவர்கள் பிறந்து
வளர்ந்த ஊரிலிருந்து, தலைநகரான கின்ஷாஸாவுக்கு (Kinshasa) அனுப்பிவைத்தார். விரைவில் அவர்களுடன் தானும் சேர்வதாகக் கூறியத்
தந்தை, அத்துடன் அவர்கள் வாழ்விலிருந்து முற்றிலும்
மறைந்தார். கின்ஷாஸாவில் அத்தாயும், குழந்தைகளும், தங்கள் பாட்டியோடு தங்கியபோது,
அடுக்கடுக்காய் துன்பங்களைச் சந்தித்தனர்.
அக்குடும்பத்தின்
துன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம்
என்றும், அக்குழந்தையைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்றும்,
அந்நகரில் இருந்த ஒரு 'போலிச்சாமியார்' கூறினார். இரேச்சலின் பாட்டி, குழந்தைப்
பருவத்திலிருந்தே இரேச்சலை வெறுத்தவர். எனவே,
போலிச்சாமியார் இவ்விதம்
சொன்னதும், அக்குழந்தைக்குள்ளிருந்த பேயை விரட்ட, பாட்டி, சிறுமியின் கண்களில் மிளகாய்ப்
பொடியைப் போட்டுத் தேய்த்தார். அப்போது, இரேச்சலுக்கு
வயது பத்து. இதைத் தொடர்ந்து, இரேச்சல், தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.
அடுத்த
7 ஆண்டுகள், இளம்பெண் இரேச்சல், வெளி உலகில் சந்தித்த துன்பங்களை
இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும்
என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக்
குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே, தன் வாழ்வின் துயரங்களை, உலகின்
பல அரங்குகளில், தான் பேசி வருவதாக இரேச்சல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டுரையின்
இறுதியில் ஆசிரியர் கூறும் அற்புத வரிகளே, இளம்பெண் இரேச்சலை நம் சிந்தனைகளின் மையமாக்கியுள்ளன. அந்த இறுதி
வரிகள் இதோ: "இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது
அவர் கோபமாய் இருக்கிறாரா என்று கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும்? அதனால் என்ன பயன்?’
என்று பதில்
சொன்னார். இத்தகைய உன்னதமான சிந்தனைக்கு முன் நாம் மிகச் சிறியவர்களாகிறோம்" என்ற வார்த்தைகளுடன், இக்கட்டுரையை,
ஆசிரியர் நிறைவு செய்துள்ளார்.
இரேச்சல்
அவர்களின் வாழ்வை முற்றிலும் புரட்டிப்போட்டு,
அவரை வீதிக்குக் கொணர்ந்தது
– அவரது பாட்டி, அவர் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த அந்தக் கொடூரம். அந்நிகழ்வால்,
அக்குழந்தை, தன் கண் பார்வையையே இழந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தன. கண்பார்வையை இழக்காமல்
அவரைக் காத்த இறைவனுக்கு முதலில் நன்றி கூறுவோம். அதைவிட மேலாக, அந்நிகழ்வோ, அதைத் தொடர்ந்த துன்பங்களோ, அந்த இளம்பெண்ணின் மனக்
கண்களைக் குருடாக்கி, அவரை வெறுப்பில் புதைந்துபோகச்
செய்யாமல் காத்ததற்காக, இறைவனுக்கு, சிறப்பான நன்றியைக் கூறுவோம். 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' ஒன்றோடொன்று பிணைந்தது என்பதை, இரேச்சல்
அவர்களின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.
'மன்னிப்பு' 'பார்வை பெறுதல்' என்ற இவ்விரு வார்த்தைகளையும் இணைத்து, இணையத்தளத்தில் தேடினால்,
நாம் காணும் பல
முதல் தகவல்கள், மதங்களுடன் தொடர்புடைய தகவல்களாகவே உள்ளன. மன்னிப்பதால், அகக்கண்கள் திறந்து, ஆண்டவனைக் காணமுடியும் என்று, அனைத்து உண்மையான
மதங்களும் சொல்லித்தருகின்றன. 'கண்ணுக்குக் கண்' என்ற பழிவாங்கும் பாடங்களைச் சொல்லித்தரும் இவ்வுலகப் போக்கு, நம் அனைவரையும் பார்வை இழக்கச்செய்கிறது. 'பழிக்குப் பழி' என்ற உணர்வால், நாம் எவ்வளவுதூரம்
பார்வை இழக்கமுடியும் என்பதைக் கூறும் ஒரு நிகழ்வு, சில
ஆண்டுகளுக்கு முன், ஈரான் நாட்டில் நிகழ்ந்தது.
இரேச்சலின்
கண்களில் அவரது பாட்டி மிளகாய்ப் பொடியைத் தேய்த்த ஆண்டு 2004. அதே ஆண்டு, ஈரானில், தன் காதலை நிராகரித்த அமேனே
பராமி (Ameneh Bahrami) என்ற இளம்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசினார் மஜீத் மோவஹேதி (Majid
Movahedi) என்ற இளைஞர்.
இதனால், இளம்பெண் அமேனேயின் முகமெல்லாம் எரிந்துபோய்,
இடது கண்ணில் அவர் பார்வை இழந்தார்.
2011ம்
ஆண்டு, இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, உலகை அதிர்ச்சியடையச் செய்தது. அமில வீச்சினால் இடது கண்ணில் பார்வையை
இழந்த இளம்பெண் அமேனே போலவே, மஜீத்தின் இடது கண்ணிலும் அமிலம்
ஊற்றப்பட்டு, அவரும் பார்வை இழக்கவேண்டும் என்பதே அத்தீர்ப்பு.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு இளம்பெண் அமேனே முதலில் துணைபோனார் என்பது உண்மை.
இத்தீர்ப்பை
செயல்படுத்தக்க்கூடாது என்று உலகின் பல மனிதாபிமான அமைப்புக்கள் விண்ணப்பித்தாலும், ஈரான் சிறை அதிகாரிகள், 2011ம் ஆண்டு, மே மாதம் ஒரு நாள், இத்தீர்ப்பை நிறைவேற்ற, மஜீத்துக்கு மயக்க மருந்தை முதலில் கொடுத்தனர்.
அவர் மயக்கத்தில் இருந்த நேரம், அமில வீச்சில் கண்ணிழந்த இளம்பெண்
அமேனே அவர்கள், அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று விண்ணப்பித்ததால், மஜீத்தின் கண்களில் அமிலம் ஊற்றப்படவில்லை. இளம்பெண் அமேனே அவர்களின்
அகக் கண்கள் திறந்ததால், மஜீத்தின் கண்கள் காப்பாற்றப்பட்டன.
'கண்ணுக்கு கண்' என்று வாழும் இவ்வுலகப் போக்கிற்கு மாற்றுச் சாட்சியங்களாக இரேச்சல், அமேனே போன்ற இளம்பெண்கள் 'மன்னிப்பு' பாடங்களைச் சொல்லித் தருவதால், இவ்வுலகம்
இன்னும் முழுமையாகக் குருடாகாமல் வாழ்கிறது. உடலில் உள்ள கண்களில் வேதனையை அனுபவித்தாலும், பார்வையை இழந்தாலும், அகக் கண்களால் அற்புதமான உண்மைகளைக்
காணமுடியும் என்பதை, இரேச்சல், அமேனே என்ற இவ்விரு இளம்பெண்களும்
நமக்குச் சொல்லித்தருகின்றனர்.
இதேபோல், இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும்
பார்வை இழந்த மனிதரும், உடலில் மட்டும் பார்வை பெறாமல், உள்ளத்திலும் பார்வை பெறுவதைக் காண்கிறோம். இயேசு, பார்வை இழந்தவரை
குணமாக்கியப் புதுமை, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைவாக்கியங்களில் முடிவடைகிறது.
ஆனால், இப்புதுமையைத் தொடர்ந்து 34 இறைவாக்கியங்கள்
வழியே, நற்செய்தியாளர் யோவான், ஓர் இறையியல் பாடத்தை நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது
என்பன குறித்த பாடங்கள் இவை.
பார்வை
இழந்த மனிதர், உடலளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார்.
தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டுகொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் தெளிவான பார்வை கொண்டிருந்ததாக எண்ணிக்கொண்டிருந்த பரிசேயர்கள்,
படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும், நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ளார்.
இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின் பெற்றோர்,
அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும், யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.
இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக்
கழுவச்சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார். பார்வை பெற்ற மகிழ்வோடு,
அவர் தன் வழியே போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், ‘சுபம்’ போட்டிருக்கலாம். புகழை விரும்பாத
இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். அனால், பார்வை பெற்றவர்
திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின.
பார்வை பெற்றவர், கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர்.
அவர் திரும்பி வந்தபின், பெரியதொரு பிரச்சனையில் சிக்கிக்கொள்வோம் என்று கொஞ்சமும்
எதிர்பார்த்திருக்க மாட்டார். புதுமை நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதுதான் பிரச்சனை.
மலைபோல் குவிந்திருந்த பல பிரச்சனைகள் நடுவே தினமும் வாழ்ந்தவர்கள், அந்தப் பிச்சைக்காரர்கள்.
அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்ற பாகுபாடுகள் எல்லாம்
இருந்ததில்லை. இத்தகையப் பாகுபாடுகளால் தங்கள் பார்வையைக் குறுக்கிக் கொண்டவர்கள்,
பரிசேயர்கள். 'ஓய்வுநாள்' என்பது, இறைவன் தந்த கொடை என்பதை மறந்து, அதை ஒரு பிரச்சனையாக
மாற்றியப் பரிசேயர்கள், பார்வை பெற்றவரை கேள்விகளால்
துளைத்தனர்.
பார்வை பெற்றவர், தன் ஊனக் கண்களால் இயேசுவை அதுவரை பார்க்கவில்லை, ஆனால், அகக்கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை.
அகக்கண்களால் தான் கண்ட இயேசுவைப்பற்றி அச்சமின்றி அறிக்கையிட்டார். தங்களை எதிர்க்கத்
துணிந்த அந்தப் பிச்சைக்காரரின் பெற்றோரை அழைத்து, அவர்களையும்
கேள்விகளால் வாட்டியெடுத்தனர் பரிசேயர்கள்.
தங்கள் மகன் பார்வையற்றிருந்தபோது, அதை இறைவனின் சித்தம்
என்று ஏற்றுக்கொண்ட அவரது பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள் மகனை ஏற்றுக்கொள்வதற்குத்
தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள், அவ்வளவு தூரம், அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தன. பிறந்ததுமுதல், தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்திராத அம்மனிதர், அன்று, முதல்முறையாக, தன்
பெற்றோரையும், பரிசேயரையும் பார்த்திருப்பார். தன் பெற்றோரது
பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கும் மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள், அந்தப் பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும், மிக நெருக்கத்தில் வாழும் அவர்கள், கடவுளைக்
காணமுடியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று, அவர் பரிதாபப்பட்டிருப்பார்.
பார்வை பெற்றவரின் சாட்சியம், தீவிரமாக, துணிச்சலாக இருந்ததால், அவரை, கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர், பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த
இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அச்சந்திப்பில்,
அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. தனக்கு புதுமை செய்தவர், 'இயேசு' என்றும், 'இறைவாக்கினர்' என்றும் (யோவான் 9:15,17) படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் அளவு, அக ஒளி பெற்ற அவர், இறுதியில்,
இயேசுவைச் சந்தித்தபோது, அவரது அகம் முழுவதும் இறை ஒளியால்
நிறைந்தது. இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" (யோவான் 9:38) என்று முழுமையாய் சரணடைந்தார்.
உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளால் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுவோம்.
பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத்தான் அடிக்கடி கூறுகிறோம்.
'கண்மூடித்தனமான காதல்' என்றும்,
"கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுதல் என்றும், பல விதமான கூற்றுகள் நம் பேச்சு
வழக்கில் உள்ளன!
உள்ளத்தில் கொந்தளிக்கும் வெறுப்பால், மன்னிக்கமுடியாத ஆத்திரத்தால் நமது அறிவுக் கண்கள் குருடாகிப் போகாமல்
வாழ, இறைவனின் அருளை இன்று நாடுவோம். இரேச்சல்,
அமேனே, இயேசுவின்
அருளால் பார்வை பெற்றவர் போன்ற எத்தனையோ நல்ல உள்ளங்கள் நமக்குச் சொல்லித்தரும் அற்புதப்
பாடங்களை, வாழ்வில் கடைபிடிக்க முயல்வோம். மன்னிப்பு பெறுவதாலும், தருவதாலும், இவ்வுலக
மக்கள், மகிழ்வில் நிறையவேண்டும் என்று, இந்த மகிழும் ஞாயிறன்று செபிப்போம்.
No comments:
Post a Comment