Christ's
Entry into Jerusalem
Palm - Passion Sunday
With almost half
the world’s population - nearly 4 billion - under lockdown, (cf. NYTimes, 3
April, 2020) what we are going through right now is a global crisis, created by
the COVID-19 virus. The word ‘crisis’ is used, generally, in the context of
some peak moment of danger; but the original meaning of the word ‘crisis’ has
something to teach us today. Hence, we begin our Sunday reflection on the
meaning of this word.
The word ‘crisis’
in Latin or Ancient Greek means “a separating, power of distinguishing,
decision, choice, election, judgment, dispute”. Kathleen Norris, an American
novelist and newspaper columnist writes, “The word crisis derives from the
Greek for ‘a sifting’,… to jostle, sift and sort things until only what was
most vital would remain.” – (Acedia & Me: A Marriage, Monks, and a Writer’s
Life). According to Kathleen, a ‘crisis’ can be seen as a gift, since it shakes
things up, or, rather, shakes us up, until we are forced to re-think our
priorities.
COVID-19, has
brought disease and death – true! But, it has also brought us ‘home’, to learn
many lessons for our life. The virus that cannot be seen with our naked eyes,
has given us an opportunity to see various other realities which we had refused
to see, or ignored till now. We have been living in a hectic world, not seeing,
or, refusing to see so many essential truths about our life.
With the present
lock-down, we have enough time on our hand to mull over these essential truths.
During this lock-down, the Church invites us to celebrate the Holy Week. All
the basic tenets of our faith are based on the events commemorated during the
Holy Week, namely, the Death and Resurrection of our Lord. The Holy Week begins
with Palm Sunday.
This Sunday
brings together three ideas – Palm Sunday, the Holy Week and the
World Youth Day for our reflection. Let us begin with Palm Sunday.
“Palm Sunday Tornado 1920” – We could not have asked for a better starting
point for our reflections today. Tornados, we are told, are a common feature in
the US
especially in the months of March, April going up to June or even July. This
year, however, another type of tornado is battering various parts of the U.S.
and the world – namely, COVID-19.
Palm Sunday
and Tornado – a combination that can give us food for thought. I want to
reflect on the tornado that swept through Jerusalem
on the first Palm Sunday. Most of the people in Jerusalem , especially those in power, were
caught off-guard by the ‘tornado’ called Jesus.
Jesus’
entry into Jerusalem
must have turned the lives of the religious leaders and the Roman officials
topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the
religious leaders – namely, the Temple
– and began to put things in order. Jesus put things in order? Well, depends on
which perspective one takes. For those in power, things were thrown completely
out of order; but for Jesus and for those who believed in His ways, this was a
way to set things straight. This is typical of a tornado… uprooting, turning
things topsy-turvy and leaving us to stare at the bare minimum. A tornado is
possibly a call to begin again with fresh energy! Let us brace ourselves to
begin from bare minimum after COVID-19 passes!
With the
Palm Sunday begins the Holy Week. Of all the 52 weeks of the year, the
Church calls this week Holy. What is so holy about it? What is so holy about
the betrayal by a friend, the denial by another friend, the abandonment by the
other friends, the mock trial, the condemnation of the innocent and the brutal
violence unleashed on Jesus…? None of these comes close to the definition of
holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’. By
submitting Himself to all the events of the Holy Week, He wanted to redefine
God – a God who was willing to suffer. He had already defined love as “Greater
love has no one than this, that someone lay down his life for his friends.” (John.
15: 13)
If human
love can go to the extent of laying down one’s life for friends, then God’s
love can go further… to lay down His life for all, including the ones who were
crucifying Him. Such a God would normally be unthinkable, unless, one is
willing to redefine God. Jesus did that. He had also redefined holiness and
made it very clear that in spite of all the events that took place during that
week, one could call it Holy since those events resulted in the Supreme
Sacrifice.
Death by
crucifixion was the most painful torture the Romans had invented. Death on the
cross was the most despicable form of punishment reserved for the worst
criminals. Jesus, on the Cross, has made this most vicious symbol of punishment
and death into a symbol of veneration. The crucified Jesus has turned the lives
of millions upside down. Here is one example…
William J.
Bausch in his book Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful
Reflections talks of a Bishop who was a great evangelizer. Here is the rest of the story: He tried to
reach out to unbelievers, scoffers, and cynics.
He liked to tell the story of a young man who would stand outside the
cathedral and shout derogatory slogans at the people entering to worship. He would call them fools and other insulting
names. The people tried to ignore him
but it was difficult. One day the parish priest went outside to confront the
young man, much to the distress of the parishioners. The young man ranted and raved against
everything the priest told him. Finally,
he addressed the young scoffer by saying, “Look, let’s get this over with once
and for all. I’m going to dare you to do
something and I bet you can’t do it.”
And of course the young man shot back, “I can do anything you propose,
you white-robed wimp!” “Fine,” said the priest.
“All I ask you to do is to come into the sanctuary with me. I want you to stare at the figure of Christ,
and I want you to scream at the very top of your lungs, as loudly as you can.
‘Christ died on the cross for me and I don’t care one bit.’” So the young man
went into the sanctuary, and looking at the figure, screamed as loud as he
could, “Christ died on the cross for me and I don’t care one bit.” The priest said, “Very good. Now, do it again.” And again the young man screamed, with a
little hesitancy, “Christ died on the cross for me and I don’t care one
bit.” “You’re almost done now,” said the
priest. “One more time.” The young man
raised his fist, kept looking at the statue, but the words wouldn’t come. He just could not look at the face of Christ
and say it anymore. The real punch line came when, after he told the story, the
bishop said, “I was that young man. That young man, that defiant young man was
me. I thought I didn’t need God but found out that I did.”
The
Crucified Christ may work remarkable changes in us during this Holy Week. Are
we ready?
Palm Sunday
is also celebrated as the World Youth Day - WYD. Pope St John Paul II
established this day in 1985, the International Year of the Youth. Prior to
this, in the year 1983, Pope John Paul II had declared the Holy Year of
Redemption (to commemorate the 1950th anniversary of the death of
Jesus on the Cross). For this special year, a huge cross was erected in St
Peter’s Basilica for the veneration of thousands of pilgrims pouring into Vatican
for the Holy Year. At the end of this Holy Year of Redemption, Pope John Paul
II invited the youth to come to Rome
for the Feast of the Palm Sunday. The Vatican
officials were expecting that around 60,000 youth would respond to the
invitation of the Holy Father. But, on April 15, 1984, for the Feast of the
Palm Sunday, a tornado entered Rome .
Yes… More than 300,000 young men and women poured into St Peter’s Square. Looking
out to the crowds who answered his invitation, Pope St John Paul II said, “What
a fantastic spectacle is presented on this stage by your gathering here today!
Who claimed that today’s youth has lost their sense of values? Is it really
true that they cannot be counted on?” It was obvious that the youth broke
the prejudice which stamps youth as disinterested in spiritual affairs.
Pope St
John Paul II also made a special gesture to the youth at the end of the Palm
Sunday celebrations. The Holy Father entrusted to the youth, the Cross that was
kept in St Peter’s Basilica for the Holy Year of Redemption. This Cross is now
known as the World Youth Day Cross, to be carried throughout the world as a
symbol of the love of Christ for humanity. Ever since 1985, for the past 35
years, this special Cross has been carried to various continents around the
globe for all the World Youth Day celebrations.
One of the
prejudices associated with the youth is that they run away from the cross –
pain – and run after fleeting pleasures. But, during the present pandemic, we
have seen so many young men and women, who have risked their own health, in
order to bring some help to the homeless and daily labourers in different parts
of India .
We pray that God may bless these generous souls abundantly.
Our closing
thoughts are on the lockdown and the Holy Week. After Palm Sunday, the
religious as well as Roman authorities began hunting for Jesus. Once he was
caught, most of the disciples chose to lock themselves up. From this lockdown,
they must have followed up on the trial and the death of their Master, from the
reports they received. We are almost in a similar situation as the disciples.
We are in lockdown, trying to follow the liturgical services that celebrate the
death and Resurrection of our Lord. Most of us, in our life-time, would not
have experienced this ‘remote participation’ in the Holy Week Services. It is a
graceful moment to reflect on what is the real meaning of our religious,
liturgical celebrations – especially, the Death and Resurrection, which are the
core of our Christian Faith.
Reflecting
on COVID-19, Fr Ron Rolheiser OMI has written an article: ‘The Dispelling of an
Illusion’. Let me close my reflection with a few lines from this article:
This
unforeseen and unwelcome virus is teaching us that, no matter our
sophistication, intelligence, wealth, health, or status, we’re all vulnerable;
we’re all at the mercy of a thousand contingencies over which we have little
control. No amount of denial will change that…
Whatever
else about this virus, it’s bringing us a moment of clarity and lucidity, even
if this is far from welcome…
We were
given the same lesson, in effect, with the downing of the Twin Towers in New York City on September
11th, 2001. In witnessing this single tragic incident we went from feeling safe
and invulnerable to knowing that we are not able, despite everything we have
achieved, to ensure our own safety and safety of our loved ones. A lot of
people relearned the meaning of prayer that day. A lot of us are relearning the
meaning of prayer as we sit quarantined at home during this coronavirus…
This
coronavirus is anything but gentle. But inside all of its harshness perhaps we
might feel a gentle nudge that will help us dispel the illusion that we are in
control.
May we
spend this Holy Week, trying to get a more realistic and humbler
self-assessment, to reflect on what our priorities in life are; and to discover
what sense do we make of the Passion, Death and Resurrection of Christ!
--------------------------------------------
Here is
a write-up that is circulating in the social media, written by Ava Gutowski:
You made
the whole world stop spinning for awhile,
You
silenced the noise that we all have created
You made us
bend our knees again and ask for a miracle.
You closed
Your churches so we will realize how dark our world without You in it.
You humble
the proud and powerful.
The economy
is crashing, businesses are closing.
We were
very proud, we thought that everything we have, everything we possess was the
result of our hardwork.
We have
forgotten that it was always Your grace and mercy that made us who we are.
We’re like
running in circles looking for some cure to this disease but in fact it takes
humility to ask for Your wisdom.
We’ve been
living our lives like we will be here on earth forever, like there’s no heaven.
Maybe these
trials are Your mercy in disguise.
Maybe this
virus is actually Your way of purifying us, cleansing our soul, bringing us
back to YOU.
In the past
you serenaded us with Hosea’s song:
“Come back
to me with all your heart
Don't let
fear keep us apart
Trees do
bend though straight and tall
So must we
to others' call
Long have I
waited for Your coming home to me
And living
deeply our new lives”
You have
been patiently waiting for us. We’re so sorry for ignoring Your voice. For our
selfish ways. We all deserve this. We have forgotten You dear Father.
We’ve forgotten
that You’re God, You only need to say the words and our souls shall be healed.
Jesus' Triumphal
Entry into Jerusalem
குருத்தோலை-திருப்பாடுகள் ஞாயிறு
கோவிட்-19
தொற்றுக்கிருமியின்
உலகளாவியப் பரவலால், நாம் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இன்று, உலகெங்கும் உருவாகியுள்ள இந்நிலையை, ஓர் ‘உயர்மட்ட ஆபத்து நிலை’ என்று கூறுகிறோம். இதற்கு ஆங்கிலத்தில்
‘Crisis’ என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறோம். ‘Crisis’ என்ற சொல்லுக்கு, இலத்தீன், அல்லது, கிரேக்க மொழியில், 'பிரித்தல், பகுத்தறிதல், முடிவெடுத்தல், தேர்ந்தெடுத்தல்' என்ற பல பொருள்கள் கூறப்படுகின்றன.
எதிர்பாராத, பெரியதொரு ஆபத்து ஏற்படும் வேளையில், நாம் நிலைகுலைந்து போகிறோம். ஆனால், அந்த ஆபத்து, நமக்கு, பல பாடங்களையும் சொல்லித்தருகின்றது என்பதை
மறுக்க இயலாது. வாழ்வில், எது முக்கியம், எது முக்கியம் அல்ல, எது அவசியமானது, எது அவசியமற்றது என்ற பகுத்தறியும்
திறனை நமக்குத் தருகிறது.
கோவிட்-19
தொற்றுக்கிருமி, மரணத்தையும், நோயையும் கொண்டுவந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், கண்ணுக்குத் தெரியாத இந்தக் கிருமி, நாம், இதுவரை, வாழ்வில், காண மறந்த, அல்லது, காண மறுத்த பல உண்மைகளையும்
நமக்குச் சொல்லித்தந்தவண்ணம் உள்ளது என்பதையும் மறுக்க இயலாது.
நாம்
இதுவரை ஓடிக்கொண்டிருந்த அவசரமான வாழ்வில், காண மறந்த, அல்லது, காண மறுத்த பல உண்மைகளை அசைபோட, இந்த 'முழு அடைப்பு' நேரம் நம்மை அழைக்கிறது. இந்த முழு
அடைப்பு நேரத்தில், நம் இல்லங்களில் இருந்தவண்ணம் புனித வார
நிகழ்வுகளில் கலந்துகொள்வதை, அருள் நிறைந்த ஒரு தருணமாக நாம்
ஏற்றுக்கொள்வோம்.
கோவிட்-19
தொற்றுக்கிருமியின் தாக்கம், குருத்தோலை ஞாயிறன்று ஒரு சூறாவளியாக
வீசுவதை எண்ணிப்பார்க்கும்போது, ஒரு வரலாற்றுப்பதிவு என் நினைவுக்கு
வருகிறது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The
Palm Sunday Tornado 1920… குருத்தோலை ஞாயிறு சூறாவளி
1920. சரியாக நூறு ஆண்டுகளுக்குமுன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களில்,
குருத்தோலை ஞாயிறன்று வீசிய 37 சூறாவளிகளைப் பற்றிய செய்தி அது.
அமெரிக்க
ஐக்கிய நாட்டில், ஒவ்வோர் ஆண்டும், மார்ச் மாதம் முதல், ஜூன் மாதம் முடிய, பல்வேறு
இடங்களில் சூறாவளிகள் வீசுவது வழக்கம்தான். எனவே, பொதுவாக
மார்ச் மாதம் இடம்பெறும் குருத்தோலை ஞாயிறன்று பலமுறை அந்நாட்டில் சூறாவளிகள் வீசியுள்ளன.
இவ்வாண்டோ, அந்நாட்டில் வீசும் வழக்கமான சூறாவளிகளுடன், கோவிட்-19 என்ற கூடுதல் சூறாவளியும் வீசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
குருத்தோலை
ஞாயிறு, சூறாவளி...
இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம். சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; தன் பாதையில் உள்ள அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு, எருசலேமில், பலவற்றைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது
என்பதை உணரலாம்.
இயேசு, எருசலேமில் நுழைந்தபோது, மக்கள், எவ்விதத்
தூண்டுதலுமின்றி, தாங்களாகவே கூடிவந்து, அவரை வரவேற்றனர்.
தானாகவே கூடும் கூட்டங்கள், தங்கள் குறிக்கோள்களை அடைய முயலும்.
காசு கொடுத்து சேர்க்கப்படும் கூட்டங்களோ, கொடுத்த காசுக்கு கூச்சல்
போட்டுவிட்டு, கலைந்துவிடும். எருசலேமில், அன்று, தானாகவே உருவான
மக்கள் கூட்டம், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை
உருவாக்கியது. இயேசுவைச் சுற்றி உருவான அந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம்
ஆட்டம் கண்டது.
இயேசு, தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்தே, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வுக்குச்
சவால்விடும் வண்ணம், மாற்றங்கள் உருவாயின. அந்த மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில்,
இயேசு, மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் அரணாக விளங்கிய
எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குவிந்திருந்த அவலங்களை, சாட்டையைச்
சுழற்றி, சுத்தப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு,
அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும், தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!
இரண்டாவது,
நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனித வாரம். குருத்தோலை ஞாயிறு
முதல், உயிர்ப்பு விழா
வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்று அழைக்கிறது.
வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில்
வாழ்ந்த இறுதி நாள்கள் இவை என்பதாலும், நம் மீட்பு வரலாற்றின் உச்சக்கட்ட
நிகழ்வுகள், இந்த வாரத்தில் நிகழ்ந்ததாலும், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம்.
அந்த இறுதி நாள்களில் நிகழ்ந்தவை எதிலும், புனிதம், வெளிப்படையாகத்
தெரியவில்லையே! இயேசுவின் நண்பர்களில் ஒருவர் காட்டிக்கொடுத்தார். மற்றொருவர் மறுதலித்தார்.
ஏனைய நண்பர்கள், ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனதால், பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன.
இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர், என்று தெரிந்தும், தவறாக,
தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு
கந்தல் துணிபோல் சிலுவையில் தொங்கவிட்டனர்.
நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம்
என்பதற்கே வேறோர் இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே! ஆம், வேறோர்
இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு.
கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும்,
எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே, நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி, வேறுபட்ட
ஓர் இலக்கணத்தை, இயேசு, தன் சிலுவை மரணத்தின் வழியாகச் சொல்லித் தந்தார். வெளிப்படையாகத்
தெரியாத இந்தப் புனிதத்தை, கற்றுக்கொள்ளவே, புனிதவாரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய,
வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு!
கல்வாரி என்றதும், நம் சிந்தனைகளில் செதுக்கப்படும் ஓர் அடையாளம்...
சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே, மிகவும் கொடூரமானது,
சிலுவை. பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை, பொது இடத்தில் நிர்வாணமாக்கி, அவர்களை,
அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான், சிலுவை. அந்த அவமானச்
சின்னத்தை,
அந்தக் கொலைக்கருவியை, இன்று, நாம், கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும்
வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில்
அறையுண்ட இயேசுவின் உருவம், கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளியாக நுழைந்து,
தலைகீழ் மாற்றங்களை உருவாக்கி, மீட்பைக் கொணர்ந்துள்ளது.
சிலுவையில்
அறையுண்ட இயேசு, ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைப் பற்றி அழகுறச்
சித்திரிக்கும் ஒரு கதை இது. இக்கதையின் நாயகனான ஆயர், சிறந்த மறையுரையாளர்.
இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று,
அவர்களிடம் பேசிவந்தார், இந்த ஆயர். அவர்களிடம், அடிக்கடி, ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது,
இவர் வழக்கம்.
பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame
பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும், இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு
திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்றழைத்து, உரத்தக் குரலில் கேலிசெய்து
வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு
வாரமும், அந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் கூடிவந்தது.
ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை,
பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு
உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை, அவரிடம், "நான் இப்போது
உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை"
என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபம், கட்டுக்கடங்காமல்
வெடித்தது. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும்
செய்து காட்டுகிறேன்" என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார், அவ்விளைஞர். பங்குத்தந்தை
அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில்
இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து
எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று
நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.
அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார்.
பின்னர், உரத்தக் குரலில், "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி
எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக்
கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார்.
ஆனால், இம்முறை,
அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவுசெய்து,
இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர்
நீ போகலாம்" என்று கூறினார். இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர்
கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை
அவரால் தொடர்ந்து பார்க்கவும் முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.
இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக
இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத்
தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத்
தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத்
தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.
சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும்
அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் அழைக்கப்படுகிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள்
உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு, அவர் வாழ்வை மாற்றிய
இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம்.
சிலுவையில் அறையுண்ட இயேசுவையும், இளையோரையும்
இணைத்துச் சிந்திக்கும்போது, இன்றைய மூன்றாவது கருத்து மனதில் எழுகிறது.
அதுதான்,
உலக இளையோர் நாள். ஒவ்வோர் ஆண்டும், குருத்தோலை ஞாயிறன்று,
தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. இளையோர் உலக நாள், முதல்முறை, வத்திக்கானில்
கொண்டாடப்பட்டபோது, இளையோரைக் குறித்து, உலகம் கொண்டிருக்கும் பல முற்சார்பு எண்ணங்கள்,
உடைத்து எறியப்பட்டன.
1984ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று, இளையோரை,
உரோம் நகருக்கு வரும்படி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், அழைத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று வருகைதரும் இளையோரின் எண்ணிக்கை, 60,000 இருக்கும் என்று திருஅவைத்
தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அன்று, ஒரு சூறாவளி, உரோம்
நகரில் நுழைந்து, தலைவர்களின் எதிர்பார்ப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ஆம், அன்று, உரோம்
நகரில் 60,000 அல்ல, 300,000 இளையோர் கூடி வந்திருந்தனர்.
அங்கு, கூடியிருந்த இளையோரைக் கண்டு, புனிதத்
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறிய அற்புதமான வார்த்தைகள், "உலக இளையோர்
நாள்" என்ற எண்ணத்திற்கு வித்திட்டன: "ஆயிரமாயிரம் இளையோர், இவ்வளவு
ஆர்வமாகக் கூடிவந்து, அர்த்தமுள்ள முறையில் இந்நாளைச் சிறப்பித்தது, உண்மையிலேயே
வியப்பிற்குரியது. ஆன்மீக உணர்வுகளையும், உயர்ந்த கொள்கைகளையும்
இளையோர் இழந்துவிட்டனர் என்று, இப்போது, யாரால் சொல்லமுடியும்? அவர்களை
நம்புவது வீண் என்று, இனி யாராலும் சொல்லமுடியுமா?" என்று
புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோருக்கு நற்சான்றிதழ் வழங்கியதை, இளையோர்
ஆரவாரமாக வரவேற்றனர்.
1984ம் ஆண்டு, கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு வழிபாட்டிற்குப்
பின், திருத்தந்தை,
புனித 2ம் ஜான்பால் அவர்கள், ஓர் அற்புத அடையாளச் செயலைச் செய்தார்.
1983ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்பட்ட, மீட்பின் புனித ஆண்டுக்கென,
பெரியதொரு சிலுவை, புனித பேதுரு பசிலிக்காவில் மக்களின் வணக்கத்திற்காக
வைக்கப்பட்டிருந்தது. அச்சிலுவையை, இளையோர் கரங்களில், திருத்தந்தை ஒப்படைத்தார்.
கிறிஸ்துவின் அளவற்ற அன்பைப் பறைசாற்றும் அந்த அற்புத அடையாளத்தை, உலகெங்கும்
எடுத்துச் செல்லவேண்டும் என்று, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், இளையோரிடம்
குறிப்பாக விண்ணப்பித்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த
இளையோர் நாளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை. துன்பங்களைக் கண்டால்,
பயந்து, விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச்செல்பவர், இளையோர், என்ற தவறான,
முற்சார்பு எண்ணத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள்
நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும்
சிலுவை.
கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடி, மற்றும்
முழு அடைப்பு ஆகிய துன்பங்கள் நம்மைச் சூழ்ந்துள்ள வேளையிலும், ஆதரவற்ற
பல வறியோருக்கு உதவிகள் செய்ய முன்வந்திருக்கும் இளையோர், தங்கள் சிலுவைகளைச்
சுமக்க வீதிகளுக்கு வந்திருப்பது நமக்கு நம்பிக்கை தருகிறது. இவ்விளையோரை இறைவன் நிறைவாக
ஆசீர்வதிக்கவேண்டுமென்று செபிப்போம்.
இறுதியாக நம் சிந்தனைகள் மீண்டும் ஒருமுறை நாம் வாழ்ந்துவரும்
'முழு அடைப்பு' என்ற எதார்த்தத்தை
நோக்கி திரும்புகிறது. முதல் குருத்தோலை ஞாயிறன்று நடந்தவற்றைக் கண்ட அதிகார வர்க்கம், இயேசுவை
அழித்துவிடும் வெறியில், தங்கள் வேட்டையைத் துவங்கியது. அந்த
வேட்டையில், இயேசு பிடிபட்டதும், அவரது சீடர்கள் தங்களையே ஓரிடத்தில் அடைத்துக்கொண்டனர்.
அவர்களில் பலர், தாங்கள் அடைபட்டிருந்த அறையிலிருந்தவண்ணம், இயேசுவின்
பாடுகள்,
மரணம் ஆகியவற்றைக் குறித்து, பிறரிடமிருந்து செய்திகளைக் கேட்டிருக்கவேண்டும்.
இன்று, ஏறத்தாழ அதே நிலைக்கு நாம் உள்ளாகியிருக்கிறோம்.
கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு
ஆகிய மறையுண்மைகளைப் பறைசாற்றும் வழிபாடுகளில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாமல், ஊடகங்கள்
வழியே, இந்த மறையுண்மை
நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறோம்.
தொற்றுக்கிருமி நம்மீது சுமத்தியிருக்கும் இந்த கட்டுப்பாட்டை, ஆன்மீக
அளவில் வெற்றிகொண்டு, இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும்
உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளில் பொருளுள்ள முறையில் பங்கேற்க இறைவன் நமக்கு வழிகாட்டுவாராக!
No comments:
Post a Comment