Live Telecast of Pope’s Easter Vigil 2020
Homily of Pope Francis
On April
11, Holy Saturday, at 9 p.m., Pope Francis presided over the Easter Vigil in St
Peter’s Basilica with very minimal participation of people. This was broadcast
live on many TV channels. Here is the homily that the Pope preached during this
Vigil:
“After the
Sabbath” (Mt 28:1), the women went to the tomb.
This is how the Gospel of this holy Vigil began: with the Sabbath. It is the day of the Easter Triduum that we
tend to neglect as we eagerly await the passage from Friday’s cross to Easter
Sunday’s Alleluia. This year however, we
are experiencing, more than ever, the great silence of Holy Saturday. We can imagine ourselves in the position of
the women on that day. They, like us,
had before their eyes the drama of suffering, of an unexpected tragedy that
happened all too suddenly. They had seen
death and it weighed on their hearts.
Pain was mixed with fear: would they suffer the same fate as the
Master? Then too there was fear about
the future and all that would need to be rebuilt. A painful memory, a hope cut short. For them, as for us, it was the darkest hour.
Yet in this
situation the women did not allow themselves to be paralyzed. They did not give in to the gloom of sorrow
and regret, they did not morosely close in on themselves, or flee from
reality. They spent their Sabbath doing
something simple yet extraordinary: preparing at home the spices to anoint the
body of Jesus. They did not stop loving;
in the darkness of their hearts, they lit a flame of mercy. Our Lady spent that Saturday, the day that
would be dedicated to her, in prayer and hope.
She responded to sorrow with trust in the Lord. Unbeknownst to these women, they were making
preparations, in the darkness of that Sabbath, for “the dawn of the first day
of the week”, the day that would change history. Jesus, like a seed buried in the ground, was
about to make new life blossom in the world; and these women, by prayer and
love, were helping to make that hope flower.
How many people, in these sad days, have done and are still doing what
those women did, sowing seeds of hope!
With small gestures of care, affection and prayer.
At dawn the
women went to the tomb. There the angel
says to them: “Do not be afraid. He is not here; for he has risen” (vv.
5-6). They hear the words of life even
as they stand before a tomb... And then they meet Jesus, the giver of all hope, who confirms the message and says: “Do
not be afraid” (v. 10). Do not be
afraid, do not yield to fear: This is
the message of hope. It is addressed to
us, today. These are the words that God
repeats to us this very night.
Tonight we
acquire a fundamental right that can never be taken away from us: the right to
hope. It is a new and living hope that
comes from God. It is not mere optimism;
it is not a pat on the back or an empty word of encouragement. It is a gift from heaven, which we could not
have earned on our own. Over these
weeks, we have kept repeating, “All will be well”, clinging to the beauty of
our humanity and allowing words of encouragement to rise up from our
hearts. But as the days go by and fears
grow, even the boldest hope can dissipate.
Jesus’ hope is different. He
plants in our hearts the conviction that God is able to make everything work
unto good, because even from the grave he brings life.
The grave
is the place where no one who enters ever leaves. But Jesus emerged for us; he rose for us, to
bring life where there was death, to begin a new story in the very place where
a stone had been placed. He, who rolled
away the stone that sealed the entrance of the tomb, can also remove the stones
in our hearts. So, let us not give in to
resignation; let us not place a stone before hope. We can and must hope, because God is
faithful. He did not abandon us; he
visited us and entered into our situations of pain, anguish and death. His light dispelled the darkness of the tomb:
today he wants that light to penetrate even to the darkest corners of our
lives. Dear sister, dear brother, even
if in your heart you have buried hope, do not give up: God is greater. Darkness and death do not have the last word. Be strong, for with God nothing is lost!
Courage. This is a word often spoken by Jesus in the
Gospels. Only once do others say it, to
encourage a person in need: “Courage; rise, [Jesus] is calling you!” (Mk
10:49). It is he, the Risen One, who
raises us up from our neediness. If, on
your journey, you feel weak and frail, or fall, do not be afraid, God holds out
a helping hand and says to you: “Courage!”.
You might say, as did Don Abbondio (in Manzoni’s novel), “Courage is not
something you can give yourself” (I Promessi Sposi, XXV). True, you cannot give it to yourself, but you
can receive it as a gift. All you have
to do is open your heart in prayer and roll away, however slightly, that stone
placed at the entrance to your heart so that Jesus’ light can enter. You only need to ask him: “Jesus, come to me
amid my fears and tell me too: Courage!”
With you, Lord, we will be tested but not shaken. And, whatever sadness may dwell in us, we
will be strengthened in hope, since with you the cross leads to the
resurrection, because you are with us in the darkness of our nights; you are
certainty amid our uncertainties, the word that speaks in our silence, and
nothing can ever rob us of the love you have for us.
This is the
Easter message, a message of hope. It
contains a second part, the sending forth.
“Go and tell my brethren to go to Galilee ”
(Mt 28:10), Jesus says. “He is going
before you to Galilee ” (v. 7), the angel
says. The Lord goes before us. It is encouraging to know that he walks ahead
of us in life and in death; he goes before us to Galilee ,
that is, to the place which for him and his disciples evoked the idea of daily
life, family and work. Jesus wants us to
bring hope there, to our everyday life.
For the disciples, Galilee was also the
place of remembrance, for it was the place where they were first called. Returning to Galilee
means remembering that we have been loved and called by God. We need to resume the journey, reminding
ourselves that we are born and reborn thanks to an invitation given
gratuitously to us out of love. This is
always the point from which we can set out anew, especially in times of crisis
and trial.
But there
is more. Galilee was the farthest region
from where they were: from Jerusalem . And not only geographically. Galilee was also the farthest place from the
sacredness of the Holy
City . It was an area where people of different
religions lived: it was the “Galilee of the
Gentiles” (Mt 4:15). Jesus sends them
there and asks them to start again from there.
What does this tell us? That the
message of hope should not be confined to our sacred places, but should be
brought to everyone. For everyone is in
need of reassurance, and if we, who have touched “the Word of life” (1 Jn 1:1)
do not give it, who will? How beautiful
it is to be Christians who offer consolation, who bear the burdens of others
and who offer encouragement: messengers of life in a time of death! In every Galilee ,
in every area of the human family to which we all belong and which is part of
us – for we are all brothers and sisters – may we bring the song of life! Let us silence the cries of death, no more
wars! May we stop the production and
trade of weapons, since we need bread, not guns. Let the abortion and killing of innocent
lives end. May the hearts of those who
have enough be open to filling the empty hands of those who do not have the
bare necessities.
Those
women, in the end, “took hold” of Jesus’ feet (Mt 28:9); feet that had
travelled so far to meet us, to the point of entering and emerging from the
tomb. The women embraced the feet that
had trampled death and opened the way of hope.
Today, as pilgrims in search of hope, we cling to you, Risen Jesus. We turn our backs on death and open our
hearts to you, for you are Life itself.
Easter Vigil in St Peter’s Basilica 2020
திருத்தந்தை வழங்கிய மறையுரை
ஏப்ரல்
11, புனித சனிக்கிழமை உரோம் நேரம் இரவு
9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், மக்களின் பங்கேற்பு இல்லாத பாஸ்கா திருவிழிப்பு
திருவழிபாட்டை முன்னின்று நடத்தினார். அவ்வேளையில், திருத்தந்தை வழங்கிய மறையுரையின் தமிழாக்கம் இதோ:
புனிதச்
சனிக்கிழமையின் பெரும் நிசப்தம்
"ஓய்வுநாளுக்குப்பின்"
(மத். 28:1), பெண்கள் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.
இந்த புனிதமான திருவிழிப்பு வழிபாட்டின் நற்செய்தி இவ்வாறு ஆரம்பமாகிறது: ஒய்வுநாளுடன்
ஆரம்பமாகிறது. பொதுவாக, உயிர்ப்புப்
பெருவிழாவுக்கு முந்தைய முப்பெரும் நாள் கொண்டாட்டங்களில், இந்த ஓய்வு நாளை ஒதுக்கிவிடுகிறோம். வெள்ளிக்கிழமை சிலுவை முடிந்ததும், உயிர்ப்பு ஞாயிறின் அல்லேலூயாவுக்காக நாம்
ஆவலோடு காத்திருக்கிறோம். இந்த ஆண்டிலோ, புனிதச் சனிக்கிழமையின் பெரும் நிசப்தத்தை நாம் அதிகம் உணர்கிறோம்.
அன்றைய பெண்களின் நிலையில் நம்மையே நாம் பொருத்திப்பார்க்க முடிகிறது. அப்பெண்களின்
கண்முன்னே, பெரும் துயரம், திடீரென நிகழ்ந்தது. அவர்கள் கண்ட மரணம், அவர்கள் உள்ளங்களில் பாரமாக அழுத்தியது.
அவர்களும், அவர்களின் போதகர் அடைந்த துயர முடிவை
அடைவார்களோ? என்ற வேதனையும், அச்சமும் அவர்களிடம் கலந்திருந்தன. சிதைந்துபோனதை
மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்று, எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் இருந்தது. வேதனை நிறைந்த நினைவு, வெட்டப்பட்ட நம்பிக்கை. அவர்களுக்கும், இன்று நமக்கும், இருள் சூழ்ந்த நேரம்.
பெண்களின்
இறைவேண்டல் உதவியது
இந்நிலையில், அப்பெண்கள், செயலற்ற நிலைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை.
துன்பத்திற்கும், பரிதாபத்திற்கும் இடம்கொடுத்து, அவர்கள் தங்களைத் தாங்களே மூடிவைத்துக் கொள்ளவும் இல்லை, எதார்த்தத்தை விட்டு தப்பியோடவும் இல்லை. அவர்கள் (அந்த ஒய்வு நாளில்,) மிக எளிதான, அதே நேரம், மிகச் சிறந்த ஒரு செயலைச் செய்தனர். இயேசுவின் உடல் மீது பூசுவதற்கு, நறுமணப் பொருள்களை அவர்கள் தயார் செய்தனர். அன்புகூர்வதை அவர்கள்
நிறுத்தவில்லை; அவர்கள் உள்ளத்தின் இருளில், பரிவின் விளக்கை ஏற்றி வைத்தனர்.
நமது
அன்னை மரியா, அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட புனித சனிக்கிழமையன்று, இறைவேண்டலிலும், நம்பிக்கையிலும் செலவிட்டார். துன்பத்திற்கு, இறைவன் மீது கொண்ட நம்பிக்கையை பதிலாகத் தந்தார். அந்த ஓய்வுநாள், வரலாற்றை மாற்றியமைக்கும் ஒரு நாளாக விளங்கும் என்பதை, அப்பெண்கள்
அறிந்திருக்கவில்லை. பூமியில் புதைக்கப்பட்ட ஒரு விதை முளைத்தெழுவதுபோல், இயேசு, புதிய வாழ்வை மலரச்செய்தார். அந்த மலர் மலர்வதற்கு, பெண்களின் இறைவேண்டல் உதவியது. இப்பெண்களைப்போல், எத்தனை பேர், இந்நாள்களில், தங்கள் கனிவாலும், இறைவேண்டுதலாலும் நம்பிக்கையை விதைத்து
வருகின்றனர்!
கல்லறைக்கு
முன், வாழ்வின் சொற்கள்
விடியற்காலையில், இப்பெண்கள் கல்லறையைப் பார்க்கச் சென்றனர்.
அங்கு, வானதூதர் அவர்களிடம், "நீங்கள் அஞ்சாதீர்கள்; அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்" (மத். 28:5-6)
என்று கூறினார். ஒரு கல்லறைக்கு முன் நின்றவண்ணம், அவர்கள், வாழ்வின் சொற்களைக் கேட்கின்றனர்.
அதன்பின், அவர்கள், அனைத்து நம்பிக்கையின் ஊற்றான இயேசுவைச்
சந்திக்கின்றனர். அவரும் அவர்களிடம், "அஞ்சாதீர்கள்!" (10) என்று கூறினார். அச்சத்திற்கு இடம் தராதீர்கள்.
இதுவே நம்பிக்கையின் செய்தி. இச்செய்தி இன்று நமக்குச் சொல்லப்படுகிறது. இந்த இரவில், கடவுள் இச்செய்தியை நமக்குச் சொல்கிறார்.
நம்பிக்கை
கொள்ளும் உரிமை
நம்மிடமிருந்து
யாராலும் பறித்துக்கொள்ள இயலாத ஓர் அடிப்படை உரிமையை இன்றிரவு நாம் பெறுகிறோம். நம்பிக்கை
கொள்ளும் உரிமை. இறைவனிடமிருந்து வரும் புதிய, வாழும் நம்பிக்கை இது. இது, நம்மை உற்சாகப்படுத்துவதற்காக, தோள்மீது தட்டிக்கொடுத்து சொல்லப்படும் வேற்று வார்த்தை அல்ல. வானிலிருந்து
இறங்கிவரும் கொடை இது. கடந்த சில வாரங்களாக, "அனைத்தும் நன்றாக அமையும்" என்ற சொற்களை நாம் அடிக்கடி சொல்லிவருகிறோம்.
எனினும், நாள்கள் செல்ல, செல்ல, மிக உறுதியாக இருப்பவர்களும் தடுமாற வாய்ப்புள்ளது. இயேசுவின் நம்பிக்கை
வேறுபட்டது. அனைத்தையும் இறைவன் நன்மையாக மாற்றக்கூடியவர், ஏனெனில், கல்லறையிலிருந்தும் வாழ்வைக் கொண்டுவர அவரால் மட்டுமே இயலும்.
அந்த நம்பிக்கையை, இயேசு, நம் உள்ளங்களில் விதைக்கிறார்.
மரணமும், இருளும் இறுதியானவை அல்ல
கல்லறைக்குள்
சென்ற எவரும் திரும்பி வந்ததில்லை, ஆனால், இயேசு, கல்லறையிலிருந்து வெளியேறினார், மரணம் இருந்த இடத்திற்கு வாழ்வைக் கொணர்ந்தார். தன் கல்லறையை மூடியிருந்த
கல்லை அகற்றிய இயேசு, நம் உள்ளங்களில்
உள்ள கற்களை அகற்ற முடியும். எனவே, நாம் நம்பிக்கையை, விரக்தி என்ற கல்லால் மூடிவைக்கவேண்டாம்.
அவரது ஒளி, கல்லறையின் இருளை அகற்றியது: இன்று, அவர், தன் ஒளியால், நம் வாழ்வின்
மிக அடர்த்தியான இருளை அகற்ற விழைகிறார். அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்று நீங்கள் நம்பிக்கையைப் புதைத்து விட்டிருந்தாலும், மனம் தளரவேண்டாம்: இறைவன் மிகப்பெரியவர்.
மரணமும், இருளும் இறுதியானவை அல்ல. இறைவன்
இருக்கையில், எதுவும் தொலைந்துபோவதில்லை!
துணிவை
பரிசாகப் பெற்றுக்கொள்ள...
துணிவு
கொள்ளுங்கள். நற்செய்திகளில் இயேசு இதை அடிக்கடி கூறியுள்ளார். நற்செய்தியில், ஒரே
ஒருமுறை மட்டுமே,
தேவையில் இருக்கும்
ஒருவரிடம் மற்றவர்கள் இதைக் கூறியுள்ளனர்: "துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" (மாற்கு
10:49) தேவையில் இருக்கும் நம்மை உயர்த்த, உயிர்த்த இறைவன் இருக்கிறார். நமது பயணத்தில் வலுவிழந்து வீழும்போது, 'துணிவு கொள்ளுங்கள்' என்று கூறி, இயேசு நம்மைத் தூக்கிவிடுகிறார். நெடுங்கதை
ஒன்றில் வரும் தோன் அப்போந்தியோ (Don Abbondio) என்ற கதாப்பாத்திரம்
சொல்வதுபோல்,
"துணிவு என்பது, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் விடயம்
அல்ல" என்று நாமும் சொல்லக்கூடும். உண்மைதான், இதை நாம் நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள இயலாது, ஆனால், ஒரு பரிசாக நாம் பெற்றுக்கொள்ள முடியும். நாம் செய்யவேண்டியதெல்லாம்
இதுதான் - இறைவேண்டலில், நம் உள்ளங்களை
மூடியிருக்கும் கல்லை, சிறிதளவு
திறந்துவைத்தால்,
அங்கு இயேசுவின் ஒளி
நுழையமுடியும். "இயேசுவே, என் அச்சங்களின்
நடுவே என்னிடம் வந்து 'துணிவு கொள்' என்று சொல்லும்!" என்று அவரிடம் சொல்வோம்.
உம்மோடு இருந்தால் ஆண்டவரே, நாங்கள்
சோதிக்கப்படலாம்,
ஆனால், அசைவுறமாட்டோம். உம்மோடு இருந்தால், சிலுவை, உயிர்ப்புக்கு இட்டுச்செல்லும்.
கலிலேயாவுக்குப்
போகிறார்
இதுவே, உயிர்ப்புப்பெருவிழாவின் செய்தி, நம்பிக்கையின்
செய்தி. இதன் இரண்டாம் பகுதி, அனுப்பப்படுதலை உள்ளடக்கியது.
"என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்"
(மத். 28:10) என்று இயேசு கூறுகிறார். "உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப்
போய்க்கொண்டிருக்கிறார்" என்று வானதூதர் கூறுகிறார். வாழ்விலும், சாவிலும், இயேசு நமக்கு முன் போகிறார். அவர்
ஒவ்வொரு நாளும் வாழ்ந்த கலிலேயாவுக்கு நமக்கு முன் போகிறார். நம் ஒவ்வொரு நாள் வாழ்வில்
நம்பிக்கையைக் கொணர்வதற்கு அவர் அங்கு செல்கிறார்.
மரணத்தின்
நேரத்தில் வாழ்வின் தூதர்களாக...
இங்கு
கூடுதலான ஒரு விடயம் உள்ளது. எருசலேமிலிருந்து,
கலிலேயா மிகத் தூரத்தில்
இருந்தது. புவியியல் அமைப்பினால் மட்டும் அல்ல,
புனித நகரை விட்டு
கலிலேயா தூரத்தில் இருந்தது. அங்குதான் அனைத்து மதத்தினரும் வாழ்ந்துவந்தனர். "பிற இனத்தவர்
வாழும் கலிலேயப் பகுதி"யாக (மத். 4:15)
இருந்தது. அந்தப்
பகுதிக்கு தன் சீடர்களை அனுப்பி, அங்கிருந்து மீண்டும் ஒருமுறை துவங்கும்படி
இயேசு கூறுகிறார். இது நமக்கு என்ன சொல்கிறது?
நமது நம்பிக்கையின்
செய்தி, புனித இடங்களில் மட்டும் அடைபட்டிராமல், அனைவருக்கும் கொண்டு செல்லப்படவேண்டும். இன்று அனைவருக்கும் நம்பிக்கை
தரும் செய்தி தேவை. நம் கரங்களால் தொட்டுணர்ந்த "வாழ்வு அளிக்கும் வாக்கை"
(1 யோவான் 1:1) நாம் வழங்கவில்லையெனில், வேறு யார் வழங்கமுடியும்?
ஆறுதல் வழங்கி, அடுத்தவர் சுமையைத் தாங்கி உற்சாகம் அளித்து, மரணத்தின் நேரத்தில் வாழ்வின் தூதர்களாக இருக்கும் கிறிஸ்தவர்களாக
வாழ்வது எத்துணை அழகு! ஒவ்வொரு கலிலேயாவிலும்,
மனித குடும்பம் பரவியிருக்கும்
ஒவ்வொரு பகுதியிலும், நாம், வாழ்வின் பாடலைக் கொணர்வோமாக! மரணத்தின் ஓலத்தை நாம் மௌனமாக்குவோமாக, இனி போர்கள் வேண்டாம்! போர்க்கருவிகளின் உற்பத்தியையும், வர்த்தகத்தையும் நிறுத்துவோமாக, நமக்குத்
தேவை அப்பம், துப்பாக்கிகள் அல்ல. மாசற்ற உயிர்களைக்
கொல்லும் கருக்கலைத்தல் முடிவுக்கு வரட்டும். போதுமான அளவு கொண்டவர்களின் உள்ளங்கள், அடிப்படை தேவைகளின்றி நீண்டிருக்கும் வெற்றுக்கரங்களை நிரப்புவதற்க்காக
திறக்கட்டும்.
இயேசுவின்
காலடிகளைப பற்றிக்கொண்டு...
அப்பெண்கள், இயேசுவின் "காலடிகளைப பற்றிக்கொண்டனர்" (மத். 28:9). மரணத்தை தன் காலடிகளில் மிதித்து, நம்பிக்கையின் வழியைத் திறந்துவைத்த அந்தக் காலடிகளை, அப்பெண்கள் பற்றிக்கொண்டனர். இன்று, நம்பிக்கையைத் தேடும் திருப்பயணிகளாக, உயிர்த்த இயேசுவே, உம்மை நாங்கள் பற்றிக்கொள்கிறோம்.
மரணத்தைப் புறந்தள்ளி, எங்கள் இதயங்களை உம்மை நோக்கித்
திருப்புகிறோம், ஏனெனில், நீரே வாழ்வாக
விளங்குகிறீர்.
No comments:
Post a Comment