Easter Prayer Vigil
Holy Saturday
The Sacred
Triduum commemorating the Passion, Death and Resurrection of Jesus Christ comes
to a completion with the Paschal Vigil. This year, instead of celebrating this
Paschal Vigil with our parish community, we are asked to celebrate it within
our family circles. This situation helps us to see how we have come a full
circle. Yes, we have come back to the starting point of celebrating the Paschal
Vigil in its ORIGINAL FORM.
In the
first reading on Maundy Thursday (Exodus 12: 1-14), we read the instructions
given by God to the Israelites as to how this night was to be celebrated. The
family gathering, the sacrifice of the lamb, eating the roasted lamb with
unleavened bread and bitter herbs, the blood of the lamb to be put it on the
two doorposts and the lintel of the houses etc., are some of the instructions
given in the Book of Exodus.
Continuing
this tradition to a large extent, the Jewish Feast of the ‘Passover Seder’
is conducted in late March or in April of the Gregorian calendar. The Seder is
a ritual performed by a community or by multiple generations of a family,
involving a retelling of the story of the liberation of the Israelites from
slavery in ancient Egypt .
The Seder itself is based on the Biblical verse commanding Jews to retell the
story of the Exodus from Egypt :
"You shall tell your child on that day, saying, 'It is because of what
the LORD did for me when I came out of Egypt .'" (Exodus 13:8)
Since
the retelling of the Exodus to one's child is the object of the Seder
experience, much effort is made to arouse the interest and curiosity of the
children and keep them awake during the meal. To that end, questions and
answers are a central device in the Seder ritual. By encouraging children to
ask questions, they will be more open to hearing the answers.
The most
famous question which the youngest child asks at the Seder is the "Ma
Nishtana" – 'Why is this night different from all other nights?' To this question, the eldest in the
family gives the answer, narrating the story of the ‘Passover Night’ – the
Exodus experience. (cf. Wikipedia – Passover Seder)
In the year
2020, April 11, Holy Saturday, most of us are celebrating the ‘Passover Night’
within the four walls of our homes, so that the ‘plague’ of COVID-19 will pass
over our houses, over our countries and over the world. To this effect, instead
of smearing our doorposts with the blood of the lamb, we can light a candle – signifying
the Paschal Candle, ‘Lumen Christi’, the ‘Light of Christ’ – in our houses, as
suggested by some Bishops. Perhaps in the coming years, we shall be recalling
and recounting to our future generations, this special Easter Vigil 2020,
celebrated at home with our families. Getting back to the original Paschal
Vigil has its own merits!
As we are
reflecting on the Original Paschal Vigil, let us also reflect on the Original,
namely, the very First Easter Night. Here is a write-up posted on the Bethlehem
Lutheran Church (BLC) Blog - https://www.bethlehem-raymore.org/2020/04/02/first-easter/
by an anonymous author.
The same
text is posted in the facebook under the name - Mid-Valley Baptist
Church
If we
can’t worship together this Easter, think about the first Easter.
“The
very first Easter was not in a crowded worship space with singing and praising.
On the very first Easter the disciples were locked in their house. It was
dangerous for them to come out. They were afraid. They wanted to believe the
good news they heard from the women, that Jesus had risen. But it seemed too
good to be true. They were living in a time of such despair and such fear. If
they left their homes their lives and the lives of their loved ones might be at
risk. Could a miracle really have happened? Could life really had won out over
death? Could this time of terror and fear really be coming to an end?
“Alone
in their homes they dared to believe that hope was possible, that the long
night was over, and morning had broken, that God’s love was the most powerful
of all, even though it didn’t seem quite real yet. Eventually, they were able
to leave their homes, when the fear and danger had subsided. They went around
celebrating and spreading the good news that Jesus was risen and love was the
most powerful force on the earth
“This
year, we might get to experience a taste of what that first Easter was like,
still in our homes daring to believe that hope is on the horizon. Then, after a
while, when it is safe for all people, when it is the most loving choice, we
will come out, gathering together, singing and shouting the good news that God
brings life even out of death, that love always has the final say!”
This
year we might get the closest taste we have had yet to what that first Easter
was like.”
—author
unknown
It is
interesting to note that, perhaps after 5000 years, we have come back to
celebrating the Paschal Vigil in its original form and after 2000 years, we are
celebrating the First Easter in its original form. We thank the ‘unknown
author’ who has helped us to look forward to the coming days with the hope of
the Risen Lord!
Easter Vigil
புனித
சனிக்கிழமை
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு
என்ற முப்பெரும் நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக, சிகரமாக நாம் கொண்டாடுவது, பாஸ்கா
திருவிழிப்பு வழிபாடு. இந்த வழிபாட்டினை, நம் பங்கு ஆலயங்களில், பங்கு
சமுதாயத்துடன் கொண்டாடுவதற்குப் பதில், நம் நெருங்கிய குடும்பத்துடன் கொண்டாட
நாம் இவ்வாண்டு பணிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலை, ஆரம்ப காலத்திற்கு
நம்மை அழைத்துச் செல்கிறது என்பதை உணரவேண்டும்.
ஆம், துவக்க காலத்தில் இஸ்ரயேல் மக்கள், பாஸ்காத்
திருவிழிப்பை எவ்விதம் கடைபிடித்தனரோ, அதையொத்த ஒரு சூழலுக்கும், நிலைக்கும்
நாம் உட்படுத்தப்பட்டுள்ளோம். புனித வியாழனன்று நாம் வாசித்த முதல் வாசகத்தில் (விடுதலைப்பயணம்
12:1-14),
இஸ்ரயேல் மக்கள், பாஸ்கா இரவன்று என்ன செய்யவேண்டும் என்ற
வழிமுறைகளை, இறைவன், மோசே வழியே வழங்கியதை நாம் கேட்டோம். குடும்பமாகக் கூடிவருதல், ஆட்டைப்
பலியிடுதல், வாட்டப்பட்ட ஆட்டிறைச்சியை, புளிப்பற்ற அப்பத்தோடும், கசப்புக்
கீரையோடும் உண்ணுதல், வெட்டப்பட்ட ஆட்டின் இரத்தத்தை, வீட்டின் கதவு நிலைகளில்
பூசுதல்... என்பவை, இறைவன் வழங்கிய வழிமுறைகள் என்று வாசித்தோம்.
இங்கு கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பெரும்பாலும் பின்பற்றி, யூதர்கள்,
இன்றும் ‘கடந்துவந்த இரவின் உணவை’ கொண்டாடி வருகின்றனர். இந்த கடந்துவந்த
இரவு விழாவில், குடும்பங்கள், பல தலைமுறைகளாக கூடிவந்து உணவு உண்ணுவது
வழக்கம். இந்த உணவு வேளையில், தங்கள் முன்னோர் எப்படி எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து
வெளியேறி வந்தனர் என்ற நிகழ்வு பகிர்ந்துகொள்ளப்பட்டது. "அந்நாளில் நீ உன்
மகனிடம், 'நான் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது ஆண்டவர் எனக்குச்
செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு' என்று
சொல்." (விடுதலைப்பயணம் 13:8) என்று, ஆண்டவர்
வழங்கிய கட்டளையை நிறைவேற்றும்வண்ணம், இந்த இரவுணவு நடைபெற்றது.
இந்த இரவுணவின் வேளையில், சிறுவர், சிறுமியர்
உறங்காமல் கலந்துகொள்ளும் வண்ணம், அவர்களை கேள்விகள் கேட்க வைத்தனர். அதிலும்
குறிப்பாக,
அவர்களில் மிகச் சிறிய குழந்தை, "Ma Nishtana" என்ற முக்கிய கேள்வியைக்
கேட்கும். இக்கேள்வியின் பொருள்: "ஏன் இந்த இரவு, மற்ற இரவுகளைவிட
வேறுபட்டதாய் இருக்கிறது?" இந்தக் கேள்விக்கு, குடும்பத்தில்
உள்ள மூத்தவர், பதில் கூறுகையில், தங்கள் முன்னோர்
விடுதலை பெற்ற இரவை விளக்கிக் கூறுவார்.
இன்று, 2020ம் ஆண்டு, ஏப்ரல் 11, புனித
சனிக்கிழமை, நாம் 'கடந்துவந்த இரவு' வழிபாட்டை, நான்கு
சுவர்களுக்குள்ளிருந்து, நம் நெருங்கிய குடும்பத்தோடு கொண்டாடுகிறோம்.
எகிப்து நாட்டைத் தாக்கிய கொள்ளை நோய், அவர்கள் இல்லங்களைக் கடந்து சென்றதைப்
போல், இன்று, நம் இல்லங்களை, நாம் வாழும்
ஊரை, நாட்டை, இவ்வுலகை, கோவிட்-19
தொற்றுக்கிருமி கடந்து செல்லவேண்டும் என்று செபிப்போம்.
இஸ்ரயேல் மக்கள் இல்லங்களின் கதவுகளில் பூசப்பட்ட இரத்தம்
அவர்களை, கொள்ளை நோயிலிருந்து காக்கும் ஒரு கேடயமாக இருந்தது. இன்று, நாம் இந்த
கடந்துவந்த இரவை, இயேசு, சாவைக் கடந்துவந்த இரவாகக் கொண்டாடும்போது, பாஸ்கா
திரியை நினைவுறுத்தும்வண்ணம், மெழுகு திரிகளை நம் இல்லங்களில் ஏற்றிவைப்போம்.
ஒரு சில ஆயர்கள் இந்த சடங்கை நமக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
இனிவரும் ஆண்டுகளில், நாமும், நம் தலைமுறையினருக்கு, 2020ம்
ஆண்டின்,
ஏப்ரல் 11ம் தேதி இரவைக்குறித்து கதைகள் சொல்வோம். அவ்வேளையில், இறைவன்
நம்மை எவ்விதம் இந்த கொள்ளைநோயின் கொடுமையிலிருந்து காத்தார் என்பதை, நன்றியோடு
எடுத்துச் சொல்வோம்.
பாஸ்கா திருவிழிப்பு, அல்லது, கடந்துவந்த
இரவு, முதல்முறை
கொண்டாடப்பட்டதை அசைபோடும் இவ்வேளையில், முதல் உயிர்ப்பு இரவையும் நம் எண்ணங்களில்
ஏந்திவருவோம். நம் சிந்தனைகளுக்கு உதவியாக, பெத்லகேம் லூத்தரன்
சபை - Bethlehem
Lutheran Church (BLC) - என்ற வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு குறுங்கட்டுரை
இதோ:
இந்த ஈஸ்டர் நாளை நாம் இணைந்து வழிபட இயலவில்லையெனில், முதல்
ஈஸ்டரை எண்ணிப்பார்ப்போம்.
முதல் ஈஸ்டர், கூட்டமாக, பாடல்களுடன், வாழ்த்துக்களுடன்
கொண்டாடப்படவில்லை. முதல் ஈஸ்டரன்று சீடர்கள் தங்கள் இல்லங்களில் அடைபட்டு கிடந்தனர்.
வெளியில் வருவது ஆபத்து என்பதால், அவர்கள் அச்சத்துடன் அடைபட்டு கிடந்தனர்.
இயேசு உயிர்த்துவிட்டார் என்று, ஒரு சில பெண்கள் அவர்களுக்குச் சொன்ன நற்செய்தியை
அவர்கள் நம்புவதற்கு விழைந்தனர். ஆனால், அது, நம்பமுடியாத அளவு,
நல்ல செய்தியாக இருந்தது. அவர்கள் வாழ்ந்த காலம், அத்தனை அச்சத்திலும், விரக்தியிலும்
நிறைந்திருந்தது. அவர்கள் தங்கள் இல்லங்களைவிட்டு வெளியே சென்றால், அவர்கள்
நலனுக்கும், அவர்கள் குடும்பத்தினர் நலனுக்கும் கெடுதலாக இருக்கும். இத்தகைய
ஒரு புதுமை உண்மையிலேயே நிகழ்ந்திருக்குமா? சாவை, வாழ்வு
உண்மையிலேயே வெல்லமுடியுமா? இந்த அச்சம் நிறைந்த நேரம் உண்மையிலேயே
முடிவுக்கு வருகிறதா?
அவர்கள் இல்லங்களில் அடைபட்டிருந்த வேளையில், நம்பிக்கை
சாத்தியம் என்பதை நம்பத் துணிந்தனர். முடிவே இல்லாததுபோல் நீண்டிருந்த இரவு முடிந்து, உதயம்
வருகிறது;
முடியாததுபோல் தோன்றியவற்றை முடித்துக்காட்ட, இறைவனின் அன்பே
அனைத்திலும் சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் நம்பத் துணிந்தனர். அச்சமும், ஆபத்தும்
தணிந்தபோது, அவர்களால் தங்கள் இல்லங்களைவிட்டு வெளியேற முடிந்தது. இயேசு
உயிர்த்துவிட்டார், அன்பு மட்டுமே இவ்வுலகில் மிக சக்திவாய்ந்தது என்பதை அவர்கள்
பறைசாற்ற ஆரம்பித்தனர்.
இந்த ஆண்டு, அந்த முதல் ஈஸ்டரைப்போன்ற அனுபவத்தை நாம்
பெறுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. நம்பிக்கையின் விடியல் வரும் என்பதை நம் இல்லங்களில்
இருந்தவண்ணம் நம்ப இது ஒரு சிறந்த வாய்ப்பு. நாம் வெளியே வரலாம் என்ற நிலை உருவாகும்போது, கூடிவந்து
கொண்டாடுவோம். சாவிலும் இறைவன் வாழவைக் கொணர்கிறார், அன்புதான் முடிவில்
நிலைக்கும் என்ற நற்செய்தியை நாம் பறைசாற்றுவோம்.
- எழுதியவர், அடையாளம்
இல்லை.
ஏறத்தாழ 5000 ஆண்டுகள் கழிந்து, முதல்
பாஸ்கா இரவையும், 2000 ஆண்டுகள் கழிந்து, முதல் ஈஸ்ட்டரையும், அவற்றின்
முதல் வடிவங்களில் 2020ம் ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், முதல் ஈஸ்டர் பற்றிய தன் குறுங்கட்டுரையால் நமக்குள் நம்பிக்கையை
விதைத்தவருக்கு நன்றி கூறுவோம்.
No comments:
Post a Comment