02 March, 2023

Change born of Love அன்பினால் உருவாகும் மாற்றம்

Transfiguration through prayer

2nd Sunday of Lent

Last Sunday, the First Sunday of Lent, we were given the opportunity to witness and reflect on a very private experience of Jesus, probably one of the most vulnerable yet victorious moments of his life… the temptations. Today, the Second Sunday of Lent, gives us the opportunity to see Jesus in one of his most glorious moments… the Transfiguration.

Temptations and Transfiguration are appropriate themes for our reflection during the Lenten Season. Let us begin our reflection on the natural setting – namely, the desert or the wilderness and the mountain – in which the temptations and transfiguration of Jesus took place. Sages and Saints down the centuries have left the world and chose to live in the desert and the mountain searching for God. Many of them did find God.

We are invited to find God or to come back to God through the Lenten practices of fasting, praying and almsgiving. The desert and the mountain are apt places to practice fasting and prayer. The desert is a place where human beings are challenged to live with bare minimum. Jesus lived in the desert for forty days facing such hardships. We try to imitate his desert experience through our Lenten fasting.

Major religions around the world consider the mountain as the abode of God. The Israelites believed that mountains were special places to meet God. Jesus, as a true Israelite, chose the mountain to meet God. His meeting with God, resulting in the Transfiguration, is recorded in all the synoptic gospels (cf. Matthew 17:1-9; Mark 9:2-8; Luke 9:28-36). It is interesting to note that the Gospel account of Luke specifically mentions that during prayer the Transfiguration occurred: Now about eight days after these sayings Jesus took with him Peter and John and James, and went up on the mountain to pray. And as he was praying, the appearance of his countenance was altered, and his raiment became dazzling white. (Luke 9:28-29) It is also interesting to note that two figures from the Old Testament – namely, Moses and Elijah who have met God on the mountains – are presented as part of the Transfiguration scene. We try to imitate this mountain experience through our Lenten prayers.

Last week, when we witnessed that even Jesus was not spared from temptations, we would have been convinced that all human beings will have to face temptations. This week we reflect on another common human phenomenon – CHANGE! Change is the common thread that ties the first reading (Genesis 12:1-4) as well as the gospel (Matthew 17:1-9) – change of place for Abram (later to become Abraham), and change (although momentary) of the human form of Jesus through Transfiguration.

Change is a key theme during the Lenten season - change of heart, and change of our lifestyle. Most of us would tend to believe that when our surrounding changes, we also change. On deeper analysis, we can see that radical, lasting changes begin from within. Here is a story from the master storyteller Fr Anthony de Mello in his famous book ‘The Song of the Bird’:
CHANGE THE WORLD BY CHANGING ME
The Sufi Bayazid says this about himself: “I was a revolutionary when I was young and my prayer to God was: ‘Lord, give me the energy to change the world.’ As I approached middle age and realized that half my life was gone without my changing a single soul, I changed my prayer to: ‘Lord, give me the grace to change all those who come in contact with me. Just my family and friends, and I shall be content.’ Now that I am an old man and my days are numbered, my one prayer is, ‘Lord, give me the grace to change myself.’ If I had prayed for this right from the start, I should not have wasted my life.”

The first reading from the Book of Genesis talks of the baby steps Abram took in order to be changed to Abraham. God invites Abram to leave his familiar surroundings into the unknown, trusting in God alone. Not a great deal, one would say. If this were to happen when a person was in the prime of life, it surely is not a great deal. But, when Abram was called for this ‘adventure’, he was 75 years old! Leaving the known and walking into the unknown at the age of 75, is not an easy transition. Here is the invitation from God as given in the first reading:
The LORD had said to Abram, “Go from your country, your people and your father’s household to the land I will show you. I will make you into a great nation, and I will bless you; I will make your name great, and you will be a blessing. I will bless those who bless you, and whoever curses you I will curse; and all peoples on earth will be blessed through you.” So, Abram went, as the LORD had told him; and Lot went with him. Abram was seventy-five years old when he set out from Harran. (Genesis 12: 1-4)

When we read this passage, our minds naturally turn to many senior persons who, in a way, are ‘forced’ to take the leap into the unknown. I am thinking of parents who have to shift their familiar surroundings in order to be with their children who have settled down in another country or, who have moved from their native towns and villages to settle down in big cities. Spare a moment to pray for these elderly parents. God promised to Abram: “I will bless you; I will make your name great, and you will be a blessing… and all peoples on earth will be blessed through you.” We pray that all the senior persons, who have to face the tough decision of uprooting themselves from familiar surroundings and planting themselves in unfamiliar circumstances, be filled with God’s blessings as well as become a blessing to others!

Reflecting on today’s Gospel on the Transfiguration of Jesus (Matthew 17: 1-9), Fr. John Eckert, a Pastor in USA, makes some interesting observations which are worth our special attention:
Like Peter, James, and John, if we’re going to encounter the splendor of our Lord, we have to let ourselves be led out of our daily routine, and up a high mountain. Notice one slight difference though, between the mountain we heard about in last week’s Gospel and the mountain we hear about this Sunday. During the temptation, the devil took Jesus up a very high mountain. Our Lord, however, leads the three up a high mountain. The wording is the same, except for that word very. I point this out because the devil likes to deal in extremes. Our Lord, on the other hand, does not do the extreme, but “builds on nature.” For Lent, you don’t have to rush to somewhere very far away; you do not have to take on penances which are very far beyond your normal routine. Rather, set some dedicated time aside, and ask our Lord to lead you deeper into your prayer life.

Jesus must have felt the embrace of God’s loving presence on ‘the high mountain’ and this feeling must have resulted in his Transfiguration. As a climax of this experience, the endearing affirmation of the Father which sounded in the river Jordan (cf. Mt. 3:17) is repeated once again: “This is my Son, whom I love; with him I am well pleased. Listen to him!” (Mt. 17:5). The mountain top, the prayerful ambience and the loving affirmation of the Father – all contributed to the glorious change – the Transfiguration – in Jesus.

Change that begins from within can transform people and transform the world around them. This change is more than helped by true love. Here is another story from ‘The Song of the Bird’ that ties up change and love of God quite neatly:
I was a neurotic for years. Anxious, depressed, selfish. And everyone kept telling me to change. And I resented them, and agreed with them, and wanted to change, but simply couldn’t, no matter how I tried. What hurt the most was that, like the others, my closest friend kept urging me to change. So I felt powerless and trapped.
One day he said “Don’t change. I love you as you are.” Those words were music to my ears: “Don’t change. Don’t change. Don’t change... I love you as you are.” I relaxed. I came alive. And, suddenly, I changed! Now I know that I couldn’t really change till I found someone to love me whether I changed or not.
Is this how you love me, God?

In today’s Gospel, we meet, once again, the impetuous Peter who wanted to prolong the glorious experience of the Transfiguration, by erecting tents. Peter had seen an ‘ordinary’, day to day edition of Jesus up to that point. Now, he was surprised by the ‘glorious’ Jesus whose ‘garments became white as light’. (Mt 17:2) Peter wished to remain there for the rest of his life.
Hence, he said to Jesus, “Lord, it is well that we are here; if you wish, I will make three booths here, one for you and one for Moses and one for Eli′jah.” (Mt 17:4) Very often we do have a similar temptation of putting God in cosy booths we have created.

God intervened and said, “This is my Son, whom I love; with him I am well pleased. Listen to him!” (Mt. 17:5). This was an indirect reminder to Peter as well as to us, not to be lost in the moment, but to keep silent and listen to the Son. What would the Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the people to ‘transfigure’ them.”

Getting down from the cosy comfort of the Transfiguration, to the ‘disfigured’ world requires lot of faith. Let us conclude our reflection for this Sunday praying for the ‘disfigured’ world, especially for the following intentions:
  • That the people of Turkey and Syria, with the help and support of the rest of the world, may have the hope and courage to rise from the devastation of the earthquake and rebuild their lives.
  • That senior citizens who are forced to change from familiar surroundings to strange places may be blessed by God abundantly and they, in turn, become a blessing for others.
  • That we, during this Lenten Season, learn the deeper lessons of ‘change’ which is an inevitable part of our human experience. 
Transfiguration of Jesus

தவக்காலம் 2ம் ஞாயிறு

சென்ற வாரம், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு பாலைநிலத்தில் சந்தித்த சோதனைகளை சிந்தித்தோம். தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று இயேசு தோற்றமாற்றம் பெற்ற நிகழ்வைச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். சோதனைகளைச் சந்திப்பதும், தோற்றமாற்றம் பெறுவதும் தவக்காலத்திற்கு ஏற்ற கருத்துக்கள்.

உருக்குலைந்த இயேசுவை, சென்ற ஞாயிறு சந்தித்த நாம், உருமாறிய, அல்லது, தோற்றமாற்றம் பெற்ற இயேசுவை, இந்த ஞாயிறு சந்திக்கிறோம். பாலை நிலத்தில், நாற்பது நாள் கடுந்தவம் மேற்கொண்ட இயேசு, உருகுலைந்திருந்த நேரத்தில், அவர், எவ்விதம் தன்னையே எளிதாக, விரைவாக, உருமாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுக்கு வழிகளை, சாத்தான் சொல்லித்தந்தது. அந்த குறுக்கு வழிகளை ஏற்றுக்கொள்ளாத இயேசு, பாடுகள், மரணம் என்ற வேதனை நிறைந்த வழியில் தான் மாற்றம் பெறப்போவதாக தன் சீடர்களுக்கு சொல்கிறார். இயேசுவின் இந்தக் கூற்று, மத்தேயு நற்செய்தி 16ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூற்றினால், அதிர்ச்சியடைந்து, மனம்தளர்ந்து போயிருந்த சீடர்களில் மூவருக்கு, உறுதி வழங்கும் வகையில் நிகழும் இயேசுவின் தோற்றமாற்றம், மத்தேயு நற்செய்தி, 17ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது – மத்தேயு 17:1-9.

இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வு நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள வேளையில், தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகமும் (தொடக்கநூல் 12:1-4) மாற்றத்தைப் பற்றி கூறுகிறது. தனக்குப் பழக்கமான ஓர் இடத்தைவிட்டு, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லவேண்டிய மாற்றத்தை ஏற்க, ஆபிரகாம் அழைக்கப்பட்டார். ஆபிரகாமுக்கு வந்த மாற்றம் வெளிப்புறத்தைச் சார்ந்தது. அவர் வாழ்ந்து, பழகிய இடத்தை விட்டுவிட்டு புதிதான ஒரு சூழலுக்குச் செல்லும் மாற்றம் அது. இயேசுவுக்கு நிகழ்ந்த தோற்றமாற்றம் அவருக்குள்ளிருந்து உருவான மாற்றம்.

மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? நமக்குள்ளிருந்தா அல்லது வெளி உலகிலிருந்தா? பல நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும், நமது சூழலும் மாறினால், நாமும் மாறுவோம் என்று எண்ணுகிறோம், நம்புகிறோம். தீர ஆராய்ந்தால், நமக்குள்ளிருந்து வரும் மாற்றங்களே, பிற மாற்றங்களின் அடித்தளமாய் அமையும்.... நமக்குள்ளிருந்து எழும் மாற்றங்களே, நீண்ட காலம் நீடிக்கும் என்பதை உணரலாம்.

மாற்றங்களைப் பற்றி, அதுவும் நமக்குள்ளிருந்து ஆரம்பமாகும் மாற்றங்களைப் பற்றி பேசும்போது, அருள்தந்தை Anthony de Mello அவர்களின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. வயது முதிர்ந்த ஒருவர் தன் வாழ்வைத் திரும்பிப் பார்த்தார். அவர் மனதில் உதித்த எண்ணங்கள் இவ்வாறு அமைந்தன: நான் புரட்சிகளை அதிகம் விரும்பிய இளைஞனாய் இருந்தபோது, "கடவுளே, உலகை மாற்றும் வரம் தா!" என்று இறைவனிடம் வேண்டினேன். நடுத்தர வயதை அடைந்தபோது என் செபம் சிறிது மாறியது: "கடவுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா!" என்பது என் செபமானது. இப்போது வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்பதை உணர்கிறேன். இப்போது நான் வேண்டுவது இதுதான்: "கடவுளே, என்னையே நான் மாற்றிக் கொள்ளும் வரம்தா!" என்பதே என் இப்போதையச் செபம். இந்த செபத்தை நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறியிருக்கும். ஒரு வேளை என்னைச் சுற்றியிருந்தவர்களும், இந்த உலகமும் மாறியிருக்கும்.

பொதுவாக, மாற்றங்கள் உருவாக்கும் சவால்களைச் சந்திக்க, இளவயது பொருத்தமானது; வயது முதிர்ந்த காலத்தில், மாற்றங்கள் வரும்போது, அவற்றை ஏற்பதற்கு, பெரும் தயக்கம் நமக்குள் உருவாகும். ஆபிரகாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பழக்கப்பட்ட ஓரிடத்திலிருந்து புதிய ஓர் இடத்திற்குச் செல்லும்படி இறைவன் அவரை அழைக்கிறார் (தொடக்க நூல் 12:1). இந்த மாற்றத்திற்கு இறைவன் அவரை அழைத்தபோது, ஆபிரகாமின் வயது 75. அந்த வயதில் ஒருவரால் பழக்கப்பட்ட இடங்களைவிட்டு, புதிய நாட்டிற்குப் போகமுடியுமா? சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். இது, இன்றைய உலகில், வயது முதிர்ந்த பெற்றோர் சந்திக்கும் ஓர் எதார்த்தம்.

என் நண்பர் ஒருவரது பெற்றோர் மதுரையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்தவர்கள். அத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சென்னையில் வாழும் தங்கள் மகனோடு சென்று தங்க வேண்டிய சூழல் உருவானது. அவர்கள் சென்னைக்கு வந்தபின் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். மதுரையில் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டைக் காட்டிலும், சென்னையில் அவர்கள் வாழ்ந்த வீட்டில் வசதிகள் அதிகம் இருந்தன. இருந்தாலும், அவர்கள் எதையோ இழந்தவர்கள்போல் சோகமாய் இருந்தனர். மதுரையும், சென்னையும் தமிழ் நாட்டின் பகுதிகள் தான். இருந்தாலும், அவர்களுக்கு, அந்த வயதில் வந்த அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழ் நாட்டை விட்டு, இந்தியாவின் பிற மாநிலங்களில் சென்று தங்க வேண்டியுள்ள வயதான பெற்றோரை எண்ணிப் பார்ப்போம். வயதான காலத்தில், இந்திய மண்ணை விட்டு, பிற நாடுகளுக்குச் சென்று வாழவேண்டிய பெற்றோரை எண்ணிப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் நமது வேண்டுதல்களுக்கு உரியவர்கள். வயதான காலத்தில், பழக்கப்பட்டச் சூழல்களில் இருந்து, புதிய சூழல்களுக்குத் தள்ளப்பட்டுள்ள, அல்லது, புதியச் சூழல்களில் திணிக்கப்பட்டுள்ள இவர்களை நினைக்கும்போது, நீரை விட்டு வெளியேற்றப்பட்ட மீன், வேரோடு பிடுங்கப்பட்ட செடி அல்லது மரம் ஆகியவை, நமது எண்ணங்களில் பதியும் உருவகங்கள். ஆபிரகாமுக்கு இறைவன் இந்த அழைப்பைத் தந்தபோது, கூடவே தன் முழுமையான அசீரையும் தருவதாகக் கூறுகிறார். அது மட்டுமல்ல, ஆபிரகாமே ஓர் ஆசியாக மாறுவார் என்றும் இறைவன் வாக்களிக்கிறார். இறைவன் ஆபிரகாமிடம் சொல்வதைக் கேட்போம்:
தொடக்கநூல் 12 : 1-4
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்: உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்: உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். (அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.)
வயது முதிர்ந்த காலத்தில், பழக்கப்பட்டச் சூழல்களை விட்டு, புதியச் சூழல்களுக்குச் செல்லும் பெற்றோர், ஆபிரகாமைப் போல், இறையாசீரைச் சுமந்து செல்லவும், அதன் வழியாக இறையாசீராகவே இவர்கள் மாறவும் வேண்டுமென செபிப்போம்.

இன்றைய நற்செய்தி கூறும் இயேசுவின் தோற்றமாற்றத்தை பல கோணங்களில் சிந்திக்கலாம். இந்த தோற்றமாற்றம் ஒரு மலைமீது நிகழ்ந்தது என்பதை அறிவோம். மலைகள் இறைவன் வாழும் இடங்கள் என்பதை பல மதங்களும் கூறுகின்றன. இந்த உண்மையை, இஸ்ரயேல் மக்கள் உணர்ந்திருந்தது போல், இயேசுவும் உணர்ந்திருந்தார். அன்று, தன் சீடர்களுடன் மலைக்குச் சென்றதும், இறைவனின் பிரசன்னமும், அன்பும், தன்னைச் சூழ்ந்ததை, இயேசு உணர்ந்திருப்பார். அந்த உணர்வே, அவரிடம் தோற்றமாற்றத்தை உருவாக்கியிருக்க வேண்டும். இயேசுவைப் போலவே, மலைமீது இறைவனைச் சந்தித்து, தங்கள் வாழ்வில் மாற்றங்களை உணர்ந்த மோசே மற்றும் எலியா என்ற இரு பெரும் இறைவாக்கினர்கள், இயேசுவின் தோற்றமாற்ற அனுபவத்தை பகிர்நதுகொண்டது கூடுதல் சிறப்பு.

இந்த தோற்றமாற்ற நிகழ்வின் உச்சக்கட்டத்தில், இயேசு, தந்தையின் அன்புக்குரிய மகன் என்று புகழப்படுகிறார். யோர்தான் நதியில், இயேசு திருமுழுக்கு பெற்றபோது, தந்தையாம் இறைவன், அவரை ஆரத்தழுவி, உச்சிமுகந்து சொன்ன அற்புதச் சொற்கள், (காண்க. மத்தேயு 3:17) இப்போது மீண்டும் ஒலிக்கின்றன: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” (மத்தேயு 3:17). உண்மையான அன்பு, நல்ல மாற்றங்களை உருவாக்கும் வலிமை பெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். Anthony de Mello அவர்களின் மற்றொரு கதை இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.
பல வழிகளிலும் பக்குவமின்றி நடந்து வந்த ஓர் இளைஞனிடம் அனைவரும்: "தம்பி, நீ மாற வேண்டும்! மாற வேண்டும்!" என்ற ஒரே கோரஸாகச் சொல்லி வந்தனர். மாற வேண்டுமே என்ற கவலையில் அவன் இன்னும் மோசமாக மாறினான். அவன் மீது ஆழ்ந்த நட்பு கொண்ட அவனது நண்பன் ஒரு நாள் அவனிடம் "நீ உண்மையிலேயே மிக நல்லவன். நீ மாற வேண்டிய தேவையே இல்லை." என்று சொன்னான். அன்று முதல் அவன் மாற ஆரம்பித்தான்.

இயேசுவுக்கும், சீடர்களுக்கும் ஏற்பட்ட இந்த அற்புதமான, உன்னதமான உச்சக்கட்ட பூரிப்பிலேயே அனைவரும் தங்கிவிடலாம் என்று பேதுரு ஆலோசனை சொல்கிறார். கடவுளின் அன்பு, நம்மில் உருவாக்கும் மாற்றங்கள், நம்முடைய தனிச் சொத்து என்று அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட முடியாது. மீண்டும் மலையை விட்டு இறங்கவேண்டும், அதுமட்டுமல்ல... மற்றொரு மலைமேல் தான் இறக்கவேண்டும் என்பதையும், இயேசு, தன் சீடர்களுக்கு உணர்த்திவந்தார். இறையன்பைச் சுவைக்கும் அனுபவம், பணி வாழ்வுக்கும், தியாகத்திற்கும் நம்மை இட்டுச் செல்லவேண்டும். இல்லையெனில், அவ்வன்புக்கு அர்த்தம் இருக்காது என்பதை இயேசு தெளிவாக்குகிறார்.

தவக்காலத்தின் இந்த இரண்டாம் ஞாயிறன்று, ஆபிரகாமின் வாழ்வில் மாற்றங்களை நிகழ்த்த இறைவன் கொடுத்த அழைப்பையும், இயேசுவின் தோற்றமாற்றத்தையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம் மனதில் எழும் ஒரு சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
  • நிலநடுக்கத்தினால் பேரழிவையும் உயிர்பலிகளையும் சந்தித்துள்ள துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வாழும் மக்கள், இப்பேரிடரின் பாதிப்புக்களிலிருந்து உயிர் பெற்று எழும் நம்பிக்கையை பெறவேண்டுமென அவர்களுக்காகச் சிறப்பாகச் செபிப்போம்.
  • 75வது வயதில் தன் நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஆபிரகாம், இறையாசீரைச் சுமந்து சென்றதுபோல், இறை அசீராகவே மாறியதுபோல், தங்கள் சூழ்நிலைகளை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் வயதான பெற்றோர், ஆபிரகாமைப் போல், செல்லும் இடமெல்லாம் இறையாசீரைச் சுமந்து செல்பவர்களாக மாற, அவர்களுக்காகச் செபிப்போம்.
  • ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாக வேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால் அனைத்தும் மாறும், இறையன்பு வெறும் உணர்வாக இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாற வேண்டும் என்று, இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வு நமக்குச் சொல்லித்தரும் அழகியப் பாடங்களை, இத்தவக் காலத்தில் நாம் கற்றுக்கொள்ள, ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம்.

No comments:

Post a Comment