30 March, 2023

Bridging the Sanctuary and the Street பீடத்தையும் வீதியையும் இணைக்க...

 
Holy Week begins…

Palm Sunday

Every year on Palm Sunday priests may be facing an important question – to preach or not to preach a homily... after having read a lengthy Gospel – the Passion of Christ. The faithful who attend the liturgy may also be raising the same question – should the Priest preach after having read the Passion of Christ, or, simply go on with the liturgy. The same question resurfaces on Good Friday as well.
We agree that the significance of Palm Sunday, with its ceremony of the blessing and procession of the palms, followed by the Holy Mass with the reading of the Passion, is self-explanatory. Similarly, the special liturgy of Good Friday is quite meaningful even without the sermon. Still, knowing that the liturgy of the final week of Lent leading up to the Easter is a treasure trove, it would be helpful to reflect on a few special aspects of this treasure trove in order to participate in these special spiritual experiences more meaningfully.

Let us keep our reflections short, focussing our attention on two ideas: the Entry of Jesus into Jerusalem and the Holy Week.  
Our reflection on the Entry of Jesus into Jerusalem begins with a weather report written in 1920. It was titled: Palm Sunday Tornado 1920. This news was about 38 significant tornadoes across the Midwest and Deep South states in the U.S., on Palm Sunday, March 28, 1920. The tornadoes left over 380+ dead, and at least 1,215 injured.
Once again, in 1965 another news item was published with the title: Palm Sunday Tornado Outbreak. This news reported on some deadly tornadoes that occurred on Palm Sunday, April 11, 1965, killing 271 people and injuring over 1,500. This was the fourth deadliest tornado outbreak in U.S. history.

I am told, that tornadoes are a common feature in the U.S., especially in the months of March and April. We are painfully aware of the tornado that created havoc in Mississippi on March 24 this year. We know that tornadoes have the power to turn things upside down.
The Entry of Jesus into Jerusalem on the first Palm Sunday, can be compared to a tornado entering Jerusalem. Jesus’ entry into Jerusalem must have turned the lives of the religious leaders and the Roman officials topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the religious leaders – namely, the Jerusalem Temple – and began to put things in order. Putting things in order? Well, depends on which point of view one takes. For those in power, things were thrown completely out of gear; but, for Jesus and for those who believed in His ways, this was a way to set things straight. This is typical of a tornado… uprooting, turning things topsy-turvy. A tornado is, possibly, a call to begin anew!

May this Palm Sunday be an invitation, an opportunity for us to allow Jesus to enter our lives. Perhaps His entry into our lives may upset our plans and challenge us to put things in order!

We turn our attention to the second idea – the Holy Week which begins with the Palm Sunday. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial of another friend, the mock trial, the condemnation of the innocent and the brutal violence unleashed on Jesus…? None of these comes close to the definition of holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, Jesus wanted to redefine God – a God who was willing to suffer.

Jesus had also redefined holiness and made it very clear that in spite of all the unholy and unjust events that took place during this week, one could call this week Holy, since these events resulted in the Supreme Sacrifice. Death by crucifixion was the most painful torture the Romans had invented. The cross was the most despised form of punishment reserved for the worst criminals. Jesus on the Cross had made this most demeaning symbol of punishment and death into a symbol of veneration and a channel of salvation for the Christian world. This is the reason we are invited to celebrate this week as the Holy Week!

The liturgical celebrations of the Holy Week have an inherent danger. They can make us mere spectators of the final days of the life of Jesus. We are aware that the Passion of Christ was the result of many social evils to which Jesus was subjected to. Those social evils are still prevalent among us today. There is a danger that we ‘watch’ with wide open eyes the liturgy of the Holy Week as mere rituals and close our eyes to the social evils that still perpetuate the Passion of Christ in our days.

Going through the liturgical events of Palm Sunday and the Holy Week as mere rituals without any reference to the society around us is a real danger to our Christian life. This danger has been expressed by Geoffrey Studdert Kennedy, an Anglican pastor and poet who served as a chaplain during World War I, in his poem titled – ‘Indifference’.
When Jesus came to Golgotha, they hanged Him on a tree,
They drove great nails through hands and feet, and made a Calvary;
They crowned Him with a crown of thorns, red were His wounds and deep,
For those were crude and cruel days, and human flesh was cheap.

When Jesus came to Birmingham, they simply passed Him by.
They would not hurt a hair of Him, they only let Him die;
For men had grown more tender, and they would not give Him pain,
They only just passed down the street, and left Him in the rain.

Still Jesus cried, ‘Forgive them, for they know not what they do,’
And still it rained the winter rain that drenched Him through and through;
The crowds went home and left the streets without a soul to see,
And Jesus crouched against a wall, and cried for Calvary.

After having witnessed the horrors of World War I, Pastor Kennedy was convinced that our life spent in the cosy comforts of the church needs to be cleansed and we need to combine our social life and the devotional practices. He said: “The social life must be brought right into the heart of our devotion, and our devotion right into the heart of our social life. There is only one spiritual life, and that is the sacramental life – sacramental in its fullest, its widest, and its deepest sense, which means the consecration of the whole man and all his human relationships to God.
“There must be free and open passage between the sanctuary and the street. We must destroy within ourselves our present feeling that we descend to a lower level when we leave the song of the angels and the archangels and begin to study economic conditions, questions of wages, hours and housing. It is hard, very hard, but it must be done. It must be done not only for the sake of the street, but for the sake of the sanctuary, too...”

May this Palm Sunday and the Holy Week that follows, help us to create a free and open passage between the sanctuary and the street, so that we can travel from one to another more easily. May we participate in the liturgical celebrations of the Holy Week more meaningfully, so that we are inspired to take part in meaningful activities among the people who undergo the Passion of Christ in their day-to-day life.
Jesus – Entry into Jerusalem

குருத்தோலை ஞாயிறு

திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கிய நாள்களை இன்று நாம் துவக்குகிறோம். குருத்தோலை ஞாயிறு அல்லது, பாடுகளின் ஞாயிறு என்றழைக்கப்படும் இஞ்ஞாயிறைத் தொடர்ந்துவரும் வாரத்தை, புனித வாரம் என்று சிறப்பிக்கிறோம். குருத்தோலை ஞாயிறு, மற்றும், புனிதவாரம் என்ற இரு கருத்துக்களை மையப்படுத்தி இன்றைய சிந்தனைகளை மேற்கொள்வோம்.

முதலில், குருத்தோலை ஞாயிறு...
இன்று நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920 (The Palm Sunday Tornado 1920). அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில் 1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று உருவான 38 சூறாவளிகளால் பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன. ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அதே வண்ணம், 1965ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று வீசிய மற்றொரு சூறாவளியைக் குறித்து செய்திகள் வெளியாயின. இந்த சூறாவளியில், 271 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 1500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் பதிவான சக்திவாய்ந்த சூறாவளிகளில் இது நான்காவது இடத்தைப் பெற்றது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்தி சூறாவளிகள். சூறாவளி உருவாகும் மாதங்களில் குருத்தோலை ஞாயிறு இடம்பெறுகிறது.

குருத்தோலை ஞாயிறு - சூறாவளி இவை இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, பல எண்ணங்கள் உருவாகின்றன. முதல் குருத்தோலை ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. இயற்கை உருவாக்கிய சூறாவளி அல்ல, இயேசு என்ற ஓர் இளையப் போதகரின் வடிவில் எருசலேமுக்குள் நுழைந்த சூறாவளி அது.
சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு பெயர்த்துவிடும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், பலவற்றை, குறிப்பாக, மதத்தின் பெயரால் நிகழ்ந்த பல தவறுகளை தலைகீழாக மாற்றின என்பதை உணரலாம்.

இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத்தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியதுபோல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம், இந்தக் குருத்தோலை ஊர்வலம். இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மதத்தலைவர்களின் அதிகார மையமாக விளங்கிய எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அவலங்களை சீராக்கினார். எனவே, இந்தக் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!

இந்த குருத்தோலை ஞாயிறு நம்மையும் விழித்தெழச்செய்யும் ஓர் அழைப்பாக விளங்கட்டும். நம் வாழ்விலும் இயேசு நுழைந்து, அங்கு மாற்றங்களை - அவை தலைகீழ் மாற்றங்களானாலும் சரி - உருவாக்கவேண்டுமென்று விழைவோம், வேண்டுவோம்.அடுத்து, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனிதவாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா முடிய உள்ள இந்த ஏழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரமாகக் கொண்டாட அழைக்கிறார். வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவுகூர்வதால், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம். ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!

நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் அவரை மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்ட நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றை புனிதமான நிகழ்வு என்று சொல்ல இயலுமா? புனிதம் என்ற சொல்லுக்கு, வேறோர் இலக்கணம் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி, வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன.

புனிதவாரம் முழுவதும், குறிப்பாக, இவ்வாரத்தின் இறுதி மூன்று நாள்களில், பல திருவழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தாய் திருஅவை நமக்கு வாய்ப்பளிக்கிறார். இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் ஓர் ஆபத்து உள்ளது. அதாவது, இந்த வழிபாட்டு நிகழ்வுகளை, சடங்குகளாக, வரலாற்று நிகழ்வுகளாக காணும் பார்வையாளர்களாக நாம் மாறிவிடும் ஆபத்து உள்ளது. அன்று, இயேசுவின் பாடுகளுக்கு அவரை இட்டுச்சென்றது, அன்றைய சமுதாயத்தில் நிலவிய கொடுமைகள். அதே கொடுமைகள் இன்று நாம் வாழும் சமுதாயத்திலும் தொடர்ந்து நிகழ்கின்றன.

இயேசுவுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கேள்விப்பட்டு, அவர் மீது பரிதாபம் கொள்வதோடு நமது புனிதவார பங்கேற்பு நின்றுவிட்டால், புனிதவாரம் வெறும் சடங்காக மாறிவிடும். இந்த திருவழிபாட்டு நிகழ்வுகள், இன்றைய சமுதாயக் கொடுமைகள் குறித்து சிந்திக்கவும், அவற்றை நீக்குவதற்குத் தேவையான முயற்சிகளில்  நம்மை ஈடுபடுத்தவும் நமக்கு உதவினால், நம் புனிதவார முயற்சிகள் பொருளுள்ளவையாக அமையும்.

நமது கோவில்களில் நடைபெறும் திருவழிபாட்டு நிகழ்வுகள், சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நம்மை அழைத்துச் செல்லவேண்டும். அங்கு, இயேசுவின் பாடுகளில் தொடர்ந்து பங்கேற்கும் மக்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்வதற்கு நம்மைத் தூண்டவேண்டும். அவ்வாறு இல்லையெனில், துன்பப்படும் இயேசுவைக் கண்டும் காணாமல் செல்லும் அக்கறையற்ற மனநிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இக்கருத்தை, Geoffrey Studdert Kennedy என்ற ஆங்கிலிக்கன் போதகர் ஓர் அழகிய கவிதையில் கூறியுள்ளார். Kennedy அவர்கள், முதல் உலகப்போர் காலத்தில், ஆங்கிலேயப் படைவீரர்கள் நடுவே ஆன்மீகப் பணியாற்றியவர்.

Kennedy அவர்கள் எழுதிய Indifference’ - 'அக்கறையற்ற நிலை' என்ற கவிதையின் வரிகள் இதோ:
இயேசு, கொல்கொதா வந்தபோது, அவரை ஒரு மரத்தில் தொங்கவிட்டனர்
அவரது கரங்களையும், கால்களையும் ஆணிகளால் துளைத்தனர்
தலையில் சூட்டிய முள்முடியால் ஆழமான காயங்களை உருவாக்கினர்
அவை, கொடுமையான நாள்கள், மனித உயிர் மலிவாகிப்போன நாள்கள்.
இயேசு, பர்மிங்காம் (இன்றைய நகர்) வந்தபோது, மக்கள் அவரைக் கடந்து சென்றனர்
அவரை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை, அவரை சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை
தெருவோரத்தில், குளிரில் இயேசு நடுங்கிக்கொண்டிருந்ததை யாரும் உணரவில்லை
இயேசு அழுகுரலில் கூறினார்: "இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது என்னெவென்று இவர்களுக்குத் தெரியவில்லை".
குளிர்காலப் பனி இயேசுவை மூடி, அவரை குளிரில் உறையவைத்தது
கடந்து சென்ற மக்களெல்லாம் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்
சுவர் ஓரமாக குளிரில் நடுங்கியபடி, 'கல்வாரியைத் தாரும்' என்று இயேசு கதறினார்.

இயேசுவின் பாடுகள் என்ற வரலாற்று நிகழ்வை வழிபாட்டு நிகழ்வாகக் கொண்டாடும் இந்த புனித வாரத்தில், கோவில்களில் நிகழும் வழிபாடுகளில் பொருளுள்ள முறையில் பங்கேற்கவும், அந்த பங்கேற்பின் பயனாக நம் வீதிகளில் நிகழும் கொடுமைகளைக் களையும் தெளிவையும், துணிவையும் பெறவும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.


No comments:

Post a Comment