3rd Sunday of Lent
In the month of March,
2017, Peru, a country in South America, was badly affected by heavy floods.
During the floods, there was a news item about a lady called Evangelina
Chamorro Diaz. Woman swept away by mudslide in Peru, but claws her way to
safety… Amazing
footage: Woman escapes raging mudslide in Peru … were some of the headlines of the news about
Evangelina.
This news was accompanied by an amateur video
showing the young lady Evangelina emerging from the swirling, fast-moving
mudslide to safety: Evangelina Chamorro Diaz crawled and stumbled through
debris as she tried to reach onlookers for help in Punta Hermosa, about 40km
outside of the capital Lima. The 32-year-old said she survived by grabbing on
to tree branches and trying to build a makeshift bridge to drag herself out of
the mud. (Sky News)
Evangelina
serves as the starting point of our Sunday reflection today. She is Evangelina
(meaning ‘good news’) and she fought against the mudslide that was carrying her
to her certain death. Swimming against the tide in water is very difficult.
Here, Evangelina was swimming against the tide in swirling mud. She must have
had extraordinary physical and mental stamina to do this! From the mudslide
emerges ‘good news’! She, thus, reminds us of the Samaritan woman who meets Jesus
in today’s Gospel (John 4: 5-42).
Being a
woman, a Samaritan woman at that, was tough during the time of Jesus. This
lady, having lived with ‘five husbands’, was living with the sixth man who was
not her husband. No details are given as to how this situation came about. It
could have happened due to the wrong decisions taken by the men or the lady.
But, as we know well, in most of these circumstances, it is the lady who gets
blamed. Hence, this lady must have been the target of the mud slinging people in
the village. From this mudslide (snide remarks), Jesus saves her and makes her
an evangelist!
From time
immemorial, women have been evangelists, bringing the good news of care and
concern, to the world flooded with
mudslides of hatred and injustice. As a token of our gratitude, we have
instituted the International Women’s Day on March 8.
“Embrace
Equity” is the
theme of the International Women’s Day 2023. In our gender-biased, male
dominated society, we need to insist on Equity more than Equality. ‘Equality’
means each individual or group of people is given the same resources or
opportunities. On the other hand, ‘Equity’ recognizes that each person has
different capacities, and allocates the exact resources and opportunities
needed to reach an equal outcome. Jesus, understanding the inequality
experienced by the Samaritan woman, in terms of gender, ethnic group and
lifestyle, provides her the opportunities to conquer her handicaps and shine
forth.
This Sunday as well as the next two Sundays in the Lenten Season, the gospel
texts will put us in touch with three of the most significant spiritual symbols
of our Faith: water, light and life, symbols closely
connected with Easter. Today’s gospel revolves around the well in Samaria , with a discourse
on water. Next Sunday it will be the curing of the visually handicapped person,
with thoughts on light. The third week – the final week before the Holy Week –
it will be the miracle of raising Lazarus from the dead and the discourse on
life. All the three passages are taken from the Gospel of John, which, as we
know well, is not a simple narrative of Jesus’ life but a theological treatise
as well.
The conversation between Jesus and the Samaritan woman is one of the
longest (if not the longest) conversations recorded in the four gospels.
This conversation is a good example of the inward journey taken by a person
(Samaritan woman) who, ultimately, makes this journey towards Jesus and God.
Quite often we tend to feel that we know enough about self, Jesus and God and
thus lose out on newer insights. We forget that we are all pilgrims on this
world, constantly called to journey. With a false assuarance that ‘we know
everything’ about self, others and God, we tend to stay put and stagnate! Only
when we venture out, we shall encounter surprises about ourselves and about
God. ‘The God of Surprises’ is one of the basic, beautiful attributes of God!
Today’s gospel gives us a picture of Jesus who not only surprises us,
but, shocks us. He voluntarily initiates a conversation with a Samaritan woman
who comes to the well at mid-day (the sixth hour). Fetching water is one of the
duties undertaken by women early in the morning. Usually, in villages, ladies
gather at the common well in the morning. This woman’s late visit to the well
may suggest that she was not part of the group, even among the Samaritans,
because of her questionable living situation!
Jesus begins to engage the lady in conversation by requesting her for
water. When a Samaritan woman came to draw water, Jesus said to her, “Will you
give me a drink?” (John 4: 7) A simple request for water opens up quite many
issues and ultimately ends on sublime themes related to God and worship. Here
is the first lesson from today’s gospel: that no place is alien to talk about
God. We know that in villages, the well, the tea shop and the tree in the
village square are good spots for gossips, political opinions and even
philosophical thoughts. Jesus shows us that a conversation near a well can also
be profoundly divine!
The initial reaction of the Samaritan woman is a grim reminder of how the
human family has not progressed in certain areas even after centuries. The
Samaritan woman said to him, “You are a Jew and I am a Samaritan woman. How can
you ask me for a drink?” (John 4: 9) The ‘You-and-I’ distinction arises even in
the case of a basic human need - thirst. Thirst knows no caste and religion.
Hence, it would be highly impossible for any one to refuse water to the one who
is thirsty. But, with water becoming more and more a private property and hence
scarce and costly, it is becoming more and more delicate to request water and
to share water even in dire needs. Due to its rich business proposition, water
has come to be called ‘blue gold’ in our days!
Social activists and leaders with a sense of social justice have been
warning us that the increasing privatisation of water sources and hence
scarcity of safe water for millions of people around the world will be the
cause of major clashes leading upto wars among nations.
‘Avaaz’ is a global campaign network that works to ensure that the views
and values of the world's people shape global decision-making.
("Avaaz" means "voice" or "song" in many
languages.) Avaaz members, who are 70-million strong, live in every nation of
the world. In view of the UN Water Conference to be held in New York – March 22
to 24, Avaaz team has sent out an appeal to all of us to protect our rivers.
Here is the text of the appeal:
Dear friends,
The Earth's rivers are dying – and that means
we are too.
Experts say that unless we act now, in just 2
years, two-thirds of the world’s population may face safe water shortages. It
will affect billions of us! We need urgent global action to turn this around –
and right now, we have a chance to get it!
Countries are about to gather for the first UN
Water Conference in almost 50 years to consider bold plans to restore the
world's dying rivers and secure water as a fundamental human right, not for
profit. Insiders say that with enough public pressure, we could win unprecedented
protections for rivers and the water they carry. But laggard governments and
big corporations will fight back to derail action!
So, let’s build a massive groundswell of public
support for Earth’s water and deliver the voices of people everywhere in a
resounding roar to save our precious lakes, rivers, and freshwater ecosystems
while we still can!
It is now or never. The rivers, lakes, and
wetlands – essential in the great freshwater cycles that keep us all alive –
are blocked by dams, choked with trash and poisoned with chemicals and other
pollutants. GMO corporations, mining groups, industrial agriculture and
single-use plastics are all to blame. It's time to fight back against the
unchecked corporate interests wrecking our rivers.
Based on this appeal,
Avaaz team has launched a signature campaign via social media to put pressure
on the participants of the UN Water Conference. Let us participate in this
signature campaign as well as pray that such common efforts are taken to
protect our natural resources.
The thirst of Jesus,
and the hesitation of the Samaritan woman to quench his thirst on the basis of
the Jew-Samaritan divide, still echo in different parts of the world. The great
natural gift of God – water – has, unfortunately, been used as a political and
caste weapon, dividing people. In the 21st century, water –
especially clean, potable water – has become the dividing line between the
haves and the have-nots.
As we approach the
World Water Day – March 22 – as well as the UN Water Conference (March 22-24),
we pray that God gives all of us enough clarity and courage to save our water
sources from being swindled by the selfish corporate giants!
Let us get back to the
Gospel narrative on Jesus meeting the Samaritan woman at the well. The
conversation between Jesus and the Samaritan woman also highlights another
division among people. Not only the gifts of God, but God himself / herself is
divided under various pretexts. Jesus is rather emphatic in saying that true
God and true worship do not divide the people but unite them: “Woman,”
Jesus replied, “believe me, a time is coming when you will worship the Father
neither on this mountain nor in Jerusalem… Yet a time is coming and has now
come when the true worshipers will worship the Father in the Spirit and in
truth, for they are the kind of worshipers the Father seeks. God is spirit, and
his worshipers must worship in the Spirit and in truth.” (John 4: 21-24)
I don’t think that
anyone could make this clearer and easier than Jesus.
Lenten season is a
call to conversion. Let us be converted to using God’s gifts (especially water)
properly without avarice and monopoly. Let us be converted not to divide God
into various human slots, but allow God to be God and try to worship God in
Spirit and in Truth.
My closing thoughts go
back to Evangelina emerging from the mudslide in Peru . We pray that women all over
the world hold on to hope while swimming against the mudslide created by the
male-domination!
Leaving Water
Privatisation Behind
தவக்காலம் 3ம் ஞாயிறு
2017ம்
ஆண்டு மார்ச் மாதத்தில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாடு, பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
அவ்வேளையில் உருவான சகதி வெள்ளத்திலிருந்து ஓர் இளம்பெண் வெளியேறிய நிகழ்வு, (Woman escapes raging mudslide in Peru) தலைப்புச் செய்தியானது.
தென்
அமெரிக்காவின் பெரு நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தண்ணீரும், சகதியும் இணைந்து வெள்ளமெனப்
பாய்ந்து செல்கின்றன. இந்தச் சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, Evangelina Chamorro
Diaz என்ற
இளம்பெண், கையில்
அகப்பட்ட மரக்கிளை ஒன்றை இறுகப்பற்றி, சகதியிலிருந்து வெளியேறி
வந்தார்.
(Sky
News)
பாய்ந்து செல்லும் தண்ணீரில் எதிர் நீச்சல் அடிப்பதே
பெரும் சவால். இந்தப் பெண், சுழன்று செல்லும் சகதியில் எதிர் நீச்சல் அடித்து
வெளியேறியது அவரது உடல், உள்ள வலிமையை பறைசாற்றுகிறது. இழுத்துச் செல்லும் சகதியின்
சக்திக்கு, தன்னைக் கையளித்துவிடாமல், எதிர் நீச்சலடித்து, போராடி, கரைசேர்ந்த, 32 வயது
நிறைந்த Evangelina அவர்கள், இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு
அடித்தளமிடுகிறார்.
இவ்விளம்பெண்ணின்
பெயர், முதலில், நம் கவனத்தை ஈர்க்கிறது. Evangelina என்ற பெயரின் பொருள், 'நற்செய்தி'. சகதியிலிருந்து மீண்டெழுந்த இவ்விளம்பெண், இன்னும் பல ஆண்டுகள், ஒரு நற்செய்தியாக வாழ்வார் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
சகதியிலிருந்து வெளியேறி, நற்செய்தியாக வாழும் Evangelina அவர்கள், இன்றைய நற்செய்தியில் (யோவான் 4: 5-42) நாம்
சந்திக்கும் சமாரியப் பெண்ணை நினைவுக்குக் கொணர்கிறார்.
இயேசுவின்
காலத்தில், ஆணாதிக்கச்
சமுதாயத்தில், ஒரு பெண்ணாக, சமாரியப் பெண்ணாக
வாழ்வதென்பது, கடுமையான எதிர் நீச்சல்தான். அதிலும், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பெண், ஐந்து கணவர்களுடன் வாழ்ந்தபிறகு, ஆறாவது மனிதரோடு வாழ்பவர். அவரை
இந்நிலைக்கு உள்ளாக்கியது, அவருடன் வாழ்ந்த ஆண்களா அல்லது, அவரது சொந்த முடிவா
என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாக, நம் சமுதாயத்தில், முடிவெடுக்கும் நிலையில் பெண்கள்
இல்லையெனினும், அவர் மீது பழிகள் சுமத்தப்படுவதை நாம் அறிவோம். மதம், நன்னெறி, ஊர் கட்டுப்பாடு என்ற பல அளவுகோல்களின்
அடிப்படையில், ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட இப்பெண் மீது, கண்டனச் சேறு எப்போதும் வீசப்பட்டிருக்கவேண்டும்.
இன்றைய
நற்செய்தியின் அறிமுக வரிகளில்,
"அப்போது
ஏறக்குறைய நண்பகல்" (யோவான் 4:6) என்ற குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப்பெண்,
தன் சொந்த ஊரிலேயே, எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதை, நற்செய்தியாளர் யோவான் இந்த சிறு குறிப்பின்
வழியே உணர்த்துவதாக, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.
எந்த
ஊரிலும், பெண்கள், காலையில், சிறு, சிறு குழுக்களாக, பல கதைகள் பேசியபடி கிணற்றிற்குச்
சென்று, நீர் எடுத்து வருவது வழக்கம்.
இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இப்பெண்ணோ, நண்பகலில் நீர் எடுக்கச் செல்கிறார். காரணம்
என்ன? அவரும், மற்றவர்களோடு காலை நேரத்தில் நீர் எடுக்கச்
சென்றிருப்பார். ஆனால், அவ்வேளையில், மற்ற பெண்கள், அவரைப்பற்றி ஏளனமாகப் பேசி, கண்டனத் தீர்ப்புக்கள் வழங்கியிருப்பர்.
நடத்தை சரியில்லாத அவர், அந்தக் கிணற்றில் நீர்
எடுத்தால், கிணற்று நீரே தீட்டுப்பட்டுவிடும்
என்று சொல்லி அவரை மற்ற பெண்கள் தடுத்திருக்கக்கூடும். ஏனைய பெண்கள் விடுத்த கண்டனக்
கணைகளால் காயப்படவேண்டாம் என்ற நோக்கத்தில், அவர், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத நண்பகல் வேளையில்
தண்ணீர் எடுக்கச் சென்றிருப்பார். தான் வாழும் சமுதாயம், தன்மீது வாரியிறைத்த சேற்றையும், சகதியையும் கழுவமுடியாமல் வாழ்ந்துவந்த அப்பெண்ணை, அச்சகதியிலிருந்து மீட்டு, நற்செய்தியை அறிவிப்பவராக மாற்றுகிறார்,
இயேசு. இந்த அற்புதத்தை, இன்றைய நற்செய்தியாக நாம் பகிர்ந்துகொள்கிறோம்.
உயிர்ப்புத்
திருவிழாவை நோக்கி, நாம் தவக்காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த உயிர்ப்புப் பெருவிழாவுடன்
தொடர்புடைய மூன்று அடையாளங்கள் - தண்ணீர், ஒளி, வாழ்வு. இந்த ஞாயிறன்றும், இதைத் தொடரும் இரு ஞாயிறுகளிலும், இம்மூன்று
அடையாளங்களை வலியுறுத்தும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இயேசு, சமாரியப்
பெண்ணைச் சந்திப்பதும், தண்ணீர் குறித்து பேசுவதும்,
இந்த வாரம் தரப்பட்டுள்ள நிகழ்ச்சி (யோவான் 4: 5-42). பார்வை இழந்த ஒருவருக்கு, இயேசு,
பார்வை வழங்குவதும், ஒளியைக் குறித்துப் பேசுவதும்,
அடுத்த வாரம் நாம் வாசிக்கும் நற்செய்தி (யோவான் 9: 1-41). இறந்த இலாசரை உயிர்ப்பித்து, வாழ்வைப் பற்றி இயேசு பேசுவது, மூன்றாம்
வாரம் தரப்பட்டுள்ள நற்செய்தி (யோவான் 11: 1-45).
மேலும்,
தவக்காலத்தின் உயிர் நாடியான மாற்றம் என்ற கருத்து, இந்த மூன்று நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமாரியப் பெண்ணின் நெறி பிறழ்ந்த வாழ்விலும், அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையிலும் மாற்றம்
நிகழ்கின்றது. பார்வை இழந்தவர், தன்னை குணமாக்கியவர்
யார் என்பதை அறியாமலேயே அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரை, பரிசேயர்களுக்கு முன் உயர்த்திப் பேசுகிறார்.
பின்னர், இயேசுவைச் சந்தித்ததும், முழு நம்பிக்கையுடன் அவரிடம் சரணடைகிறார்.
மூன்றாவது நிகழ்வில், உயிரிழந்து, புதைக்கப்பட்ட
இலாசர், மீண்டும் உயிர் பெற்றெழும்
உன்னத மாற்றம் நிகழ்கிறது.
சமாரியப் பெண்ணிடம் மாற்றங்களை
உருவாக்க, இயேசு தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடம்... ஒரு கிணற்று மேடு. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த
பகுதியில் இருந்த ஒரு கிணற்று மேடு. ஆச்சரியங்களைத் தருவதில் இயேசுவை மிஞ்ச, இனி ஒருவர்
பிறந்துதான் வரவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. யோவான் நற்செய்தியில் இன்று நாம் சந்திக்கும்
இயேசு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்... சொல்லப்போனால், அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். ஒரு சராசரி யூதர் செய்யக்கூடாத பல செயல்களை
இயேசு துணிந்து செய்கிறார். பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப்போயிருந்த யூதர்,
சமாரியர் என்ற இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக, இயேசுவும், சமாரியப் பெண்ணும், கிணற்றடியில்
சந்திக்கின்றனர்.
இயேசு
அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்"
(யோவான் 4:8) என்று கேட்கிறார்.
வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த
உரையாடல், வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. நற்செய்தியில் பதிவு
செய்யப்பட்டுள்ள அனைத்து உரையாடல்களிலும், யோவான் நற்செய்தி 4ம் பிரிவில் இயேசுவுக்கும், சமாரியப் பெண்ணுக்கும் இடையே நிகழும் இந்த
உரையாடல்தான் மிக நீளமானது. இந்த உரையாடலின் முடிவில், ஊரால் ஒதுக்கப்பட்டிருந்த ஒரு
பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டு வந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார்.
இறைவனைப்பற்றிப் பேச, யாருக்கு, சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களே, இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த
சாட்சிகள் ஆயினர் என்பதை, விவிலியமும், திருஅவை வரலாறும், மீண்டும், மீண்டும் கூறியுள்ளன.
இந்த
நற்செய்திப் பகுதி, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறித்து
சிந்திக்க அழைக்கிறது. கிணற்று மேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்று மேடு, டீக்கடை, ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று, வெகு
சாதாரண, வெகு எளிய இடங்களில்,
சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது,
நமக்கெல்லாம் தெரிந்ததுதான். மிகச் சாதாரணமான இவ்விடங்களில் இறைவனைப் பற்றியப் பாடங்களையும்
கற்றுக்கொள்ளலாம் என்பதை, கிணற்று மேட்டில் நடக்கும் உரையாடல் வழியே, இயேசு, இன்று
நமக்கு உணர்த்துகிறார்.
அடுத்ததாக,
தன் தாகத்தை தணிக்க தண்ணீர் கேட்கும் இயேசுவிடம் சமாரியப் பெண், யூதர்களுக்கும்,
சமாரியருக்கும் இடையே நிலவும் பாகுபாடுகளை நினைவுறுத்துகிறார். தவித்த வாய்க்குத் தண்ணீர்
தருவதிலும், சமுதாயப் பிரிவுகள் குறுக்கிடுவதை, இந்த உரையாடல் தெளிவாக்குகிறது.
தண்ணீரைப்பற்றி
பேசும்போது, நெருடலான பல எண்ணங்கள்
மனதில் அலைமோதுகின்றன. இறைவன் தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, பல வழிகளில்
நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர் தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல
குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே,
நமது பெரும் குற்றம். சாதிக்கொரு கிணறு, குளம்
என்று நாம் உருவாக்கிய அவலம், இன்றும் பல இடங்களில் தொடர்கின்றது.
தண்ணீரை
மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர், ஒரு பொருளாதார முதலீடு
என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி
வரும் கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத்
தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைந்து, மறைந்து, தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்து
வருகிறது. இந்த வியாபாரத்தால், தண்ணீர், 'நீலத் தங்கமாய்' (Blue Gold) மாறி வருகிறது.
தண்ணீர்
இவ்வுலகினர் அனைவருக்கும் உரிய சொத்து என்பதை நினைவுறுத்த, ஐ.நா. நிறுவனம் ஒவ்வோர்
ஆண்டும், மார்ச் 22ம் தேதியை, உலகத் தண்ணீர் நாள் என்று சிறப்பிக்கிறது.
இந்த நாளையொட்டி, நியூ யார்க் நகரில் மார்ச் 22 முதல் 24 முடிய ஐ.நா. நிறுவனத்தில்
தண்ணீர் கருத்தரங்கு பன்னாட்டளவில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் மக்களின் நலனை
முன்னிறுத்தும் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பல சமுதாய
அமைப்புகள் போராடி வருகின்றன. அவற்றில், Avaaz
என்ற அமைப்பு, உலக மக்களின் பொதுசொத்தான நதிகளைக் காப்பதற்கு உலக மக்கள் இணைந்து
விண்ணப்பிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நடத்திவருகிறது.
பன்னாட்டு
நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகளிலிருந்து வெளியாகும் அமிலம் கலந்த கழிவுகளால்
உலகில், நைல், கங்கை, அமேசான் போன்ற மாபெரும் நதிகள் சிறிது, சிறிதாக
இறந்துவருகின்றன. அதேபோல், இந்நதிகள், வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் நெகிழிப்
பொருள்களின் குப்பைத் தொட்டிகளாகவும் மாறி வருகின்றன. இந்தப் போக்கை தடுத்து
நிறுத்தவில்லையெனில் இன்னும் 2 ஆண்டுகளில், உலகின் மக்கள் தொகையில் மூன்றில்
இரண்டு பேர் தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும் என்ற காரணத்தை முன்னிறுத்தி,
நதிகளைக் காக்கும் போராட்டத்தின் குரல் ஐ.நா. கருத்தரங்கில் ஒலிக்க வேண்டும் என்ற
முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் மற்றொரு காந்தி என்ற புகழுக்குரியவரும், இயற்கையைப்
பாதுகாக்கப் பல வழிகளிலும் போராடி, 2021ம் ஆண்டு தன் 94 வயதில் இறையடி சேர்ந்த பசுமை பரட்சி வீரருமான சுந்தர்லால் பகுகுணா அவர்களின்
கூற்று நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று: "முதல், இரண்டாம் உலகப்
போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசை பசியால் உருவாயின. மூன்றாம் உலகப் போரென்று
ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." தண்ணீரை
ஒரு பிரிவினை ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச்
செல்வந்தர்களுக்கும், சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி
வழங்குகிறார்.
இறைவனின்
கொடையான தண்ணீரை, சாதி, இனம், பொருளாதாரம் என்ற
கூறுகளில் பிரித்துள்ளது போதாதென்று,
இறைவனையும்,
பல காரணங்களுக்காக, பிரித்து, கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளது
என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு,
மலைகளையும், எருசலேம் புனித நகரையும்,
தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து அந்த
சமாரியப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்கள் இன்றைய நற்செய்தியில் பதிவாகியுள்ளன:
இயேசு
சமாரியப் பெண்ணிடம்,
“அம்மா, என்னை நம்பும். காலம்
வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர்
தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய்
இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது
உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார். (யோவான் 4: 21,23-24)
இறைவனைச்
சிறைப்படுத்தும் இலக்கணங்கள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள்மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன.
மனிதர்கள்
வகுத்த வரம்புகளைத் தாண்டிய, உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு, அவரை உள்ளத்தில்
வழிபடுவதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு உதவட்டும்.
அதேபோல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும்
பிளவுகளை வளர்த்துவரும் நம் சமுதாயம்,
பாகுபாடுகளைத்
தாண்டி, உயிருள்ள ஊற்றான இறைவனைப் பருகவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.
சமுதாயம்
உருவாக்கியுள்ள பெண்ணடிமைத்தனம் என்ற சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பெண்கள், இறை நம்பிக்கை என்ற கிளைகளைப் பற்றி, இந்த சகதி வெள்ளத்திலிருந்து வெளியேறுவதற்குத்
தேவையான துணிவைப் பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.
No comments:
Post a Comment